Jump to content

சீன யுத்தக் கப்பல்கள் இந்தியாவிற்குள் நுழைய தடை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

538343efa7a9c3d15c04fabcada6871a.jpg

காணாமல் போன மலேசிய வானூர்தியை தேடும் பணிக்காக சீன கடற்படைக்கு இந்திய கடற்பிராந்தியத்தில் நுழைவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சோதனை நடவடிக்கையில் ஈடுபடும் சீன கடற்படையின் 4 கப்பல்களும் விடுத்த கோரிக்கையயை இந்திய அரசாங்கம் நிராகரித்துள்ளது

இந்திய பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.


இதேவேளை, காணாமல் போன மலேசியா விமனத்தின் பாகங்கள் என்று கருதப்படும் பொருட்களை தேடும் பணிகள் இரண்டாவது நாளாக இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
 
ஐந்து இராணுவ விமானங்களிலும் ஒரு சிவில் விமானமும் இந்த தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
239 பேருடன் கடந்த 8ம் திகதி இந்த விமானம் காணாமல் போனது. இதனை இந்து சமுத்திரத்தின் பல பகுதிகளில் தேடியும் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.
 
இந்த நிலையில் செய்மதியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் அடிப்படையில், குறித்த விமானத்தின் பாகங்கள் என்று சந்தேகிக்கப்படும் இரண்டு பொருட்கள் அவதானிக்கப்பட்டன.
 
அவற்றில் ஒன்று அண்ணளவாக 24 மீற்றர் நீளமுடையது என்றும், மற்றையது அதனை விட சிறியது என்றும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
 
இந்த நிலையில் அவற்றை தேடும் பணிகள் இன்றும் இரண்டாவது நாளாக தொடர்கின்றன.
 
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இருந்து சுமார் 1500 கடல் மைல்களுக்கு அப்பால் இந்த பொருட்கள் அவதானிக்கப்பட்டன.

 

 

 

http://www.onlineuthayan.com/News_More.php?id=762112767021353175

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனா... அத்துமீறி நுழைந்தால், இந்தியா என்ன செய்ய உத்தேசம்? :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய  பகிடி

அனுமதி கேட்டுத்தான் சீனா வருமாம்............

இனி  வருவதற்கு எந்த இடம்  பாக்கியிருக்கு..........???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனா... அத்துமீறி நுழைந்தால், இந்தியா என்ன செய்ய உத்தேசம்? :icon_mrgreen:

வந்தால் .... வந்தால் வடிவேல் காமடி போலதான்  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா ஒரு விமானத்தை உலகமே சேர்ந்து தேட வெளிக்கிட்டுது?????? விஞ்ஞானத்துக்கும் தொழில்நுட்பத்துக்கும் பெரிய அவமானம்.

Link to comment
Share on other sites

என்னப்பா ஒரு விமானத்தை உலகமே சேர்ந்து தேட வெளிக்கிட்டுது?????? விஞ்ஞானத்துக்கும் தொழில்நுட்பத்துக்கும் பெரிய அவமானம்.

பெரிசா சீனாவில் பத்த வைக்க இந்த செய்தி உதவும். யாராவது இசுலாமியர் வீது பழி விழலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.