Jump to content

கரிக்காய் பொரித்தேன்


Recommended Posts

படம் : பூக்கள் விடும் தூது

பாடல் : கதிரவனை

இசை : டி.ராஜேந்தர்

பாடலாசிரியர்: டி.ராஜேந்தர்

பாடியவர்கள் : கே.ஜே.யேசுதாஸ்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கதிரவனை பார்த்து காலை விடும் தூது

வண்டுகளை பார்த்து பூக்கள் விடும் தூது

இறைவனின் கலைநயம்

இயற்கையின் அதிசயம்

உலகோரு ஓவியம் என்பேன்

அதில் ஒரு அபிநயம் கண்டேன்

ஆ அஹ்ஹா

கதிரவனை பார்த்து காலை விடும் தூது

வண்டுகளை பார்த்து பூக்கள் விடும் தூது

பூபாள ராகம் ஆ.ஆ.ஆ

பூ பாடும் நேரம் ஆ.ஆ.ஆ

தாகம் கொண்ட ஓடை

தாளம் போடும் வேளை

தாகம் கொண்ட ஓடை

தாளம் போடும் வேளை

தடாகம் குதித்திட

தாமரை குளித்ததமா

வெள்ளி நிற மீன்களும்

வெளி வந்து ரசித்ததமா

கதிரவனை பார்த்து காலை விடும் தூது

வண்டுகளை பார்த்து பூக்கள் விடும் தூது

பச்சை வண்ண சேலை ஆ.ஆ.ஆ

கட்டிகொண்ட பூமி ஆ.ஆ.ஆ

வானமெங்கும் கவிதை

எழுதி பார்க்கும் பறவை

வானமெங்கும் கவிதை

எழுதி பார்க்கும் பறவை

வண்ண வண்ண கோலங்கள்

போட்டிடும் மேகங்களே

சின்ன குயில் ராகங்கள்

கேட்டிடும் காடுகளே

கதிரவனை பார்த்து காலை விடும் தூது

வண்டுகளை பார்த்து பூக்கள் விடும் தூது

http://download.tamilwire.com/songs/Hits/Star Hits/T.Rajendar Hits/Kathiravanai Parthu - Pookkal Vidum Thoothu - TamilWire.com.mp3

Link to comment
Share on other sites

  • Replies 163
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தமிழின் சிறப்பை சின்னதாக வியந்து பார்க்கும் இந்தத் திரியில் நாங்கள் வெறும் "கோதுடைக்கும் குஞ்சுகளே'. :lol:

அங்கங்கே தேடிச் சலித்துப் பொறுக்கி எடுத்துவரும் நாகரீகப் பொறுக்கிகள்தான் நாங்கள் :D . இந்தத் தூதின் தேடலில் குறளமுதும் தப்பவில்லை கண்டேன் அப்படியே அண்டாவுடன் தூக்கி வந்து இணைத்துவிட்டேன்...யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். "தமிழரின் வாழ்வியல் கருவூலம்" எழுதும் தோழர் கோமகன் மன்னிப்பாராக அவர் பகுதி பகுதியாக விளக்கம் எழுதி வருவதற்குள் நாம் இதனை இங்கு இணைத்ததற்கு. :rolleyes:

தூதுக்கான தகைமைகள் எவை என்பதை திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார்

69 தூது - அமைச்சியல் - பொருள் 

681 அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்

பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.

அன்புடையவனாதல், தகுதியான குடிப்பிறப்பு உடையவனாதல், அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல் அகிய இவை தூது உரைப்பவனுடைய தகுதிகள்.

- மு.வரதராசனார்

Love, noble birth, good courtesy

Pleasing kings mark true embassy.

- Sudhdhaanandha Bharadhi



682 அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு

இன்றி யமையாத மூன்று.

அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல்வன்மை ஆகிய இவை தூது உரைப்பவர்க்கு இன்றியமையாத மூன்று பண்புகளாகும்.

- மு.வரதராசனார்

Envoys must bear love for their prince

Knowledge and learned eloquence.

- Sudhdhaanandha Bharadhi



683 நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்

வென்றி வினையுரைப்பான் பண்பு.

அரசனிடம் சென்று தன் அரசனுடைய வெற்றிக்குக் காரணமான செயலைப்பற்றித் தூது உரைப்பவன் திறம், நூலறிந்தவருள் நூல் வல்லவனாக விளங்குதல் ஆகும்.

- மு.வரதராசனார்

Savant among savants, he pleads

Before lanced king, triumphant words.

- Sudhdhaanandha Bharadhi



684 அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்

செறிவுடையான் செல்க வினைக்கு.

இயற்கை அறிவு, விரும்பத்தக்க தோற்றம், ஆராய்ச்சி உடைய கல்வி ஆகிய இம் மூன்றின் பொருத்தம் உடையவன் தூது உரைக்கும் தொழிலுக்குச் செல்லலாம்

- மு.வரதராசனார்

Who has these three: good form, sense, lore

Can act as bold ambassador.

- Sudhdhaanandha Bharadhi



685 தொகச் சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி

நன்றி பயப்பதாந் தூது.

பலவற்றைத் தொகுத்துச் சொல்லியும், அவற்றுள் பயனற்றவைகளை நீக்கியும், மகிழுமாறு சொல்லியும் தன் தலைவனுக்கு நன்மை உண்டாக்குகின்றவன் தூதன்.

- மு.வரதராசனார்

Not harsh, the envoy's winsome ways

Does good by pleasant words concise.

- Sudhdhaanandha Bharadhi



686 கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்

தக்கது அறிவதாம் தூது.

கற்பன கற்று, பிறருடைய பகையான பார்வைக்கு அஞ்சாமல், கேட்பவர் உள்ளத்தில் பதியுமாறு சொல்லி, காலத்திற்குப் பொருத்தமானதை அறிகின்றவனே தூதன்.

- மு.வரதராசனார்

Learned; fearless, the envoy tends

Convincing words which time demands.

- Sudhdhaanandha Bharadhi



687 கடனறிந்து காலங் கருதி இடனறிந்து

எண்ணி உரைப்பான் தலை.

தன் கடமை இன்னது என்று தெளிவாக அறிந்து, அதைச் செய்வதற்கு ஏற்ற காலத்தை எதிர்நோக்கித் தக்க இடத்தையும் அறிந்து ஆராய்ந்து சொல்கின்றவனே தூதன்.

- மு.வரதராசனார்

Knowing duty time and place

The envoy employs mature phrase.

- Sudhdhaanandha Bharadhi



688 தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்

வாய்மை வழியுரைப்பான் பண்பு.

தூய ஒழுக்கம் உடையவனாதல், துணை உடையவனாதல், துணிவு உடையவனாதல் இந்த மூன்றும் வாய்த்திருத்தலே தூது உரைப்பவனுடைய தகுதியாகும்.

- மு.வரதராசனார்

The true envoy of three virtues

Is pure helpful and bold in views.

- Sudhdhaanandha Bharadhi



689 விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்

வாய்சேரா வன்க ணவன்.

குற்றமான சொற்களை வாய் சோர்ந்தும் சொல்லாத உறுதி உடையவனே அரசன் சொல்லியனுப்பிய சொற்களை மற்ற வேந்தர்க்கு உரைக்கும் தகுதியுடையவன்.

- மு.வரதராசனார்

The envoy who ports the king's message

Has flawless words and heart's courage.

- Sudhdhaanandha Bharadhi



690 இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற் கு

உறுதி பயப்பதாம் தூது.

தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும், அதற்காக அஞ்சி விட்டுவிடாமல், தன் அரசனுக்கு நன்மை உண்டாகுமாறு செய்கின்றவனே தூதன்.

- மு.வரதராசனார்

Braving death the bold envoy

Assures his king's safety and joy.

- Sudhdhaanandha Bharadhi



மூலம் http://kural.nettil.com/main/adhig/69

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தும்பி விடு தூது :lol:

draaa.jpg

தும்பி விடு தூது எழுதியதால் தனது பெயரிலேயே தும்பியைத் தாங்கிய புலவர் பற்றி அறிந்திருப்பீர்கள்

அவருடைய பெயர் சேர்கீரனார்.....

தலைவி தலைவனுக்கு தும்பியைத் தூது விட்ட சங்க இலக்கியத்தை எழுதியதன் மூலம் "தும்பி சேர்கீரனார்" என்று பெயர்வரப்பெற்றார்

நற்றிணை (271)

‘‘கொடியை வாழி! தும்பி! இந்நோய்

படுகதில் அம்ம யான் நினக்கு உரைத்தென

மெய்யே கருமை அன்றியும் செவ்வன்

அறிவும் கரிதோ அறனிலோய் நினக்கே

மனை உறக்காக்கும் மாண் பெருங்கிடக்கை

நுண்முள்வேலித் தாதொடு பொதுளிய

தாறுபடு பீர்க்கம் ஊதி வேறுபட

நாற்றம் இன்மையின் பசலை ஊதாய்ச்

சிறுகுறு பறவைக்கு ஓடி விரைவுடன்

நெஞ்சு நெகிழ் செய்ததன் பயனோ? அன்பிலர்

வெம்மலை அருஞ்சுரம் இறந்தோர்க்கு

என்நிலை உரையாய் சென்று அவண் வரவே’’

‘‘தும்பியே! இப்பிரிவு நோய்த் துன்பம் குறைவதற்காக நான் உனக்கு ஒன்று உரைக்கின்றேன் கேட்பாயாக. உன் உடம்பு கரியது. உன் அறியும் அறிவும் கரியது. ஆதலால் நீ அறமில்லாததாய் ஆயினாய்.

மனையைக் காப்பதற்காகப் போடப்பட்டுள்ள வேலியில் படர்ந்திருக்கும் பீர்க்கம் பூவினை நீ ஊதிவிட்டுச் செல்வாய். ஆனால் அதுபோன்று இருக்கக் கூடிய பசலையை ஊதமாட்டாய். மேலும் உனது பெட்டையை விரும்பி விரைவாகப் பறந்து சென்று அதன் மனம் மகிழ அன்பு செய்வாய். அதனாலேயே நீ என்னை மறந்தாய்.

என் மீது அன்பில்லாது பொருள் காரணமாகப் பிரிந்த என்னுடைய காதலரிடம் சென்று என்நிலையை அவருக்கு எடுத்துரைத்து அவரைத் திரும்பி வருமாறு செய்யாத உனது செயல் விரும்பத்தகுந்ததாக இல்லை. இருப்பினும் நீ வாழ்வாயாக

குறுந்தொகை (392)

‘‘அம்ம வாழியோ-மணிசிறைத் தும்பி!

நல்மொழிக்கு அச்சம் இல்லை அவர்நாட்டு

அண்ணல் நெடுவரைச் சேறி ஆயின்

கடவை மிடைந்த துடவையம் சிறுதினைத்

துளர்எறி நுண்துகள் களைஞர் தங்கை

தமரின் தீராள் என்மோ-அரசர்

நிரை செலல் நுண்தோல் போலப்

பிரசம் தூங்கு மலைகிழவோர்கே!’

நீலமணி போன்ற சிறகுகளை உடைய தும்பியே! நீ தலைவனுடைய நாட்டில் உள்ள மலையிடத்தே சென்றால் என் தலைவனிடம், ‘‘உன்னுடைய தலைவியானவள் அவளது தமையன்மார்களால் கடுமையாகப் பாதுகாக்கப்படுகின்றாள். நீ அவளைக் குறிப்பிட்ட இடத்திலே பார்க்க இயலாது என்பதனைக் கூறுவாயாக’

Link to comment
Share on other sites

தன் மகள் பவதாரிணியோடு சேர்ந்து பாடிய பாடல்... தும்பியை தூது விடும் பாடல் . பவதாரிணி சினிமா பாட்டுக்களை விட சிரத்தை எடுத்து பாடிய பாடல். வெண்பா பிரியர்களுக்கு நல்ல தமிழ்த்தீனி. திருவாசகத்தில் தும்பித்தூது வெண்பாக்கள் இருபது. அந்த வெண்பாக்களில் 10 க்கு மட்டும் மெட்டமைத்திருக்கிறார். அந்த வெண்பாக்கள் உள் சென்ற மகிழ்வில் 20க்கும் மெட்டமைத்து பாடியிருக்கலாமே எனும் ஏக்கம் தோன்றும்…. இரண்டு வெண்பா கிழே

நானார் என் உள்ளமார் ஞானங்களார் என்னை யாரறிவார்

வானோர் பிரானென்னை ஆண்டிலனேல் மதிமயங்கி

ஊனாருடை தலையில் உண்பலிதேர் அம்பலவன்

தேனார் கமலமே சென்றுதாய் கோதும்பி……..

உள்ளப்படாத திருவுருவை உள்ளுதலும்

கள்ளப்படாத களி வந்த வான் கருணை

வெள்ளப் பிரான் என் பிரான் என்னை வேறே ஆட்

கொள்ளப் பிரானுக்கே சென்றுதாய் கோதும்பி…….

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தன் மகள் பவதாரிணியோடு சேர்ந்து பாடிய பாடல்... தும்பியை தூது விடும் பாடல் . பவதாரிணி சினிமா பாட்டுக்களை விட சிரத்தை எடுத்து பாடிய பாடல். வெண்பா பிரியர்களுக்கு நல்ல தமிழ்த்தீனி. திருவாசகத்தில் தும்பித்தூது வெண்பாக்கள் இருபது. அந்த வெண்பாக்களில் 10 க்கு மட்டும் மெட்டமைத்திருக்கிறார். அந்த வெண்பாக்கள் உள் சென்ற மகிழ்வில் 20க்கும் மெட்டமைத்து பாடியிருக்கலாமே எனும் ஏக்கம் தோன்றும்…. இரண்டு வெண்பா கிழே

நானார் என் உள்ளமார் ஞானங்களார் என்னை யாரறிவார்

வானோர் பிரானென்னை ஆண்டிலனேல் மதிமயங்கி

ஊனாருடை தலையில் உண்பலிதேர் அம்பலவன்

தேனார் கமலமே சென்றுதாய் கோதும்பி……..

உள்ளப்படாத திருவுருவை உள்ளுதலும்

கள்ளப்படாத களி வந்த வான் கருணை

வெள்ளப் பிரான் என் பிரான் என்னை வேறே ஆட்

கொள்ளப் பிரானுக்கே சென்றுதாய் கோதும்பி…….

சிம்பொனியிலஃ வித்தியாசமாக முயற்சி செய்திருக்கிறார் இளையராயா

உண்மையிலேயே அரிதான இணைப்பு. நன்றி நூணாவிலான்

Link to comment
Share on other sites

.

நாள்தோறும் பார்வையில் நான் விடும் தூது

கூறாதோ நான் படும் பாடுகள் நூறு

நானொரு ஆண்டாளோ திருப்பாவை பாட

ஏழையை விடலாமா இது போல வாட

வெள்ளி நிற வெண்ணிலவில் வேன்குழலில் இசையும் வரும்

நள்ளிரவில் மெல்லிசையில் தேன் அலைகள் நினைவில் எழும்

ஓர் இதயம் உன்னால் இலகும்

இந்நேரத்தில் கண்ணா உன் மௌனத்தை தவிர்த்து

சொல்லாயோ வாய் திறந்து

வார்த்தை ஒன்று சொல்லாயோ வாய் திறந்து

Link to comment
Share on other sites

தன் மகள் பவதாரிணியோடு சேர்ந்து பாடிய பாடல்... தும்பியை தூது விடும் பாடல் . பவதாரிணி சினிமா பாட்டுக்களை விட சிரத்தை எடுத்து பாடிய பாடல். வெண்பா பிரியர்களுக்கு நல்ல தமிழ்த்தீனி. திருவாசகத்தில் தும்பித்தூது வெண்பாக்கள் இருபது. அந்த வெண்பாக்களில் 10 க்கு மட்டும் மெட்டமைத்திருக்கிறார். அந்த வெண்பாக்கள் உள் சென்ற மகிழ்வில் 20க்கும் மெட்டமைத்து பாடியிருக்கலாமே எனும் ஏக்கம் தோன்றும்…. இரண்டு வெண்பா கிழே

நானார் என் உள்ளமார் ஞானங்களார் என்னை யாரறிவார்

வானோர் பிரானென்னை ஆண்டிலனேல் மதிமயங்கி

ஊனாருடை தலையில் உண்பலிதேர் அம்பலவன்

தேனார் கமலமே சென்றுதாய் கோதும்பி……..

உள்ளப்படாத திருவுருவை உள்ளுதலும்

கள்ளப்படாத களி வந்த வான் கருணை

வெள்ளப் பிரான் என் பிரான் என்னை வேறே ஆட்

கொள்ளப் பிரானுக்கே சென்றுதாய் கோதும்பி…….

இணைப்புக்கு நன்றிகள் நுணா.. ஞானங்களார் என்று பாடி முடிக்கும்போது ஒரு சிலிர்ப்பு.. :D எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்..! :D

சிம்பொனியிலஃ வித்தியாசமாக முயற்சி செய்திருக்கிறார் இளையராயா

உண்மையிலேயே அரிதான இணைப்பு. நன்றி நூணாவிலான்

ஹலோ மேடம்.. இதை இதுக்கு முன்னாலை நீங்கள் கேட்டதில்லையா? :o:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை நான் ரொம்ப ரொம்ப நல்ல பிள்ளை இல்லை :icon_mrgreen:

இவற்றையெல்லாம் ஒழுங்காகக் கேட்டிருந்தால் நான் கோயில் குளம் என்றெல்லோ திரிந்திருப்பேன்

சரி இன்றும் ஒரு தூதுப்பாடல்

காற்று விடு தூது :rolleyes:

நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசை பார்த்திருந்து

ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணல

மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கிபோன பின்னும்

சோறு தண்ணி வேணுமின்னு தோணல

என் தெம்மாங்கு பாட்ட கேட்டு தென் காத்து ஓடிவந்து

தூதாக போக வேணும் அக்கரையிலே

நான் உண்டான ஆசைகளை உள்ளார பூட்டிவச்சு

ஒத்தையிலே வாடுறேனே இக்கரையிலே

நான் மா மரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும்

பார்த்திருந்து மாமனுக்கு காத்திருந்தேன் காணல

அட சாயங்காலம் ஆன பின்னும் சந்தை மூடிப் போன பின்னும்

வீடு போய் சேர்ந்திடத்தான தோணல

நான் மா மரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும்

பார்த்திருந்து மாமனுக்கு காத்திருந்தேன் காணல

அட சாயங்காலம் ஆன பின்னும் சந்தை மூடிப்போன பின்னும்

வீடு போய் சேர்ந்திடத்தான் தோணல

என் தெம்மாங்கு பாட்ட கேட்டு தென்காத்து ஓடிவந்து

தூதாக போக வேணும் அக்கரையிலே

நான் உண்டான ஆசைகளை உள்ளார பூட்டி வச்சு

தீண்டாடி நிக்கிறேனே இக்கரையிலே

நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசை பார்த்திருந்து

ஏந்தழைக்குக் காத்திருந்தேன் காணல

மணி ஏழு எட்டு ஆண பின்னும் ஊரடங்கிபோன பின்னும்

சோறு தண்ணி வேணுமின்னு தோணல

தூரக் கிழக்கு கரை ஓரந்தான் தாழப்பறந்து வரும் மேகம் தான்

உங்கிட்டே சேராதோ எம்பாட்ட கூறதோ

ஒன்னாக நாம் கூடும் சந்தர்ப்பம் வாராதோ

உன் கூட நானும் சேர ஒத்த காலில் நின்னேனே

தென்மானை கூட்டத்தோடு சேதி ஒண்ணு சொன்னேனே

கண்ணலம் காட்சி எப்போது எந்நாளும் என் நேசம் தப்பாது

நான் மா மரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும்

பார்த்திருந்து மாமனுக்கு காத்திருந்தேன் காணல

மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கிபோன பின்னும்

சோறு தண்ணி வேணுமின்னு தோணல

மாமன் நெனப்பில் சின்னத் தாயிதான்

மாசக் கணக்கில் கொண்ட நோயிதான்

மச்சான் கை பட்டாக்கா மூச்சூடும் தீராதோ

அக்காளின் பெண்ணுக்கோர் பொற்காலம் வராதோ

கையேந்தும் ஆட்டு குட்டி கன்னிப் பொண்ணுக மாறதோ

மையேந்தும் கண்ணை காட்டி மையல் தீரபேசாதோ

உன்னாலே தூக்கம் போயாச்சி உள்ளார ஏதேதோ ஆயாச்சு

நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசைபார்த்திருந்து

ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணல

மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கிபோன பின்னும்

சோறு தண்ணி வேணுமின்னு தோணல

என் தெம்மாங்கு பாட்ட கேட்டு தென்காத்து ஓடிவந்து

தூதாக போக வேணும் அக்கரையிலே

நான் உண்டான அசைகளை உள்ளார பூட்டிவச்சு

ஒத்தையிலே வாடுறேனே இக்கரையிலே

நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசைபார்த்திருந்து

ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணல

அட சாயங்காலம் ஆன பின்னும் சந்தை மூடிபோன பின்னும்

வீடு போய் சேர்ந்திடத்தான தோணல

Link to comment
Share on other sites

எப்பதான் கரிகாய் பொரித்து முடிக்கப் போகின்றாவோ தெரியலை :rolleyes: , கரிக்காயாச்சே பொரிந்தாலும் தெரியாது. பயர் அலாம் அடிக்கும் மட்டும் பொரியுங்கோ நண்பி! :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்பதான் கரிகாய் பொரித்து முடிக்கப் போகின்றாவோ தெரியலை , கரிக்காயாச்சே பொரிந்தாலும் தெரியாது. பயர் அலாம் அடிக்கும் மட்டும் பொரியுங்கோ நண்பி!

வணக்கம் எல்லோருக்கும்..

இந்தப்பகுதியில் கலகலப்பாக தமிழின் பொருளை...., புலவர்களின் கலகலப்பை... தமிழால் விளைவிக்கப்பட்ட கிண்டல் கேலிகளை இணைக்கலாம். எனக்கு அதிகம் தெரியாது இருப்பினும் தேடலின் அவா நிறையவே உள்ளது. அத்தேடலின் அவா கைகொடுக்கும் தருணங்களில் நான் இரசித்த அல்லது இரசிக்க எத்தனிக்கும் தமிழ் மொழியின் பொருள் நிறைந்த நயங்களை பதிவிடலாம் என்று ஒரு சின்ன அடியெடுத்து வைக்கின்றேன்... இது இவளுக்கானது என்று நீங்கள் எவரும் ஒதுக்கி விடாமலும் ஒதுங்கிப் போகாமல் கூட இணைந்து தமிழை நயந்து நடக்கலாம் வாருங்கள்.

“கரிக்காய் பொரித்தேன் கன்னிக்காய் நெய்து வட்டலாக்கினேன்

ரிக்காயைப் பச்சடியாகப் பண்ணினேன்

கொஞ்சம் இதன் பொருளைக் கற்பனை பண்ணிப்பாருங்கள்.....

என்னடா ஆரம்பமே இப்படி....... :lol:

அலை,

கடல் குடித்த குறுமுனியும் கரைகாணாக்கடலை நான் மட்டும் எப்படி முடிக்க முடியும்?..... இந்த யாழும் நானும் இணைந்து இருக்கும்வரை தொடரும்.... :icon_mrgreen:

ஆரம்பத்தை பாருங்கள்.... உங்களுக்கு அலுத்துவிட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல :lol:

என்ன நீண்டகாலமாக தூது பற்றி இழுபடுகிறதே என்று பார்க்கிறீர்களா? என்ன செய்ய தேடலில் கிடைக்கும் பகுதிகளை நாளாந்தம் இணைக்கின்றேன்.....இன்னும் நிறைய இருக்கிறது ஒரு நாளில் தூது பற்றி முமுவதையும் இணைத்தால் யாருமே எட்டிப்பார்க்க மாட்டார்கள் அதுதான் இப்படி....இது முடிய வேறொரு விடயத்தோடு கரிக்காய் பொரிக்காமல் விடப்போகிறேனா?.. இத்திரியினால் சோதனைக்குள்ளாகும் நண்பர்கள் மன்னிப்பார்களாக.... தொடர்ந்து வாசியுங்கள்.... தொடர்ந்து வரும் காலங்களில் நிறையக் கிளுகிளுப்பான விடயங்களும் வராமலா போகப் போகிறது? :icon_mrgreen: :icon_mrgreen: :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=PW3OfTq_WxY

எதிர் பார்த்தேன் இளங்கிளிய காணலியே

இளங்காத்தே ஏன் வரல தெரியலையே

எதிர் பார்த்தேன் இளங்கிளிய காணலியே

இளங்காத்தே ஏன் வரல தெரியலையே

வாராளோ என் மாது பூங்காத்தே போ தூது

எதிர் பார்த்தேன் இளங்கிளிய காணலியே

இளங்காத்தே ஏன் வரல தெரியலையே

தொடத்தொட தள்ளித் தள்ளி போனா

நெஞ்சம் துடிக்குது தூண்டில் பட்ட மீனா

தொடத்தொட தள்ளித் தள்ளி போனா

நெஞ்சம் துடிக்குது தூண்டில் பட்ட மீனா

தாகத்தோட நானிருக்க தண்ணீர் குடமா நீ இருக்க

தேடி வந்தா ஒதுங்குவதேன் தென்றல போல ஓடுவதேன்

தேன் தான் சிந்தும் செந்தாமரையே

இது ஏன் தான் சொல்லு என் பூங்கொடியே

எதிர் பார்த்தேன் இளங்கிளிய காணலியே

இளங்காத்தே ஏன் வரல தெரியலையே

வளைக்கரம் காதில் கொஞ்சும் ஓசை கேட்டால்

விழித்திடும் நெஞ்சில் தூங்கும் ஆசை

வளைக்கரம் காதில் கொஞ்சும் ஓசை கேட்டால்

விழித்திடும் நெஞ்சில் தூங்கும் ஆசை

ஊருக்குள்ளே தீ புடிச்சா ஓடையும் உண்டு தீயணைக்க

உள்ளத்திலே நெருப்பெரிஞ்சா உடனே வரணும் நீயணைக்க

ஏன் தான் இல்ல என் ஞாபகமே அடி வா வா கொஞ்ச என் தேன்குடமே

எதிர் பார்த்தேன் இளங்கிளிய காணலியே

இளங்காத்தே ஏன் வரல தெரியலையே

வாராளோ என் மாது பூங்காத்தே போ தூது

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சிறிது நீண்ட இடைவெளி ஏற்பட்டுவிட்டது....

கரிக்காய் பொரியல் மீண்டும் சுவை குன்றாமல் தொடரும்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி இன்று ஒரு புதிய பகுதிக்குச் செல்வோம்....

நம்முடைய பழம்பெரும் புலவர்கள் குறித்து மிகவும் சுவையான சம்பவங்கள் பல உள்ளன. அப்படியான சம்பவங்களில் புலவர்கள் படைத்த பாடல்களாலேயே இன்றுவரைக்கும் அவர்கள் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்...... அந்த வகையில் இன்று கவிச்சக்கரவர்த்தி கம்பனின் கிறுக்கை பார்க்கலாமே..

கம்பன் மாபெரும் புலவன் அவருடைய புலமையில் ஈர்க்கப்படாதவர்களே இல்லை என்று சொல்லலாம்.... அப்படி ஈர்க்கப்பட்ட ஒரு பெண்ணின் ஆசையைத்தான் இப்போது இங்கே பதிவிடப்போகின்றேன்....இந்தப்பெண்ணின் ஆசை நிறைவேறியதா என்று வாசித்து அறியுங்கள் :rolleyes: .

கம்பர் காலத்தில் கம்பரின் பாடல்களை மிகவும் நேசித்த சிலம்பி என்னும் தாசி கம்பரிடம் தன்னைப்பற்றிப்பாடும்படி மிகவும் வேண்டினாள்..கம்பரோ அவளைப்பற்றிப்பாடுவதென்றால் தனக்கு நிறையப் பொன் தரவேண்டும் என்று கேட்டார்...அதற்குத் தாசி தன்னுடைய சொத்துகளையெல்லாம் விற்றுத் திரட்டி கம்பரிடம் பொன்னைக் கொடுத்துப் பாடும் படி கேட்டாள்.. கம்பரிடம் சிலம்பி கொடுத்த பொன் கம்பர் கேட்டபொன்னில் பாதியே இருந்தது. இங்குதான் கம்பனின் கிறுக்கை அறிய முடியும். சிலம்பி கொடுத்த பாதிப் பொன்னுக்கு மட்டும் பாடல் எழுதிக் கொடுத்துவிட்டு கம்பன் சென்று விட்டான்..பாவம் சிலம்பி தன்னுடைய சொத்தெல்லாம் விற்று கம்பனுக்கு பொன் கொடுத்து பெற்ற வெண்பா முற்றுப்பெறாமல் இரண்டு வரிகளுடன் தொக்கி நின்றது.... இதற்குப்பின் சிலம்பிக்கு கம்பனால் எழுதப்பட்ட வெண்பா பின்னிரு வரிகள் கோர்த்து முற்றுப்பெற்றது....அதையும் நாமறிந்த ஒரு புலவரே முற்றுப்பெற வைத்தார்... கீழே கம்பனின் வரிகளை இணைக்கினறேன்.... அதனை முழுமைப்படுத்திய அந்தப்புலவரையும் அந்தப்பின்னிரு வரிகளையும் நீங்கள் யாராவது இணையுங்கள்.....

தண்ணீரும் காவிரியே தார்வேந்தன் சோழனே

மண்ணாவது சோழ மண்டலமே..................................

இது கம்பனின் வரிகள் மிகுதியையும் அவ்வரிகளை எழுதிய புலவரையும் நீங்கள் கண்டுபிடித்து இணையுங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட இன்றைக்குத்தான் பார்த்தன்....மிக அருமையான திரி...நன்றி அக்கா பதிவுக்கு.....

Link to comment
Share on other sites

சிலம்பி என்னும் தாசிக்குப் பாடல் பெறவேண்டும் என்று ஆசை. அதனால்

கம்பரிடம் தன்னைப் பாடுமாறு கேட்டுக்கொண்டாள். அவரோ எக்கச்சக்கமாகப்

பொன்கேட்டார். அவள் தன்னிடமிருந்த சொத்தையெல்லாம் விற்று கம்பரிடம்

பொன்னைக் கொடுதாள். ஆனால் அது அவர் கேட்ட பொன்னில் பாதியே

இருந்தது.

ஆகவே கம்பர்,

தண்ணீரும் காவிரியே தார்வேந்தன் சோழனே

மண்ணாவதும் சோழமண்டலமே......

என்று பாதிவெண்பாவை மட்டும் பாடிக்கொடுத்தார்.

பொருளிழந்த சிலம்பி அதன் பின்னர் கடுமையான ஏழ்மையில் உழன்று

கொண்டிருந்தாள்.

அப்போது ஔவை அங்கு வந்தார். அவருடைய பசிக்கு அவள் கூழ் தந்து

உபசரித்தாள். அந்த ஏழ்மையில் அவளிடம் இருந்தது அதுதான்.

அவளைப் பற்றிய விபரங்களை ஔவை கேட்கவே, அவள் தன் கதையைச்

சொன்னாள்.

ஔவை மீதிப்பாட்டையும் பாடிப் பூர்த்திசெய்து கொடுத்தார்.

.....................................................................-பெண்ணாவாள்

அம்பொற் சிலம்பி அரவிந்தத் தாளணியும்

செம்பொற் சிலம்பே சிலம்பு.

தண்ணீரில் சிறந்தது காவிரி; தார்வேந்தர்களில் சிறந்தவன் சோழமன்னன்;

மண்வளத்தில் சிறந்தது சோழமண்டலமே என்று அவற்றைக் கம்பர்

சிறப்பித்துப் பாடிவிட்டார்.

பெண்களில் சிறந்தவளாக சிலம்பியையும் சிலம்புகளிற் சிறந்ததாக

அவளுடைய தாமரை போன்ற தாள்களில் அவள அணியும் சிலம்பையும்

சிறப்பித்து ஔவையார் பாடிவிட்டார்.

அந்தப் பாட்டைப் பாடிமுடித்த பின்னர் அதன் விளைவாகத் தன்னுடைய

காலில் செம்மையான பொன்னால் ஆன சிலம்பு அணிந்துகொள்ளும்

அளவுக்குச் சிலம்பி செல்வம் படைத்தவளானாள்.

இதனையட்டி 'கம்பன் பொன்னுக்குப் பாடுவான்;

ஔவை கூழுக்குப் பாடுவாள்' என்ற சொல்வழக்கு ஏற்பட்டது.

அதைக் குறிக்கும் இன்னொரு பழம்பாடலும் இருக்கிறது.

காசுக்குக் கம்பன், கருணைக்கு அருணகிரி,

ஆசுக்குக் காளமுகில் ஆவானே - தேசுபெறும்

ஊழுக்குக் கூத்தன், உவக்கப் புகழேந்தி,

கூழுக்கிங்கு அவ்வையெனக் கூறு.

இந்தத் தனிப்பாடலில் சில புலவர்களைப் பற்றி மட்டுமே குறிப்பிட்டு

பாடிய புலவர் பாடியிருக்கிறார். அவருடைய கருத்தில் அவர் கட்டிய

முடிவுகள். அல்லது அவர் வாழ்ந்த காலகட்டத்திலும் அதற்கு முன்னரும்

பொதுவாக நிலவிய கருத்துக்களாகவும் இருக்கலாம்.

இந்தப் பாடல் எளிமையான பாடல்.

ஒட்டக்கூத்தர் தவறாகப் பாடுபவர்களை அடைத்துவைத்து, ஒரு குறிப்பிட்ட

எண்ணிக்கை சேர்ந்தபின்னர் இரண்டிரண்டு பேராக அவர்களின் குடுமிகளை

ஒன்றாக முடிந்து, அவர்களின் தலைகளை ஒரே வீசில் வெட்டி காளிக்குப் பலி

கொடுத்தாராம். அதனால்தான் ஊழுக்கு - விதிக்கு கூத்தன் என்று பாடியுள்ளார்.

விதி முடிந்தவன்தான் கூத்தனிடம் போய் மாட்டிக்கொள்வான் என்ற பொருள்.

குட்டுதற்கோ பிள்ளைப்பாண்டியன் இல்லை என்று இன்னொரு தனிப்பாடலில்

ஒட்டக்கூத்தரைப் பற்றின இவாறான கருத்து காணப்படும்.

மேகத்தை முகில் எனவும் சொல்லலாம். ஆகவே காளமேகத்தைக் காளமுகில்

என்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி இன்று தேடலுக்கான ஒரு பதிவை இடுகின்றேன்

பலாப்பழ மத்தளம்

சங்க இலக்கியத்தில் சங்கதி உள்ளது கண்டு பிடித்து வாங்கோ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் கெட்ட கோபம் வருவது புரிகிறது பலாப்பழ மத்தளம் என்று இங்கு போட்டு வதைக்க நினைக்கவில்லை...சங்க இலக்கியங்களைப் படித்தவளும் இல்லை எல்லாம் இந்த கூகுலாண்டவரின் புண்ணியத்தால் அறியக்கிடைத்தது அதை அப்படியே எடுத்து வந்து இங்கு இணைத்துவிடலாம் என்ற ஒட்டுண்ணி எண்ணம் என்னைப்பாடாய் படுத்துகிறது.. அதுதான் இப்படி அதிகம் அறியாத தகவல்களை மட்டுமல்ல புலவர்களின் பெயர்களையும், அவர்களின் பாடல்களையும் எடுத்து வந்து இணைக்கின்றேன்...புலவர்கள் என்றால் சங்க காலத்திலிருந்துதான் எடுத்துவருவோம் என்றில்லை அன்றைய அகத்தியரில் இருந்து இந்த யாழ்க்களத்தில் இணைந்திருக்கும் புதிய கவிஞர் லியோ வரைக்கும் சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற்போல அனைவரையும் இழுத்து வந்து இந்தக்கரிக்காய் பொரியல் சட்டியில் பொரிப்போம். அதற்கு முக்கியமாக உங்கள் ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் தேவை...அவ்வப்போது இடப்படும் சிறப்பு கருக்களுக்கமைய உங்கள் பதிவுகளையோ அல்லது நீங்கள் வாசித்தனவற்றையோ இணைக்கலாம். நான் உங்களைச் சோதனைக்கு உள்ளாக்குவதுபோன்று நீங்களும் என்னையும் மற்றவர்களையும் சோதிக்கலாம்.... எண்ணெய் ஊற்றி கருக்கலாம். :lol: :lol: :icon_idea:

இங்கு பாருங்கள் கீழ்வரும் பாடலை எழுதிய புலவரின் பெயர்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஏணிச்சேரி முடமோசியார்

பலாப்பழ மத்தளம்

*" மன்றப் பலவின் மாச்சினை மந்தி

இரவலர் நாற்றிய விசிகூடு முழவின்

பாடின் தெண்கண் கனிசெத்து, அடிப்பின்

அன்னச் சேவல் மாறு எழுந்து ஆலும்

கழல்தொடி ஆஅய் மழைதவழ் பொதியில்

ஆடுமகள் குறுகின் அல்லது,

பீடுகெழு மன்னர் குறுகலோ அரிதே"

(புறநானூறு : பாடல் : 128)

*" விளங்குமணிக் கொடும்பூண் ஆஅய், நின்னாட்டு

இளம்பிடி ஒருசூல் பத்து ஈனும்மோ?

நின்னும் நின் மலையும் பாடி வருநர்க்கு

இன்முகம் கரவாது உவந்து நீ அளித்த

அண்ணல் யானை எண்ணின், கொங்கர்க்

குடகடல் ஓட்டிய ஞான்றைத்

தலைப்பெயர்த் திட்ட வேலினும் பலவே!"

(புறநானூறு : பாடல் : 130)

*" மழைக் கணஞ்சேக்கும் மாமலைக் கிழவன்

வாழைப் பூங்கண்ணி வாய்வாள் அண்டிரன்

குன்றம் பாடின கொல்லோ

களிறு மிகவுடைய இக் கவின்பெறு காடே!"

(புறநானூறு : பாடல் : 131)

*"வடதிசை யதுவே வான்தோய் இமயம்

தென்திசை ஆஅய்குடி இன்றாயின்

பிறழ்வது மன்னோ, இம்மலர்தலை உலகே."

(புறநானூறு : பாடல் : 132)

*"இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்" எனும்

அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்

பிறரும் சான்றோர் சென்ற நெறியென

ஆங்குப் பட்டன்று அவன் கைவண்மையே."

(புறநானூறு : பாடல் : 134)

பொருள் விளக்கம் :

பலவின் மாச்சினை மந்தி = பலாமரத்துக் கிளையில் இருக்கும் மந்தி.

இரவலர் நாற்றிய = பரிசு வாங்க வந்தோர் தூக்கிக் கட்டிவைத்த.

விசிகூடு முழவு = பிணிப்பு பொருந்திய மத்தளம்.

கனிசெத்து = பலாப்பழமெனக் கருதி.

குறுகின் = அணுகினால்.

தலைப்பெயர்த்திட்ட = தம்மிடமிருந்து விடப்பட்ட.

ஆங்குப்பட்டன்று அவன் கைவண்மை = அச்செய்கையின் பாற்பட்டதன்று அவனது ஈகைத்தன்மை.

வாள் தூங்கும் உறையைப் போல் மீசையுள்ள

வேள் ஆய் அண்டிரன் எனும் குறுநில வேந்தன்

பொதிய மலைப்பகுதி ஆய்குடியைத் தலைநகராய்க் கொண்டு

போரென்று வருவோரை எலியாக்கி விரட்டுகின்ற புலியாவான்!

உறையூர் ஏணிச்சேரி முடிமோசியார், குட்டுவன் கீரனார்,

துறையூர் ஓடைக்கிழார், பரணர், காரிக்கண்ணனார்,

உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார் என்றெல்லாம்

ஒரு புலவர் கூட்டமே இவன் புகழ் பாடிப் போற்றிற்று எனினும்

உடனிருந்து அவன் உளமுணர்ந்து உவகை பொங்கத்

திடங் கொண்ட அவன் கைகளாலே தினந்தோறும்

அள்ளிக் கொடுத்த வள்ளல் தன்மையினைப்

புள்ளி மயிலின் இறகெடுத்துக் குழந்தையின் பூங்குழலில்

செருகியது போல்

புறப்பாட்டாய் எழுதியெடுத்து தமிழ் முடியில் சொருகியவர்

புலவர் பிரான் உறையூர் ஏணிச்சேரி முடிமோசியார்

ஒருவர்தானே!

ஆய் அண்டிரன் மலை வளம் குறித்து ஏணிச்சேரி

முடமோசியார்

அரியதோர் நிகழ்ச்சியினை அழகுறப் பாடுதல் காண்போம்.

மலையோரம் ஊர்ப் பொதுவிடத்தில் இரவலர் கட்டியிருந்த

மத்தளத்தை

மந்தியொன்று பலாக்கனியென மயங்கித் தட்டிப்பார்க்க

மரத்தின் கிளைகளில் வாழ் அன்னச் சேவல்;

மருண்டு போய்ச் சிறகடித்து ஒலியெழுப்பிப் பறக்கின்ற;

புகை போலும் முகில் தவழும் பொதிய மலை நோக்கி

நகை முகத்து ஆரணங்குகள் ஆடச் செல்வரேயன்றி

படை யெடுத்துப் பகைநாட்டார்; அண்டிரனைச் சூழ்வதற்குத்

தலை வைத்தும் படுக்க மாட்டார் அவன் ஆளுகின்ற மலையிருக்கும் திக்கு நோக்கி!

கொங்கரை எதிர்த்து அவர் கொடும் பகை அழித்துக்

குடமலைக் கடற்கரை வரையில் விரட்டிய வீரனவன்!

ஏணிச்சேரியார் இயற்றிய பாடலில் - அவன் ஆண்ட நிலத்தின்

எழிலையும் காணலாம்; எதிரிகள் பட்ட பாட்டையும் காணலாம்!

தோற்றோடிய பகைவராம் கொங்கர் புறங்காட்டி

மேற்றிசைக் கடலோர மலைகளிலே ஒளிந்தபோது

எறிந்துவீட்டுப் போன வேல்களின் தொகையையும் மிஞ்சுமாம்;

பரிசிலர்க்கு ஆய் அண்டிரன் பரிந்தளித்த யானைகளின் தொகை!

வியப்புற்ற, தமிழ் வித்தகராம் ஏணிச்சேரியார் கேட்கின்றார்;

வேந்தே! உனது நாட்டு யானைகள் மட்டும் ஒரு தடவைக்குப்

பத்து கன்று போடுமோ என்று!

பாடி வந்த பாணர்க்கும், பாவலர்க்கும், பரிசிலர்க்கும்

பரிசளித்த எப்படித்தான் இருந்ததோ அத்தனை யானையென

அதிசயத்தால் மெய்மறந்து கவிதை தீட்டி

ஆய் அண்டிரனைப் புகழ்ந்த பாவேந்தர் முடிமோசியார்;

நாட்டு வளம் பாடுவதில் நற்புலமை நாவலராய்த் திகழ்ந்தார் எனினும்

காட்டு வளம் காண்பதற்கு ஒரு நாள் சென்றாராம்!

வழி நெடுக அவர் கண்ட காட்சி; அவர்

விழிகளையே அவர் நம்ப முடியாமற் செய்ததுவாம்!

கூட்டங் கூட்டமாய் யானைகள் பெரிதும் சிறிதும்

வாட்டமின்றி வளர்ந்தோங்கிய மரங்களின் நிழலில்

நூற்றுக்கணக்கில் நின்றதைப் பார்த்து

ஆற்றுப் பெருக்கென அருந்தமிழ்க் கவிதை யாத்தார் ஆங்கே!

பாடுவோர்தான் ஆய் அண்டிரனை நாடிப்

பரிசாகப் பன்னூறு யானைகளைப் பெற்றிடுவர்; இந்தக்

காடுகளும் ஒருவேளை; கவிதை கற்றுப்பரிசு பெற

நீடுபுகழ் ஆய் அண்டிரனைத் தேடி வந்து - இந்தக்

களிறுகளைப் பரிசாகப் பெற்று வந்து, நல்ல

குளிர் தருக்கள் நிழல் தனிலே குவித்து வைத்தனவோ?

கவிநயம், கவின் தமிழ் நயம் கற்கண்டாம் - அதிலும்

புவியாளும் ஆய் அண்டிரனைப் புகழ்கின்ற பொருள் நயம்

புதிய மணப் பூச்செண்டாம்!

பனி சூழ் மலையாம் இமயம் வடதிசையில் நிற்கும்போது,

கனி சூழ் மலையாம் ஆய்குடி தென்திசையில் நில்லாதாயின்

கீழ் மேலாகி இப்பெரும் உலகம் தலை சாய்ந்து

பாழ்பட்டுப் போகுமென முடமோசியார் பாடுகின்றார் எனின்;

அது, ஆய் அண்டிரனின் கொடைச் சிறப்பை எண்ணி

மதுவுண்ட வண்டு போல் மாக்கவிஞர் ஆனதினால்தானே!

வள்ளலுக் கெல்லாம் வள்ளலாய்த் திகழ்ந்தவனும்

வான்மழை யொத்தவனுமான வேள் ஆய் அண்டிரன் குறித்து

உள்ளத்தில் அழுக்கு கொண்ட ஒரு சிலரோ - புகழ்

உயரத்தில் வீற்றிருந்த ஆய்குடி வேந்தன் தன்னை

பள்ளத்தில் உருட்டுவதாய்க் கருதிக்கொண்டு - அவன்

அள்ளித் தருவதெல்லாம் ஆதாயம் எதிர்பார்த்துத்தான் என்றும்

இப்பிறப்பில் செய்யும் உதவியெலாம் மறுபிறப்பில் உதவுமென்ற

தன்னலத்தின் அடிப்படையில்தான் தருகின்றான் கொடையென்றும்

நாக்கிருக்கும் காரணத்தால் நாலு பேர் பத்த பேர் கூடி

நோக்கம் கற்பித்தார் ஆய் அண்டிரனின் அரவணைக்கும் போக்கிற்கு!

இதுகேட்டுச் சினம் மிகக் கொண்ட முடமோசியார்,

இழிதகை நோக்கம் கற்பித்தல் தீதென உரைத்து;

இம்மையிற் செய்வது மறுமைக்கு ஆகுமெனும்

அறவிலை வணிகனல்ல ஆய் அண்டிரன் என்று,

திட்டவட்டமாய்த் தீட்டினார் பாடல் ஒன்று!

கொட்டிக் கொடுக்கும் பொருளை விலையாக்கி

தட்டிப் பறித்திடலாம் மறுமையில் அறத்தையென்று

தரந் தாழ்ந்த சிந்தை அணுவளவும் கொள்ளாத

வேள் ஆய் அண்டிரனை வெறுப்பின் விளைவாலே

தேள் போலக் கொட்ட நினையாதீர்!

பயன் கருதி பரிசிலர்க்கும் இரவலர்க்கும்

பசும்பொன்னும் அணியும் மணியும் யானைகளும்

பரிசாகத் தருகின்ற எத்தனல்ல எமது மன்னனென்று

பதிலை நெருப்பாக உமிழ்ந்த பாவாணர் முடமோசியார்

வாழ்க! வாழ்க!

நன்றி

மூலம் http://eluthu.com/ka...avithai/85.html

முழவு பற்றிய மேலதிக விபரங்கள்

முழவு

a061341d.jpg jackfruit1.jpg

தாளங்களை (rhythms) அளவாக முழக்கி அடித்துத் தரும்

கருவி முழவு. இது தோற்கருவி வகையைச் (percussion

instruments) சேர்ந்தது. மேலை நாட்டு இசையில் தோற்

கருவிகளை மெம்பிரானோபோன்ஸ் (membranophones) என்பர்.

பழந்தமிழர் யாழ், குழல், முழவு ஆகிய மூவகைக் கருவிகளையும்

பாட்டிசையோடு இணைத்து இசைத்தனர்.சங்கத் தொகை நூல்களில்

எட்டுத் தொகையுள் ஒன்று பரிபாடல். இந்நூலில் இது பற்றித்

தெளிவாகச் சொல்லியிருப்பதைப் பாருங்கள்.

c01111at.jpg

எழுபுணர் யாழும் இசையுடன் கூடக்

குழலளந்து நிற்ப முழவெழுந் தார்ப்ப

(புணர்:இணைந்து, அளந்து:சரியாக, ஆர்ப்ப : பெரிதாக ஒலிக்க)

அதாவது யாழில் இணைந்து எழுகின்ற இனிய இசை

பாட்டிசையோடு கூடி இசைக்கும். அப்பொழுது குழலில் எழும்

இசை அதனோடு அளவாகச் சேரும். இவற்றுடன் பெரிதாக

ஒலித்தபடி முழவின் ஓசை சேரும்.

Link to comment
Share on other sites

சிலம்பி என்னும் தாசிக்குப் பாடல் பெறவேண்டும் என்று ஆசை. அதனால்

கம்பரிடம் தன்னைப் பாடுமாறு கேட்டுக்கொண்டாள். அவரோ எக்கச்சக்கமாகப்

பொன்கேட்டார். அவள் தன்னிடமிருந்த சொத்தையெல்லாம் விற்று கம்பரிடம்

பொன்னைக் கொடுதாள். ஆனால் அது அவர் கேட்ட பொன்னில் பாதியே

இருந்தது.

ஆகவே கம்பர்,

தண்ணீரும் காவிரியே தார்வேந்தன் சோழனே

மண்ணாவதும் சோழமண்டலமே......

என்று பாதிவெண்பாவை மட்டும் பாடிக்கொடுத்தார்.

பொருளிழந்த சிலம்பி அதன் பின்னர் கடுமையான ஏழ்மையில் உழன்று

கொண்டிருந்தாள்.

அப்போது ஔவை அங்கு வந்தார். அவருடைய பசிக்கு அவள் கூழ் தந்து

உபசரித்தாள். அந்த ஏழ்மையில் அவளிடம் இருந்தது அதுதான்.

அவளைப் பற்றிய விபரங்களை ஔவை கேட்கவே, அவள் தன் கதையைச்

சொன்னாள்.

ஔவை மீதிப்பாட்டையும் பாடிப் பூர்த்திசெய்து கொடுத்தார்.

.....................................................................-பெண்ணாவாள்

அம்பொற் சிலம்பி அரவிந்தத் தாளணியும்

செம்பொற் சிலம்பே சிலம்பு.

தண்ணீரில் சிறந்தது காவிரி; தார்வேந்தர்களில் சிறந்தவன் சோழமன்னன்;

மண்வளத்தில் சிறந்தது சோழமண்டலமே என்று அவற்றைக் கம்பர்

சிறப்பித்துப் பாடிவிட்டார்.

பெண்களில் சிறந்தவளாக சிலம்பியையும் சிலம்புகளிற் சிறந்ததாக

அவளுடைய தாமரை போன்ற தாள்களில் அவள அணியும் சிலம்பையும்

சிறப்பித்து ஔவையார் பாடிவிட்டார்.

அந்தப் பாட்டைப் பாடிமுடித்த பின்னர் அதன் விளைவாகத் தன்னுடைய

காலில் செம்மையான பொன்னால் ஆன சிலம்பு அணிந்துகொள்ளும்

அளவுக்குச் சிலம்பி செல்வம் படைத்தவளானாள்.

இதனையட்டி 'கம்பன் பொன்னுக்குப் பாடுவான்;

ஔவை கூழுக்குப் பாடுவாள்' என்ற சொல்வழக்கு ஏற்பட்டது.

அதைக் குறிக்கும் இன்னொரு பழம்பாடலும் இருக்கிறது.

காசுக்குக் கம்பன், கருணைக்கு அருணகிரி,

ஆசுக்குக் காளமுகில் ஆவானே - தேசுபெறும்

ஊழுக்குக் கூத்தன், உவக்கப் புகழேந்தி,

கூழுக்கிங்கு அவ்வையெனக் கூறு.

இந்தத் தனிப்பாடலில் சில புலவர்களைப் பற்றி மட்டுமே குறிப்பிட்டு

பாடிய புலவர் பாடியிருக்கிறார். அவருடைய கருத்தில் அவர் கட்டிய

முடிவுகள். அல்லது அவர் வாழ்ந்த காலகட்டத்திலும் அதற்கு முன்னரும்

பொதுவாக நிலவிய கருத்துக்களாகவும் இருக்கலாம்.

இந்தப் பாடல் எளிமையான பாடல்.

ஒட்டக்கூத்தர் தவறாகப் பாடுபவர்களை அடைத்துவைத்து, ஒரு குறிப்பிட்ட

எண்ணிக்கை சேர்ந்தபின்னர் இரண்டிரண்டு பேராக அவர்களின் குடுமிகளை

ஒன்றாக முடிந்து, அவர்களின் தலைகளை ஒரே வீசில் வெட்டி காளிக்குப் பலி

கொடுத்தாராம். அதனால்தான் ஊழுக்கு - விதிக்கு கூத்தன் என்று பாடியுள்ளார்.

விதி முடிந்தவன்தான் கூத்தனிடம் போய் மாட்டிக்கொள்வான் என்ற பொருள்.

குட்டுதற்கோ பிள்ளைப்பாண்டியன் இல்லை என்று இன்னொரு தனிப்பாடலில்

ஒட்டக்கூத்தரைப் பற்றின இவாறான கருத்து காணப்படும்.

மேகத்தை முகில் எனவும் சொல்லலாம். ஆகவே காளமேகத்தைக் காளமுகில்

என்கிறார்.

“ஒட்டக்கூத்தர் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்.”

இது பரவலாக எல்லோராலும் அவ்வப்போது எடுத்துரைக்கப்படும் பழமொழி. ஆனால் இதன் உண்மையான பொருள் என்ன என்பது பலருக்குத் தொ¢யாது. இதன் பின்னணியில் ஒரு சம்பவம் உண்டு. அது யாதெனில்:

குலோத்துங்க மன்னனின் மனைவி பாண்டிய நாட்டு ராஜகுமா¡¢. அவளது குரு புகழ்பெற்ற நளவெண்பா என்னும் காவியத்தை இயற்றிய புகழேந்திப் புலவர். புகழேந்திப் புலவர் ராஜகுமா¡¢யுடனே வந்து சோழ நாட்டில் தங்கி இருந்தார். குலோத்துங்க சோழனின் அவைக்களப் புலவரும் குருவுமான ஒட்டக்கூத்தர் புகழேந்தியை எக்காரணமுமின்றிச் சிறையிலடைத்துவிட்டார். இந்த விவரத்தைக் கேள்வியுற்ற ராணிக்குக் கோபம் வந்து விட்டது. அதனால் அவள் அரசன் அந்தப்புரத்திற்கு வரும் சமயம் அறைக்குள்ளே புகுந்து கொண்டு கதவைத் தாழிட்டுக் கொண்டாள். மன்னன் குரல் கொடுத்தும் கதவைத் திறக்கவில்லை. அந்த நாளில் மகாராணிகள் ஊடல் கொண்டால் மன்னர்கள் தங்கள் அவைக்களப் புலவரை அனுப்பி சமாதானம் செய்து வைப்பது வழக்கம். அதன்படியே குலோத்துங்கனும் தனது அவைக்களப் புலவரும் குருவுமான ஒட்டக்கூத்தரை அனுப்பினான்.

ஒட்டக்கூத்தர் அந்தப்புரத்திற்கு வந்து ராணியின் அறைக்கு முன்னால் நின்றுகொண்டு “நளினமான மலா¢ல் இருக்கும் தேன் போன்ற பெண்ணே நீ கதவைத் திறப்பதற்கு நான் உன்னை வேண்டிக் கேட்டுக் கொள்ளும் அவசியமில்லை ஏனென்றால் வானளாவிய புகழ் கொண்ட ஆண் சிங்கத்தைப் போன்ற வலிமையுடைய வாள் வீரனாகிய குலோத்துங்கன் உன் அறை வாசலுக்கு வந்தால் தாமரை போன்ற உன் கைகள் தானே கதவைத் திறந்துவிடும்!” எனும் பொருளுடைய பின்வரும் பாடலைக் கூறினார்.

நானே இனியுன்னை வேண்டுவதில்லை நளினமலர்த்

தேனே கபாடந் திறந்திடு திறவா விடிலோ

வானேறனைய வாள் விரவிகுலாதிபன் வாசல் வந்தால்

தானே திறக்கு நின் கையிதழாகிய தாமரையே!

இந்தப் பாடலைக் கேட்ட அரசியின் கோபம் அதிகமாகவே அவள் கதவின் இன்னுமொரு தாழ்ப்பாளையும் தாளிட்டுக் கொண்டாள். அப்படித்தான் ‘ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்’ சொற்றொடர் உருவானது.

ஒட்டக்கூத்தா¢ன்மீது மனைவியின் கோபத்திற்குக் காரணம் புகழேந்திப் புலவர் சிறையிலிருப்பதுதான் என்பதைப் பு¡¢ந்து கொண்ட அரசன் உடனே புகழேந்தியை விடுதலை செய்து அவரை அந்தப்புரத்திற்கு அனுப்பித் தன் மனைவியை சமாதானம் செய்யும்படிக் கேட்டுக் கொண்டான். புகழேந்தி அரசியின் வாசலுக்கு வந்து “நூலிழை ஒன்றை இரண்டாக வகிர்ந்தது போன்ற மெல்லிய இடையும் பொற்குழைகள் போன்ற விழிகளும் உடைய பெண்ணே! நீ கொண்ட கோபத்தைத் தணித்துக் கொள். மழை போல இரு கைகளாலும் எதிரிகளின் மேல் பாணங்களைப் பொழியும் ஆற்றல் கொண்ட குலோத்துங்கன் உனது வாசலுக்கு வரும்பொழுது நற்குடியில் பிறந்த பெண்ணான நீ மன்னனின் ஒன்றிரண்டு பிழைகளைப் பொறுத்தருளவேண்டும்!” எனும் பொருள்பட

இழையொன்றிரண்டு வகிர் செய்த நுண்ணிடை யேந்தியபொற்

குழையொன்றிரண்டு விழியணங்கே கொண்ட கோபந் தணி

மழையொன்றிரண்டு கைப் பாணாபரண நின் வாசல் வந்தால்

பிழையொன்றிரண்டு பொறாரோ குடியிற் பிறந்தவரே!

எனும் பாடலைக் கூறியதும் அரசி இரண்டு தாழ்ப்பாள்களையும் திறந்தாள்.

http://www.nilacharal.com/tamil/specials/tamil_ottakuttar_190.html

Link to comment
Share on other sites

ஒரு முறை ஒரு பெண் கவி காளமேகப்புலவரிடம் இதுவரை எங்கும் கேட்டிராத ஒரு பாடலைப் பாடுமாறு கேட்டுள்ளார். அதற்கு அவரும் அப்பெண் விழி விரித்து ஆச்சர்யப்படும் அளவுக்குப் பாடல் ஒன்றைப் பாடியிருக்கின்றார்.

அப்படியென்ன பாடலைப் பாடிவிட்டார் என்ற சந்தேகம் பயணிகளுக்கு வரலாம். அப்பாடலைப் பற்றியே இந்த பதிவில் பேசப் போகின்றோம்.

பூநக்கி ஆறுகால்; புள்இனத்துக்கு ஒன்பதுகால்;

ஆனைக்கு கால் பதினேழ் ஆனதே; மானே! கேள்!

முண்டகத்தின் மீது முழுநீலம் பூத்ததுண்டு;

கண்டதுண்டு; கேட்டதில்லை காண்!

விளக்கம்:

பூநக்கி என்றால் என்ன என்ற கேள்வி அனைவருக்கும் வருவதில் சந்தேகமில்லை. நாம் அனைவருக்கும் தெரிந்தது பூனை. புலவர் பூனையைக் குறிப்பிடுகிறார் என்றால் அதற்கு இரண்டு கால் தானே என்று யூகிக்கத் தோன்றும். இங்கு தான் புலவர் தன் சொல் நயத்தை மேன்மையாகக் கையாண்டுள்ளார். இங்கு பூநக்கி என்பது பூவை நக்கித் தேனை உறிஞ்சும் தேனீ . அதாவது தேனீக்களுக்கு ஆறுகால் என்பதை அவ்வாறு கூறியிருக்கிறார்.

புள்இனம் என்றால் பறவையினங்கள். அது சரி பறவைகளுக்கு எப்படி ஒன்பது கால். இங்கும் புலவர் தன் சொல் விளையாட்டை பயன்படுத்தியுள்ளார். அதாவது 9 * 1/4 = 2 1/4. ஒன்பதைக் காலால் பெருக்கினால் இரண்டே கால் வரும். அதாவது பறவை இனங்களுக்கு இரண்டே கால்கள் என்று அழுத்தமாகக் கூறியுள்ளார்.

இங்கு யானையை ஆனை என்று கூறியுள்ளார். மேலே கூறியது போல் 17 * 1/4 = 4 1/4. பதினேழை காலால் பெருக்கினால் நாலேகால். அதாவது ஆனைக்கு நான்கு கால்கள் என்று அழுத்தமாகக் கூறியுள்ளார்.

பின்பு அப்பெண்ணைப் பார்த்து, பெண்ணே கேள்(மானே! கேள்!). முண்டகம் என்பது தாமரை மலர். அதாவது தாமரை மலரின் செம்மை நிறத்தை உடையவர் சிவபெருமான். அதே போல் குவளை மலரின் நீல நிறத்தை உடையவர் அன்னை உமையாள். தாமரை மலரின் செம்மை நிறத்தை உடைய சிவபெருமான் தன்னில் சரிபாதியை குவளை மலரின் நீல நிறத்தை உடைய அன்னை உமையாளுக்குக் கொடுத்தது தாமரைப்பூவில் குவளை மலரின் நீல நிறம் படிந்துள்ளது (பூத்ததுண்டு) என்றும். இக்காட்சியைக் காண முடியும் என்றும். அதற்கான சான்றுகள் ஏட்டிலோ அல்லது நாட்டிலோ கிடையாது என்றும் கூறியுள்ளார். அதாவது இக்காட்சியை கண்ணால் மட்டுமே காண முடியும். இதற்கான சான்றை எங்கும் கேட்க முடியாது என்று பாடலை முடித்துள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புள்இனம் என்றால் பறவையினங்கள். அது சரி பறவைகளுக்கு எப்படி ஒன்பது கால். இங்கும் புலவர் தன் சொல் விளையாட்டை பயன்படுத்தியுள்ளார். அதாவது 9 * 1/4 = 2 1/4. ஒன்பதைக் காலால் பெருக்கினால் இரண்டே கால் வரும். அதாவது பறவை இனங்களுக்கு இரண்டே கால்கள் என்று அழுத்தமாகக் கூறியுள்ளார்.

இங்கு யானையை ஆனை என்று கூறியுள்ளார். மேலே கூறியது போல் 17 * 1/4 = 4 1/4. பதினேழை காலால் பெருக்கினால் நாலேகால். அதாவது ஆனைக்கு நான்கு கால்கள் என்று அழுத்தமாகக் கூறியுள்ளார்.

நுணா, ஆள் பயங்கர ஆசாமியாய், இருப்பார் போல உள்ளதே! :D

Link to comment
Share on other sites

நுணா, ஆள் பயங்கர ஆசாமியாய், இருப்பார் போல உள்ளதே! :D

கணக்கு விடுகிற ஆசாமியாக உள்ளார். :D :D

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

"தேன்" என்ற சொற்பதத்தை எப்படியெல்லாம் கவிப்பேரரசு கண்ணதாசன் கையாண்டிருக்கிறார் என்று பாருங்கள். இங்கு இணைக்கப்பட்டிருக்கும் இந்தப்பாடல் போல் சங்கத்துப் பாடலில் ஒரு பாடல் இருக்கிறது என்று அறிய முடிகிறது அங்கிருந்தே கண்ணதாசன் அவர்கள் இந்தப்பாடலுக்கான "தேன்" என்று மூலச்சொல்லைப் பெற்றிருக்கிறார். தேடிப்பார்த்தேன் இதுவரை அந்த மூலப்பாடல் கிடைக்கவில்லை உங்கள் எவருக்காவது தெரிந்தால் அப்பாடலை இங்கு இணைத்துவிடுங்கள்.

[media=]http://www.youtube.com/watch?v=keohC5vrYOE

பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன் - அன்று

உனைத் தேன் என நான் நினைத்தேன் - அந்த

மலைத் தேன் இதுவென மலைத்தேன்

பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன் - அன்று

உனைத் தேன் என நான் நினைத்தேன் - அந்த

மலைத் தேன் இவரென மலைத்தேன்

கொடித் தேன் இனி எங்கள் குடித் தேன் என

ஒரு படித் தேன் பார்வையில் குடித்தேன்

கொடித் தேன் இனி எங்கள் குடித் தேன் என

ஒரு படித் தேன் பார்வையில் குடித்தேன்

துளித் தேன் சிந்தாமல் களித்தேன் ஒரு

துளித் தேன் சிந்தாமல் களித்தேன் கைகளில்

அணைத்தேன் அழகினை ரசித்தேன்

பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்- அன்று

உனைத்தேன் என நான் நினைத்தேன் - அந்த

மலைத் தேன் இவரென மலைத்தேன்

மலர்த் தேன் போல் நானும் மலர்ந்தேன் உனக்கென

வளர்ந்தேன் பருவத்தில் மணந்தேன்

எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன்

எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன் இனி தேன்

இல்லாதபடி கதை முடித்தேன்

பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்

உனைத் தேன் என நான் நினைத்தேன்

அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்

நிலவுக்கு நிலவு சுகம் பெற நினைத்தேன்

உலகத்தை நான் இன்று மறந்தேன்

உலகத்தை மறந்தேன் உறக்கத்தை மறந்தேன்

உன்னுடன் நான் ஒன்று கலந்தேன்

பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்

உனைத் தேன் என நான் நினைத்தேன்

அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்

Link to comment
Share on other sites

  • 4 months later...

என்னங்க இவ்வளவுதானா நீங்க தமிழுக்கு கொடுத்த மரியாதை :( :( ???????? சகாறாக்கா உங்க பதிவ ரெம்பவே லைக் பண்றேங்க :) :) . இப்ப பாருங்க :lol: :lol: :D !!!!!!!!!!!

அரச சபையில நடந்த கவிதை மோதல் இவங்க லேசுபட்டவங்க இல்ல தமிழை ரசமா சாப்பிட்டு ஏப்பம் விட்டவங்க :) .

நளவெண்பாவில் மாலைக்காலத்தை ஒரு அழகிய மங்கையாய் வர்ணிக்கும் விதமாய் அமைந்த பாடலொன்று வருகிறது.

[size=5]மல்லிகையே வெண்சங்கா வண்டூத வான்கருப்பு

வில்லி கணையெறிந்து மெய்கரப்ப முல்லைமலர்

மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே

புன்மாலை அந்திப் பொழுது[/size]

மல்லிகை மலரை வெண்சங்காகப் பாவித்து அதில் தேனருந்த வரும் வண்டு ஊத, மன்மதனின் கரும்பு வில்லினால் எய்த மலர்க்கணைகள் பட்டு மாந்தர் மேனி பரவசமடைய, முல்லை மலர்களாலான மெல்லிய மாலையதனைத் தோளில் அணிந்துகொண்டு அம்மாலை அசையும் விதமாக மெல்ல நடந்து வந்தாளாம் அந்திப் பொழுதெனும் இளநங்கை.

"சங்கை ஊதுபவர்கள் அதன் சூத்தைத்தான் (பிற்பகுதியை) வாயில் வைத்து ஊதுவார்களே தவிர, சங்கின் வாய்ப் பகுதியில் வாய் வைத்து ஊதுவதில்ல. ஆனால் வண்டு மலரின் வாய்ப்பகுதியின் வழியாகத்தானே தேனருந்துகிறது. ஆகவே இவ்வுவமானம் தவறு. பாடலில் பொருட்குற்றமுள்ளது, அதனால் இதை ஏற்பதற்கில்லை." என்று ஒட்டக்கூத்தர் மறுப்புத் தெரிவித்தார்.

"கட்குடியனுக்கு வாயென்றும் சூத்தென்றும் தெரியுமா? நீர்தான் சொல்லும்" என்று புகழேந்திப் புலவர் பதிலுக்குக் கேட்க ஒட்டக்கூத்தர் பதிலேதும் சொல்ல முடியாமல் வாயடைத்துப் போய்விட்டார்.

இன்னுமொரு பாடலில் சந்திரனும் விண்மீன்களும் நிறைந்த வானத்தைக் குறித்துப் பாடுகையில் புகழேந்தி கூறுகிறார்:

[size=5]செப்பிளம் கொங்கைமீர் திங்கட் சுடர்பட்டுக்

கொப்புளங்கொண்ட குளிர்வானை எப்பொழுதும்

மீன்பொதித்து நின்ற விசும்பென்பதென்கொலோ

தேன்பொதித்த வாயாற்றெரிந்து[/size]

"செம்பினைப் போன்ற இளம் கொங்கைகளுடைய பெண்களே, சந்திரனின் கதிர்கள் பட்டதால் உண்டான கொப்புளங்களான நட்சத்திரங்கள் நிறைந்த குளிர்ந்த வானத்தை விண்மீன்கள் பொதித்த வானம் என்று தங்கள் தேன்போன்ற சொற்களைப் பேசும் வாயால் தெரிந்தே சொல்வதேனோ?"

எனக் கேட்கிறார்.

"வானத்தில் கொப்புளங்கள் உண்டானால் அதிலிருந்து சீழாவது சிலைநீராவது வடிய வேண்டுமே" அதனால் இப்பாடல் பொருட்குற்றமுள்ளது. ஏற்க முடியாது என ஒட்டக்கூத்தர் மறுதலித்தார்.

"சீழ் வடியவில்லை, சிலைநீர் வடிகிறது, அதுதான் விண்ணிலிருந்து பெய்யும் பனி" எனப் புகழேந்தி மறுமொழி கூறவே ஒட்டக்கூத்தர் கப்சிப்பென்று அடங்கிவிட்டார். நளவெண்பா அரங்கேற்றமும் இனிதே நிறைவேறியது.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

"தேன்" என்ற சொற்பதத்தை எப்படியெல்லாம் கவிப்பேரரசு கண்ணதாசன் கையாண்டிருக்கிறார் என்று பாருங்கள். இங்கு இணைக்கப்பட்டிருக்கும் இந்தப்பாடல் போல் சங்கத்துப் பாடலில் ஒரு பாடல் இருக்கிறது என்று அறிய முடிகிறது அங்கிருந்தே கண்ணதாசன் அவர்கள் இந்தப்பாடலுக்கான "தேன்" என்று மூலச்சொல்லைப் பெற்றிருக்கிறார். தேடிப்பார்த்தேன் இதுவரை அந்த மூலப்பாடல் கிடைக்கவில்லை உங்கள் எவருக்காவது தெரிந்தால் அப்பாடலை இங்கு இணைத்துவிடுங்கள்.

பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன் - அன்று

உனைத் தேன் என நான் நினைத்தேன் - அந்த

மலைத் தேன் இதுவென மலைத்தேன்

பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன் - அன்று

உனைத் தேன் என நான் நினைத்தேன் - அந்த

மலைத் தேன் இவரென மலைத்தேன்

கொடித் தேன் இனி எங்கள் குடித் தேன் என

ஒரு படித் தேன் பார்வையில் குடித்தேன்

கொடித் தேன் இனி எங்கள் குடித் தேன் என

ஒரு படித் தேன் பார்வையில் குடித்தேன்

துளித் தேன் சிந்தாமல் களித்தேன் ஒரு

துளித் தேன் சிந்தாமல் களித்தேன் கைகளில்

அணைத்தேன் அழகினை ரசித்தேன்

பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்- அன்று

உனைத்தேன் என நான் நினைத்தேன் - அந்த

மலைத் தேன் இவரென மலைத்தேன்

மலர்த் தேன் போல் நானும் மலர்ந்தேன் உனக்கென

வளர்ந்தேன் பருவத்தில் மணந்தேன்

எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன்

எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன் இனி தேன்

இல்லாதபடி கதை முடித்தேன்

பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்

உனைத் தேன் என நான் நினைத்தேன்

அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்

நிலவுக்கு நிலவு சுகம் பெற நினைத்தேன்

உலகத்தை நான் இன்று மறந்தேன்

உலகத்தை மறந்தேன் உறக்கத்தை மறந்தேன்

உன்னுடன் நான் ஒன்று கலந்தேன்

பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்

உனைத் தேன் என நான் நினைத்தேன்

அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்

 

 

அப்பாடா.... ஒரு வழியாக கவிப்பேரரசு கண்ணதாசனைக்கவர்ந்த பாடலைக் கண்டு பிடித்தாயிற்று. அபிராமி அந்தாதியில்  உள்ள பாடல்களே கவிஞர் கண்ணதாசனை "பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்" என்ற பாடலை எழுதத்தூண்டியிருக்கிறது.

 

 

அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு

செறிந்தேன், நினது திருவடிக்கே,-திருவே.- வெருவிப்

பிரிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்,

மரிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.

வந்தே சரணம் புகும் அடியாருக்கு, வானுலகம்

தந்தே பரிவொடு தான் போய் இருக்கும்--சதுர்முகமும்,

பைந் தேன் அலங்கல் பரு மணி ஆகமும், பாகமும், பொற்

செந் தேன் மலரும், அலர் கதிர் ஞாயிறும், திங்களுமே.

குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம், நின் குறிப்பு அறிந்து

மரித்தேன் மறலி வருகின்ற நேர்வழி, வண்டு கிண்டி

வெறித்தேன் அவிழ் கொன்றை வேணிப் பிரான் ஒரு கூற்றை, மெய்யில்

பறித்தே, குடிபுகுதும் பஞ்ச பாண பயிரவியே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.