Jump to content

மூதூர் படுகொலை குறித்து கொழும்பு பதில்கூற வேண்டும்! ஐ.நா விசாரணையை வலியுறுத்தி மனு கையளிப்பு!!


Recommended Posts

ஜெனிவாவில் எதிர்வரும் நவம்பர் 1 ம் திகதி கூடவுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு, சிறிலங்காவின் மனிதவுரிமை நிலைமைகள் குறித்து ஆராயவுள்ளது. ஓர் இலட்சம் வரையான மக்கள் கொல்லப்பட்டு, யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில், மூதூரில் எமது அமைப்பைச் சேர்ந்த 17 மனித நேயப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை குறித்த விசாரணையை வலியுறுத்துவதற்கான கடைசிச் சந்தர்ப்பம் இதுவாகும்.

சிறிலங்கா அரசு இவ் யுத்தமீறல் குற்றச்சாட்டிலிருந்து தப்பி விடுவதைத் தடுக்கும்படி ஐ.நா உறுப்புரிமை நாடுகளை நாம் வேண்டுகிறோம். நியாயமான ஐ.நா விசாரணையை வலியுறுத்தி நாம் முன்னெடுத்துள்ள இந்த முறையீட்டு மனுவில் கையெழுத்திடுமாறு அனைவரையும் வேண்டுகிறோம்.

இவ்வாறு கடந்த 2006 ம் ஆண்டு மூதூரில் சிறிலங்கா அரச படைகளால் படுகொலை செய்யப்பட்ட 17 மனிதநேயப் பணியாளர்கள் படுகொலை குறித்து, பிரான்ஸ் நாட்டை தளமாகக் கொண்ட Action against Hunger (ACF) அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த முறையீட்டை எதிர்வரும் அக்டோபர் 22 ம் திகதி ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் நாம் கையளிக்க உள்ளோம். எனவே அதற்கு முன் இவ்மனுவில் கையெழுத்திடுமாறு உலக மக்களை வேண்டுகிறோம் என Action against Hunger (ACF) அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம் மனுவில் கையெழுத்திட இங்கே அழுத்தவும்

http://www.dailymotion.com/video/k7GI7Q0n8mUlUy3oCnj (காணொளி)

இது தொடர்பாக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ACF வெளியிட்டுள்ள மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2006 ம் ஆண்டு ஓகஸ்ட் 4ம் திகதி, மூதூர் பகுதியில் வெடித்த யுத்தத்தில் பொதுமக்கள் பலரோடு, மனிதாபிமான உதவி வழங்கும் அமைப்பின் பணியாளர்களான 17 பேரும் படுகொலை செய்யப்பட்டனர்.

இப்பணியாளர்கள் 17 பேரும் அவர்களது அலுவலகத்திலேயே, முழங்காலில் நிற்க வைத்து, தலையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். இது மனிதாபிமான பணியாளர்கள்மீது மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான குற்றம் என்பதற்கும் அப்பால், ஒரு மோசமான போர்க்குற்றமாகவே கருதப்படக்கூடியது.

2006 ம் ஆண்டுக்குப் பின்னர், இப்படுகொலை தொடர்பாக சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்ட 3 விசாரணைகளும் எவ்வித பயனையும் ஏற்படுத்தவில்லை. நீதி விசாரணையில் போடப்பட்ட அரசியல் தடைகள், வெளிப்பாட்டுத்தன்மை இல்லாத நிலை போன்ற பல்வேறு அழுத்தங்கள் இந்த விசாரணைகள் பயனின்றிப் போனதற்கான காரணங்கள்.

எனவே, இப் போர்க்குற்றம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலையீட்டுடன் ஒரு சுயாதீனமான சர்வதேச விசாரணை அவசியம் என நாம் கருதுகிறோம். பெருமளவில் மக்களை அணிதிரட்டுவதன் மூலம் சிறிலங்கா அரசாங்கம் இவ் யுத்த மீறலுக்குப் பதில்கூறவேண்டி நிலையை ஏற்படுத்த முடியும். இதற்கான சந்தர்ப்பம் இப்போது உருவாகியுள்ளது.

ஜெனிவாவில் எதிர்வரும் நவம்பர் 1 ம் திகதி கூடவுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு சிறிலங்காவின் மனிதவுரிமை நிலைமைகள் குறித்து ஆராயவுள்ளது. ஒரு இலட்சம் வரையான மக்கள் கொல்லப்பட்டு, யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில், மூதூரில் எமது 17 பணியாளர்கள்மீதும் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றம் குறித்த விசாரணையை வலியுறுத்துவதற்கான கடைசிச் சந்தர்ப்பம் இதுவாகும்.

சிறிலங்கா அரசு இவ் யுத்தமீறல் குற்றச்சாட்டிலிருந்து தப்பி விடுவதைத் தடுக்கும்படி ஐ.நா உறுப்புரிமை நாடுகளை நாம் வேண்டுகிறோம். நியாயமான ஐ.நா விசாரணையை வலியுறுத்தி நாம் முன்னெடுத்துள்ள இந்த முறையீட்டில் கையெழுத்திடுமாறு அனைவரையும் வேண்டுகிறோம். இந்த முறையீட்டை எதிர்வரும் அக்டோபர் 22 ம் திகதி ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் நாம் கையளிக்க உள்ளோம்.

மூதூர் மனிதநேயப் பணியாளர்கள் படுகொலை குறித்து, சுயாதீனமான ஒரு சர்வதேச விசாரணையை உலக மக்களாகிய நாம் வலியுறுத்துகிறோம். சக மக்களுக்காக உழைத்த எமது 17 பணியாளர்களைப் படுகொலை செய்தவர்கள் ஒரு நீதியான விசாரணையிலிருந்து தப்பிவிடுவதை நாம் ஏற்க முடியாது.

மூதூர் படுகொலை இடம்பெற்று 6 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இது தொடர்பான தடயங்களை மறைப்பதையும் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போடுவதையுமே சிறிலங்கா அரசாங்கம் செய்து வந்துள்ளது. சிறிலங்கா அரசின் இந்த போக்கிற்கு முடிவு கட்டவேண்டியது ஐ.நா வின் பொறுப்பு என நாம் கருதுகிறோம்.

மூதூரில் படுகொலையான எமது தோழர்கள் நினைவாக, இப் படுகொலைகள் மீது உலகின் கவனத்தைத் திருப்ப அனைவரும் முன்வரவேண்டும். படுகொலையாளர்கள் நீதியான ஒரு விசாரணையிலிருந்து தப்புவதை ஏற்க முடியாது என்பதே சர்வதேச சமூகம் இதுதொடர்பில் முன்வைக்கும் செய்தியாக இருக்கவேண்டும்.

இவ்வாறு பிரான்ஸ் நாட்டை தளமாகக் கொண்ட Action against Hunger (ACF) வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • Replies 69
  • Created
  • Last Reply

[size=5]நன்றி, நான் கையொப்பம் இட்டுள்ளேன் :[/size]

[size=5]https://secure.avaaz.org/en/petition/Sri_Lanka_Mettez_les_criminels_de_guerre_derriere_les_barreaux/[/size]

Link to comment
Share on other sites

[size=3]

[size=5]Action Contre La faim frappe fort. Pour sa nouvelle campagne virale, l’ONG a choisi de rappeler aux internautes le massacre des 17 de ses employés il y a 6 ans au Sri Lanka. À travers une séquence sanglante, l’organisation réclame une enquête internationale de l’ONU pour faire la lumière sur les conditions de l’assassinat resté impuni.[/size][/size][size=3]

[size=5]La vidéo-pétition”Justice for Muttur” est l’oeuvre de TBWA Paris. C’est l’acteur Samuel Le Bihan qui a prêté sa voix à cette version française. Pour plus d’infos sur le combat de ACF, rendez-vous sur la page Facebook de l’organisation.[/size][/size]

http://www.minutebuzz.com/2012/10/01/justice-for-muttur-video-sanglante-action-contre-la-faim/

Link to comment
Share on other sites

நன்றி. ஆக 2003 பேர்தானா இதுவரை கையொப்பமிட்டவர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கையொப்பமிட்டுள்ளேன்.

Link to comment
Share on other sites

மல்லையூரான் உங்கள் சேவை நாட்டுக்குத் தேவை... வாழ்க வளமுடன்

Link to comment
Share on other sites

மூதூரில் கடந்த 2006 ஆம் ஆண்டு சிறிலங்கா அரச படையினரால் படுகொலை செய்யப்பட்ட தன்னார்வத் தொண்டர்கள் 17 பேரினதும் படுகொலைகள் குறித்து மீண்டும் விசாரணை செய்யுமாறு பிரான்ஸை தளமாகமாகக் கொண்டு இயங்கும் ஏசீஎப் நிறுவனம் சிறிலங்கா அரசை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட “எக்சன் எகெய்ன்ஸ்ட் அங்கர்“ (Action Against Hunger )அமைப்பைச் சேர்ந்த பதினேழு தொண்டர்கள் தொடர்பில் உள்ளுரில் நடத்தப்பட்ட விசாரணையானது சுயாதீனத்தன்மையைக் கொண்டதாகக் காணப்படவில்லை. இந்த விசாரணைகளில் கூட அரசியல் தலையீடுகளும் தடங்கல்களும் காணப்பட்டன.

அதேவேளை, இந்தப் படுகொலைகளைச் செய்தவர்கள் மீது சிறிலங்கா அரசு இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. எனவே, இந்த விடயம் தொடர்பில் பக்கச்சார்பற்ற சுயாதீன விசாரணைகள் சரியான முறையில் மீண்டும் முன்னெடுக்கப்பட வேண்டும். அத்துடன் இவ்விவகாரம் குறித்து மனித உரிமைப் பேரவையிலும் கேள்வி எழுப்பப்படும்.

மேலும், இந்தப் படுகொலைகள் தொடர்பில் மீண்டும் விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டுமென சிறிலங்கா அரசைக் கோரும் வகையில் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் மகஜர் ஒன்றும் தயாரித்து வருகிறோம். இந்த மகஜரின் பிரதி ஒன்றினை நவம்பர் மாத மனித உரிமைப் பேரவை அமர்வில் சமாப்பிக்கவுள்ளோம் என்றும் ஏசீஎப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

http://thaaitamil.com/?p=34431

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி , மல்லை . நானும் ஒப்பமிட்டுள்ளேன்.

Link to comment
Share on other sites

[size=5]மண்ணோடு மண்ணாகிப் போகும் மண்டை ஓடுகளாக தமிழர்களின் மனித உரிமைகள். [/size]

[size=5]நீதி சொல்ல நாதியற்ற மனிதர்களாக உலகம்..![/size]

[size=5]மாற்றுவோம் இந்நிலையை... !!![/size]

Link to comment
Share on other sites

நானும் கைநாட்டு வைத்துவிட்டேன்.. நன்றிகள் மல்லை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் கைநாட்டு வைத்துவிட்டேன்.. நன்றிகள் மல்லை..

[size=6]2068[/size]

நன்றி சிறி

திண்ணையில் தந்ததற்கு

Link to comment
Share on other sites

நன்றி மல்லை அண்ணா, நேற்றே கையொப்பமிட்டு விட்டேன். திண்ணையில் தந்திருந்தமைக்கு நன்றி. ஒரு லட்சம் கையொப்பத்தை நோக்கி நாம் செல்ல வேண்டும். மின்னஞ்சல், முகநூல், twitter இல் அனைவரும் share பண்ணுங்கள்....

Link to comment
Share on other sites

ஏற்கனவே மல்லை அண்ணா இந்த திரியில் தமிழில் இணைத்துள்ளார்..

http://www.yarl.com/forum3/index.php?showtopic=109278&#entry808033

Link to comment
Share on other sites

[size=5]ஆமாம், முடிந்தளவு நாம் பிரச்சாரம் செய்யவேண்டும். [/size]

Link to comment
Share on other sites

ஆர்வம் காட்டும் உறவுகளுக்கு நன்றி.

ஆரம்பத்தில் பிளேக்கும் இலங்கையிடம் கேட்டு பார்த்து அலுத்து போயிருக்கும். விசாரணை.

இந்திய நீதிபதி பகவதி கண்காணிக்க முயன்று கைவிட்ட விசாரரணை. இனி இதில் அரசு தலையிடாமல் சரவ்தேச விசாரணை ஆரம்பமாக காலம் வந்துவிட்டது.

ACF இன்னமும் முன்னல் போய் செய்ய நிறைய இருக்கு.

Link to comment
Share on other sites

நன்றி மல்லை அண்ணா, நேற்றே கையொப்பமிட்டு விட்டேன். திண்ணையில் தந்திருந்தமைக்கு நன்றி. ஒரு லட்சம் கையொப்பத்தை நோக்கி நாம் செல்ல வேண்டும். மின்னஞ்சல், முகநூல், twitter இல் அனைவரும் share பண்ணுங்கள்....

நல்ல விடயம் .கையெழுத்து வைக்க பஞ்சி என்றால் ஒரு சீல் செய்து வைத்திருக்கவும் கேட்கும் போது குத்தி விடலாம் .இவர்கள் இதைதான் காலம் புரா செய்ய போகின்றார்கள் .

Link to comment
Share on other sites

நல்ல விடயம் .கையெழுத்து வைக்க பஞ்சி என்றால் ஒரு சீல் செய்து வைத்திருக்கவும் கேட்கும் போது குத்தி விடலாம் .இவர்கள் இதைதான் காலம் புரா செய்ய போகின்றார்கள் .

அரிசுன்: இன்று இதில் கையொப்பம் இட உங்களுக்கு கையில் வலிக்கிறதாயின், அவசரமில்லை. நாளை போட்டுவிடுங்கள். ACF நேராக ஐ.நா.வுடன் எடுத்து கொள்ள இருக்கிறது. அந்த நேரம் ஐ.நா இலங்கையை கவனத்தில் எடுக்கிறதா அல்லது ACF கவனத்தில் எடுக்கிறதா என்று பார்த்துவிடுங்களேன்.

Link to comment
Share on other sites

நல்ல விடயம் .கையெழுத்து வைக்க பஞ்சி என்றால் ஒரு சீல் செய்து வைத்திருக்கவும் கேட்கும் போது குத்தி விடலாம் .இவர்கள் இதைதான் காலம் புரா செய்ய போகின்றார்கள் .

குறைகளை மட்டுமே சொல்லி வாழ்வில் எதை சாதிக்க போகின்றீர்கள்? வேறென்ன செய்யலாம் என்று சொன்னீர்கள் என்றால் சாதாரண மனிதர்களை விட உயர்ந்து விடுவீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இட்டு விட்டன்

Link to comment
Share on other sites

நல்ல விடயம் .கையெழுத்து வைக்க பஞ்சி என்றால் ஒரு சீல் செய்து வைத்திருக்கவும் கேட்கும் போது குத்தி விடலாம் .இவர்கள் இதைதான் காலம் புரா செய்ய போகின்றார்கள் .

[size=4]யார் கையெழுத்து போடு என கேட்பது? பிரான்ஸ் நாட்டு மனித நேய அமைப்பு (தமிழர்கள் அல்ல)

ஏன் கேட்கிறார்கள்? தமது உறுப்பினர்களின் படுகொலைக்கு நியாயம் கேட்டு[/size]

[size=4]ஏன் கையெழுத்து இடல் வேண்டும்? [size=5]தமிழனாக இல்லாவிட்டாலும் மனிதனாக ....[/size][/size]

Link to comment
Share on other sites

இப்பொழுது தான் 2341 கையொப்பம் சேர்ந்துள்ளது. இந்த இணைப்பில் சென்று கையொப்ப எண்ணிக்கையை பார்க்கலாம். (இடைக்கிட தான் update ஆகிறது. )

http://www.avaaz.org/en/petition/?hp

ஏனைய petition ஐ விட எம்முடையது தான் பின்தங்கிய நிலையில் உள்ளது. :(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.