Jump to content

பாஜக கூட்டணியில் இருந்து விலகுகிறது மதிமுக!


Recommended Posts

பாஜக கூட்டணியில் இருந்து விலகுகிறது மதிமுக!

 

14161.jpgதமிழகத்தில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணியில் ம.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணிக்கு அச்சாரம் போட்டது தமிழருவிமணியன். முதல் முதலில் கூட்டணியில் சேர்ந்தது ம.தி.மு.க., மற்ற கட்சிகளுக்கிடையே இழுபறி ஏற்பட்ட நிலையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூட்டணி பற்றி பகிரங்கமாக அறிவித்தார்.

தேர்தலில் இந்த கூட்டணி எதிர்பார்த்தபடி சோபிக்கவில்லை. பா.ஜனதாவும், பா.ம.க.வும் தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. மற்ற கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

எனவே, தேர்தலுக்கு பிறகு இந்த கூட்டணி நீடிக்குமா? என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. வருங்காலத்தில் இந்த கூட்டணி நீடிக்க வேண்டும் என்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தனது விருப்பத்தை வெளியிட்டார்.

கூட்டணி பற்றி முதலில் அறிவித்தது போல் மோடி அரசு பதவி ஏற்றது முதல் அரசின் கொள்கைகளை ம.தி.மு.க. கடுமையாக எதிர்த்து வருகிறது.

மோடி பதவி ஏற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே அழைக்கப் பட்டதை வைகோ கடுமையாக எதிர்த்தார். இதனால் பதவி ஏற்பு விழாவையே புறக்கணித்தார்.

அதை தொடர்ந்து ராஜீவ் கொலையாளிகள் தூக்கு தண்டனை விவகாரம், இந்தி திணிப்பு, இலங்கை விவகாரம், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படும் விவகாரம், சமஸ்கிருத மொழி வார விழா, கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு ரஷிய அதிபரை அழைத்தது, ரெயில்வே கட்டண உயர்வு உள்ளிட்ட முக்கியமான கொள்கை முடிவுகளை வைகோ கடுமையாக எதிர்த்து குரல் கொடுத்தார். இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியும், அறிக்கைகள் வெளியிட்டும் வருகிறார்.

மத்திய அரசு எடுத்து வரும் பெரும்பாலான கொள்கை முடிவுகள் அதிருப்தி அளிப்பதால் முரண்பட்ட கருத்துக்களோடு கூட்டணியில் நீடிக்க வேண்டாம் என்ற நிலைப் பாட்டை ம.தி.மு.க. எடுத்துள்ளதாக கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

கூட்டணியில் இருந்து விலகும் முடிவுக்கு வைகோ வந்து விட்டதாகவும் அது பற்றி மூத்த நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

அடுத்த மாதம் (செப்டம்பர்) 15–ந் தேதி ம.தி.மு.க. மாநாடு திருவள்ளூர் மாவட்டம் பூந்த மல்லியில் நடக்கிறது. அந்த மாநாட்டில் கூட்டணியில் இருந்து விலகும் முடிவை வைகோ அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://tamilnewsbbc.com/2014/08/11/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் இந்தியாவின் மிகவும் பரவலாகப் பேசப்படும், அரசியலில் தனது சொந்தக்கருத்தகளை ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஆழுமைபெற்றவராகவும் தமிழகத்தின் பத்திரிகையாளர் சோ இராமசாமி அவர்கள் எக்காரணத்தைக்கொண்டும் தனது அரசியல் செல்வாக்கினை தனிப்பட்ட தனது நலனுக்காகப் பிரயோகிக்கவில்லை என்பதாக ஒரு கட்டுரை வெளிவந்தது. 

 

அக்கட்டுரையில் கூறப்பட்ட விடையம் ஓரளவு உண்மையும்கூட.

 

எந்த அளவுக்குச் சோ இராமசாமி ஊடகங்களாலும் அரசியல் கட்சிகளாலும் விமர்சனம் செய்யப்படுகிறாரோ, அதேயளவுக்கு அதே ஊடகங்களாலும் அரசியற்கட்சிகளாலும் அவரது கருத்துக்கள் கவனிக்கப்படுபவை. கர்னாடக சங்கீத உலகின் விமர்சகர் மறைந்த திரு.சுப்பிடு போன்றவர்.

 

அதையும் தாண்டி திரு வைகோ அண்ணரது கொள்கை, கருத்துகள், அவர் தலைமையிலான கட்சியின் செயற்பாடுகள் தவிர்ந்து அவரது தனிப்பட்ட வாழ்வின் ஒழுக்கம் மற்றும் நேர்மை என்பன நூறுவீதம் மறுதலிக்க முடியாதவை விமர்சனம் செய்ய முடியாதவையாகும்.

 

இங்கு சிலர் அவரை சாணாக்கியமில்லாதவராக விமர்சனம் செய்யலாம், ஆனால் அரசியல் சாணாக்கியம் தன்னையும் தான் சார்ந்தவர்களையும் நல்நிலைக்குக் கொண்டுவருமாக இருந்தால் அச்சாணாக்கியத்தை வைகோ தவிர்ப்பதே நல்லது என்பது எனது கருத்து.

 

தமிழக மக்களாலும் பொதுசன ஊடகங்களாலும் சரியானமுறையில் இனம்கண்டுகொள்ளாத இனம்கண்டு பொதுவெளியில் அறிமுகப்படுத்தப்படாத நேர்மைமிகு பொதுநலவாதி வைகோ அவர்கள், பாஜாகாவில் இனிமேலும் தொடர்வது சகிக்கமுடியாதது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைகோ.... பா. ஜ. க. விலிருந்து விலகுவது, நல்ல முடிவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வை கோ அவர்கள் அடுத்த தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது ?
தி முக அல்லது அதி முக வா அல்லது காங்கிரசா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவசரப்படுகிறார்

 

ஒரு இடத்துக்கு போகமுன்னர் ஆயிரம் தடவை   யோசிக்கணும்........... :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைகோ அண்ணா .... பா. ஜ. க. விலிருந்து விலகுவது, நல்ல முடிவு .... இதனூடாக வைகோ அண்ணா தனது தனித்துவத்தை பேணமுடியும் 

Link to comment
Share on other sites

தமிழகத்தில் பாஜக கூட்டணி வெல்லும் என்று தமிழருவி மணியன் கணக்குப் போட்டாரா?? ரொம்ப கொடுமையா இருக்கே.. :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பா.ஜ.க. வின் வெளியுறவுக் கொள்கை, அதிலும்..... ஸ்ரீலங்காவுடனான உறவு, காங்கிரசிற்கு சற்றும் சளைத்ததல்ல. இதனை கடந்த பா.ஜ.க. வின் ஆறு மாத ஆட்சியில் பலமுறை கண்டுவிட்டோம்.

 

அப்படியான கட்சியில்... வை.கோவும் இருந்து கொண்டு..... பா.ஜ.க.வை எதிர்த்து குரல் கொடுப்பது சாத்தியமில்லாத விடயம்.
அதனால்... அவர் பா.ஜ.க.வை விட்டு வெளியேறுவதே... நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வை.கோ ஐயா.. பா.ஜ.கவில் சேர்ந்து என்ன பயன் அடைந்தார்..???! இருந்த வாய்ப்பையும் இழந்தது தான் மிச்சம்.

 

பா ஜ க வோடு சேர்ந்த நேரத்திற்கு.. தமிழ் தேசிய உணர்வுள்ளவர்கள்.. அனைவரும் சேர்ந்து ஒரு முன்மாதிரியான கூட்டமைப்பை உருவாக்கிக் காட்டி இருந்தால்.. அது.. தமிழ் மக்களுக்கும் உற்சாகமான அரசியலை இனங்காட்டி இருக்கும்.. திராவிட.. மற்றும் ஹிந்தி - ஹிந்து.. தேசிய மையவாதக் கட்சிகளிடம்.. ஒரு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கும்.

 

வை.கோ ஐயாவும் வாயளவில் தான்.. ஈழத்தமிழர் நலன் என்று பேசுகிறார். அதிகாரம் பதவி.. என்று வரும் போது.. நிலைதடுமாறி விடுகிறார். இந்தக் குழப்ப நிலையை.. எதிர்காலத்திலாவது களைவது.. தமிழ் தேசிய உணர்வுள்ளவர்களுக்கு மிக அவசியமான ஒன்று.

 

தமிழகத்தில்.. திராவிடத்தை வீழ்த்தக் கூடிய ஒரு உணர்வாக.. தமிழ் தேசியம் உணர்வு மக்களிடம்.. வளர்ந்துள்ள நிலையிலும்.. திராவிட பாரம்பரியம் பேசும்... கட்சியாளர்கள்.. அதனை பலப்படுத்த விரும்பவில்லை. அதில் வை.கோவும் அடங்கி நிற்பது... உண்மையில் வேதனை அளிக்கிறது..!  எனியாவது சிந்தியுங்கள்.. வை.கோ அவர்களே. குறுகிய அரசியல் இலக்குகளை மட்டும் தேடாமல்.. தமிழினம் சார்ந்த நீண்ட இலக்குகளை வகுத்தும்.. ம.தி.மு.க செயற்பட வேண்டும். அதற்கு முன்மாதிரியாக உங்களை கொண்டு வருவீர்கள் என்று நம்புகிறோம். :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.