Jump to content

வேட்டி' விவகாரம்: தமிழக அரசு தலையிட தலைவர்கள் வலியுறுத்தல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வேட்டி' விவகாரம்: தமிழக அரசு தலையிட தலைவர்கள் வலியுறுத்தல்

 

வேட்டி அணிந்து சென்ற நீதிபதி, வழக்கறிஞர்களுக்கு கிரிக்கெட் கிளப்பில் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக அரசியல் தலைவர்கள், பொது நிகழ்ச்சிகளில் ஆடை கட்டுப்பாடு இருந்தால், அவற்றை நீக்க அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

சென்னை சேப்பாக்கத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் கிளப் உள்ளது. இங்கு சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி (பொறுப்பு) டி.எஸ்.அருணாசலம் எழுதிய நூலின் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள உயர் நீதிமன்ற நீதிபதி டி.ஹரி பரந்தாமன் சிவப்பு விளக்கு பொருத்திய தனது அலுவலக காரில் சென்றுள்ளார்.

வேட்டி அணிந்து சென்றிருந்த அவரை விழா அரங்குக்குள் அனுமதிக்க அங்கிருந்த ஊழியர்கள் மறுத்தனர். "பேன்ட், சட்டை அணிந்து வருபவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். வேட்டி அணிந்து வந்தால் உள்ளே அனுமதிக்கக் கூடாது என்பது கிளப் விதிமுறை" என்று கூறிய ஊழியர்கள் அவரை தடுத்து திருப்பி அனுப்பியுள்ளனர். இதேபோல, உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் ஆர்.காந்தி, ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோரும் வேட்டி அணிந்து வந்த காரணத்தால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

 

கருணாநிதி கண்டனம்

இந்தச் சம்பவத்துக்கு கட்டணம் தெரிவித்துள்ள திமுக தலைவர் கருணாநிதி, "தமிழர்களின் கலாச்சாரத்தின் அடையாளம் வேட்டி. அதை அணிந்து வரக்கூடாது என்று தடை விதிப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

பொதுவாக தமிழ்நாட்டில் பொது இடங்களுக்கு, நிகழ்ச்சிகளுக்கு வருபவர்கள் இப்படித்தான் ஆடை உடுத்தி வர வேண்டுமென்று கட்டுப்பாடு இருந்தால், அவற்றை நீக்குவதற்கு அரசே முன்வந்து அறிவுரை வழங்குவதுதான், இதுபோன்ற நடவடிக்கைகள் இனியும் நடக்காமல் இருக்க உதவியாக இருக்கும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

 

ஞானதேசிகன் வலியுறுத்தல்

தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் வெளியிட்ட அறிக்கையில், "உடை என்பது மனித நாகரிகத்தின் ஒர் அடையாளம். அது எந்த உடையாக இருக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கின்ற உரிமையை, கிளப் நிர்வாகம் வைத்துக் கொள்ளமுடியாது. இந்த நிகழ்ச்சி பலமுறை நடந்திருக்கிறது. இது இனிமேல் தொடர அனுமதிக்கூடாது என்று வற்புறுத்துகின்றேன்" என்று கூறியுள்ளார்.

 

ராமதாஸ் கண்டனம்

வேட்டி கட்டியவர்களை அடிமை போலக் கருதி கிளப்களில் அனுமதி மறுக்கப்படுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது. தமிழர்களின் பாரம்பரிய உடைகளுக்கு மரியாதை அளிக்காத கிளப்களுக்கு தடை விதிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

 

தி ஹிந்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனுடைய சொந்த இடத்தில்....

அவனது தேசிய உடையை அணிந்து உள்ளே வர அனுமதிக்காத அவலம், தமிழ் நாட்டில் தான் நடக்கும். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனுடைய சொந்த இடத்தில்....

அவனது தேசிய உடையை அணிந்து உள்ளே வர அனுமதிக்காத அவலம், தமிழ் நாட்டில் தான் நடக்கும். :(

தமிழ் சிறி கொஞ்சம் பொறுங்கோ போறபோக்கைப் பார்த்தால் தமிழ் நாட்டில் தமிழில் பேச தடை வந்தாலும் வரும்போல கிடக்குது  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோயில்களில் சேட்போட அனுமதியில்லையே!  சிலபேர் தங்கள் உடல்களிலுள்ள தழும்புகளை மறைத்துக்கொள்ள முடியாமல் கோயில்களுக்குப் போவதேயில்லை.  அதோடு பார்க்கும்போது இது எவ்வளவோ பரவாயில்லை போலிருக்கிறது.

Link to comment
Share on other sites

தமிழகத்தில இப்பிடி இருக்கு நிலைமை. அடிமை விசுவாசம் இன்னும் போகவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கிளப்பிற்கு வேட்டியோடு போனதுதான் விவகாரம்.
 
கிளப்பை தமிழகத்தில் கொண்டு வந்தது வேறுபட்ட விடயம்.
 
ஓணானை பிடித்து வேட்டிக்குள் விட்டால் குடையத்தான் செய்யும். எதை எங்கு விடுவது என்று முன்கூட்டியே யோசிக்க வேண்டும். பின்பு குடையது குடையது என்று சொன்னால் எப்படி? 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.