Jump to content

ரயில்வே பட்ஜெட் சிறப்பு அம்சங்கள்: தமிழகத்திற்கு 5 ரயில்கள் உட்பட 58 புதிய ரயில்கள் அறிவிப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புதுடெல்லி: 2014-15 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். இதில் 58 புதிய ரயில்கள் அறிமுகம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. 

ரயில்வே பட்ஜெட்டில் இடம்பெற்ற சிறப்பு அம்சங்கள் வருமாறு:

* 58 புதிய ரயில்கள் அறிமுகம்

* அகமதாபாத்- சென்னைக்கு புதிய ரயில் இயக்கப்படும்.

* தொழில்நுட்பம்- தொழில்நுட்பம் சாரா படிப்புகளுக்காக ரயில்வே பல்கலைக்கழகம்

* அனைத்து ரயில் நிலைய கூரைகளில் சூரிய மின்சக்தி திட்டம் அமைக்கப்படும்.

* ஆளில்லா லெவல் கிராசிங்கை அகற்ற ரூ.1800 கோடி ஒதுக்கீடு

* விழாக்காலங்களில் வேளாங்கண்ணி, மேல்மருவத்தூருக்கு சிறப்பு ரயில் சேவை தொடரும்.

* சாலிமார்- சென்னை, ஜெய்ப்பூர்- மதுரை ஏ.சி. விரைவு ரயில்கள் விரிவுபடுத்தப்படும்.

* சரக்கு பெட்டிகள் புதிய வடிவமைப்பில் உருவாக்கப்படும்.

* சரக்கு ரயில்களில் பால், காய்கறி, பழம் கொண்டு செல்ல அனுமதிக்கப்படும்.

* பயணிகளை குறி்த்த நேரத்தில் எழுப்பும் வசதி செய்யப்படும்.

* வடகிழக்கு மாநிலங்களில் ரயில் திட்டங்களுக்கு 54 சதவிகிதம் நிதி ஒதுக்கீடு.

* ரயில்வே வாரியம் மாற்றி அமைக்கப்படும்.

சென்னைக்கு அதிவேக ரயில்

 

* புதிய துறைமுகங்களுக்கு ரயில் சேவை வழங்கப்படும்.

* ரயிலின் வருகை, புறப்பாடு குறித்து குறுந்தகவல் மூலம் தெரிவிக்க ஏற்பாடு.

* மைசூர்- பெங்களூர்- சென்னைக்கு அதிவேக ரயில் அறிமுகப்படுத்தப்படும்.

* சில ரயில்களின் வேகம் 160 கி.மீட்டர் முதல் 200 கி.மீட்டர் வரை அதிகரிக்கப்படும்.

வைஃபை வசதி அறிமுகம்

* ஏ1 மற்றும் ஏ அந்தஸ்து உள்ள ரயில் நிலையங்களில் வைஃபை வசதி அறிமுகப்படுத்தப்படும்.

குறிப்பிட்ட ரயில்களிலும்  வைஃபை வசதி ஏற்படுத்தப்படும்.

* பார்சல்களை பாதுகாக்க தனியார் உதவியுடன் ரயில் நிலையங்களில் மையங்கள் அமைக்கப்படும்.

* அனைத்து ரயில் நிலையங்களிலும் தானியங்கி டிக்கெட் வழங்கும் வசதி அமைக்கப்படும்.

முன்பதிவு இல்லாத பெட்டிகளுக்கும் இணையத்தில் டிக்கெட்

* முன்பதிவு செய்யாத ரயில் பெட்டிகளுக்கு இணையத்தில் டிக்கெட் வாங்கும் வசதி ஏற்படுத்தப்படும்.

* ராமேஸ்வரம் உள்ளிட்ட புனித தலங்களை இணைக்க சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

* முக்கிய நகரங்களுக்கு அதிவேக ரயில்களை இயக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு.

* சுத்தப்படுத்துதலில் தேர்ந்த நிறுவனங்களின் உதவியை ரயில்வே பெறும்.

* கட்டமைப்புகளை மேம்படுத்த உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து முதலீடு கோரப்படும்.

* 2014-15ஆம் ஆண்டில் ரயில்வேயின் செலவினம் ரூ.1,49,176 கோடியாக இருக்கும்.

* நடைமேடை டிக்கெட்டை இணையத்தில் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

புல்லட் ரயில்கள்

* மும்பை- அகமதாபாத் மார்க்கத்தில் புல்லட் ரயில் அறிமுகம் செய்யப்படும்.

* மகளிருக்கான ரயில் பெட்டிகளில் பெண் காவலர்களுக்கு செல்போன் வழங்கப்படும்.

* ரயில்வே பாதுகாப்பு படையில் 4 ஆயிரம் பெண்கள் பணியமர்த்தப்படுவர்.

* தபால் நிலையம், செல்போன் மூலம் டிக்கெட் முன்பதிவு விரிவுபடுத்தப்படும்.

* 30 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட திட்டங்களில் நான்கு திட்டங்கள் இன்னும் முடிக்கப்படவில்லை.

* ரயில்களில் பயோ டாய்லெட்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

* ரயில்வேயில் அந்திய நேரடி முதலீடுக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் தேவைப்படுகிறது.

* முக்கிய ரயில் நிலையங்களில் தனியார் உதவியுடன் லிஃப்ட் அமைக்கப்படும்.

* ரயில் நிலையம் மற்றும் ரயில்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும்.

* 50 ரயில் நிலையங்களை ஏஜென்சிகள் மூலம் பராமரிக்க நடவடிக்கை.

3,700 கி.மீட்டருக்கு புதிய பாதை

* புகழ் பெற்ற நிறுவனங்களின் உணவுப்பொருட்களை ரயில்களில் அறிமுகம் செய்ய திட்டம்.

* ரயில் நிலையங்களில் தூய்மைப்படுத்தும் பணிகள் கேமரா மூலம் கண்காணிக்கப்படும்.

* அனைத்து ரயில்களும், ரயில் நிலையங்களும் சுத்தமாக பராமரிக்கப்படும்.

* எரிபொருள் விலைக்கு ஏற்ப கட்டணங்களை அவ்வப்போது மாற்றியமைக்க வேண்டும்

* சிறிய அளவிலான புதிய திட்டங்கள் இந்தாண்டு நடைமுறைப்படுத்தப்படும்.

* அடுத்த 10 ஆண்டுகளில் 3,700 கி.மீட்டருக்கு புதிய பாதை அமைக்க ரூ.41,000 கோடி செலவிடப்படும்.

தனியார் பங்களிப்பு தேவை

* ரயில்வேத்துறையை மேம்படுத்த தனியார் பங்களிப்பு தேவை

* 2013-14ல் ரயில்வேயின் செயல்பாட்டு லாபம் குறைந்தது.

* எந்த நடைமேடைக்கும் செல்ல பேட்டரி வாகனங்களை இயக்க திட்டம்.

குடிநீர், கழிவறை வசதிகளை மேம்படுத்த திட்டம்

* அனைத்து ரயில் நிலையங்களில் குடிநீர், கழிவறை வசதிகளை மேம்படுத்த திட்டம்.

* வைர நாற்கரத் திட்டத்தை நிறைவேற்ற ரூ.9 லட்சம் கோடி தேவை

* புல்லட் ரயில்களை இயக்க ரூ.60,000 கோடி தேவைப்படுகிறது.

* ரயில்வேயை நவீனமயமாக்க அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி தேவை.

* பயணிகளுக்கான ரயில் சேவை தருவதில் இழப்பு 130 சதவீதமாக அதிகரித்துள்ளது.

* வர்த்தக நிறுவனம் போல் ரயில்வே, வருவாய் ஈட்டும் என எதிர்பார்ப்பு.

* ரயில் கட்டண உயர்வு கடினமானது. ஆனால், தவிர்க்க முடியாதது.

* பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமல் வேறு ஆதாரங்கள் மூலம் ரயில்வேக்கு நிதிதிரட்ட முடிவு

* உள்நாட்டு, அந்நிய நேரடி முதலீடுகள் மூலம் நிதி திரட்டப்படும்.

* ரயில் கட்டண உயர்வால் 8 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்.

* ஒரு பயணியை ஒரு கிலோ மீட்டர் அழைத்துச் செல்ல 10 காசுகளாக இருந்த செலவு தற்போது பைசாவாக உயர்ந்துள்ளது.

* சரக்கு போக்குவரத்து தற்போது 31 சதவீதம் மட்டுமே உள்ளது.

* ரயில்கள் மூலம் 31 சதவீதம் சரக்குகள் மட்டுமே கொண்டு செல்லப்படுகின்றன.

வரவு 1 ரூபாய்...செலவு 94 காசுகள்

* ஒவ்வொரு ரூபாய் வரவிலும் 94 காசுகள் செலவாகி விடுகிறது.

* ரயில் கட்டணங்களை நிர்ணபிப்பதில் சீரான நடைமுறைகள் இல்லை.

* கடந்த காலங்களில், முதலீடுகள் தவறான வழிகளில் செலவழிக்கப்பட்டுள்ளன.

* உலகின் மிகப்பெரிய சரக்கு எடுத்துச் செல்லும் துறையாக ரயில்வேத்துறை எடுத்து செல்ல திட்டம்.

* ரயில் இணைப்பு இல்லாமல் உள்ள இடங்களில் சேவை தொடங்குவது சவாலானது.

100 கோடி டன் சரக்குகள்

*  இந்தியன் ரயில்வே இந்தியாவின் அடையாளமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

* 100 கோடி டன் சரக்குகளை ரயில்வே கையாளுகிறது.

* பாதுகாப்புப்படையினரின் முதுகெலும்பாக ரயில்வேத்துறை செயல்படுகிறது.

* நிலுவையில் உள்ள திட்டங்களை நிறைவேற்ற ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி வீதம் தேவை.

* சரக்கு போக்குவரத்து தற்போது 31 சதவீதம் மட்டுமே உள்ளது.

* ரயில்வே துறை சவால் நிறைந்தது

* பதவியேற்ற ஒரு மாதத்தில் புதிய சேவைகளை தொடங்க பல கோரிக்கைகள் வந்துள்ளன.

* ரயிலில் இதுவரை பயணிக்காத மக்கள் இந்தியாவில் வாழ்கின்றனர்.

30 லட்சம் ஊழியர்கள்

* 2.3 கோடி பயணிகள் தினமும் ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர்.

* 30 லட்சம் ஊழியர்களை கொண்டது இந்திய ரயில்வேத்துறை.

* திட்டங்களை அறிவிப்பதை விட செயல்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டியதுள்ளது

*  ரயில்வே துறையில் தேவைக்கும், கிடைக்கும் வருவாய்க்கும் மிகப்பெரிய இடைவெளி காணப்படுகிறது. முந்தைய கட்டண கொள்கை சமச்சீராக இல்லை;

உணவு வசதி, ஆன்லைன் புக்கிங்குகளுக்கு முன்னுரிமை

* கட்டண உயர்வு மட்டுமே ரயில்வே துறையை மேம்படுத்தாது; மற்ற வாய்ப்புகள் குறித்தும் பரிசீலிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

* உணவு வசதி, ஆன்லைன் புக்கிங்குகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=29880

Link to comment
Share on other sites

இவ்வளவு விடயங்கள் இருக்கா? அங்கே ஒருத்தர் என்னடா என்றால் இந்த பாதீட்டில் தமிழகத்துக்கு எதுவும் இல்லை , மோடியின் உண்மை முகம் என்று எல்லாம் ரீல் விட்டுக்கொண்டு திரியினம் .

Link to comment
Share on other sites

மோடியை குறை கூற வேண்டும் என்பதற்காக முஸ்லீம்களும் காங்கிரஸ் காரர்களும் அவர்களுக்கு விளக்கு பிடிபோரும் கிளப்பும் புரளிகளே....மோடியின் நடவடிக்கைகளை எப்படி இரண்டு மாதத்தில் கணிக்க முடியும்...ஒரு இரண்டு வருடங்கள் ஆவது பொறுத்திருந்து பார்க்க வேண்டும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் மோடியின் இந்திய அபிவிருத்தி திட்டங்கள் நிறைவேற கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேல் தேவை என ஒரு ஜேர்மன் பத்திரிகையில் இருந்தது.

Link to comment
Share on other sites

உண்மையில் மோடியின் இந்திய அபிவிருத்தி திட்டங்கள் நிறைவேற கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேல் தேவை என ஒரு ஜேர்மன் பத்திரிகையில் இருந்தது.

 

அபிவிருத்தியடைந்த நாடுகளிலேயே பொருளாதார பிரச்சனைகளை நினைத்தவுடன் திருத்தமுடியுமா?

அந்த நாடுகளிலேயே பல்லாண்டுகள் எடுக்கும் பிரச்சனைகளை திருத்தி புதுவழிகள் அமைக்க ...

இந்தியா போன்ற நாடுகளுக்கு எவ்வளவு காலம் பிடிக்கும்? 20 ஆண்டுகளிலேயே இந்தியாவில் உள்ள எல்லாரும் ஒரு ஒழுங்கான கட்டடத்தில் காலை கடனை கழிப்பார்கள்/அங்குள்ள எல்லாருக்கும் சுத்தமான குடிதண்ணீர் கிடைத்தாலே மிகப்பெரிய முன்னேற்றம் எனலாம்....காங்கிரஸ் கடந்த ஆட்சியில் எவ்வளவு சீரழிக்கலாமோ அவ்வளவு செய்து விட்டு போயிருகிறது (மற்றது உலக பொருளாதாரமும் இந்தியாவுக்கு கடந்த 2-3வருடங்கள் கை கொடுக்கவில்லை)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.