Jump to content

யாழ் இணையத்தில நான் அறிந்தவர்கள்/பழகியவர்கள் பற்றிய சிறுகுறிப்புக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகளும் வாழ்த்துக்களும் முரளி, பண்டிதரும் மாப்பிள்ளையும் ( மாப்பு-பிற்காலக் கலைஞனும் இக்கால முரளியும்) யாழில் எழுதியதைப் பல காலமாக ரசித்து வந்த பிறகு தான் நான் யாழில் சேர்ந்தது. கொழும்பில் கருணா ஒட்டுக் குழு அலவலகத்தில் தொங்கிய சிவப்புத் துணியின் படம் போட்டு "கரிநாயின் சாரமோ அல்லது பத்துமினியின் உள்பாவாடையோ" என்று மாப்பு எழுதியதை இங்கே எல்லாருக்கும் காட்டி ஒரு நாள் முழுக்கச் சிரித்தோம்.ஒரு நாள் "ஜஸ்ரின், உங்கள் கடந்த திங்கள் அனுபவத்தை எழுதி எனக்கு அனுப்ப முடியுமா?" என்று கலைஞன் எனக்குத் தனிமடல் அனுப்பிய போது, அடுத்த வாரம் செய்யவிருந்த ஒரு கருத்தரங்கு உரை பற்றிய அடிவயிற்றுப் பயத்தில் நான் இருந்ததால், எதுவும் செய்ய இயலவில்லை. மன்னிப்புக் கோரி ஒரு தனிமடல் கூட அனுப்பவில்லை, கலைஞன் மன்னித்திருப்பார் என நம்புகிறேன். உங்கள் இந்தப் பதிவுகள் நன்று, ஆனாலும் இதை எழுதுவதால் விடைபெறப் போகிறீர்களோ என்பதான தோற்றம் தெரிகிறது. பள்ளியில் ஒரு படிப்பு நிலை வேறு முடிந்து விட்டது என்கிறீர்கள். தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுகிறேன். அடுத்த தடவை கனடா வரும் போது நேரில் சந்திப்போம்.

Link to comment
Share on other sites

  • Replies 183
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யோவ் மாப்பிளை.. இது அபாண்டம்..! நான் எழுதினது விரசம் இல்லை. கவி நயம். நம்மட கண்ண‌தாசன் போல. ஹீ..ஹீ.. :(

அரிவாளை அப்படி போடு , மச்சான் டங்கு . :):(:lol:

Link to comment
Share on other sites

அரிவாளை அப்படி போடு , மச்சான் டங்கு . :):(:lol:

என்ன தமிழ்சிறி.. நாங்கள் ரெண்டு பேரும் ஒரே 'பிராண்ட்' அல்லோ..! இப்பிடியே ஆளையாள் சொல்லி சந்தோசப்பட வேண்டியான்..!! :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேல முரளி கருத்து சொன்னதுக்கும் நீங்கள் யுனி(ய)னில படிக்கிறதுக்கு என்ன சமந்தம்?

நினைவில் வைத்து எழுதினதுக்கு நன்றி சொல்லுறது என்றால் சொல்லுங்க யுனில படிச்சனான் யூனியனில படிச்சனான் என்று தற்பெருமை விடாதிங்கள்

:lol:

இதை வாசிக்கும் போது தேவயானி ரிவி பேட்டியின் போது எனது கனவர் என்னை விட படிக்காதவர் தான் ஆனால் நல்லவர் என்று சொல்லுவது போல :( இருக்கு .........

ஆகா... ஏன் இந்த கொலை வெறி? ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு கடைசியா...... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தமிழ்சிறி.. நாங்கள் ரெண்டு பேரும் ஒரே 'பிராண்ட்' அல்லோ..! இப்பிடியே ஆளையாள் சொல்லி சந்தோசப்பட வேண்டியான்..!! :)

என்ன செய்யிறது டங்குவார் , ஒரே " பிரான்ட் " என்பதில் சந்தேகமில்லை . :(

ஆனால் நாங்கள் சொல்லுற நல்ல கருத்துக்கள் ( ? ) எப்போ எல்லாருக்கும் போய்ச்சேரும் . :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முரளிக்கு இந்தளவு ஞாபக சக்தியோ... வாழ்த்துகள். என்னை நினைவு படுத்தி எழுதியதகு நன்றி. முன்னர் (நீங்கள் சத்திர சிகிச்சை காரணமாக களத்திற்கு வாராதிருந்த நேரம், தனி மடல் போட முயற்சித்தேன் ஆனால் நீங்கள் அதை தடைசெய்திருப்பதாக பதில் வந்திச்சு.. அதோட விட்டுட்டேன்.

கந்தப்பு சுட்டி காட்டினது போல நான் கட்டுவன் இல்லை. சிட்டி ஒவ் குப்பிழான். :lol::) (மற்றபடி தனிப்பட அறிந்த தகவலை தவிர்திருக்கலாமோ என தோன்றினாலும் பெரிய ஆட்சேபனை இல்லை).

Link to comment
Share on other sites

ஜூட்:

உங்களுக்கு ஒருத்தர் இளனி குடிக்கிற அவாட்டரை நினைவு இருக்கிதோ? அவர் ஜூட். நான்முந்தி ஜூட் அவர்களுடன் கருத்தாடல் செய்து இருக்கிறன். எல்லாம் மறந்து போச்சிது. இப்ப கனகாலமாக இவர் யாழுக்கு வாறது இல்லை போல கிடக்கிது. எங்கிருந்தாலும் வாழ்க வளமுடன்!.

நண்பரே,

நினைவில் வைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனது சின்னத்தில் காணப்படுவது இளநீர் அல்ல; சங்கு. சங்கு ஊதும் தமிழனையே இந்த சின்னத்தில் காண்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா... ஏன் இந்த கொலை வெறி? ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு கடைசியா...... :)

கடைசியா தேவயாணியையும் கடிச்சிட்டார்... அப்பிடிதானே...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களம் கிட்டத்தட்ட ஆண்களுக்கு சரிக்கு சமனாக பெண்களையும் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க அம்சம்..! :)

நான் எங்க சட்டிங் போய் கடலை போட்டன். நல்லா இருக்கு கதை..! என்னட்ட எம் எஸ் என் ஐடியே கிடையாது..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:) நன்றி முரளி ! மிகுந்த சிரத்தையெடுத்து ஒவ்வொருவர் பற்றியும் எழுதியிருக்கிறீர்கள். உங்களின் வசன நடை மிகச் சரளமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்!

எல்லாரையும் பற்றிச் சொன்ன நீங்கள் உங்கள் பற்றியும் சிறிது சொல்லலாமே?! சிலருக்கு உங்களைத் தெரிந்திருக்கலாம். ஆனால் பலருக்கு நீங்கள் கருத்துக்களத்தில் வரும் முரளி மட்டுமே. ஆகவே நாங்களும் உங்களைப் பற்றி அறிய ஆவலாக இருக்கிறோம்.

தொடரட்டும் உங்கள் பணி.

Link to comment
Share on other sites

எல்லாரதும் உற்சாகமான கருத்துக்களுக்கும் முதற்கண் நன்றிகள்..

எனக்குத் தெரிஞ்ச நிறையப்பேரை நினைவுகூறாமல் நான் தவறவிட்டு இருக்கிறன். மன்னிச்சுக்கொள்ளுங்கோ. அதற்காக உங்களை நான் மறந்திட்டன் எண்டு நினைச்சுப்போடாதிங்கோ.

இந்தக்கருத்தாடல் எனது ஆக்கம் அல்ல... உங்கள் ஆக்கம். ஏன் எண்டால் நான் உங்களைப்பற்றித்தான், உங்களோட நான் பகிர்ந்த அனுபவங்கள் பற்றித்தான் சொல்லி இருக்கிறன்.

இறுதியாக, இந்தநேரத்தில மோகன், வலைஞன், யாழ்பாடி, இணையவன், யாழ்பிரியா, எழுவான் ஆகியோருக்கு நன்றிகள் கூறக்கடமைப்பட்டு இருக்கிறன்.

ஜமாய்ச்சிட்டீங்க. இவ்வளவு பேரையும் தேடிப்பிடித்து கருத்தெழுதுவது, பொறுமையான ஒரு வேலை.

"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்துஇவ் வுலகு"

நன்றி இறைவன். இறைவன் நீங்கள் யாழுக்காக செய்தி ஆய்வு பரீட்சார்த்தமாக எழுதிப்பார்க்கலாமே.

யாழ்களத்தில் சிலகாலம் வந்து போனாலும் என்னையும் ஞாபகம் வைத்து தனது கருத்தை சொன்ன முரளிக்கு மிகவும் நன்றி. என்னை வாழ்தி வேற இருக்கிறீங்கள் முரளியும் 16 செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

உங்களைப்போய் மறப்பனா? நன்றி வாசகன் வாழ்த்துகளுக்கு.

வாழ்த்துக்கள் முரளி அண்ணா, உங்களின் பார்வையில் மற்ற உறுப்பினர்கள் மீதுள்ள கணிப்பு நன்றாக உள்ளன.

அட இதுக்க நாலைஞ்சு நாள் பழைய அனுபவங்கள் பற்றி எழுதி நான் என்னத்த செய்துபோட்டன். உங்கட வலைத்தளம் சூப்பர். உங்கள் சேவைகள் தொடர வாழ்த்துகள்!

படிக்கும் போதே மகிழ்வாக இருந்தது.

வாழ்த்துகளுக்கும் நன்றிகள்.

உங்களுக்கும் எங்கள் அனைவரின் சார்பிலும் வாழ்த்துகள்

மிக்க நன்றிகள் தூயா. நான் நினைச்சன் தூயா என்னோட கோவமாக்கும் எண்டு. வாழ்த்துகள் சொன்னால் காணாது. அவுஸ்திரேலியாப் பக்கம் நான் வாற நேரத்தில உங்கட வீட்டைதான் சாப்பாட்டுக்கு வருவன். கிகி :lol:

யாழ்களத்தில் சிலகாலம் வந்து போனாலும் என்னையும் ஞாபகம் வைத்து தனது கருத்தை சொன்ன முரளிக்கு மிகவும் நன்றி.

நீங்கள் சிலகாலம் வந்துபோனாலும் மனதில நிலைச்சு இருக்கும்படியான விசயங்களை சொல்லிப்போட்டு போய் இருக்கிறீங்கள். நன்றி RishiK.

நன்றி முரளி உங்கள் பதிவிற்கு,

ஓரிடத்தில் சரியாகத்தான் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். "தயங்கு, இயங்கு, முயங்கு, மயங்கு" என்ற கவிதையை மிகவும் கோபத்துடன்தான் எழுதினேன். காரணம் கவர்ச்சிக்கு எல்லாவிடத்திலும் கிடைக்கிற முதல் மரியாதையால் மனம் வெந்தபோது தாயக விடுதலையை நேசிக்கும் படைப்பாளிகளாலும் கவர்ச்சியின், காமக்கிளர்ச்சியின் உச்சத்தையும் எழுத முடியும் என்று நிரூபிப்பதற்காகவே அக்கவிதையைப் படைத்தேன். மற்றப்படி யார்மேலும் தனிப்பட்ட கோபம் கிடையாது. இப்போது கூட சபேசனுடன் கருத்தாடிய "நட்பு" கவிதையின் திரியை வாசித்து முறுவலிக்கிறேன்.

நன்றி சகாரா அக்கா. ஏதோ இஞ்ச இப்பிடி சொல்லிப்போட்டு பிறகு என்னை நேர சந்திக்கேக்க பேசிப்போடாதிங்கோ. :)

முரளி சார்... நன்னிங்கங்க,,இன்ட சேரி பயலை கூட கவுரச்சீங்கங்க..நன்னா கதெ எழுதறனா?...ரம்ப புழுகமாக இருக்குங்க...முரளி சார், இன்னோரு தபா டாங்ஸ்ங்க

உங்களை மீண்டும் கண்டது மிகவும் சந்தோசம். தொடர்ந்து கதைகளை இணையுங்கோ. மனமார்ந்த நன்றிகள்!

ஆகா முரளி என்க்கு ஞாபகமே இல்லை. நீங்கள் எல்லாத்தையும் ஞாபகம் வச்சு இருக்கிறியள்.

நல்ல ஞாபக சக்தி உங்களுக்கு. யுனில இருந்து படிக்கிற படிக்கிற என்டு ஒழுங்கா படிச்சமோ

இல்லையோ 5 நிமிடத்துக்கு ஒரு தடவை யாழுக்கு வந்து போறதுதான் வேலை. அப்ப நிறைய

எழுதுவம் ஒரு பதிவுக்கும் கருத்து எழுதாமல் விடுற இல்லை. எல்லாரோடையும் கதைக்கிறது

பதில் எழுதுறது. முந்தி நிறையப்பேர் பெண்கள் இருந்தார்கள். மாறி மாறி ஒருவரை கடிக்கிற

எண்டு நல்ல பம்பலா போச்சு. இப்ப எல்லாரும் வேலை மற்ற பொறுப்புக்கள் என்டு பிஸி

ஆகிட்டினம் போல வாறது குறைச்சுட்டினம். நானும்தான். அது ஒரு காலம் மறக்க ஏலாது.

என்னையும் ஞாபகம் வைச்சு என்னைப் பற்றியும் நினைவு கூர்ந்தமைக்கு நன்றிகள்

ரசிகையை கனகாலத்துக்கு பிறகு கண்டது சந்தோசம். என்ன இப்பிடி சொல்லிப்போட்டீங்கள் ரசிகை. யாழில என்னை எழுத ஊக்குவிச்ச ஆக்களில நீங்களும் முக்கியமான ஒருவர். உங்களை எப்பிடி மறக்கிறது?

நீண்ட காலத்துக்கு அப்புறம் யாழில் விரும்பி படிக்க ஆரவமாக இரு பதிவு உங்களால் எனக்கு கிடைத்து..

முன்பு டன் னால் நகைச்சுவையாக அனைவரையும் நினைவில் வைத்து எழுதுவார்

தற்போது உங்கள் இந்த பதிவு வாசிக்கும் போது சிறப்பாக இருக்கிறது நன்றி முரளி...

நீங்கள் தான் கலைஞனா?

நன்றிகள் வினித்.

கிகி கலைஞன் அது நான் தாங்க. திருப்பி இன்னுமொருக்கால் எம்.எஸ்.என் க்கு வந்து உங்கள் எல்லாரிண்டையும் முசுப்பாத்திகளை பார்க்க ஆசையாய்தான் இருக்கிது. ஆனால்.. கொஞ்சம் கட்டுப்பாட்டோட இருக்கிறது நல்லம் எண்டுறதால அங்காளப்பக்கம் வரவிருப்பம் இல்லை. இடைக்கிடை யாழுக்கவந்து அங்கால மெசஞ்சருக்க நடக்கிற விசயங்களை பற்றியும் கொஞ்சம் சொல்லீட்டு போனால் உங்களுக்கு போற வழியுக்கு புண்ணியமாய் போகும்.

எனக்கு உங்கட இன்னொரு பகிடியை மறக்க ஏலாது. அது என்ன எண்டால் மெசஞ்சரில நிக்கேக்க சரி நான் போட்டு வாறன் பெடியனைப்போய் பள்ளிக்கூடத்தால கூட்டிகொண்டு வரவேணும் எண்டு சொல்லீட்டு நீங்கள் போகேக்க, தூயவன் கேட்டார் யார் அது உனக்கு மகன் இருக்கிதா எண்டு உங்களை கேட்க, நீங்கள் இல்லை அது எண்ட மனிசியிண்ட பெடியன் எண்டு சொன்னீங்கள். அந்தப்பகிடியை நான் இப்பவும் அடிக்கடி நினைச்சுச் சிரிக்கிறனான். உங்கட ஜொள்ளுகளை தொடருங்கோ. :D

நன்றி முரளி உங்கள் நேரத்துக்கு. நீண்டதொரு கள உறுப்பினர் பால் உள்ள அபிப்பிராய கோவையை பார்வையிட முடிந்தது. பேச்சு தமிழும் எழுத்து தமிழும் கலந்து எழுதியது சுவாரசியமாக இருந்தது. சம்பவங்கள் அனைத்தையும் நினைவில் வைத்து எழுதியது பிரமிக்க வைத்தது. நான் பொதுவாக யாழில் அதிகம் எழுதாதது என்னவோ உண்மைதான்.என்றாலும் காலக்கணிப்பில் எனது எழுத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

நன்றிகள் நுணாவிலான். நான் பொதுவாக சொன்னன் நுணாவிலான். படைப்பாளியாக இருக்கிறது போல ரசிகனாக இருக்கிறதும் நல்லதொரு அனுபவம். இப்ப காரில போகேக்க சாரதியாக இல்லாமல், பிரயாணியாக இருந்தால் நாங்கள் இன்னமும் நல்லாக அந்தப்பயணத்தை அனுபவிச்சு மகிழமுடியும்.

நீங்கள் சுயமாக எழுதுவது குறைவு எண்டுறது தவிர அதற்காக உங்களால எழுதமுடியாது எண்டு நான் சொல்ல இல்லை. நீங்கள் ஒரு படைப்பாளியாக இருப்பதை விட ஒரு ரசிகனாக இருக்கிறதை இயல்பாக விரும்புறீங்கள்.

வணக்கம் முரளி

ஒவ்வொருவர் பற்றிய உங்கள் எண்ணப் பரிமாற்றம் என்னை வியக்க வைத்தது. எனது கவிதைகளைப் படிக்கும்போது பறவைகள் இசைபாடுறமாதிரி என்று எழுதியிருந்ததைப் படித்தபோது என் மனதுக்குள் மத்தாப்பூ. எனக்கு கிரீடம் அணிவித்த உங்களுக்காக இன்னுமொருமுறை பறவைகள் இசைபாடட்டும்.

யாழோடு இணைந்திட்ட நல்லதொரு தோழமையின்

தோளோடு உறவாடும் தோழருக்கு வாழ்த்துரைத்து

சீரோடு சிறப்போடு சிந்தனையில் வனப்போடு

நேராக நிமிர்ந்திடுவோம் நெஞ்சத்தில் உரமோடு

கார்கால மேகங்கள் சூழ்ந்திட்ட மார்கழியில்

களிப்போடுஒன்றிப்போம் நட்புபோடு உறவோடு

எம் இல்லத்தில் தீபங்கள் ஒளிவீசும் இந்நேரம்

எம் இதயத்தின் ஓரங்கள் தாய்மண்ணின் தாபங்கள்

அந்த சொந்தங்கள் தூரங்கள் சோகங்கள் பாருங்கள்

தமிழ் ஈழத்தில் எம் மக்கள் இன்னல்கள் கேளுங்கள்

நாம் வாழத் தாம் வீழும் வள்ளல்கள் வீரர்கள்

அவர் தீரங்கள் நாம் வாழச் செய்திட்ட தியாகங்கள்

ஊரோடு உறவோடு உல்லாச கோலங்கள்இங்கு

உல்லாசம் வேசங்கள் எம் உள்ளத்தில் பாரங்கள்

அலையோசையோடு ஆலய மணியோசை போட்டியிடும்

அந்த ஆனந்த நேரங்கள் நெஞ்சில் அகலாத தூரங்கள்

இங்கு கட்டிடக் காட்டுக்குள் காற்றுக்கும் பஞ்சங்கள்

அக்களிப்பான பொழுதுகள் எம் கனவான சொந்தங்கள்

எழிலான எம் மண்ணின் இனிதான நினைவோடு

நிழலாடும் நெஞ்சத்தில் கரைந்திட்ட காலங்கள்

இனி வருங்காலம் வளமோடு வாழ்கின்ற விருப்போடு

இறைபாதம் வேண்டுவோம் இதமான பரிவோடு.

நன்றிகள்

நன்றிகள் கண்மணி அக்கா. நீங்கள் கவிதை எண்டு எழுத்துகளாக கோர்த்து எழுதாது உங்கட கதைகளை நிஜமான உணர்வுகள் கலந்து சொல்லுறீங்கள். அதனால இயல்பாக நீங்கள் எழுதுற கவிதைகள் அப்பிடியே உள்ளத்தில கலந்திடுது. மீண்டும் நன்றிகள் பல.

யோவ் மாப்பிளை.. இது அபாண்டம்..! நான் எழுதினது விரசம் இல்லை. கவி நயம். நம்மட கண்ண‌தாசன் போல. ஹீ..ஹீ..

நன்றிகள் டங்குவார். காதல் எண்டால் மாத்திரம் ஹார்மோன்களிண்ட கவர்ச்சி எண்டு சொல்லுறீங்கள். ஆனால்.. இப்பிடியான விசயங்களில கண்ணதாசனுக்கு பின்னால ஒளிஞ்சுகொள்ளுறீங்கள். நீங்கள் முந்தி நகைச்சுவையாக நல்ல கவிதைகள் எழுதுறனீங்கள். தொடர்ந்து உங்கட ஆக்கங்களை இறக்கிவிடுங்கோ. :D

**உப்பிட்டவரை உள்ளளவும் நினை" என்றொரு பழமொழி இருக்கு!! நீங்கள் உங்களை எப்போதும் மறவாத வண்ணம் உப்பளத்தையே இந்தக்களத்தில் உறவினர்களுக்கு தூவிவிட்டிருக்கீங்கள் முரளி.

அறிவும், தெளிவும் தொலைநோக்குப்பார்வையும் ஒரே இடத்தில் ஒருவரிடத்தில் அமைவது குறைவு. ஆனால் மூன்றும் உங்களிடத்தில் சிறந்து மிளிர்வதை கதைத்த பொழுதுகளில் களமாடிய*(போர்க்களம் என்று நினைக்ககூடாது) யாழ்களம் தான்) பொழுதுகளில் உணர்ந்திருக்கின்றேன்.

பல்வேறு வகைப்பட்ட வித்தியாசமான சிந்தனைகளினூடே நீங்கள் படைக்கும் ஆக்கம் விழி உயர்த்தி பார்க்க வைத்திருக்கின்றது(ஆச்சரியம்+

அதிசயமாய் பார்க்கிறது)...

தங்களின் இலட்சியப்பாதையில் வெகு சிரத்தையோடு முன்னேறி இலக்கினை எட்ட நல்லதொரு நட்புத்தோழியாக வாழ்த்துகள்.

மிக்க நன்றிகள் தமிழ்தங்கை. அதான் நீங்கள் எனக்கு நல்லதொரு நண்பியாக வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து வரப்போறீங்கள். நான் பிழையாக போனாலும் நீங்கள் எனக்கு சரியான வழியை காட்டுவீங்கள் தானே. :D

நன்றிகளும் வாழ்த்துக்களும் முரளி, பண்டிதரும் மாப்பிள்ளையும் ( மாப்பு-பிற்காலக் கலைஞனும் இக்கால முரளியும்) யாழில் எழுதியதைப் பல காலமாக ரசித்து வந்த பிறகு தான் நான் யாழில் சேர்ந்தது. கொழும்பில் கருணா ஒட்டுக் குழு அலவலகத்தில் தொங்கிய சிவப்புத் துணியின் படம் போட்டு "கரிநாயின் சாரமோ அல்லது பத்துமினியின் உள்பாவாடையோ" என்று மாப்பு எழுதியதை இங்கே எல்லாருக்கும் காட்டி ஒரு நாள் முழுக்கச் சிரித்தோம்.ஒரு நாள் "ஜஸ்ரின், உங்கள் கடந்த திங்கள் அனுபவத்தை எழுதி எனக்கு அனுப்ப முடியுமா?" என்று கலைஞன் எனக்குத் தனிமடல் அனுப்பிய போது, அடுத்த வாரம் செய்யவிருந்த ஒரு கருத்தரங்கு உரை பற்றிய அடிவயிற்றுப் பயத்தில் நான் இருந்ததால், எதுவும் செய்ய இயலவில்லை. மன்னிப்புக் கோரி ஒரு தனிமடல் கூட அனுப்பவில்லை, கலைஞன் மன்னித்திருப்பார் என நம்புகிறேன். உங்கள் இந்தப் பதிவுகள் நன்று, ஆனாலும் இதை எழுதுவதால் விடைபெறப் போகிறீர்களோ என்பதான தோற்றம் தெரிகிறது. பள்ளியில் ஒரு படிப்பு நிலை வேறு முடிந்து விட்டது என்கிறீர்கள். தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுகிறேன். அடுத்த தடவை கனடா வரும் போது நேரில் சந்திப்போம்.

நன்றிகள் ஜஸ்டின். நீங்கள் முந்தி யாழுக்கு அடிக்கடி வருவீங்கள். இப்ப எல்லாரும் வேறு வேறு அலுவல்களில மினக்கடுறதால முன்புபோல சேர்ந்து கருத்தாடல் செய்யுறது குறைஞ்சு போச்சிது. ஓம் எல்லாரும் சுப்பற்ற கொள்ளையுக்க தானே இருக்கிறம். கெதியில சந்திப்பம். நன்றி!

முரளிக்கு இந்தளவு ஞாபக சக்தியோ... வாழ்த்துகள். என்னை நினைவு படுத்தி எழுதியதகு நன்றி. முன்னர் (நீங்கள் சத்திர சிகிச்சை காரணமாக களத்திற்கு வாராதிருந்த நேரம், தனி மடல் போட முயற்சித்தேன் ஆனால் நீங்கள் அதை தடைசெய்திருப்பதாக பதில் வந்திச்சு.. அதோட விட்டுட்டேன்.

கந்தப்பு சுட்டி காட்டினது போல நான் கட்டுவன் இல்லை. சிட்டி ஒவ் குப்பிழான். (மற்றபடி தனிப்பட அறிந்த தகவலை தவிர்திருக்கலாமோ என தோன்றினாலும் பெரிய ஆட்சேபனை இல்லை).

மிக்க நன்றிகள் சபேஸ். குப்பிழானும் கட்டுவனும் பக்கத்தில பக்கத்திலதானே இருக்கிது. சரி விரைவில நேரில சந்திச்சு கதைப்பம். வரேக்க சோதி மிக்ஸ்ரை கொண்டுவர மறந்திடாதிங்கோ என. :D

நண்பரே,

நினைவில் வைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனது சின்னத்தில் காணப்படுவது இளநீர் அல்ல; சங்கு. சங்கு ஊதும் தமிழனையே இந்த சின்னத்தில் காண்கிறீர்கள்.

உங்களை மீண்டும் கண்டது மிக்க சந்தோசம். நான் நினைச்சன் அதுஇளநீர் எண்டு.

தொடர்ந்து நேரம் இருக்கேக்க யாழுக்கு வாருங்கோ ஜூட். உங்களை கனகாலத்துக்கு பிறகு கண்டது சந்தோசமாய் இருக்கிது.

யாழ் களம் கிட்டத்தட்ட ஆண்களுக்கு சரிக்கு சமனாக பெண்களையும் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க அம்சம்..!

நான் எங்க சட்டிங் போய் கடலை போட்டன். நல்லா இருக்கு கதை..! என்னட்ட எம் எஸ் என் ஐடியே கிடையாது..!

ஆ... நீங்கள் தானே முந்தி சொன்னனீங்கள் சோழிய மாமாவோட, குருவியோட எல்லாம் கடலை போடுறனான் எண்டு அந்த நாச்சிமார் கோயிலடி ராஜன் அண்ணா சம்மந்தமான கருத்தாடலில. என்ன இருந்தாலும் நீங்கள் எட்டு வருசமாய் ஐடியை மாத்தாமல் ஒரு ஐடியையே வச்சு இருக்கிறது பாராட்டுக்குரியது நெடுக்காலபோவான். ஹிஹி :D

:lol: நன்றி முரளி ! மிகுந்த சிரத்தையெடுத்து ஒவ்வொருவர் பற்றியும் எழுதியிருக்கிறீர்கள். உங்களின் வசன நடை மிகச் சரளமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்!

எல்லாரையும் பற்றிச் சொன்ன நீங்கள் உங்கள் பற்றியும் சிறிது சொல்லலாமே?! சிலருக்கு உங்களைத் தெரிந்திருக்கலாம். ஆனால் பலருக்கு நீங்கள் கருத்துக்களத்தில் வரும் முரளி மட்டுமே. ஆகவே நாங்களும் உங்களைப் பற்றி அறிய ஆவலாக இருக்கிறோம்.

தொடரட்டும் உங்கள் பணி.

மிக்க நன்றிகள் ரகுநாதன். நான் எழுதியவை மூலம் உங்களுக்கு ஏதாவது பயனுள்ள தகவல்கள் கிடைச்சு இருந்தால், அதை வாசிக்கேக்க மகிழ்ச்சியாய் இருந்து இருந்தால் சந்தோசம். என்னைப்பற்றி என்னத்த சொல்லிறது? அதான் சொல்லீட்டனே கடைசி பேரூந்தில Foot Board இல அந்தரத்தில தொங்கியபடி பயணம் செய்யுறன் எண்டு. :D

Link to comment
Share on other sites

QUOTE (nedukkalapoovan @ Dec 19 2008, 11:31 PM) *

யாழ் களம் கிட்டத்தட்ட ஆண்களுக்கு சரிக்கு சமனாக பெண்களையும் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க அம்சம்..!

நான் எங்க சட்டிங் போய் கடலை போட்டன். நல்லா இருக்கு கதை..! என்னட்ட எம் எஸ் என் ஐடியே கிடையாது..!

ஆ... நீங்கள் தானே முந்தி சொன்னனீங்கள் சோழிய மாமாவோட, குருவியோட எல்லாம் கடலை போடுறனான் எண்டு அந்த நாச்சிமார் கோயிலடி ராஜன் அண்ணா சம்மந்தமான கருத்தாடலில. என்ன இருந்தாலும் நீங்கள் எட்டு வருசமாய் ஐடியை மாத்தாமல் ஒரு ஐடியையே வச்சு இருக்கிறது பாராட்டுக்குரியது நெடுக்காலபோவான். ஹிஹி biggrin.gif

அவரிட்டை மெசன்சர் ஐடி இல்லை.. குருவிகளிட்ட இரவல் வாங்கி வைச்சிருக்கிறார்!! :)

Link to comment
Share on other sites

மிக்க நன்றிகள் தூயா. நான் நினைச்சன் தூயா என்னோட கோவமாக்கும் எண்டு. வாழ்த்துகள் சொன்னால் காணாது. அவுஸ்திரேலியாப் பக்கம் நான் வாற நேரத்தில உங்கட வீட்டைதான் சாப்பாட்டுக்கு வருவன். கிகி

இதென்ன இப்படி சொல்லிட்டிங்க..

ஒஸ்ரேலியா வந்தால் வந்ததில இருந்து போகும் வரை முழு சாப்பாடும் நான் தானாக்கும்

[எத்தனை நாளைக்கு தான் சோதனைக்கு ஒரே எலிகளை பயன்படுத்துவது]

இருந்தாலும் உங்கள் மேல் இருக்கும் பாசத்தில் சொல்கின்றேன்

கந்தப்புவிடம் இதை பற்றி ஒரு வார்த்தை கேட்டு கொள்ளுங்கள்..

கிகிகிகிகிகி

Link to comment
Share on other sites

முரளி! தூயா தனது கோப்பைல என்னென்ன அயிட்டங்களை வைக்கிறாங்களோ.. அததை நீங்களும் உங்க கோப்பைல வையுங்க.. சாப்பிடப்போகும்போது தட்டுகளை மாற்றி எடுங்க.. தப்பிச்சுக் கொள்ளுவீங்க!! :)

Link to comment
Share on other sites

என் பற்றிய குறிப்புக்கு நன்றி முரளி. அடுத்த வாரம் அனேகமாக நாங்கள் சந்திக்க முடியும் என நம்புகின்றேன். எப்படி உங்களால் இவ்வளவு பேரையும் நினைவில் வைத்திருக்க முடிகின்றது. அபாரம் அபாரம்.

வாழ்வில் அனைத்தும் உங்களுக்கு கிடைக்க மனசாற உங்களை வாழ்த்துகின்றேன்

அன்புடன்

நிழலி

Link to comment
Share on other sites

மின்னல்:

மின்னல் பெயருக்கு ஏற்றமாதிரி உண்மையில மின்னல் தான்! யாழில ஊர்ப்புதினம் பகுதியில மிகவும் புகழ்பெற்ற யாழ் வாசகர்களினால 10,000 20,000, 30,000 பக்கம் தடவைகள் (Views) எண்டு பார்க்கப்பட்ட கருத்தாடல்களை ஆரம்பிச்ச பெருமை மின்னலை சாரும். ஊரில ஆமிக்கு ஏதாவது எக்கச்சக்கமாக அடிவிழுந்தால் வெற்றிச்செய்திகளை யாழுக்கு கொண்டுவருகின்ற முதலாவது ஆள் மின்னலாகத்தான் இருக்கும்.

நான் ஊர்ப்புதினம் பகுதியில அண்மைக்காலமாக எழுதுற கருத்துக்களால மின்னலுக்கு என்னில கொஞ்சம் கோவம். யாழுக்கு உள்ள கோவிக்கிறது சரி பிரச்சனை இல்லை. ஆனால்... பிறகு கனடாவில கடையுக்கு நான் புட்டோட குழைச்சு சாப்பிடிறதுக்கு வாழைப்பழம் வாங்கப்போற இடத்தில இவர்தான் முரளி எண்டு என்னை இனம்கண்டு மின்னிபோடாதிங்கோ மின்னல் அண்ணை. உங்களிண்ட பெயரை நினைக்க கொஞ்சம் பயமாய் இருக்கிது.

யாழில இருக்கிற ஆக்களில எனக்கு தனிப்பட தெரியாத ஆக்களில மின்னலும் முக்கியமான ஒருத்தர். மின்னல் வளமுடன் வாழ வாழ்த்துகள்!

என்னவோ என்னை பயந்து பயந்து வாழ்த்துற மாதிரி இருக்கு. பயப்படவேண்டாம் முரளி. பயமின்றிச் சென்று வாழைப்பழம் வாங்கு புட்டுடன் குழைத்து சாப்பிடுங்கள்.

முரளி மேல் கோபம் என்றால் யாழ். களத்தில் வைத்துத்தான் மின்ன ஆசைப்படுவேன். அதுவும் கருத்து எழுதி.

முரளி அண்ணை, கனேடியர்களின் முக்கிய உரிமைகளில் ஒன்று கருத்தினை வெளிப்படுத்தும் சுதந்திரம். இந்த நாட்டின் சட்டங்களை மீறி நடக்ககூடாது என்பதில் சிரத்தையாக இருக்கிறேன். எனவே உங்களின் கருத்துச் சுதந்திரத்தை பறிக்க நான் முற்படமாட்டேன்.

ஆனால் நீங்கள் யாழில் உள்ள போலி ஜனநாயகவாதிகளிற்கு *** வக்காளத்து வாங்குவதையும் அவர்களைப் போன்று சில வேளைகளில் எழுதுவதையும் தான் பார்ப்பதற்கு கஸ்ரமாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

இதென்ன இப்படி சொல்லிட்டிங்க..

ஒஸ்ரேலியா வந்தால் வந்ததில இருந்து போகும் வரை முழு சாப்பாடும் நான் தானாக்கும்

[எத்தனை நாளைக்கு தான் சோதனைக்கு ஒரே எலிகளை பயன்படுத்துவது]

இருந்தாலும் உங்கள் மேல் இருக்கும் பாசத்தில் சொல்கின்றேன்

கந்தப்புவிடம் இதை பற்றி ஒரு வார்த்தை கேட்டு கொள்ளுங்கள்..

கிகிகிகிகிகி

பரவாயில்ல தூயா. நீங்கள் தரக்கூடியதுகளை தாங்கோ. நாங்கள் ஊரில முந்தி இருக்கேக்க அவுஸ்திரேலியாவில இருக்கிற எலிகளுக்கு இப்ப கிடைக்கிற சாப்பாடு கூட எங்களுக்கு கிடைக்க இல்லை. சிறையுக்க இருக்கேக்க நாங்கள் சாப்பிட்ட சாப்பாடுகளை அவுஸ்திரேலியாவில இருக்கிற எலிகள் சாப்பிட்டு இருந்தால் செத்துபோய் இருக்கும். எண்டபடியால எது தந்தாலும் பரவாயில்ல. ஆனால எலியை பொறிச்சு செய்த கறி ஏதும் வச்சு தராமல் இருந்தால் போதும். கிகி :D

முரளி! தூயா தனது கோப்பைல என்னென்ன அயிட்டங்களை வைக்கிறாங்களோ.. அததை நீங்களும் உங்க கோப்பைல வையுங்க.. சாப்பிடப்போகும்போது தட்டுகளை மாற்றி எடுங்க.. தப்பிச்சுக் கொள்ளுவீங்க!! :D

சோழியன் மாமா வீட்டில சாப்பிடேக்க நீங்கள் இப்பிடியோ செய்யுறனீங்கள்.. ? :)

என் பற்றிய குறிப்புக்கு நன்றி முரளி. அடுத்த வாரம் அனேகமாக நாங்கள் சந்திக்க முடியும் என நம்புகின்றேன். எப்படி உங்களால் இவ்வளவு பேரையும் நினைவில் வைத்திருக்க முடிகின்றது. அபாரம் அபாரம்.

வாழ்வில் அனைத்தும் உங்களுக்கு கிடைக்க மனசாற உங்களை வாழ்த்துகின்றேன்

அன்புடன்

நிழலி

மிக்க நன்றிகள் நிழலி.

என்னவோ என்னை பயந்து பயந்து வாழ்த்துற மாதிரி இருக்கு. பயப்படவேண்டாம் முரளி. பயமின்றிச் சென்று வாழைப்பழம் வாங்கு புட்டுடன் குழைத்து சாப்பிடுங்கள்.

முரளி மேல் கோபம் என்றால் யாழ். களத்தில் வைத்துத்தான் மின்ன ஆசைப்படுவேன். அதுவும் கருத்து எழுதி.

முரளி அண்ணை, கனேடியர்களின் முக்கிய உரிமைகளில் ஒன்று கருத்தினை வெளிப்படுத்தும் சுதந்திரம். இந்த நாட்டின் சட்டங்களை மீறி நடக்ககூடாது என்பதில் சிரத்தையாக இருக்கிறேன். எனவே உங்களின் கருத்துச் சுதந்திரத்தை பறிக்க நான் முற்படமாட்டேன்.

ஆனால் நீங்கள் யாழில் உள்ள போலி ஜனநாயகவாதிகளிற்கு *** வக்காளத்து வாங்குவதையும் அவர்களைப் போன்று சில வேளைகளில் எழுதுவதையும் தான் பார்ப்பதற்கு கஸ்ரமாக இருக்கிறது.

நன்றிகள் மின்னல் அண்ணை. நான் நினைச்சன் நீங்கள் எண்ட புட்டு + வாழைப்பழத்துக்கு வெடிவைக்கப்போறீங்கள் எண்டு. பரவாயில்ல. கேட்க சந்தோசமாய் இருக்கிது.

ஏற்கனவே உங்களோட சண்டைபிடிச்சது காணும். வாழ்க்கையில ஒவ்வொரு நிலைக்கு முன்னேறி போகத்தானே வேணும். இதுக்கயே ஊர்ப்புதினத்துக்க படுத்துகிடந்து கோயிலில பஞ்சாம்மிரதம் வாங்க அடிபடுறமாதிரி அடிபட்டு என்ன செய்யுறது. ஊர்ப்புதினத்தில நான் சொன்ன கருத்துகளால உங்களுக்கு மனதுக்கு கஸ்டமாக இருந்து இருந்தால் மன்னிச்சுக்கொள்ளுங்கோ.

அப்ப பிறகு சந்திப்பம் என. சுப்பற்ற கொள்ளையுக்க தானே எல்லாரும் இருக்கிறம். :lol:

Link to comment
Share on other sites

குட்டித்தம்பி:

பெயர்தான் குட்டித்தம்பி. ஆனால்.. இவர் கல்வி, தொழிலில மிகவும் புலமை பெற்றவர் எண்டு நினைக்கிறன். தாயக போராட்டம் சம்மந்தமாகவும் அதிக அக்கறை கொண்டவர். நான் குட்டித்தம்பியுடன் ஏராளம் கருத்தாடல்களில பங்குபற்றி இருக்கிறன். குட்டித்தம்பி ஒரு காதல் மன்னன் என்பதோடு தனது காதலில வெற்றி பெற்றவர் எண்டும் யமுனா / வானவில்லின் அவருடனான பேட்டியில வாசிச்சு இருந்தன். அந்தப்பேட்டியில தன்னைப்பற்றி குட்டித்தம்பி நிறையத்தகவல்கள் சொல்லி இருந்தார். இப்ப மறந்துபோச்சிது.

தனிப்பட குட்டித்தம்பியை எனக்கு தெரியாது. எங்கிருந்தாலும் வளமுடன் வாழ வாழ்த்துகள்!

யாழ் குட்டிதம்பி காதல் மன்னனாக விளங்கி காதலில வெற்றி பெற்று இருப்பது போல குட்டிபையனுக்கும் நல்லதொரு வாழ்வு அமைய வாழ்த்துகள்!

மாப்பு..நானும் என்ர பாடுமா இருக்கிற என்னை யாழ்களத்தில காதல் மன்னன் என்டு அவிட்டுவிட்டது போதாது என்டு இப்ப என்னை குட்டிபையனுக்கு எடுகோள் வேற காட்டுறியள்.. நான் ஒன்றும் பெரிசா கிழிக்கலையுங்கோ.. :)

அது சரி..எங்கள் எல்லாரையும் இவ்வளவு புகழ்ந்து தள்ளியிருக்கீங்க...உங்களுக்க நாம என்ன பண்ணலாமுன்னு யோசிச்சன், கடைசியில நம்ம டைகர் பமிலி சார்பாக ஒரு முடிவுக்கு வந்திருக்கம்.. நம்ம மாப்புவுக்கு பொன்னாடை போர்த்தி யாழ்கள மெம்பேர்சில நீங்க செய்த இந்த அரிய ஆராய்ச்சிக்காக கௌரவ டாக்டர்பட்டம் தரலாம்னு இருக்கோம்.

இன்றிலிருந்து நீங்கள் டாக்டர் முரளி :D ( கொஞ்சம் வில்லங்கமான பெயர்தான்) என்று அழைக்கப்படுவீர்கள்.

ஐம்முவும் வானவில்லும் வந்து எனக்கெதிரா கிளர்ச்சி செய்ய முன்னம், இந்த டைகர் பமிலியின்ட பட்டத்தோட ஓடி போயுடுங்கோ மாப்பு. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆ... நீங்கள் தானே முந்தி சொன்னனீங்கள் சோழிய மாமாவோட, குருவியோட எல்லாம் கடலை போடுறனான் எண்டு அந்த நாச்சிமார் கோயிலடி ராஜன் அண்ணா சம்மந்தமான கருத்தாடலில. என்ன இருந்தாலும் நீங்கள் எட்டு வருசமாய் ஐடியை மாத்தாமல் ஒரு ஐடியையே வச்சு இருக்கிறது பாராட்டுக்குரியது நெடுக்காலபோவான். ஹிஹி

கடலை எல்லாம் போடுறதில்ல. குருவி எனது பள்ளித் தோழன்.அவரோட நேரிலையே கதைக்கிறனான். குருவி சொல்லி சோழியான்.. நாச்சிமார் கோவிலடி ராஜன் போன்றவர்கள் மற்றும் இன்னும் பலரைப் பற்றியும் அறிந்திருக்கிறேன்.

இங்கே ஒரு காலத்தில் கலாட்டா பண்ணின பெண்களை எல்லாம் விட்டுட்டீங்க என்ற ஒரு குறை வரப்போகிறதா பேச்சு அடிபட்டுது. நான் நினைக்கிறேன் நீங்கள் இங்கு பதிய ஆரம்பித்த பின்னர் இங்கு கருத்தெழுதியவர்களை மட்டும் இதில் பட்டியலிட்டுருக்கிறீங்கள் என்று. ஆனால் கடந்த 10 ஆண்டு காலத்தில் யாழ் கள உறவுகளாக இருந்தவர்கள் (ஆகக்குறைந்தது ஒரு கருத்தாவது எழுதி) அனைவரையும் பட்டியலிட்டுப் பார்க்க வேண்டும் என்பது எனது ஆசை..!

குறிப்பா..

சந்திரவதனா..

நளாயினி தாமரைச் செல்வன்..

முல்லை..

சுடர்...

மழலை..

யாழினி (சர்ச்சைக்குரிய முன்னாள் மட்டுறுத்தினர்)

யாழ்.. (யாழ் இணையத்தை உருவாக்க மோகன் அண்ணனுடன் அன்றைய பொழுதுகளில் நெருங்கி உழைத்தவர். தமிழ் கூறும் நல்லுலகுக்கு குடில்கள் என்ற பெயரில் தற்போதைய வலைப்பூக்களை அறிமுகம் செய்து வைத்தவர். பல தமிழ் மொழி சொல்லுரு மாற்றிகளுக்கு சொந்தக் காரர். அவரின் இணைய உலகப் பெயர் சுரதா யாழ்வாணன்.)

சேது..

மதிவதனன்..(தாத்தா)

கண்ணன்..

இளங்கோ..(முன்னாள் மட்டுறுத்தினர்)

கவிதன்.. (முன்னாள் மட்டுறுத்தினர்)

கணணிப்பித்தன்..

கபிலன்.. (முன்னாள் மட்டுறுத்தினர்)

யாழ்பிரியன் (முதன் முதலில் யாழ் என்ற அடைமொழியோடு யாழில் மட்டுறுத்தினராக இருந்தவர்)

அவர்களின் பினாமிகள் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரிட்டை மெசன்சர் ஐடி இல்லை.. குருவிகளிட்ட இரவல் வாங்கி வைச்சிருக்கிறார்!! :)

அதென்னவோ உண்மைதான். ஆனால் கண்டபடி எல்லாம் பாவிக்கிறதில்ல. எதையும் அளவோட எங்கட மூளையின் கட்டுப்பாட்டுகுள்ள பாவிச்சா ஆபத்தில்லை..! :D

Link to comment
Share on other sites

மாப்பு..நானும் என்ர பாடுமா இருக்கிற என்னை யாழ்களத்தில காதல் மன்னன் என்டு அவிட்டுவிட்டது போதாது என்டு இப்ப என்னை குட்டிபையனுக்கு எடுகோள் வேற காட்டுறியள்.. நான் ஒன்றும் பெரிசா கிழிக்கலையுங்கோ.. :D

அது சரி..எங்கள் எல்லாரையும் இவ்வளவு புகழ்ந்து தள்ளியிருக்கீங்க...உங்களுக்க நாம என்ன பண்ணலாமுன்னு யோசிச்சன், கடைசியில நம்ம டைகர் பமிலி சார்பாக ஒரு முடிவுக்கு வந்திருக்கம்.. நம்ம மாப்புவுக்கு பொன்னாடை போர்த்தி யாழ்கள மெம்பேர்சில நீங்க செய்த இந்த அரிய ஆராய்ச்சிக்காக கௌரவ டாக்டர் பட்டம் தரலாம்னு இருக்கோம்.

இன்றிலிருந்து நீங்கள் டாக்டர் முரளி :D ( கொஞ்சம் வில்லங்கமான பெயர்தான்) என்று அழைக்கப்படுவீர்கள்.

ஐம்முவும் வானவில்லும் வந்து எனக்கெதிரா கிளர்ச்சி செய்ய முன்னம், இந்த டைகர் பமிலியின்ட பட்டத்தோட ஓடி போயுடுங்கோ மாப்பு. :lol:

என்ன குட்டித்தம்பி இப்பிடி சொல்லிப்போட்டீங்கள். நீங்கள் யமுனா வானவில்லுக்கு குடுத்த பேட்டி நான் முந்தி வாசிச்சனான். நல்லாய் நினைவில இருக்கிது. 'அறிவிப்பாளர்' இந்தச்சொல்லாவது இப்ப நினைவில இருக்கிதோ? :D நான் டைகர் பமிலி பேட்டியை தேடிப்பார்த்தன். காண இல்லை. யாழ் உறவோசையில இருந்தமாதிரி தெரிஞ்சிது. அங்க காண இல்லை. வேரும் விழுதும் பகுதியிலயும் காண இல்லை. அது இப்ப எங்க இருக்கிது?

எனக்கு பட்டம் ஒண்டும் வேணாம். காசுதான் வேணும். டைகர் பமிழி சார்பாக எனக்கு கைமாத்தா கொஞ்ச காசு தாருங்கோ. :)

கடலை எல்லாம் போடுறதில்ல. குருவி எனது பள்ளித் தோழன்.அவரோட நேரிலையே கதைக்கிறனான். குருவி சொல்லி சோழியான்.. நாச்சிமார் கோவிலடி ராஜன் போன்றவர்கள் மற்றும் இன்னும் பலரைப் பற்றியும் அறிந்திருக்கிறேன்.

இங்கே ஒரு காலத்தில் கலாட்டா பண்ணின பெண்களை எல்லாம் விட்டுட்டீங்க என்ற ஒரு குறை வரப்போகிறதா பேச்சு அடிபட்டுது. நான் நினைக்கிறேன் நீங்கள் இங்கு பதிய ஆரம்பித்த பின்னர் இங்கு கருத்தெழுதியவர்களை மட்டும் இதில் பட்டியலிட்டுருக்கிறீங்கள் என்று. ஆனால் கடந்த 10 ஆண்டு காலத்தில் யாழ் கள உறவுகளாக இருந்தவர்கள் (ஆகக்குறைந்தது ஒரு கருத்தாவது எழுதி) அனைவரையும் பட்டியலிட்டுப் பார்க்க வேண்டும் என்பது எனது ஆசை..!

குறிப்பா..

சந்திரவதனா..

நளாயினி தாமரைச் செல்வன்..

முல்லை..

சுடர்...

மழலை..

யாழினி (சர்ச்சைக்குரிய முன்னாள் மட்டுறுத்தினர்)

யாழ்.. (யாழ் இணையத்தை உருவாக்க மோகன் அண்ணனுடன் அன்றைய பொழுதுகளில் நெருங்கி உழைத்தவர். தமிழ் கூறும் நல்லுலகுக்கு குடில்கள் என்ற பெயரில் தற்போதைய வலைப்பூக்களை அறிமுகம் செய்து வைத்தவர். பல தமிழ் மொழி சொல்லுரு மாற்றிகளுக்கு சொந்தக் காரர். அவரின் இணைய உலகப் பெயர் சுரதா யாழ்வாணன்.)

சேது..

மதிவதனன்..(தாத்தா)

கண்ணன்..

இளங்கோ..(முன்னாள் மட்டுறுத்தினர்)

கவிதன்.. (முன்னாள் மட்டுறுத்தினர்)

கணணிப்பித்தன்..

கபிலன்.. (முன்னாள் மட்டுறுத்தினர்)

யாழ்பிரியன் (முதன் முதலில் யாழ் என்ற அடைமொழியோடு யாழில் மட்டுறுத்தினராக இருந்தவர்)

அவர்களின் பினாமிகள் :lol:

நன்றி நெடுக்காலபோவான். எனக்கு இவர்கள் அறிமுகம் இல்லாதபடியால எழுதவில்லை. நீங்கள் இப்பிடி சொல்லிப்போட்டிங்கள் எண்டபடியால பழைய உறுப்பினர்களை பற்றி ஒரு சிறு பதிவை இதில வைக்கிறன். சந்திரவதனா அக்காவை எனக்கு தெரியும் எப்பிடி எண்டால் அவவிண்ட வலைப்பூவுக்கு போய் நான் பாட்டுக்கள் கேட்டு இருக்கிறன்.

அது சரி அப்ப குருவிகள் பற்றி எழுததேவையில்லை எண்டு சொல்லுறீங்களோ? நீங்கள் சொன்ன ஆக்களிண்ட பட்டியலில குருவிகளை காண இல்லை. :D

Link to comment
Share on other sites

நான் டைகர் பமிலி பேட்டியை தேடிப்பார்த்தன். காண இல்லை. யாழ் உறவோசையில இருந்தமாதிரி தெரிஞ்சிது. அங்க காண இல்லை. வேரும் விழுதும் பகுதியிலயும் காண இல்லை. அது இப்ப எங்க இருக்கிது?

எனக்கு பட்டம் ஒண்டும் வேணாம். காசுதான் வேணும். டைகர் பமிழி சார்பாக எனக்கு கைமாத்தா கொஞ்ச காசு தாருங்கோ. :)

யாழ் நாற்சந்தியில இன்னமும் இருக்கு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்காலபோவான். எனக்கு இவர்கள் அறிமுகம் இல்லாதபடியால எழுதவில்லை. நீங்கள் இப்பிடி சொல்லிப்போட்டிங்கள் எண்டபடியால பழைய உறுப்பினர்களை பற்றி ஒரு சிறு பதிவை இதில வைக்கிறன். சந்திரவதனா அக்காவை எனக்கு தெரியும் எப்பிடி எண்டால் அவவிண்ட வலைப்பூவுக்கு போய் நான் பாட்டுக்கள் கேட்டு இருக்கிறன்.

அது சரி அப்ப குருவிகள் பற்றி எழுததேவையில்லை எண்டு சொல்லுறீங்களோ? நீங்கள் சொன்ன ஆக்களிண்ட பட்டியலில குருவிகளை காண இல்லை. :D

நல்லது. அது உங்கள் பதிவுக்கு மேலும் முழுமை சேர்க்க முனையும் என்று நினைக்கிறேன்.

குருவிகள் பற்றி இங்கு சோழியான் அண்ணன் போன்றவர்கள் நினைவுகூறுவதால் அவரைப் பற்றி அறிந்திருப்பீர்கள் என்பதால் குறிப்பிடவில்லை..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய அன்பான செல்வங்ககளுக்கு ,

முக்கியமாக முரளிக்கும் , நெடுக்ஸ்சிற்கும் யார் கண் பட்டதோ தெரியாது .

செத்தல்ம் மிளகாயை மூன்று தரம் , தலையை சுத்தி தண்ணீருக்குள் போடுங்கோ ......

Link to comment
Share on other sites

நிறைய உறுப்பினர்களையும் அவர்களின் முகமூடிகளையும் தனித்தனியாக பகுத்தாய்ந்து எழுதிய முரளிக்கும் வாழ்த்துக்கள்.... :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.