Jump to content

“சிலோன் முதல் ஈழம் வரை“ - Rajpriyan தமிழ்நாடு, India


sOliyAn

Recommended Posts

(நன்றி: மனசாட்சி எனும் வலைப்பூவில் இருந்து..!!)

 

“சிலோன் முதல் ஈழம் வரை“ அறிமுகம்.

 
2008ல் ஈழத்தமிழர்கள் மீதான ஈர்ப்பில் “சிலோன் முதல் ஈழம் வரை“ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை தொகுத்தேன். 2009ல் போரின் உச்சத்தால் அதை அப்படியே மூடிவைத்துவிட்டேன். முள்ளிவாய்க்கால் போருக்குபின் 2012ல் தொகுப்பின் இறுதி பகுதியை முடித்திருந்தேன். 

புத்தகத்தின் உள் தலைப்புகள்..........

1.இலங்கை வரலாறு.
2.சுதந்திர தீவான இலங்கை.
3.மலையக மக்களின் வாழ்வும் துயரமும்.
4.இன கலவரம்.
5.ஆயுத குழுக்கள்.
6. விடுதலைப்புலிகள்.
7. இந்தியாவி (ல்) ன் காதல்!.
8. இராஜிவ் காந்தி கொலை!.
9. தமிழகத்தின் நிலை.
10. சண்டையும் சமாதானமும்.
11. தமீழிழம் நோக்கி . . . . .
12. தளபதிகள் - துரோகிகள். 
13. நான்காம் கட்ட ஈழப்போர் (முள்ளிக்கால்வாய் யுத்தம்).
14. உலக மக்களின் கண்களை திறந்த முத்துக்குமார். 
15. இனி………..

என்ற தலைப்புகளில் தொகுத்திருந்தேன். புத்தகமாக போட முயன்றபோது 2009க்கு பின் ஈழம், விடுதலைப்புலிகள், ஈழ போராட்டத்தில் தமிழக அரசியல் களம் பற்றி எண்ணற்ற புத்தகங்கள் வந்திருந்ததால் அந்த முயற்சியை கைவிட்டுவிட்டேன். 

தொகுத்தது பயனில்லாமல் போய்விடக்கூடாது என்பதற்காக அதனை அப்படியே முகநூலிலும், மனசாட்சி என்ற வலைத்தளத்திலும் பதிவேற்றம் செய்ய முடிவு செய்துள்ளேன். படித்துப்பாருங்கள்........... உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்............

 


1. சிலோன் முதல் ஈழம் வரை ( இலங்கை வரலாறு.)

 


 
eelam.gif

இந்திய பெருங்கடலில் இந்தியாவிற்கு கீழே உள்ள குட்டி தீவு. நாட்டு கத்தரிக்காய் வடிவில் உள்ள பிரதேசம். லங்கா தீபம்நாகதீபம்தாமதீபம்ஸ்ரீலங்கா என்றும்கிரேக்கர்கள் சின்மோண்டு சேலான்தப்ரபேன் என்றும்அரேபியர்களால் செரெண்டிப் என்றும்ஆங்கிலேயர்களால் சிலோன் என்றும் அழைக்கப்பட்டது. 1947க்கு பின் இலங்கை என அழைக்கப்படும் தீவின் வரலாறு 2500 ஆண்டுகள் பழமையானது. ராவணன் வாழ்ந்தான்சீதையை கடத்தினான்ராமன் பாலம் அமைத்தான் எனக்கூறப்பட்டாலும் கி.மு.6ம் நூற்றாண்டிலிருந்து தான் அந்நாட்டின் வரலாறு ஓரளவு சிங்களர்களால் உருவாக்கப்பட்ட மகாவம்சம் என்ற நூல் மூலம் கிடைக்கிறது.
 
இலங்கையின் பூர்வகுடிகளாக இயக்கர்நாகர்வெத்தா (வேடன்காட்டுவாசிகள்) வாழ்ந்து வந்துள்ளனர். இந்தியாவின் சில பகுதிகளிலிருந்து குறிப்பாக தமிழகத்திலிருந்து வணிக நோக்குடன் பலர் சிலோன் போய்வந்துள்ளனர். கி.மு.5ஆம் நூற்றாண்டில் தமிழ் வணிகர்கள் இலங்கையின் மாந்தோட்ட துறைமுகத்திற்கு போனவர்கள் பின் குடும்பத்துடன் நிரந்தரமாக குடியேறியுள்ளார்கள். அதே காலகட்டத்தில் வட இந்தியாவிலுள்ள கலிங்க நாட்டை சேர்ந்த 18 வயதே ஆன விஜயன் என்ற இளவரசனின் தவறான நடத்தையால் கடுமையான கோபம்கொண்ட மன்னன் விஜயனை நாடு கடத்தியுள்ளான். கப்பலில் 700  பேரோடு பயணம் செய்தபோது கடல் கொந்தளிப்பால் கப்பல் இலங்கையின் தம்பலகாமத்தில் தரை தட்டியுள்ளது. கப்பலில் இருந்து இறங்கியவர்கள் அங்கேயே குடிசை போட்டு வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களுக்கு தலைவனாகவும் விஜயனே இருந்துள்ளான். விஜயன் தனக்கு மனைவி வேண்டும் என இலங்கையில் வாழ்ந்த ஆதிவாசியான இயக்கர் தலைவி குவேனியை மணந்துக்கொண்டுள்ளன். இவர்கள் இல்லற வாழ்வில் குவேனி 2 குழந்தைக்கு தாயாகியுள்ளாள்.
 
சிறு சிறு கூட்டங்களோடு சண்டை போட்டு நான் தான் பெரிய ஆள். இனி நான் தான் உங்களது தலைவன். இப்பகுதிக்கு நான் தான் ராஜா என பிரகடணப்படுத்திக்கொண்டு ஆட்சி செய்து வந்துள்ளான் விஜயன். காலப்போக்கில் இலங்கை மன்னனாக விஜயன் முடிசூடிக்கொள்ள முயன்றபோது பட்டத்துக்கு ராணி தேவைப்படுகிறாள். ராணியாக போகிறவள் அரச குடும்பத்தை சேர்ந்தவளாக இருக்க வேண்டும் என நினைத்த விஜயன் ஆதிவாசி குவேனியை துரத்திவிட்டு பாண்டிய நாட்டு ராஜகுமாரியை மணக்கிறான். மன்னனான விஜயன் தான் இலங்கை வரலாற்றில் முதல் அரசன். இலங்கையின் பூர்வ குடிகளான ஆதிவாசிகளுக்கும் வட இந்தியாவிலிருந்து வந்தவர்கள் கூட்டு சேர்ந்ததின் விளைவாக உருவானது தான் சிங்களர் இனமே. முதல் அரசனான விஜயன் காலத்தில் சைவ கடவுள் தான் இலங்கையை ஆக்ரமித்திருந்தது. விஜயன் கி.மு.513 முதல் 504 வரை ஆண்டபோதும் அதற்கு பின்னும் சேரசோழபாண்டிய படைகள் இலங்கையில் புகுந்து அரசாண்டது.
 
கி.மு.2 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பௌவுத்தம் இலங்கை தீவுக்குள் மகிந்தா தேரரா என்ற அரசன் மூலம் நுழைகிறது. மன்னன் பின்பற்றும் மதம் என்பதால் அரச அதிகார வர்க்கத்தால் நாட்டு மக்களிடம் பௌத்தம் தீவிரமாக பரப்பப்படுகிறது. கி.மு.4ஆம் நூற்றாண்டில் நேபாளத்திலுள்ள லூம்பினி என்னுமிடத்தில் அரசவம்சத்தில் பிறந்து அரசனாக வாழ்ந்த கவுதம சித்தார்தர் (கி.மு.566-கி.மு.486) தனது 16வது வயதில் யசோதரையை மணந்தார். பின் வாழ்க்கையை வெறுத்து தனது 29வது வயதில் சந்நியாசி ஆனார். அரதகலமாகுத்ரகா என்பவர்களை குருவாக ஏற்று 35வது வயதில் இந்தியாவின் பீகார் மாநிலம் காயை என்னுமிடத்திலுள்ள போதிமரத்தடியில் ஞானம் பெற்றார். அவரின் வாழ்நாள் முழுவதும் இந்தியாவை வலம் வந்து கடவுளுக்கு உருவம் இல்லை என கூறினார். அவர் காணும் மனிதர்களிடம் எல்லாம் அஹிம்சையை போதித்தார். மக்களிடம்,நற்காட்சிநல்லெண்ணம்நன்மொழிநற்செய்கைநல்வாழ்க்கைநன்முயற்சிநல்ல பழக்க வழக்கங்களை கடைப்பிடி,தியானம் என 8 நெறிமுறைகளை போதித்தார். புத்தர் சந்நியாசியான பின் 3 முறை இலங்கை சென்று வந்தார் என கூறப்படுகிறது. வாழ்நாள் முழுவதும் கடவுளுக்கு உருவம்மில்லை என போதித்தவரை அவர் இறந்தது போன பின் அவரையே கடவுளாக்கி அவரது உருவத்தை வணங்குகிறார்கள் அவரை பின் பற்றுபவர்கள்.
 
கி.மு 2ஆம் நூற்றாண்டில் இந்தியாவை ஆண்ட அசோக மன்னர் கலிங்க போரில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் தன் ரதத்தில் ஏறி போர்களத்தை சுற்றி பார்த்துக்கொண்டே வந்தார். அவர் சென்ற பாதை முழுவதும் இரண்டு புறத்திலும் லட்சகணக்கான போர் வீரர்கள் இறந்து போயிருந்தார்கள். இதை கண்டு மனம்வெறுத்து போன அசோகர் இனி போர் வேண்டாம் என முடிவு செய்து ஆன்மீகத்தின் மீது நாட்டம் செலுத்தினார். புத்தரின் கொள்கைகளை போதனைகளை அறிந்தவர் பௌத்தத்துக்கு மாறினார். புத்தரின் கொள்கைகள் மீது தீவிர காதல் கொண்டு தன்னை சார்ந்தவர்களையும் பௌத்த மதத்திற்க்கு வரவைத்தார். தன் மகன் மகேந்திரன்மகள் சங்கமித்ரையை பௌத்த மதத்தை பரப்பச்சொல்லி இலங்கைக்கு அனுப்பினார். மகேந்திரன் இலங்கையின் பல பகுதிகளுக்கு சென்று பௌத்த மதத்தை பரப்பினார். அநுராதபுரத்தை அடுத்த மிசாகா என்ற மலை மேல் தங்கி பௌத்த கருத்துக்களை பரப்பிவந்தார். அப்போது அனுராதபுரத்தை தலைநகராக கொண்டு ஆட்சி செய்து வந்த தேவனம்பிட்சா (கி.மு 247-கி.மு207) என்ற மன்னன் தனது படையினரோடு மிசாகா மலைக்கு வந்து மகேந்திரனை சந்தித்தார். மன்னன் உட்பட படை வீரர்களுக்கு பௌத்த கருத்துக்களை எடுத்துச்சொன்னார் மகேந்திரன். கருத்துக்களை கேட்ட மன்னன் தனது படை வீரர்கள் உட்பட 40 ஆயிரம் பேரோடு பௌத்த மதத்திற்க்கு மாறினர். பின் படிப்படியாக இலங்கை தீவில் பௌத்தம் வளர்ச்சி வேகமானது.
 
பௌத்தம் இலங்கையில் பரவுவதற்க்கு முன் சிங்களர்கள் முருகன்சிவன்பார்வதி போன்ற கடவுள்களை வணங்கி வந்தனர். பௌத்தம் நுழைந்த பின் மற்ற கடவுள்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு புத்தர் முன்னிலைக்கு வந்தார். தற்போது சிங்கள மக்களின் பெரும்பான்மை மதம் பௌத்தம்சிங்கள மக்களில் கொஞ்சம் பேர் முருகனை வணங்குகின்றனர். ஏழ்மையானவர்கள் சிலர் கிருஸ்த்துவ மதத்தையும் பின்பற்றுகின்றனர். ஆட்சியாளர்கள் யாராகயிருந்தாலும் பௌத்தத்தை மதிக்கவில்லை என்றால் பிரச்சனைதான். அதனால் தான் அங்கு ஆட்சி பொறுப்புக்கு வர நினைப்பவர்கள் பௌத்த மதத்துக்கு மாறிவிடுகின்றனர்.
Ceylonesefishermen.jpg
 
 
கி.மு.2ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை பலர் அத்தீவை ஆண்டாலும் கி.மு.205 முதல் கி.மு.161 வரை இலங்கை முழுவதையும் அனுராதபுரத்தை தலைநகராக கொண்டு ஆண்ட தமிழ்மன்னன் எல்லாளன் நீதியானசிறப்பான ஆட்சி அமைத்துள்ளான். எல்லாளன் இந்துவாக இருந்தாலும் பெரும்பான்மை மதமான பௌத்தத்தை மதித்து ஆட்சி செய்துள்ளான். கி.மு.161ல் வயது முதிர்ந்த எல்லாளன் நடக்கமுடியாமல் இருந்தபோது சிங்கள இளவரசனான துட்டகாபினி படை திரட்டி வந்து எல்லாளனை தோற்கடித்து சிம்மாசனம் ஏறினான்.
 
                இதே காலகட்டத்தில் தீராத நோயை தீர்ப்பதற்காக தமிழகத்திலிருந்து இலங்கையின் வடபகுதிக்கு மாருதப்பிரவை என்ற இளவரசி வந்து தங்கி சிகிச்சை எடுத்தபோது அந்த பகுதியின் குறுநில மன்னனாக இருந்த உக்கிரசிங்கசேனன் மீது காதல் வயப்பட்டு அவனை மணம் புரிந்துக்கொண்டுள்ளாள். அடங்காப்பற்றுப் பகுதியை ஆண்ட உக்கிரசிங்கசேனன்க்கு ஆண் வாரிசு பிறந்தது அவனுக்கு இந்தியாவின் மதுராபுரியில் இருந்து பெண்ணெடுத்த போது மணப்பெண்ணுடன் நிரந்தரமாக தங்க அங்கிருந்து 60 வன்னியர்கள் உடன் வந்துள்ளார்கள்.
 
                கால ஒட்டத்தில் அடங்காப்பறிலே வாழ்ந்த பூர்வ குடிகளான ஆதிவாசிகலால் மன்னருக்கு பல தொல்லைகள் வர அவர்களை அடக்க மதுராபுரியில் இருந்த வாட்டாசாட்டமான போர் பயிற்சி பெற்ற 24 வீரர்கள் அடங்காப்பற்றுக்கு வந்தனர். வந்தவர்கள் ஆதிவாசிகளை அடக்கினர் பின் வருங்காலத்தில் பிரச்சனை வந்தால் சமாளிப்பதற்க்காக அவர்களை தன்னுடனே குடியமாத்தியுள்ளான் மன்னன்.
 
கி.மு.200 முதல் கி.பி.1000 வரை இலங்கையின் தலைநகராக அனுராதபுரம் இருந்தபோது உள்நாட்டிலேயே பல மன்னர்கள் தங்களுக்குள் போர் புரிந்துக்கொண்டு வெற்றி பெறுவோர் ஆட்சி செய்வது. தோற்ற மன்னன் படை திரட்டி மீண்டும் போர் புரிந்து ஆட்சியை பிடிப்பது என இருந்துள்ளனர். இந்தியாவின் சேரர்சோழர்பாண்டியர்கள்வட இந்திய மன்னர்களும் இலங்கை தீவு மீது படையெடுத்து வெற்றி பெற்றபின் போர் வெற்றிக்கு காரணமான தளபதியை மன்னராக்கி அங்கிருந்து வரி வாங்கி வந்துள்ளனர்.
 
1000 ஆண்டுகளுக்கு முன் அனுராதபுரம் தலைநகராக இருக்கும்போது வாணிபம் செய்ய அரேபியாவிலிருந்து வந்த முஸ்லீம்கள் இலங்கையில் தங்கியிருக்கும்போது தங்களுடன் பர்தா போட்ட பெண்களை அழைத்து வராததால் கவுன் போட்ட தமிழ்சிங்கள பெண்களை மணந்துக் கொள்ள ஆரம்பித்தனர். அதிகமாக சிங்கள பெண்களையே திருமணம் செய்துக்கொண்டனர். இந்த கூட்டு மூலம் உருவான இலங்கை முஸ்லிம் இனத்தை இலங்கையில் சோனகர் என அழைக்கப்படுகிறார்கள். இவர்களின் தற்போதைய முக்கிய தொழில விவசாயம், 93% பேர்க்கு தாய்மொழி தமிழ்வாழ்வு பகுதி கிழக்கிலங்கை. தென் தமிழக முஸ்லிம்கள் சிலோன் போனபோது அவர்களும் கிழக்கிலங்கையில்தான் குடியேறினார்கள் அவர்களும் சோனகர் என்றே அழைக்கப்பட்டனர்.
 
தமிழகத்தின் தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலைமன்னார்க்கும் இடையே 22 கடல் மைல் தான் என்பதால் அடிக்கடி இலங்கை மீது 11 ஆம் நூற்றாண்டில் சோழ மன்னன் ராஜேந்திரனும்13 ஆம் நூற்றாண்டில் கலிங்க மன்னன் படையெடுத்து வென்றபோது நூற்றுக்கணக்கான தமிழர்கள் தீவில் குடியேறினர். தமிழகத்திலிருந்து பலர் குடியேற ஆரம்பித்தார்கள். இதனால் வடபகுதியான யாழ்பாணம்மன்னார்கிளிநொச்சிதிருகோணமலைஅனுராதபுரம் வரை தமிழர்கள் பரவியதால் சிங்களர் கிழக்கை நோக்கி அவர்களாகவே நகர ஆரம்பித்தார்கள்.
 
இதுவே காலப்போக்கில் இலங்கை 3 பிரிவாக பிரிந்தது. தமிழரை அதிகமாக கொண்ட வடப்பகுதியான யாழ்ப்பாண ராஜ்ஜித்தை நல்லூரை தலைநகராக கொண்டும்தென்னிலங்கையை கோட்டை ராஜ்ஜியமென்றும் (இங்கு சிங்களர் அதிகம்),தமிழர்-சிங்களர் என சரிசமமாக வாழ்ந்த மத்தியபகுதியை கண்டி ராஜ்ஜியம்மென 3 பிரிவாக பிரித்தது. இந்த மூன்று ராஜ்ஜிய மன்னர்களும் தமிழகத்தின் சேரர்-சோழர்-பாண்டியர் போல சில பிரச்சனைக்காக போர் புரிந்துக்கொண்டனர். 
Ceylonese+Group+by+a+Tree+-+Ceylon+%2528
 
 
இந்தியாவை போலகுறிப்பாக தமிழகத்தை போல இலங்கையின் பெண் சமூகம் கிடையாது. தமிழரோசிங்களரோ,சோனகரோ எந்த சமூகமாக இருந்தாலும் பெண்கள் தான் குடும்ப தலைவர். ஆண்கள் அவர்களின் பாதுகாவலரே. அதோடு திருமணம் ஆனதும் பெண் வீட்டோடு போய் மாப்பிள்ளை நிரந்தரமாக தங்கிவிடுவார். கல்யாணத்துக்கு பின் அதுதான் அவரின் வீடு. (பொறந்த வீட்டுக்கு போன சட்டுபுட்டுன்னு மனைவி வீட்டுக்கு வந்துடுனுமாம்). சோனகர் இன ஆண்கள் பெண்ணுக்கு வரதட்சணை தந்து திருமணம் செய்துக்கொண்டு மனைவியுடன் போய்விடுவர். சிங்கள பெண்கள் இன்னும் ஒரு படிமேலே. சிங்கள பெண்கள் பல ஆண்களை மணந்துகொள்ளும் வழக்கம் உண்டு. கீழ்மட்ட ஏழை சிங்கள தரப்பில் அப்பழக்கம் குறைந்து வருகிறது.
 
                கி.பி.1242ல் உருவான யாழ்ப்பான ராஜ்ஜியத்தை கி.பி.1450ல் ஆண்ட கனகசூரிய சிங்கையாரைஅதே ஆண்டில் உருவான தென்னிலங்கையின் கோட்டா ராஜ்ஜியத்தின் மன்னன் செண்பகப்பெருமாளின் தளபதி சப்புமால்குமாராய 1450ல் படையெடுத்து யாழ்ப்பாணத்தை கைப்பற்றிக்கொண்டார். தப்பியோடிய யாழ்ப்பாண மன்னன் 17 ஆண்டுகள் கழித்து இந்தியாவிலிருந்து உதவிபெற்று படையெடுத்து 1467ல் இழந்த நாட்டை மீட்டான்.
 
                                கி.பி.1505ல் டொன் லொரேன்கோ டி அல்மேதா என்ற தளபதியின் தலைமையிலான போர்த்துகீசிய குழு புதிய நாடுகளை வணிக நோக்கத்தில் தேடிபோன போது புயலில் சிக்கிய கப்பல் கொழும்பு துறைமுக கறையில் ஒதுங்கியுள்ளது. அந்த  பகுதி கோட்டோ மன்னின் கீழ் இருந்தது. வணிகம் செய்ய கோட்டோ மன்னனிடம் அனுமதி பெற்றனர். அனுமதி பெற்ற போர்த்துகீசய குழு தென்னிலங்கையில் வாணிபத்தோடு மதப்பிரச்சாரத்தையும் தீவிரப்படுத்தியது.
 
கொழும்பிலிருந்து யாழ்ப்பாண ராச்சியத்துக்குள் புகுந்தும் மதப்பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார்கள். தென்னிந்தியாவில் மதப்பிரச்சார குருவாகயிருந்த பிரான்சிஸ்சேவியர் ஒரு பாதிரியரை யாழ்ப்பாணத்துக்கு ஸ்பெஷலாக அனுப்பிவைத்தார். அந்த பாதிரியரும் யாழ்ப்பாண ராஜ்ஜியத்துக்கு உட்பட்ட மன்னாரில் எதிர்பார்த்ததை விட அதிகமான தமிழர்களை கத்தோலிக்க மதத்திற்கு மதமாற்றம் செய்துவிட்டார். இதை கேள்விப்பட்ட யாழ்ப்பாண ராஜ்ஜிய மன்னன் சங்கிலி 1544ல் மன்னார்க்கு வந்து மதம்மாறிய சுமார் 600 பேருக்கு மரண தண்டனை விதித்தான்.
 
                இதை கண்டு அதிர்ந்த போர்த்துகீசிய பாதிரிமார்கள் தங்களது தலைமை அமைந்த கோவா கவர்னர்க்கு தகவல் சொல்லி சங்கிலியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டனர். கோவா கவர்னரும் சங்கிலியனிடம் பேச்சுவார்த்தை நடத்த தன் தளபதியை ஒருவரை அனுப்பி வைத்தார். பேச்சுவார்த்தைக்கு வந்த தளபதி சங்கிலியன் தந்த சன்மானத்தை பெற்றுக்கொண்டு போய்விட்டான். இதில் அதிருப்தியான கோவா கவர்னர் சங்கிலியன் படைகள் மீது போர் தொடுக்க உத்தரவிட்டார். 1561ல் கொன்ஸ்டன்டீனோ-டி-பிரகன்ஸ என்ற தளபதி யாழ்பணத்தின் மீது படையெடுக்க சங்கிலியன் போர்த்துகீசியர்கள் இடையே சண்டை நடந்தது. போரின் இறுதியில் யாழ்ப்பாண தலைநகர் நல்லூரை போர்த்துகீசியர்கள் கைப்பற்றினர். தப்பிய சங்கிலி தந்திரம் மூலம் மீண்டும் மன்னனாக முயல போர்த்துகீசியர் சங்கிலிய நம்பவைத்து கொன்றனர். சில கடுமையான நிபந்தனைகளை போட்டு யாழ்ப்பாண மன்னனாக புவிராஜபண்டாரம் என்பவனை அமர்த்தினர்.
c.1890%2527s+PHOTO+INDIA+CEYLON+MEN+IN+R
 
 
        இதன்பின் கோட்டோ ராஜ்ஜியத்தின் மீது பார்வை செலுத்திய போர்த்துகீசியர் ராஜ்ஜிய அரசியலின் புகுந்தவர்கள் 1580ல் கோட்டோ மன்னனுக்கு அடுத்து அரசால வாரிசு இல்லாததால் பணத்தை தந்து கோட்டோ ராஜ்ஜியத்தை போர்த்துகீசிய அரசர் பேரில் உயில் எழுதி வாங்கிக்கொண்டு நிழல் ஆட்சி செய்ய ஆரம்பித்தார்கள். 1597 கோட்டோ மன்னன் இறந்ததும் தென்னிலங்கை போர்த்துகீசயர் வசமானது நிர்வாகமும் செய்ய ஆரம்பித்தார்கள். அதேபோல் 1590ல் யாழ்பாண மன்னரான புவிராஜ் பண்டாரம் போர்த்துகீசியர்களின் பேச்சை மீறீ செயல்பட்டார். 1591ல் புவிராஜ் பண்டாரத்தை அந்தரோ என்ற தளபதி படையெடுத்து வென்றான். புவிராஜ் பண்டாரத்தை வென்று 1620 வரை பேருக்கு சிலரை மன்னனாக வைத்திருந்தனர். அதன்பின் 1620 முதல் யாழ்ப்பாணத்தை நேரடியாக ஆட்சி செய்ய ஆரம்பித்தனர் போர்த்துகீசியர். அப்படியும் மத்திய பகுதியை சேர்ந்த கண்டி ராஜ்ஜியம் போர்த்துகீசியர் கண்ணில் படவேயில்லை (அ) கண்டுக்கொள்ளவில்லை.
 
ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த நெதர்லாந்தில் அதிகமாக வாழும் ஒல்லாந்து இனத்தவர்கள் 1630களில் வாணிபம் செய்ய புதிய நாடுகளை தேடி கப்பல் பயணத்தின்போது வழியில் எதிர்ப்பட்ட தீவை கண்டு ஒய்வு எடுத்துவிட்டு செல்லலாம் என இலங்கை பக்கம் ஒதுங்கினார்கள். இலங்கையில் கிடைத்த வைரத்தை கண்டு அங்கேயே வியாபாரம் செய்ய முடிவு செய்து பேச்சுவார்த்தை நடத்தினர். நூம் மட்டும் சுரண்டினால் போதாது ஓல்லாந்தர்களும் சுரண்டிக்கொள்ளட்டும் என வியாபாரம் செய்ய அனுமதி தந்தனர். ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டியது போல என கிராமத்தில் சொல்வார்கள். அதைப்போல போர்த்துக்கீசியர்களிடம் வியாபாரம் செய்ய அனுமதி வாங்கியவர்கள் பின் பேசிப்பேசியே போர்த்துக்கீசியர் வசம்மிருந்த இலங்கை 1638ல் ஒரு ஒப்பந்தம் மூலம் இலங்கை ஒல்லாந்தர் வசமானது. 1638 முதல் 1796 வரை என 156 ஆண்டுகள் தனியாக ஆண்டனர். இவர்கள் காலத்திலும் கண்டி ராஜ்ஜியம் மட்டும் தனி ராஜ்ஜியமாக அடிபணியாமல் இருந்தது.
 
கொள்ளைக்கும் சுரண்டல்க்கும் பேர்போன ஆங்கிலேயர்கள் 1796ல் இந்திய பெருங்கடல் வழியாக கப்பலில் கொச்சிக்கு சென்றுக்கொண்டு இருந்தனர். வழியில் ஒல்லாந்து கவர்னரிடம் திரிகோணமலையில் தங்க அனுமதி கேட்டனர்,முதல்ல தங்கறன்னுவான்அப்புறம் வியாபாரம் பண்ணனூம்பான்அப்பறம் எல்லாத்தையும் புடுங்குவான். நாம போர்த்துக்கீசியர்க்கு செய்ததுபோல ஆங்கிலேயர்க்கு இடம் தந்தோம். நாம போர்த்துக்கீசியர்க்கு செய்தத இவன் நமக்கு பண்ணிடுவான் என யோசித்து தரமுடியாது என ஒல்லாந்து ஆளுநர் கூறிவிட்டார்.
 
என்னை கண்டு பயம்மில்லையாநான் கேட்டே இடம் தர மறுக்கிறாயா என கோபமாகி இலங்கையை ஆண்ட ஒல்லாந்தர்கள் மீது 1801ல் போர் தொடுத்து ஒல்லாந்தர்களை அடித்து துரத்தி விட்டு இலங்கையை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்ய ஆரம்பித்தனர். தனி ராஜ்ஜியம் செய்துக்கொண்டிருந்த கண்டி ராஜ்ஜியத்தை அடிமைப்படுத்த முயன்றனர். கண்டி ராஜ்ய மன்னர் முரண்டு செய்தார். இதனால் ஆங்கிலேயர் கோபம் அடைந்தனர். எங்கள் அதிகாரத்துக்கு கீழ் வா கண்டி மன்னரிடம் பேசினர். கண்டி மன்னார் மசியவில்லை.
 
                1637ல் கண்டி ராஜ்ஜியம் ஆரம்பமானது. போர்த்துகீசியர்ஒல்லந்தர் காலங்களிலும் சுதந்திர ராஜ்ஜியமாக இருந்தது. கண்டி வீரர்கள் போர் புரிவதில் வல்லவர்கள். 1707ல் பதவியேற்ற வீரபராக்கிரம நரேந்திரசிங்கன் மதுரை நாயக்கர் வம்ச பெண்ணை மணந்திருந்தவனுக்கு குழந்தை பாக்கியமில்லை. இதனால் தமிழ் சமூகத்திலிருந்த மருமகட்பிள்ளை என்ற வழக்கப்படி மனைவியின் சகோதரன் ஸ்ரீவிஜயராஜசிங்கனை மதுரையிலிருந்து வரவைத்து 1739ல் அரசனாக்கினான். அதன்பின் கண்டி ராஜ்ஜியமென்பது கண்டி நாயக்கர் ராஜ்ஜியமானது. 1803ல் பதவியாசை கொண்ட கண்டி முதலமைச்சர் பிலிமத்தலா ஆங்கியேலருடன் போரிடுமாறு மன்னன் ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கன்னை (கண்ணுசாமி) தூண்டிவிட போர் ஆரம்பமானது. தோல்வி வருகுது என்றென்னி மன்னன் தப்பியோட தளபதிகள் வீரத்துடன் போரிட்டு நாட்டை காத்தனர். மீண்டும் வந்து பதவியேற்றான் ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கன். அடுத்தடுத்து முதலமைச்சர் பிலிமத்தலா மன்னனுக்கு துரோகம் செய்ய அரசனால் கொல்லப்படுகிறான். 
 
நம்வூரில் அரசியல் தலைவர்கள் பதவியில் இருக்கும் தங்களது மாவட்ட “தலைவர்கள்“கள் இறந்து போனால் அவரின் பிள்ளைக்கு பதவி தருவதை போல. மன்னர் பிலிமத்தா மருமகன் எகலப்பொலைக்கு மாமனார் வகித்த முதலமைச்சர் பதவியை தந்தார். இவனும் மாமனாரைப்போல துரோகியாக செயல்பட்டான். இவனது தூண்டுதலால் விக்கிரம ராஜசிங்கன் ஆங்கிலேயர் இடையே 1815 பிப்ரவரி 10ல் மீண்டும் ஏற்பட்ட போரில் கண்டி நாயக்க மன்னன் தோற்று போனார். கண்டி ராஜ்ஜியத்தை பிடித்த ஆங்கிலேயர் மார்ச் 2ல் மன்னனோடு ஒப்பந்தம் ஒன்றை போட்டுக்கொண்டு மன்னனாகயிருந்த ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கன்அவரது இரண்டு மனைவிகள் உறவினர்கள்உதவிக்கு சிலரை தமிழகத்துக்கு நாடு கடத்தினர். தமிழகத்தில் உள்ள வேலூர் கோட்டையில் சிறை வைத்தனர் ஆங்கிலேயர். இலங்கையின் கடைசி ராஜ்ஜியம்மான கண்டி நாயக்கர் ராஜ்ஜியமும் ஆங்கிலேயர் வசமானது. 1832 ஜனவரி 30 தனது 52வது வயதில் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் இறந்தார். அவரை பாலாற்றங்கரையில் புதைத்தனர். மனைவிகள்பிள்ளைகள் கல்லறையும் அருகருகேவுள்ளது. மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. தற்போதும் அவரின் வாரிசுகள் வேலூரில் உள்ளார்கள்
               
1825ல் இருந்து இலங்கையின் குடுமி முழுவதும் ஆங்கியேலர் வசமானது நிர்வாகம் பண்ண ஆங்கிலேயன் திட்டமிட்டே மதம்மொழி ரீதியாக மக்களை பிரித்தார்கள். அந்த பிரிப்பு தான் இன்றுவரை தொடரும் இனகலவரத்துக்கு காரணம்.
 
( புகைப்படம் கூகுள் வழியாக இணையத்தில் இருந்து எடுக்கப்பட்து. புகைப்படம் இணையத்தில் பதிவேற்றம் செய்தவர்களுக்கு நன்றி. )

 

Link to comment
Share on other sites

2. சுதந்திர தீவான இலங்கை. ( சிலோன் முதல் ஈழம் வரை )

 

0012.jpg
 
 
1808 முதல் இலங்கை மக்களுக்கு டாட்டா காட்டிவிட்டு கப்பல் எறிய 1948 வரையென 133 ஆண்டுகள் இலங்கையை ஆண்டக்ஏ ஆங்கிலேயர். அவர்களின் ஆட்சி காலத்தில் தான் சட்டபூர்வமான பல துறைகளை உருவாக்கி அலுவலர்களை நியமித்து நிர்வாகம் செய்யும் முறையை கொண்டு வந்தனர். பிரிட்டிஷ் மகாராணியால் அமைக்கப்பட்ட கோல்புறாக் காமெரன்னின் குழு அறிக்கைப்படி 15 பேரை கொண்ட சட்ட நிரூபன சபையும்6 பேரைக் கொண்ட சட்ட நிர்வாக சபையும் அமைத்தனர். அதில் உத்தியோகப்பற்ற உறுப்பினர்களாக சபையில் ஐரோப்பியர் 3 பேர்சிங்களர்-1தமிழர்-1பறங்கியர்-1 நியமிக்கப்படுவார்கள் என்றவர்கள் ம்ண்த் அமல்படுத்தவும் செய்தார்கள்.
 
இந்த உத்தியோகப்பற்ற சபை உறுப்பினர் பதவியை மக்கள் மத்தியில் பிரபலமாகவும்படித்தவர்களாகவும் பாரம்பரியமிக்க செல்வாக்கான அதிலும் குறிப்பாக தங்களுக்கு சாதகமாக யார் இருப்பார்கள் என்பதை பார்த்தே நியமித்தார்கள் ஆங்கிலேயர். தமிழர்களுக்கான பிரதிநிதியாக முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் குமாரசாமி முதலியார். ஆங்கிலேயர் சொல்வதை கேட்டு சரிங்க அய்யா என எப்போதும் கூறியதால் பலப்பல சலுகைகள் குமாரசாமி குடும்பத்துக்கு கிடைத்தது. தங்கசங்கிலிபதக்கம் ஆகியவை தந்து தொடர்ந்து ஆமாம் சாமி போட வைத்தது பிரிட்டிஷ் அரசு.
 
அதே கோல்புறாக் காமெரன் பரிந்துரைப்படி இலங்கையில் 1868ல் முதலில் காவல் துறையையும்1870ல் பொதுத்துறை1887ல் நீர்பாசன துறையையும்1889ல் வன பாதுகாப்பு துறையும்1890ல் குடியமர்த்தல் துறையையும் உருவாக்கினர். நிர்வாக பணிச்செய்ய பணியாளர்களை தேர்வு செய்தபோது ஆங்கிலேய மூளைகள் இனப்பிரிப்பையும் செய்தது. ஆங்கிலம் கற்று ஆங்கிலேயருடனிருந்த தமிழர்களை 2 ஆம் தரமாக நினைத்ததோடு தங்களை எதிர்த்தே பழக்கப்பட்ட சிங்களர்களுக்கு அரசு பணியில் அதிகமிடம் தந்தனர். 1868ல் 1710 அரசு பணியில் 794 சிங்களவர்கள் இருந்தனர். ஏறக்குறைய அதேயளவு தமிழர்களும்முஸ்லீம்களும் போட்டிபோட்டு பணிக்கு வந்தனர். பிற்காலங்களில் சிங்களவரை விட அரசு பணிகளில் தமிழர்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தினர்.
 
தமிழர் பிரதிநிதியாகயிருந்த குமாரசாமி முதலியார் குடும்ப வழியான பொன்னம்பலம் ராமநாதன் சட்ட நிரூபன சபைக்கு 1879 ஆண்டு தமிழர் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். 1910ல் சபை நியமன உறுப்பினர் என்பது கலாவதியாகி 1911ல் முதல் சட்டசபை தேர்தல் இலங்கையில் நடந்தது. தமிழர்களின் ஒரே பிரதிநிதியாக சட்டசபை சென்ற ராமநாதனுக்கு பிரிட்டிஷ் அரசு பிரபு பட்டம் தந்து தொடர்ந்து ஆதரவாளராக வைத்துக்கொண்டது. ராமநாதனும் ஆங்கிலேயர் மனம் நோகாமல் நடந்துக்கொண்டார்.
 
ராமநாதனின் சகோதரர் பொன்னம்பலம் அருணாச்சலம் ஆங்கிலேயருக்கு எதிராக அடிக்கடி அணல் கக்க ஆரம்பித்தார். 1913 ல் அருணாச்சலம் அரசு பதிவாளராகயிருந்து ரிட்டயர் ஆனதும் 1915 ஐனவரி 29ந்தேதி சமூக சேவை சங்கம் ஆரம்பித்து அடித்தட்டு மக்களுக்காக பணியாற்றியவர்ஆங்கிலேய ஏகாதியபத்தத்தை எதிர்த்து குரல் எழுப்பிக் கொண்டிருந்தார். ஆங்கிலேய அரசை தமிழர் ஒருவர் எதிர்ப்பதை கண்டு மகிழ்ந்தனர்.  சிங்களத்தின் கரவா பிரிவு மக்களால் 1888ல் உருவாக்கப்பட்டு செல்வாக்குடன் இருந்த இலங்கை தேசிய சங்கநிர்வாகிகள். பொன்னம்பலம் அருணாச்சலத்தை தங்களது சங்க வருடாந்திர மாநாட்டில் பேச வைக்கலாம் என முடிவு செய்தனர். தேசிய சங்க நிறுவனர் + பொது செயலாளர் டி.ஆர்.விஜயவர்த்தனாஅருணாச்சலத்தை சந்தித்து பேச அழைத்தார். அவரும் சரியென்றார்.
 
1917 ஏப்ரல் 2ல் நடந்த இலங்கை தேசிய சங்கத்தில் எங்கள் அரசியல் தேவைகள் என்ற தலைப்பில் பேசினார். அதில், “நாட்டை நிர்வாகம் செய்யும் நிர்வாக அதிகாரிகளின் ஆட்சியால் நாங்கள் அதிகாரிகம் இல்லாமல்அவர்களை எதிர்க்கும் திறமை குறைந்தவர்களாய் இருக்கிறோம். எங்கள் மக்களும்நாங்களும் எங்களுக்கு எதுவேண்டும் என கேட்க நினைத்தாளும் அதற்கு தடையாக நிர்வாக அதிகாரிகள் உள்ளார்கள் என கண்டித்ததோடு சுயாட்சி உரிமை வேண்டும் எனப்பேச தேசிய சங்கமோ ஏக வரவேற்பு தந்தது இலங்கை மக்களிடையே ஏக வரவேற்பும் பெற்றது.
 
சுயராட்ஜியம் வேண்டும் என கேட்டு 1917 மே மாதம் வழக்கறிஞர்கள் ஒண்றிணைந்து இலங்கை சீர்த்திருத்த கழகம் ஆரம்பித்து போராடினர். இதே காலகட்டத்தில் நாட்டில் தேசிய சங்கம்சீர்த்திருத்த சங்கம்இளைஞர் கழகம்சிலாபச் சங்கம்யாழ்பாண சங்கம்முஸ்லீம் சங்கம்பறங்கியர் சங்கம் பிரபலமானவைகள் மக்களிடையே செல்வாக்காவும் இருந்தன. மக்கள் பிரச்சனைகள்அரசியல் உரிமை வேண்டி தனித்தனியாக போராடவும் செய்தன.
 
இவைகளை ஒண்றினைத்து பெரிய இயக்கமாக உருவாக்கி கோரிக்கை வைக்கலாம்போராடலாம் என எண்ணிய அருணாச்சலம் எல்லா சங்கங்களிடமும் போய் பேச ஆரம்பித்தார். ஆரம்பித்ததிலேயே முஸ்லீம் சங்கம் முடியாது என்றது. காரணம்அப்போது சிங்களர்-முஸ்லீம் இடையே கலவரம் வந்தது. அதில் சிங்களவர்களுக்கு சாதகமாக தமிழர் பிரதிநிதியாகயிருந்த ராமநாதன் செயல்பட்டதால் உங்களோடு இணையமாட்டோம் எனச் சொல்லிவிட்டது. பறங்கியர் சங்கம் உங்களால எதுவும் முடியாது போய்யா நாங்க வரல எனச் சொல்லிவிட்டனர்.
 
மற்ற 5 சங்கங்களில் இலங்கை தேசிய சங்கமும்யாழ்பாண சங்கமும் இணையலாம் ஆனா நாங்க சொல்றத தான் எல்லாரும் கேட்கனும் என்றார்கள் தனித்தனியாக. காரணம்தேசிய சங்கம் பிரதேச வாரியாக பிரிநிதித்துவம் வேண்டும் என கேட்கிறது. யாழ்ப்பாண சங்கமோபிரதேச வாரியாமெல்லாம் வேணாம் இனவாரியாக மட்டுமே பிரதிநித்துவம் வேண்டும் என கேட்பதால் முரண்பட்டு நின்றன. 2 அமைப்பு தலைவர்களையும் சந்தித்து பேசிப்பேசியே கூட்டத்துக்கு அழைத்து வந்தார் அருணாச்சலம். 1917 டிசம்பர் 15 கொழும்பில் 5 சங்க பிரதிநிதிகள் முக்கிய பிரமுகர்களென 144 பேர் கலந்து கொண்ட கூட்டத்தில்
      1. இனரீதியான பிரதிநித்துவம் இருக்கும்.
      2. உத்தியோகப்பற்ற உறுப்பினர் சபையில் சிங்களர் தமிழர் இடையே சம பலம் இருக்க வேண்டும். என தமிழர்கள் கேட்டதற்கு கூட்டத்திலிருந்த சிங்கள தலைவர்கள் அறை-குறை மனதுடன் தலையாட்டினர். ஆனால் தேசிய சங்க தலைவர்களான ஜேம்ஸ்பிரிஸ்சமவிக்கிரம்எல்.ஆர்.சேனநாயக்கா எதிர்த்தனர். அப்படி எதிர்க்க மற்றொரு காரணமும்மிருந்தது. இனரீதியாக எடுத்துக்கொண்டதால் தமிழர்கள் தம்மோடு சம பலத்துடன் இருப்பார்கள் அது கூடவேகூடாது என எண்ணியதாலே எதிர்த்தனர். பேசிப்பேசியே இறுதியில் வடமாகாணத்தில்-3கிழக்கு மாகாணத்தில்-2,மேல் மாகாணத்தில்-1 பிரதிநிதிகள் இருப்பார்கள் என ஒப்பந்தம் செய்துக்கொண்டார்கள்.
 
1919 டிசம்பர் 11ல் கொழும்பு - டவுன் ஹாலில்5 அமைப்புகள் இணைந்த இலங்கை தேசிய காங்கிரûஸ தோற்றுவித்தனர். இதன் தலைவராக பொன்.அருணாச்சலமே நியமிக்கப்பட்டார். ஒரு தமிழன் கீழ நாமளா என எண்ணிய சிங்கள தலைவர்கள் அருணாச்சலத்தின் பேச்சை மதிக்காமல் செயல்பட்டதோடு தமிழர்களுடன் போட்டிக்கொண்ட ஒப்பந்தத்தை தூக்கி எறிந்தனர். இதனால் 1922ல் தலைவர் பதவியை தூக்கி எறிந்த அருணாச்சலம். தேசிய காங்கிரஸிருந்து வெளியேறி தமிழர் சீர்திருத்த கழகத்தை உருவாக்கினார். அதே ஆண்டு இந்தியா வந்திருந்தவர் இந்தியாவிலேயே காலமானதால் இலங்கையில் ஆங்கிலேய எதிர்ப்புக்கு ஆளில்லாமல் வெற்றிடம் ஏற்பட்டது.
 
அந்த வெற்றிடத்தை நிரப்ப யாழ்ப்பாணம் வடமராட்சியையடுத்து சில கி.மீ. தொலைவிலுள்ள அல்வாய் கிராமத்தில் பிறந்து கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் இயற்கை அறிவியல்சட்டம் படித்து தனது வாத திறமையால் பக்கத்து நாடுகளிலும் போய் வாதாடிய ஜீ.ஜீ.பொன்னம்பலம் தமிழர்களுக்காக போராடவந்தார். 1931 இலங்கைக்கான முதலாவது எம்.பி.தேர்தலில் மன்னார்-முல்லைத்தீவு தொகுதிகளில் நின்றபோது தோற்றவர். 1934 பருத்திதுறையில் நடந்த இடைத்தேர்தலில் வென்றார். 1936ல் 2வது முறையாக நடந்த பொது தேர்தலில் வென்று தமிழர்களுக்காக மட்டுமே பேசினார்.
 
இலங்கையில் தமிழன் பதவிகள் மூலம் அரசாளுகிறான். பெரும்பான்மை சமூகமான நம்மை தமிழன் அதட்டுகிறான்னென்று 1937ல் சிங்கள மகா சபையை தொடங்கிய ந.ர.த.ப. பண்டாரநாயக்கா தமிழர்களுக்கு எதிராக அணல் கக்க தொடங்கினார்.  1939ல் அரசவை தலைவராகயிருந்த ஐக்கிய தேசிய கட்சியின் அவை தலைவரான ப.ந.சேனநாயக்காவிடம்,
      1. இந்தியா வம்சாவழியினரை நாடு கடத்த வேண்டும்.
      2. அரசாங்க பணியிலுள்ள தமிழனை அடித்து துரத்த வேண்டும். என கோரிக்கை வைத்தார். புன் முறுவலோடு செய்யலாம் என சேனநாயக்காவும் சொல்ல தமிழர்களிடம்மலையக மக்களிடமும் அதிர்ச்சி ஏற்பட்டது.
 
அரசவை தலைவரிடமும்ஆங்கிலேய அதிகாரிகளிடம் பேசினர் தமிழர் தலைவர்கள். தமிழர்களுக்கான சாதகமான பதில் இல்லை என்றதும்இலங்கையின் இந்திய மக்கள் பிரதிநிதிகளாக வைத்தியநாதனும்பெரய்ராவும் காந்தியிடம் தங்களுக்கான ஆபத்தை கூறி நீங்கவரனும் எங்களுக்காக போராடனும் என கோரிக்கை வைத்தனர்.
 
காந்தியோ இந்தியாவை விட்டு ஆங்கிலேயனை துரத்தனும் என தீவிர போராட்டத்தில் இருந்ததால் தனது பிரதிநிதியாக நேருவை இலங்கை அனுப்பிவைத்தார். இலங்கை வந்த நேரு இந்தியர் சார்பாக ப.ந.சேனநாயக்காவை சந்தித்து பேசியபோது சேனநாயக்காவின் பேச்சுசெயல் எல்லாம் சிங்கள மக்களுக்கு சாதகமாகவே இருந்ததை உணர்ந்த நேரு தொங்கிய முகத்தோடு வெளியே வந்தவர் நம் மக்களுக்காக தனியாக ஒரு அமைப்பு வேண்டும் எல்லாரும் ஒண்றிணையனும் என அறிவித்தவர் இலங்கையின் இந்தியர்களிடையே மிக பிரதானமானஇந்திய இலங்கை தேசிய காங்கிரஸ்இலங்கை இந்திய மத்திய சபை உறுப்பினர்களை ஒண்றிணைத்து 25 ஜீலை 1939ல் இலங்கை இந்திய காங்கிரஸ்ûஸ தொடங்கினார். ஒன்றிணைந்த இலங்கை இந்தியர்களின் போராட்டம் ஆரம்பமானது. அதேபோல் தொழிலாளர்களுக்கான மலையக பகுதியில் இடதுசாரிகளும் குரல் எழுப்பினர். லங்கா சமாஜக் கட்சியிலிருந்து பிரிந்த ஐக்கிய சோஷலிசக் கட்சியும் குரல் எழுப்பிக்கொண்டிருந்த நிலையில் 1943ல் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது.
Amirthalingam.gif அமிர்தலிங்கம்.  
 
 
அதே காலகட்டத்தில் காலணி நாடுகளுக்கு சுதந்திரம் தரப்போகிறோம் என பிரிட்டிஷ் அரசு அறிவித்தபோது இலங்கையில் பல அரசியல் கட்சிகள் உருவாயின. 1944ல் சுதந்திரம் தருவது பற்றி பரிசீலிக்க வந்த சோல்பாரி குழுவிடம் சிங்களர்களுக்கு 50%மும்தமிழர்கள்சோனர்கள்பறங்கயிர்க்கு 50% ஒதுக்கீடு வேண்டும் என கோரிக்கை வைத்தார் தமிழ்ர்கள் சார்பாக பேசிய ஜீ.ஜீ.பி.
 
பிரிட்டிஷ் குழுவே சிங்களர்க்கு 75% மற்றவர்களுக்கு 25% உரிமையென்றது. இதையறிந்த ஜீ.ஜீ.பி 1944 ஆகஸ்ட் 29ந்தேதி தமிழர்களுக்காக இலங்கை தமிழ் காங்கிரûஸ உருவாக்கி குரல் கொடுத்தார். தமிழர் அமைப்புகளும்அரசியல் கட்சிகளும் ஒற்றுமையில்லாமல் தனித்தனியாக கோரிக்கை எழுப்பிக் கொண்டிருந்த நிலையில் ஆங்கிலேயர் தன் எண்ணப்படி இட ஒதுக்கீடு தந்தவர்கள். சுதந்திரத்துக்கு போராடாத சிங்கள-தமிழர்-சோனகர்களிடம் 1948 பிப்ரவரி 4ந்தேதி நாங்க போறோம் உங்க நாட்டை நீங்களே பாத்துக்குங்க எனச்சொல்லியபடி டாட்டா காட்டி விட்டு கப்பல் ஏறிபோய்விட்டனர் பிரிட்டிஷார்.
 
சுதந்திர இலங்கையின் முதல் பிரதமராக சிங்கள நலனில் மட்டுமே அக்கறை செலுத்தியஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த சேனநாயக்கா இருந்தார். இவர் தான் இலங்கையின் தேசபிதா என அழைக்கப்படுகிறார்.
 
சுதந்திரத்துக்கு முன் வரை இலங்கûயின் அனைத்து சமூக மக்களுக்காக சில கட்சிகள் மட்டுமே இருந்தன. 1950க்கு பிறகு சிங்களர். தமிழர்சோனகர்மலையக மக்களுக்காகயென்று பல கட்சிகள் உருவாயின. எல்லாமே த்ந்ல்ர்ச் ஸ்டைலில் ஒரு கட்சியிலிருந்து உடைந்து-பிரிந்துபுதுசாக என உருவானது. இலங்கையிலும் நடிகர் ஒருவர் கட்சி ஆரம்பித்தார். 

 

Link to comment
Share on other sites

3. மலையக மக்களின் வாழ்வும் துயரமும். ( சிலோன் முதல் ஈழம் வரை தொடர் )

 
530370_10151296459683482_1405162955_n_zp

 
 
1796இம் இண்டு இலங்கையை தங்களது ஓரே தலைமையின் கீழ் கொண்டு வந்த ஆங்கியேலர் தங்களது வசதிக்காகவும்தாங்கள் நிம்மதியாக ஆட்சி செய்ய மக்களை இனரீதியாக பிரிக்கும் சூழ்ச்சியை சரியாக செய்தார்கள். தங்களது கிருஸ்த்துவ மதத்தை இலங்கையில் விதையாக தூவ ஆரம்பித்தார்கள். பௌத்த மதத்தை ஏற்ற சிங்களர்கள் கிருஸ்த்துவத்தை ஏற்க மறுத்தனர். இனால் தமிழர்களோ யாழ்ப்பாணம்மன்னார்திரிகோணமலைமலைநாடு பகுதிகளில் இருந்த மக்கள் வர்ணாசிரம கொடுமைவறுமையால் ஓடிப்போய் சேர்ந்தார்கள். கிருஸ்த்துவ மதத்துக்கு வந்தால் கல்வி,வேலையில் முன்னுரிமை என பாதிரியார்கள் கூறியது மற்றொரு காரணம். பிசாசு வாழறயிடம் எனச்சொல்லி கோயில்களையும் இடிக்க ஆரம்பித்தது பிரிட்டிஷ் ஆரசு.
 
ஆங்கிலேய மிஷினரிகளில் கல்வி கற்ற தமிழர்களின் பிள்;ளைகள்பிரிட்டிஷார் பேசிய ஆங்கிலத்தையும் கற்றுக்கொண்டு ஆங்கிலேயர்களுடன் நெருக்கமாகவும்அரசு பணி செய்யவும் செய்தனர். இது சிங்கள மக்களிடையே கோபத்தையும்எரிச்சலையும் உண்டாக்கியது. இதனால் ஆங்கிலேயரை அதிகமாக எதிர்த்தனர் சிங்கள மக்கள். அப்படியும் ஆங்கிலேயர்க்கு சிங்கள மக்கள் மீது தான் ஆதிக ஈடுபாடே. காரணம் தீவில் அதிகளவில் வாழ்வோர் சிங்கள மக்கள் தான் என்பதாலும் பிற்காலங்கள் வியாபாரத்தில் பிரச்சனை வந்தால் சிங்கள மக்கள் துணை வேண்டும் என்பதாலே எதிர்த்தவர்களை நண்பர்களாக கையாண்டனர்.
 
இலங்கையை வாணிப நோக்கில் ஆராய்ந்த ஆங்கிலேயர் யாழ்பாணத்தில் புகையிலைநெல்பயிரும்குடநாட்டில் யாழ்ப்பாண சுருட்டுக்கு இலங்கையின் மேற்கு-தெற்குதென் தமிழக பகுதிகளின் வரவேற்பு அதிகம் என்பதை அறிந்தனர். அதனல் அவைகளை ஏற்றுமதி செய்தனர். போதிய வருமானம் வராததால் இலங்கை மலை பகுதிகளில் குறிப்பாக குடநாட்டில் காபி பயிரிடலாம் என எண்ணிய ஆங்கிலேயே கம்பெனி பயிர் செய்வதற்காக இந்தியாவில் இருந்து தொழிலாளிகளை அடிமைகளாக கொண்டு வர முடிவு செய்தனர்.
 
1820ல் இந்தியாவில் ஏற்பட்ட கொடிய பஞ்சத்தால் தமிழக பகுதிகளில் மக்கள் பசியால் இறப்பதை கண்டு ஆங்கிலேய கம்பெனி அதிக கூலிகுறைந்த வேலையென மதுரைதிருநெல்வேலிதஞ்சாவூர்திருச்சி ஜில்லாக்களிலிருந்த மக்களிடம் பிரச்சாரம் பண்ணி ஏழை மக்களை இலங்கைக்கு கொண்டு போயினர். 1824ல் தமிழகத்திலிருந்து அழைத்து வரப்பட்ட 16 குடும்பங்கள் மலையத்தில் தங்க வைத்தது பிரிட்டிஷ் அரசு. எதிர்பார்ப்போடு தமிழகத்திலிருந்து கிளம்பிய மக்களை நடராஜா சர்வீஸ் மூலம் தனுஷ்கோடி அழைத்து வந்து அங்கிருந்து கப்பல் மூலம் தலைமன்னாரில் இறக்கினர். அங்கிருந்து கண்டி பகுதியில் உள்ள மலைபிரதேசங்களுக்கு மீண்டும் நடராஜா சர்வீஸ். 150 மைல் நடந்து போனதில் போகும் வழியிலேயே பசி,காட்டுவிலங்குநோய் ஆகியவற்றால் தாக்கப்பட்டு சுமார் 40 ஆயிரம் பேர் இறந்துள்ளார்கள். அதில் தப்பி குடியேற்றப்பட்டவர்கள் தான் மலையக தமிழர்கள் என அழைக்கப்படுகிறார்கள். பூர்வீக தமிழர்களிடம்மிருந்து பிரித்து காட்டவே அந்த பெயரில் அழைக்கப்பட்டார்கள். அழைக்கப்படுகிறார்கள்.
 
மலையக தமிழர்கள் மலைகளை கழனிகளாக்கி காபிபுகையிலை பயிர் செய்தனர். அதில் கொழுத்த ஆங்கிலேயர்க்கு அதிர்ச்சி பூச்சிகள் மூலம் வந்தது. பூச்சிகளால் காபி தோட்டம் அழிந்தன. கூடவே மலையக தமிழர்களையும் நோய் தாக்கியதால் 1834 முதல் 1843 வரையில் மலையக தமிழர்கள் மலேரியாபசியால் சுமார் 90 ஆயிரம் பேர் மாண்டனர். அதே காலகட்டத்தில் பிரிட்டிஷ் மகாராணி இலங்கையில் 2,047,128 ஏக்கர் நிலங்களை வாங்கியவர். அதை பின்பு 1 ஏக்கர் 5பைசா என்ற விலையில் நிலங்களை விற்க செய்தார். ஓரே ஓரு பிரிட்டிஷ்காரர் மட்டும் 825 ஏக்கர் வாங்கி உள்ளார்.
 
plate-co-1900-teas.jpg1867ல் ஜேம்ஸ் ரெய்லர் என்ற ஆங்கிலேயர் இலங்கையில் தேயிலை பயிரை அறிமுகப்படுத்தினார். இது நல்ல வரவேற்ப்பு பெற்றதால் தேயிலை பயிர் செய்ய தமிழகம்கேரளா பகுதிகளில் இருந்து இந்து,முஸ்லீம் இன தமிழர்களை மீண்டும் மலையகத்துக்கு கொண்டு வந்தனர். அதில் மீண்டும் துயரம் தமிழகத்தில் வறுமையால் வாடிய 120 பேரோடு ஆதிலட்சுமி என்ற கப்பல் இலங்கை நோக்கி பயணமாகும்போது கப்பல் கடலில் மூழ்கி 120 பேரும் இறந்தனர். அதேபோல் 1867ல் தலைமன்னார் டூ கண்டி டூ மலைநாட்டுக்கு அனுராதபுரம்தம்பளைகண்டி என ஓரு வழியும்ஆரிப்பு,புத்தாளம்கண்டி என மற்றொரு வழியும் ஊண்டு. இரண்டுமே காட்டு வழி. 1867ல் 639 பேர் கொண்ட தமிழக பிழைப்பு குழு முதல் பயணவழியில் மலையகம் புறப்பட்டது. 150 மைல் கடந்ததில் கடைசியாக மலையகத்துக்கு 186 பேர் மட்டுமே போய் சேர்ந்தனர். 453 போர் வழியில் இறந்தனர். இப்படி ஏராளமான செய்திகள் உண்டு மலையக மக்களிடையே. 1877ல் மட்டும் 1,45,000 பேர் மலையகத்தில் இறந்துள்ளனர். கடல் பயணத்தில்காட்டில்நோயால் இறப்பது கணக்கில்லை
 
அதோடு மலையக மக்கள் நாட்டை விட்டு மக்களை விட்டுஉறவுக்காரனை விட்டு வயித்து பாட்டுக்காக பிழைப்பு தேடி வந்து பிரிட்டிஷ் முதலாளிகள் அமைத்து தந்த லயர்களில் 3 இண் 1 பெண்5 இண்கள் 2 பெண்கள் என தங்க வைக்கப்பட்டனர்,மக்களை மேற்பார்வை செய்யும் கங்காணிகள் (கண்காணிப்பாளர்)தோட்ட துரைகள் பெண்களின் கற்ப்பை களவாடவும்,சூறையாடவும் செய்தனர். எதிர்த்த ஆண்களை ஊயிரோடு எரித்தனர் - உயிரோடு புதைக்கப்பட்டனர். இந்த கங்காணிகள் தமிழகத்தில் வரிவசூலும்ஆங்கிலேயரின் எடுபிடிகளாகவும் இருந்தவர்கள். இலங்கைக்கு மலையக தமிழர்களை கண்காணிக்க வந்து கற்பை சூறையாடினார்கள். அதிகமான கூலிகுறைந்த வேலை என அழைத்து வந்து பெண்களை மிரட்டி, அடித்து தங்களது இச்சையை தீர்த்துக்கொள்வது பற்றியோஎதிர்ப்பவர்களின் உயிரை எடுப்பது பற்றி தொழில் செய்யும் பிரிட்டிஷ் கம்பெனிகள் கவலைப்படவில்லை.
 
அந்த நிலையில் தான் மலையக இந்திய தொழிலாளர்களின் அவல நிலையை அறிந்து வர தமிழகத்தின் தஞ்சை பகுதியிலிருந்து காங்கிரஸ் கமிட்டியால் அனுப்பப்பட்டார் நடேசய்யர்.  துணி வியாபாரியாக மலையக தோட்டங்களுக்குள் புகுந்து அவர்களின் நிலையை கண்டு தனது இறுதி மூச்சு வரை தோட்ட தொழிலாளர்களுக்காக போராடியவர் 1929ல் தேசபக்தன் என்ற இதழையும் அவர்களுக்காக நடத்தினர்.
 
1893ல் தஞ்சையில் பிறந்தவர் நடேசய்யர். பெரியார் கருத்துக்களை ஏற்றுக்கொண்டவர். திரு.வி.கவின் தெழிற்சங்க பத்திரிக்கையில் அவருடன் இணைந்து பணியாற்றியபோது  கொழும்பு மாநகரில் இயங்கிய தென்னிந்திய வியாபாரிகள் சங்கத்தின் 1915 ஆம் ஆண்டு நடந்த ஆண்டு விழாவில் கலந்து கொள்ள கொழும்பு வந்தார். விழா முடிந்ததும் ஆங்கிலேயர்கள் தமிழகத்தில் இருந்து வேலைக்காக கொண்டு வந்த தனது மக்களை காண மலையகம் போக எண்ணினார். ஆனால் தோட்ட துரைமார்களாக இருந்த ஆங்கிலேயர்கள் அனுமதியில்லாமல் உள்ளே போக முடியாது என்றார்கள் கொழும்பு தமிழர்கள். மீறி போனால் கிரிமினல் குற்றம் ஆகிவிடும் என எச்சரித்ததால் துணி வியாபாரி வேடம் அணிந்து மலையகம் போனார். ஆங்கு தோட்ட துரைமார்கள்காங்காணிகளால் தன் மக்கள்க்கு நடக்கும் கொடுமைகளை கண்டு கேட்டு கலங்கி போனார். தமிழகம் திரும்பியதும் தான் பார்த்ததைகேட்டதை அறிக்கையாக்கி தஞ்சை ஜில்லா காங்கிரஸ் கமிட்டியிடம் தந்தார். அந்த அறிக்கை அப்படியே கிடந்ததால் பொறுத்து பார்த்தவர் இனி என் வாழ்க்கை அம்மக்களோடு தான் என முடிவு செய்து விட்டு 1920ல் கொழும்பு வந்தார்.

63.jpg
 
இலங்கை தேசிய காங்கிரஸ் கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர்களான டாக்டர் ஈ.வி.ரட்சனம்எம்.ஏ.அருளானந்தம் ஆகியோரை வெளியீட்டாளராக கொண்டு தேசநேசன் என்ற பத்திரிக்கையை நடத்திவந்தார். அப்போது இலங்கையில் தொழிலாளர்களுக்காக முறையான அமைப்புயென்று எதுவும்மில்லை. தொழிலாளர்களுக்காக போராடிக்கொண்டிருந்த பதிவு பெறாத தொழிற்சங்க தலைவரான ஏ.ஈ.குணசிங்காவுடன் இணைந்து 1921 ல் பல போராட்டங்களை நடத்தினார். இவரின்;போராட்ட வீரியத்தையும் ஆங்கிலேய எதிர்ப்பையும் கண்ட தொழிலாளர்கள் குணசிங்காவை விட இவரை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். தொழிலாளர்கள் மத்தியில் இவருக்கு நல்ல பெயரும்ஆதரவும் இருந்தது. இந்த ஆதரவு இலங்கை தொழிலாளர் யூனியன் சங்க துணை தலைவராக அவரை உயர்த்தியது. 
 
1921ல் பிஜி தீவிலிருந்து நாடு கடத்தப்பட்ட டாக்டர்.மணிலால் இலங்கை வந்தார். தீவிர கம்யூனிஸ்ட்டான அவருடன் சேர்ந்து நடேசய்யர் தொழிலாளர்களுக்காக பல போராட்டங்கள் நடத்தினார். நடத்திய போராட்டங்கள் எல்லாம் தீவிரமாக இருந்ததால் மணிலாலை கண்டு பயந்த பிரிட்டிஷார் லாலை நாடு கடத்தினர். போராட்டவாதிகளான ஏ.ஈ.குணசிங்காவுக்கும் நடேசய்யருக்கும் மோதல் அதிகமானது. குணசிங்கா இந்திய தொழிலாளர்களை நாட்டை விட்டு துரத்த வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டார். இந்திய தொழிலாளர்களின் நலனுக்காக போராடினார் நடேசய்யர். இந்த முரண்பாட்டால் இணைந்திருந்த இருவரும் பிரிந்தனர். பிரிந்து போன நடேசய்யர் 1931 சனவரி 13 ல் இலங்கை இந்தியர் சம்மேளனம் என்ற தொழிற்சங்க அமைப்பை தொடங்கினார். அதன் பின் நிறைய அமைப்புகள் தொழிலாளர்களுக்காக என்று தோன்றியது. ஆனால் சட்டப்படி தோன்றிய முதல் அமைப்பு நடேசய்யர் துவங்கிய அமைப்பு தான்.
 
1936ல் நடந்த தேர்தலில் நிற்க முடிவு செய்தார். ஏற்கனவே 1929 ல் நடந்த தேர்தலில் தோற்றவர். பின் 1936ல் நடந்த பொது தேர்தலில் தொழிலாளர்களை நம்பி களம்மிறங்கினார் வெற்றி பெற்றார். தொழிலாளர்களுக்காக சம்பள உயர்வு வேண்டியும்மருத்துவ வசதி வேண்டியும்உரிமைகள் வேண்டியம் போராட்டம் நடத்தி பெற்றும் தந்தார். அதனால் 6 ஆண்டுகள் சட்ட நிருபன சபையில் உறுப்பினராகவும்16 ஆண்டுகள் சட்டசபையிலும் உறுப்பினராகயிருந்தார். இலங்கையில் வயது வந்தவர்கள்க்கு வாக்குரிமை உண்டு என ஆங்கிலேய அரசு சொன்னபோது இலங்கையில் வாழ்ந்த தோட்ட தொழிலாளர்கள்களுக்கு சந்தோஷம் நமக்கென்று ஒரு பிரதிநிதியை தேர்ந்தெடுப்போம். அவர் மூலம் நமக்கு ஒரளவு சந்தோஷமான வாழ்க்கையும்பசங்களுக்கு படிப்பும் கிடைத்தால் போதும் என எண்ணினார்கள். அதன்படி 7 இந்திய வம்சாவழி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அது சிங்கள வெறியர்களான ஏ.ஈ.குணசிங்காடி.எஸ்.சேனநாயக்கா ஆகியோரை ஆத்திரம் கொள்ள வைத்தது. தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றத்துக்கு சலுகைகளை அப்போதே வாரி வழங்கினார்கள். அதேபோல் மலையக மக்களிடையே இடதுசாரிகள் கோலோச்சினர். 1947ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மலையக பகுதியில் 20 தொகுதியில் இடதுசாரிகள் வெற்றி பெறும் அளவுக்கு இடதுசாரிகளை மக்கள் நம்பினர்.
 
அதுதான் சிங்கள அரசியல்வாதிகளை குறிப்பாக தொழிலாளர்களுக்காக போராடுகிறோம் என்ற குணசிங்க,சேனநாயக்கா ஆகியோரை ஆத்திரம் கொள்ள வைத்தது. இவர்கள் வளர்ந்தால் உரிமைகளை தந்தால் ஆட்சி அதிகாரத்தில் ஏறி நம்மை கேள்வி கேட்பார்கள் என எண்ணினர். அதன் விளைவு அபாயகரமானதாக இருந்தது. இலங்கை சுதந்திரம் அடைந்த பின்ட்சியமைத்த சிங்கள மூலைகளில் அரசியல் கணக்கும் ஓட்டு கணக்கும் போட்டதின் விளைவு1948 முதலே தோட்ட தொழிலாளர்களுக்கு தொல்லை ஆரம்பமானது.
 
1948 ஆம் ஆண்டு நவம்பர் 15 ந்தேதி பாராளமன்றத்தில் குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதில் வம்சாவழி சட்டம்பதிவு சட்டம் என 2 முறையை வைத்தனர். வம்சாவழி சட்டம் என்பது சிங்களம் பேசுபவர்கள்இலங்கை தமிழர்களுக்கு வம்சாவழியாக பல நூற்றாண்டுகளாக இங்கேயே உள்ளோம் என்பதை தமிழர்சோனகர் ஆதாரங்களுடன் நிருபித்தால் அவர்களுக்கு வம்சாவழி சட்டம் பொருந்தும். பதிவு சட்டம் என்பது இந்தியாவிலிருந்து வந்து தோட்டதொழிலில் ஈடுபட்டுள்ள மக்களுக்கானது. அவர்கள் 1948 நவம்பர் 15 க்குள் இலங்கையில் பிறந்திருக்க வேண்டும்அதற்க்கு முன்பு இரண்டு தலைமுறையினர் இலங்கையில் வாழ்ந்திருக்க வேண்டும் அதற்க்கான சான்றுகளை காட்டி பதிவுக்கு மனு செய்யவேண்டும். அரசாங்கம் முடிவு பண்ணால் மட்டுமே அவர்களுக்கு குடியரிமை வழங்கப்படும் என்ற நிலை. 

55.jpg
 
இது மறைமுகமாக பல லட்சம் தோட்ட தொழிலாளர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப சிங்கள அரசியல்வாதிகள் கையாண்ட நரி திட்டம். அதற்க்கு அரசியல் காரணமும் உண்டு. பொது தேர்தல்களில் தோட்ட பகுதிகளில் சிங்கள அரசியல்வாதிகளால் அதிகம் வெற்றி பெற முடியவில்லை. தமிழர்களே வென்றார்கள். இது வருங்காலங்களில் பிரச்சனையாகிவிடும் என்பதாலே தான். சட்டதின் மூலம் மலையக மக்களை துரத்த முடிவு செய்தார்கள். இந்த சட்டத்தின் மூலம் சுமார் 7 லட்சம் தோட்ட தொழிலாளர்கள் நாடற்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். அதோடு 1949ல் பாராளமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நாடாளமன்ற சீர்த்திருத்த சட்டத்தின் படி தோட்ட தொழிலாளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. இதனால் சுமார் 9 லட்சம் தமிழ் மக்கள் நாடற்ற நிலைக்கு ஆளானார்கள். பிரச்சனை பெருசானது.
 
தோட்டதொழிலாளர்கள் தானே என அப்போதைய இலங்கை தமிழ் அரசியல்தலைவர்கள் இதில் தலையிடாமல் விட்டு விட்டனர். இந்தியாவோ தோட்ட தொழிலாளர்கள் இந்திய குடியுரிமை வேண்டி விண்ணப்பித்தால் மட்டுமே இந்தியா ஏற்றுக்கொள்ளும் என கூறி விட்டது. ஆனால் தோட்ட தொழிலாளர்களில் பெரும்பாலானோர் இலங்கையில் இருக்கவே விருப்பம் தெரிவித்தனர். இறுதியில் 1964 அக்டோபர் 30 ந்தேதி இந்திய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கும் இலங்கை அதிபர் ஸ்ரீமா பண்டாரநாயக்க இடையே சாஸ்திரி-ஸ்ரீமா ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் அரசின் கணக்கெடுப்பின் படி இங்குள்ள 9 லட்த்து 75 ஆயிரம் தோட்டதொழிலாளர்களில் 5,25,000 பேரை இந்தியா ஏற்றுக்கொள்வது என்றும், 3லட்சம் பேருக்கு இலங்கை குடியுரிமை தருவது என்றும் முடிவானது. மீதி நிற்க்கும் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர்க்கு மற்றொரு ஒப்பந்தம் இருநாடுகளும் போட வேண்டும் என்றது. இந்த ஒப்பந்தம் 15 ஆண்டுகளுக்;குள் நிறைவேற்றப்படவேண்டும் என்றது.
 
ஓப்பந்தம் நிறைவேற காலதாமதமானது. இதனால் சிங்களர்கள் மலையக தமிழர்களுக்கு எதிராக கலவரத்தை தொடங்கினர். பிறந்த மண்ணை விட்டு வந்து இரண்டு நூற்றாண்டாக தங்களது வியர்வையை நீராக்கிமானத்தை அடகு வைத்து காணிகளின் கொடுமைகளை தாங்கிக்கொண்டு சம்பாதித்து சேமித்து வைத்திருந்த பணத்தினை கலவரங்களின் போது மலையக மக்கள் குடியிருந்த லாயம் எனப்படும் வீடுகளில் புகுந்து கொள்ளையடித்தனர் உழைக்க தெம்பில்லாத சிங்களர்கள். தடுத்த தோட்ட தொழிலாளர்களை லாயங்களோடு வைத்து எரித்தனர். உரிமைக்காக போராடிய தோட்ட தொழிலாளர்கள் யார் என்பதை தோட்ட துரைமார்கள் காட்டி தந்தனர் அவர்களையும் குறிவைத்து கொன்றது சிங்கள படை. பதுளைமொனராகலை,களத்துறைகேகாலைஇரத்தினாபுரிமத்தாளை பகுதிகளில்யிருந்த தோட்ட தொழிலாளர்களே அதிகம் பாதிப்படைந்தனர். இதனால் வெறுத்துபோன பெரும்பாலான மக்கள் உலகின் வேறு நாடுகளான பிரான்ஸ்கனடாஆஸ்திரியாபோன்ற நாடுகளில் போய் அகதிகளாக குடியேறினார்கள். அதே காலகட்டத்தில் திரும்பவும் தாயகத்துக்கே திரும்பியவர்களையும் அகதிகள் என்ற அடைமொழியல் சேர்த்துவிட்டது இந்திய அரசு.
 
அடுத்த 10 ஆண்டுகளுக்கு பின் 1974 ல் இலங்கையின் அதிபர் ஸ்ரீமாவுக்கும் இந்தியாவின் பிரதமர் இந்திராகாந்தி அம்மையார்க்கும் இடையே தோட்ட தொழிலாளர்களுக்கு என்று மீண்டும் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அதில் இந்திய குடியுரிமை வேண்டி 5 லட்சத்து 6 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இலங்கை குடியுரிமை வேண்டி 4 லட்த்து 70 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இந்தியாகுடியுரிமை வழங்க காலதாமதம் செய்தது. 1982 ல் 86 ஆயிரம் விண்ணப்பங்களை நிராகரித்தது,குடியுரிமை வழங்கப்பட்ட 90 ஆயிரம் பேர் இன்னும் இலங்கையில் உள்ளனர். அதனால் இனி ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வராது,ஓப்பந்தம் செல்லாது என அறிவித்தது இந்தியா.

படங்கள் உதவி - http://pictorialrecord.blogspot.in. ( நன்றி )

 

Link to comment
Share on other sites

பதிவிற்கு நன்றி சோழியன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு  தொகுப்பு..

பதிவிற்கு நன்றி சோழியான். 

Link to comment
Share on other sites

என்ன இது ஒருவரும் வாசிக்க அக்கறை காட்டவில்லையோ என நினைத்தேன்... வருகைக்கு நன்றி... கவனிக்கிறீர்கள் என்ற நம்பிக்கையில் பதிவு தொடர்கிறது.  :D


4. இன கலவரம். ( சிலோன் முதல் ஈழம் வரை.)
 


GENOCIDE%2520.jpg
இலங்கையில் வசதியோடும்ஆங்கிலேயர்களோடு அனுசரையாக இருந்து கடல் வாணிபத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த முஸ்லீம்கள் மீது 1915ஆம் ஆண்டு கண்டி பகுதியில் வன்மை கொண்ட பெரும்பான்மை சமூகமான சிங்களவர்கள் திட்டமிட்டே தாக்குதலை தொடங்கினர். முஸ்லீம்களின் வீடுகைளயும்கடைகளையும் தேடித்தேடி அழிக்க தொடங்கினர். இது வேகவேகமாக தீவு முழுவதும் பரவியது முஸ்லீம்மக்கள் நசுக்கப்பட்டதை தமிழர்கள் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.
 
முஸ்லீம்கள் மீதான தாக்குதலை கண்ட பிரிட்டிஷ் கவர்மெண்ட் சிங்கள தலைவர்களான ப.ந.சேனநாயக்கா,ஊ.த.சேனநாயக்கா உட்பட ஆயிரக்கணக்கான சிங்களர்களை தூக்கி கொண்டும் போய் வெளியே வர முடியாதபடி சிறையில் வைத்தனர். இலங்கையில் போராட்டங்கள் தீவிரமானது சிங்கள தலைவர்களை அரசு விடமாட்டேன் என்றதால் இலங்கையின் பிரபலமான வழக்கறிஞரும் படித்த அவையின் தமிழர்கள் பிரதிநிதியுமான பொன்னம்பலம் ராமநாதனை அணுகிய சிங்கள பிரமுகர்கள் தலைவர்களை காப்பாற்ற வேண்டும் என முறையிட்டனர். கப்பல் மூலம் லண்டனுக்கு பயணமானவர் பிரிட்டிஷ் மகாராணியை சந்தித்து பேசி வாதாடி வெற்றியோடு திரும்பினார். சிங்கள தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இதற்காக இலங்கை திரும்பும் ராமநாதனுக்கு மிகப்பெரிய பாராட்டு விழாவை ஏற்பாடு செய்தனர். கொழும்பு வந்து இறங்கும் பொன்னம்பல ராமநாதனை 11 குதிரை பூட்டிய வண்டியில் ஊர்வலம் கொண்டுபோக முடிவுசெய்தனர்.
 
கப்பலிலிருந்து இறங்கிய ராமநாதனை அலேக்காக தூக்கிய சிங்கள இளைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் சரட்டு வண்டிக்கு தூக்கிகொண்டு போனவர்கள் சந்தோஷத்தில் குதிரைகளை வண்டியிலிருந்து கழட்டி துரத்தியவர்கள் தாங்களே ராமநாதனை உக்காரவைத்த வண்டியை இழுத்துக்கொண்டு ஊர்வலம் போனார்கள். இதை கண்ட முஸ்லீம் மக்கள் வெதும்ப ஆரம்பித்தார்கள். தேர்ல சிம்மாசனம் தந்தவங்க நாளைக்கே உங்கள அந்த சக்கரத்துல வச்சி நசுக்குவாங்க அன்னைக்கு தெரியும் அவங்களோட கொடூரம் என நினைத்திருப்பார்கள். காரணம்சிங்களவர்-முஸ்லீம் கலவரத்தால் முஸ்லீம்களின் வாழ்க்கையை மாறிவிட்டது. வியாபாரத்தில் வெற்றி கொடி கட்டிய முஸ்லீம்கள் கலவரத்தால் வியாபாரம்கடல் வாணிபத்தில் நொடிந்துப்போய் விவசாய வேலைக்கு போயினர்.
 
1936ல் சிங்கள தலைவர்கள் பார்வை இலங்கைக்கு வேலைக்காக வந்த இந்திய மலையக மக்கள் மேல் திரும்பியது. எங்க மக்களோட வேலைய புடுங்கிட்டாங்க அவங்கள திரும்பவும் இந்தியாவுக்கே துரத்தனும் என்ற கோரிக்கையை பிரிட்டிஷாரிடம் எழுப்பி போராட ஆரம்பித்தார்கள். 1940ல் அரசு பணிகளில் தமிழர்களின் ஆதிக்கம் அதிகமாகவுள்ளது. அவர்களை பணியிலிருந்து துரத்த வேண்டும் என போராட ஆரம்பிக்க சிங்களவர்களின் எண்ணம் அக்கால கட்டங்களில் தான் தமிழர்களுக்கு புரிய ஆரம்பித்தது.
 
சுதந்திரத்துக்கு பின் பதவியில் அமர்ந்திருந்த பிரதமர் சேனநாயக்கா. 1948ல் பிரஜாவுரிமை சட்டத்தை கொண்டு வந்தார் தொடர்ந்து 49ல் துணைக்கு இரண்டு சட்டங்களை இயற்றினார். அதன் மூலம் சிங்கள பெயரை உடையவர்கள் மட்டுமே இலங்கை பிரைஜை. தமிழ்-முஸ்லீம் பெயருடைய லட்சகணக்கான மலையக மக்களிடம் நீங்க இலங்கை பிரஜையில்லையென்றது சட்டம்.
 
இதற்கு அமைச்சரவையில் தொழில்-தொழில் ஆராய்ச்சி துறை அமைச்சராகயிருந்த தமிழர் காங்கிரஸின் தலைவர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் பாராளுமன்றத்தில் ஆதரவு தெரிவித்தார். இது தமிழர் காங்கிரஸின் முக்கிய தலைவர்களுள் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. அப்போது பாராளுமன்றத்தில் மலையக மக்கள் சார்பாக பேசிய தமிழர் காங்கிரûஸ சேர்ந்த செல்வநாயகம், “மலையக மக்களுக்கு எதிராக கிளம்பியவர்கள். நாளை எங்களுக்கு எதிராக திரும்பமாட்டீர்கள் என்று என்ன உத்தரவாதம் என்றவர் அச்சட்டங்களை எதிர்த்து வாக்களித்தனர்.
 
தமிழர் காங்கிரஸில் கருத்து வேறுபாடு அதிகமாகி கட்சியின் முக்கிய தலைவர்களான செல்வநாயகம்வன்னிய சிங்கம்,நாகநாதன் போன்றோர் கட்சியிலிருந்து வெளியேறி 1949 டிசம்பர் 18ந்தேதி கொழும்பு மருதாணையில் கூடி பேசி தமிழரசு கட்சியை ஆரம்பித்தவர்கள்.
 
1. சிங்கள மொழியோடு தமிழ் மொழிக்கும் சம அந்தஸ்து வேண்டும்.
2. இந்திய மக்களுக்கு எதிரான சட்டத்தை நீக்கனும்.
3. பாரம்பரியமான தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றத்தை நிறுத்தல் வேண்டும்.
4. ஜனநாயகமான அரசியல் வேண்டும் என்றது.
 
 தமிழரசு கட்சியின் தலைவராக செல்வநாயகம் இருந்தார். தமிழர்களின் விடிவெள்ளியாக கருதப்படும் செல்வநாயத்தை தந்தைசெல்வா என்றே தமிழர்கள் அழைக்கின்றனர். மலேசியாவில் பிறந்தவர் யாழ்ப்பாணத்தில் படித்தவர் கிருஸ்த்துவரான இவருக்கு தமிழர் பண்பாடுகள் மீது தீவிர ஆர்வம். ஆரம்பத்தில் ஆசிரியராக இருந்தார் பின் கொழும்பு போய் சட்டக்கல்லூரியில் சட்டம் படித்தவர். வழக்கறிஞராக பணியை தொடங்கினார். சிவில் வழக்குகளில் பிரபலமானவர். தமிழ் காங்கிரஸில் இணைந்து தீவிரமாக செயல்பட்டவர் கருத்து வேறுபாட்டால் தமிழரசு ஆட்சியை தொடங்கினார். செல்வாவின் புகழும்கட்சியும் வளர வளர 70கள் வரை வெற்றியை மட்டுமே ருசித்த ஜீ.ஜீ.பி. அதன் பின் அவரின் ஒளி தமிழர்களிடம் மங்க தொடங்கியது.
 
1950களில் பிரதமராகயிருந்த சேனநாயக்கா அரசியலில் தனது வரிசாக அவரின் மகன் டட்லி சேனநாயக்காவை உருவாக்குகிறார் என கட்சியில் பிரச்சனை ஏற்பட்டு ஜ.தே.கட்சியிலிருந்து விலகிய ந.ர.த.ப.பண்டாரநாயக்கா 1951ல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஆரம்பித்தார். சிங்கள மக்களை கவர தன் கட்சியின் கொள்கையாக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிங்களம் மட்டுமே அரசாங்க மொழி என் அறிவித்தார். இது சிங்கள மக்களிடம் ஏக-போக வரவேற்பு பெற்றது.
     
1952ல் சேனநாயக்கா குதிரை சவாரியின்போது கீழே விழுந்து காயமடைந்ததால் காலமானார். இவரின் மகன் டட்லி சேனநாயக்கா இலங்கை பிரதமர் சீட் டில் உட்கார்ந்தார். தேர்தல் நெருக்கத்தில் இவரும் சுதந்திர கட்சி கொள்கை ந்டஒ ழ்ல்வ்;ச்ள் ந்ச்;ச்ள்ண்ற்த்;த்ல்மங்;த் ஙண்ழ்ண்ஹ பார்த்து சிங்களம் அரச மொழியாக்கப்படும் என்றார். ஜ.தே.க. சார்பில்1956ஆம் ஆண்டு சுதந்திர கட்சி வேறு சில கட்சிகளோடு கூட்டணி அமைத்து ஐக்கிய முன்னணி என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தி தேர்தலை சந்தித்தனர். மாபெரும் வெற்றி. கட்சியின்கொள்கைசிங்கள மொழி மட்டுமே என்ற பிரச்சாரத்திற்க்கு கிடைத்த வெற்றி என்பதால் அதனை செயல்படுத்த எண்ணி பாராளமன்றத்தில சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்ற மசோதாவினை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விட்டார். இதனை கண்டித்து வாக்கெடுப்பு நாளன்று செல்வநாயகம் கொழும்பு காலைமுக திடலில் சத்தியாகிரகம் போôட்டத்தை தொடங்கினார். சிங்களர்கள் பகுதியான கொழும்பில் அவர்களின் மொழியை எதிர்த்தும்,கண்டித்தும் கோஷம் போரட்டதால் எங்க ஏரியாக்குள்ள வந்து எங்க மொழியை எதிர்த்து போராட்டம் செய்கிறிர்களா என கல்லெடுத்து வீசி வன்முறையை தொடங்கி வைத்தார்கள் சிங்களர்கள். கொழும்பில் கலவரம் ஆரம்பமானது அது கிழக்கு மாகாணம் வரை பரவியது.
 
எத்தனை உயிர் போனாலும் பரவாயில்லை உங்களின் இந்த மசோத வெற்றி பெற ஒத்தொழைக்க மாட்டோம் என அறிவித்தார் தந்தை சொல்வா. தொடர்ந்து மற்றொரு போராட்டத்தை அறிவிக்க பிரதமர் பண்டாரநாயக்கா செல்வாவிடம் ஓர் உடன்பாட்டுக்கு வந்தார்.
BuddhistProcession+Ceylon.jpg
 
1957ஆம் ஆண்டு பண்டாரநாயக்கா-செல்வா ஒப்பந்தப்படி கிழக்கு வடக்கில் பிரதேச சபைகள் அமைத்து 10 துறைகள் உருவாக்கவும் கிழக்கில் வடக்கில் தமிழ் ஆட்சி மொழியாக்கவும் சம்மதித்தால் மலையக மக்களின் குடியுரிமை விவகாரத்துக்கான போராட்டத்தை ஒத்தி வைக்கிறோம். ஆனால் அவர்களுக்கு படிப்படியாக குடியுரிமை தர வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டது. அன்படி 1957 ஜீலை 26 பாராளுமன்றத்தில் சமர்பித்தார். தமிழ் ஆட்சி மொழியாக்கும் சட்டத்தை முன்மொழிந்தார் செல்வா. அந்த சட்டத்திற்க்கு சிங்கள பாராளமன்ற ஆளும்கட்சி உறுப்பினர்களும், எதிர்கட்சியான ஐ.தே.க.வும் எதிர்ப்பு தெரிவித்தனர். 1957 அக்டோபர் 4 தேதி கண்டி தலதா மாளிகை வரை ஊர்வலம் நடத்தினர் சிங்களர்கள். தொடர்ந்து டிசம்பர் மாதம் ஆங்கில எழுத்துகளுக்கு பதிலாக வாகனங்களில் சீறி என்கிற சிங்கள எழுத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என சட்டம் இயற்றியவர்கள் 1 ஜனவரி 1958ல் நாடு முழுவதும் நடைமுறை படுத்த வேண்டும் என்றது அரசு. இதற்கு தமிழரசு கட்சி வடக்கு-கிழக்கு பகுதியில் தமிழ் மொழி பயன்படுத்த வேண்டும் என கேட்டு போராடியது. கோரிக்கை சரிதான் என்பதை உணர்ந்த பிரதமர்கோரிக்கையை ஏற்று சரியென அறிப்பு செய்தார். சட்டமாக்கப்பட்டது. இதை சிங்களர்கள் எதிர்த்தோடு 1958 ஏப்ரல்9ந்தேதி சுகாதார அமைச்சரான விமலா விஜயவர்த்தனா தலைமையில் பிக்குகள் பிரதமர் பண்டாரநாயக்கா மாளிகைக்கு சென்று ஒப்பந்தத்தை கிழித்து எறி எனக்கேட்டு உக்காந்து விட்டனர். இதனால் ஒப்பந்த கைவிடுவதாக எழுதிதந்தார் பண்டாரநாயக்கா.
 
ஒப்பந்தம் கிழிப்பு இரண்டு தரப்பிலும் கொதிப்பை உருவாக்கிவிட்டது. சிங்களவர் தமிழ் எழுத்தையும்தமிழர் சிங்கள எழுத்தையும் பேருந்துகளில்கடைகளில் அழித்தனர். தாங்கள் வலிமையாக உள்ள பகுதிகளில் தங்களது தாய்மொழியான தமிழில்  பெயர்களை எழுத ஆரம்பித்தனர். இந்த நிலையில் 1958 மே மாதம்  தமிழரசு கட்சி வருடாந்தர மாநாட்டை வவுனியாவில் நடத்தியது. மாநாட்டில் பிரதமருடனான உடன்பாட்டை நிறைவேற்ற வேண்டும் எனக்கேட்டு சத்தியாக்கிரகம் இருக்கபோகிறோம் என முடிவு செய்து அறிவித்தனர். மாநாடு முடிந்து தமிழரசு கட்சியினர் வவுனியாவிலிருந்து ரயில் மூலம் மட்டகளப்பிற்கு திரும்பபிவந்துக்கொண்டு இருந்தனர். வழியில் பொலனாறுவில் மாநாட்டுக்கு சென்றுவிட்டு திரும்பி வந்துக்கொண்டுயிருந்த தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தினர், கத்தி குத்தும் நடந்தது.
 
தொடர்ந்தார்போல் மே 25 அன்று பஸ் ஒன்றையையும் சிங்களர்கள் கவிழ்த்தார்கள் மிகப்பெரிய தாக்குதல் ஆரம்பமாகின. இதை பிரதமர் கண்டுக்கொள்ளவில்லை 500 தமிழர்கள் கொல்லப்பட்டதோடு 15 ஆயிரம் தமிழர்கள் அகதிகளாயினர். தமிழர்களின் வீடுகள்கடைகள் நொருக்கப்பட்டதை சிங்கள காவல்துறை பார்வையாளராக இருந்து கை கட்டி அமைதியாக வேடிக்கை பார்த்தது. பிரதமர் உத்தரவுப்படி 10 தமிழரசு கட்சி எம்.பி.களோடு 150 தமிழர்கள் கைது செய்து தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.
 
ஏகப்பட்ட சேதாரம்கோடி கணக்கில் தமிழர்களின் சொத்து அழிவுவிலை மதிப்பில்லா உயிர்கள் பலியானது. தமிழர்கள் பகுதியிலும் இது எப்படி சாத்தியமானது என எண்ணலாம். 1930களில் சிங்கள தலைவரான டி.எஸ் சேனநாயகா நாட்டில் தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் சிங்களர்களை குடியேற்ற இலவச வீடு5 ஏக்கர் நிலம்பயிர் செய்ய விதைமருந்து,மாடுமண்வெட்டி என இலவசமாக அரசு செலவிலேயே தந்து தமிழர் பகுதிகளில் குடிபுக வைத்தார். சுதந்திரத்திற்கு பின் குடியேற்றம் அதிகமானது. இதனால் தமிழர்களின் இடங்கள் பறிபோனதோடு இன ரீதியாக மக்கள் தொகையில் மாற்றம் ஏற்பட்டது.
 
1951ல் மட்டகளப்பில் தமிழர்கள் 1,30,831 சிங்களர் 31,174பேர் மட்டுமே இருந்தனர். 20 ஆண்டுகளுக்கு பின் அதாவது 1971ல் தமிழர்கள் 2,46,582 சிங்களர் 94,150 பேராக மாறினர். திருகோணமலையில் தமிழர்கள் 37,517 பேரும்,சிங்களர் 15,206 பேர் இருந்தனர். 1971ல் தமிழர்கள் 73,255 பேரும்சிங்களர் 55,308 பேராக மாறினர்.  தமிழர்கள் கூட்டல் கணக்கில் போனால் சிங்களர்கள் பெருக்கல் கணக்கில் உயர்ந்தனர். இதனால் அரசியலில் சிங்கள அரசியல்வாதிகளுக்கு கூடுதல் எம்.பி. பதவி கிடைத்ததோடு தமிழர்களை அடித்து உதைக்கவும் தமிழர் பகுதகளல் குடியேற்றப்பட்ட சிங்களர்கள் பயன்பட்டனர். இதனாலயே கலவரம் அடங்காமல் போனது.
 

20080615003.jpg
 
அதே வேலையில் பண்டாரநாயக்காவை பிரதமர் பதவியில் அமர்த்திய மக்கள் ஐக்கிய முன்னணி கூட்டணியில் சண்டைகள் அதிகமானது. இடது சாரியான பிலிப் குணவர்தனாவை கூட்டணியை விட்டு நீக்க சொன்னார்கள் வலதுசாரிகள். ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள குணவர்த்தனாவை கட்சியை விட்டு நீக்கினார் பண்டாரநாயக்கா. அடுத்ததாக தமிழர்களையும் கொல் என்றனர். இதில் முரண்பாடு வர கடுப்பான வலதுசாரிகள் பிக்குகள் முன்னணி செயலர் களனி விகாரை அதிபதி புத்திரகித்திரதேரா கொலை சதித்திட்டம் தீட்டி தந்து ஆசிர்வதித்து அனுப்பினார். 1959 செப்டம்பர் 25ல் அரசாங்க இல்லத்திலேயே வைத்து வளர்த்து விட்ட மத கடாவே பண்டாரநாயக்காவை சுட்டு கொண்றது. இதனால் பாராளமன்றம் கலைகப்பட்டடு தேர்தல் அறிவிப்பு செய்ப்பட்டது.
 
1960 ஜீலையில் நடந்த தேர்தலில் சுட்டு கொல்லப்பட்ட பண்டார நாயக்காவின் சுதந்திர கட்சி சார்பில் அவரின் மனைவி ஸ்ரீ மாவோ பண்டாரநாயக்க வெற்றி பெற்று பிரதமர் பதவியேற்றார். உலகின் முதல் பெண் பிரதமர். பிரதமராக ஸ்ரீமாவோ இருந்தாலும் நாட்டின் நிர்வாகம், செயல்பாடுகள், நடவடிக்கைகள் பிக்குகள் சொல்படி நடந்தது. நாடு முழுமைக்கும் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என ஸ்ரீமாவை அறிவிக்க செய்தனர். போராட்டங்கள் ஆரம்பமாகின. இதை எதிர்த்த தமிழரசு கட்சி சத்வீக நேரடி இயக்கத்தை ஆரம்பித்தது. அரசு அலுவலககங்களை முற்றுகையிட்டு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுக்க முடிவு செய்தனர். அதன்படி போராட்டம் வெற்றிகரமாக நடந்தது. வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இரண்டு மாதம் நிர்வாகமே நடக்கவில்லை. ராணுவத்தை களத்தில் இறக்கினர் ஸ்ரீமாவே. அடி-உதை தந்து போராட்டத்தை அடக்கியது ராணுவம். 1964ல் ஸ்ரீ மாவோ வின் அரசு கலைக்கப்பட்டதால் 1965 தேர்தல் அறிவிக்கப்பட்டதும். இந்தியாவில் பிராந்திய கட்சிகளிடம் கூட்டணி வைத்துக்கொள்ள காங்கிரஸ்பி.ஜே.பி அலைவதும்ரகசிய பேச்சு வார்த்தை நடத்துவதைப் போல சுதந்திர கட்சி தலைவர்கள் தமிழரசு கட்சிதமிழ் காங்கிரஸ்கம்யூனிஸ்ட் கட்சிகளோடு ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியது.
 
தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர் திருச்செல்வம் மூலம் தமிழ்மொழி வடக்கு-கிழக்கு மாகாணத்தில் அரசு மொழியாக்கப்படும். வடக்கிழக்கில் மாவட்ட சபை அமைக்கப்படும்குடியேற்ற திட்டம் மூலம் நிலம் இல்லாதவர் முன்னுரிமை தரப்படும் என வாக்குறுதி தந்து ரகசிய ஒப்பந்தம் போட டட்லி - செல்வா இடையே தேர்தல் உடன்பானது.
 
145 தொகுதியில் ஐ.தே.க - 66சுதந்திர கட்சி - 41தமிழரசி கட்சி 14வங்க சமசமாய கட்சி 10கம்யூனிஸ்ட் கட்சி - 4தமிழ் காங்கிரஸ் - 3ல்வென்றது தனி மெஜாரட்டி கிடைக்காததால் சுதந்திரா கட்சி கூட்டணி அரசு அமைத்து அதில் தமிழரசும்தமிழ் காங்கிரஸ்சும் அங்கம் வகித்தன. தமிழரசு கட்சிக்கு அமைச்சர் பதவியும்கூட்டணி அமைய காரணமான திருச்செல்வத் மேலவை உறுப்பினர் பதவி மூலம் உள்ளாட்சி அமைச்சரானார். தமிழரசு கட்சி கொள்கையிலிருந்து விலகி விட்டதாகவும்செல்வாவுக்கு வயதாகிவிட்டதால் அமிர்தலிங்கம் வழிநடத்துகிறார் என்ற பேச்சு களம்பியது தமிழர்களிடையே அதோடு அமிர்தலிங்கம் தலைமை பொறுப்புக்கு வர நினைக்கிறார் தவறான வழியில் செயல்படுகிறார். எனக் சொல்லி நவரத்தினம் என்பவர் பிரிந்து தமிழர் சுயாட்சி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார்.
 
டட்லி - செல்வா செய்து கொண்ட உடன்படிக்கையின்படி 1966ல் தமிழ் மொழி தொடர்பாண சட்டம் பாராளமன்றத்தில் கொண்டு வந்தபோது சிங்கள கட்சிகள் எதிர்த்தன. அவர்களை சிங்கள போலிஸார் துப்பாக்கி சூடுமூலம் அடக்கினர். அதோடு 1968ல் மாவட்ட சபை அமைப்பதற்கான மசோதாவை டட்லி கொண்டு வராததால் அதிருப்தி அடைந்த தமிழரசு கட்சி பிரதமர் டட்லிக்கு நெருக்கடி தர கடைசியில் அவரும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். சிங்கள உறுப்பினர்களின் கடுமையான எதிர்ப்பால் மசோதா தோல்வியடைந்து. அதிருப்தியடைந்த தமிழரசு கட்சி 1969ல் கூட்டணியிலிருந்து விலகியதால் 1970ல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. 1970 மே மாதம் தேர்தல் நாளாக குறிக்கப்பட்டது. 1970க்கு பின் இலங்கையின் நிலை படிப்படியாக மாற ஆரம்பித்தது.
 
1970 தேர்தல் மூலம் ஜக்கிய முன்னணி கூட்டணி மூலம் இரண்டாவது முறையாக பிரதமரான ஸ்ரீ மாவேவிடம் போன புத்த பிக்குகள் தமிழர்களின் பிள்ளைங்க மருத்துவம்விஞ்ஞானம்கணக்குள நம்ம புள்ளைங்கள விட நல்ல படிக்கறானுங்க. அராசங்க தேர்வுல அதிகமா ஜெயிக்கறானுங்க அத தடுக்கனும் என வலியுறுத்தினர் புத்த பிக்குகள் பேச்சை கேட்க வேண்டிய கட்டாயத்திலிருந்த ஸ்ரீ மாவே சிங்களர் - தமிழர்களுக்கு தனித் தனி நுழைவு தேர்வு என சட்டம் போட்டார். தமிழர் மாணவர்கள் கவலையுற்றனர் காரணம் சிங்கள மாணவ மாணவிகள் தேர்வு பெற்றனர். நன்றாக படித்தே தமிழர் மாணவர்கள் நுழைவு தேர்வில் தோற்க மிரண்டு போயினர்.
20090630_11.jpg
 
1970ல் நவம்பர் 4 யாழ்பாணத்தில் அரசுக்கு எதிராக ஊர்வலத்தில் 10 ஆயிரம் மாணவர்கள் கலந்துகொண்டனர். அதே நேரம் ஸ்ரீமாவே துரோகம் செய்கிறார் எனச்சொல்லிஅரசை எதிர்த்து சிங்கள இளைஞர்களை கொண்டு 1964ல் சீன சார்புடைய இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்த ரோசண விஜயவீரா 1965 மே 14ல் மக்கள் விடுதலை முன்னணி(JVP- Janatha Vimukthi Peramuna) போராட்டங்கள் மூலம் அரசு சிங்கள இளைஞர்களை ஏமாற்றுகிறது என போராடிது. சீனர்களிடமிருந்து ஆயுதங்களை பெற்று சண்டைக்க தயாரானது. இலங்கை அரசுக்கு தெரியவந்து ஜே.வி.பி தலைவரை கைது செய்தது. அப்படியும் 1971 ஏப்ரல் 5ல் நாட்டின் பல பகுதியிலும் ஆயுத சண்டை ஆரம்பமானது. தெற்கின் பல பகுதிகளை ஜேவிபி கைப்பற்ற உலகநாடுகளிடம் இலங்கை உதவி கேட்டதால் உதவிக்கு ஓடிய இந்தியாசீனா கலவரத்தை அடக்கியது. ஆயிரக்கணக்கான ஜேவிபி இளைஞர்கள் கொல்லப்பட்டனர். ஜேவிபியும் தடைசெய்யப்பட்டது.
 
சிங்கள இளைஞர்களை அடக்கினாலும் தமிழ் மாணவர்களை மட்டும் அடக்க முடியாமல் திணறியது அரசு. தமிழ் மாணவர்கள் தமிழ் அரசியல் கட்சிகளிடம் உதவி கேட்ட நேரத்தில் 1972ல் ஸ்ரீ லங்காவில் புதிய ஒற்றையாட்சி என்ற சட்டத்தை ஸ்ரீமாவே அரசு இயற்றியது. இதனால் இலங்கையிலிருந்த தமிழ் சமூகமே பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் தமிழரசு கட்சி,தமிழர் காங்கிரஸ் கட்சிஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர்களான செல்வாஜீ.ஜீ.பி. தொண்டமான் ஆகியோர் இணைந்து கூட்டு தலைமையில் தமிழர் கூட்டணி கூட்டமைப்பை உருவாக்கி புதிய ஒற்றையாட்சி சட்டத்துக்கு எதிர்ப்பு போராட்டங்கள் நடத்திக்கொண்டிருந்ததால் மாணவர்கள் பிரச்சனையில் தலையிடாமல் ஒதுங்கிவிட்டார்கள். மாணவர்களே போராட களத்தில் தனியாக நின்றனர்.
 
தொடரும்........... 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள், சோழியன்!

 

கத்தரிக்காய் வடிவிலான தீவு என்று இப்போது தான் கேள்விப்படுகின்றேன்! 

 

மாங்காய் வடிவிலான தீவு என்று தான் இன்றுவரை அறிந்திருந்தேன்!

 

இப்போதெல்லாம், கண்ணீர்த்துளி' வடிவிலான தீவென்று அழைப்பது தான் பொருத்தமானது போல உள்ளது!

 

தொடருங்கள்! 

 

ஒவ்வொரு எழுத்து, எழுத்தாக வாசிக்கின்றேன்! :lol:

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

சோழியன் தொடருங்கள். படங்களுடன் சேர்ந்த தகவல்கள் நன்றாக இருக்கிறது. நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் பலரும் அறியாத தகவல்கள் உள்ளன. நன்றி, சோழியன்.

 

முதலில் இலங்கையில் பூர்வீக குடிமக்கள் ஈழத்தமிழர்களே என இந்தியாவிலும், தமிழகத்திலும் பரப்புரை செய்யுங்கள்!

இன்னமும் தமிழர்கள், ஈழத்திற்கு பிழைக்கப் போனதாகவே எண்ணிக்கொண்டிருக்கும் "ஞே" தமிழர்கள் இங்கே பலருண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி சோழியன்...!

Link to comment
Share on other sites

தொடருங்கள், சோழியன்!

 

கத்தரிக்காய் வடிவிலான தீவு என்று இப்போது தான் கேள்விப்படுகின்றேன்! 

 

மாங்காய் வடிவிலான தீவு என்று தான் இன்றுவரை அறிந்திருந்தேன்!

 

இப்போதெல்லாம், கண்ணீர்த்துளி' வடிவிலான தீவென்று அழைப்பது தான் பொருத்தமானது போல உள்ளது!

 

தொடருங்கள்! 

 

ஒவ்வொரு எழுத்து, எழுத்தாக வாசிக்கின்றேன்! :lol:

 

சோழியன் தொடருங்கள். படங்களுடன் சேர்ந்த தகவல்கள் நன்றாக இருக்கிறது. நன்றி.

 

தமிழகத்தில் பலரும் அறியாத தகவல்கள் உள்ளன. நன்றி, சோழியன்.

 

முதலில் இலங்கையில் பூர்வீக குடிமக்கள் ஈழத்தமிழர்களே என இந்தியாவிலும், தமிழகத்திலும் பரப்புரை செய்யுங்கள்!

இன்னமும் தமிழர்கள், ஈழத்திற்கு பிழைக்கப் போனதாகவே எண்ணிக்கொண்டிருக்கும் "ஞே" தமிழர்கள் இங்கே பலருண்டு.

 

இணைப்புக்கு நன்றி சோழியன்...!

 

அட.. இப்படி ஒரு தொடரை ஒட்டியதையே மறந்துவிட்டேன்.. இன்று சுவியின் கருத்தைப் பார்த்ததும்தான்... குற்றம் வந்து மறதி உணர்வைக் குட்டிப் போனது. தாமதத்திற்கு மன்னித்துவிடுங்கள்... பதிவு தொடர்கிறது. கருத்துகளுக்கு நன்றி!  :D

Link to comment
Share on other sites

5. ஆயுத குழுக்கள். ( சிலோன் முதல் ஈழம் வரை )

 

 

 
22.jpg

சிங்கள வெறியர்கள்தமிழ் மக்கள் மீதான கொடூர தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட தமிழ் பேசும் மக்கள் சிங்களர்கள் அடிக்க அடிக்க வாங்கிக் கொண்டே இருந்தனர். ஆனால் படித்த தமிழ் இளைஞர்கள் மனம் மட்டும் கொதிக்க ஆரம்பித்தது. அந்நிலையில் 1970 ஆம் அண்டு இரண்டாவது முறையாக நாட்டின் பிரதமரானார் ஸ்ரீ மா. தமிழ் மக்களின் உயிரை எடுக்க திட்டமிடும் புத்தபிட்சுகள் இந்தமுறை மாணவர்களின் படிப்பில்போட்டி தேர்வில் கை வைத்தது. பிரதமர் ஸ்ரீமாவுக்கு நெருக்கடி தந்து கல்வியமைச்சர் பதியுதின்முகமது மூலம் கல்வி தரப்படுத்தல் என்ற சட்டத்தை கொண்டு வந்து பாராளமன்றத்தில் நிறைவேற்ற முயலும்போதே தமிழ் மாணவர்கள் தமிழ் மக்களுக்காக அரசியல் செய்கிறோம் என கூப்பாடு போட்ட கட்சிகளிடம் ஓடினார்கள். அவர்களோ அறிக்கை மட்டுமே விட்டுவிட்டு சைலண்ட்டாகிவிட தங்கள் உரிமைக்காக தாங்களே தான் போராட வேண்டும் என்ற நிலையை உணர்ந்து போராட ஆரம்பித்தனர். அதை சிங்கள அரசும்சிங்கள கடையர்கள் அடக்க முயன்றபோது தங்களை பாதுகாத்துக் கொள்ளவும்மக்களை பாதுகாக்கவும் ஆயுதங்களை கையிலெடுத்தவர்கள். தங்களை அப்படியே ஆயுத குழுக்களாக மாற்றிக்கொண்டு போராட ஆரம்பித்தனர்.
 
தமிழ் மாணவர் பேரவை (Tamil Student Union)
 
உரும்பிராய்யை சேர்ந்த பட்டதாரி வாலிபரான சத்யசீலன் தனது கருத்துடன் ஒத்துபோகும் நண்பர்களையும் தன்னுடன் படித்த இளைஞர்களை யாழ்ப்பாண நகரில் மசால் வடைக்கு பேர்ப்போன மலயன் கபே என்கிற உணவு விடுதியின் மேல் 1970-ஆம் ஆண்டு கார்த்திகை-13 தேதி கூடினர் அதில் உரும்பிராய்யை சேர்ந்த பொன். சிவக்குமரன்முத்து குமாரசாமிநல்லூர்ரை சேர்ந்த வில்வராயாஏழாலையை சேர்ந்த அரியரட்ணம்இலங்கை மன்னன்யாழ்ப்பாண சென்யோன்ஸ் கல்லூரி மாணவர் மகா உத்தமன்கல்வியங்காடு சிவராசாதவராசா சென்பகறிஸ் கல்லூரி மாணவர் சேயோன்சென்யோன்ஸ் கல்லூரி மாணவர் ஆனந்தன்காவல் துறையில் பணியாற்றிய ஞானம் உட்பட 15 இளைஞர்கள் ஒன்றிணைந்து முதன் முதலில் தமிழ் மாணவர் பேரவையாக உருவான ஆயுத குழுவாகும்.
 
இவ்வமைப்பிலிருந்தவர்கள் முழு பற்றாளர்கள். உதாரணத்துக்கு ஞானத்தை கூறலாம். காவல்துறையிலிருந்த போது தமிழர்கள் சிங்களம் கற்றால் தான் வேலையே என்கிற சட்டம் கொண்டு வந்தபோது வேலையே வேண்டாம் என ராஜினாமா செய்துவிட்டு வந்தவர். இப்படி பட்டவர்கள் ஒன்றிணைந்து சிங்கள அரசுக்கு எதிராக மாணவர்களை ஒன்றுதிரட்டி ஊர்வலமே நடத்தினர். பிரமாண்டமான ஊர்வலத்துக்கு பின் தம்மக்களை தாக்கும் சிங்களர்களை நாமும் தாக்க வேண்டும் என முடிவு செய்தனர்.
 
மாணவர் பேரவையின் அமைப்பாளரான சத்யசீலன் திட்டப்படி அப்போது தமிழர்களுக்கு எதிராக வெறியாட்டம் போட்ட கலாச்சாரத்துறை அமைச்சர் சோமவீர சந்திராசிரியின் காருக்கு குண்டு வைத்து தகர்த்தனர். இதில் அதிர்ந்த அரசு குண்டு வைத்தவர்களை தேட ஆரம்பித்து பேரவையை சேர்ந்த பலரையும் ஞ்ல்டித்தது. கடைசியில் குண்டு வைத்த பொன் சிவக்குமரனையும் பிடித்தாலும் சில மாதங்களிலேயே ஒவ்வொருவராக வெளியே வந்தனர். அப்படியும் பேரவையில் ஏற்பட்ட உள்பிரச்சனையில் சிலர் விலகிபோயினர்.
 
தமிழராட்சி மாநாட்டு பணிகள் நடந்துகொண்டிருந்தபோது பொன்.சிவக்குமரன் தனது தோழர்கள் சிலருடன் போய் மாநாட்டு பணிகள் எங்களுக்கும் பிரித்து தாருங்கள் நாங்கள் உதவிசெய்கிறோம் என்றார்கள். முடியாது என மறுத்தவர்களிடம் உங்களால் பின் மாநாட்டை நடத்த முடியாது என எச்சரிக்கை விட்டபின் மாநாட்டு பணியின் பொறுப்பாளர்களில் ஒருவரானார் பொன்.சிவக்குமாரன். மாநாடு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. 1974 ஜீன் 10 இறுதிநாள் கூட்டம் அதிகமானதால் இறுதிநாள் நிகழ்வு மண்டபத்துக்கு வெளியே மாற்றப்பட்டது. திருச்சி. பேராசிரியர்.நயினார்முகமது பேசிக்கொண்டிருந்தார். உள்ளே நுழைந்த போலிஸார். கூட்டத்தை கலைக்க முயற்ச்சித்தனர். கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அந்த சலசலப்பை பயன்படுத்திக்கொண்டு போலிஸார் மின்சார ஒயரை பார்த்து சுட்டதில் அது கீழே விழுந்தது. துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதும் ஏற்கனவே பதட்டம் பரபரப்பில் இருந்த பொதுமக்கள் ஓட ஆரம்பித்தனர். அப்போது கீழே விழுந்து கிடந்த மின்சார ஒயரை மிதித்ததாலும் கூட்ட நெரிசலில் சிக்கி ஒன்பது பேர் இறந்து போயினர். இதை பார்த்துக்கொண்டிருந்த முன்கோபக்காரரான பொன்.சிவக்குமாரன் எதையும் யோசிக்காமல் ரத்தம் கொதித்துப்போய் மறுநாளே நல்லூர் பாராளமன்ற உறுப்பினர் வீட்டுக்குள் குண்டு வீசியதில் பாதுகாப்புக்கு நின்ற போலிஸார் காயமடைந்தனர். அதனால் தேடப்படும் குற்றவாளியாக பொன்.சிவக்குமாரனை அறிவித்தது போலிஸ்.
 
தனது தோழர்கள் மகேந்திரன்ஜீவராசாஅரவிந்தன் ஆகியோரோடு அடுத்து குறிக்கு திட்டமிட கூட்டிவைத்து பேச ஆரம்பித்தார். திட்டம் தயார் மாநாட்டு கலவரத்துக்கு காரணமான உதவிபோலிஸ் கண்காணிப்பாளர் சந்தரசேகரை கொல்வது. அதில் போலிஸாரிடம் மாட்டிக்கொள்ள வேண்டிய நிலைவந்தால் மாட்டாமல் தப்ப உயிரை விடுவது என முடிவுஎடுத்தார் பொன்.சிவக்கமாரன். அதற்காக டாக்டர் ஒருவர் மூலம் சையனைட் வாங்கி வைத்துக்கொண்டார். சந்திரசேகரை கொல்ல முயன்று தோற்றதால் சிவக்குமாரன் அதிமுக்கிய குற்றவாளியானார். சிவக்குமாரன் தலைக்கு விலை நிர்ணயித்தார்கள். இந்த நிலையில் சிவக்குமாரன் யாழ்ப்பாணத்தில் இருப்பது நல்லதல்ல என எண்ணி கள்ளதோணி மூலம் தமிழகத்திற்க்கு அனுப்ப முடிவு செய்தார்கள். போக-வர அங்கே செலவுக்கு தேவையான பணத்துக்கு என்ன செய்யலாம் என யோசித்தார்கள் தெரிந்தவர்களிடம் கேட்டார்கள் போதிய அளவு கிடைக்கவில்லை. அதனால் கோப்பாய்யில்வுள்ள கிராமிய வங்கியை கொள்ளையடிக்க முடிவுசெய்தனர்.
 
மகேந்திரன்ஜீவராசாஅரவிந்தன் ஆகியோரோடு திட்டமிட ஆரம்பித்தார். பழைய துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு திட்டத்துக்கு தயாரானார்கள். ஓரு வாடகை காரையும் அமர்த்திக்கொண்டவர்கள் 1974 ஜூன் 5 ந்தேதி காலை 10.20 க்கு கோப்பாய் வங்கி முன் போய் சுட ஆரம்பித்தார்கள் துப்பாக்கிகள் வெலை செய்யவில்லை அதற்க்குள் பொதுமக்கள் கூட ஆரம்பித்தவர்கள். கோள்ளையர்கள் என நினைத்து துரத்த ஆரம்பித்தார்கள். மக்கள் துரத்துவதை கண்டு ஒட ஆரம்பித்தனர் ஊரக்கு வெளியே ஓடினர். துரத்தி வந்த மக்களை சுடாத துப்பாக்கியை காட்டி நிறுத்தியவர்கள் தாங்கள் யார் என்பதை சொன்னதும் ஒரளவுக்கு சிவக்குமாரன் பெயர் அவ்வூர் இளைஞர்களுக்கு தெரிந்திருந்தது அதனால் விட்டுவிட்டனர். ஆனால் போலிஸ் துரத்த ஆரம்பித்தது. முன்னும் பின்னும்  போலிஸார் மடக்க ஆரம்பித்தனர். சிவக்குமரன் உட்பட நான்கு பேரும் ஆளுக்கு ஒரு புறமாக தப்பி ஓடுவதாக திட்டம் அதன் படி ஓடவும் செய்தார்கள். போலிஸாரின் குறியே சிவக்குமாரன் என்பதால் மற்றவர்களை பற்றி அலட்டிக்கொள்ளமால் சிவக்குமாரனை மட்டும் துரத்த ஆரம்பித்தனர். செம்மண் கழனி இனி தப்ப முடியாது என்ற நிலை போலிஸிடம் மாட்டினால் அவ்வளவு தான் என தெரிந்த சிவக்குமாரன் பாக்கெட்டில் சென்ட் பாட்டிலில் வைத்திருந்த சைனட்டை குடித்து உயிரை விட்டான்.
 
குப்பியை கடித்து இறத்து போனான் ஆயுதம் எடுத்த முதல் வீரணின் பலி. இறப்புக்கு தமிழ் மக்கள் கூடி கண்ணீர் சிந்தியதோடு வீடுகளில் கறுப்பு கொடியேற்றி துக்கம் அனுஷ்டத்தினர்.
 
தமிழர் விடுதலை இயக்கம் (TELO -Tamil Elam Liberation organization)
 
மாணவர் பேரவை காலகட்டத்தில்இயங்கிய மற்றொரு பெயரில்லாத இயக்கம் குட்டிமணி-தங்கதுரையுடையது. 1968 முதல் 25 பேர் கொண்ட ஆயுத குழுவாக செயல்பட்டவர்கள் 1979ல் தமிழர் விடுதலை இயக்கமென பெயர் சூட்டிக்கொண்டது. பொன் சிவக்குமரன் குட்டிமணி தங்கதுரையுடன் சிலகாலம் இருந்தார் வேறு சில நாடுகளின் ரகசிய உதவியுடன் ஆயுதங்களை வாங்கியவர்கள்தாங்களே வெடிகுண்டுகளையும் தயாரித்தனர். போலிஸார் தேடும்போதெல்லாம் தமிழகம் தான் பாதுகாப்பு தந்தது கூடவே தமிழக அரசியல் பிரமுகர்களும் ஆதரவு தந்தனர்.
 
1974 ஆம் ஆண்டு கடல் மார்க்கமாக வெடிபொருட்கள்ஆயுதங்களோடு படகில் ஏற்றிக்கொண்டு குட்டிமணி போக முயன்றபோது தமிழக போலிஸôர் படகோடு குட்டிமணியை கைது செய்தனர். தங்கதுரை அப்படியே தலைமறைவானார் கைதான குட்டிமணியை தமிழகரசு இலங்கையிடம் ஒப்படைத்தது. தொடர்ந்தார்ப்போல் தங்கதுரைஜெகனும் கைதாகி இலங்கையின் கொழும்பிலுள்ள வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டனர். 1983 ஜீலை கலவரத்தின் போது சிங்களர்கைதிகளும்,கடையர்களும் கொடூரமாக குட்டிமணி தங்கதுரையை கொன்றாலும் வேறு சிலர் இயக்கத்தை தொடர்ந்து நடத்தினர்.
 
தமிழீழ விடுதலைப்புலிகள்   (LTTE  – Liberation Tigers Of Tamil Eelam)
4226055539_d3f052ee25_z.jpg
 
 
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மாவட்ட நிலஅலுவலராக பணிபுரிந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளை பார்வதி ஆகியோரின் கடைக்குட்டியாக பிரபாகரன் 26-11-1954 பிறந்தார். தனது அண்ணன்2 அக்காமார்களோடு ஜாலியாக இருந்தவருக்கு 4 வயதாகும்போது தனது குடும்பத்திற்கு வேண்டிய விதவை தாய் ஒருத்திசிங்கள கடையர்கள் கலவரத்தின் போது கைகால்களை உடைத்துவிடுவதோடுதமிழர்களை உயிரோடு எரித்ததுபச்சிளம் குழந்தைகளை கொதிக்கும் தார் டிரம்மில் தூக்கி போட்டதை சொல்லி அழ பிரபாகரன் நெஞ்சில் அப்படியே பதிந்தது.
 
பிரபாகரனை அவரது தந்தையார் ஆரம்ப கல்வியை முதலில் மட்டகளப்பு அரசடி மக வித்யாலயாவிலும் அதன் பின் பணிமாற்றம் காரணமாக வல்வெட்டித்துறை அருகேயுள்ள ஊரிக்காட்டிலுள்ள சிதம்பரா கல்லூரியில் 10வது வரை படித்தார். படிக்கும் போது அவரின் தமிழாசிரியரும் தமிழரசு கட்சியை சேர்ந்த வேணுகோபால் மாணவர்களிடம் சிங்களர்களின் கொட்டத்தை அடக்க அடிக்கு அடி தர ஆயுத போராட்டம் தான் நமக்கு சரியான பாதை என அடிக்கடி வகுப்பறையில் கூறுவார். அப்போது ஆயுதம் தூக்கிக் கொண்டிருந்த குட்டிமணி தங்கதுரையுடன் போய் சேர்ந்தார். அங்கிருந்த இளைஞர்களில் வயது குறைவானவர் பிரபாகரன் என்பதால் üதம்பிý என அழைக்கலாயினர். குட்டிமணி குருப்பில் வெடிகுண்டு தயாரிப்பவரோடு உதவிக்கு விட்டனர். விரைவில் வெடிகுண்டு தயாரிப்பிலும் துப்பாக்கிகள் அசம்பல் செய்வதில் தேறினார்.
 
1968ல் தனது 14வது வயதில் தன்னுடன் படிக்கும் 7 நண்பர்களை குழுவாக அமைத்து சிங்கள அரசை எதிர்த்து போராடுவோம் என்ற உறுதிமொழியோடு செயல்பட்டனர். மாணவர் பேரவை சத்யசீலனோடு தொடர்பில் இருந்தவர். 1967ல் சிங்கள மொழி சட்டத்தை எதிர்த்து பஸ் எரிக்கப்படவேண்டும் என்ற தீர்மானத்தின் பேரில் தொண்டானாற்றில் நின்ற பேருந்த எரிக்க முயன்றபோது உதவிக்கு வந்த இரண்டு பேர் பயந்து ஓடிப்போய் விட்டனர். தனியாளக நின்று பஸ்சுக்கு தீ வைத்து சிங்கள அரசுக்கு எதிரான தனது மன தீயை அதிகப்படுத்தினார். 73ல் போலிஸ் தேடியதால் குட்டிமணி தங்கதுரையுடன் முதன் முறையாக தமிழகம் போன பிரபாரகரன் வேதாரண்யத்திலிருந்து பெரியஜோதியோடு சென்னை போய் அரசியல் கட்சி பிரமுகர்களை சந்திக்கலாயினர்.
 
தமிழராட்சி படுகொலையை கேட்டு மனம் கொதித்து 1974ல் அ.வா. ராசத்தினம் உதவியுடன் யாழ்ப்பாணம் திரும்பிய பிரபாகரன் 9.4.1974ல் புதிய தமிழ் புலிகள் (Tamil New Tigers) என்ற ய்ச்ட்ட்ல்ஹ்;ஹ்ட் அமைப்பை தொடங்கினர். சில தாக்குதலுக்கு பின் மே-51976ல் தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.டி.டி.இ) என பெயர் மாற்றம் செய்தவர்கள் மத்திய குழுவையும் அமைத்தனர். ராணுவம்அரசியல்புலனாய்வு என சில பிரிவுகளை உருவாக்கினர். மிக கட்டுப்பாடு மிக்க இதில் தியாக மன்பான்மை உள்ளவர்களை சேர்ந்தனர் சேர்க்கப்பட்டனர்.
 
  ஈழப்புரட்சிக்கார விடுதலை அமைப்பு. ( EROS - Eelam Revolutionary Organization of Students)
plote+siddarthan.jpg
 
உலகத்தின் பல தீவிரவாத குழுக்களோடு தொடர்பிலிருந்த அமைப்பு 1975ல் லண்டன் நகரில் இளையதம்பி ரத்னசபாபதியால் தொடங்கப்பட்டது. இதன் உப அமைப்பாக Central Union af Eelam Students (GUES) அமைப்பை சென்னையில் தொடங்கி நடத்தினர். தனது போராளிகளை லெபனாலில் உள்ள அபுஜாகித்தின் PLO அமைப்பிடம் ஆயுத பயிற்சிக்காக ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டி அனுப்பியது. இலங்கையில் அருளர் தலைமையிலான குழு செயல்பட்டாலும் பல குழுக்களை அமைத்து இலங்கை தமிழர் பிரச்சனையை உலகின் பார்வைக்கு கொண்டு செல்ல முயன்றது. 1975ல் உலககோப்பை போட்டி மான்செஸ்டர் (ஙஅசஇஏஉநபஉத)நகரில் நடந்த பொழுது இலங்கை சிங்கள அரசை கண்டிக்கும் வாசகங்களை சிறு சிறு தட்டிகளில் எழுதி கேமராவுக்கு காட்டி கவனத்தை ஈர்த்தனர்.
 
தமிழ் இளைஞர் பேரவை - TYF  (Tamil Youth Forum )
 
தமிழ் மாணவர் பேரவையிலிருந்து பிரிந்து வந்த சபாலிங்கம்தமிழரசு கட்சியின் இளைஞர் பிரிவிலிருந்த சபாலிங்கம் ஆகியோரை தலைமையாக கொண்டு 1970 ஜனவரியில் இளைஞர் பேரவை ஆரம்பிக்கப்பட்டது. தமிழரசு கட்சியின் தலைவர்களுள் ஒருவரான அமிர்தலிங்கம் பேரவைக்கு ஊட்டம் தந்ததால் செயல்பட தொடங்கிய இதில் 40 பேர் இருந்தனர். ஆயுத குழுவாக செயல்பட்ட இது காலப்போக்கில் காணாமல் போனது. இதில் தான் ஆரம்பத்தில் உமாமகேஸ்வரன் இருந்தார்.
 
தமிழீழ விடுதலை மக்கள் கழகம் (People’s Liberation Organization of Tamil Eelam PLOT)
 
தமிழ் இளைஞர் பேரவையின் கொழும்பு நகர செயலாளராகயிருந்த உமா மகேஸ்வரன் ஆங்கிலம்தமிழ் சரளமாக பேசக்கூடியவர். அமிர்தலிங்கம் தான் உமா மகேஸ்வரனை பிரபாகரனுக்கு அறிமுகப்படுத்தி உனக்கு ரொம்ப உபயோகமாயிருப்பான் என்றார். உமாவும் ஆக்ட்டிவ்வாக வேலை பார்த்ததால் இயக்கத்தின் சேர்மனாகவும் ஆனார். அதே வேலை எல்.டி.டி.இ யின் கட்டுப்பாட்டை மீறி இயக்கத்திலிருந்த ஊர்மிளாதேவி என்கிற பெண் போராளியை காதலித்ததால் பிரச்சனை பெருசானது. உமாவுக்கு ஆதரவாக லண்டனிலிருந்ததெல்லாம் ஆதரவு கரம் நீண்டது. அதையெல்லாம் ஒதுக்கிய பிரபாகரன் உமா மகேஸ்வரனை இயக்கத்திலிருந்து நீக்கினார். அதன் பின் சில ஆண்டுகள் கழித்து 1980ல் தமிழீழ விடுதலை மக்கள் கழகம் என்கிற அமைப்பை உருவாக்கினார். பெரிய இயக்கமாக மாற்ற முயன்று தோற்ற உமா இந்திய உளவு அமைப்பான ரா (RAW- Research and Analyse Wing) அதிகாரிகளோடு தொடர்பில் இருந்தார். ரா அமைப்பின் பயிற்சி,பணம் பெரியளவில் கிடைத்தது. ரா திட்டப்படி மாலத்தீவில் ஆட்சி கலைப்பில் ஈடுபட்டார்கள் PLOT அமைப்பினர். அது தோல்வியில் முடிந்தது. பின் அமைப்பில் பிரச்சனை வந்து பல குட்டி தளபதிகள் பிரிந்து போனார்கள். இந்திய இராணுவம் விடுதலைப்புலிகள் மோதலின்போது விடுதலைப்புலிகளை அழிக்க முயன்றனர். இந்திய இராணுவத்துக்கு விடுதலைப்புலிகளின் மறைவிடங்களை காட்டி கொடுத்தார்கள் PLOT அமைப்பினர். உமாமகேஸ்வரன் 1989ல் கொழும்பு கடற்கரையோரம் சுட்டுக்கொல்லப்பட்டு கிடந்தார் அதன் மர்மம் இன்னும் புலப்படாத மர்ம புதிராக உள்ளது.
  
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF-Eelam Peoples Revolutionary Liberation Front )
EROS ல் இருந்து பிரிந்த பத்மநாபன் 1982ஆம் ஆண்டு இடதுசாரி கட்சி மார்க்சிஸ்ட் உதவியோடு EPRLF என்ற அமைப்பை ஏற்படுத்தினார். ஆயுத குழு என காரணம் சொல்லி இலங்கை அரசு அதன் தலைவர் மற்றும் உறுப்பினர்களை கைது செய்து சிறையிலடைத்தது. மே-10-1984ஆம் ஆண்டு இதன் உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்தில் தங்கி புராஜக்ட் வேலையிலிருந்த 1 அமெரிக்க தம்பதியை ஸ்டான்லிமேரி அலனை கடத்தி பணயகைதியாக வைத்துக்கொண்டு 20 பேராளிகளை விடுவிக்க வேண்டுமென்றார்கள்.
 
கடத்தலை கேட்டு ஆடிப்போன அமெரிக்க அதிபர் சினியர் புஷ் சி.ஐ.ஏ அதிகாரிகளை இந்தியாவுக்கு அனுப்பினார். அவர்கள் இந்தியாவின் ரா, ஐ.பி அதிகாரிகளோடு பேச்சு வார்த்தை நடத்தினர். பின் மூன்று உளவு அமைப்பின் அதிகாரிகளும் சேர்ந்து EPRLF உறுப்பினர்களிடம் பேச்சுவர்த்தை நடத்தி மத்திய குழு உறுப்பினர் பத்மநாபனை தவிர மற்றவர்களை விடுவிப்பதோடு 50 மில்லியன் தங்கத்தையும் அவர்களுக்கு தந்து அமெரிக்க ஜோடியை மீட்டனர். காலப்போக்கில் அரசியல் இயக்கமாக மாறிய இவ்வியக்கத்தை சேர்ந்த வரதராஜபெருமாளை இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்த போது ராஜிவ்காந்தி-ஜெயவர்தனா திட்டத்தில் உறுவான கூட்டு உடன்படிக்கையின் படி வட-கிழக்கு மாகாண முதல்வராக நியமிக்கப்பட்டார். அமைதிப்படை திரும்பிய பின் விடுதலைப்புலிகள் துரோகிகள் என மாற்று இயக்கத்தினரை கொல்லும் போது இந்தியாவின் ரா அமைப்பு வரதராஜபெருமாளையும் அவரின் ஆதரவாளர்களையும் இந்தியாவுக்கு அழைத்து இன்றும் பாதுகாத்துக்கொண்டது. அவர்களை இன்றளவும் பாதுகாத்து வருது.
40953_422969696330_134355511330_5406794_
 
 
Tamil Eelam Army, Tamil National Eelam Army, Tamil Eelam Liberation Army, Eelam National Liberaiton Font, Three Stars, Eelam people’s Democratic party  என பல குழுக்கள் தமிழர்களுக்காக ஆயுதங்களை ஏந்தினாலும் ஒரு சில குழுக்களே தீவிரமாக செயல்பட்டன. சில குழுக்களை ரா அமைப்பே உருவாக்கியது அதில் குறிப்பிடதக்கது.
 
ஈழதேசிய விடுதலை முன்னணி : ENTLF –
 
PLOT அமைப்பில் இருந்தவர் பரந்தன்ராஜன் லெபனாலில் பயிற்சி பெற்றவர். உமாவோடு இருந்தவர் PLOTஆரம்பித்தபோது ராணுவ தளபதி பதவி தராததால் தன் ஆதரவாளர்களோடு வெளியேறினார். அதேபோல் TELO, EPRLF ல் இருந்து டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் விலகினார்கள். இந்த 3 தரப்பையும் இணைந்த இந்தியாவின் ரா அமைப்பு, 3 ஸ்டார் என்ற அமைப்பை உருவாக்கியது. தொடர்ந்து EPRLF--ல் இருந்து டக்ளஸ் தேவனாந்தாவும் விலகிவர அவர்களை ஒண்றிணைத்து 1987-ல் ENTLF ஆரம்பித்து ஊட்டம் தந்தது. இவர்களின் பணி ரா சொல்வதை செய்வது தான்.
 
அதிலிருந்து பிரிந்த டக்ளஸ்தேவானந்தா ஈழ மக்கள் ஜனநாயக கட்சி EPDP ( Eelam People's Democratic Party)என்ற கட்சியை தொடங்கி தற்போது சமுக நல துறை அமைச்சராக உள்ள அவர் 1989-ல் சென்னையில் 10வயது பையனை கடத்தி 7 லட்சம் பணம் கேட்டு மிரட்டினர். கீழ்பாக்கம் போலிஸôர் பிடித்து வழக்கு பதிவு செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைக்க 1 வருடம் சிறையில் இருந்தார்.
 
தொடரும்...
Link to comment
Share on other sites

6. விடுதலைப்புலிகள் ( சிலோன் முதல் ஈழம் வரை )

 
60825_426422461330_134355511330_5483435_

   தமிழர்களை நசுக்கிய சிங்கள அரசிடமிருந்தும்சிங்கள மக்களிடமிருந்தும் தன் மக்களை காப்பாற்றவும்உரிமைகளை பெறவும் எழுச்சி பெற்று போராடிய ஆயுத குழுக்களுள் தனித்தன்மை வாய்ந்த ஆயுதக் குழு விடுதலை புலிகள் அமைப்பு தான். உலக அளவில் பேசப்படுபவர்கள். இலங்கை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளை கடவுளாகப் பார்க்கிறார்கள்.
 
    இலங்கையின் யாழ்பாணம் அருகேயுள்ள வால்வெட்டி துறையை சேர்ந்த 7 சிறுவர்கள் கூட்டாக சேர்ந்து ஆரம்பித்த தமிழ் புதிய புலிகள் அமைப்பில் வீரம்நாட்டுக்காக உயிர் அர்ப்பணிப்புஒழுக்கம் தேவை என்பதை பிரதானமாக வைத்தார் அமைப்பின் தலைவரான 14 வயது பிரபாகரன். சிறு வயதிலேயே அமைப்பை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல பெரிய கனவே கண்டார். அக்கனவு வர காரணமாக இருந்தவர்கள் சுபாஷ் சந்திர போஸ்பக்த்சிங்கும் ஆவர்.
 
   தனது தமிழாசிரியரின் விருப்பப்படி புத்தகங்களை படிக்க ஆரம்பித்த பிரபாகரனுக்கு எதிரியின் வலிமை பற்றி கவலைப்படாமல் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி இந்தியாவை அடிமை படுத்தி வைத்திருந்த ஆங்கிலேயனை எதிர்த்த நேதாஜியின் வரலாறு பிரபாகரனை மிகவும் கவர்ந்தது. அதேபோல் உயிரைப்பற்றி கவலைப்படாமல் நாட்டுக்காக தூக்கு கயிற்றை முத்தமிட்ட பகத்சிங்கின் அர்ப்பணிப்பால் உருகிபோனார். இதை படித்தவர் தனது அமைப்பிற்கு வீரம்அர்ப்பணிப்பு உள்ளவர்களையே தேர்ந்தெடுத்தார்.
 
   ஆரம்பத்தால் இளைஞர் பேரவையில் இருந்த பிரபாகரன். குட்டிமணி - தங்கதுரையுடன் இணைந்து குண்டு தயாரிக்கவும் கற்று கொண்டார். அதன் பின் தனது டி.என்.டி அமைப்பை உருவக்கியபோது ஆயுதமென்று எதுவுமில்லை. அப்போது யாழ்பாணத்தில் ஒருவர் தனது ரிவால்வரை விற்க போகிறார் என்ற தகவல் வர பிரபாகரன் தனது நண்பர்களுடன் போய் விலை கேட்டதும் ஏற இறங்க பார்த்த அந்த நபர் சின்ன பசங்க என்பதால் விலையை அதிகப்படுத்தி 300 ரூபாய் என்றார். திரும்பி வந்து பணத்தை புரட்ட ஆரம்பித்தார்கள். பிரபா தனது அக்காவின் செயினை யாருக்கும் தெரியாமல் எடுத்து வந்து விற்று பணம் போட்டும் 300 ரூபாய் சேரவில்லை 180 ரூபாயோடு பேரம் பேச 300 ரூபாய்க்கு கீழே இறங்கி வர மறுத்துவிட்டார் துப்பாக்கிக்காரர். துப்பாக்கி வாங்கும் ஆசை நிராசையானது பிரபா மனதில் அது ஆழமாக பதிந்தது.
 
  துப்பாக்கி இல்லாமல் பயிற்சி செய்ய முடியாது என்பதால் மீண்டும் குட்டிமணி - தங்கதுரை குழுவுடன் பயிற்சி செய்ய ஆரம்பித்தார். அப்போது குட்டிமணிபிரபாகரனோடு 3 பேர் சேர்ந்த குழுவை தயார் செய்து சிங்கள எழுத்து பொறிக்கப்பட்ட பேருந்தை தீ வைத்து எரிக்கும் வேலையை தந்தார். வெறியுடன் போன 3 பேரும் கிட்டே போக, அதில் 2 பேர் பயத்தில் பாதியில் ஓடிவிட்டனர். பிரபாகரன் மட்டும் தனியாளாக போய் பேருந்துக்கு தீ வைத்து தனக்கான முதல் பணியை வெற்றியாக்கினார். அந்த வெற்றி செய்தியை குழுவிடமும்நண்பர்களிடம் மட்டுமே கூற முடிந்தது. காரணம்  ரகசிய குழுவில் இருப்பது குடும்பத்தில் யாருக்கும் தெரியாது. தெரியபடுத்தவுமில்லை.
 
  அதே நேரம் இலங்கையின் கலாச்சார துறை துணை அமைச்சராக சந்திராசிரி என்பவர் இருந்தார். தமிழர்கள் என்றால் இவருக்கு எட்டிக்காய் போல தனக்கு பொழுதுபோகலஆபிஸ்ல வேலை இல்லைன்னா தமிழனை வெட்டுங்க  என உத்தரவு போட்டுவிட்டு இறப்பு தகவலை கேட்டு மகிழ்ந்து கொள்பவர். அவரை பரலோகம் அனுப்பமுடிவு செய்த பொன்.சிவக்குமரன் அந்த துணை அமைச்சர் காருக்கு டைம்பாம் வைத்து தகர்த்து புன்னகைத்தார்.
 
   இது சிங்கள அரசை கோபம் கொள்ள வைத்து ஆயுதம் தூக்கும் தமிழனை தேடி அழிக்க உத்தரவு இடப்பட்டது. காவல்துறை தேடி அலைந்தபோது முக்கிய ஆயுத குழு பிரமுகர்களெல்லாம் தலைமறைவானார்கள். அரசல் புரசலாக கேள்விபட்ட காவல்துறை பிரபாகரன் வீட்டிக்குபோக அதற்கு முன்பே எஸ்கேப் ஆன பிரபாகரன் குட்டிமணி - தங்கதுரையுடன் தலை மறைவானார். பிரபாவை தேடி வந்த அவரது தந்தையாரிடம்நான் உங்களுக்கு பயன்படமாட்டேன்நாட்டுக்காக என்னை அர்பணிச்சிட்டேன் என தீர்க்கமாக கூற உறுதியை கேட்டு திரும்பிவிட்டார்.
 
  குட்டிமணிபிரபாகரன்தங்கமணிபெரிய ஜோதி 4 பேரும் ஒரு தோனியில் ஏறி வேதாரண்யத்தில் இறங்கியவர்களில் குட்டிமணிதங்கதுரையும் சேலம் பயணமானார்கள்பெரிய ஜோதியும்பிரபாகரனும் மதுரை போய் அங்கிருந்து சென்னை பயணமானார்கள். ஒரு நாள் எதேச்சையாக இலங்கையின் டாப் மோஸ்ட் கிரிமினிலான செட்டிதனபாலசிங்கத்தை சந்தித்தார் பிரபாகரன். செட்டியிடம் என்னோட குரூப்ல சேர்ந்துக்க என அழைத்தார் பிரபாகரன். இதைப்பார்த்த பெரியஜோதி வேணாம் தம்பி எனச்சொல்ல இல்லண்ணே திறமையானவன்சொல்றத செய்வான்எனக்கு நம்பிக்கையானவன் என சர்டிப்கெட் தந்து டி.என்.டி அமைப்பில் இணைத்துக் கொண்டார்.
 
   அதே நேரம் இலங்கையில் 1974 ஜனவரி 3-10ல் யாழ்ப்பாண வீர சிங்கம் மைதானத்தில் நடைபெற்ற உலக தமிழராட்சி மாநாட்டில் போலிஸாரால் 9 பேர் இறந்தனர். இதற்கு காரணமான யாழ்ப்பாண மேயரான ஆல்பிரஃட் துரையப்பாகாவல்துறை அதிகாரி துரையப்பா இருவரையும் கொல்ல முயன்று பொன்.சிவக்குமாரன் தோல்வியை தழுவினார். அடுத்து சில தோல்விகளால் குப்பியை கடித்து இறந்து போயிருந்தார்.
 
   தமிழகத்தில் சும்மா  இருப்பது பிடிக்காமல் யாழ்பாணம் திரும்பிய பிரபாகரன் மேயர்காவல்துறை அதிகாரியை கொல்லும் பணியை ஏற்றுக்கொண்டார். மேயரை கண்காணித்த டி.என்.டி அமைப்பினர் திட்டம் தீட்ட ஆரம்பித்தனர். அதே நேரம் காங்கேசன் துறை தொகுதியில் இடைத்தேர்தல் தந்தை செல்வாவுக்காக பிரபாகரன் தேர்தல் வேலை செய்ய வேண்டியிருந்தது. தேர்தலில் வெற்றியும் கிடைத்தது. அப்போது ஓரளவு பணமும் இருந்ததால் 2 ரிவால்வர்களை வாங்கினர் பிரபாகரன். குழுவில் உறுப்பினர் எண்ணிக்கை சேர ஆரம்பித்தது. பண தட்டுப்பாடும் வந்தது. வங்கியை கொள்ளயடிக்கலாம். என்றான் செட்டி. நம்ம முதல் தாக்குதல் பணத்துக்காக இருக்ககூடாது என மறுத்தார்.
 
   ஆனால் செட்டியோ ஒரு வங்கியில் கொள்ளையடித்தான். அப்பணத்தில் சுகபோகமாக வாழ ஆரம்பித்தவன்மேல் போலிஸ் சந்தேகப்பட்டு விசாரித்து பிடித்தது. பிரபாகரன் அதிர்ந்து போனார். நண்பனே ஏமாற்றிய வருத்தம் உடனே அமைப்பினரை தலைமறைவாக சொன்னார். காரணம் செட்டி டி.என்.டி பற்றி கூறிவிட்டால். ஆனால் செட்டி அப்படி எதுவும் சொல்லவில்லை. 
 
  அமைப்பை கூட்டிய பிரபாகரன் மேயரை போட்டு தள்ளும் திட்டத்தை வேக வேகமாக தீட்டினார். திட்டம் தயாரானது. பிரபா தலைமையில் 1975 ஜீலை 27ந்தேதி வரதராஜ பெருமாள் கோயில் அருகே வந்த மேயரின் காரை கை காட்டி நிறுத்திய பிரபா கண் இமைக்கும் நேரத்தில் பிரபாவின் துப்பாக்கி குண்டு மேயரின் உயிரை பறித்தது. அதே காரில் ஏறி பிரபா தனது குழுவோடு தப்பி விட்டார். நமது துரோகி அழிந்தான். அழிச்சது யார்னு தெரியலயே எப்படியும் நம்ம பசங்க தான் செஞ்சியிருக்கனும் அது யாராயிருந்தால் நமக்கென்ன என தமிழ் மக்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர். சிங்கள மக்களும்சிங்கள அரசு தலைமையும் அதிர்ந்தே போனது. பிரதமர் ஸ்ரீமாவே சுட்டது யார்னு பாத்து தேடி புடிங்க என உத்தரவிட்டார்.
 
   எதிர் விளைவு எப்படியிருக்குமென திட்டமிட்ட பிரபாதனது குழுவினரிடம் யாரும் வீட்டுக்குப் போகக்கூடாது. போனால் வீட்டில தங்க கூடாது. எதிரியிடம் மாட்டிக்காதீங்க என எச்சரிக்கை செய்தார். எச்சரிக்கையை மீறி ஆறுமுகம் கிருபாகரனும்கலாபதியும் வீட்டுக்கு போய் ஆயுதத்தோடு ரோந்து வந்த போலிஸாரிடம் பிடிபட்டனர். விசாரணையில் தமிழ் விடுதலை புலிகள் பற்றி இருவரும் கூற இலங்கை காவல்துறையே அலறியது. வால்வெட்டி துறை பிரபாகரனா பண்றான் என ஆச்சர்யமும்அதிர்ச்சியும் அடைந்தனர். பிரபாகரனை தேட ஆரம்பித்தனர்.
 
   யாழ்ப்பாண இளைஞர்களே குதூகலித்தனர். பிரபாகரனை தேடி அலைந்து அவரை சந்தித்து இயக்கத்தில் இணைய முன் வந்தனர். வந்த இளைஞர்களில் திறமையானவர்கள் யார் யார் என்பதை கண்டே சேர்ந்தவர் மற்றவர்களை ஆதரவாளர்களாக்கி சோர்ஸ்களாக்கினார்சிலரை புறக்கணிக்கவும் செய்தார். இளைஞர்கள் கூட்டம் அதிகமாக அவர்களுக்கு பாதுகாப்பான பயிற்சி களத்தை அமைக்க இடத்தை தேடலாயினார்.
 
   வவுனிய நகரிலிருந்து 5கி.மீ தொலைவில் மறைந்த மரங்கள் அடங்கிய காட்டினில் அமைந்த மறைவிடத்தை கண்டறிந்து பூந்தோட்டம் என பெயரிட்டு பயிற்சி களத்தை உருவாக்கினர். இயக்கத்தில் இணைபவர்களுக்கு தற்காப்பு கலைகளாக கராத்தேமல்யுத்தம்தாக்குதல்துப்பாக்கி சுடுதல்குண்டு தயாரித்தல் உட்பட எல்லாவற்றையும் கற்று தர ஏற்பாடு செய்தவர். மனதில் உறுதியையும் விதைத்தார். எதிரியிடம் மாட்டினால் உயிரை மாய்த்துக்கொள்ள மனதளவில் தயார் செய்தார். பயிற்சியின்போது வீரர்கள் தவறு செய்தால் கத்திவிடுவார். எதிரியை விட நீ திறமைசாலியாக இருக்கவேண்டும் அப்போது தான் நீ வெல்லமுடியும். தாமதம் வர கூடாது என எச்சரிப்பார்.
photo108.jpg
 
    அமைப்பில் இளைஞர்கள் கூட்டம் அதிகமானதால் தேவைகளும் அதிகமானது பணத்தட்டுப்பாட்டால் அமைப்பு கஸ்டப்பட்டது அரசின் புத்தூர் வங்கியில் கொள்ளையடிக்க திட்டமிட்டார்கள். தகவல் திரட்டப்பட்டது வங்கி பணியில் எத்தனை பேர்பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படிவங்கியின் உள்அமைப்பு எப்படியென தகவல் திரட்டப்பட்டவுடன் பக்காவாக ப்ளான் போடப்பட்டது. 1976 மார்ச் 5 புத்தூர் வங்கியில் பிரபா தலைமையில் நுழைந்த பசப அமைப்பினர். 5 லட்ச ரூபாய் நகையாகவும், 2 லட்ச மதிப்பில் நகையாக மூட்டை கட்டிக்கொண்டு கிளம்பினர் மொத்த வேலையுமே 15 நிமிடத்தில் முடிந்தது.
 
   பணம் கைக்கு வந்ததும் எதிர்கால திட்டத்தை தீட்ட ஆரம்பித்தார் பிரபாகரன். 1976 மே 5ல் அமைப்பின் முக்கிய பிரமுகர்களை பூந்தோட்டத்தில் கூடி புதிய தமிழ் புலிகள் என்ற பெயரை தமிழீழ விடுதலைப் புலிகள் என மாற்றினார். அமைப்பிற்காக மதுரையை சேர்ந்த இளம் ஓவியர் ஒருவர் மூலம் கொடியையும் உருவாக்கியிருந்தார். மஞ்சள் - சிவப்பு கலர்எதிரி மீது பாயும் புலி கால்கள்வகையில் அதன் பின்னால் பெருக்கல் குறியில் 2 துப்பாக்கியை நிற்க வைத்தவர் அவைகளை சுற்றி துப்பாக்கி ரவைகளை அடுக்கி வைத்து கொடியை உருவாக்கி தந்திருந்தார். அமைப்பின் உறுப்பினர்கள் மதுமாதுக்களை எண்ண கூடாதுபாக்குபீடாபுகைத்தல் ஆகியவையை நோக்க கூடாது. நமது நோக்கம் தமிழீழம் (தனிநாடு) அதற்கென ராணுவம்பொருளாதாரம் (நீதி) கல்விஅரசியல் துறைகளை உருவாக்க வேண்டும்.
 
   நமது நோக்கத்தை ஏற்று இயக்க உறுப்பினர்களாக வருபவர்கள். குடும்ப உறவை துறக்க வேண்டும்அமைப்பில் சேர்ந்ததும் சொந்த பெயரை துறந்து இயக்கம் சூட்டும் பெயரை ஏற்றுக்கொள்ள வேண்டும். இயக்கத்தை விட்டு வெளியேறுபவர்கள் மாற்று இயக்கத்தில் சேரகூடாது. இயக்க உறுப்பினர்கள் கல்யாணத்தை பற்றி நினைக்கவே கூடாது. தலைமைக்கு விசுவாசமாகயிருக்க வேண்டும் தலைமையின் கட்டளைகளை சிரமம் மேற்கொண்டு செயல்படுத்த வேண்டும். இயக்கத்தவர்கள் மக்களோடு நெருங்கி பழகி இயக்கத்தை வளர்க்க வேண்டும்நமது எதிரிகள் சிங்கள அரசும் - சிங்கள வெறியர்களும் தான் என போதிக்கப்பட்டார்கள்.
 
    அமைப்பை நிர்வகிக்கவும்முடிவுகளை எடுக்க மத்தியகுழு அமைக்கப்பட்டது. மத்திய குழுவில் பிரபாகரன்நாகராஜாசெல்லக்கிளிஐயர்விஸ்வேஸ்வரன் ஆகியோர் இருந்தனர். இதில் பிரபாகரனுக்கு அரசியல் மற்றும் ராணுவ பிரிவின் தலைவர் பொறுப்பை எடுத்துக் கொண்டார். மற்றவர்களுக்கு நீதி பிரிவுஆட்கள் சேர்ப்பு பிரிவுபயிற்சி பிரிவு என பிரித்து தரப்பட்டது. முதல் வேலையாக இலங்கை காவல்துறையின் உளவு பிரிவின் செயல்பாடுகளை கண்காணித்தல்உளவு சோர்ஸ் யார்யார்தமிழனை காட்டி கொடுக்கும் தமிழ் துரோகிகள் யார்என தேடி கண்டுபிடித்து துரோகிகளை களையெடுத்தனர். தொடர்ந்து போர் திட்டங்களையும் தீட்ட ஆரம்பித்தனர்.
 
   1977 பொது தேர்தலுக்கு முன் தந்தை செல்வா தமிழ் ஐக்கிய முன்னணியை தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி ஆக பெயர் மாற்றினர். அதற்கு முன்பே தீவிரவாத சிந்தனை கொண்டு இளைஞர்களையும்குழுக்களையும் ஆதரித்தவர்ரகசியமாக பண உதவியையும்ஆலோசனையையும் தந்து வந்தார். பிரபாகரன் கூட ஆலோசனை பெற்றார். 1977 ஏப்ரல் 29 தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரமாம் பமகஊன் தலைவருமான தந்தை செல்வா மறைந்ததும் அவ்விடத்துக்கு அமிர்தலிங்கம் வந்தார். அப்போது நடந்த தேர்தலில் சிங்கள அரசியல் நரியும்டட்லி அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் இருந்த ஜெயவர்த்தனே பிரதமர் ஆனார்.
 
   தமிழர் பகுதிகளில் தமிழர் நலன்தமிழகம் கோரிக்கையை மக்கள் முன் வைத்த TULF கட்சிக்கு அமோக வெற்றி. அதனால்  அமிர்தலிங்கம் எதிர் கட்சி தலைவராகும் வாய்ப்பு. பலரும் அமிர்தலிங்கம் எதிர்கட்சி தலைவராக மாட்டார் என நினைக்க அதற்கு மாறாய் எதிர்கட்சி தலைவர் பொறுப்பை ஏற்றவர் அரசின் பங்களாகார்களை பெற்றார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியதும் அமைதியாக அனைவரிடமும் இது மூலமாக நிறைய சாதிக்கலாம் பொறுமையாயிருங்க என்றார். புதுசாக பதவியேற்ற ஜெயவர்த்தனே அரசிடம் முன்பிருந்த ஆட்சியாளர்களை விட அதிகமான குரோதமேயிருந்தது. 1977 ஆகஸ்ட் 15 யாழ்ப்பாண நகர் ரோட்டரி கிளப் விழாவில் சிங்கள காவலர்கள் அனுமதி அட்டையோஅடையாள அட்டையோ எதுவும்மில்லாமல் விழா மண்டபத்தில் நுழைய முயல தமிழ் காவலர்கள் தடுத்து நிறுத்தியதால் பிரச்சனை ஆனது. அது அங்கேயே அடி - தடியாக மாறியதால் பிரச்சனை ஜெயவர்த்தனே காதுக்கு கொண்டுபோகப்பட்டது. கோபமான பிரதமர்அவனுங்கள இவுங்களால திருப்பியடிக்க முடியலன்னா இவுங்கயெதுக்கு என கத்த அதை கேட்டு சிரித்தபடியே வெளியே வந்த சிங்கள அதிகாரிகள் தகவல் அனுப்பினர்.
 
   அடுத்தடுத்த நாட்களில் யாழ்ப்பாண நகரமே கண்ணீர் விட்டது. திரும்பிய பக்கமெல்லாம் தீ மூட்டமும் புகையும் தான்குப்பைகளை போல யாழ்ப்பாண வீதிகளில் சடலங்கள்ஓடையாக ஓடியது தமிழனின் குருதி இறந்தவர்கள் 350 பேர், தரைமட்டமான வீடுகள் 40 ஆயிரம்கை - கால் இழந்தவர்கள் கணக்கில்லை என அறிவிக்கப்பட்டது. ஓடினார்கள் எல்லோரும் அமிர்தலிங்கத்திடம் கோபத்தில் குமுறியவர்களை வார்த்தை ஜாலத்தில் சாந்தப்படுத்தியவர் கூட்டத்தோடு நின்றிருந்த பிரபாகரனை மட்டும் தனியே அழைத்து போனவர்.
 
   “இவன் பேரு உமாமகேஸ்வரன் கொழும்பு நகரோட இளைஞர் பேரவை பொறுப்பாளர். இவனை உன்னோட சேர்த்துக்க. ஆங்கிலம் சரளமா பேசுவான்எழுதுவான்திறமையானவன்நம்பிக்கையானவன் என சர்டிப்கெட் தர பிரபாவும் உமாவோடு அடுத்தடுத்து 2 முறை பேச இருவருக்கும் எண்ண அலை ஒத்துபோனது. உமாமகேஸ்வரனை தம் பயிற்சி பாசறைக்கு அழைத்து வந்த பிரபாகரன் இயக்கத்தவர்களுக்கு அறிமுகப்படுத்திவிட்டு மத்திய குழுவில் மாற்றம் கொண்டு வந்தவர் திறமைக்கு மதிப்பு தர எண்ணி தனது பொறுப்பிலிருந்து அரசியல் துறையை உமாமகேஸ்வரனுக்கு தந்து அவரின் துறையில் சுதந்திரம் தந்தார். இது தொடக்ககால உறுப்பினர்களுக்கு மனவருத்தத்தை தந்தது.
 
    அதே நேரம் யாழ்ப்பாண மேயர் துரையப்பாவின் கொலை வழக்கை சீக்கிரம் கண்டு பிடிக்க சொல்லி கருணாநிதிசண்முகநாதன்மற்றொரு சண்முக நாதன் என 3 தமிழ் காவல்துறை அதிகாரிகளை அரசு நியமித்தது. பிடிப்பட்டால் சுட்டுதள்ளுவோம் என வீரவசனம் பேசிவிட்டு வழக்கை விசாரித்தவர்களின் புகைப்படங்களை தேடிப்பிடித்த பிரபாகரன் திட்டம் போட்டு 1978 பிப்ரவரி 4, கருணாநிதியையும் தொடர்ந்து மே-18, 2 சண்முகநாதன்களையும் கொன்றதால் காவல்துறை தலைமை மட்டுமல்ல ஜெயவர்த்தனாவே ஆடிப்போனார்.
 
   இவுங்கள கொன்னது நாங்க தான் என ஆயுதகுழு ஒவ்வொன்றும் தகவலை மக்களிடத்திலே பரப்பிக் கொண்டிருந்தது. அதை பற்றி கவலைப்படாமல் பிரபாகரன் அம்பாறைத் தொகுதி எம்.பி கனகரத்தினத்துக்கு குறி வைத்தார். காரணம்அம்பாறை தொகுதி இடை தேர்தலில் தமிழர்களிடம் ஏகப்பட்ட வாக்குறுதி தந்து வென்ற கனகரத்தினம் ஜெயித்ததும் ஜெயவர்த்தனாவின் ஆதரவாளராக மாறிவிட்டார் அதற்காகவே அவர் உயிருக்கு குறி வைக்கப்பட்டது. இப்பணியை பிரபாகரன்உமா ஆகிய இருவரும் கையிலெடுத்தனர். 1978 ஜனவரி 26 (இந்திய குடியரசு தினம்) கொழும்பு போயிருந்த இவரும் கனகரத்தினம் வீட்டருகே கனகரத்தினம் கார் மீது குண்டு வீசிவிட்டு தப்பினர். கொழும்பிலிருந்து பிரபாகரன் கிளம்பும்போது உமா நீ இங்கேயே இருந்து சில பணிகளை கவனி அழைக்கும் போது வந்தா போதும்மென கூறிவிட்டு தனியாளாக பஸ் ஏறினார்.
 
    பிரபாகரன் ஏறி அமர்ந்த அதே பேருந்தில் ஏறிய 2 சிங்கள காவலர்கள் பிரபாகரனோடு அமர்ந்து எவனோ பிரபாகரனாம் அவன் தான் செய்திருப்பான்னு டிபார்ட்மென்ட்ல சொல்றாங்க அவனை சீக்கிரம் புடிச்சிடலாம். அவனை புடிச்சதும் நான் தான் அவனை கொல்வன் என பேசிக் கொண்டு வர பக்கத்திலிருந்து பிரபாகரன் மெல்ல புன்னகைத்தபடியே யாழ்ப்பாணம் வந்தார். அடுத்த 3 மாதத்தில் கனகரத்தினம் இறந்துபோனார்.
 
    எம்.பி மேல் குண்டு வீசியதுஅதிகாரிகளை கொன்றது. எல்.டி.டி.இ தான் என அறிந்த பிரதமர் ஜெயவர்த்தனே எல்.டி.டி.இ யை அழிக்க பஸ்தியம்பிள்ளை என்ற அதிகாரியை நியமித்தார். அவரும் யாழ்ப்பாண விசாரணையில் எல்.டி.டி.இ யின் மறைவிடத்தை கண்டு பிடித்து சுற்றியும் வளைத்தார். அதில்அமைப்பின் தலைகளான உமாநாகராஜாசெல்லக்கிளி இன்னும் சிலர் மாட்டிக் கொண்டனர். கவலைப்படாத செல்லக்கிளி சரணடைவதாக கையை தூக்கிக்கொண்டு போனவர் கிட்டே போனதும் திட்டப்படி குனிந்து கொள்ள தோட்டாக்கள் பாய்ந்தது பஸ்தியம்பிள்ளை உட்பட நான்கு போர் காலி. சந்தோஷத்தோடு பிரபாகரனை தேடி போனவர்கள் விவகாரத்தை கூறியதும் காட்டி தந்தவனை காலி பண்ணுங்க என உத்தரவு போட்டவர். அவர்களின் சாமார்த்தியத்தை மெச்சியவரிடம் உமா முன்வந்துதம்பி நாம கஸ்டப்பட்டு பலரை கொல்றோம். ஆனாஅதை வேற சில இயக்கங்கள் தாங்கள் பண்ணதா தகவலை பரப்புது. அதனால நாம தான் அதையெல்லாம் பண்ணினத வெளியிடலாம் அப்பதான் மக்களும் நம்மை ஆதரிப்பாங்க எனக்கூற யோசித்த பிரபா சரியென ஓகே பண்ண வெளிப்படையாக வெளியே வந்தது LTTE.
 
  1978 ஏப்ரல் 25 செய்திதாள்களில் டி.என்.டி யாக இருந்து எல்.டி.டி.இ யாக மாறிய நாங்கள் தான் மேயர் முதல் பஸ்தியம்பிள்ளை வரை கொன்றோம் என தேதி வாரியாக அடுக்கியிருந்தவர்கள் இதுக்கு வேற யாராவுது உரிமை கொண்டாடினால் விளைவு விபரிதபாகியிருக்கும் என உமா கையெழுத்திட்ட கடிதம் செய்தி தாள்கள் மூலம் வெளியாக சிங்கள அரசு தலையில் கை வைத்துக்கொண்டது. பிரதமர் ஜெயவர்த்தனாவோ இலங்கையின் அரசியலமைப்பு சட்டத்தை திருத்துவதில் தீவிரமாக இருந்தார். நாடடில் இனி ஜனாதிபதி பதவிதான் பெரியது. அதிகார மெல்லாம் அவருக்கே அதோடு முதல் ஜனாதிபதியும் நானே. அதோடு நாட்டின் ஆட்சிநிர்வாக மொழி சிங்களம் மட்டுமேமதம் பௌத்தம்வட- கிழக்கு மாகாணங்களில் மட்டும் தமிழ் ஆட்சி மொழி என சட்டத்தை திருந்தி நாடாளுமன்ற ஒப்புதல் பெற 1979 செப்டம்பர் 7, 8 தேதியை அறிவித்தார்.
 
   இச்சட்ட திருத்தத்திற்கு தமிழர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு. அதை பற்றி கவலைப்படவில்லை ஜெயவர்தனாவும் சிங்கள மக்களும். அதனால் அரசுக்கு அதிர்ச்சி தர முடிவு பண்ணியது LTTE.  சட்டமாக்கப்படும் நாளான செப்டம்பர் 7ந் தேதி இலங்கையின் ஒரே பயணிகள் விமானமான அமதஞ வை தகர்க்க முடிவு செய்தனர். பிரபாபேபி இருவரும் குண்டு தயாரிப்பது. உமாராகவன் இருவரும் விமானத்தில் குண்டு வைப்பது என திட்டம் தயாரானது. கடைசியில் பேபிராகவன் குண்டு வைப்பதாக திட்டம் மாற்றப்பட்டதுவிமான டிக்கட் தயாரானது.
 
    செப்டம்பர் 7 ரத்மலானா டூ பாலை சென்ற ஆரோ என்ற விமானத்தில் இருந்து இறங்கும் போது பேபியும்ராகவனும் சீட்டுக்கு கீழே டைம் பாம் வைத்து விட்டு இறங்கி போய்விட்டனர். விமானம் வெடித்து சிதறியது. அதிர்ச்சியோடு திருத்தப்பட்ட அரசியலமைப்பு சட்டம் நிறைவேறியது. விமானத்தை தகர்த்தது நாங்க தான் என்ற உமா கையெழுத்திட்ட கடிதம் செய்தி தாள்களுக்கு பறந்தது. கோபமான அதிபர் ஜெயவர்த்தனா பயங்கரவாத தடை சட்டத்தை கொண்டு வந்தவர் தீவிரவாத இயக்கங்களை தடை செய்யப்படுகிறது. ஏன்எதற்கு என்ற காரணமில்லாமல் கைது செய்யலாம் விசாரிக்கலாம்கொல்லலாம் என காவல்துறைக்கு அதிகாரங்களை வாரி வழங்கினர். அதுப்பற்றியெல்லாம் கவலைப்படாத தமிழ் இளைஞர்கள் எங்களுக்கு உயிர் வேணாம்தன்மானம் தான் எங்களது சொத்து என வீரத்தோடு பிரபாகரனை தேடிவந்த கிட்டுரகுமாத்தையா போன்றோர் அமைப்பில் இணைந்தனர்.
 
   அமெரிக்காவின் சிம்ம சொப்பனமான குட்டி நாட்டின் உலக நாயகனான பிடல் காஸ்ட்ரோ க்யூபாவின் ஸ்ரீவானாவில் உலக மாணவர் மற்றும் இளைஞர் பேரவையின் மாநாட்டை நடத்தினார். அதில் LTTE தனது பிரதிநிதியாக இவரை அனுப்ப முடிவு செய்ததோடு தன் மக்களின் பிரச்சனைகளை உலகத்துக்கு சுட்டிகாட்ட நூல்கள் தேவைப்பட்டது. அப்போது அமைப்பின் லண்டன் பிரதிநிதிகளான கிருஷ்ணனும்ராமச்சந்திரன் (எ) அன்ரன் ராஜா ஆகிய இருவரும் லண்டனில் ஆய்வு மாணவராக மனைவி அடேலுடன் இருந்த பாலசிங்கத்தை சந்தித்து பேசினர். பாலசிங்கம் விடுதலைபோராட்ட இயக்கங்களுக்கு ஆதரவு தந்தவர். கட்டுரைகளையும்ஆலோசனைகளையும் தந்தார். அதற்கு ஏற்கனவே அவர் பார்த்த வீரகேசரி இதழின் துணை ஆசிரியர் பணி அனுபவம் உதவியது.
 
  கிருஷ்ணனும்ராமச்சந்திரனும் விடுதலைப்புலிகள் பற்றியும்கோட்பாடுகள்செயல்பாடுகள் பற்றி விரிவாக எடுத்து கூறியவர்கள். தங்களுக்கான புத்தகம் பற்றி கேட்டனர். அதற்கு சம்மதித்த பாலாமார்க்சிய – லெனினிய பார்வையில் தமிழ்த் தேசிய பிரச்சனை பற்றியும் அதனை தொடர்ந்து சோசலீச தமிழீழத்தை நோக்கி என்ற தலைப்பில் 2 புத்தகங்களை எழுதி தந்தார். பிரபாகரனை ஈர்த்தது அப்புத்தகங்கள். ஆண்டன் பாலசிங்கத்தை காண பிரபா ஆசைப்பட்டார் சென்னையில் சந்திப்புக்கு ஏற்பாடானது.
 
   லெபனாலில் பி.எல்.ஓ அமைப்பினர் பயிற்சி தருகின்றனர். விரும்பினால் வரலாம் இரண்டு பேருக்கு 1 லட்சம் என்றது ஈரோஸ் தலைமை. பிரபாவும்உமாவிஜயேந்திரனை அனுப்பிவைத்தார். சுவரில் அடிக்கப்பட்ட பந்தாக திரும்பியவர்கள் சுத்த வேஸ்ட் என்றனர். கோபமான பிரபா ஈரோஸ்சிடம் பாதி பணத்தையாவது வாங்கி தா என பேசிக் கொண்டிருந்தார். தமிழகத்திற்கு உமாவை அனுப்பிய பிரபாகரன் அமைப்புக்கு சென்னையில் தங்கி ஆதரவு திரட்டுங்க. நம்ம போராட்டம் பற்றி நம் வெளிநாட்டு மக்களிடம் பரப்புரை செய்ய சென்னையை தளமாக பயன்படுத்துங்க என்றதால் உமா சென்னையில் சில மூத்த போராளிகளோடு ஒரு வீட்டில் தங்கி அரசியல் வேலை பார்த்து வந்தார். அதோடு பரப்புரை பணிக்காக ஊர்மிளா என்ற பெண்மணியும் அங்குயிருந்தார். அவரின் காதுக்கு வந்த தகவலை நம்ப முடியாமல் நம்பிக்கையானவர்கள் மூலம் ரகசியமாக வேவு வேலையில் இறங்கினார். விசாரித்தவர்கள் அண்ணே உமாவும்ஊர்மிளாவும் காதலிக்கறது மட்டுமில்ல இருவரும் எல்லை மீறிட்டாங்க.
 
Bala-adel.jpg
 
 
ஊர்மிளா. விதவைடி.என்.டியின் முதல் பெண் போராளி. அமைப்பில் செய்தி பிரிவில் இருந்தார். டி.யு.எல்.எப் இளைஞர் பிரிவில் உமாவோடு இருந்தவர். உமா தான் அழைத்து வந்தார்.  கோபத்தோடு யாழ்ப்பாணத்திலிருந்து சென்னை வந்தார். உமாவை அழைத்த பிரபாகரன் காதலிக்கறிங்களாமே?, 
 
 இல்லையே தம்பி.
 
 பொய் சொல்றீங்க குடும்பமே நடத்தறீங்க அமைப்போட சட்டதிட்டத்த மீறிட்டீங்க எனக்கூறும் போதே இருவருக்கும் தகராறு இயக்கத்தில் குழப்பம்நீயாநானாபோட்டி ஆரம்பமானது. அமிர்தலிங்கம் பேசினார்லண்டனிலிருந்து எல்லாம் சமாதானம் பேசியும் பிரபாகரன் மசியவில்லை.  சமாதான தூதுவராகஇயக்கத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக மாறி போயிருந்த பாலசிங்கம் இயக்கத்தினரை காண சென்னை புறப்பட்டார்.
 
  1979 அம் ஆண்டின் கடைசி மாதத்தில் லண்டனிலிருந்து மும்பை வழியாக சென்னைக்கு பாலசிங்கத்தையும் - அடேலையும் அழைத்து வந்த கிருஷணன் புறநகர் பகுதியிலிருந்த விடுதியென்றில் தங்கவைத்து விட்டு போனார். வசதிகள் எதுவும் இல்லாத விடுதி அறையது. அன்றைய நள்ளிரவு நேரம் விடுதி அறைக்கு டிப்-டாப்பாக பிரபாவும்தமிழரின் அடையாளமான வேட்டி சட்டையில் பேபி சுப்ரமணியயமும் வந்தார்கள். முதல்முறையாக பிரபாவும் பாலாவும் சந்தித்துக்கொள்கிறார்கள். பிரபாகரன் பாலாவிடம் இயக்கம் பற்றியும்மக்கள் படும் துயரம் பற்றியும்போராளிகள் பற்றியும்போராளிகளின் வாழ்க்கை பற்றியும்,இயக்க போராட்டங்கள் பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்தார். அதேபோல் பாலாவும் தனது வாழ்வு போராட்டம் பற்றியும் கூறினார். விடிய விடிய இருவரும் பேசியதில் இருவருக்கும் ஒரே மனவோட்டமிருந்ததை இருவருமே அறிந்துக்கொண்டார்கள். விடியற்காலை பிரபாகரன் புறப்படும் போது உங்களுக்கு சவுகரியமான விடுதியை பார்த்து தங்க வைக்க சொல்றன் எனச்சொல்லிவிட்டு புறப்பட்டார்.
 
   அன்றே விடுதி மாறினார்கள். இயக்கத்தில் அதிகார போட்டியும்உமா காதல் பிரச்சனையும் பெருசாகயிருந்ததால் விடுதிக்கு இயக்கத்தவர் அடிக்கடி வந்துபோக ஆரம்பித்தார்கள். இதனால் விடுதியே பரபரப்பாகயிருந்தது. ரகசிய அமைப்ப்பின் உறுப்பினர்கள் அடிக்கடி விடுதிக்கு வந்து போவது விடுதியில் இருப்பவர்களுக்கு சந்தேகம் வந்தால் பிரச்சனையாகிவிடும் என கவலையடைந்தவர்கள் பாலா - அடேல் தம்பதியினர் தங்க வேறுயிடம் பார்க்கபட்டது. அப்படித்தான் போராளி ஆதரவாளரான அப்போதைய திமுக எம்.எல்.ஏ செஞ்சி. ராமச்சந்திரன் இல்லத்தில் சில நாட்கள் தங்கினார்கள். பின் சட்டமன்ற விடுதியிலும் போய் தங்கினார்கள். இயக்க பிரச்சனை பற்றி பாலா விசாரிக்க ஆரம்பித்தார். உமா - ஊர்மிளா விவகாரம் பற்றிய விசாரணையில் நான் தப்பு பண்ணலயென உமா மறுத்தார். புகார் கூறியவர்களோநாங்க எங்க கண்ணால பல முறை பார்த்தோம் தப்பு பண்ணாங்க என்றார்கள் உறுதியுடன். விசாரணையின் முடிவில் பிரபாவும் - பாலாவும் கூட்டாக உமாமகேஸ்வரனை அமைப்பை விட்டு நீக்கி இனி உங்களுக்கும் அமைப்புக்கும் சம்மந்தமில்லை என தெளிவாக கூறி அனுப்பினார்கள். உடனே வவுனியா கிளம்பிய உமாஅங்கிருந்து இனி எல்.டி.டி.ஈக்கு நான்தான் தலைவர் என உரிமை கொண்டாடினார். பாலசிங்கம் – அடேல் லண்டன் திரும்பினர்.
 
  இயக்கத்தில் போராளிகளிடம் குழப்பம் நீடித்தது. இயக்கமே சிதைந்து போனது. பிரபாகரனும யாழ்ப்பாணம் பயணமானார். இயக்க பிரச்சனை மட்டும் தீரவில்லை. மீண்டும் சென்னை வந்த பிரபாகரன் இயக்க நண்பர்களை தேடினார். அப்போது சிங்கள அரசின் நெருக்கடியால் மாத்தையாகிட்டுபேபிரகுஆகியோர் தமிழகம் வந்திருந்தனர். குழப்பம் தீர ஆரம்பித்தது. பிரபா தலைமையிலே அனைவரும் ஒன்றிணைய ஆரம்பித்தார்கள். சென்னைக்கு இரண்டாவது முறையாக பாலசிங்கத்தை வர வைத்தார்கள்.
 
   சென்னையில் பிரபாவோடு பேபி சுப்பிரமணியம்பண்டிதர்புலேந்திரன்ரகுசங்கர்ராகவன்பாலசிங்கம்அடேல் தங்கியிருந்தனர். நம்மகிட்ட பண வசதியில்லஆயுதங்கள்யில்ல அதோடு நமக்கு தமிழகத்தோட ஆதரவு நிச்சயம் தேவை என விவாதிப்பார்கள். அதற்கு என்ன பண்ணலாம் என திட்டமிட்டார்கள். ஆயுதம் வாங்க பணம் தேவைபணத்தை திரட்டுவோம்தமிழக தலைவர்களின் ஆதரவை திரட்டுவோம் என முடிவு செய்தனர். ஆயுதம் வாங்குவது கிட்டு தலையில் விழுந்ததுபேபி சுப்பிரமணியம் தமிழக தலைவர்களை சந்திப்பது என வேலைகள் பிரிக்கப்பட்டது. நம்மை தாக்கும் எதிரிகளான காவல்துறையிடமிருந்து ஆயுதங்களை பிடுங்குவோம் என செல்லக்கிளியிடம்சங்கரும் ஐடியா ஓகே ஆகி இருவரும் அடுத்தடுத்து யாழ்ப்பாணம் பயணமானார்கள். ஓய்வு நேரத்தில் குறிப்பாக சனிக்கிழமை பிரபாகரனே பையோடு மார்க்கெட் போய் சிக்கன்மட்டன்யென வாங்கி வந்து சமைப்பார் அசைவ பிரியரான பிரபா.
 
   1980 மே 19 பாண்டி பஜாரில் பிரபாராகவன் இருவரும் நடந்து போய்க் கொண்டிருந்தனர். அதற்கு கொஞ்ச நேரத்துக்கு முன்பு தான் உமாவும்கண்ணனும் ஒரு மோட்டார் சைக்கிளில் அதே ஏரியாவுக்கு வந்தவர்கள் சாப்பிட உட்கார்ந்தார்கள். அதே ஹோட்டலுக்கு சாப்பிட வரும் பிரபாவை கண்ட கண்ணன் உமாவை உஷார்படுத்த உமா கை துப்பாக்கியை இடுப்பிலிருந்து எடுப்பதற்குள். பிரபா கண்ணனை சுட்டு முடித்திருந்தார். 6 புல்லட்டில் 4 புல்லட் பாய்ந்திருந்தது. சுட்டு விட்டு பிரபாராகவன் இருவரும் பாண்டி பஜார் காவல்நிலையம் நோக்கி ஓடினார்கள் உமா ரயில் நிலையம் நோக்கி ஓட தொடங்கினார்.
 
*   ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் விசாரிக்க பேரை கேட்டு இன்ஸ் அதிர்ந்து போனார். தகவல் தலைமைக்கு போனது.
*   கண்ணன் ராய்ப்பேட்டை ஜி.எச்-ல் சேர்க்கப்பட்டார்.
*   2 நாளுக்கு பின் உமாவும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர்கள் தனித்தனி செல்லில் அடைக்கப்பட்டனர்.
 
     இருவர் பெயரை கேட்டு தமிழக காவல்துறையே அதிர்ந்தது. தகவல் முதல்வர் எம்.ஜீ.ஆர்க்கு போனது. பசங்ககிட்ட பாத்து நடந்துக்குங்க. உஷாரா இருங்க என்றார். தகவலை கேட்டு சந்தோஷத்தில் திக்கு முக்காடி போனது இலங்கை அரசு. பாதுகாபபு துறையின் துணை அமைச்சரான ப.ஆ.வீரபத்தியா அவங்கள எங்கக்கிட்ட ஒப்படைங்க 1 மில்லியன் பரிசு உங்களுக்கு என தகவல் அனுப்பினார்கள்.
 
     பிரபாவை விடுவிக்க வேண்டும்மென களமிறங்கிய தோழர்கள் கிட்டுபுலேந்திரன்பண்டிதர் ஆகியோர் தம்பியை இலங்கையிடம் ஒப்படைத்தால் எல்.ஐ.சி மாடியிலிருந்து குதித்துவிடுவோம் என அதிரடி மிரட்டல் விட்டனர். பேபியோ தமிழக அரசியல் கட்சி தலைவர்களை ஒடி ஓடி சந்தித்தார். இந்திரா காங்கிரஸ் தலைவரான நெடுமாறனையும் சந்தித்தர். பிரபாவின் தந்தை தமிழகம் வந்தவர் எதிர்கட்சி தலைவராகயிருந்த தி.மு.க தலைவர் கலைஞரை சந்தித்தார். பிரதமராகயிருந்த இந்திராவுக்கு கலைஞர் தந்த நெருக்கடிமுதல்வராகயிருந்த எம்.ஜீ.ஆர் விடுதலைப்புலிகளுக்கு தந்த ஆதரவுநெடுமாறனின் முயற்சிதமிழர்களின் ஆதரவுபிரபாவின் தோழர்களின் விடாமுயற்சியால் பிரபாஉமாவுக்கு ஜாமின் கிடைத்தது. இவ்வழக்கு பற்றி ரா ரகசியமாக களமிறங்கி விசாரிக்க ஆரம்பித்தது. டெல்லியில் ஐ.பி அதிகாரியாக இருந்த நாராயணன் சென்னை வந்து இவ்வழக்கு பற்றி விசாரித்தார்.
 
   பிரபாகரன் நெடுமாறனோடு திருச்சியில் தங்கி கையெழுத்திட்டு வந்தார். உமா மகேஸ்வரன் சென்னையில் இருந்த அவரின் நண்பர் வீட்டில் தங்கிக் கொண்டார். இருவரையும் சமாதானப்படுத்தி சேர்த்துவைக்க டி.யு.எல்.எப் கட்சியின் தலைவரும்நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவருமான அமிர்தலிங்கம் சென்னை வந்து இருவரையும் அழைத்து பேச பிரபாகரனோ நான் உமாவ கொல்லமாட்டன் என உறுதி கூறியவர், 2 பேரும் சேர்றது இனி நடக்காது என முடிவாக கூறிவிட்டார். உமாவே இனி எல்.டி.டி.இக்கு நான் உரிமை கொண்டாடமாட்டன் என்றார். வந்தவேலை வெற்றி பெறாததால் அமிர்தலிங்கம் ஏமாற்றத்துடன் இலங்கைக்கு திரும்பி போய்விட்டார்.
 
   பிரபாவேஇயக்கத்தை பெரிய அளவில் வளர்க்கவும்அதற்கான ஆயுதங்கள் கொள்முதல் செய்ய பணத்துக்காக அலைந்தார். அப்போது கொரில்லா குழுவாக இருந்த எல்.டி.டியின் பலம் 30 பேர். நாம எதிரியிடமிருந்தே ஆயுதங்களை புடுங்குவோம் என தீர்மாணித்தார்கள். வழக்கு நடந்துக்கொண்டு இருக்கும் போதே தமிழக போலிஸாரின் கண்ணில் மண்ணை தூவி விட்டு திடீரென ஒருநாள் யாழ்ப்பாணம் போய்விட்டார். சில தாக்குதல்கள் அங்கு செய்ததால் சிங்கள காவல்துறையின் தேடல் அதிகமாகமானது. மீண்டும் தமிழகம் திரும்பி ரகசிய பயிற்சி பாசறைகளை அமைத்தார். முதல் பாசறை சேலம் அருகிலுள்ள கொளத்தூரில் அமைக்கப்பட்டது.
photo16.jpg
 
   1982 ஜீலை 2 யாழ்ப்பாணத்திலிருந்து 16 கி.மீ. தொலைவிலுள்ள நெல்லியடிபட்டினம் காவல்துறை ரோந்துபடை மீது சங்கர் தலைமையில் போன விடுதலைப்புலிககள் கொரில்லா தாக்குதல் நடத்தி 4 அதிகாரிகளை கொன்றனர். 3 பேர்க்கு பலத்த காயத்தை ஏற்படுத்தினர்.
 
    1982 அக்டோபர் 27 சாவகச்சேரி கால்நிலையத்திற்குள் புகுந்த ஆசிர்சீலன் தலைமையிலான அணி போலிஸார் மீது தாக்குதல் நடத்தி 2 அதிகாரிகளை கொன்றவர்கள். காவல்நிலையத்தில் இருந்த 28 துப்பாக்கிகள் 2 பழைய ரக இயந்திர துப்பாக்கி, 1 ரிவால்வர், 200 தோட்டாக்கள் வாரிக்கொண்டு சென்றனர். அதேநேரம் அமைப்பில் இளைஞர்கள் கூட்டம் அதிகமாக சேர ஆரம்பித்தது.
 
   தமிழகத்திலிருந்து பிரபா தகவல் பறிமாற்றத்துக்கு யாழ்ப்பாணம் நகர் நாவலர் வீதியிலிருந்த நிர்மலா வீட்டை பயன்படுத்த சொல்லியிருந்தார். அதன்படி 1980 நவம்பர் 20ந் தேதி தளபதி சீலன்சங்கரை அழைத்து தகவல் ஒன்றை பிரபாவுக்கு அனுப்பச்சொல்லி அனுப்பிவைத்தார். நிர்மலா வீட்டுக்கு வந்த சங்கர் வேலை முடிந்ததும் புறப்பட தயாரான போது மதியம்மாகிடுச்சி சாப்பிட்டுவிட்டு போப்பா கோழிக்கறி செய்துயிருக்கன் என்றதால் சங்கரும் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார். இரண்டு வாய் சாப்பிடும் போதே உளவாளி மூலம் காவல்துறைக்கு தகவல் போய் நிர்மலா வீட்டுக்கு வந்த ஆர்மி சுட ஆரம்பித்ததும் உஷாரான சங்கர் வீட்டின் பின் பக்கமாக தப்ப முயல சங்கர் மீது குண்டு பாய்ந்தது அப்படியும் தப்பிய சங்கர் 3 கி.மீ. கரடு முரடான பாதையில் சிரமம் பாராமல் நிற்காமல் ஓடி தப்பினார்.
 
    ஆனால்சங்கரின் உடலில் ரத்தபோக்கு அதிகமானதால் தமிழகம் போனால் தான் காப்பாற்ற முடியும் என்ற நிலை. ஆர்மியின் கட்டுப்பாடுசெக்கிங்தேடலால் 5 நாள் தாமதாக 26ந்தேதி வேதாரண்யம் போய் மதுரையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தனது தோழனை பார்க்க பிரபாவும் மதுரை வந்துவிட்டார். உடன் பேபிபொன்னம்மன்,நெடுமாறன் ஆகியோர் இருந்தனர். சங்கரின் உறுதி பற்றி மற்றவர்களிடம் கூற தொடங்கினார் பிரபாகரன். 1961ல் பிறந்த சத்தியநாதன் எ சங்கர். தனது 16வது வயதில் வீட்டை விட்டு போறன் என கடிதம் எழுதி வைத்து விட்டு 1977 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர அதன் தலைவர் பிரபாகரன் முன் போய் நின்றார். சின்னப்பையன் இவன் போராட்ட களத்தில் தாக்கு பிடிக்கமாட்டான் என முடிவு செய்து வீட்டுக்கு போ என மிரட்டி அனுப்பிவிட்டனர்.
 
    ஒராண்டுக்கு பின் 1978 ஆம் ஆண்டு மீண்டும் காடுகளில் அலைந்து திரிந்து பிரபாகரனை சந்தித்து தன்னையும் இணைத்துக்கொள்ளுமாறு வேண்டிய சங்கரை இயக்கத்தில் இணைத்துக்கொண்டு சங்கர் என பெயரிட்டார் பிரபாகரன். சுங்கர்க்கு ஆயுத பயிற்சி தந்தனர். விடுதலைப்புலிகள் 1979ல் தடை செய்யப்பட்டபோதுசங்கர் பற்றியும் சிங்கள காவல்துறை தெரிந்து வைத்திருந்தது. இதனால் சங்கர் தேடப்படும் குற்றவாளியானார். அதன்பின் இராணுவத்துடன் நடந்த ஒரு மோதலில் சங்கர் தன் வீரத்தை காட்டினார். 1982ல் பிரபாகரன்க்கு முதன் முதலாக இரண்டு மெய்ப்பாதுகாவலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் சங்கரும் ஒருவர். இப்படி இயக்கத்தில் வளர்ந்த சங்கரை பற்றி தன் நினைவுகளை பிரபாகரன் கூறியுள்ளார்.
 
    27ந்தேதி காலை 6.50க்கு பிரபாகரனின் மடியில் இருந்த சங்கர்நாம ஜெயிப்போம் தம்பி என்ற படியே உயிரை நீர்த்தான். விடுதலைப்புலி வீரனின் முதல் களபலி பிரபா அதிர்ந்து போய்விட்டார். மனம் கலங்கியவர் மதுரையிலேயே அடக்கம் பண்ண சொன்னவர். சங்கரின் தந்தை செல்வந்திரன் மாஸ்டர்க்கு மட்டும் தகவலை சொன்னார்கள். சங்கர் (எ) சத்தியநாதன் இறந்த தினத்தை மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தியது இயக்கம். 1989 முதல் மாவீரர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒரு வாரம் நடைபெறும் விழாவில் கடைசி நாளான 27ந்தேதி முக்கிய அறிவுப்புகளை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார் பிரபா.
 
    1983 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு மட்டுமல்ல விடுதலை புலிகளுக்கும் மோசமான கறுப்பு ஆண்டாக அமைந்தது முக்கிய தளபதிகளை இவ்வாண்டில் விடுதலை புலிகள் இழந்தனர். பிப்ரவரி 18 காவல்துறை அதிகாரியான விஜயவர்த்தனாவை அவரது கார் டிரைவரோடு சேர்த்து கொன்றனர் வி.பு.
 
     மார்ச்-4 பரந்தன் உமையாள் புரத்தில் இராணுவ வண்டிக்கு வைத்த குறியில் 5 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர். அதே நேரம் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு 1983 மார்ச் 7, 15 தேதிகளில் புதுடெல்லியில் அணி சேர நாடுகளின் 7வது மாநாடு நடந்தது. மாநாட்டில் வி.பு இயக்கம் தேசிய விடுதலைக்கான தமிழின போராட்டம் என்ற தலைப்பில் அறிக்கை தந்து வெளியுலகத்துக்கு தமிழின பிரச்சனையை சுட்டி காட்டினர். இதில் இலங்கைக்கு மற்ற நாடுகளில் நெருக்கடிஉள்நாட்டிலே ஆயுத குழுக்களின் தாக்குதல் இதில் கோபமான அதிபர் ஜெயவர்த்தனா தமிழினமே இந்த நாட்டுல இருக்க கூடாது அழிங்க என ஸ்ரீ லங்கா ராணுவம்காவல்துறைரவுடிகள் களமிறங்கனர். யாழ்ப்பாணத்தில் பற்றிய தீ மன்னார்மட்டகளப்புதிருநெல்வேலி,திருகேணமலைகுடநாடுஅம்பாறைகொழும்பு வரை பரவியது. 7 நாள் கனவிலும் கானமுடியாத உயிர்பலிசேதரம்ஈழதமிழினமே அகதியானது.  அதிபரோ சும்மா சின்ன கலவரம் தான் என பதில் தந்தார் உலகத்துக்கு. ஒரு நாட்டு முதலாளி (அதிபர்) கூறியதை மற்ற நாட்டு முதலாளிகள் (அதிபர்கள்) கேட்டுக்கொண்டார்கள் அவ்வளவு தான்.
 
    ஜீலை கலவரத்துக்கு முன்பு ஜீலை 15ந்தேதி யாழ்ப்பாணம் நகரிலிருந்து 15 கி.மீ. தொலைவிலுள்ள மீசோலை கிராமத்திலிருந்த வி.பு முகாமை ராணுவம் சுற்றி வளைத்தது. அதில் தாக்குதல் தளபதியாக சீலன்ஆனந்த மற்றொரு வீரன் என3 போர் மாட்டிக் கொண்டனர். கடைசி வரை எதிர்த்தனர்தோல்வி வரும் போல என தெரிந்ததும் தன் சக வீரணிடமே தன்னை சுடச்சொல்லி மானத்தோடு சுடப்பட்டு இறந்தார். ஆனந்த் என்ற வீரனும் அதேபோல் சுடப்பட்டு இறந்தார். இதில் கோபமுற்ற பிரபாகரன் ராணுவ வீரர்களுக்கு குறிவைத்தர். ஜீலை 23 மாதகல் ராணுவ முகாமிலிருந்து திருநெல்வேலி ராணுவ முகாம்க்கு ராணுவ டிராக் வண்டியில் வருகிறார்கள் என அறிந்து கண்ணி வெடி வைத்து தாக்குதலுக்கு பிரபாகரன் தலைமை தாங்கினர்.   கண்ணி வெடி மூலம் டிராக் வண்டி வெடித்து சிதறி 14 வீரர்கள் இறந்தனர். உயிரோடு இருந்த சிலர் சுட அதில் செல்லக்கிளி (செல்வ நாயகம்) இறந்து போனர். அடுத்தடுத்து தளபதிகளை இழந்த வி.பு.களுக்கு ஜீலை கலவரம் இந்தியா மூலம் பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது.
 
   1983 கடைசி முதல் இலங்கை தீவின் நிலையே மீற ஆரம்பித்தது. தமிழின எதிரிகள் ரத்த கண்ணீர்விட ஆரம்பித்தார்கள் அதற்கு இந்தியாவும் ஒரு காரணம்.
 

(தொடரும்...)

Link to comment
Share on other sites

  • 5 weeks later...

7. இந்தியாவி (ல்) ன் காதல்! ( சிலோன் முதல் ஈழம் வரை )

 
MGR+-+indira.jpg
 
      சுதந்திரத்திற்கு பின் வளர்ச்சியில் கவனம் செலுத்திய பிரதமர் நேரு அணி சேரா கொள்கையை (பஞ்சசீல கொள்கை) வகுத்து பிறநாட்டின் உள்விவகாரங்களில் தலையிடாமல் இருந்தார். ஆனாலும்1963ல் இந்தியா மீது படையெடுத்த சீனாநம் எல்லைகளை ஆக்ரமித்தது பின் சமாதான உடன் படிக்கை செய்துகொண்டோம். வெளிநாட்டு விவகாரங்களை அதுவரை IB(Intelegent Bears) என்ற புலனாய்வு அமைப்பு தான் கவனித்து வந்தது. சீன போரை அது முன்கூட்டியே சொல்ல முடியாததால் விமர்சனம் எழுந்தது. அதனால் பிரதமர்க்கு கட்டுப்பட்ட வெளிவிவகார புலனாய்வு அமைப்பை உருவாக்க முடிவு செய்தார் ஜவஹர்லால் நேரு. பிரதமர் ஜவஹர்லால் நேரு.  அதன்படி அமைப்பின் உருவாக்கத்திற்க்கான பணிகள் வேகமெடுத்தன. இறுதியில் 21 செப்டம்பர் 1968 ஆம் தேதி R&AW ( Research and Analysis Wing) என்கிற புதிய புலனாய்வு அமைப்பு உருவானது. அதனை ஆர்.என்.கவ் (R.N.Kao) என்பவர் தான் உருவாக்கினார். அது செய்யவேண்டிய பணிகளாக சிலவற்றையும் வரையறுத்தார். அவை வெளிநாடுகளில் வேவுபணி பார்ப்பதுநம் நாட்டுக்கு எதிராக ஏதாவது சூழ்ச்சி வலைகள் பின்னப்படுகிறதா என்பதை கண்காணிப்பதுநம் எதிரிநாடுகளின் நண்பர்கள் யார்?. எதிரிகள் யார்நமக்கு எதிராக அவர்கள் ஏதாவது செய்கிறார்களாஅதோடு அரசியல் சூழ்நிலைகளை முன்கூட்டியே கனிப்பது அவைகளையெல்லாம் தலைமைபீடத்தில் இருப்பவர்களிடம் எடுத்துக்கூறுவது போன்றவை தான் அதன் தலையாய பணிகளாகம். இது பிரதமரின் நேரடிகட்டுப்பாட்டுத் துறை. இத்துறையின் செல்லக்குட்டிகளாக The Aviation Research Centre, The Radio Research Centre, Electronices & Tech. Services, National Tech. Facilities Organisation, Special Frontier Force Mfpait nray;gLfpd;wd.
 
      நேரு இறந்த பின் அமைச்சரவையில் இருந்த அவரது மகள் இந்திராகாந்தி இந்தியாவின் பிரதமரானார். அவரின் பார்வை விசாலமானது. இந்தியாவின் அண்டை நாடுகள் மட்டுமல்ல உலக நாடுகளின் அரசியலை நன்கு அறிந்து வைத்திருந்தர். எதிரிகளை சட்டென அடையாளம் காணும் திறனும்முடிவு எடுக்கும் திறன் அதிகம் பெற்றவர். நேருவின் கொள்கைகளை சற்று தள்ளியே வைத்து பார்த்தவர் வளர்ச்சியே முக்கியம் என பாடுபட்டவர். நாட்டு பற்றாளர்களையும்பல சுயநலமில்லாத அரசியல் அறிஞர்களை ஆலோசகராக பெற்றவர்.
 
      உலகில் சோவியத் யூனியன்னுக்கும் - அமெரிக்காவுக்கும் இடையே பனிப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம் உலகின் பல நாடுகள் சோவியத் ஆதரவில் இருந்தது. அமெரிக்காவோடு நட்பு கொண்டிருந்த ஆப்கானிஸ்தானில் கலவரத்தை உண்டு பண்ணி தன்தடத்தை பதித்தது சோவியத்.  இந்தியாவும் சோவியத்தோடு அனுசரணையாக இருந்தது இது அமொரிக்காவுக்கு அச்சத்தை உண்டுபண்ணியது. தன்னுடன் நட்பு பாராட்டும் நாடுகளுக்கு பணத்தையும்ஆயுதங்களையும் கணக்கு வழக்கில்லாமல் வாரி தந்தது அமெரிக்கா. அதில் அதிக லாபம்மடைந்தது பாகிஸ்தான். இதனால் நம்மை எதிர்ப்பதை ஒரு கொள்கையாக வைத்துக்கொண்டது பாகிஸ்தான். சுதந்திரம் பெற்று தனித்தனி நாடானபின் நாம் யாருடன் நட்பு பாராட்டுகிறோமோ அதற்கு எதிர் பார்ட்டியிடம் நட்பு பாராட்டும் பாகிஸ்தான்.
 
      இந்தியா - பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பகை உண்டு. அமெரிக்கா உதவியோடு காஷ்மீரை தனதாக்கிகொள்ளலாம் என எண்ணியபோது கிழக்கு பாகிஸ்தான் மக்கள் தனி நாடு கேட்டு கலவரம் செய்தனர். உள்ளே புகுந்த பாகிஸ்தான் ராணுவம் தன் கிழக்கு பாகிஸ்தான் மக்களும் தன் ரத்தம் என எண்ணாமல் சுட்டு பொசுக்கியது. பல லட்சம் மக்கள் அகதியாக. பஞ்சாப் வழியாக இந்தியாவுக்குள் வந்தனர். இந்தியா பாகிஸ்தானுக்கு அறிவுரை கூறியும் கேட்காததால் இந்திய ராணுவம் பாகிஸ்தான் இடையே போர் மூண்டு அதில் இந்தியா வென்று வங்கதேசம் உருவாக்கி தந்தது. இதனால் இந்தியா மீது அதிக கோபத்தில் இருந்தது பாகிஸ்தான்.
 
ஆசியா கண்டத்தில் வல்லரசாக உருவான கம்யூனிச சீனாகம்யூனிச நாடான சோவியத் ஆசிய கண்டத்தில் தலையிடுவதை விரும்பவில்லை. அதோடு சோவியத்தை இந்தியா ஆதரிப்பதை கண்டு கொதித்த சீனா இலங்கைக்கு உதவியது. அமெரிக்கா சீனா ஆதரவோடு இந்தியாவை எதிர்க்கவும் இலங்கை தமிழர்களை கொல்லவும் செய்ததை இந்தியா வன்மையாக கண்டித்தது. அதை காதிலேயே வாங்கவில்லை இலங்கை. இலங்கை அதிபர் ஜெயவர்தனா அமெரிக்கா பாசம் கொண்டவர். இந்தியா சோவியத் யூனியன் பக்கமிருந்ததால் அமெரிக்கா இந்தியாவுக்கு குடைச்சல் தர இலங்கைக்கு உதவி பண்ணியது. இதனால் குட்டி தீவான இலங்கையும் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டது.
 
நமக்கு கீழே புள்ளி அளவில் இருக்கும் இலங்கையும் அமெரிக்காசீனாவோடு நட்பு பாராட்டி பணம்ஆயுதம் என வாங்கிக்கொண்டு அதற்கு நன்றியாக தன் மண்ணில் சில சலுகைகளை அமெரிக்காவுக்கு தந்தது இலங்கை. தன்னை சுற்றியுள்ள நாடுகள் நமக்கு வில்லன்களா இருக்காங்களே என கவலைப்பட்டார் பிரதமர் இந்திரா. மற்ற நாடுகளை விட இலங்கையை பார்த்து தான் இந்திராவுக்கு கோபமே. இலங்கைக்காக கச்சத்தீவையே தரைவார்த்தோம் ஆனா கத்திரிக்கா சைஸ் இருக்கும் அந்த நாடு நம்மை எதிர்க்கிறதே என மூக்கு மேல் கோபத்தை வைத்துக் கொண்டிருந்தார்.
 
கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி கச் என்பது சமஸ்கிருதத்தில் கடற்கரை எனப்படுகிறது. அதனால் கச்சத்தீவை கடற்கரைதீவு எனவும் கூறலாம். இந்தயாவின் பம்பன் - ரமேஸ்வரத்திலிருந்து 12 கி.மீ தொலைவில்வுள்ளது இத்தீவு. 82ஹெக்டர் பரப்பளவு கொண்ட இத்தீவில் மனிதர்கள் யாரும் தங்கி வாழ முடியாது. பாம்புகள் ஒரளவு வாழும் பகுதி. பாறைகள்முள் புதார்கள்மணல் திட்டுகள் அதிகம் கொண்டது. இத்தீவின் அருகே மீன் அதிகம் கிடைக்கும் என்பதால் மீன் பிடிக்க ராமநாதபுரம்தஞ்சைபுதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மீன் பிடிக்க போய்வருவார்கள். அதோடு சங்கு பிடித்தல்முத்து குளித்தல்க்கு பேர்போனது இத்தீவு. 1913ல் கட்டப்பட்ட கிருஸ்த்துவ ஆலயம் ஒன்றுவுள்ளது. 1921ல் அது அந்தோணியர்க்கு அர்பணிக்கப்பட்டது. அதோடு யாழ்பாண மாவட்டமும்மன்னார் மாவட்ட கடற்கரையும் இத்தீவுக்கு மிக அருகாமையில்வுள்ளது அதனால் அம்மீனவ மக்களும் அதிகம் மீன் பிடிக்கவருவார்கள்.
 
கச்சத்தீவு யாருக்கு என்பதில் ஆங்கிலேயன் காலம் முதலே இந்தியாவுக்கும்-இலங்கைக்கும் இடையே சண்டை இருந்து வந்தது. 1921 அக்டோபர் மாதம் இந்தியா - இலங்கை கடல் எல்லை வரையறையின் போது பிரச்சனையானது. இலங்கை தரப்பில் இருந்து வந்த ஹோர்ஸ்பெர்க் என்ற அதிகாரி கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்றார். ஆனால் இந்தியா சார்பில் கலந்துகொண்ட ஆங்கிலேயே அதிகாரிகள் அதை மறுத்து அத்தீவு ராமநாதபுரம் ராஜாவுக்கு சொந்தமானது. அதை அவர் குத்தகைக்கு விட்டுள்ளார் என்றுள்ளார்கள். அதனால் பிரச்சனை பெருசானது. இறுதியில் கச்சத்தீவு பிரச்சனையை ஒத்திவைத்துவிட்டு எல்லை வரையறுப்பை செய்துள்ளனர். ஆனாலும் அப்போது கச்சதீவு அடுத்த 3 மைல் தூரம் இலங்கை மீனவர்கள் போய் மீன் பிடிக்கலாம் என முடிவுசெய்துள்ளார்கள். ஆனாலும் அது பிரிட்டிஸ் அரசு அச்சட்டத்தை அங்கிகரிக்காததால் அது அப்படியே நின்றது.      
 
இந்தியாஇலங்கை நாடுகளின் சுதந்திரத்துக்கு பின்னர் மீண்டும் கச்சத்தீவை மையமாகவைத்து இரு அரசுகளும் மோதிக்கொண்டன. இந்திய பிரதமரான நேருகச்சத்தீவு தொடர்பான ஆதாரங்கள் மத்திய அரசிடம் இல்லை. அதுப்பற்றி தமிழக அரசிடம் கேட்டுள்ளோம் என்றார். இலங்கை பிரமராகயிருந்த டட்லியோ கச்சத்டதீவு எங்களோடது என்றார். அவர்கள் மோதிக்கொண்டாலும் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் அந்தோணியர் திருவிழாவில் யாழ்ப்பாணதமிழக மக்கள் பெருமளவில் கலந்து கொள்வார்கள். அப்பொது இரு நாட்டு போலிஸாரும்கடற்படையினர் பாதுகாப்பு தருவார்கள். 1969 க்கு பின் கலந்து கொள்ளும் காவல்துறையினர் சீருடையில்லாமல் போய் பாதுகாப்பு தரவேண்டும் என முடிவுசெய்தனர். 
IGCNK1009.jpg
 
 
      மறுபக்கம் அரசுகள் கச்சத்தீவு பற்றின ஆதாரங்களை தேடிபிடித்து முன்வைத்தது. இந்தியாகச்சத்தீவு ராமநாதபுரம் ராஜாவுக்கு சொந்தமானது. 1822 முதல் இத்தீவை ராஜா முத்துக்குளிப்பவர்கள்மீன் பிடிப்பவர்களிடம் வரி வசூலித்துவந்துள்ளார். அதேபோல் கச்சத்தீவு உட்பட 8 தீவுகள்62 கடற்கரை கிராமங்களில் மீன் பிடிக்க முத்துச்சாமி,முகமதுஅப்துல்காதர் என்பவர்கள் பயன்படுத்தும் உரிமையை 1880 ஜீலை 21 முதல் ஆண்டுக்கு 175 ரூபாய் குத்தகை;கு மதுரை கலெக்டர் மூலம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர். அந்த ஒப்பந்தம் முடிந்த பின்னர். 1895 ஆம் ஆண்டு முத்துச்சாமி பிள்ளைக்கு ஆண்டுக்கு 212ரூபாய் வீதத்தில் விட்ப்பட்டது. அதற்க்கு ராமநாதபுரம் ராஜா சார்பாக மேலாளர்.டி.ராஜராமராயர் கையெழுத்துட்டுள்ளார். 1913ல் ராஜாவுக்கும் - இந்திய ஆங்கிலேய செயலாளருக்கும் இடையே 15 ஆண்டுகாள ஒப்பந்தம் ஒன்று ரூபாய் 60 ஆயிரத்துக்கு போடப்பட்டது. அதன் மூலம் மீன் பிடித்தல்சங்கு எடுத்தல்முத்து குளித்தல் போன்றவற்றை அரசு பெற்றது. ஆனால் அடிப்படை நிர்வாகம் ராஜாவுடையது. இந்திய சுதந்திரத்துக்கு பின் 1947க்கு பின் ஜமின்தாரி முறை ஒழிக்கப்பட்டதால் கச்சத்தீவு தமிழக அரசின் கீழ் வந்தது என ஆவணங்களை காட்டினார்கள் இந்திய அதிகாரிகள்.
 
நான் காட்டமாட்டேனா ஆவணங்களை என கங்ஙணம் கட்டிக்கொண்டு இலங்கை சில ஆவணங்களை காட்டியது. அது1554 முதல் கச்சத்தீவு யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதி அதை போர்த்துகீசியர்கள் நிர்வாகித்தார்கள். 1717 களில் தயாரிக்கப்பட்ட வரைபடங்களை காட்டி பேசியது ஆனால் அதை நிராகரித்தார்கள் இந்திய அதிகாரிகள்.
 
இப்படி இரு தரப்பம் மோதிக்கொண்டாது. இந்திரா அம்மையார் 1974 - மே 18 ந்தேதி தார்பாலைவனத்தில் பொக்ரைன் என்றயிடத்தி;ல் அணுகுண்டு வெடிக்கவைத்தார்கள் விஞ்ஞானிகள். ஆப்போது அணுகுண்டு வெடிப்பில் 6 வது நாடாக இந்தியா இருந்தது. அணுகுண்டு வெடித்ததால் உலக நாடுகள் கண்டனங்களை வீசியது. இந்தியா மீது பொருளாதார தடைகள் விழுந்தன. இதை பயன்படுத்தி இந்தியாவை தனிமை படுத்த நினைத்த எதிரி நாடான பாகிஸ்தான் இந்தியாவை கண்டித்து ஐ.நா. சபையில கண்டன தீர்மானம் கொண்டு வர முயன்றது. அப்பொது ஐ.நாவின் 15 தற்காலிக உறுப்புநாடுகளின் தலைமை பொறுப்பிலிருந்தது இலங்கை. இலங்கையை வைத்து அத்தீர்மானத்தை முறியடித்தது இந்தியா. அதற்க்கு பிரிதிபலனாக அப்போது இலங்கை பிரதமராகயிரந்த சிறிமாபண்டாரநாயக்கா கச்சத்தீவை ஏக்க பார்வையுடன் பார்த்தார். உதவிக்கு பிரிதிபலன் பார்க்கிறார் என எண்ணிய இந்திராவும் சரியென்றார். சிறிமா இந்திராகாந்திஅம்மையாரை சந்தித்து பேசினர்கச்சத்தீவு இலங்கைக்கு 1974 ஜீன் 24 தேதி உடன்படிக்கை ஒன்றின் மூலம் பேசி முடிவெடுத்து. 1974 ஜீன் 28 ந்தேதி இரண்டு நாட்டு பிரதமர்களும் தங்களது நாடுகளில் ஒரே நேரத்தில் அறிவித்தார்கள். ஒப்பந்தத்தில்இந்திய மீனவர்கள் மீன்பிடிக்கவும்தங்கவும்வலைகளை உலர்த்தவும் கச்சத்தீவை பயன்படுத்தலாம் என்றும்அந்தோணியர் விழாவுக்கு எந்த விதமான கட்டுபாடுகள் இலங்;கையின் அனுமதிகள் இல்லாமல் இந்திய பிரஜைகள் போய் வரலாம் என்று ஒப்பந்த்தில் இடம் பெறவைத்தது இந்தியா. இலங்கையில் பெரிய சந்தோஷத்தை கொடுத்தது. ஆனால் அது தமிழகத்தில் பெரிய பிரச்சனையை உருவாக்கியது. நாராளமன்றத்தில் திமுக எம்.பியான இர.செழியன்இவ்வுடன்படிக்கை புனிதமற்ற ஒன்று என்றார். அதிமுக எம்.பியான மனோகரன்தாய்நாட்டு பற்றற்ற செயல் என்றார். மா.பெ.சிவஞானம் ஒப்பந்தம் அநியாயமானது என்றார். கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் ஒப்பந்தத்தை கண்டித்து வெளிநடப்பு செய்தனர். அது எதையும் மத்திய ஆட்சியாளர்கள் சட்டைசெய்யவில்லை. 1976ல் ஒப்பந்த்தில் மாற்றம் கொண்டு வந்தனர். அதனால் நிலைமை இன்னும் மோசமானது. 1985 ல் இலங்கையின் ஜனாதிபதியான ஜெயவர்தனே 18.11.1985ல் கடல் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்தார். அது மூலம் மீன் பிடித்தல் தடைபட்டது எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் சுடப்படுவது தெடர்கதையானது. 1983 ஜøலை 24 இலங்கை கலவரத்தில் தமிழர்களை தேடித்தேடி அழிக்கிறது இலங்கை அரசும் ராணுவமும் என்ற தகவல் இந்திராஅம்மையாருக்கு போனதும் வெளிவிவகாரத்துறை அமைச்சராகயிருந்த நரசிம்மராவை அழைத்து பேசினார். ஆயிரம் ஆயிரமாக அகதிகள் வந்து கொண்டிருக்கிறார்கள் என அவரும் தகவல் சொன்னார்.  எனக்கு பக்கத்துலயிருக்கற தீவுல இனகலவரம் நடக்கிறது சரியில்ல என நரசிம்மராவ் அறிக்கை வெளியிட்டார்.
 
      அதை கண்டுகொள்ளாத அதிபர் ஜெயவர்த்தனா கலவரத்தை தீவிரமாக்க உத்தரவிட்டார். ஜøலை கலவரத்தின் 3வது நாள் நிலைமை படுமோசம் என தகவல் வர நரசிம்மராவை அனுப்பி (இலங்கை) வைத்தார். இலங்கை போன நரசிம்மராவ் ஜெயவர்தனாவின் அதிகார, அகங்கார பேச்சை அப்படியே இந்திராவிடம் சொல்ல அதை கேட்டு மூக்கு சிவந்தது இந்திராவுக்கு. இலங்கை தமிழ்பிரதேசங்களில் உணவுக்கு திண்டாட்டம் என தகவல் இந்திராவுக்கு எட்ட ஆகறது ஆகட்டும் நம்முடைய வான்படை தமிழர் பிரதேசங்களில் உணவு பொட்டலத்தை போடட்டும் என உத்தரவிட்டார். உத்தரவு நிறைவேற்றப்பட அதிர்ந்தது சிங்களஅரசும் அரசியல்வாதிகள் வட்டாரமும்,
 
    இதுதான் சமயமென இலங்கை நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவரான அமிர்தலிங்கம்தமிழக அரசியல்வாதிகள் சிலரின் உதவியோடு 1983-8-13 இந்திரா அம்மையாரை டெல்லியில் சந்தித்தார். தமிழர்களுக்கு உதவவேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தார். இந்திராவோநான் சொல்றமாதிரி கேளுங்க உங்க பிரச்சனை உலகம் முழுக்க தெரியனும். வர்ற அகஸ்ட் 15 இந்தியாவின் சுதந்திரதினத்துல விழாவுல தமிழ் மக்கள் பிரதிநிதியா டெல்லியில கலந்துக்குங்க என அழைப்பு விடுத்தார். நீங்கதான் சிறப்பு விருந்தினர் என சந்தோஷமாக அனுப்பினார்.
 
  இலங்கை திரும்பிய அமிர்தலிங்கம் இந்திய சுதந்திரதினத்தில் கலந்துகொள்ள ஆயத்தமானபோது ஏற்கனவே இந்திராவை அமிர்தலிங்கம் சந்தித்து திரும்பிய தகவலால் அவரை திரும்பவும் இந்தியா அனுப்பாமல் அடக்க நினைத்தது சிங்கள அரசு. அப்படியும் தடைகளை கடந்து சுதந்திர தினவிழாவுக்கு முன்நாளே டெல்லி வந்தவரிடம் இந்திரா விழவுக்கு நீங்க தாமதமா வந்தாபோதும் என உத்தரவிட்டார். குழம்பிய அமிர்தலிங்கம் விழா தொடங்கிய பின்னே மேடையை நோக்கி போனார். ஏற்கனவே மேடையில் வேறு நாட்டு தலைவர்கள் இருந்தனர். மேடையை நோக்கி வந்த அமிர்தலிங்கத்தை கண்ட இந்திரா எழுந்து இலங்கை தமிழ் மக்களின் ஒரே அரசியல் தலைவர் வருகிறார் என பெருமை படுத்தினார். அதோடு இலங்கை பிரச்சனையில் இந்தியா மத்தியஸ்து நாடாகயிருக்கும் என அறிவித்தார். இலங்கைக்கு அதிர்ச்சியில் வேர்த்துயிருக்கும் இந்திராவின் அறிவிப்பை கேட்டு.
 
      மத்தியஸ்துக்கு முன்பு இராஜதந்திர அதிகாரிகளிடம் பேசினார் இந்திரா. அதில் இலங்கை நம் சொல்லுக்கு படியாது அதனால ராஜதந்திர ரீதியில் ஒரு பக்கம் பேச்சு வார்த்தையும் மற்றொருபுரம் தமிழ் ஆயுத குழுக்களை போர் பயிற்சி தந்து மறைமுகமாக வளர்த்து விடுவோம் என முடிவு செய்தார்கள் அதற்கு முதற் காரணம் அதிபர் ஜெயவர்த்தனாவின் குணநலன்களையும் சிங்கள அரசின் குரங்கு சேஸ்டைகளை இந்திரா அம்மையார் நன்கு அறிந்ததால் தான் இந்த முடிவு.
 
      முதல் முயற்சியாக மத்தியஸ்துக்கு தனது குடும்பத்துக்கு விசுவாசமானவரும் இந்தியகொள்கை வகுப்பாளரின் தலைவரும் தமிழருமான எ.பார்த்தசாரதி நியமித்தார். 1983 ஆகஸ்ட் 25 இலங்கை பயணமான பார்த்தசாரதி சிங்கள - தமிழ் அரசியல்வாதிகளை சந்தித்து பேச ஆரம்பித்தார். கலந்துரையாடலுக்கு பின் üüமாகாண அடிப்படையில் பிரதேச வாரியாக நிர்வாக கட்டமைப்புக்கு அதிகாரம் வழங்கும் அய்ய்ங்ஷ்ன்ழ்ங் - இ தீர்வு திட்டத்தை உருவாக்கினர். அதை இலங்கை சிங்கள - தமிழ் அரசியல்வாதிகளிடம் கருத்து கேட்டதில் ஆரம்பத்திலேயே ஜெயவர்தனா தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.
 
      இது நடந்து கொண்டிருக்கும் போதே தமிழ் ஆயுத குழுக்களை வளர்த்து விடும் சர்ச்சைக்குரிய ரகசிய திட்டத்தை கையிலெடுத்தது இந்தியா. இதற்காக இந்திரா இந்திய பாதுகாப்பு ஆலோசகரான ஆர்.என்.ராவ்ரா அமைப்பின் தலைவர் கிரிஷ்சாக்னாபிரதமர் அலுவலக ஆணையர் சங்கரன்நாயர் ஆகிய மூவரையும் குழுவாக நியமித்து மூன்றாவது ஏஜென்சி என்ற பெயரில் இவ்விவகாரத்தை செயல்படுத்துமாறு கூறினார்.
 
      இலங்கை அரசியல் போராட்ட களத்தை நன்கு அறிந்திருந்த ரா அதிகாரிகள் இறந்துபோன தந்தை செல்வாவின் மகனான சந்திரகாசனை அழைத்து பேசினர். தமிழ் போராளி குழுகளுக்கு இந்திய ராணுவம் பயிற்சி தரும்அதன் மூலம் எல்லா அமைப்புகளும் ஒண்றினைந்து தமிழ் தேசிய விடுதலை இயக்கம் மூலம் சிங்கள ராணுவத்தை எதிர்த்து போராடலாம் தனி நாடு ஆகலாம் எனக்கூறயது.  அப்ப தனி நாடான நான்தான் அதற்கு தலைவர்.  நான் சொல்றவங்களுக்கு தான் பயிற்சி தரனும் என்ற உத்தரவாதம் வாங்கிக்கொண்டு போராளிக்குழு தலைவர்களை அழைத்து பேசிட்டு சொல்றன் என ரா அதிகாரிகளை அனுப்பி வைத்தார்.
 
      சந்திரகாசன் தனக்கு தோது படும்தன் பேச்சை மீறாத குழு தலைவர்களுக்கு ரகசிய அழைப்பு விடுத்தார். அதில் பஉகஞ,உடதகஊஉதஞந மற்றும் அமைப்பின் தலைவர்களிடம் இந்திய ராணுவம் பயிற்சியும்ஆயுதம்பணம் தரும் அதன் மூலம் சிங்கள ராணுவத்தை எதிர்க்கலாம் என பேசி ஒ.கே வாங்கியவர். ரா அதிகாரிகளை போராளி குழு தலைவர்களை சந்திக்க வைத்தார். அதிகாரிகள் பயிற்சி பற்றி கூறி பயிற்சி போராளிகள் லிஸ்டை கேட்டது.
 
  இதனால் இக்குழுக்கள் அதிக இளைஞர்களை சேர்க்க இலங்கையில் தமிழ் பிரதேசங்களில் அலைந்ததுபண ஆசையும் காட்டியது.  இந்திய உதவி செய்யுதுஇந்திய ராணுவம் நமக்கு பயிற்சி தர போகுதுநம்ம பசங்க அதுக்கு தயாராகறானுங்க விரைவில் நமக்கு விடுதலை எனற பேச்சு யாழ்பாணம்மட்டகளதிருகோணமலை என சுற்றி வன்னி கடுகாளுக்குள்ளாம் புகுந்தது. வி.பு இயக்கத்தின் தலைவரான பிரபாகரன் ஆச்சர்யமும்ஆனந்தம் பட்டவர்லண்டனிலிருந்த பாலசிங்கத்தை தொடர்பு கொண்ட பிரபாகரன் உடனே தமிழகம் திரும்பி இந்திய ராணுவ உதவி பயிற்சி பற்றி விசாரித்து தகவல் சொல்லுங்க என்றார்.
 
    1983 ஆகஸ்ட் 2வது வாரத்தில் சென்னை வந்த பாலசிங்கத்தை பேபி சுப்பிரமணியம் வரவேற்றார். பேபியின் நண்பரான அ.தி.மு.க அமைச்சர் காளிமுத்து மூலம் ஒரு ஹோட்டலில் தங்கி கொண்டனர். தமிழக அரசியல் பிரமுகர்களிடம் பேசியும் யாருக்கும் தகவல் தெரியவில்லை. அப்போது சென்னையில் கலாநிதி ராஜேந்திரன் என்ற தனது இலங்கை நண்பரை சந்தித்த பாலசிங்கததிடம்போராளிகள்க்கு இந்திய பயிற்சி தந்து ராணுவமா மாற்றுது. அதுக்கு தலைவர் சந்திரகாசன் தான் அவரை சந்திங்க உங்களுக்கும் பயிற்சி கிடைக்கும் என கூற இதில் வாக்குவாதமாகி இரு நண்பர்களும் நிரந்தரமாக பிரிந்தனர். பிரபாகரனும் சந்திரகாசன் மூலம் எதுவும் வேண்டாம் என்றார்.
 
      ரா அமைப்போடு எப்படி தொடர்பு ஏற்படுத்திக்கொள்வது என குழம்பிய நிலையில் பத்திரிகைதுறை நண்பர் ஐடியாபடி தமிழக புலனாய்வு துறையினரை சந்திக்க முடிவு செய்தார் பாலசிங்கம். அப்போதைய க்யூ பிராஞ்ச் எஸ்.பி அலைக்ஸாண்டரை அடிக்கடி சந்தித்தார்.  இதனால் இருவருக்கும் நட்பு மலர்ந்தது. பாலசிங்கத்திடம்ரா அதிகாரிகள் ஹோட்டல் ப்ளு டைமண்ட்டில் ஒரு தளத்தையே புக் பண்ணி அலுவலகமாக மாத்தி செயல்படறாங்க. இலங்கை விவகாரத்துல சந்திரகாசன் சொல்படி தான் செயல்படறாங்க.  சந்திரகாசன் சரியான நபர்யில்ல அதனால நீங்க உங்க தரப்பு கோரிக்கையை பிரதமர்க்கும்ரா தலைமைக்கும் விவரமாக எழுதுக்குங்க நிச்சயமா நல்ல பலன் இருக்கும் என்றார். அதன்படி பாலசிங்கம் வி.பு கள் அமைப்பு பற்றி விரிவாக கடிதம் ஒன்றை எழுதி அனுப்பு வைத்தார். இரண்டு வாரத்தில் ரா அதிகாரியொருவர் பாலசிங்கத்தை வந்து ரகசியமானயிடத்தில் சந்தித்தார்.
 
   நான் சந்திரசேகரன்ரா அதிகாரி. உங்க விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தேவையானது செய்யச் சொல்லி தலைமை உத்தரவு என்றவர். விடுதலைப்புலிகள் வரலாறுஅதன் கட்டமைப்புதாக்குதல்கள்போராளிகள் பலம்கொள்கை என பல கேள்விகளை அடுக்கடுக்காக வீசினார் சலிக்காமல் பதில் சொன்ன பாலசிங்கத்திடம் எல்லாம் ஓ.கே.  விடுதலை புலிகள் அமைப்புக்கு பயிற்சி தர்றோம் அதுக்கு முன்ன உங்க தலைவர் பிரபாகரனை நான் சந்திக்கனும் என கேட்ட சந்திரசேகரிடம்தலைவர் மேல துப்பாக்கி சூடு வழக்குயிருக்குஅதோட பாதுகாப்பு பிரச்சனை வேறயிருக்கு என பாலசிங்கம் தயக்கத்தோடு சொல்ல கவலைப்படாதிங்க பிரபாகரன்க்கு எந்த சிக்கலும்மில்லாம நான் பாத்துக்கறன் பிரபாகரன் பாதுகாப்புக்கு நான் பொறுப்பு என்றவர் சந்திப்புக்கு அப்புறம் தான் பயிற்சியெல்லாம் என உறுதியாகி கூறியவர். நாயர் என்ற ரா அதிகாரியை அறிமுகப்படுத்தி இவர் மூலம் எங்கிட்ட தொடர்பு கொள்ளுங்க என சொல்லிவிட்டு போய்விட்டார். சந்திப்பு பற்றி பிரபாகரனுக்கு தகவல் அனுப்பியவர்நீங்க தமிழகம் வந்து ரா அதிகாரிகளை சந்திக்கனும் எனச்சொல்லி அனுப்பினார். தகவலை கேட்டு சற்று தயங்கினார் பிரபா. உடனே ரகுமாத்தையா என இரண்டு மூத்த போராளிகளை சென்னைக்கு அனுப்பி பாலசிங்கத்தை சந்தித்துபாதுகாப்பு பிரச்சனைகள் பற்றி அறிந்துவரச்சொன்னார்.
 
      சென்னை வந்த போராளிகளுள் மாத்தையா மட்டும் பாதுகாப்பு சம்மந்தமாக ஏகப்பட்ட கேள்விகளைக் கேட்டார். தலைவருக்கு எதுவும் நடந்திடக்கூடாது என மிரட்டவும் செய்தார். அதில் கோபமான பாலசிங்கம் நீண்ட கடிதம் எழுதி அனுப்பி வைத்தார். கடிதத்தை படித்த பிரபாகரன் உடனே பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்ய சொன்னார். இதில் சந்தோஷமான பாலசிங்கம்நாயர் மூலம் சந்திசேகரனிடம் பிரபாகரன் தமிழகம் வருகிறார் அதனால சந்திப்ப பண்டிச்சேரியில வெச்சிக்கலாமா என கேட்க ஒ.கே என்றனர். பாண்டிச்சேரியில் ரகசியமாக ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்தனர் அங்கு அடேல்பாலசிங்கம் சில போராளிகளுடன் கார் பயணமாக பாண்டிச்சேரி போய் தங்கினார்கள்.
 
      1983 அக்டோபர். பிரபாகரன் இயக்கத் தளபதிகளோடு பாண்டிச்சேரி வந்து சேர்ந்தார். ரா அதிகாரி சந்திரசேகரன் - பிரபாகரன் சந்திப்பு ரகசியமாக நடந்தது. சந்திப்புக்கு பின் முதல் கட்டமாக 200 போராளிகளை அனுப்புங்க பயிற்சி தரப்படும் என்றார். எந்த விதமான பயிற்சி என பிரபாகரன் கேள்வி எழுப்பினார். இராணுவ வீரனுக்கான எல்லா பயிற்சியையும் கற்றுத் தரப்படும் என்றார். பயிற்சி பெற போகும் போராளிகளோட பெயர் பட்டியலை அனுப்புங்க எனச்சொல்லி விடைப்பெற்றனர் ரா அதிகாரிகள்.
 
      சந்தோஷமான பிரபாகரன் திறமையான போராளிகளை தேர்ந்தெடுத்தார். கற்பூரம் போல் குப்பென பற்றிக்கொள்ளும் இளைஞர்களை பயிற்சிக்காக தேர்ந்தெடுத்தார். அதில்  ரகுமாத்தையாசங்கர்பேபிஎனப் பட்டியலில் 200 பேர்களை சேர்த்து அனுப்பிவைத்தார்கள். பட்டிலை ஏற்றுக்கொண்டது ரா அமைப்பு. ரா அதிகாரி நாயர் மூலம், விடுதலைப்புலிகளுக்கு,உத்தரபிரதேசத்தில் உள்ள இராணுவ தலைமையாகமான பொக்ரான்ல பயிற்சி. ரயில் மூலம் டெல்லி போகனும்அங்கியிருந்து ராணுவ டிராக் மூலம் பொக்கரன் போவார்கள் என்றார்கள். புதிய கனவுகளோடு பயணம்மானார்கள் புலி வீரர்கள். பெரிய ராணுவ தளபதிகள் விடுதலைப்புலிகளுக்கு தனியாக பயிற்சி தந்தார்கள். நிலப்படம் வரைதல்வெடி பொருட்களை கையாளுதல்,கண்ணி வெடி பயன்படுத்தல்டாங்கி பயிற்சிவிமான எதிர்ப்பு ஆயுதங்கள் பயிற்சிராணுவபுலனாய்வுஅலைவரிசைகளை ஒட்டு கேட்டல்செய்திகளை மறித்தல்நவீன தொழில் நுட்ப பயன்பாடு.
 
      தாக்குதல்மரபு வழி ராணுவ பயிற்சிகள் அனைத்தும் ராணுவ அதிகாரிகள் கற்றுதந்தனர். மாத்தையா ராணுவ அதிகாரிகளோடும்ரா அதிகாரிகளோடும் நெருங்கி உறவாட ஆரம்பித்தார். பயிற்சிகளை வெகுவேகமாக புலி வீரர்கள் கற்றுக் கொண்டார்கள். எனது வீரர்களுக்கு தரப்படும் பயிற்சியை காண வேண்டும் என ஆவலுடன் சந்திரசேகரனிடம் பிரபாகரன் கேட்க ஏற்பாடு செய்துதந்தார். பொக்ரானில் பயிற்சியை பார்த்த பிரபாவிடம்தம்பீ சூப்பர் என இந்தியா மீது பாச மழை பொழிந்தவர்களிடம் திரும்பி மெல்ல புன்னகைத்தவர் இவுங்கள எதிர்க்க வேண்டிய சூழ்நிலை நமக்கு வரும் ஜாக்கிரதை என்றார்.
 
      பயிற்சியோடு அரசியல் பணிகளையும் விடுதலைப்புலிகள் செய்தனர். தமிழக மக்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே நம்மால் சுதந்திர நாடு பெற தீவிரமாக போராட முடியும். அவர்கள் உதவியில்லா விட்டால் பல சிக்கல்களை சந்திக்க வேண்டி வரும் என உணர்ந்தனர். இதனால் தமிழகம் முழுவதும் விடுதலைப்புலிகள் இலங்கை மண்ணில் தமிழ் மக்கள் படும் துயரங்களை பொதுயிடங்களில் புகைப்பட கண்காச்சி வைத்து மக்கள் ஆதரவை திரட்டினர். இதனை அப்போது தமிழகத்தின் முதல்வராகயிருந்த எம்.ஜீ.ஆர் ஊக்குவித்தார்.
 
      இலங்கையிலேமத்தியஸ்தராக ஜி.பி. தந்த சமரச தீர்வு திட்டத்தை 1984 ஜனவரி 10-ந் தேதி நடந்த அனைத்து கட்சி கூட்டம்மூலம் தீர்வு திட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என அறிவித்தார். சமரச திட்டம் தோல்வியில் முடிந்ததால் போர் பயிற்சி பெறும் வீரர்களை அதிகமாக ஊக்கவிக்கும் பொருட்டு ஆயுதங்களை வழங்கும் பிரச்சனைக்குரிய விவகாரத்தை கையிலெடுத்தது இந்தியா. இதில் அதிக லாபமடைந்தது சந்திரகாசனும்டகஞப குருப்பும் தான்.  உமாமகேஸ்வரன் நிறைய இளைஞர்களை சேர்த்து பயிற்சிபெற்றவர்அதிகமாக ஆயுதங்களையும்ராவிடமிருந்து பணத்தையும் பெற்றார். இப்படி சந்திரகாசன் கை காட்டிய அமைப்புக்கு நிறைய கிடைத்தது. சந்திரகாசன் ராவிடமிருந்து பண கிடைத்தது.
 
      விடுதலை புலிகளுக்கோ ஆயுதங்களை தவிர வேறு பண உதவி கிடைக்கவில்லை. இதனால் இலங்கை தமிழ் பகுதிகளில் வரி வசூலிப்பை செய்தது விடுதலை புலிகள் அமைப்பு. சிங்கள அரசிடம் தமிழ் பிரதேசங்களுக்குள்ள வராதிங்க எங்க மக்களை நாங்களே பார்த்துக்கறோம் என்றதால் அதிர்ந்து போய் கடுப்பான அரசு ராணுவத்தை ஏவியது. போர்பயிற்சி பெற்ற சிலரை மட்டும் அனுப்பி தாக்குதலை தடுங்க போதும் என அனுப்பி வைத்தார் பிரபாகரன்.  வரி வசூலில் வரும் வருவாயை வைத்து வீரர்களுக்கான செலவுகளை செய்ய ஆரம்பித்தார்.
 
      ஆயுத குழுக்களுளில் இருந்த சில நூறு போராளிகளுக்கு மட்டும்மே இந்திய ராணுவம் பயிற்சி தந்தது. ஆனால் எல்லா பெரிய அமைப்பிலும் ஆயிரக்கணக்கில் போராளிகள் இருந்தனர். இதனால் அந்த அமைப்புகள் தமிழகத்தில் ரகசியமாக பயிற்சி முகாம்களையும்சென்னையில் வெளிப்படையாக அரசியல் அலுவலகத்தையும் திறந்தனர். இந்த பயிற்சி மையங்களுக்குள் போக தமிழக காவல்துறைக்கு கூட அனுமதியில்லை.
 
EPRLF தஞ்சை - 3 கேம்ப்தென்னாற்காட்டில் - 2 கேம்ப்திருச்சி-1ராம்நாட் - 1 என பயிற்சி முகாம்களை வைத்திருந்தது.
 
      TELO அமைப்பினர்கர்நாடகாஉ.பி.டெல்லிஆகிய இடங்களில் ரா உதவியோடு பயிற்சி மையம் வைத்திருந்தது.
 
      PLOT தஞ்சையில்-புதுகை-4திருநெல்வேலி-1திருச்சி-1தஞ்சை கிழக்கு - 1 என 18 பயிற்சி முகாம்க  2336 வீரர்களுக்கு பயிற்சி தந்தது.
 
      அதோடு TEA -கேம்ப்TELO சங்கர் குரூப்TELO ராஜன் குரூப்RELO -1, NLFT - 1, ECRP - 1 என பல பயிற்சி முகாம்கள்.
 
      இதில் அதிகமான கட்டுப்பாடான பயிற்சி முகாம் விடுதலை புலிகளுடையது.  தமிழகத்தில் திருச்சிமதுரைராம்நாடு,தஞ்சைவிழுப்புரம்கோவைஈரோடுகோபி என பல பகுதிகளில் பயிற்சி முகாம்கள்ஒவ்வொன்றிலும் நூற்றுக்கணக்கில் வீரர்கள். இந்திய தளபதிகளிடம் பயிற்சி பெற்ற புலி தளபதிகள் பயிற்சியாளராக இருந்தார்கள். இந்திய ராணுவத்தின் உதவியோடு பயிற்சி மையம் அமைப்பதற்கு முன்பே சில பயிற்சி முகாம்களை பிரபாகரன் தமிழகத்தில் ரகசியமாக அமைத்திருந்தார். அப்படி அமைக்கப்பட்ட முதல் பயிற்சி மையம் சேலம் மேட்டூரில் அமைத்திருந்தது.
 
      இந்திய ராணுவம் தமிழ் போராளிகளுக்கு பயிற்சி தருகிறது என்பதை அரசல்புரசலாக அறிந்திருந்ததால் தமிழ் பகுதி இளைஞர்கள் மேல் சிங்கள இராணுவம் தாக்குதல் தொடுத்தது. பல்கலைக்கழகங்களை மூட செய்தது. மாணவர்கள் வீதி போராட்டத்திற்க்கு வந்தனர். ஆயுதக்குழுக்கள் உதவி செய்ததால் மாணவர்கள் போராட்டம் வலுப்பெற்றது. தமிழ் பகுதிகளில் மாணவர்கள் பள்ளிகல்லூரிகளை புறக்கணித்தனர். மக்கள் மத்தியிலும் ஆதரவு அலை வீசியது. போராட்டத்தை ஒடுக்க ராணுவம் தன் பலத்தை காட்டியது.
 
1137492_f496.jpg

 
அதில் மாணவர்கள் 5 பேர்மாணவிகள் 4 பேர் சுடப்பட்டு இறந்தனர். இதற்கு பெரிய போராட்டம் நடந்த மாணவர்கள் குழு திட்டமிட்டது. இதனால் 1984-ஜனவரி-9 யாழ்பாண கல்லூரியை மூடியது. இதனால் மாணவ-மாணவிகள்  படிப்பை தொலைத்து போக்கிடம் தெரியாமல் முழித்தனர். மீண்டும் பல்கலைகழகத்தை திறக்க கேட்டு மாணவ-மாணவிகள் உண்ணாவிரதம்மிருந்தனர். உண்ணாவிரதத்தை கலைக்க போலிஸை பயன்படுத்தியது அரசாங்கம். அதை தங்களுக்கு சாதகமாக்கி கொண்டனர் தமிழ் போராளிகள். அப்போது யாழ்பாண பகுதியிலிருந்து எல்.டி.டிஇயின் தளபதியான விக்டர் மொழி பற்றுள்ள மாணவர்களையம் மாணவிகளையும் கண்டு அவர்களை தமிழகம் அனுப்ப தயாரானர். அப்போது நடந்த தாக்குதல் ஒன்றில் மாணவர்களுக்கு காயம்பட்டது. அவர்களையும் சேர்த்து படகு மூலம் 22.1.1984 தமிழகம் அனுப்பினார். அந்த குழுவில் தென்றலாக 4 பெண்களும் வந்தனர்.
 
      அக்குழு மதுரையிலிருந்த பிரபாவை சந்தித்தது. அதில் அழகான அந்த பெண்ணை பார்த்ததும் ஒரு வித ஈர்ப்பு பிரபாவுக்கு வந்தது. வரண்ட அவரின் இதயத்தில் பூ பூக்க ஆரம்பித்தது. யார் அந்தப்பெண் என விசாரித்தார். மதிவதிணி எனச்சொல்லி அவருக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பிரபாகரனிடம் மதிவதிணிஇவளுங்க என் ப்ரண்ட்ஸ் பேரு வினோஜாஜெயாலலிதா. நான் பூங்குடு பக்கத்துல இருக்கற மதுவேலி. அம்மா சின்னம்மாஅப்பா எராம்பு வாத்தியார். அவர எராம்பு மாஸ்டர்ன்னு கூப்பிடுவாங்க..  பிரதானிய யுனிவர்சிட்டியில விவசாய அறிவியல் பிரிவுல படிக்கறேன் என்றவர். நம்ம மக்களுக்காக போராடலாம்ன்னு வந்தன் என்றார். எல்லாவற்றையும் விசாரித்தபின்,  அமைப்புல பெண்கள் பிரிவுன்னு தனியா கிடையாது. அதனால நீங்க மதுரையில தங்க முடியாது. சென்னையில இருங்க என்றவர்அடேலுக்கு தகவல் அனுப்பினார். அப்பெண்களை சென்னையில் உள்ள அடேலிடம் ஒப்படைக்கச்சொல்லி வழி பாதுகாப்புக்கு ஒரு போராளியையும் அனுப்பிவைத்தார். அப்படியும் பிரபாகரன் மனம், மதிவதினி, மதிவதினி என்றது. சென்னை சென்ற நான்கு இளைஜிகளும் அடேலுடன் தங்கிக்கொண்டனர். அமைப்பை பற்றி அடேல் அவர்களுக்கு விளக்க தலைவர் பிரபாகரனை பற்றி கூறும்போது ஆவலோடு அதை மட்டும் சலிக்காமல் விரிவாக கேட்டார் மதிவதினி.
 
      மதுரையிலிருந்த பிரபாகரன் சென்னைக்கு பயணமானார். மதியின் மனமோ தலைவனை காண எண்ணியது. திடீரென தலைவனை பார்த்ததும் பெண்மைக்குரிய வெட்கம் காதல் தீ குப்பென பற்றி எரிய ஆரம்பித்தது. இதை உமாமகேஸ்வரனுக்கு தெரிந்து கிண்டலடிக்க தொடங்கினார். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் குழப்பம்கேள்விகள் தடுமாறிவிட்டார் பிரபாகரன். மன்னனை காக்கும் மதியுக மந்திரியாய் நின்றார் பாலசிங்கம். இயக்கத்தின் முக்கிய தளபதிகள் சென்னைக்கு வரவைக்கப்பட்டனர். விவாதம் அணல் பறந்தது குறிக்கிட்டு பேசிய அடேல்கல்யாணம் ஆனாலும் பிரபாகரன் சிறப்பா செயல்படுவாரு இயக்கம் சிதையாது என வாக்குறுதி தந்தார். விடுதலைப்புலிகள் அமைப்பின் விதியில் மாற்றம் செய்யப்பட்டது. ஐந்து ஆண்டுகள் இயக்கத்தில் பணியாற்றியிருந்தால் அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற மாற்றத்தோடு பிரபாகரன்-மதிவதினி காதல் அங்கீகரிக்கப்பட்டது.
1137491_f496.jpg
 
 
  உடனே மதியின் தாய்-தந்தை சென்னைக்கு வரவைக்கப்பட்டு சம்மதம் கேட்கப்பட்டது. அரசாங்கம் தேடற ஆளாச்சே என தயங்கினர். மதிவதினியின் உறுதியால் திருமணத்துக்கு சம்மதித்தனர். 1.அக்.1984 சென்னை திருப்போரூர் முருகன் கோயிலில் பிரபாகரன்-மதிவதினி திருமணம் நடந்தது. புது வீட்டுக்கு குடிபோயினர்.
 
      அந்த நேரம் பிரபாவுக்கு டெலோ சபாரத்தினம் பெண்களை தனது இயக்கத்துக்கு கொண்டு வருகிறார். அவர்களை சரியாக பராமரிப்பதில்லை வேறு சில தொந்தரவுகளும் அவர்களுக்கு தருகிறார்கள் என்ற தகவல் வந்தது. அப்போது விடுதலை புலிகள் இயக்கத்தில் பெண்கள் பிரிவு கிடையாது. பெண்கள் அதிக அளவில் ஆயுதம் ஏந்த தயராகயிருப்பதை அறிந்தவர் மைய குழுவில் சாதக-பாதகங்களை அலசியபின் பெண்கள் பிரிவு ஒன்றை தொடங்கினார். அமைப்புக்கு வரும் பெண்களை அடேலிடம் அனுப்பிவைத்தார் திருவான்மியூர் வீட்டின் மொட்டை மாடியில் அரசியல் பயிற்சி தரப்பட்டது. அதன்பின்பே ராணுவ பயிற்சி. மதுரையில் பெண்களுக்கான முதல் ராணுவ பயிற்சி மையத்தை ஆரம்பித்தார்.
 
      அந்த நேரம் தமிழ் போராளிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 1984-அக்-31 பிரதமர் இந்திரா அம்மையார் சீக்கிய பாதுகாவலனால் சுடப்பட்டார். 18 தோட்டாக்களை உள்வாக்கிய அந்த இரும்பு தேக பெண்மணி இறந்துபோனார். கலைஞர் இந்திய தீபகற்பம் தண்ணீரில் மிதக்கவில்லை. கண்ணீரில் மிதக்கிறது என துக்க செய்தி வெளியிட்டார். அந்த துக்க வரிகள் அத்தனை உண்மை. இந்திராவுக்காக இந்தியாவே அழுதது. கூடவே வங்கதேசம் மற்றும் இலங்கை தமிழ் மக்களும் அழுதனர். உலக நாடுகளின் தலைவர்கள் பலர் டெல்லிக்கு வந்தனர் ஜெயவர்தனாவும் போயிருந்தார். நாட்டில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் நடந்துக்கொண்டுயிருந்தது. அதே வேகத்தில் கூடிய காங்கிரஸ் காரிய கமிட்டியும் அமைச்சரவையும் இந்திராவின் புதல்வர் பைலட் இராஜிவ்காந்தியை பிரதமர் ராஜிவ்காந்தியாக முடிசூட்டியது.
 
எவ்வளவு வேகத்தில் இராஜிவ் பதவியில் ஏற்றப்பட்டாரோ அதே வேகம் பிரச்சனையை கையாள்வதில் காட்டினார். குறிப்பாக இலங்கை இனப்பிரச்சனையில் அவர் காட்டிய வேகத்துக்கு கிடைத்த பரிசு மரணம் அதுவும் கொடூர மரணம்.
 
(தொடரும்...)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள், ஆனால் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் மகாவம்சம் எனும் வரலாறு எழுதப்பட்டதிலிருந்தே இலங்கையின் வரலாறு தொடங்குகிறது எனும் பொருள்பட எழுதியிருப்பது முற்றிலும் தவறு.

 

சிவகுமார் கோப்பாய் வங்கிக் கொள்ளையடிக்கப் போகும்போது மகேந்திரராசா உடன் போகவில்லை.எதோ சாக்குப்போக்குச் சொல்லி தப்பித்துக்கொண்டார். பின்னாளில் இவரும் வஸ்தியான்பிள்ளையால் பிடிக்கப்பட்டு "ரயல் அட் பார்" அதாவது யூரிகள் இல்லாது வழக்குகளை விசாரிக்கும் முறைமையான நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டார். இவருடன் சந்ததியாரும் வேறுவழக்கு ஒன்றில் சிறையிலிருந்தார்.

 

நான் நினைக்கிறேன் பூலோகசிங்கம் எனும் வெளிநாட்டுத்தூதர் இவரது மாமனார் என. இவர் எண்பதுகளில் குவைத் நாட்டில் இலங்கைத் தூதரகத்தில் முதல்நிலை அதிகாரியாக இருந்தவர்.

 

தவிர புத்தூர் வங்கிக்கொள்ளையில் புஸ்பராஜாவும் தொடர்பு அதில் யாழ்ப்பாணம் ஆரிய குளத்தடியிலிருந்த கென்சிமோகன் என்பவரும் தொடர்பு ஆனால் கொள்ளை நடந்தவேளையில் புத்திசாலித்தனமாக அதில் பங்களிக்கவில்லை. நிறையப் பணம் கனக்கப்பேருக்குக் கைமாறியுள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு விழிப்புண‌ர்வு  குறைய‌ இவ‌ர்க‌ளின் ஆட்ட‌ம் இன்னும் சிறிது கால‌ம் தான் கைபேசி மூல‌ம் வ‌ள‌ந்த‌ பிளைக‌ளிட‌ம் 1000 2000ரூபாய் எடுப‌டாது...................... நாட்டு ந‌ல‌ன் க‌ருதி யார் உண்மையா செய‌ல் ப‌டுகின‌மோ அவைக்கு தான் ஓட்டு..............................
    • அதுதான்…. இல்லை. அந்தச் சனத்துக்கு சாராயத்தை விற்று, அந்த மண்ணின் கனிம வளங்களை சுரண்டி… அரசியல்வாதிகள் தான்  முன்னேறிக் கொண்டு இருக்கிறார்கள்.
    • இப்ப‌டி ப‌ல‌ரின் பெய‌ர் வாக்க‌ள‌ர் ப‌ட்டிய‌லில் இல்லை புல‌வ‌ர் அண்ணா..........................நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பெடிய‌ன் சொந்த‌ ஊரில் ப‌ல‌ வாட்டி ஓட்டு போட பெடிய‌னுக்கு நீ இந்த‌ ஊரில் போட‌ முடியாது வேறு ஊரில் போய் போட‌ சொல்ல‌ அந்த‌ பெடிய‌ன் 40கிலே மீட்ட‌ர் மோட்ட‌ சைக்கில‌ சென்று ஓட்டு போட்ட‌து அந்த‌ பெடிய‌ன் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் வ‌ள‌ர்சிக்கு பெரிய‌ பங்காற்றினது...................... காணொளி ஆதார‌ம் இதோ..........................................     இந்த‌ பெடிய‌னுக்கும் மேடையில் பேசிக்கு கொண்டு இருக்கும் போது திராவிட‌ குண்ட‌ர்க‌க் இந்த‌ பெடிய‌னுக்கு அடிக்க‌ மேடை ஏறின‌வை ஆனால் இந்த‌ பெடிய‌ன் நினைத்து இருந்தால் திராவிட‌ குண்ட‌ர்க‌ளை அடிச்சு வீழ்த்தி இருப்பார்..................வ‌ய‌தான‌ கிழ‌டுக‌ள் திமுக்காவில் அராஜ‌க‌ம் செய்துக‌ள்.................இப்ப‌டி ஒவ்வொரு த‌ரின் ஓட்டு உரிமைக்கு தேர்த‌ல் நேர‌ம் வேட்டு வைப்ப‌து ப‌ய‌த்தின் முத‌ல் கார‌ண‌ம்........................விடிய‌ல் ஆட்சி எப்ப‌ க‌வுழுதோ அப்ப‌ தான் த‌மிழ் நாட்டில் மீண்டும் அட‌க்குமுறை இல்லாம‌ ஊட‌க‌த்தில் இருந்து ஓட்டு உரிமையில் இருந்து எல்லாம் நேர்மையா ந‌ட‌க்கும்.......................................................................
    • என் வாக்கை திருடியது யார் ?     தோல்விக்கு இப்பவே நாடகம் போடுகின்றார்கள் என ஒரு கூட்டம் சொல்லும் 😂
    • அமெரிக்காவின் எழுதப்பட்ட சாசனத்தை ட்ரம்ப் மீறுவதால் ஆயிரம் யூரிகளும் உருவாக்கப்படுவர். என்ன ஒன்று.... டொனால்ட் ரம்ப் அடுத்த தேர்தலில் வேற்றியீட்டி அந்த நான்கு வருடத்தில் எதையுமே சாதிக்கப்போவதில்லை. எனவே கலக,அழிவின் உச்சம் பெற்றவன் மீண்டும் ஆட்சிக்கு வந்து  உலகம் அழிந்து போவதே சிறப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.