Jump to content

2014 ICC World Twenty20 துடுப்பாட்ட போட்டி………செய்திகளும் கருத்துப்பகிர்வுகளும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாக்கிஸ்தான் எதிர் இந்தியா.... பாக்கிஸ்தான் வெற்றி நடை போட எனது வாழ்த்துக்கள்.............

Link to comment
Share on other sites

  • Replies 212
  • Created
  • Last Reply

நெதர்லாந்து அதிரடி : பிரதான சுற்றுக்கு முன்னேறியது

 

பங்களாதேஷில் நடைபெற்று வரும் இருபது-20 உலகக் கிண்ணத் தகுதிச் சுற்றுப்போட்டிகளின் இறுதி போட்டியில் இன்று நெதர்லாந்து திடீர் திருப்பமாக அதிரடியாக துடுப்பெடுத்தாடி அயர்லாந்தை வீழ்த்தி பிரதான சுற்றுக்குத் தகுதி பெற்றது.
நெதர்லாந்தின் இந்த திடீர் எழுச்சியினால் முதலிடத்திலிருந்த ஜிம்பாவேயும் வெளியே தூக்கி எறியப்பட்டது. ஏற்கனவே குழு 'பி" பிரிவிற்கு பங்களாதேஷ் தகுதி பெற்றது. மற்றொரு பிரிவுக்கு தற்போது நெதர்லாந்து தகுதி பெற்று வரலாறு படைத்தது.

அயர்லாந்து முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் அதிரடி ஆட்டம் ஆடி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ஓட்டங்களை எடுத்தது. தொடர்ந்து ஆடிய நெதர்லாந்து பிரதான சுற்றுக்கு, அதாவது சூப்பர் - 10 அணியுடன் இணைய 14.3 ஓவர்களில் 190 ஓட்டங்கள் எடுத்தால் தகுதி பெறும் நிலை காணப்பட்டது. ஆனால் நடந்தது சற்றும் கண்களால் நம்ப முடியாத ஒன்று. 13.5 ஓவர்களில் 194-4 என்று அபார வெற்றி பெற்று அதிர்ச்சியளித்தது.

 

http://www.virakesari.lk/?q=node/362314

Link to comment
Share on other sites

இந்தியாவுக்கு சூப்பர் வெற்றி: மிஸ்ரா சுழலில் பாகிஸ்தான் சரண்டர்
மார்ச் 21, 2014.

 

மிர்புர்: உலக கோப்பை ‘டுவென்டி–20’ தொடரை இந்திய அணி அமர்க்களமாக துவக்கியது. நேற்றைய லீக் போட்டியில் பாகிஸ்தானை  7 விக்கெட் வித்தியாசத்தில் மிகச் சுலபமாக வீழ்த்தியது. ‘சுழலில்’ மிரட்டிய அமித் மிஸ்ரா, வெற்றிக்கு பெரிதும் கைகொடுத்தார்.

ஐந்தாவது ‘டுவென்டி–-20’ உலக கோப்பை தொடர் வங்கதேசத்தில் நடக்கிறது. நேற்று மிர்புரில் நடந்த லீக் போட்டியில் ‘பிரிவு–2’ல் இடம் பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் தோனி ‘பவுலிங்’ தேர்வு செய்தார். அஷ்வின், அமித் மிஸ்ரா, ரவிந்திர ஜடேஜா சேர்த்து இந்திய அணியில் மூன்று ‘ஸ்பின்னர்கள்’ இடம் பெற்றனர்.

துவக்கம் மோசம்: இந்திய அணியின் துடிப்பான பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி துவக்கத்திலேயே ஆட்டம் கண்டது. சற்று வித்தியாசமாக முதல் ஓவரை இம்முறை அஷ்வின் வீசினார். இதில், கம்ரான் ஒரு பவுண்டரி மட்டும் அடித்தார். அடுத்த ஓவரில் அவசரப்பட்ட கம்ரான் (8), புவனேஷ்வர் குமாரின் நேரடி ‘த்ரோவில்’ பரிதாபமாக ரன் அவுட்டானார்.

ரவிந்திர ஜடேஜா பந்தில் ஹபீஸ் (15) வீழ்ந்தார். அமித் மிஸ்ராவின் ‘சுழலில்’ ஷேசாத்(22) வெளியேற, பாகிஸ்தான் அணி 8.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 47 ரன்கள் எடுத்து தத்தளித்தது.

பின் உமர் அக்மல், சோயப் மாலிக் சேர்ந்து போராடினர். யுவராஜ் வீசிய போட்டியின் 11வது ஓவரில் உமர் அக்மல் 2 பவுண்டரி அடிக்க மொத்தம் 13 ரன்கள் எடுக்கப்பட்டன. மறுமுனையில் மிஸ்ரா பந்தை சோய்ப் மாலிக் சிக்சருக்கு அனுப்ப, ‘ஸ்கோர்’ மெல்ல உயரத் துவங்கியது. மீண்டும் பந்துவீச வந்த மிஸ்ரா இம்முறை மாலிக்கை(18) அவுட்டாக்கி, இந்திய ரசிகர்களுக்கு உற்சாகம் தந்தார். ஷமி ‘வேகத்தில்’ உமர் அக்மல்(33) வீழ்ந்தார். புவனேஷ்வர் குமார் பந்தில் ‘ஆபத்தான’ அப்ரிதி(8) அவுட்டாக, தோனிக்கு நிம்மதி பிறந்தது.

ஷமி வீசிய போட்டியின் கடைசி ஓவரில் சோயப் மக்சூத் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்து கவுரவமான ஸ்கோரை பெற்றுத் தந்தார். இவர் 21 ரன்களுக்கு ரன் அவுட்டானார். பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்தது.

இந்தியா சார்பில் அமித் மிஸ்ரா அதிகபட்சமாக 2 விக்கெட் வீழ்த்தினார்.

நல்ல துவக்கம்: சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர் தவான் சேர்ந்து வலுவான துவக்கம் தந்தனர். ஜுனைடு கான் ஓவரில் ரோகித் வரிசையாக ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்து அசத்தினார். தொடர்ந்து சயீத் அஜ்மல் ஓவரில் தவான் மூன்று பவுண்டரிகள் விளாச, பாகிஸ்தான் பவுலர்களை பார்க்கவே பாவமாக இருந்தது. உமர் குல் ‘வேகத்தில்’ தவான்(30) அவுட்டானார். சிறிது நேரத்தில் சயீத் அஜ்மல் வலையில் ரோகித்(24) சிக்கினார். பிலாவல் பந்தில் யுவராஜ் சிங்(1) அவுட்டாக, லேசான பதட்டம் ஏற்பட்டது.

அதிரடி ஆட்டம்: பின் விராத் கோஹ்லி, ரெய்னா சேர்ந்து வெளுத்து வாங்கினர். பவுண்டரி, சிக்சர்களாக விளாசிய இவர்கள், அணிக்கு விரைவான வெற்றி தேடித் தந்தனர். இந்திய அணி 18.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கோஹ்லி(36), ரெய்னா(35)

அவுட்டாகாமல் இருந்தனர்.

ஆட்டநாயகன் விருதை அமித் மிஸ்ரா தட்டிச் சென்றார்.

நுாறு சதவீத வெற்றி     

‘டுவென்டி–20’ உலக கோப்பை வரலாற்றில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் ஆதிக்கம் நீடிக்கிறது. இதுவரை நான்கு முறை (2007, 2007, 2012, 2014) இந்தியா–பாகிஸ்தான் அணிகள் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரில் மோதின. இதில் அனைத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது.

யுவராஜ் ஏமாற்றம்           

இந்திய அணியின் ‘பீல்டிங்’ நேற்று எடுபடவில்லை. ‘டுவென்டி–20’ போட்டிகளில் அறிமுகமான முகமது ஷமி பந்தில் ஹபீஸ் 5 ரன்கள் எடுத்த நிலையில் கொடுத்த ‘கேட்ச்சை’ யுவராஜ் சிங், பிடித்து நழுவ விட்டார். இதனை பயன்படுத்திய ஹபீஸ் 15 ரன்கள் எடுத்தார். இதே போல பவுண்டரிக்கு செல்லும் பந்துகளை துடிப்பாக தடுக்கவும் தவறினர்.               

பழிதீர்த்தது

சமீபத்தில் இதே மிர்புரில் நடந்த ஆசிய கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது. இதற்கு நேற்று பழிதீர்த்தது.

சபாஷ் தோனி

இந்திய கேப்டன் தோனி வெற்றிப்பாதையை கண்டு கொண்டார். இவரது முடிவுகள் அனைத்தும் நேற்று மிகச் சரியாக இருந்தன. மூன்று ‘ஸ்பின்னர்களுக்கு’ வாய்ப்பு அளித்தார். மந்தமான ஆடுகளம் மற்றும் பனிப்பொழிவை உணர்ந்து, முதலில் ‘பவுலிங் தேர்வு செய்தார். இது சரியானது என்பதை நிரூபிக்கும் வகையில் அமித் மிஸ்ரா(2/22), ஜடேஜா(1/18), அஷ்வின்(0/23) சேர்ந்து 12 ஓவர்களில் 63 ரன்கள் மட்டும் கொடுத்து பாகிஸ்தான் அணியை திணறடித்தனர். இவர்கள் மூவரையும் திறமையாக பயன்படுத்திய தோனி, பாகிஸ்தான் அணியின் ரன் வேகத்தை அப்படியே கட்டுப்படுத்தினார்.

http://sports.dinamalar.com/2014/03/1395422857/IndiaPakistanWorldCupT20Cricket.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று நெதர்லாந்ட்தின் விளையாட்டை என் வாழ் நாளில் மறக்க மாட்டேன்..என்ன ஒரு விளையாட்டு........

Link to comment
Share on other sites

இருபது-20 உலக கிண்ணம் : முதல் வெற்றியை பதிவு செய்தது இலங்கை

 

இருபது-20 உலக கிண்ண சூப்பர் 10 சுற்றில் தென்னாபிரிக்காவிற்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி 5 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
5ஆவது இருபது-20 உலக கிண்ணத் தொடரின் சூப்பர்-10 சுற்று எனப்படும் பிரதான சுற்று போட்டி நேற்று ஆரம்பமானது. சூப்பர்-10 சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான போட்டி சிட்டகொங்கில் இடம்பெற்றது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி இருபது ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பாக ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் குசெல் பெரேரா அதிரடியாக துடுப்பெடுத்தாடி 61 ஓட்டங்களையும் அஞ்சலோ மெத்தியூஸ் 43 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பாக இம்ரான் தஹிர் 3 விக்கெட்டுகளையும் ஸ்டெயின் மற்றும்மோர்கல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனையடுத்து 166 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கோடு களமிறங்கிய தென்னாபிரிக்க அணிவீரர்கள் அதிரடியா துடுப்பெடுத்தானர்.

டிகொக் 25 ஓட்டங்களையும் அம்லா 25 ஓட்டங்களையும் டுமினி 39 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

இலங்கை அணியின் சிறப்பான பந்து வீச்சிற்கு தடுமாறிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்று 5 ஓட்டங்களால் தோல்விடைந்தது.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக சேனநாயக்க 2 விக்கெட்டுகளையும் மெத்தியூஸ், மலிங்க மற்றும் மென்டிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

 

http://www.virakesari.lk/?q=node/362337

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலிங்கா கீரோ...... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியுசிலாந்து தனது முதலாவது வெற்றியை பதிவு செய்தது...

Link to comment
Share on other sites

வெற்றி மழையில் நியூசிலாந்து: இங்கிலாந்து அணி பரிதாபம்

 

சிட்டகாங்: இங்கிலாந்துக்கு எதிரான 'டுவென்டி-20' உலக கோப்பை லீக் போட்டியில், மழை குறுக்கிட, 'டக்வொர்த்-லீவிஸ்' விதிப்படி, நியூசிலாந்து அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.வங்கதேசத்தில் ஐந்தாவது 'டுவென்டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதன் 'பிரிவு-1' லீக் போட்டியில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன் பிரண்டன் மெக்கலம், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
அதிர்ச்சி துவக்கம்: இங்கிலாந்து அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. மில்ஸ் வீசிய முதல் ஓவரில், ரன் கணக்கைத் துவக்கும் முன்பே, கோரி ஆண்டர்சனின் 'சூப்பர் கேட்ச்சில்' ஹேல்ஸ் வெளியேறினார். பின், லம்ப்புடன் இணைந்த மொயீன் அலி, மில்ஸ் ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார்.
நாதன் மெக்கலம் ஓவரில், லம்ப் இரு பவுண்டரி என விளாச, இங்கிலாந்து அணி 7.1 ஓவரில் 70 ரன்களை எட்டியது. பின் மொயீன் அலி (36), லம்ப் (33) அடுத்தடுத்த ஓவரில் அவுட்டாகினர்.
அடுத்து பட்லர், மார்கன் இணைந்து ரன்குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கு பலன் கிடைக்கவில்லை. மார்கன் 12 ரன்னுக்கு அவுட்டானார்.
நாதன் மெக்கலம் ஓவரில் இரு பவுண்டரி அடித்த பட்லர், சவுத்தி பந்துகளையும் பவுண்டரிக்கு அனுப்பினார். இவர் 32 ரன்கள் எடுத்தார். ஜோர்டனும் (8) ஏமாற்றினார். கடைசி 2 ஓவர்களில் 23 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 172 ரன்கள் எடுத்தது.
போபரா (24), பிரஸ்னன் (17) அவுட்டாகாமல் இருந்தனர்.
மழை குறுக்கீடு: கடின இலக்கைத் துரத்திய நியூசிலாந்து அணிக்கு கப்டில் (11) ஏமாற்றினார். 5.2 ஓவர்களில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட்டுக்கு 52 ரன்கள் எடுத்திருந்த போது, மழை குறுக்கிட்டது. மழை தொடர்ந்து பெய்யவே, 'டக்வொர்த்-லீவிஸ்' விதிப்படி, நியூசிலாந்து அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பிரண்டன் மெக்கலம் (16), வில்லியம்சன் (24) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஆட்டநாயகன் விருதை கோரி ஆண்டர்சன் வென்றார்.

 

http://www.dinamalar.com/iccworldt20/Newsdetails.php?id=938848

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போர போக்கை பார்த்தால் இலங்கை தான் கோப்பையை தட்டி செல்லும் போல இருக்கு.........

இலங்கை உட்பட சில நாடுகள் சிறப்பாக ஆடுகின்றன. ஆனால் இந்தியாவும் பாகிஸ்தானும் அரை இறுதி போட்டிக்கு வரவில்லையானால், வருமானம் குறைந்து விடும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பாக்கிஸ்தான் எதிர் அவுஸ்ரெலியா விளையாட்டை நம்பவே முடிய வில்லை..... அடி அகோரம்...ஒரு கட்டத்தில் வெற்றி வாய்ப்பு அவுஸ்ரெலியாவுக்கு இருந்திச்சு....பாக்கிஸ்தான் துள்ளியமாக பந்தை போட்டு விக்கெட் எடுக்க கடசி ஓவருக்கு 23 ஓட்டமெடுத்தால் வெற்றி என்று ஆடிய அவுஸ்சுக்கு பாக்கிஸ்தான் பந்து விச்சுக்கு 6 ஓட்டம் தான் எடுக்க முடிஞ்சது.....

Link to comment
Share on other sites

ஆஸ்திரேலிய அணி தோல்வி
 

 

மிர்புர்: பாகிஸ்தானுக்கு எதிரான 'டுவென்டி--20' உலக கோப்பை தொடரின் லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ஐந்தாவது 'டுவென்டி--20' உலக கோப்பை தொடர் வங்கதேசத்தில் நடக்கிறது. மிர்புரில் இன்று நடக்கும் லீக் போட்டியில் 'பிரிவு-2'ல் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவை எதிர் கொள்கிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பெய்லி பவுலிங் தேர்வு செய்தார்.
பாகிஸ்தான் அணிக்கு ஷேசாத் அதிர்ச்சி தந்தார். போலிஞ்சர் வேகத்தில் இவர் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். வாட்சன் வேகத்தில் கேப்டன் ஹபீஸ் (13) வௌியேறினார். உமர் அக்மல், கம்ரான் அக்மல் சிறப்பான ஆட்டத்தை வௌிப்படுத்தினர்.கம்ரான் அக்மல் 31 ரன்களில் அவுட்டானார்.
அரை சதம் கடந்த உமர் அக்மல், 94 ரன்களில் ஆட்டமிழந்தார். மகசூத் (5) நிலைக்கவில்லை. பாகிஸ்தான் அணி 20 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்தது. அப்ரிதி (20), மாலிக் (6) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர்(4), வாட்சன் (4) நிலைக்கவில்லை. பின் இணைந்த ஆரோன் பின்ச், மேக்ஸ்வெல் எதிரணி பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். அரை சதம் கடந்த மேக்ஸ்வெல் 74 ரன்களில் அவு்டடானார். பெய்லி (4), ஹாட்ஜ் (2) விரைவில் திரும்பினர். உமர் குல் வேகத்தில் கவுல்டர் நைல் டக்-அவுட் ஆனார். மற்றவர்கள் சொதப்ப, ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில், 175 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி, 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
 

http://www.dinamalar.com/iccworldt20/Newsdetails.php?id=939493

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் கொஞ்ச நேரத்தில் வெஸ்சின்டீஸ் எதிர் இந்தியா..........

Link to comment
Share on other sites

இந்திய தேசிய கீதத்தைப் பாடினார்கள்.. இதில் தென்மாநிலங்களைப் பற்றிய எந்தக் குறிப்புகளும் இல்லையே.. :unsure::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐ போனில் போனில் பார்க்கக்கூடிய லிங்க் இருந்தால் போட்டு விடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஶ்ரீலங்காவிலும் , பாகிஸ்தானிலும் ஏதோ மாயம் வேலை செய்யுது. :mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜந்து சத்தத்துக்கு உதவாத விளையாட்டு வெஸ்சின்டீஸ் அணியின் விளையாட்டு.....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.