Jump to content

2014 ICC World Twenty20 துடுப்பாட்ட போட்டி………செய்திகளும் கருத்துப்பகிர்வுகளும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்று நடந்த பயிற்ச்சி ஆட்டத்தில் சிம்பாவே அணியை கொங் கொங் அணி வீழ்த்தியது....

Link to comment
Share on other sites

  • Replies 212
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நாளை முதலாவது ஆட்டம் ஆரம்பம் ஆக்கப் போக்குது...வங்கிளாதேஸ் எதிர் அப்கானிஸ்தான்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதிலடி கொடுக்குமா வங்கதேசம்: ஆப்கானிஸ்தானுடன் இன்று மோதல்


 

6NBC.jpg

 

மிர்புர்: உலக கோப்பை ‘டுவென்டி–20’ தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.  இப்போட்டியில் அபார ஆட்டத்தை வௌிப்படுத்தி, சமீபத்திய ஆசிய கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க வங்கதேச அணி காத்திருக்கிறது. தவிர, ‘சூப்பர்–10’  சுற்றுக்கு முன்னேற, இப்போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் வங்கதேசம் களமிறங்குகிறது.      

ஐந்தாவது ‘டுவென்டி-20’ உலக கோப்பை தொடர் வங்கதேசத்தில் இன்று துவங்குகிறது. 16 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட ‘டாப்–8’ அணிகள் நேரடியாக ‘சூப்பர்-–10’ சுற்றுக்கு முன்னேறின.       

மீதமுள்ள 2 ‘சூப்பர்–10’ இடத்திற்கான தகுதிச்சுற்றில் 8 அணிகள் மோதுகின்றன. இன்று நடக்கும் முதல் போட்டியில், ‘குரூப் ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள, போட்டியை நடத்தும் வங்கதேச அணி, ஆசிய கோப்பை தொடரில் அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.       

கட்டாய வெற்றி: வங்கதேச அணியை பொறுத்தவரை சொந்த மண்ணில் போட்டி நடப்பது பலம். எனினும், ‘சூப்பர்–10’ சுற்றுக்கு முன்னேற, தகுதிச்சுற்றில் ‘ஏ’ பிரிவில் முதலிடம் பெற வேண்டும்.       

இதில் இடம் பெற்றுள்ள நேபாளம், ஹாங்காங் அணிகள் அனுபமில்லாதவை. ஆப்கானிஸ்தான் அப்படியல்ல. சமீபத்திய ஆசிய கோப்பை தொடரில், இந்த அணியிடம் வங்கதேசம் வீழ்ந்தது.       

உலக கோப்பை போட்டிகள் நடக்கும் சிட்டகாங், மிர்புர், சைல்ஹெத் ஆகிய நகரங்கள் விழாக் கோலம் பூண்டுள்ளன. இங்குள்ள மக்களின் எதிர்பார்ப்பு வங்கதேச அணி மீது தான்.       

இதனால், இன்று கட்டாய வெற்றி முக்கியம். இல்லையெனில், அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் போய்விடும். இதனால், அனாமுல், ஷம்சுர், சாகிப் அல் ஹசன் அசத்த வேண்டிய நிலையில் உள்ளனர்.       

கேப்டன் முஷ்பிகுர் அணியை சிறப்பான முறையில் ஒருங்கிணைத்து, நெருக்கடிக்கு பணிந்து பீல்டிங்கில் கோட்டை விடாமல் செயல்பட்டால், வெற்றி பெறலாம்.       

ஆசிய கோப்பை லீக் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தியதால்,  ஆப்கானிஸ்தான் உற்சாகத்தில் உள்ளது. ‘டாப் ஆர்டரில்’ முகமது ஷாஜத், கேப்டன் முகமது நபி, ஷென்வாரி ரன்குவிப்பை வௌிப்படுத்தலாம். பவுலிங்கில் ஹமீத் ஹசன், ஷபூர், தவ்லத் விக்கெட் வேட்டை நடத்த காத்திருக்கின்றனர்.

சிட்டகாங்கில் இன்று நடக்கவுள்ள மற்றொரு ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில், ஹாங்காங், நேபாளம் அணிகள் மோதுகின்றன.

 

தினமலர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசியாவில் டுவென்டி- 20 யுத்தம்: வாகை சூடுவது யார்: சாதிக்குமா இந்திய அணி

 

hzJQu.jpg

 

 

மிர்புர்: அதிரடிக்கு பஞ்சமில்லாத ‘டுவென்டி-20’ உலக கோப்பை தொடர், இன்று வங்கதேச மண்ணில் துவங்குகிறது. 16 அணிகள் பங்கேற்கும் இப்போட்டியில், நம்பிக்கையுடன் களம் காணும் இந்திய அணி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.                   

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் 2007ல் முதல் ‘டுவென்டி-20’ உலக கோப்பை தொடர் நடந்தது. 2009, 2010, 2012 என, இதுவரை நான்கு தொடர்கள் நடந்தன. ஐந்தாவது தொடர் இம்முறை வங்கதேசத்தில் இன்று துவங்கி, ஏப்., 6 வரை நடக்கின்றன.                   

இதில் பங்கேற்கும் அணிகள் 12ல் இருந்து 16 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. லீக் சுற்று, ‘சூப்பர்-–10’ என, இரண்டு முறையில் போட்டிகள் நடக்கும், 2012 தொடரில் பங்கேற்ற அணிகளில் ‘டாப்- 8’ அணிகள், நேரடியாக ‘சூப்பர்-–10’ சுற்றில் பங்கேற்கும்.                   

மீதமுள்ள 2 இடங்களுக்கு போட்டியை நடத்தும் வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங், நேபாளம், ஜிம்பாப்வே, நெதர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அயர்லாந்து என, 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இன்று துவங்கும் தகுதிச்சுற்றில் மோதவுள்ளன.                  

இரு பிரிவிலும் முதல் இடம் பெறும் அணிகள், அடுத்த சுற்றுக்கு (‘சூப்பர்-–10’) தகுதி பெறும்.                   

மார்ச் 21 ல் துவங்கும் ‘சூப்பர்-–10’ சுற்று முதல் போட்டியில் ‘குரூப்–-2’ல் இடம் பெற்றுள்ள இந்திய அணி, ‘பரம எதிரி’ பாகிஸ்தானை சந்திக்கிறது. இந்திய அணியை பொறுத்தவரை சமீபத்திய ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானிடம், கடைசி நேரத்தில் வீழ்ந்தது.      ஒருநாள் போட்டிகளில் இருந்து ‘டுவென்டி-–20’ போட்டி முற்றிலும் மாறுபட்டது. கேப்டன் தோனி, யுவராஜ் சிங், ரெய்னா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளது கூடுதல் பலம்.                   

துவக்கத்துக்கு ஷிகர் தவான், ரோகித் சர்மா, ‘மிடில் ஆர்டரில்’ விராத் கோஹ்லி, ரகானே உள்ளனர். பின் வரிசையில் ‘ஆல் ரவுண்டர்’ ஜடேஜா, சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் பேட்டிங்கில் கைகொடுக்கலாம். இதனால், ஸ்டூவர்ட் பின்னிக்கு இடம் கிடைப்பது சந்தேகம்.                  

பவுலிங் எப்படி: வேகப்பந்து வீச்சுக்கு புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, வருண் ஆரோனுடன், மோகித் சர்மாவும் உள்ளனர். சுழலில் அஷ்வின் (19 போட்டி, 14 விக்.,), அமித் மிஸ்ரா சேர்ந்து இடம் பெறும் பட்சத்தில் கூடுதல் பலம்.கடைசி நேரத்தில் அதிக ரன் விட்டுக் கொடுக்கும் வழக்கத்தை மாற்றும் பட்சத்தில், இந்திய அணி கோப்பை வெல்ல முயற்சிக்கலாம்.                   

அப்ரிதி அதிரடி: பாகிஸ்தான் அணியில் முகமது ஹபீஸ், அகமது ஷேசாத்துடன் அனுபவ வீரர்கள் சோயப் மாலிக், கம்ரான் அக்மல் அணிக்கு திரும்பியது ஆறுதல்.       

இம்முறை ஜார்ஜ் பெய்லி தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வலுவாக உள்ளது. ஆரோன் பின்ச், டேவிட் வார்னருடன், அனுபவ வாட்சன், தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ‘டுவென்டி-–20’ போட்டியில் 2 சிக்சர் விளாசி வெற்றி தேடித்தந்த பிராட் ஹாட்ஜ், எந்த இலக்கையும் அசராமல் ‘சேஸ்’ செய்யும் பால்க்னர், மேக்ஸ்வெல் என, பெரிய பேட்டிங் படையே உள்ளது.            

டுபிளசியை கேப்டனாக கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணிக்கு ஆம்லா, டிவிலியர்ஸ், மில்லர், குயின்டன் டி காக், டிசாட்சொபே, மார்னே மார்கல், ஆல்பி மார்கல் மற்றும் ஸ்டைன் உள்ளனர்.              2012ல் சொந்தமண்ணில் கோப்பை தவறவிட்ட இலங்கை அணி, இம்முறை வங்கதேசத்தில் சாதிக்க வாய்ப்புள்ளது. இதற்கு கேப்டன் சண்டிமால், மாத்யூஸ், ஜெயவர்தனா, சங்ககரா உதவுவது உறுதி.

சமி உறுதி: ‘நடப்பு சாம்பியன்’ அந்தஸ்துடன் களமிறங்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி, இங்கிலாந்துக்கு எதிரான ‘டுவென்டி-–20’ தொடரை வென்ற மகிழ்ச்சியில், கேப்டன் சமி தலைமையில் வந்துள்ளது. துவக்க வீரர் கெய்ல், ஸ்மித், ரசல், ‘ஆல் ரவுண்டர்’ சாமுவேல்ஸ், ராம்தின் பேட்டிங்கில் உதவ காத்திருக்கின்றனர்.                   

இங்கிலாந்து அணிக்கு மீண்டும் ஸ்டூவர்ட் பிராட் கேப்டனாக உள்ளார். தவிர, இயான் மார்கன், மொயீன் அலி, இயான் பெல், டிம் பிரஸ்னன், மைக்கேல் லம்ப், ஜோர்டனும் அணிக்கு கைகொடுக்கலாம்.                   

இந்த அணிகளுடன் 36 பந்தில் சதம் அடித்து மிரட்டிய கோரி ஆண்டர்சனை சேர்த்துக் கொண்டு களமிறங்கும் பிரண்டன் மெக்கலத்தின் நியூசிலாந்து அணியும் கோப்பை வெல்லும் போட்டியில் குதித்துள்ளன.

பைனலுக்கு செல்வது எப்படி                  

‘டுவென்டி-20’ உலக கோப்பை தொடரில் கடந்த முறையில் (12 அணிகள்) இருந்து மாறுபட்டு, இம்முறை 16 அணிகள் பங்கேற்கவுள்ளன. கடந்த உலக கோப்பை தொடரில் பங்கேற்ற அணிகளில் ‘டாப்-–8’ இடம் பெற்ற அணிகள், நேரடியாக ‘சூப்பர்-–10’ சுற்றில் விளையாடும்.    மீதமுள்ள 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, மார்ச் 16 முதல் 21 வரை நடக்கும் தகுதிச்சுற்றில் விளையாடும். இந்த இரு பிரிவிலும் முதலிடம் பெறும் அணிகள், அடுத்த சுற்றுக்கு (‘சூப்பர்-–10’) முன்னேறும்.

இதில் பங்கேற்கும் 10 அணிகள், ‘குரூப் 1’, ‘குரூப் 2’ பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் லீக் முறையில் மோதும். இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்கள் பெறும் அணிகள், அரையிறுதிக்கு முன்னேறும். ஏப்., 6ல் பைனல் மிர்புரில் நடக்கும்.

பரிசு எவ்வளவு                  

‘டுவென்டி-20 ’ உலக கோப்பை தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ. 18.30 கோடி. கோப்பை வெல்லும் அணிக்கு ரூ. 6.71 கோடி கிடைக்கும். இரண்டாவது இடம் பெறும் அணி ரூ. 3.36 கோடி பெறும்.பெண்கள் பிரிவில் நடக்கும் தொடரின் மொத்த பரிசு ரூ. 11 கோடி. கோப்பை வெல்லும் அணிக்கு ரூ. 40 லட்சம், பைனலில் தோல்வியடையும் அணிக்கு ரூ. 15 லட்சம் கிடைக்கும்.

இந்திய அணி விவரம்            

உலக கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணி விவரம்: தோனி (கேப்டன்), தவான், ரோகித் சர்மா, கோஹ்லி, ரெய்னா, யுவராஜ் சிங், ரகானே, ஜடேஜா, அஷ்வின், புவனேஷ்வர் குமார், ஷமி, ஸ்டூவர்ட் பின்னி, அமித் மிஸ்ரா, மோகித் சர்மா, வருண் ஆரோன்.

மொத்தம் ‘60’            

22 நாட்கள் நடக்கும் இத்தொடரில் ஆண்கள் பிரிவில் 35, பெண்கள் பிரிவில் 25 என, மொத்தம் 60 போட்டிகள் நடக்கவுள்ளன.

வெல்வது யார்            

மார்ச் 23 முதல் ஏப்., 2 வரை பெண்கள் ‘டுவென்டி-20’ உலக கோப்பை தொடரும், வங்கதேசத்தில் நடக்கிறது. இம்முறை இந்தியா, ‘நடப்பு சாம்பியன்’ ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உட்பட 10 அணிகள், இரு பிரிவுகளாக பிரிந்து மோதுகின்றன. இரண்டிலும் முதல் இரு இடங்களைப் பெறும் அணிகள், ஆண்கள் பிரிவு அரையிறுதி (ஏப்., 3, 4), பைனல் (ஏப்., 6) நடக்கும் அதே நாளில், முன்னதாக நடத்தப்படும்.

ஜெயவர்தனா அபாரம்            

‘டுவென்டி–20’ உலக கோப்பை அரங்கில், அதிக ரன்கள் எடுத்துள்ள வீரர்கள் வரிசையில், இலங்கையின் மகிளா ஜெயவர்தனா முன்னிலை வகிக்கிறார். இதுவரை 25 போட்டியில் விளையாடிய இவர், ஒரு சதம், 5 அரைசதம் உட்பட 858 ரன்கள் எடுத்துள்ளார்.

நான்கு சதம்            

உலக கோப்பை (டுவென்டி–20) வரலாற்றில், இதுவரை நான்கு சதம் அடிக்கப்பட்டுள்ளது. ஜோகனஸ்பர்க்கில் 2007ல் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் 117 ரன்கள் எடுத்து, முதல் சதத்தை பதிவு செய்தார். அதன்பின் 2010ல் இந்தியாவின் சுரேஷ் ரெய்னா (101, எதிர்–தென் ஆப்ரிக்கா), இலங்கையின் மகிளா ஜெயவர்தனா (100, எதிர்–ஜிம்பாப்வே) சதம் அடித்தனர். கடந்த 2012ல் வங்கதேசத்துக்கு எதிராக நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் 123 ரன்கள் எடுத்தார். இதன்மூலம், ‘டுவென்டி–20’ உலக கோப்பை அரங்கில், ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார்.

‘சிக்சர் மன்னன்’ கெய்ல்            

‘டுவென்டி–20’ உலக கோப்பை போட்டிகளில், அதிக சிக்சர் விளாசிய வீரர்கள் பட்டியலில், வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் முன்னிலை வகிக்கிறார். இதுவரை 18 போட்டியில் 43 சிக்சர் விளாசினார். அடுத்து ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன், இந்தியாவின் யுவராஜ் சிங் தலா 27 சிக்சர் அடித்தனர். இலங்கையின் மகிளா ஜெயவர்தனா 22, இங்கிலாந்தின் லுாக் ரைட் 21 சிக்சர் அடித்தனர்.            

* ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் விளாசிய வீரர்கள் வரிசையிலும், வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் முன்னிலை வகிக்கிறார். ஜோகனஸ்பர்க்கில் 2007ல் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் 10 சிக்சர் அடித்தார். இவரை அடுத்து இந்தியாவின் யுவராஜ் சிங், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல், நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம், ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் தலா 7 சிக்சர் அடித்தனர்.

மலிங்கா மிரட்டல்            

உலக கோப்பை (டுவென்டி–20) வரலாற்றில், அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் வரிசையில் இலங்கையின் லசித் மலிங்கா முன்னிலை வகிக்கிறார். இவர், 25 போட்டியில் 33 விக்கெட் கைப்பற்றினார். இவரை அடுத்து பாகிஸ்தானின் சயீத் அஜ்மல் (32 விக்கெட்), இலங்கையின் அஜந்தா மெண்டிஸ் (31), பாகிஸ்தானின் அப்ரிதி (31), உமர் குல் (29) அதிக விக்கெட் வீழ்த்தினர். இந்தியா சார்பில் இர்பான் பதான், ஹர்பஜன் சிங் அதிகபட்சமாக தலா 16 விக்கெட் வீழ்த்தினர்.            

* ஒரு இன்னிங்சில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் வரிசையில், இலங்கையின் அஜந்தா மெண்டிஸ் முன்னிலை வகிக்கிறார். ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 2012ல் நடந்த போட்டியில் அதிகபட்சமாக 6 விக்கெட் வீழ்த்தினார். பாகிஸ்தானின் உமர் குல், இலங்கையின் மலிங்கா தலா 5 விக்கெட் கைப்பற்றினர்.

சிறந்த அனுபவம்            

‘டுவென்டி–20’ உலக கோப்பை அரங்கில், அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்கள் வரிசையில் பாகிஸ்தானின் கம்ரான் அக்மல், அப்ரிதி முன்னிலை வகிக்கின்றனர். இவர்கள் தலா 26 போட்டிகளில் விளையாடினர். இவர்களை அடுத்து, இலங்கையின் தில்ஷன், மகிளா ஜெயவர்தனா, சங்ககரா, லசித் மலிங்கா தலா 25 போட்டியில் விளையாடினர். இந்தியா சார்பில் காம்பிர், யுவராஜ் சிங் தலா 21 போட்டியில் பங்கேற்றனர்.

அதிக வெற்றி            

‘டுவென்டி–20’ உலக கோப்பை வரலாற்றில், அதிக வெற்றிகளை பதிவு செய்த அணிகள் வரிசையில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளன. இவ்விரு அணிகள் அதிகபட்சமாக தலா 16 வெற்றியை பதிவு செய்தன. இந்திய அணி 22 போட்டியில் 12 வெற்றி பெற்றது.

260            

‘டுவென்டி–20’ உலக கோப்பையில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் எடுத்த அணிகள் வரிசையில் இலங்கை அணி முன்னிலை வகிக்கிறது. ஜோகனஸ்பர்க்கில் 2007ல் நடந்த கென்யாவுக்கு எதிரான போட்டியில், இலங்கை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 260 ரன்கள் குவித்தது. இந்திய அணி, அதிகபட்சமாக இங்கிலாந்துக்கு எதிராக 218 ரன்கள் எடுத்தது.

68            

‘டுவென்டி–20’ உலக கோப்பை வரலாற்றில் ஒரு இன்னிங்சில் குறைந்த ஸ்கோரை பெற்ற அணிகள் வரிசையில் அயர்லாந்து அணி முன்னிலை வகிக்கிறது. கயானாவில் 2010ல் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில், அயர்லாந்து அணி 16.4 ஓவரில் 68 ரன்களுக்கு சுருண்டு மோசமான ஸ்கோரை பெற்றது.

சிறந்த வெற்றி            

‘டுவென்டி–20’ உலக கோப்பை அரங்கில், அதிக ரன்கள் வித்தியாசத்தில் சிறந்த வெற்றியை பதிவு செய்த அணிகள் வரிசையில் இலங்கை அணி முன்னிலை வகிக்கிறது. ஜோகனஸ்பர்க்கில் 2007ல் நடந்த கென்யாவுக்கு எதிரான போட்டியில் 172 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

10 விக்கெட் வித்தியாசம்            

உலக கோப்பை (டுவென்டி–20) வரலாற்றில், ஆஸ்திரேலியா (எதிர்–இலங்கை, 2007, கேப்டவுன்), தென் ஆப்ரிக்கா (எதிர்–ஜிம்பாப்வே, 2012, அம்பாந்தோட்டை) அணிகள் மட்டுமே 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளன. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் தலா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டன. இந்திய அணி, அதிகபட்சமாக 8 விக்கெட் வித்தியாசத்தில் இரண்டு முறை வெற்றி பெற்றது.

bKNSq.jpg

 

தினமலர்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டை பார்க்க விரும்பும் உறவுகள் இந்த இணைய தளத்தில் பார்க்கலாம் http://cricfree.tv/live/live_sports_streaming

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வங்கதேசம் வருமா இலங்கை அணி ....... கொழும்பு: சம்பள பிரச்னை காரணமாக ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரில், இரண்டாம் தர இலங்கை அணி பங்கேற்கும் என்று தெரிகிறது. இலங்கை கிரிக்கெட் போர்டு (எஸ்.எல்.சி.,) நிதிச்சிக்கலில் சிக்கி தவிக்கிறது. இதனால், ‘ஐ.சி.சி., நடத்தும் தொடர்களில் இலங்கைக்கு கிடைக்கும் பங்கில், 25 சதவீதம் வீரர்களுக்கு பிரித்து தரப்படும்,’ என்ற விதியை நீக்கிவிட்டது. இதனிடையே, வங்கதேசத்தில் இன்று துவங்கும் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரில், இலங்கை அணி ‘சூப்பர்–10’ சுற்று ‘பிரிவு 1’ல் இடம் பெற்றுள்ளது. முதல் போட்டியில் 22ம் தேதி தென் ஆப்ரிக்காவை சந்திக்கவுள்ளது. இதில் பங்கேற்கும் இலங்கை வீரர்கள் சம்பள உயர்வு கேட்டு போர்க்கொடி துாக்கியுள்ளனர். ஐ.சி.சி., வருமானத்தில் 12 சதவீதம், வீரர்களுக்கு தர வேண்டும் என, கேட்டுள்ளனர். இதுதொடர்பாக வீரர்கள், போர்டு இடையே மோதல் இருந்து வருகிறது. இதனால், ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரில் பங்கேற்க எப்போது கிளம்புவர் என உறுதியில்லாமல் உள்ளது. எஸ்.எல்.சி., நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘‘வீரர்கள் தங்கள் கோரிக்கையை கைவிட்டு, வங்கதேசம் செல்லும் முன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். இல்லையெனில், உலக கோப்பை தொடருக்கு இரண்டாம் தர இலங்கை அணியை அனுப்ப, போர்டு தயாராக உள்ளது,’’ என்றார். அதேநேரம், இதற்கான வாய்ப்பு குறைவு. ஏனெனில், வீரர்கள் சம்பளமே இல்லாமல் இதற்கு முன் இலங்கை அணிக்காக விளையாடியுள்ளனர். இதனால், இன்னும் ஓரிரு தினங்களில், சுமூக தீர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. http://sports.dinamalar.com/2014/03/1394898035/SriLankaCricketSalaryWorldCupT20.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Afghanistan shot out for 72

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வங்கதேசம் 78 -- 1  .   9 விக்கட்டுக்களால் வென்றுவிட்டது...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேபாள் அணி பெரிய வெற்றி.........

Link to comment
Share on other sites

நேபாளம் அணி அசத்தல் வெற்றி
மார்ச் 16, 2014.

 

 

சிட்டகாங்: ஹாங்காங் அணிக்கு எதிரான ‘டுவென்டி–20’ உலக கோப்பை தகுதிச் சுற்றில், நேபாளம் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுது.           

வங்கதேசத்தில், 5வது ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. சிட்டகாங்கில் நேற்று நடந்த ‘ஏ’ பிரிவு ‘சூப்பர்–10’ தகுதிச் சுற்றுப் போட்டியில், நேபாளம், ஹாங்காங் அணிகள் மோதின.      

முதலில் பேட் செய்த நேபாளம் அணிக்கு சுபாஷ் காகுரல் (22), சாகர் புன் (13)  பரஸ் (41), மல்லா (48) கைகொடுக்க, 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது.      

சவாலான இலக்கை விரட்டிய ஹாங்காங் அணிக்கு கேப்டன் அட்கின்சன் (6), வக்காஸ் பர்கத் (18), பாபர் ஹயாத் (20), மார்க் சாப்மன் (13) ஆறுதல் தந்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்னில் வெளியேற,  17 ஓவரில் 69 ரன்களுக்கு சுருண்டு, படுதோல்வி அடைந்தது.      

நேபாளம் சார்பில் 3 விக்கெட் வீழ்த்திய சக்தி கவுசன், ஆட்டநாயகன் விருதை வென்றார்.

http://sports.dinamalar.com/2014/03/1394989868/NepalHongKongT20WorldCupCricket.htm

 

Link to comment
Share on other sites

எது சிறந்த வெற்றிக்கூட்டணி: சோதிக்க தோனிக்கு வாய்ப்பு: பயிற்சியில் இலங்கையுடன் மோதல்
மார்ச் 16, 2014.

 

மிர்புர்: ‘டுவென்டி-20’ உலக கோப்பை பயிற்சி போட்டியில் இன்று இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. இதில், இந்திய அணிக்கான வெற்றிக்கூட்டணியை கண்டறிய கேப்டன் தோனி முயற்சிக்கலாம்.

ஐந்தாவது ‘டுவென்டி-20’ உலக கோப்பை தொடர் வங்கதேசத்தில் நடக்கிறது. இதில் ‘பிரிவு–2’ல் இடம்பெற்றுள்ள இந்திய அணி வரும் 21ம் தேதி ‘பரம எதிரியான’ பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இதற்கு முன்னதாக இன்றைய பயிற்சி போட்டியில் இலங்கையுடன் மோதுகிறது.                  

அன்னிய மண்ணில் இந்திய அணி தொடர்ந்து தோல்வியை சந்திக்கிறது. சமீபத்தில் கோஹ்லி தலைமையில் ஆசிய கோப்பை தொடரிலும்  ‘அடி’ வாங்கியது. தற்போது தோனி, யுவராஜ், ரெய்னா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் திரும்பியுள்ள நிலையில், உலக கோப்பை ‘டுவென்டி–20’ தொடரில் மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.

இன்றைய இலங்கைக்கு எதிரான பயிற்சி போட்டியில் அனைத்து 15 வீரர்களையும் பயன்படுத்தலாம். இதன் மூலம், எது சிறந்த வெற்றிக்கூட்டணி என்பதை கேப்டன் தோனி கண்டறியலாம். முதலில் சரியான துவக்க ஜோடியை தேர்வு செய்ய வேண்டும். ரோகித் சர்மா தொடர்ந்து சொதப்புவதால், பிரிமியர் தொடரில் துவக்க வீரராக களமிறங்கிய அனுபவம் உள்ள ரகானேவை தவானுடன் சேர்த்து களமிறக்கலாம்.

ரெய்னா பலம்: ‘மிடில்–ஆர்டரில்’ ‘டுவென்டி–20’ ‘ஸ்பெஷலிஸ்ட்’ விராத் கோஹ்லி, யுவராஜ், ரெய்னா பலம் சேர்ப்பர். இத்தொடரில் சதம் அடித்த பெருமைமிக்க ரெய்னா, பயிற்சி வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கடைசி கட்டத்தில் தோனி கைகொடுக்கலாம். அம்பதி ராயுடு, ஸ்டூவர்ட் பின்னி ஆகியோர் வாய்ப்பை வீணாக்கக் கூடாது.

பழிதீர்க்குமா: பந்துவீச்சு தான் பெரும் பிரச்னையாகவே உள்ளது. முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், மோகித் சர்மா உள்ளிட்ட ‘வேகங்கள்’ கடைசி கட்ட ஓவர்களில் ரன்களை வாரி வழங்குகின்றனர். இதையடுத்து இந்தியாவின் அதிவேகப்பந்துவீச்சாளரான வருண் ஆரோனை சோதித்து பார்க்கலாம். இவர் தொடர்ந்து சிறப்பாக செயல்படாதது பின்னடைவான விஷயம்.‘சுழலில்’ அஷ்வின், ரவிந்திர ஜடேஜா அசத்தினால், சமீபத்திய ஆசிய கோப்பை லீக் போட்டியில் இலங்கையிடம் சந்தித்த தோல்விக்கு இந்தியா பழிதிர்க்கலாம்.

இளம் கேப்டன்: இலங்கை அணியை பொறுத்தவரை ஆசிய கோப்பை வென்ற உற்சாகத்தில் உள்ளது. சம்பள பிரச்னை காரணமாக, முதல் தர வீரர்கள் பங்கேற்பது சந்தேகம். இளம் கேப்டன் சண்டிமால் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இவருக்கு ஜெயவர்தனா, சங்ககராவின் அனுபவம் கைகொடுக்கும். ‘வேகத்தில்’ மிரட்ட மலிங்கா உள்ளார். ‘சுழலில்’ அஜந்தா மெண்டிஸ் அசத்தலாம்.

பாக்.,– நியூசி., மோதல்:           

இன்று மிர்புரில் நடக்கும் மற்றொரு பயிற்சி போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

அயர்லாந்து–ஜிம்பாப்வே பலப்பரீட்சை:

இன்று நடக்கும் ‘பி’ பிரிவு ‘சூப்பர்–10’ தகுதிச் சுற்றுப் போட்டிகளில், அயர்லாந்து – ஜிம்பாப்வே, நெதர்லாந்து – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,) அணிகள் மோதுகின்றன.

 

http://sports.dinamalar.com/2014/03/1394983835/DhoniIndiaSriLankaT20WorldCupPractice.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிம்பாவேயை வீழ்த்தியது Ireland

Link to comment
Share on other sites

பாகிஸ்தான் அணி வெற்றி
மார்ச் 17, 2014.

 

மிர்புர்: வங்கதேசத்தில் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதற்கான பயிற்சி போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின.

மெக்கலம் ஆறுதல்:

முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணிக்கு கப்டில் (11), வில்லியம்சன் (7), ராஸ் டெய்லர் (9) ஏமாற்றினார். முன்ரோ 20 ரன்கள் எடுத்தார். கோரி ஆண்டர்சன், ஒரு ரன்னுக்கு அவுட்டானார்.அடுத்த வந்த ரான்கி (8), நீஷம் (1), நாதன் மெக்கலம் (4) என, யாரும் ஒற்றை இலக்க ரன்களை தாண்டவில்லை. போராடிய பிரண்டன் மெக்கலம் 59 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். நியூசிலாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்தது.

ஹபீஸ் அபாரம்:

எளிய இலக்கை ‘சேஸ்’ செய்த பாகிஸ்தான் அணிக்கு ஷர்ஜீல் கான் (12) ஏமாற்றினார். அடுத்து இணைந்த கம்ரான் அக்மல், முகமது ஹபீஸ் ஜோடி, அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. கம்ரான் அக்மல் (52) ‘ரிட்டயர்டு ஹர்ட்’ முறையில் திரும்பினார்.முகமது ஹபீஸ் 55, உமர் அக்மல் 3 ரன்கள் எடுத்தனர். கடைசி ஓவரில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டன. முதல் 3 பந்தில் 2 ரன்கள் கிடைத்தன. அடுத்த இரு பந்தில் மக்சூத் பவுண்டரிகள் விளாச, பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது.

 

http://sports.dinamalar.com/2014/03/1395070204/WorldT20PakistanNewZealandwarmupmatch.html

Link to comment
Share on other sites

பயிற்சியில் இந்தியா ஏமாற்றம் *இலங்கை அணி வெற்றி
மார்ச் 17, 2014.

 

மிர்புர்: இலங்கைக்கு எதிரான ‘டுவென்டி–20’ உலக கோப்பை பயிற்சி போட்டியில் சொதப்பிய இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

வங்கதேசத்தில் ஐந்தாவது ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. நேற்றைய  பயிற்சி போட்டியில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொண்டது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி  ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

இலங்கை அணிக்கு தில்ஷன் (9), குசல் பெரேரா (21), ஜெயர்வர்தனா (30) ஓரளவு கைகொடுத்தனர்.

சங்ககரா (4), மாத்யூஸ் (9) ஏமாற்றினர். சண்டிமால் 29 ரன்கள் எடுத்தார். இலங்கை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்தது. திசரா பெரேரா (18), குலசேகரா (21) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் அஷ்வின் 3 விக்கெட் வீழ்த்தினர்.

‘டாப்–ஆர்டர்’ சரிவு:

எட்டிவிடும் இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு ஷிகர் தவான் (2), ரோகித் சர்மா(4) ஏமாற்றினர்.

அடுத்து வந்த ரெய்னா 31 பந்தில் 41 ரன்கள் விளாசினார். நீண்ட இடைவெளிக்குப்பின் களமிறங்கிய யுவராஜ், ஹெராத் மற்றும் மெண்டிஸ் பந்துகளில் சிக்சர் அடித்தார். இவருடன் இணைந்த கோஹ்லி, 9 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

இந்நிலையில், யுவராஜ் சிங் (33) அவுட்டாக, இந்திய அணிக்கு சிக்கல் ஏற்பட்டது. ரவிந்திர ஜடேஜாவும் (12) நிலைக்கவில்லை. குலசேகரா ஓவரில் அஷ்வின் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த போதும், வெற்றிக்கு உதவவில்லை.

இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டன. மலிங்கா வீசிய இந்த ஓவரில் பின்னி (14), அஷ்வின் (19), அமித் மிஸ்ரா (0) அவுட்டாக, இந்திய அணி 20 ஓவரில் 148 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது. புவனேஷ்வர் குமார் (1) அவுட்டாகாமல் இருந்தார்.

இலங்கை சார்பில் மலிங்கா 4 விக்கெட் வீழ்த்தினார்.

 

களமிறங்காத தோனி

நேற்றைய பயிற்சி போட்டியில் விக்கெட் கீப்பிங் பணியை செய்தார் தோனி. ஆனால், பேட்டிங்கின் போது, இவர் கடைசி வரை களமிறங்கவில்லை. இதுவும் அணியின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது.

ஒளிரும் ‘ஸ்டம்ப்ஸ்’

ஆஸ்திரேலியாவின் ‘பிக் பாஷ்’ தொடரில் அறிமுகமான ஒளிரும் ‘ஸ்டம்ப்ஸ்’ தொழில்நுட்பம் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரிலும் பயன்படுத்தப்படுகிறது.

இதன்படி விக்கெட் மீது பந்து பட்ட விவரம் நவீன ‘சென்சார்’ பொருத்தப்பட்ட ‘பெயில்ஸ்’ மூலம் துல்லியமாக கணிக்கப்படும். உடன் ‘பேட்டரியில்’ இயங்கும் எல்.இ.டி விளக்குகள் கொண்ட  ‘பெயில்ஸ்’ ஒளிரும். இதில் இருந்து அனுப்பப்படும் ‘ரேடியோ சிக்னல்கள்’ வாயிலாக ஒட்டுமொத்த ‘ஸ்டம்ப்ஸ்’ சிவப்பு நிறத்தில் ஜொலிக்கும்.

 

http://sports.dinamalar.com/2014/03/1395066241/indiasrilankaworldt20warmupmatch.html

Link to comment
Share on other sites

ஆப்கானிஸ்தான் அணி அபாரம்
மார்ச் 18, 2014.

 

சிட்டகாங்: ஹாங்காங் அணிக்கு எதிரான ‘சூப்பர்–10’ தகுதிச்சுற்று போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐந்தாவது ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் வங்கதேசத்தில் நடக்கிறது. இதற்கான ‘சூப்பர்–10’ தகுதிச்சுற்றில் 8 அணிகள், 2 இடத்துக்கு மோதுகின்றன.

நேற்று நடந்த ‘ஏ’ பிரிவு போட்டியில் ஆப்கானிஸ்தான், ஹாங்காங் அணியை எதிர்கொண்டது. ‘டாஸ்’ வென்று களமிறங்கிய ஹாங்காங் அணிக்கு சாப்மேன் 38, பர்கத் 32, கேப்டன் அட்கின்சன் 31 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் ஏமாற்ற, 20 ஓவரில் ஹாங்காங் அணி 8 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்தது.

எளிய இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணிக்கு நஜீப் (7), அஷ்கர் (13) அதிர்ச்சி கொடுத்தனர். பின் முகமது ஷாஜத், சபியுல்லா இணைந்து அணியை மீட்டனர். ஷாஜத் 68 ரன்கள் எடுத்தார்.

கடைசி நேரத்தில் சபியுல்லா 3 சிக்சர், 5 பவுண்டரிகள் விளாசி, 24 பந்துகளில் 51 ரன்கள் எடுக்க, அணியின் வெற்றி எளிதானது. ஆப்கானிஸ்தான் அணி 18 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

சபியுல்லா (51), கேப்டன் முகமது நபி (6) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

http://sports.dinamalar.com/2014/03/1395156800/AfghanistanHongKongoutWorldT20Qualifiers.html

Link to comment
Share on other sites

வெஸ்ட் இண்டீஸ் அசத்தல் வெற்றி
மார்ச் 18, 2014.

 

 

பதுல்லா: இங்கிலாந்துக்கு எதிரான ‘டுவென்டி–20’ உலக கோப்பை பயிற்சி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் சென்ற இங்கிலாந்து அணி ‘டுவென்டி–20’ தொடரை 1–2 என, இழந்தது. நேற்று பதுல்லாவில் நடந்த ‘டுவென்டி–20’ உலக கோப்பை பயிற்சி போட்டியில் இவ்விரு அணிகளும் மோதின. காயம் காரணமாக ஸ்டூவர்ட் பிராட்டுக்குப் பதில், இங்கிலாந்து கேப்டனாக மார்கன் பொறுப்பேற்றார். ‘டாஸ்’ வென்ற இவர், பேட்டிங் தேர்வு செய்தார்.

இங்கிலாந்து அணிக்கு மைக்கேல் லம்ப் (14), ஹேல்ஸ் (9) ஏமாற்றம் தந்தனர். மொயீன் அலி (22), பட்லர் (14), போபரா (15) என, யாரும் நிலைக்கவில்லை.

சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்கன் மட்டும் 43 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து அணி 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கிருஷ்மர் 3, காட்ரெல் 2 விக்கெட் கைப்பற்றினர்.

கெய்ல் அதிரடி:

எளிய இலக்கை ‘சேஸ்’ செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஸ்மித், கெய்ல் இணைந்து ‘சூப்பர்’ துவக்கம் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு 36 ரன்கள் எடுத்த நிலையில், ஸ்மித் (36) அவுட்டானார். சார்லஸ் (7), சாமுவேல்ஸ் (2) வந்த வேகத்தில் திரும்பினர்.

மொயீன் அலி ஓவரில் சிம்மன்ஸ், 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். அடுத்த கெய்ல் ஒரு சிக்சர் அடிக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 16.1 ஓவரில், 3 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அரைசதம் அடித்த கெய்ல் (58), சிம்மன்ஸ் (15) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

http://sports.dinamalar.com/2014/03/1395157071/gaylewestindiesworldt20warmupmatchengland.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போர போக்கை பார்த்தால் இலங்கை தான் கோப்பையை தட்டி செல்லும் போல இருக்கு.........

Link to comment
Share on other sites

வங்கதேச அணி வெற்றி * ‘சூப்பர்–10’ வாய்ப்பை தக்கவைத்தது

மார்ச் 18, 2014.

சிட்டகாங்: நேபாள அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற வங்கதேச அணி, ‘சூப்பர்–10’ வாய்ப்பை தக்கவைத்தது.

வங்கதேசத்தில் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின், ‘சூப்பர்–10’ சுற்றுக்கான தகுதி போட்டியில், வங்கதேசம் மற்றும் நேபாள அணிகள் மோதின.

‘டாஸ்’ வென்ற வங்கதேச அணி கேப்டன் முஷ்பிகுர், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். நேபாள அணிக்கு கேப்டன் ஹட்கா (41), வெசாகர் (40) மட்டும் ஆறுதல் தந்தனர். 20 ஓவர் முடிவில் நேபாள அணி, 5 விக்கெட்டுக்கு 126 ரன்கள் மட்டும் எடுத்தது.

போகிற போக்கில் எட்டி விடும் இலக்கை துரத்திய வங்கதேச அணிக்கு, தமிம் இக்பால் 30, அனாமுல் ஹக் 42 ரன்கள் எடுத்து கைகொடுத்தனர். பின் இணைந்த சபிர் ரஹ்மான் (21), சாகிப் அல் ஹசன் (37) வெற்றியை உறுதி செய்தனர்.

வங்கதேச அணி 15.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்து, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை அடுத்து, வங்கதேச அணி ‘ஏ’ பிரிவில் 4 புள்ளிகளுடன், ‘சூப்பர்–10’ சுற்று வாய்ப்பை தக்கவைத்தது.

http://sports.dinamalar.com/2014/03/1395162122/BangladeshWorldT20nepal.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று வெஸ்ட் இன்டீசிடம்  இலங்கை தோற்று விட்டது...!

Link to comment
Share on other sites

பயிற்சியில் இந்தியா அசத்தல்:ரெய்னா, கோஹ்லி அரைசதம்:வீழ்ந்தது இங்கிலாந்து அணி
மார்ச் 19, 2014.

 

மிர்புர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான  ‘டுவென்டி–-20’  உலக கோப்பை பயிற்சி போட்டியில் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங்கில் அசத்திய ரெய்னா, கோஹ்லி அரைசதம் அடித்தனர்.                  

ஐந்தாவது ‘டுவென்டி–-20’ உலக கோப்பை தொடர் வங்கதேசத்தில் நடக்கிறது. ‘பிரிவு–2’ல் இடம்பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் போட்டியில், நாளை பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.   

இதற்கு தயாராகும் வகையில் நேற்றைய பயிற்சி போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்தை சந்தித்தது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.                  

மீண்டும் ஏமாற்றம்: இந்திய அணிக்கு ஷிகர் தவான், ரோகித் சர்மா ஜோடி மீண்டும் ஏமாற்றியது. பந்துகளை ‘விழுங்கிய’ ரோகித் சர்மா 5 ரன்னுக்கு (8 பந்து) அவுட்டானார். பிரஸ்னன் பந்துகளில் 2 பவுண்டரி அடித்த ஷிகர் தவான், 14 ரன்னுக்கு திரும்பினார்.                 

ரெய்னா அரைசதம்: அடுத்து வந்த யுவராஜ் சிங், இம்முறை ஒரு ரன்னுக்கு அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். பின் கோஹ்லியுடன் ரெய்னா இணைந்தார். ஜோர்டான் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் அடித்த ரெய்னா, பிராட் பந்தையும் பவுண்டரிக்கு அனுப்பினார்.                  

ஸ்டீபன் பாரி வீசிய ஓவரில் கோஹ்லி 2 பவுண்டரி, ரெய்னா ஒரு சிக்சர் அடிக்க, 13.3 ஓவரில் ஸ்கோர் 100ஐ எட்டியது. போபரா வீசிய போட்டியின் 15வது ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய ரெய்னா, அரைசதம் (54 ரன்கள், 31 பந்து) கடந்து அவுட்டானார்.                 

கோஹ்லி அசத்தல்: பின் வந்த தோனி, டெர்ன்பாக் பந்தில் சிக்சர் அடித்தார். மறுமுனையில் கோஹ்லியும் அரைசதம் கடந்தார். பிரஸ்னன் வீசிய கடைசி ஓவரில் இவர் மூன்று பவுண்டரிகள் அடிக்க, இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்தது. கோஹ்லி (74), தோனி (21) அவுட்டாகாமல் இருந்தனர்.      

மொயீன் ஆறுதல்: கடின இலக்கைத் துரத்திய இங்கிலாந்து அணிக்கு ஹேல்ஸ் (16) நீடிக்கவில்லை. மைக்கேல் லம்ப் 36 ரன்கள் எடுத்தார். ‘அபாய’ மார்கனை (16), அஷ்வின் வெளியேற்றினார்.      

ஒருமுனையில் விக்கெட் சரிந்த போதும், மனம் தளராமல் போராடிய மொயீன் அலி 46 ரன்கள் எடுத்து, ஜடேஜா ‘சுழலில்’ சிக்கினார். பட்லர் 18 பந்தில் 30 ரன்கள் எடுத்த போதும், அது வெற்றிக்கு உதவவில்லை.      

இங்கிலாந்து அணி 20 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்து, 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இந்தியா சார்பில் ஜடேஜா அதிகபட்சமாக 2 விக்கெட் வீழ்த்தினார்.      

சுருண்டது பாக்.,     

நேற்று நடந்த மற்றொரு பயிற்சி போட்டியில் முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஷேசாத் (12), உமர் அக்மல் (17), மக்சூத் (15) தவிர, மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களை தாண்டவில்லை. பாகிஸ்தான் அணி 17.3 ஓவரில் 71 ரன்னுக்கு சுருண்டது.      

தென் ஆப்ரிக்க அணிக்கு ஆம்லா 24, குயின்டன் டி காக் 15 ரன்கள் எடுத்தனர். பின் வந்த மில்லர் (12), டிவிலியர்ஸ் (20) கைகொடுக்க, தென் ஆப்ரிக்க அணி 14 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 72 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

http://sports.dinamalar.com/2014/03/1395248177/IndiaEnglandCricketWorldCupT20.html

Link to comment
Share on other sites

கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா வெற்றி: நியூசிலாந்து ஏமாற்றம்
மார்ச் 19, 2014.

 

பதுல்லா: நியூசிலாந்துக்கு எதிரான ‘டுவென்டி–20’ உலக கோப்பை பயிற்சி போட்டியில், கடைசி ஓவரில் அசத்திய ஆஸ்திரேலிய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது.                 

வங்கதேசத்தில், 5வது ‘டுவென்டி–20’ உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. பதுல்லாவில் நேற்று நடந்த பயிற்சி போட்டியில், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஜார்ஜ் பெய்லி, ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.                 

வார்னர் அரைசதம்: ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர், ஆரோன் பின்ச் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. அதிரடியாக ஆடிய வார்னர், 20வது பந்தில் அரைசதத்தை பதிவு செய்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த ஆரோன் பின்ச், பவுண்டரிகளாக விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்த போது, வார்னர் (65), பின்ச் (47) ‘ரிட்டயர்ட் ஹர்ட்’ முறையில் ‘பெவிலியன்’ திரும்பினர்.                  

மேக்ஸ்வெல் (2) ஏமாற்றினார். வாட்சன் (27), கேப்டன் ஜார்ஜ் பெய்லி (19), பிராட் ஹாட்ஜ் (25) ஓரளவு கைகொடுத்தனர். பிராட் ஹாடின் ‘டக்–அவுட்’ ஆனார். ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 200 ரன்கள் எடுத்தது. கேமிரான் ஒயிட் (6), கிறிஸ்டியன் (8) அவுட்டாகாமல் இருந்தனர். நியூசிலாந்து சார்பில் மில்ஸ் 2 விக்கெட் வீழ்த்தினார்.                 

கப்டில் ஆறுதல்: சவாலான இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணிக்கு வில்லியம்சன் (17) ஏமாற்றினார். கேப்டன் பிரண்டன் மெக்கலம் (37) நிலைக்கவில்லை. பொறுப்பாக ஆடிய மார்டின் கப்டில் (62) ஆறுதல் தந்தார். ராஸ் டெய்லர் (16), முன்ரோ (1), ஆண்டர்சன் (29), ரோஞ்சி (21) பெரிய அளவில் சோபிக்கவில்லை.                 

நியூசிலாந்தின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டன. நாதன் கூல்டர்–நைல் வீசிய 20வது ஓவரின் முதல் பந்தில் நீஷாம் (2) அவுட்டானார். மூன்றாவது பந்தில் தேவ்சிச் (3) ‘ரன்–அவுட்’ ஆனார். இந்த ஓவரில் 5 ரன்கள் மட்டும் கிடைத்தது. நியூசிலாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 197 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. மில்ஸ் (1), ஹிரா (1) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் மிட்சல் ஸ்டார்க், கூல்டர்–நைல், பிராட் ஹாக், ஜேம்ஸ் முயூர்ஹெட் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.      

இலங்கை தோல்வி     

மிர்புரில் நடந்த மற்றொரு பயிற்சியில் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற இலங்கை அணி கேப்டன் தினேஷ் சண்டிமால், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு டுவைன் ஸ்மித் (60), டுவைன் பிராவோ (43), கேப்டன் டேரன் சமி (30*) கைகொடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 172 ரன்கள் குவித்தது. பின் களமிறங்கிய இலங்கை அணிக்கு தில்ஷன் (43), சங்ககரா (24), மாத்யூஸ் (18) ஆறுதல் தந்தனர். மற்ற வீரர்கள் ஏமாற்ற, இலங்கை அணி 19.2 ஓவரில் 139 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’டாகி, 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

 

http://sports.dinamalar.com/2014/03/1395245311/DavidWarnerAustraliaNewZelandWorldCupT20Cricket.html

Link to comment
Share on other sites

கடைசி பந்தில் ஜிம்பாப்வே வெற்றி: நெதர்லாந்து அணி அதிர்ச்சி
மார்ச் 19, 2014.

 

சைல்ஹெட்: நெதர்லாந்து அணிக்கு எதிரான ‘டுவென்டி–20’ உலக கோப்பை தகுதிச் சுற்றில், கடைசி பந்தில் சிபாண்டா சிக்சர் அடிக்க, ஜிம்பாப்வே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது.     

வங்கதேசத்தில், 5வது ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. சைல்ஹெட்டில் நேற்று நடந்த ‘பி’ பிரிவு ‘சூப்பர்–10’ தகுதிச் சுற்றுப் போட்டியில், ஜிம்பாப்வே, நெதர்லாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற நெதர்லாந்து அணி கேப்டன் பீட்டர் போரன், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.     

கூப்பர் அரைசதம்: நெதர்லாந்து அணிக்கு மைக்கேல் ஸ்வார்ட் (3), ஸ்டீபன் மைபர்க் (0) மோசமான துவக்கம் கொடுத்தனர். அடுத்து வந்த வெஸ்லே பார்ரசி (12), கேப்டன் பீட்டர் போரன் (8) ஏமாற்றினர். பொறுப்பாக ஆடிய டாம் கூப்பர், பவுண்டரிகளாக விளாசினார். உட்செயா பந்தை பவுண்டரிக்கு விரட்டிய டாம் கூப்பர், அரைசதத்தை பதிவு செய்தார். பென் கூப்பர் (20) நிலைக்கவில்லை. நெதர்லாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்தது. டாம் கூப்பர் (72 ரன், 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட்டாகாமல் இருந்தார். ஜிம்பாப்வே சார்பில் உட்செயா 2 விக்கெட் வீழ்த்தினார்.     

டெய்லர் நம்பிக்கை: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய ஜிம்பாப்வே அணிக்கு சிகாண்டர் ராஜா (13) ஏமாற்றினார். பொறுப்பாக ஆடிய ஹாமில்டன் மசகட்சா (43) நம்பிக்கை தந்தார். சிகும்புரா ‘டக்–அவுட்’ ஆனார். அபாரமாக ஆடிய கேப்டன் பிரண்டன் டெய்லர் (49) அரைசத வாய்ப்பை இழந்தார்.     

கடைசி ஓவரில் ஜிம்பாப்வே அணியின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டன. அஹ்சன் ஜமில் வீசிய 20வது ஓவரின் முதல் நான்கு பந்தில், ஒரு பவுண்டரி உட்பட 6 ரன்கள் கிடைத்தது. ஐந்தாவது பந்தில் வில்லியம்ஸ் (26) ‘ரன்–அவுட்’ ஆனார். கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில், சிபாண்டா சிக்சர் அடித்தார். ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சிபாண்டா (9) அவுட்டாகாமல் இருந்தார்.     

இதன்மூலம், இத்தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்த ஜிம்பாப்வே அணி, ‘சூப்பர்–10’ சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. ஆட்டநாயகன் விருதை ஜிம்பாப்வே கேப்டன் பிரண்டன் டெய்லர் வென்றார்.

அயர்லாந்து மீண்டும் வெற்றி
சைல்ஹெட்: நேற்று நடந்த மற்றொரு ‘பி’ பிரிவு ‘சூப்பர்–10’ தகுதிச் சுற்றுப் போட்டியில், அயர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,) அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற அயர்லாந்து அணி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு ஷாய்மன் அன்வர் (30), அம்ஜத் அலி (20), அம்ஜத் ஜாவத் (19), கேப்டன் குர்ராம் கான் (16) கைகொடுத்தனர். யு.ஏ.இ., அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு கேப்டன் வில்லியம் போர்டர்பீல்டு (33), எட் ஜாய்ஸ் (43) கைகொடுத்தனர். அயர்லாந்து அணி 14.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 103 ரன்கள் எடுத்த போது, மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை நீடித்ததால், ‘டக்வொர்த் லீவிஸ்’ முறைப்படி அயர்லாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக ஜிம்பாப்வே அணியை வீழ்த்திய அயர்லாந்து அணி, தொர்ந்து இரண்டாவது வெற்றியை பதிவு செய்து 4  புள்ளிகளுடன் ‘பி’ பிரிவில் முன்னிலை வகிக்கிறது.

http://sports.dinamalar.com/2014/03/1395245181/WorldCupT20CricketZimbabweNetherland.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

108 ஓட்டத்தில் ஓல் அவுட் வங்கிளாதேஸ் :D

Link to comment
Share on other sites

சூப்பர்–10 சுற்றில் வங்கதேசம்:ஹாங்காங் திரில் வெற்றி
மார்ச் 20, 2014.

 

சிட்டகாங்: ஹாங்காங் அணியிடம் வீழ்ந்த போதும், வங்கதேச அணி ‘ரன்ரேட்’ அடிப்படையில் ‘சூப்பர்–10’ சுற்றுக்கு தகுதி பெற்றது.           

வங்கதேசத்தில் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதற்கான ‘சூப்பர்–10’ தகுதிச் சுற்றில் வங்கதேச அணி, ஹாங்காங்கை எதிர்கொண்டது. ‘டாஸ்’ வென்ற ஹாங்காங் பீல்டிங் தேர்வு செய்தது.     

வங்கதேச அணிக்கு தமிம் இக்பால் ‘டக்’ அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.  அனாமுல் ஹக் (26), சாகிப் அல் ஹசன் (34) ரன்கள் எடுத்தனர். பின் வரிசை வீரர்கள் வருவதும் போவதுமாக இருக்க, வங்கதேச அணி 16.3 ஓவரில் 108 ரன்னுக்கு சுருண்டது. ஹாங்காங்கின் நதீம் அகமது 4 விக்கெட் வீழ்த்தினார்.            

‘திரில்’ வெற்றி: எளிய இலக்கைத் துரத்திய ஹாங்காங் அணிக்கு இர்பான் அகமது 34, முனிர் தர் 36 ரன்கள் எடுத்தனர். கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவைப்பட்டன. முதல் 3 பந்தில் 5 ரன்கள் எடுக்கப்பட்டன. அடுத்து அம்ஜத் ஒரு சிக்சர் அடிக்க, ஹாங்காங் அணி 19.4 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 114 ரன்கள் எடுத்து, 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது.

புது வரலாறு: சர்வதேச ‘டுவென்டி–20’ வரலாற்றில், டெஸ்ட் அந்தஸ்து பெற்ற, ஐ.சி.சி.,யின் நிரந்தர ‘டாப்–10’ அணிகளை, ஐ.சி.சி.,யின் உறுப்பு நாடு ஒன்று வீழ்த்தியது, வரலாற்றில் நான்காவது முறையாக நடந்துள்ளது.

இதையடுத்து, ‘குரூப் ஏ’யில் வங்கதேசம் (+1.466), நேபாள (+0.933) அணிகள் தலா 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்றன. இருப்பினும், அதிக ‘ரன்ரேட்’ அடிப்படையில் வங்கதேச அணி, ‘சூப்பர்–10’ சுற்றுக்கு முன்னேறி, ‘பிரிவு 2’ல் இடம் பெற்றது.            

இதில் வெஸ்ட் இண்டீஸ் (மார்ச் 25), இந்தியா (மார்ச் 28), பாகிஸ்தான் (மார்ச் 30) மற்றும் ஆஸ்திரேலிய (ஏப்., 1) அணிகளுடன் மோதவுள்ளது.

 

http://sports.dinamalar.com/2014/03/1395337076/BangladeshHongKongCricketT20WorldCup.html

Link to comment
Share on other sites

நேபாளத்துக்கு இரண்டாவது வெற்றி: ஆப்கானிஸ்தான் அதிர்ச்சி
மார்ச் 20, 2014.

 

சிட்டகாங்: ‘டுவென்டி–20’ உலக கோப்பை ‘சூப்பர்–10’ தகுதிச் சுற்றில் ஆப்கானிஸ்தான் அணி, 9 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளத்திடம் வீழ்ந்தது.

வங்கதேசத்தில் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதற்கான ‘சூப்பர்–10’ தகுதிச் சுற்றில் நேபாளம், ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ஆப்கானிஸ்தான் பீல்டிங் தேர்வு செய்தது.

ககுரல் அபாரம்: நேபாள அணிக்கு சாகர் (8) துவக்கத்தில் ஏமாற்றினார். மல்லா 22 ரன்கள் எடுத்தார். கேப்டன் கட்கா (1) நிலைக்கவில்லை. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ககுரல், 56 ரன்கள் எடுத்து அசத்தினார். இவருக்கு கைகொடுத்த வெசாகர் 37 ரன்கள் எடுக்க, நேபாள அணி 20 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்தது.

ஆப்கன் அதிர்ச்சி: எளிய இலக்கைத் துரத்திய ஆப்கானிஸ்தான் அணிக்கு எல்லாமே சொதப்பலாக அமைந்தது. ஷாஜத் (6), கரிம் சாதிக் (8), நஜிபுல்லா (5), நவ்ரோஜ் (5), கேப்டன் முகமது நபி (1) என, வரிசையாக ஒற்றை இலக்க ரன்களில் திரும்பினர்.

போராடிய சபியுல்லா 36, அஸ்கர் 49 ரன்கள் எடுத்து அவுட்டாகினர். சமியுல்லா 15 ரன்னுக்கு அவுட்டாக, ஆப்கானிஸ்தான் அணி, 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 132 ரன்கள் மட்டும் எடுத்து, 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

 

http://sports.dinamalar.com/2014/03/1395329985/NepalAfghanistanT20WorldCupCricket.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.