Jump to content

கேணல்,சால்ஸ்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சந்தன பேழைக்குள்
போன ஒரு
சரித்திர நாயகன்.

திராவிட வீரத்தை
மீண்டும் காட்டிய
இந்த நூற்றாண்டின்-ஒரு
தமிழ் மகன்.

விழிகள் மூடாமல்
விடுதலைக்காய்
வழிகள் தேடினான்
வலிகள் சுமந்து-எதிரி
குகையில் வாழ்ந்து
இலக்கு தாக்குவான்.

நகைச்சுவை பேசி
நண்பனாய் பழகுவான்
நறுக்கென பேசி
கடமையில் வெல்லுவான்.

அமைதியும் ஆற்றலும்
இவனிடம் தேடலாம்.

புராணத்தில் வீரரை
கற்பனையால் கண்டோம்,
புலி மகன் இவனால்-இன்று
கண்முன்னே கண்டோம்.

தலைவனின் சிந்தனையை
செயலாக்கினான் -இவன்
செயல்கள் எல்லாம்-எதிரிக்கு
பெரும் புயலாக்கினான்.

விடுதலை பயணத்தில்
வீரமாய் வாழ்ந்த புலி - இன்று
விதையாக வீழ்ந்தது
எதிரியின் சதி.

விடுதலை வீரனே-நீ
வீழ்ந்தும் உயிர் வாழ்கிறாய்.
ஒற்றை தமிழன் வாழுமட்டும்
நீ வாழுவாய்........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை பயணத்தில் 

வீரமாய் வாழ்ந்த புலி

இன்று 

விதையாக வீழ்ந்தது

எதிரியின் சதி,

விடுதலை வீரனே-நீ 

வீழ்ந்தும் உயிர் வாழ்கிறாய்.

ஒற்றை தமிழன் வாழுமட்டும் 

நீ வாழுவாய்........ 

 
நன்றி ஐயா

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வரவுக்கு நன்றிகள் முதல்வன், விசுகு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.