Jump to content

“ஐபோன் புரட்சியில் தமிழுக்கும் இடம் உண்டு!” - ருமேனியாவைச் சேர்ந்த எலினா ரோபோறஸ் என்கிற இளம்பெண் சொல்கின்றார்


Recommended Posts

“ஐபோன் புரட்சியில் தமிழுக்கும் இடம் உண்டு!”
அ.முத்துலிங்கம்
 

னடா தமிழ் இலக்கியத் தோட்டம், 'அனைத்துலக வாழ்நாள் தமிழ் இலக்கியச் சாதனைக்கான இயல் விருது’ விழாவை சமீபத்தில் ரொறொன்ரோவில் நடத்தியது. வருடாவருடம் வழங்கப்பட்ட இயல் விருதை இதுவரை சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், ஜோர்ஜ் ஹார்ட், அம்பை, பத்மநாப ஐயர், ஐராவதம் மகாதேவன், எஸ்.பொன்னுத்துரை, எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், தியோடர் பாஸ்கரன், டொமினிக் ஜீவா போன்ற ஆளுமையாளர்கள் பெற்றிருந்தார்கள். இயல் விருதுடன் இந்த முறை வழமைபோல புனைவு, அபுனைவு, கவிதை, மொழிபெயர்ப்பு, தமிழ்க் கணிமை விருதுகளும் வழங்கப்பட்டன. பல்வேறு நாடுகளில் இருந்து மாணவர்கள் p70a.jpgகலந்துகொண்ட கட்டுரைப் போட்டியில் ருமேனியாவைச் சேர்ந்த எலினா ரோபோறஸ் என்கிற இளம்பெண், 'தமிழ் அடையாளம் மீள நிறுவுதல்’ என்ற தலைப்பிலான கட்டுரைக்காக முதல் பரிசு வென்றிருக்கிறார். விரிவான ஆராய்ச்சிகளின் அடிப்படையில் எழுதப்பட்ட ஆழமான இவருடைய கட்டுரை, நடுவர்களின் ஏகமனதான பாராட்டுதலைப் பெற்றது. அவரைச் சந்தித்துப் பேசினேன்...

''நான் ருமேனியாவில் பிறந்து வளர்ந்தவள். என்னுடைய பெற்றோர், மிருக வைத்தியர்கள். சர்வதேச அரசியல் உறவுகள் பற்றிப் படிப்பதற்குச் சிறு வயதில் இருந்தே ஆர்வம் உண்டு. ஆனாலும், 19 வயது வரையில் தமிழர்களைப் பற்றியோ, தமிழ் மொழி பற்றியோ எனக்கு ஒன்றுமே தெரியாது. ஒரு தமிழரைச் சந்தித்ததும் கிடையாது. கடந்த ஒரு வருடமாக நான் இங்கிலாந்தில் ஷெஃபீல்டு பல்கலைக்கழகத்தில் படிக்கிறேன். என்னுடைய ஆய்வு, புலம்பெயர்ந்தவர்களின் அடையாளம் பற்றியது. இதை ஆராய்ந்துகொண்டு போனபோது, இணையத்தில் தமிழ் இலக்கியத் தோட்டம் வெளியிட்ட அறிவிப்பைப் பார்த்தேன். என்னுடைய ஆராய்ச்சி ஆர்மீனியர்களுடைய புலம்பெயர்தலை அடிப்படையாகக்கொண்டது. அந்த ஆராய்ச்சியை இன்னும் விரிவாக்க, இந்தக் கட்டுரை பயன்படும் என்று தோன்றியது. அது தொடர்பான தரவுகளைத் திரட்டியபோதுதான் தமிழர்களின் உலைதல் பற்றியும், அலைதல் பற்றியும் விரிவாக அறிந்து  கொள்ள முடிந்தது!''

 

''தமிழைப் பற்றியோ, தமிழரைப் பற்றியோ, அவர்களின் புலம்பெயர்வு பற்றியோ உங்களுக்கு ஒன்றுமே தெரியாது. ஒரு தமிழரைக்கூடச் சந்தித்தது கிடையாது என்று சொல்லி இருக்கிறீர்கள். அப்படியிருக்க 'தமிழ் அடையாளம் மீள நிறுவுதல்’ என்ற கட்டுரை எழுத உங்களால் முடிந்திருக்கிறது. இது எப்படிச் சாத்தியமானது?''

''நான் அதிர்ஷ்டக்காரி. என்னுடைய பல்கலைக்கழக வகுப்பில் எப்படி ஆராய்ச்சி செய்யவேண்டும் என்பதைக் கற்றுத்தந்திருக்கிறார்கள். சமூக விஞ்ஞானி ஒருவரால் எதை எதை உன்னிப்பாகப் பார்க்கவேண்டும், எதை ஆராயவேண்டும் என்று எனக்குக் கற்பிக்கப்பட்டிருந்தது. அற்புதமான ஆங்கில நூல்கள், நூலகங்களில் அகப்பட்டன. இணையத்தில், உலகில் எந்த மூலையில் இருந்து எழுதிய கட்டுரையும் கணத்தில் இலகுவாகக் கிடைத்தது. மூன்று வாரங்கள் வேறு ஒன்றுமே செய்யாமல் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து எழுதிய கட்டுரை இது!''

 

''உங்கள் கட்டுரையில் கில்ரோய் என்பவர் 'நீ எங்கே இருந்து வருகிறாய் என்பது அல்ல, நீ எங்கே இருக்கிறாய் என்பதுதான் முக்கியம்’ என்கிறார். ஆனால், நோபல் பரிசு பெற்ற கனடிய எழுத்தாளர் அலிஸ் மன்றோ, 'நீ பிறந்த நாடுதான் உன் சொந்த நாடு. புகுந்த நாடு நீ இறக்கப்போகும் நாடுதான்’ என்று சொல்லி இருக்கிறாரே~! இது தொடர்பாக உங்கள் பார்வை என்ன?''

''இரண்டுமே வெவ்வேறுபோலத் தோன்றினாலும், அடிப்படையில் ஒன்றுதான். உண்மையில் பார்க்கப்போனால், மனிதன் என்பவன் உலகம் தொடங்கிய நாளில் இருந்து மாற்றத்தை நோக்கி நகர்ந்தபடியே இருக்கிறான். அவனுடைய வேர்கள், மூதாதையர், வழிவழியாக வந்த கலாசாரம் ஆகியவற்றின் கூட்டுத்தொகைதான் மனிதன். அவன் எப்போதுமே நிரந்தரமானவன் அல்ல; மாறிக்கொண்டே இருப்பவன்!''

p70.jpg

 

''புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தங்கள் மொழியையோ கலாசாரத்தையோ தொடர்ந்து பேண முடியுமா? எதிர்காலத்தில் தமிழ் வாழுமா?''

''முடியும். அதைத்தான் என் கட்டுரையில் அழுத்தமாகச் சொல்லி இருக்கிறேன். முன் எப்போதும் இல்லாத வகையில் இப்போது தொடர்பு சாதனங்கள் பெருகியுள்ளன. புலம்பெயர்ந்த தமிழர்கள் ஏறக்குறைய 10 லட்சம் மக்கள் நியூசிலாந்தில் இருந்து கனடா வரை பரவி இருக்கிறார்கள் என்று தரவுகள் சொல்கின்றன. நவீன தொழில்நுட்பம் இவர்களிடையே இடைவெளி இல்லாமல் செய்திருக்கிறது. இணையம், ஃபேஸ்புக், மின்னஞ்சல், ட்விட்டர், ஸ்கைப், செல்பேசி... எனக் கணத்தில் மக்கள் உலகம் முழுவதும் ஒன்று சேர்ந்து கருத்தை உருவாக்க முடியும். இப்படியான வசதி முன்பு இருந்தது கிடையாது. 'ஐபோன் புரட்சி’ என்ற சொற்றொடர்கூட வந்துவிட்டது. மனிதன், உலக வரலாற்றின் அற்புதமான புள்ளியில் நிற்கிறான். சந்தேகமே இல்லை. தமிழ் வாழும்!''

 

''முதல் முறையாக கனடா வந்திருக்கிறீர்கள். என்ன நினைக்கிறீர்கள்?''

''நேற்று வெளியே நடைப்பயிற்சிக்குச் சென்றேன். கிரேக்கர்கள், இத்தாலியர்கள், இஸ்லாமியர்கள், யூதர்கள், தமிழர்கள்... என்று பல்வேறு இன, மத மக்கள் தங்கள் தங்கள் அடையாளங்களை இழக்காமல் ஒன்றுகூடி வாழ்வதைப் பார்த்தது எனக்குக் கனவுபோல இருந்தது. எங்கள் ருமேனியா நாட்டிலோ, ஐரோப்பாவிலோ இப்படி ஒரு காட்சியைப் பார்க்க முடியாது. நான் புக்காரெஸ்ட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டபோது மனிதர்கள் ஒருவரை ஒருவர் துரத்துவதுபோல ஓடிக்கொண்டிருந்தார்கள். வேகம்... வேகம்... வேகம். இங்கே என்னே நாகரிகம்... என்னே அமைதி! என்னுடைய முனைவர் படிப்பை ரொறொன்ரோவில் தொடரலாமோ என ஆலோசிக்கிறேன்!''

 

 

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=97408

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

----

''புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தங்கள் மொழியையோ கலாசாரத்தையோ தொடர்ந்து பேண முடியுமா? எதிர்காலத்தில் தமிழ் வாழுமா?''

''முடியும். அதைத்தான் என் கட்டுரையில் அழுத்தமாகச் சொல்லி இருக்கிறேன். முன் எப்போதும் இல்லாத வகையில் இப்போது தொடர்பு சாதனங்கள் பெருகியுள்ளன. புலம்பெயர்ந்த தமிழர்கள் ஏறக்குறைய 10 லட்சம் மக்கள் நியூசிலாந்தில் இருந்து கனடா வரை பரவி இருக்கிறார்கள் என்று தரவுகள் சொல்கின்றன. நவீன தொழில்நுட்பம் இவர்களிடையே இடைவெளி இல்லாமல் செய்திருக்கிறது. இணையம், ஃபேஸ்புக், மின்னஞ்சல், ட்விட்டர், ஸ்கைப், செல்பேசி... எனக் கணத்தில் மக்கள் உலகம் முழுவதும் ஒன்று சேர்ந்து கருத்தை உருவாக்க முடியும். இப்படியான வசதி முன்பு இருந்தது கிடையாது. 'ஐபோன் புரட்சி’ என்ற சொற்றொடர்கூட வந்துவிட்டது. மனிதன், உலக வரலாற்றின் அற்புதமான புள்ளியில் நிற்கிறான். சந்தேகமே இல்லை. தமிழ் வாழும்!''

-------

 

தனது, 19 வயது வரை,  தமிழைப் பற்றியோ... தமிழரைப் பற்றியோ..... அறிந்திராத. இந்த ருமேனியப் பெண்ணுக்குள்ள தன்னம்பிக்கை கூட.....

தமிழருக்கு இல்லை என்பது, வேதனை.

 

முதலில்.... தமிழ் தொலைக்காட்சிகளில், ஆங்கிலம் கலந்து பேசுபவர்களை.... அடித்து விரட்டினால் தான்.... தமிழ் உருப்படும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.