Jump to content

சாத்திரி பேசுகிறேன்


Recommended Posts

TULPEN இந்த எண்ணங்கள் எல்லாம் எப்ப உங்களுக்கு உதித்தது .

முப்பதுவருடமாக் புலம்பெயர்ந்த நாடுகளில் கூட வாய்திறக்க  விடாமல் இருந்தவர்கள் பற்றி ஒரு வரி எழுதமுடியவில்லை இன்று யாரும்  வாய் திறக்க முதல் ஒப்பாரி வைக்கின்றார்கள் .

நாட்டில் அரசியல் நடந்துகொண்டுதான் இருக்கின்றது .அதற்கும் சாத்திரியின் பதிவிற்கும் எதுவித சம்பந்தமுமில்லை ஆனால் போராட்டம் என்ற போர்வையில் கொலை கொள்ளை என்று அதிகார துஸ்பிரயோகம் செய்தவர்களை நிச்சயம் வெளிச்சத்திற்கு கொண்டுவேண்டும் அது எந்த இயக்கம் என்று இல்லை .

சாத்திரி ஒரு பேப்பரில் இல்லாத  பொல்லாதுகளை எழுதும் போது நீங்கள் எல்லாம் எங்கே இருந்தீர்கள் .இதைத்தான் நான் திரும்ப திரும்ப சொல்லுகின்றேன் ஊர் வாயை இனி மூட உங்களால் முடியாது .முப்பது வருடமாக மற்றவன் பட்ட வலி உங்களுக்கு சற்றேனும் விளங்கவேண்டும் .

 

பலர் இப்போ நல்ல பிள்ளைகளுக்கு நடிப்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை .

Link to comment
Share on other sites

  • Replies 143
  • Created
  • Last Reply

அர்ஜீன் நான் என்ன தவறாக கூறினேன்.  நீங்களை கூறிய அதையே நானும் அதையே கூறுகிறேன். குற்றம் செய்தவர்கள் அனைவரும் இன மத வேறுபாடு இன்றி அதாவது சிங்கள தமிழ் வேறுபாடு இன்றி தமது குற்றங்களை ஒப்பு கொண்டு சிறை சென்றால் சர்வதேச விசாரணை இல்லாமலே எமக்கான தீர்வு கிடைக்கும். நாட்டில் நடக்கும் போராட்டத்தால் இனி தீர்வு கிடைக்காது என்பது சிறு குழந்தைக்கு கூட தெரியும். சர்வதேச தலையீடு மூலம் மட்டுமே தீர்வு கிடைக்கும்.

 

நீங்கள் கூறிதை விட அதிகமான நான் கூறுகிறேன்  30 வருடமாக இல்லை 65 வருடங்களாக எம்மை அடக்கி ஒடுக்குபவர்களிடம் இருந்தான விடுதலையே மிக முக்கியமானது. அதற்காக குற்றம் செய்த அனைவரும்  தண்டனை அடைய வேண்டும். இதையே உலக ஜனநாயக நாடுகளும் வலியுறுத்துகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜீன் நான் என்ன தவறாக கூறினேன்.  நீங்களை கூறிய அதையே நானும் அதையே கூறுகிறேன். குற்றம் செய்தவர்கள் அனைவரும் இன மத வேறுபாடு இன்றி அதாவது சிங்கள தமிழ் வேறுபாடு இன்றி தமது குற்றங்களை ஒப்பு கொண்டு சிறை சென்றால் சர்வதேச விசாரணை இல்லாமலே எமக்கான தீர்வு கிடைக்கும். நாட்டில் நடக்கும் போராட்டத்தால் இனி தீர்வு கிடைக்காது என்பது சிறு குழந்தைக்கு கூட தெரியும். சர்வதேச தலையீடு மூலம் மட்டுமே தீர்வு கிடைக்கும்.

 

நீங்கள் கூறிதை விட அதிகமான நான் கூறுகிறேன்  30 வருடமாக இல்லை 65 வருடங்களாக எம்மை அடக்கி ஒடுக்குபவர்களிடம் இருந்தான விடுதலையே மிக முக்கியமானது. அதற்காக குற்றம் செய்த அனைவரும்  தண்டனை அடைய வேண்டும். இதையே உலக ஜனநாயக நாடுகளும் வலியுறுத்துகின்றன.

 

 

நீங்கள் புலிகள் என்ற  சொல்லை  எங்கும் பயன்படுத்தவில்லை

எல்லோரும் என்றால் புலிகள் விடுபட்டுவிடக்கூடும்

புலிகள்

புலிகள்...   என்று 2 தடவையாவது எழுதினால் தான் எமக்கு சொறி  அடங்கும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

TULPEN இந்த எண்ணங்கள் எல்லாம் எப்ப உங்களுக்கு உதித்தது .

முப்பதுவருடமாக் புலம்பெயர்ந்த நாடுகளில் கூட வாய்திறக்க  விடாமல் இருந்தவர்கள் பற்றி ஒரு வரி எழுதமுடியவில்லை இன்று யாரும்  வாய் திறக்க முதல் ஒப்பாரி வைக்கின்றார்கள் .

நாட்டில் அரசியல் நடந்துகொண்டுதான் இருக்கின்றது .அதற்கும் சாத்திரியின் பதிவிற்கும் எதுவித சம்பந்தமுமில்லை ஆனால் போராட்டம் என்ற போர்வையில் கொலை கொள்ளை என்று அதிகார துஸ்பிரயோகம் செய்தவர்களை நிச்சயம் வெளிச்சத்திற்கு கொண்டுவேண்டும் அது எந்த இயக்கம் என்று இல்லை .

சாத்திரி ஒரு பேப்பரில் இல்லாத  பொல்லாதுகளை எழுதும் போது நீங்கள் எல்லாம் எங்கே இருந்தீர்கள் .இதைத்தான் நான் திரும்ப திரும்ப சொல்லுகின்றேன் ஊர் வாயை இனி மூட உங்களால் முடியாது .முப்பது வருடமாக மற்றவன் பட்ட வலி உங்களுக்கு சற்றேனும் விளங்கவேண்டும் .

 

பலர் இப்போ நல்ல பிள்ளைகளுக்கு நடிப்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை .

 

சாத்திரியார் மரங்களின் இலையின் நிறம் நீலம் என்று எழுதி இருக்கிறார்.
ஒரு வேளை இனி அப்படி எழுதினால்தான் அவர்க்கு பிழைப்பு ஆகுமோ என்னமோ.
அவன் அவன் வாசித்துவிட்டு .......... 10 ஓடு 11ஆகா வாழ்ந்துட்டு போங்கள் என்று விட்டு போய்விடுகிறான்.
 
இது உண்மை ....
இல்லை இது பொய்.......... என்று விவாதம் செய்வது என்றால் கூட ஏதும் மனநோயால் பாதிப்படைந்து குணம் ஆகாதவர்களினால் தான் முடியும் என்று விட்டு எல்லோரும் தள்ளி நிற்கிறார்கள்.
 
நீங்கள் மட்டும்தான் இப்போ காவடி ஆடுகின்றீர்கள்.....
மரத்தின் நிறம் பச்சை என்று எழுதிவிட்டார் ஒரு எழுத்தாளரையும் அவரது எழுத்தையும் கொண்டாட வேண்டிய நிலையில் ஒருவன் இருக்கும்போது. இந்த உலகிற்கும் அவனுக்கும் உள்ள இடைவெளியை 
யாரலும் புரிந்துகொள்ள முடியும்.
 
ஊருக்கெல்லாம் தெரிந்த உண்மை என்றால் .....
அதில் எழுத என்ன இருக்கிறது?? உங்களின் கபடத்தை இனியும் ஒழிக்க முடியாது ...... அடுத்தவன் பேசாமல் இருந்தாலும்  நீங்களே எழுதி கெடுத்து கொண்டு இருகின்றீர்கள். 
 
தமிழனாக இந்த உலகில் வாழும் எவனுக்கும் புலியின் வெற்றியிலும் பங்குண்டு தோல்வியிலும் பங்குண்டு.
இது நிதர்சன உண்மை.
அது இல்லாத பட்சம் அவனை தமிழன் என்று சொல்ல ஏதும் அருகதை இருக்காது.
 
ஆங்கிலம் தெரிந்தால் நான் அமெரிக்கன் ஆகமுடியாது.... இதுதான் உண்மை.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துல்பன் பாவம், அர்ச்சுண் அவர்கள் தனது நெற்றிக்கண்ணைக்காட்டி விடுவார் எனப்பயந்து நெடுஞ்ச்சாணாக விழுகிறார்.

 

தவிர சாத்திரியைப் பேட்டி கண்டவர் ஒரு கேள்விகேட்டார் கவனிக்கவில்லையா? நீங்கள் யாருமீது அதீத அன்பு வைத்திருக்கிறீர்கள் எனும் பொருள்பட. அக்கேள்வியின் அர்த்தம் பேட்டி கண்டவருக்கும் சாத்திரிக்கும்தான் தெரியும். எவ்வளவு பயங்கரமானது என. இக்கேள்வியை நீங்களே ஒரு தடவை உங்களை கேட்டுப்பாருங்கள் உடம்பு ஒரு தடவை அதிரும். கராட்டி, யூடோ, கம்மடி, சிலம்படி இவைகள் மட்டுமே தற்காப்புக்கலைகள் அல்ல, சிலரது சரணாகதியும் தற்காப்புக்கலையே.

Link to comment
Share on other sites

இரண்டாம் பகுதி  எப்பவரும் கிருபன் . :icon_mrgreen:

மார்சுக்கு முதல் முழுவதும் வெளிவரும்.

 

அதன் பின்னர் அதை பிரசுரிக்கலாமா என்பது அவர்களுக்கு இப்போது சந்தேகமே. 

வியேஜ் TV யை முடிசிட்டு வங்க. அதுகுள்ளே எல்லாம் ரெடியாகிடும்.

Link to comment
Share on other sites

துல்பன் பாவம், அர்ச்சுண் அவர்கள் தனது நெற்றிக்கண்ணைக்காட்டி விடுவார் எனப்பயந்து நெடுஞ்ச்சாணாக விழுகிறார்.

 

தவிர சாத்திரியைப் பேட்டி கண்டவர் ஒரு கேள்விகேட்டார் கவனிக்கவில்லையா? நீங்கள் யாருமீது அதீத அன்பு வைத்திருக்கிறீர்கள் எனும் பொருள்பட. அக்கேள்வியின் அர்த்தம் பேட்டி கண்டவருக்கும் சாத்திரிக்கும்தான் தெரியும். எவ்வளவு பயங்கரமானது என. இக்கேள்வியை நீங்களே ஒரு தடவை உங்களை கேட்டுப்பாருங்கள் உடம்பு ஒரு தடவை அதிரும். கராட்டி, யூடோ, கம்மடி, சிலம்படி இவைகள் மட்டுமே தற்காப்புக்கலைகள் அல்ல, சிலரது சரணாகதியும் தற்காப்புக்கலையே.

 

நான் யாருக்கும் பயப்படவில்லை. பயப்படவேண்டிய தேவையும் இல்லை. மடியில் கனம் இல்லாததால் யுத்த குற்றம் செய்த அனைவரும் தாமாக தமது குற்றங்களை ஒப்பு கொண்டால் நீதியான சமாதானம் பிறக்கும் மிகவும் தெளிவாக கூறியிருந்தேன். அதுவே உண்மை என்பதை நடுநிலையான மக்கள் ஏற்றுகொள்வார்கள்.  நான் கூறிய அனைவரும் என்ற வார்த்தையை மடியில் கனம் கொண்டவர் விரும்பவில்லை என்றால் நான் அதற்கு என்ன செய்ய.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாம் பகுதி  எப்பவரும் கிருபன் . :icon_mrgreen:

கேள்வியைப் பார்த்தால் அருளினியன் இரண்டாவது பகுதியை வெளியிடுவாரோ என்று சந்தேகமாக இருக்கு!

சாத்திரிதான் வந்து சொல்லவேண்டும் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போர்குற்ற விசாரணை வரட்டும் அதில் விடுதலைப்புலிகளை மட்டுமல்ல, அரசின் ஒட்டுக்குழுக்கள் அந்தக்காலத்தில சோத்துப்பார்சல் நாயகர்கள் போன்றோரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரவேண்டும் கருணா, சுரேஸ் பிரேமச்சந்திரன் சித்தார்த்தன் டங்கு வரதர் பரந்தன் ராஜன் உட்பட, அப்போதான் இங்க மீசையை முறுகிறவர்களுக்குத் துடை நடுங்க ஆரம்பிக்கும்.

 

உண்மையான தியாக உணர்வோடும் விடுதலை வேட்கையோடும் இனத்தையும் மண்ணையும் காக்கப் புறப்பட்ட எவரும் போர்க்குற்ற விசாரணையைக் கண்டு பயப்பிடப்போவதில்லை காரணம் சாவை அணைக்கவே அவன் போராளியானான். எத்தனையோ இடர்களின் நடுவிலும் தாய்மண் மீட்ட்கப்படவேண்டுமென எதிர்பார்த்தே அவன் களத்தில் செயற்பட்டிருப்பான். அந்த இடர்களில் மின்சாரக்கதிரையும் ஒன்றெங்கில் அதற்கும் உண்மையான போராளி துணிந்தே நிற்பான். சோத்துப்பார்சலுக்கும், அற்பசலுகைகளுக்கும், பெண்டிர்களுக்கும் ஈனத்தனமாகச் சோரம்போனவர்களுக்குத்தான் தொடை நடுங்கும்.

 

ஒரு விடுதலைப்போராளி எனப்படுபவன் தனது இலக்காகிய விடுதலையை அடைவதற்குமுன்பான இளைப்பாறல்களை எப்போதும் ஏற்றுக்கொள்ளமாட்டான்.

 

போர்க்குற்ற விசாரணை, நீங்கள் எதிர்பார்ப்பதுபோல் புலிகள்மீது வருமானாலும் தமிழினம் அதை எதிர்கொள்ளும். ஆனால் உங்கள்மீது வந்தாலே நீங்கள் தோத்துப்போய்விடுவீர்கள்.

 

மகிந்த இப்போது சொல்லுகிறார் கூட்டமைப்புக்கும் புலிகளுக்குமான தொடர்பை விசாரிக்கப்போவதாக. இப்போதே எத்தனைபேர் சிங்களத்திடம் மண்டியிடத்தயாராக இருக்கினமோதெரியாது.

Link to comment
Share on other sites

கட்டுநாயக்கா முதல் அனுராதபுரம் வரை கொளுத்தி விட்டவன் எல்லாம் சும்மா இருக்க நாங்க ஒரு சீனாவெடி கொளுத்தி போட்டுட்டு படுற பாடு இருக்கே .... :D :D

Link to comment
Share on other sites

பகுதி இரண்டும் வாசிச்சாச்சு ,

என்ன எல்லாம் எங்களுக்கு முன்னரே தெரிந்ததுதான் .எவ்வளவு காலம் தான் மறைத்து வைப்பது என்றோ இவை எல்லாம் சந்தைக்கு வரும் என்று தெரியும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி பேசுகிறேன் பாகம்: இரண்டு.

  




sa.jpg

 
 
புலிகளின் சர்வதேசப் பிரிவின் முக்கியஸ்தர்களில் ஒருவராக பணியாற்றிய சாத்திரியை நான் எடுத்தவிரிவான பேட்டியை எனது தளத்தில் பதிவு செய்கிறேன். பேட்டியின் நீளம் காரணமாக இந்தப் பேட்டியை பாகம் பாகமாக பதியவுள்ளேன். முதலாம் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை பதிவு செய்கிறேன். மூன்றாம் பாகம் மிக விரைவில் பதிவு செய்யப்படும். மூன்று தசாப்த காலமாக போராடிய ஈழத் தமிழர் இனம் தமது தவறுகளில் இருந்து பாடம் கற்று அடுத்த கட்டத்திற்கு செல்லவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே இந்தப் பேட்டி என்னால் எடுக்கப்பட்டது. இந்தப் பேட்டி உங்களிற்கு ஈழப் போராட்டம் சம்பந்தமான இன்னொரு முகத்தை பதிவு செய்யும். உண்மைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கும் நண்பர்கள் தயவு செய்து தொடர்ந்து படிக்க வேண்டாம்.

அன்புடன்,

அருளினியன். 
 
அன்ரன் பாலசிங்கத்தை விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேற்றினார்களா?
 
ஆம் வெளியேறினார்கள். இலங்கை அரசு மற்றும் விடுதலைப் புலிகளிடையான சமாதானப் பேச்சு வார்த்தைகள் தொடங்கி, ஆரம்ப இரண்டு சுற்று பேச்சு வார்த்தைகள் தாய்லாந்தில் நடைபெற்றது. தாய்லாந்தில் நடந்த இரண்டாவது சுற்று பேச்சு வார்த்தையின் போதே, மேலதிகமாக புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனும். மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட தளபதி கருணாவும் புலிகளின் பேச்சு வார்த்தை குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தனர். மூன்றாவது சுற்றுப் பேச்சு வார்த்தை நோர்வே 'ராடிசன்' விடுதியில் நடைபெற்றிருந்தது. அங்கு புலிகள் இலங்கை அரசாங்கம் இடையான பேச்சு வார்த்தைக்கு ஆதரவும் அனுசரணையும் கொடுத்த சுமார் 30 நாடுகளின் பிரதி நிதிகளும் கலந்து கொண்டிருந்தார்கள். இங்கு வைத்துத்தான் சர்வதேச நாடுகளின் பிரதி நிதிகள் அன்ரன் பாலசிங்கத்திடம் தனி நாட்டுக் கோரிக்கையை தவிர்த்து, தமிழர்கள் சுதந்திரமாகவும் சமாதானத்தோடும் வாழும் வகையிலான ஏனைய தீர்வுகளை புலிகள் தரப்பிலிருந்து முன்மொழியும்படியும் அதனை தாம் பரிசீலிப்பதாகவும், ஆனால் தனி நாட்டுக் கோரிக்கையை எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என திட்டவட்டமாக கூறி விட்டார்கள். சர்வதேசத்தின் பொறியில் மாட்டாமல் அதே நேரம் ஸ்ரீ லங்கா அரசிடம் ஏமாந்து போகாமல் இருப்பதற்காக அன்ரன் பாலசிங்கம் அவர்கள் சமயோசிதமாக புலிகள் சுயநிர்ணய உரிமையை பரிசீலிக்கத் தயார் என்றும் அதில் உள்ளக சுய நிர்ணயம், வெளியக சுய நிர்ணயம் என இரண்டு வகையுண்டு எனவும் இந்த இரண்டு வகையில் தமிழர்களிற்கு எது சாதகமானதோ அதனை தாம் பரிசீலிக்க உள்ளதாகவும் அறிவித்தார். இதனைக் கேட்ட இலங்கை அரசாங்கத் தரப்பு பிரதிநிதிகளிற்கு குழப்பம் ஏற்பட்டது. அன்றைய இலங்கை ஜனாதிபதி சந்திரிக்கா "சுய நிர்ணயத்தில் உள்ளகம், வெளியகம் என்று எதுவும் இல்லை இப்போதுதான் இதைப்பற்றி நான் கேள்விப்படுகிறேன்" என்று அறிக்கையும் விட்டார். உண்மையில் அன்ரன் பாலசிங்கம் குறிப்பிட்ட ' உள்ளக சுயநிர்ணய உரிமை' என்பது பிராந்திய சுயாட்சியை வழங்குகிறது. வெளியக சுயநிர்ணய உரிமை என்பது ஐ.நா. வரையறுத்த அம்சங்களை வழங்குகிறது. ஆனால் அன்ரன் பாலசிங்கத்துடன் புலிகள் சார்பாக பேச்சு வார்த்தையிலில் கலந்து கொண்ட தமிழ்ச்செல்வன் உடனேயே பிரபாகரனுடன் தொடர்பு கொண்டு "பாலசிங்கத்தார் தமிழீழக் கொள்கையை கை விட்டு விட்டார்" என்று போட்டுக் கொடுத்தது மட்டுமல்லாமல், அன்று மாலை நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் 'சுயநிர்ணயம்' என்பது பாலசிங்கம் அவர்களின் சொந்தக் கருத்தேயன்றி விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கருத்து அல்ல என்றும் அறிக்கையும் விட்டிருந்தார். அதற்கடுத்ததாக மீண்டும் தாய்லாந்தில் நடந்த நான்காவது பேச்சு வார்தையிலும், ஜந்தாவதாக ஜேர்மன் பேர்லினில் நடந்த பேச்சு வார்த்தையிலும் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் ஓரம் கட்டப்பட்டது மட்டுமல்லாது, அந்தப் பேச்சு வார்த்தை முடிந்ததும் வன்னிக்கு அழைக்கப்பட்ட அன்ரன் பாலசிங்கம் அவர்களிற்கும் பிரபாகரனிற்கும் இடையே பேச்சு வார்த்தைகள் தொடர்பாக நடந்த கடும் விவாதங்கள் நடைபெற்றது. பின்னர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் இலண்டன் திரும்பியிருந்தார். இதன் தொடர்ச்சியாக அன்ரன் பாலசிங்கத்தின் உடல் நிலை காரணமாக அவர் பேச்சு வார்த்தைகளில் இருந்து விலகிவிட்டாரெனவும், அவரது பொறுப்பினை தமிழ்ச்செல்வன் ஏற்பார் எனவும் புலிகளின் உத்தியோக பூர்வமாக அறிவித்தனர்.
 
அதாவது அன்டன் பாலசிங்கம் பேச்சுவார்த்தைகளில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டார் எனக் கூறுகிறீர்களா?
 
அன்ரன் பாலசிங்கம் பலவந்தமாகத்தான் வெளியேற்றப் பட்டார். பேச்சு வார்த்தைகளின் போக்கை கவனித்தபடியே இருந்தவர் விடுதலைப் புலிகளையும் பிரபாகரனையும் பல தடைவை காப்பாற்றிய தன்னால் இந்தத் தடைவை காப்பாற்ற முடியாமல் போய் விட்டது என தனது இறுதிக் காலங்களில் பலரிடம் சொல்லி கவலைப் பட்டுக் கொண்டிருந்தார்.
 
நாதன் மற்றும் கஜன் கொலையை வழிப்படுத்தியது யார்?
 
புலிகளின் அனைத்துலக செயலகப் பிரிவு பொறுப்பாளராகவும் பிரான்ஸ் பொறுப்பாளராகவும் இருந்த லோறன்ஸ் திலகரே நாதன் மற்றும் கஜன் கொலையை வழிப் படுத்தினார். ஆனால் இந்தக் கொலைகளை பல கோணத்தில் ஆராய்ந்த பிரெஞ்சு காவல் துறை புலிகளே இதனை செய்தார்கள் என்று தீர்மானித்து அவர்களை நோக்கி விசாரணைகளைத் திருப்பினர். கைதாவதில் இருந்து தப்பிக்கும் முகமாக லோறன்ஸ் திலகர் வன்னிக்கு தப்பிச் சென்றார். நாதன், கஜன் கொலையை நன்கு திட்டமிடாமல் சொதப்பியதற்காக தலைமையால் திலகரின் பதவி நிலைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு சிலகாலம் சிறைவைக்கப்பட்டிருந்தார். வன்னி சென்றிருந்த திலகரின் தொடர்புகள் ஏதும் கிடைக்காததால், பிரான்சில் வாழ்ந்து வந்த அவரின் மனைவி அவரின் உறவினர்களிடம் தமிழ்நாட்டிற்கு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
லோரன்ஸ் திலகர் இப்போது எங்கே?
 
இறுதியுத்தம் வரை புலிகளுடன் இருந்த இவர் இறுதி யுத்தத்தில் இறந்து போய் விட்டார் என்றுதான் நினைக்கிறேன். ஏனெனில் அவரைப் பற்றிய தகவல் எதுவும் இல்லை.
 
 
சபாலிங்கத்தின் கொலையை வழிப்படுத்தியது யார்? சபாலிங்கத்தை கொலை செய்யும் கட்டளை தலைமையிடம் இருந்து வந்ததா?
 
சபாலிங்கத்தை கொல்லும் கட்டளை தலைமையிடமிருந்தே வந்ததாகத்தான் அறிகிறேன். காரணம் சபாலிங்கமும் ஈழபோராட்டத்தின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவர். தமிழ் மாணவர் பேரவையில் இருந்தவர் ஆரம்ப காலத்தில் பிரபாகரனிற்கும் நெருக்கமாக இருந்ததோடு அவரது தலைமறைவு வாழ்க்கை காலத்தில் பரந்தன் உப்பள பகுதியில் பிரபாகரன் மறைந்திருக்க உதவியவர். இவர் பின்னர் பிரான்சிற்கு இடம்பெயர்ந்த பின்னர் ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலம் பற்றி ஒரு ஆவணப் படம் ஒன்றினை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இந்த ஆவணப்படம் வெளியானால் பிரபாகரனின் பெயரிற்கு களங்கம் ஏற்படும் என்பதாலேயே சபாலிங்கத்தை கொலை செய்யும் படி பிரபாகரன் உத்தரவிட்டதாக அறிய முடிகின்றது. இந்த விடயத்தை விபரமாக தாராகி சிவராம் அவர்களே தாயகம் பத்திரிகையில் முன்பு எழுதியிருந்தார். அதனை இனியொரு டொட்.கொம் சபாநாவலன் மீள் பிரசுரம் செய்துள்ளார்.
 
 
பிரான்சில் புலிகளின் பொறுப்பாளராக இருந்த பரிதி என்கிற றேகனைக் கொன்றது யார்?
 
பிரான்சில் புலிகளின் பொறுப்பாளராக பொறுப்பேற்றிருந்த பரிதி (றேகன்) கொலை பற்றி நான் ஏற்கனவே கனடாவிலிருந்து வெளியாகும் பூபாளம் பத்திரிகையில் பங்கு பிரிப்பும் படுகொலையும் என்றொரு விரிவான கட்டுரையை எழுதியிருந்தேன், அது இன்னமும் எனது வலைப் பக்கத்தில் உள்ளது. புலிகளின் அழிவிற்கு பின்னர் வெளிநாடுகளில் உள்ள அவர்களது பல மில்லியன் டாலர் பெறுமானமுள்ள சொத்துக்களை யார் எப்படி பிரிப்பது என்பதில் பெரிய போட்டிகளும், அந்தச் சொத்துக்களுக்காக சண்டைகளும் வெளிநாடுகளில் நடந்து கொண்டிருக்கிறது. அப்படியொரு போட்டியில் ஒரு குழுவினரால் கூலிக்கு அமர்த்தப் பட்டவர்களால் பரிதி சுட்டுக் கொல்லப் பட்டார். இவரது கொலை சம்பந்தமாக சந்தேகத்தின் பெயரில் இருவர் கைது செய்யப்பட்டிந்தனர். ஆனால் பிரான்சில் இது போன்ற வந்தேறு குடிகளான வெளிநாட்டவர்களின் குழு மோதல்களையும் அதனால் நடக்கும் கொலைகளையும் பற்றி பிரெஞ்சு காவல்துறையினர் அதிகளவு அக்கறை கொள்வதில்லை, கொன்றவனும் வெளிநாட்டவன் செத்தவனும் வெளிநாட்டவன் என்பதால் அவர்கள் அதைக் கணக்கெடுப்பதில்லை. அதே நேரம் தங்கள் நாட்டிற்கோ தங்கள் மக்களிற்கோ பாதுகாப்பு பிரச்சனை என்று வரும்போது பிரெஞ்சு காவல்துறையினரின் நடவடிக்கைகள் இறுக்கமாக இருக்கும். எனவே பரிதி கொலையில் கைதானவர்களும் சத்தமின்றி விடுதலை செய்யப் பட்டு விட்டனர்.
 
பரிதியை கொன்ற குழு எது?
 
பரிதியால் வளர்க்கப்பட்ட வன்முறைக்குழுவான 'பாம்பு குறூப்' எனப்படும் குழுவில் இயங்கியவர்களே பரிதியைக் கொன்றார்கள்.
 
பரிதி வன்முறை குழுவை வளர்த்தாரா? விபரமாக அதைப்பற்றி கூற முடியுமா?
 
பரிதி மட்டுமல்ல வெளிநாடுகளில் புலிகளின் அனைத்துலக செயலகத்திற்கு பொறுப்பாக இருந்தவர்கள் அனைவருமே காலங் காலமாக தங்களிற்கென ஒரு வன்முறை குழுவை தங்களிற்கு கீழே இயக்கியபடிதான் இருந்தார்கள். அதில் பெரும்பாலும் புலிகள் அமைப்பில் இருந்து விலகி வெளிநாடு வந்துசேர்ந்தவர்களும், நிரந்தர வதிவிட உரிமையற்ற, அல்லது வேலையற்ற பல இளைஞர்களும் இருந்தார்கள். புலிகளிற்கு பணம் கொடுக்க மறுப்பவர்கள், புலிகளிற்கு எதிராக கருத்து வைப்பவர்களை, எழுதுபவர்களை மிரட்டுவது, அடிப்பதுதான் இவர்களதுவேலை. ஜரோப்பாவில் இப்படியான மிரட்டுதல், அடித்தல் போன்ற வன்முறை கலாச்சாரத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றவர்களில் சுவிஸ் பொறுப்பாளராக இருந்த முரளியும் பிரான்ஸில் சுக்குளா என்பவரும் மிக முக்கியமானவர்களாவார்கள்.
 
'சுக்குளா' பற்றி விபரமாக சொல்ல முடியுமா?
 
தற்சமயம் பிரான்சின் புறநகர் பகுதியில் வசிக்கும் இவர் புலிகள் அமைப்பில் வடமராச்சி பகுதியில் உள்ள நெல்லியடி மற்றும் கரவெட்டி பகுதிகளிற்கு பொறுப்பாளராக இருந்தவர். இந்திய ராணுவ காலத்தில் அன்ரன்பாலசிங்கம் அவர்களும் அவரது மனைவி அடேலும் இவரது பாதுகாப்பில்தான் இருந்தார்கள். இவர் இந்திய இராணுவத்திடம் பிடிபட்டதும் புலிகளின் ஏராளமான ஆயுதங்களை காட்டிக் கொடுத்தது மட்டுமல்லாமல், அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மறைவிடத்தையும் காட்டிக் கொடுத்துவிட்டிருந்தார். இவரது தகவலை வைத்து அன்ரன் பாலசிங்கமும் அவரது மனையும் இருந்த மறைவிடத்தை இந்திய இராணுவம் சுற்றி வளைத்திருந்தனர். ஆனால் பொது மக்களின் உதவியால் அன்று அவர்கள் தப்பி விட்டிருந்தார்கள். அதன் பின்னர் நெல்லியடிசந்தியில் இந்திய இராணுவத்தோடு சேர்ந்து தலையாட்டியாக இருந்து புலி ஆதரவாளர்கள் பலரையும் காட்டிக் கொடுத்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த புலிகளின தலைமை அவருக்கு மரண தண்டனை விதித்திருந்தது. சுக்குளாவை கொல்வதற்காக அன்று அந்தப் பகுதிகளில் இயங்கிய புலிகள் பல தடைவை குறிவைத்தார்கள், ஆனால் சுக்குளா தப்பிவிட்டார். பின்னர் இவர் காங்கேசன்துறை முகாமிற்கு மாற்றப்பட்டிருந்தார். இந்திய இராணுவம் இவரை விடுதலை செய்தபோது தனக்கு புலிகளால் உயிருக்கு ஆபத்து எனவே தன்னை கொழும்பில் கொண்டு போய் விடும்படி கோரிக்கை வைத்ததையடுத்து இந்திய இராணுவம் இவரை தங்கள் விமானத்தில் கொண்டு வந்து கொழும்பில் இறக்கி விட்டிருந்தார்கள். அங்கிருந்து வெளிநாடு வந்து சேர்ந்தவர் புலிகளிற்கு பயந்து அடங்கி இருந்தார். பின்னர் யாழ் மாவட்ட தளபதியக இருந்த கிட்டு ஜரோப்பா வந்திருந்த சமயம் இவரை தேடி கண்டு பிடித்து தலைமையிடம் கதைத்து இவருக்கு மன்னிப்பும் வழங்கியதோடு மீண்டும் வெளிநாடுகளில் இயக்கத்திற்கு வேலை செய்யும் பொறுப்பையும் கொடுத்திருந்தார்.
 
தலைமையால் மரண தண்டனை வழங்கப்பட்ட ஒருவருக்கு கிட்டு அவரைத் வலிந்து தேடிப்பிடித்து தலைமையிடம் மன்னிப்பு வாங்கிக் கொடுத்து அவரை மீண்டும் இயக்கத்திற்கு வேலை செய்யவைக்க வேண்டிய தேவை என்னவாக இருக்கும்?
 
சுக்குளாவும் கிட்டுவும் நீண்ட காலமாக நெருங்கிய நண்பர்கள். அதே நேரம் அவர்களது ஆழமான நட்பிற்கு பின்னரான ஒரு கதையும் உண்டு. 1986 ம் ஆண்டு ரொலே இயக்கம் புலிகளால் அழிக்கப் பட்டதை கண்டித்து யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தார்கள். அதே நேரம் யாழ் பல்கலைக் கழகத்தில் புதிய மாணவர்களை பகிடிவதை செய்யக்கூடாது என்றொரு சட்டத்தை புலிகள் அறிவித்திருந்தார்கள். ஆனாலும் சில மாணவர்கள் புதிதாக இணைந்த மாணவிகளை பகிடி வதை செய்திருந்தார்கள். அதற்காக பல மாணவர்கள் கிட்டுவால் தண்டனை பெற்றிருந்தனர். அப்படி தண்டனை பெற்ற கிழக்கு மாகாணத்தை சேர்ந்த மாணவன் விஜிதரன் கடத்தப்பட்டு காணாமல் போயிருந்தார். இது யாழ்குடா நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவமாக இருந்தது. ஆரம்பத்தில் இந்தக் கடத்தலை ஈ.பி.ஆர்.எல்.எவ்.இயக்கமே செய்ததாக புலிகளால் பரப்புரை செய்யப் பட்டது. ஆனாலும் புலிகளே கடத்தியதாக மாணவர்கள் நம்பினார்கள். அந்தக் கடத்தலை கிட்டுவின் உத்தரவின் பெயரில் நடத்தியவர்களில் சுக்குளாவும், தெல்லிப்பளை பிரதேச பொறுப்பாளராக இருந்த மதி என்பவரும் முக்கியமானவர்கள். விஜிதரன் பின்னர் புலிகளால் கொல்லப்பட்டுவிட்டார். அந்த மாணவர் போராட்டங்களின் தொடர்ச்சியாகவே ரயாகரனும் புலிகளால்கடத்தப்பட்டிருந்தார்.ஆனால் பல்கலைக் கழகத்தில் பல மாணவர்கள் போராட்டங்களை நடத்தியிருந்தாலும், விஜிதரன் கடத்தப் பட்டு கொல்லப் பட்டதற்கு ஒரே காரணம் அவர் பகிடிவதை செய்த பெண் கிட்டுவின் காதலியாக இருந்தார் என்பதேயாகும். அது எவருக்குமே தெரிந்திராத விடயம் இதற்கு கைமாறாகவே கிட்டு சுக்குளாவிற்கு மன்னிப்பு வாங்கி கொடுத்திருந்தார்.
 
 
வெளிநாடுகளில் மாற்றுக் கருத்தாளர்களை கொலை செய்வது அல்லது மிரட்டுவது அந்தந்த நாடுகளில் புலிகள் இயக்கம் மேல் மிகப்பெரிய கெட்ட பெயரை வாங்கித்தரும் என்ற அடிப்படைப் புரிந்துணர்வு புலிகளிடம் இருந்திருக்கவில்லையா?
 
இல்லையென்றுதான சொல்லவேண்டும். காரணம் இது போன்ற செயற்பாடுகளால் புலிகளிற்கு வெளிநாடுகளில் கெட்ட பெயரும் அவர்களின் செயற்பாடுகளிற்கு தடைகளும் வரும் என பல தடைவை வெளிநாட்டு சட்ட திட்டங்களை அறிந்த வெளிநாடுகளில் பல வருடங்கள் வாழ்ந்த புலிகளிற்கு ஆதரவாக வேலை செய்த பலராலும் வெளிநாடுகளில் இரகசியமாக வேலை செய்த என்னைப் போன்றவர்களாலும் தலைமைக்கு அடிக்கடி தெரியப் படுத்தப் பட்டிருந்தது. ஆனால் தலைமையால் இவற்றை கட்டுப் படுத்த முடியாமல் போயிருந்தது. அல்லது கட்டுப்படுத்தும் அக்கறையின்றி விடப்பட்டிருந்தது என்றுதான் சொல்லலாம். இந்த செயற்பாடுகளின் தொடர்ச்சியே வெளிநாடுகளில் புலிகள் மீதான தடைகள் வரக் காரணமாகும்.
 
 
வெளிநாடுகளில் இப்படியாக எத்தனை பேரை கொலை செய்திருப்பார்கள் புலிகள்?
 
இயக்கத்தில் என்னுடைய வேலைகள் தனியானவை என்பதால் புலிகள் இயக்கத்தின் அனைத்து நடவடிக்கைகளும் எனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நான் பிரான்சில் வசிப்பதால் இங்கு நடந்த விடயங்களின் தகவல்கள் மட்டுமே பெரும்பாலும் தெரியும்.
 
 
வெளிநாடுகளில் புலிகள் செய்யும் கொலைகள் தலைமையின் அனுமதியுடன் தான் நடந்ததா?
 
பொதுவாகவே புலிகளினால் நிறைவேற்றப்படும் மரண தண்டனைகள் தலைமையின் அனுமதி அல்லது கட்டளைக்கிணங்கவே நடைபெறும். தலைமையின் அனுமதியின்றி தன்னிச்சையாக ஒருவர் ஒரு நடவடிக்கையை செய்திருந்தால் கட்டாயம் தலைமையால் அவரிற்கான தண்டனை வழங்கப்பட்டிருக்கும். அதுவும் வெளிநாடுகளில் நடந்த விடயங்கள் நிச்சயமாக தலைமையின் அனுமதியின்றி நடந்திருக்க முடியாது.
 
 
 
விடுதலைப் புலிகள் புலம் பெயர் நாடுகளிலும் மக்களை அச்சுறுத்தி, அவர்களை கடத்தி, கப்பமாக பணம் பெற்று வந்தனர் என்பது உண்மையா?
 
ஜரோப்பாவில் ஒருவரை கடத்தி வைத்திருந்து பணம்பெற முடியாது. ஏனெனில் காவல்துறையின் நடவடிக்கைகள் கடுமையாக இருக்கும். ஆனால் குறிப்பிட்ட சில மணி நேரத்திற்குள் பணம் கொடுக்க மறுத்தவர்களை திடீரென கடத்திக்கொண்டு போய் தாக்கி விட்டு வீதியில் போட்டு விட்டு போயிருக்கிறார்கள். ஆனால் யாராவது பணம் கொடுக்காவிட்டால் புலிகளின் கட்டுப் பாட்டில் உள்ள அவரது உறவினர்களை கடத்துவோம், கொலை செய்வோம் என அச்சுறுத்தி பணம் பெற்ற நிகழ்வுகள் பல நடந்தது. அது பல நாடுகளிலும் வழக்குகளாக பதிவாகியும் இருக்கின்றது. இதனால் சம்பந்தப் பட்டவர்கள் கைதாகி தண்டனை பெற்றும் உள்ளனர். இதில் இயக்கத்திற்கு நிதி கேட்டு என்னையே ஒருவர் பாரிசில் மிரட்டிய நகைச்சுவையான விடயம் கூட நடந்தது.
 
தொடரும்..
 
http://aruliniyan.blogspot.in/2014/02/blog-post_3726.html

Link to comment
Share on other sites

எந்த இயக்கத்தில் இருந்தாலும் அந்த இயக்கத்தால் விலத்தப்பட்ட அல்லது 
இயக்கத்தில் இருந்து ஓடியவர்களை முன்னாள் போராளிகள் என்று ஏற்று கொள்ளமுடியாது.இவர்கள் இயக்கத்தை பற்றி கட்டுக்கதைகளை விட்டுக்கொண்டுதான் இருப்பார்கள்.தங்களுக்கு தெரிந்த கொஞ்சத்துடன் மிகுதியை இட்டுக்கட்டுகிறார்கள். ஏமாற்றுப்பேர்வழிகள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு துரோகிகளை காட்டி கொடுப்போரையும் கண்டுபிடிக்க கடுமையாக கஸ்டபட்டோம் மே18 பின்பு யார் துரோகியல்ல நல்லவர் யார் என தேடவேண்டியுள்ளது.

 

பிள்ளையின் பிறந்தநாளுக்கு யாரோ போட்ட பிச்சைகாசை எடுத்து உதவும் உள்ளங்களுக்கு அன்பளிப்பு என ஓசியிலேயே வெட்டிபந் தாகாட்டும் ஒருவரை இவ்வளவு தூரத்திற்க்கு பில்டப் தேவையற்றது

 

இதுவும் கடந்து போகும் ஆனாலும் தனக்கு ஒரு துன்பமெனில் முகநூல்,யாழ் ஏனைய ஊடகங்களில் அழுது அரற்றி அனுதாபத்தை சம்பாதித்தவர் இந்த அருளினியன் வெட்டிபந்தா பதிவுகளுக்கு பின் என் மனம் அட  இழவெடுத்ததற்க்கு மறுபடியும் ஒரு துக்க செய்திவராதா என மனதை ஏங்க வைக்குது .

 

செப் 11 பின் சடுதியாய் ஏற்பட்ட மாற்றம் நேரடியாகவே அறிவுறுத்தல் அது பற்றி தெரிந்ததும் உடனேயே 52லைனில் சம்பளத்திற்க்கு நின்ற அனைவரும் மாற்றபட்டார்கள் காரணம் முதலில் சப்ளை லைன் தாக்கபடும் ஆனால் அவர்களுக்கு சொல்லபட்டது வேறு சூசையின் மாற்றம் என இப்படி மற்றையதுகளிலும் நுனிப்புல் மேய்பவைகளுக்கு???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதிலிருந்தே இவருடைய விசுவாசம் பற்றித் தெரிகிறது.  முள்ளிவாய்க்காலுக்கு வித்திட்டவர்களுள் இவரும் அடங்குவார் என்று அப்பட்டமாகவே காட்டுகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லோரன்ஸ் திலகர் இப்போது எங்கே?
 
இறுதியுத்தம் வரை புலிகளுடன் இருந்த இவர் இறுதி யுத்தத்தில் இறந்து போய் விட்டார் என்றுதான் நினைக்கிறேன். ஏனெனில் அவரைப் பற்றிய தகவல் எதுவும் இல்லை.

 

 

 
இறிதி யுத்தத்தின் பின் திலகர் கிளிநொச்சியில் கோழி விற்பதாக தெரிவித்து இருந்தார்.இப்படி முன் பின் முரணாக இவரால் தான் பேட்டி கொடுக்க முடியும். அல்லது அருளியனின் திருவிளையாடல்களில் ஒன்றாக இருக்கும்.
 
அது சரி 2001ல் புலிகளால் விலத்தப்பட்ட சாத்திரியார்ருக்கு பிரபாகரன்,அன்ரன் பாலசிங்கம் உறவாடல்கள் எப்படி தெரியும். அல்லது அம்புலிமாமா கதையா??
Link to comment
Share on other sites

பகுதி இரண்டும் வாசிச்சாச்சு ,

என்ன எல்லாம் எங்களுக்கு முன்னரே தெரிந்ததுதான் .எவ்வளவு காலம் தான் மறைத்து வைப்பது என்றோ இவை எல்லாம் சந்தைக்கு வரும் என்று தெரியும் .

முதலில் அவதாரை மாற்றுங்கோ ஒரு தியாகியின் படத்தை கேவலப் படுத்த வேண்டாம்

 

எந்த இயக்கத்தில் இருந்தாலும் அந்த இயக்கத்தால் விலத்தப்பட்ட அல்லது 
இயக்கத்தில் இருந்து ஓடியவர்களை முன்னாள் போராளிகள் என்று ஏற்று கொள்ளமுடியாது.இவர்கள் இயக்கத்தை பற்றி கட்டுக்கதைகளை விட்டுக்கொண்டுதான் இருப்பார்கள்.தங்களுக்கு தெரிந்த கொஞ்சத்துடன் மிகுதியை இட்டுக்கட்டுகிறார்கள். ஏமாற்றுப்பேர்வழிகள்.

 

 

முன்பு துரோகிகளை காட்டி கொடுப்போரையும் கண்டுபிடிக்க கடுமையாக கஸ்டபட்டோம் மே18 பின்பு யார் துரோகியல்ல நல்லவர் யார் என தேடவேண்டியுள்ளது.

 

பிள்ளையின் பிறந்தநாளுக்கு யாரோ போட்ட பிச்சைகாசை எடுத்து உதவும் உள்ளங்களுக்கு அன்பளிப்பு என ஓசியிலேயே வெட்டிபந் தாகாட்டும் ஒருவரை இவ்வளவு தூரத்திற்க்கு பில்டப் தேவையற்றது

 

இதுவும் கடந்து போகும் ஆனாலும் தனக்கு ஒரு துன்பமெனில் முகநூல்,யாழ் ஏனைய ஊடகங்களில் அழுது அரற்றி அனுதாபத்தை சம்பாதித்தவர் இந்த அருளினியன் வெட்டிபந்தா பதிவுகளுக்கு பின் என் மனம் அட  இழவெடுத்ததற்க்கு மறுபடியும் ஒரு துக்க செய்திவராதா என மனதை ஏங்க வைக்குது .

 

செப் 11 பின் சடுதியாய் ஏற்பட்ட மாற்றம் நேரடியாகவே அறிவுறுத்தல் அது பற்றி தெரிந்ததும் உடனேயே 52லைனில் சம்பளத்திற்க்கு நின்ற அனைவரும் மாற்றபட்டார்கள் காரணம் முதலில் சப்ளை லைன் தாக்கபடும் ஆனால் அவர்களுக்கு சொல்லபட்டது வேறு சூசையின் மாற்றம் என இப்படி மற்றையதுகளிலும் நுனிப்புல் மேய்பவைகளுக்கு???

 

இதிலிருந்தே இவருடைய விசுவாசம் பற்றித் தெரிகிறது.  முள்ளிவாய்க்காலுக்கு வித்திட்டவர்களுள் இவரும் அடங்குவார் என்று அப்பட்டமாகவே காட்டுகிறார்.

 

 

 

 
இறிதி யுத்தத்தின் பின் திலகர் கிளிநொச்சியில் கோழி விற்பதாக தெரிவித்து இருந்தார்.இப்படி முன் பின் முரணாக இவரால் தான் பேட்டி கொடுக்க முடியும். அல்லது அருளியனின் திருவிளையாடல்களில் ஒன்றாக இருக்கும்.
 
அது சரி 2001ல் புலிகளால் விலத்தப்பட்ட சாத்திரியார்ருக்கு பிரபாகரன்,அன்ரன் பாலசிங்கம் உறவாடல்கள் எப்படி தெரியும். அல்லது அம்புலிமாமா கதையா??

 

super கருத்துக்கள்

 

எந்த ஜென்மத்திலும் சிலதுகளுக்கு விளங்காது.   போராட்டத்தை காட்டிக் கொடுப்பதில் யார் முதல் இடம் என்பதில் பெரும் போட்டி நடக்குது. பரிசை யார் வெல்வாரொ??? வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 
இறிதி யுத்தத்தின் பின் திலகர் கிளிநொச்சியில் கோழி விற்பதாக தெரிவித்து இருந்தார்.இப்படி முன் பின் முரணாக இவரால் தான் பேட்டி கொடுக்க முடியும். அல்லது அருளியனின் திருவிளையாடல்களில் ஒன்றாக இருக்கும்.
 
அது சரி 2001ல் புலிகளால் விலத்தப்பட்ட சாத்திரியார்ருக்கு பிரபாகரன்,அன்ரன் பாலசிங்கம் உறவாடல்கள் எப்படி தெரியும். அல்லது அம்புலிமாமா கதையா??

 

 

 

ஆமாம் அப்படித் தான் நாற்சந்தியில் ஒரு திரியில் எழுதி இருந்தார்.கற்பனையில் கண்ட பாட்டுக்கு பொய் சொல்ல வெளிக்கிட்டதால் எந்தப் பொய்யை எப்ப சொன்னது என்பது மறந்து போயிருக்கும் :lol:
Link to comment
Share on other sites

சாத்திரியின் கதையை விடுங்கள் ,

அப்ப சபாலிங்கத்தை ,விஜிதரனை கொலை செய்தது யார் என்று சொல்லுங்கள் ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியின் கதையை விடுங்கள் ,

அப்ப சபாலிங்கத்தை ,விஜிதரனை கொலை செய்தது யார் என்று சொல்லுங்கள் ?

 

அண்ணா,சாஸ்திரி நேற்று வரைக்கும் அவர் இதை புலிகள் செய்யவே இல்லை என்று சொல்லி வந்தார்.இன்று புலிகள் தான் அதை செய்தார்கள் என்று சொல்லுகிறார்.நாளைக்கு வந்து தான் கொடுத்த பேட்டியை அருளினியன் திரித்து விட்டார்.புலிகள் அந்தக் கொலைகளை செய்யவில்லை என்பார்.

 

உண்மை ஒரு நாளைக்கு உண்மையானவர்களிடம் இருந்து வெளி வரும்.அது சரி உண்மை தெரிந்து என்ன செய்யப் போறீங்கள்? செத்தவர்கள் உயிரோடு திரும்பி வர வா போறார்கள் :(

 

அந்தக் கொலைகளை புலிகளே செய்ததாக இருக்கட்டும் ஆனால் அந்த நேரம் நேரம் அந்தக் கொலைகளுக்கு நேரடியாகவோ,மறைமுகமாக உதவி விட்டு இப்ப வந்து ஒப்புதல் வாக்கு மூம் கொடுப்பதன் நோக்கம் என்ன? ...முதலில் அவர் நேரடியாக செய்த கொலைகளை ஒத்துக் கொண்டு சரண் அடையச் சொல்லுங்கள்
Link to comment
Share on other sites

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும். உன் நிலமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும். கண்ணதாசன் அன்று சொன்னது எந்த காலத்திலும் எல்லோருக்கும்.

Link to comment
Share on other sites

ஆனால் சாத்திரி எழுதினது எல்லாமே பொய் என்று ஒருத்தரும் சொல்லுகினம் இல்லை....

ஏன் இதை சொல்லுறார் என்று தான் ஆதங்கபடிகினம்..


சாத்திரி புலிகள் செய்த நல்லவிடயங்களையும் எழுதினால் நல்லது....எல்லாம் ஒரு சமநிலையில் இருக்கும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே இணைக்கப்பட்ட குறித்த நபரின் படம் எடுக்கப்பட்ட காலத்தை அவதானித்தீர்களா? மே 16, 2009

சாத்திரி என்கின்ற நபர் போல பொய்க்கு சாட்சி சொல்கின்றததை மறுதலிக்க யாரும் இப்போது இல்லாததால் உறுதியாக மறுதலிக்க யாருமில்லை. அந்த சந்தர்ப்பத்தைப் பாவித்துக் கொண்டு சில கபடதாரிகள் தங்களை முன்நிறுத்தும் வண்ணம் சாட்சி சொல்வதாகக் கதை எடுத்து விடுகின்றார்கள். புலிகள் போதைவஸ்து கடத்தினார்கள் என்று சில நபர்கள் சாட்சி சொன்னால், அதை எம்மால் கடத்தியவர்கள் என்று தன்னை அடையாளப்படுத்தவோ, மறுக்கவோ குறித்தவர்கள் தான் பொறுப்புக்கூற முடியும். கடத்தியவர்களில் தன்னை ஒருவராக காட்டிக் கொள்ளும் சாத்திரியை வேணுமென்றால் குற்றவாளிக் கூண்டில் ஏற்றினால் தான் நாதன் சொல்கின்ற பொய் சொல்லுதல் பற்றியதற்கான உண்மையான பதில் கிடைக்கும். மற்றும்படி மற்றவர்களால் மறுதலிக்க முடியாது என்று எல்லா மக்களுக்கும், கபடதாரிகளுக்கும் நன்றாகவே தெரியும்...

Link to comment
Share on other sites

சாத்திரியின் கதையை விடுங்கள் ,

அப்ப சபாலிங்கத்தை ,விஜிதரனை கொலை செய்தது யார் என்று சொல்லுங்கள் ?

 

 

உங்களால் புளட்டினால் வவுனியாவில் செய்யப்பட்ட கொலைகள் , கொள்ளைகள் எப்படி, யாரால் செய்யப்பட்டது போன்ற விபரங்களை தரமுடியுமா? ஏனெனில் நீங்களும் புளட்டில் இருந்த ஒரு ஆள் தானே.
 
சபாலிங்கம், விஜிதரனின் கொலகள் புலிகள் உரிமை கோராத வரை அவர்கள் செய்யவில்லை என்பதே அர்த்தம். அப்படி அவர்கள் செய்தால் ஆதாரத்தை வைக்கவும்.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.