Jump to content

தாய்மொழிவழிக் கல்வியா? ஆங்கில வழிக் கல்வியா? -அமெரிக்க ஆய்வுகள் உணர்ந்தும் உண்மைகள்!!


Recommended Posts

"நம் மொழி இருக்கும் வரை தான் நம் கலாசாரம் நம்மிடம் இருக்கும். கலாசாரம் நம்மிடம் இருக்கும் வரைதான் நம்மால்தான் நம் நிலத்தை பாதுகாக்கமுடியும்"

என்று கூறினார் ஒரு மயோரி (நியுசிலாந்தின் பூர்வகுடி இனம்). 

 

ஒரு மொழிதான் ஒரு கலாசாரத்தின், ஒரு இனத்தின் அடையாளம். மொழியின் வளர்ச்சியே இனத்தின் வளர்ச்சியாக வரலாறு கூறுகிறது. ஆதலால்தான் ஆதியிலிருந்தே ஆக்கரமிப்பாளர்கள் எந்தவொரு நாட்டை கைப்பற்றியதும் முதலில் அதன் மொழியை குறிவைத்தார்கள். இவ்வுலக வரலாற்றில் இன்றுவரை பல மொழிகள் வழக்கொழிந்து போயுள்ளன.

 

அதற்கு ஒரு காரணம் ஆக்கிரமிப்பாளரகளின் அசுரபலம் என்றாலும் இன்னொரு காரணம் சரியான எதிர்ப்பில்லாததுமாகும். அதைவிட கொடுமை நிறைய 

இனங்கள் தங்கள் மொழி கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டதை கூட உணராமல் வெறும் பார்வையாளர்களாக இருந்து தம்மொழியை அழிந்ததை வேடிக்கை பார்த்ததுதான்.

 

ஒரு காலகட்டத்தில் ஆக்க‌ர‌மிப்பாள‌ர்க‌ள் ஒரு மொழியை அழிப்ப‌த‌ற்கு

க‌ல்வியையும் ஒரு கருவியாக பயன்படுத்த ஆரம்பித்தனர்.

 

இன்று தமிழ்நாட்டின் பெரும்பாலான மக்கள் ஆங்கிலவழி கல்வியே சிறந்தது என்று (தவறாக‌) எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையை புரிய வைக்கவேண்டிய அரசோ, அரசாங்க பள்ளிகளிலும் தாய்மொழிவழிக் கல்வியை நீக்குவதற்கு வழிசெய்துளளது.

 

இதனால் ஏற்படப்போகும் பயங்கிர பின்விளைவுகளை பற்றி சிந்திக்க மக்களும் சரி, அரசாங்கமும் சரி யாரும் தயாராக இல்லை. அறிவியல், வானியல், கணிதவியல், வேதியியல் போன்ற அனைத்து துறைகளுக்கும் மொழியே அச்சாணி. உல‌கின் மிக‌ச்சிற‌ந்த‌ க‌ண்டுபிடிப்புக‌ளை கொடுத்தவ‌ர்களில் பெரும்பாலனவ‌ர்கள் தங்கள் தாய்மொழிமூலமே கல்வி பயின்றவர்கள்.

 

எந்த‌ ஒரு புது க‌ண்டுபிடிப்பிற்கும் க‌ற்ப‌னை வ‌ள‌ம் மிக‌ அவ‌சிய‌ம். "க‌ற்ப‌னைதான் எல்லாம் (Imagination is everything)" என்றார் ஐன்ஸ்டீன். அக்கற்பனை வளம் ஒருவன் தன் மொழியில் கல்வி கற்கும்போதே மெருகேறும் என்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மை.

 

எப்பேர்ப‌ட்ட‌ ப‌ன்மொழி வ‌ல்லுனராக இருந்தாலும் அவர் சிந்தனை அவ‌ர் தாய்மொழியில்தான் இருக்கும். இதை யாரும் ம‌றுக்க‌ முடியாது.

அப்ப‌டியிருக்கும்போது எப்ப‌டி ஒரு ம‌னித‌ன் த‌ன் தாய்மொழிவ‌ழி அல்லாது வேறு ஒரு மொழியில் க‌ல்வியை சிற‌ப்பாக‌ க‌ற்க‌ முடியும்?

 

ஆங்கிலவழிகல்விக்குஅரசாங்கம்சொல்லும்காரணங்களில்சில‌:

 

- இன்றைய உலகில் பெரும்பாலான வேலைவாய்ப்புகளுக்கு ஆங்கிலப்புலமை ஒரு முக்கிய அம்சமாகிவிட்டது.

- தமிழ்வழியில் கற்கும் மாணவ‌ர்களுக்கும் சரியான ஆங்கில அறிவு இல்லை.

- ஆங்கிலப்புலமையின்மையால் அவர்கள் மற்ற மாநிலத்தவர்களுடனும், உலக அளவிலும் போட்டி போடமுடியவில்லை

 

மேற்கூறிய‌ கார‌ண‌ங்க‌ள் ஒருவகையில் ச‌ரியென்றாலும் ஆங்கில‌வ‌ழிக் க‌ல்வி அத‌ற்கு என்றுமே தீர்வில்லை என்பதுதான் கசப்பான உண்மை. நம்மில் பலருக்கு மொழியறிவிற்கும், மொழிவழிக்கல்விக்கும் வித்தியாசம் தெரியவில்லை. உலகின் எந்த மொழி கற்கவேண்டுமென்றாலும், அதற்கு சிறந்தவழி ஒருவரின்   தாய்மொழிமூலம்தான் என்பது பல ஆராய்ச்சிகளால் இன்று பலமாக நிறுவப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக ஒரு இரண்டு முக்கியமான ஆய்வு முடிவுகளை பார்ப்போம்.

 

நாம் பார்க்கப்போகும் முதல் ஆய்வு, சுமார் எட்டுவருடங்கள் நடத்தப்பட்டு, 1991ம் ஆண்டு அமெரிக்க கல்வித்துறையால் முடிவுகள் வெளியிடப்பட்டது. அதன் பெயர் - ரமிரெஸ் எட் அல் (ramirez et al 1991). அன்றே இதற்கு நான்கு மில்லியன் அமெரிக்க டாலர்கள் (1991ல் 24 கோடி ரூபாய் இன்றைய மதிப்பில் 100 கோடிக்கு மேல்) செலவானது.  இந்த ஆய்வின் பிரதான கேள்வி, "அமெரிக்காவில் வாழும் லத்தின் இன மாணவர்களுக்கு எந்த கல்விமுறை, ஆங்கிலமா அல்லது ஸ்பானிசா (தாய்மொழி), சிறந்ததாக இருக்க முடியும்?" என்பதுதான். தாய்மொழிவழிக் கல்விக்கு எதிரானவர்களும்கூட இந்த ஆய்வின் முடிவுகளை இன்றுவரை மறுக்கமுடியவில்லை. அதன் விவரங்களை இப்போது பார்ப்போம்.

 

இந்த ஆய்விக்காக ஸ்பானிஷை தாய்மொழியாக கொண்ட 2,342 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மூன்று குழுவாக பிரிக்கப்பட்டனர். முதல் குழுவிற்கு ஆரம்பம் முதல் எல்லாப்பாடங்களுமே ஆங்கிலவழியில் மட்டுமே கற்பிக்கப்பட்டது. இரண்டாம் குழுவிற்கு முதல் ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு ஸ்பானிஷ் மொழியில் பயிற்றுவிக்குப்பட்டு பிறகு ஆங்கிலவழிக் கல்விக்கு மாற்றப்பட்டனர். மூன்றாவது குழுவிற்கு முதல் நான்கு அல்லது ஆறு வருடங்கள் ஸ்பானிஷ் மொழியில் மட்டுமே பயிற்றுவிக்காப்பட்டது. ஆனால் கூடவே ஆங்கிலமும் ஒரே பாடமாக சிறப்பாக கற்பிக்கப்பட்டது. அதன் பிறகு அவர்கள் ஆங்கிலவழிக்கு மாற்றப்பட்டனர். 

 

சில வருடங்கள் கழிந்து மூன்று குழு மாணவர்களுக்கும் அறிவுதிறன் மற்றும் ஆங்கில ஆற்றல் சோதனைகள் பல வழிமுறைகளில் நடத்தப்பட்டு பிறகு முடிவுகள் வெளியிடப்பட்டன.

 

இம்மூன்று குழுவிலும் ஆங்கிலவழியிலே ஆரம்பத்திலிருந்து கற்பிக்கப்பட்ட மாணவர்களின் (முதல் குழு) ஆங்கில ஆற்றல்தான் சிறந்ததாக இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில் ஆராய்ச்சி முடிவு அதற்கு நேரெதிராக இருந்தது. அறிவுத்திறன் மட்டுமல்லாது, ஆங்கில ஆற்றலிலும் முதல் குழு (முழுவதும் ஆங்கில வழிக்கல்வி) மற்ற இரண்டைவிட பின் தங்கியிருந்தது ஆய்வாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

 

ஆரம்பக்கல்வியை (4-6 வருடங்கள்) தங்கள் தாய்மொழியிலேயே கற்ற மூன்றாவது குழுவின் ஆங்கில ஆற்றல் மற்ற இரண்டு குழுவை விட சிறப்பாக இருந்தது மட்டுமின்றி, மற்ற பள்ளி பாடங்களிலும் அவர்கள்தான் சிறந்தவர்களாக இருந்தனர். மூன்றாம் குழுவிற்குதான் பூர்வீக ஆங்கிலர்களுக்கு இணையான ஆங்கில ஆற்றலடைய வாய்ப்பிருப்பதாகவும், மற்ற இரண்டு குழுக்களுக்கும் ஆரம்பத்தில் ஓர் ஊக்கம் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டாலும், போக போக அவர்கள் புரிதலில் நிறைய பின் தங்கிவிட்டதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் முடிவுரையில் குறிப்பிட்டார்கள்.

 

இனி இரண்டாம் ஆய்வு. அதன் பெயர் தாமஸ், & கால்லியர் ஆய்வு (Thomas & Collier).  அமெரிக்கக் கல்விதுறையால் நிதியளிக்கப்பட்டு, சுமார் ஆறு வருடங்கள் (1996-2001) இவ்வாய்வு  நடத்தப்பட்டது. சுமார் இரண்டு இலட்சம் மாணவர்கள், அவர்களின் பதினைந்து வருட (1982-1996) பதிவுகள் என்ற புள்ளி விவரங்களுடன், மொழி சிறுபான்மையினருக்காக இன்றுவரை உலகில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் மிகப்பெரியதாக இது சரித்திரத்தில் இடம் பெற்றது.

 

முழு தாய்மொழிவழிக் கல்வி, இரு மொழிவழிக் கல்வி, முழு ஆங்கிலவழிக் கல்வி என்று அனைத்து பிரிவுகளிலும் படித்த மாணவர்களின் செயல்திறன்கள் சோதனைக்குள்ளாக்கப்பட்டது. ஒரு பூர்வாங்க அறிக்கை 1997ல் வெளிவந்தாலும், முழு ஆய்வறிக்கையும் 2002ல் தான் வெளியிடப்பட்டது. கடைசியில், இவ்வாய்வின் முடிவுகளும் தாய்மொழியில் கற்றவர்களே ஆங்கில மொழியறிவிலும், பள்ளி பாடங்களிலும் சிறந்து விளங்குவதை உறுதி செய்தது. 

மொழி சிறுபான்மையினரில் நிறைய பேர் கல்வியை பாதியில் கைவிட்டதுக்கு முக்கியமான காரணமாய் வேறுமொழி பயிற்றுமொழியாக இருந்ததையும் இவ்வாய்வு வெளிக்கொணர்ந்தது. தாய்மொழிவழிக் கல்வியில் பயின்ற காலத்துக்கும், ஆங்கில செயல்திறனுக்கும் நேரிடையாக தொடர்பிருப்பதையும் சுட்டிக்காட்டியது. 

 

இதன்மூலம் அறிவுத்திறனுக்கு மட்டுமல்லாமல் ஆங்கில ஆற்றலுக்கும் தாய்மொழிவழிக் கல்வியே அடித்தளம் சுலபமாக புரிந்துகொள்ள முடிகிறது. இந்து இரு ஆய்வுகள் மட்டுமில்லாது, இன்னும் பத்து சிறு ஆய்வுகளை மேற்கோள் காட்ட இயலும். அனைத்தும் இதே கருத்தைதான் வந்தடைகின்றன. 

 

இப்போதுநம்முன்நிற்கும்கேள்வி,

 

“அமெரிக்க அரசாங்கம் தங்கள் கல்விமுறையில் மாற்ற கொண்டுவருவதற்கு முன், அதுவும் மொழி சிறுபாண்மையினருக்காக, இவ்வளவு மெனக்கெடும் போது, ஏன் தமிழக அரசாங்கம், அதுவும் மொழிப்பெரும்பான்மையாக உள்ள தமிழர்களின் பாடத்திட்டத்தில் பெறும் மாறுதல் கொண்டுவருவதற்குமுன் ஒரு சிறு ஆய்வு கூட மேற்கொள்ளவில்லை? ஒரு தலைமுறையில் அறிவாற்றலையே பாதிக்கக்கூடிய இம்முடிவை எப்படி அவசரகதியில் எடுத்தார்கள்?”. 

 

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆங்கில அறிவு குறைவாக இருப்பதற்கு காரணம், ஆங்கிலப்பாடம் சரியாக கற்பிக்கப்படாததே தவிர தமிழ்வழிக்கல்வி கிடையாது. இதற்கு தீர்வு தமிழகத்தில் உள்ள சுமார் எல்லா அரசு பள்ளிகளுக்கும் நல்ல ஆங்கில ஆசிரியர்களை நியமிப்பதுதானே ஒழிய, பயிற்றுமொழியை மாற்றுவதல்ல. ஆனால் இதை உணரவேண்டிய தமிழக அரசாங்கத்திற்கு இவ்வுண்மைகளை எப்படி புரியவைப்பது என்றுதான் தெரியவில்லை!.

  -ஜெயப்பிரகாஷ் நாராயணன்.

தொடர்புக்கு: jpmail.in@gmail.com

http://www.sengodimedia.com/Blog/Description.aspx?id=3

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தானே எத்தனையோ அறிஞர்கள் ஆண்டுக்கணக்காகச் சொல்கிறார்கள். நாங்கள் கேட்டாத்தானே.

Link to comment
Share on other sites

தமிழ்நாட்டில் மெட்ரிகுலேஷன் தலைவர் வழக்கு போடுறார்.. :rolleyes: பிறகு எப்பிடி உருப்படுவது??

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அண்மைக் காலமாக ஐரோப்பிய நாடுகளிலிருந்து பெருமளவு ஈழத்தமிழர்கள் இங்கிலாந்திற்கு குடி பெயர்ந்துள்ளார்கள்.அவர்களின் பிள்ளைகள் குறுகிய காலத்திற்குள் ஆங்கிலத்தில் மிக நல்ல தேர்ச்சி அடைவதுடன் அனைத்துப் பாடங்களிலும் இங்கு பிறந்த பிள்ளைகளை விட ஒப்பீட்டளவில் திறமை பெற்று விளங்குவதுடன் மூன்று மொழிகளலும் சரளமாகப் பேசக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.இது பற்றி இங்கிலாந்தில் நீண்ட காலமாக வாழும் தமிழர்கள் கூறுவது உங்களுக்கு ஜேர்மன்(அந்த நாட்டு மொழி)தெரியாது.அதனால் வீட்டில் பிள்ளைகளுடன் தமிழில் கதைப்பதால் பிள்ளைகள் தமிழை இலகுவாக கற்றுக் கொள்கிறார்கள் என்று (நக்கல்)கூறுவதைக் கேட்டிருக்கிறேன்.இதனை பணம் செலவழிக்காது தற்செயலாக நிகழ்ந்த ஆய்வாகவே நான் பார்க்கிறேன்.

இந்த ஆய்வின் முடிவு.

1.தாய்மொழியை வீட்டில் பேசுவதே பிள்ளைகளுக்கு இலகு வான கற்கை முறையாகும்.

2.தாய்மொழியல் சிந்திக்கும் பிள்ளைகள் மற்றைய பாடங்களிலும் சிறந்து விளங்குவார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.