Jump to content

சாத்திரி பேசுகிறேன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி பேசுகிறேன்

 

சாட்சாத் யாழ்கள சாத்திரிதான் :)

 

பாகம்: ஒன்று.

'சாத்திரி'' எனப்படும் ஸ்ரீ கெளரிபால் ஒரு பதிவராக உங்களில் பெரும்பாலானவர்களுக்கு அறிமுகமாகியிருக்கலாம். 'அவலங்கள்' எனும் பெயரில் பல சொல்லப்படாத விடயங்களை பதிவாக எழுதி வருபவர். புலிகளின் சர்வதேசப் பிரிவின் முக்கியஸ்தர்களில் ஒருவராக பணியாற்றிய யாழ் மானிப்பாய் கிராமத்தில் பிறந்த இவர். 1984 ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து புலிகள் அமைப்பில் 'சியாம்' என்கிற புனை பெயரில் இயங்கினார். புலிகள் அமைப்பில் வெடி பொருள் பிரிவில் பணியாற்றிதால் 'சக்கை' என்கிற பெயரும் சேர்ந்து 'சக்கை சியாம்' என பலராலும் அழைக்கப்பட்டார். புலிகளின் சர்வதேசப் பிரிவிலும் பணியாற்றி அதில் இருந்து வெளியேறிய பின்னர் பிரான்ஸ் நாட்டில் வசிக்கத் தொடங்கியதும் 'சாத்திரி' என்கிற புனை பெயரில் பத்திரிகைத் துறையிலும் எழுத்து துறையிலும் வலம் வருகிறார்.

சாத்திரியாரை நான் எடுத்தவிரிவான பேட்டியை எனது தளத்தில் பதிவு செய்கிறேன். பேட்டியின் நீளம் காரணமாக இந்தப் பேட்டியை பாகம் பாகமாக பதியவுள்ளேன். மூன்று தசாப்தகாலமாக போராடிய ஈழத் தமிழர் இனம் தமது தவறுகளில் இருந்து பாடம் கற்று அடுத்த கட்டத்திற்கு செல்லவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே இந்தப் பேட்டி என்னால் எடுக்கப்பட்டது. இந்தப் பேட்டி உங்களிற்கு ஈழப் போராட்டம் சம்பந்தமான இன்னொரு முகத்தை பதிவு செய்யும். உண்மைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கும் நண்பர்கள் தயவு செய்து தொடர்ந்து படிக்க வேண்டாம்.

அன்புடன்,

அருளினியன்.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் நீங்கள் இணைந்து கொள்ளத் தூண்டுதலாக அமைந்த சம்பவம் என்ன?

அந்தக்கால ஏனைய இளைஞர்கள் போல ஈழ விடுதலைப் போராட்டத்தில் இணைந்து கொள்ள எனக்கும் தூண்டுதலாக அமைந்த சம்பவம் இலங்கையில் 83 ம் ஆண்டில் நிகழ்ந்த இனக் கலவரம்தான். 83 கலவரத்திற்கு முன்பே ஈழத்தில் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்திருந்தாலும் அது பற்றிய அக்கறைகள் ஏதுமற்ற சாதாரண பாடசாலை மாணவனாகவே இருந்தேன். ஆனால் 83 கலவரத்தின் தமிழர்களின் பாதிப்புக்கள் பற்றிய செய்திகள். தமிழ் சகோதரிகள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட செய்திகள் மற்றும் அகதிகளாக ஆயிரக் கணக்கில் கப்பலில் காங்கேசன் துறையில் வந்திறங்கிய கொழும்புத் தமிழர்களின் துயரங்களை நேரில் பார்த்ததும் ஒரு இளைஞனுக்கேயுரிய கோபமும் பழிக்கு பழிவாங்கும் உணர்ச்சியும் ஒன்று சேர என்னை ஈழ விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டேன்.

பல விடுதலை இயக்கங்கள் இருந்த போதும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பில் நீங்கள் இணைந்து கொள்ளக் காரணம் என்ன?

அன்று பல விடுதலை இயக்கங்கள் இருந்தது உண்மை. முதலில் அன்றைய கால கட்டத்தில் பெரிய இயக்கமாக இருந்த புளொட் அமைப்பில் சேருவதற்காகவே போயிருந்தேன். இயக்கத்திற்கு போனதுமே கையில் ஆயுதம் தருவார்கள் என எதிர்பார்த்து போயிருந்த எனக்கு அவர்கள் ஒட்டுமொத்த மக்கள் போராட்டம் நடக்கவேண்டும் என்று சொல்லி அரசியல் வகுப்புக்களை வைத்து வாழ்க்கையை வெறுக்கப் பண்ணி விட்டார்கள். அடுத்ததாக தீவிர இடதுசாரிக் கொள்கைகளை கொண்டிருந்த ஈ.பி. ஆர்.எல்.எவ்.அமைப்பிடம் போயிருந்தேன். அவர்களோ செஞ்சீனம். கியூப விடுதலைப் போராட்டம் என்கிற இரண்டு பெரிய புத்தகங்களை கையில் தந்து அதனை படித்து மனப் பாடம் செய்துகொண்டு வரச் சொல்லி அதில் கேள்விகளை கேட்டு சரியான பதிலை சொன்னால்தான் இயக்கத்தில் இணைப்போம் என்றார்கள். 'செஞ்சீன' புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தேன் சாதுவாக தலை சுற்றியது. புரியாத சொற்கள் கொண்டு எழுதப்பட்டிருந்த அதனைப் படிக்க தனி தமிழ் அகராதி ஒன்று தேவைப் பட்டது. கியூப விடுதலைப் போராட்டத்தை தூக்கிப் பார்த்தேன் வலு பாரமாக இருந்தது. இந்தப் புத்தகங்களை படிக்கின்ற நேரம் பேசாமல் பாடசாலைக்கே போய் படித்திருக்கலாம் என்று மனம் சொன்னது. இது வேலைக்காகாது என்று தோன்றிய கணத்தில் அவற்றை தூக்கியெறிந்து விட்டு புலிகள் அமைப்பை சேர்ந்த அன்பு என்பவரை சந்தித்தேன். அவர் உடனடியாகவே எனது கைகளில் 3.8 றீற்றா வகை கைத் துப்பாக்கியை கொடுத்து குறி பார்த்து சுடும்படி சொன்னார். புத்தகங்கள், பாடமாக்கல்கள், சொற்பொழிவுகள் எதுவுமே இல்லை. அது எனக்கு பிடித்திருந்தது. எனவே புலிகள் அமைப்பில் இணைந்து விட்டேன். இணைந்த பின்பு பயிற்சிகள் கடினமாக இருந்தது.

உலகப் புரிந்துணர்வு இல்லாத, நல்லது கெட்டது புரியாத இளைஞர்கள் கைகளில் ஆயுதம் கொடுத்ததது சரியா?

இந்தக் கேள்வியை நீங்கள் இந்திய உளவமைப்பான ரோவிடம் அல்லது ஈழ விடுதலை இயக்கங்களிற்கு பயிற்சியும் ஆயுதமும் கொடுக்க முடிவு செய்த இந்திரா காந்தி அம்மையாரின் ஆவியிடம்தான் கேட்கவேண்டும். ஏனெனில் அன்று ஈழ விடுதலை இயக்கங்களிற்கு ஆயுதங்களும் பயிற்சியும் இந்தியா கொடுக்காது விட்டிருந்தால் பிரபாகரன் மட்டுமல்ல மற்றைய இயக்கத் தலைவர்களும் இப்போது எங்காவது ஒரு வெளிநாட்டில் அகதி தஞ்சம் கோரி வாழ்ந்து கொண்டிருந்திருப்பார்கள். அல்லது எண்பதுகளிலேயே இறந்துபோயிருப்பார்கள். அதுவும் இல்லா விட்டால் இலங்கை சிறைகளில் இருந்திருப்பார்கள்.

இந்திய உளவு அமைப்பான ''றோ'வின் பங்களிப்பு போராட்டம் ஆரம்பித்ததில் இருந்து இறுதிப் போர் வரை எப்படி இருந்தது?

இலங்கையில் அன்றிருந்த ஜே.ஆர். தலைமையிலான அரசை போராளிக் குழுக்கள் மூலம் மிரட்டி அங்கு தனது ஆதிக்கத்தை நிலை நாட்டவே ஈழ விடுதலை இயக்கங்களிற்கு பயிற்சி மற்றும் ஆயுதங்கள் கொடுக்க 'ரோ' அமைப்பு முன் வந்தது. இது அனைவரிற்கும் தெரிந்த விடயம். ஆனால் எம்மில் பலர் இந்திரா அம்மையார் உயிருடன் இருந்திருந்தால் தமிழீழத்தை பெற்றுக் கொடுத்திருப்பார் என்ற கருத்தை கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக இல்லை. ஏனெனில் இந்திய உளவமைப்பானது தனியாக ஒரு இயக்கத்திற்கு பயிற்சி கொடுக்காமல் புளொட், ஈ.பி. ஆர்.எல்.எவ், ரெலோ, விடுதலைப் புலிகள், ஈரோஸ்

என ஜந்து விடுதலை இயக்கங்களிற்கு பயிற்சி கொடுத்ததன் மூலம் ஒரு இயக்கம் தங்கள் கட்டுப்பாட்டை மீறிப் போனாலும், இன்னொரு இயக்கத்தை தங்கள் கட்டுப் பாட்டிற்குள் வைத்து தங்கள் சொற்படி இயக்கலாம் என்ற நரித்தனமான நோக்கம் இருந்தமையாலே ஆகும். இந்த இந்தியாவின் தந்திரத்தை உணர்ந்த புளொட் அமைப்பும் புலிகளும் ஆரம்பத்திலிருந்தே இந்தியாவோடு விலத்தியிருக்கவே விரும்பினார்கள். மற்றைய அமைப்புக்கள் பொருளாதார ரீதியாக முழுக்க முழுக்க இந்திய உளவமைப்பையே சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் அவர்களிற்கு இருந்தது. பின்நாளில் புலிகளால் தடை செயயப்பட்ட பின்னர் தங்கள் பாதுகாப்பிற்காகவும் 'றோ' வோடு உறவுகளை கொண்டிருக்கவேண்டிய கட்டாயமும் அவர்களிற்கு இருந்தது. அதே நேரம் புலிகள் அமைப்பும் கூட 'றோ' வினது கட்டளைகளிற்கு இணங்க பல தாக்குதல்களை நடத்தியிருந்தார்கள். குறிப்பாக புலிகள் 1985 ம் ஆண்டு அனுராத புரத்தில் பொதுமக்கள் மீது நடாத்திய தாக்குதல். மருதானை மற்றும் புறக்கோட்டை குண்டு வெடிப்பு ஆகியனவற்றை நாங்கள் உதாரணமாக சொல்லலாம். அடுத்ததாக மாலை தீவை தனது கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக புளொட் அமைப்பை வைத்து மாலை தீவு மீது இந்திய உளவமைப்பான ''றோ' நடாத்திய நாடகத் தாக்குதல்கள் முக்கியமானவை. அனைத்து ஈழ விடுதலை இயக்கங்களையும் தனது கைப் பிடிக்குள் வைத்திருப்பது, மீறிப் போகிறவர்களை அழித்து விடுவது இதுவே 'றோ' அமைப்பின் நோக்கம். புலிகள் அவர்கள் கட்டுப் பாட்டிற்கு அடங்க மறுத்தார்கள். ராஜீவ் காந்தி கொலையால் இழந்த கெளரவத்தையும் புலிகள் அமைப்பினை அழித்து முடித்ததன் மூலம் அவர்கள் தீர்த்துள்ளனர். ஆனால் இலங்கைத் தீவு இந்தியாவிற்கு அருகில் இருக்கும் வரை இந்தியாவின் அரசியல் தாக்கமானது இலங்கையில் இருந்து கொண்டே தானிருக்கும். அதனை ஈழத் தமிழர் தரப்பு எப்படி கையாள்கிறது என்பதைப் பொறுத்துத்தான் ஈழத் தமிழரின் எதிர்கால அரசியலும் அவர்களின் வாழ்வும் அமையும்.

இந்திய உளவமைப்பான ''றோ' தான் புலிகளை அழித்து முடித்தது என்கிறீர்களா?

இல்லை வேறு பல நாடுகளோடு இந்திய உளவமைப்பும் சேர்ந்தே அழித்தது. இலங்கையரசோடு சேர்ந்து இந்தியா மட்டுமே புலிகளை அழித்து முடித்ததாக எங்களில் பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் புலிகளை அழித்து முடிக்க அனைத்து தொழில் நுட்ப உதவிகளையும் வழங்கி அவர்களது சர்வதேச ஆயுத வழங்கல்களை தடுத்து நிறுத்தி புலிகளின் வானொலித் தொடர்புகளை ஒட்டுக் கேட்டு, அவர்களது கனரக ஆயுத நகர்வுகளை கண்காணித்து அனைத்தையும் உடனுக்குடன் இலங்கையரசிற்கு தெரியப் படுத்தி இலங்கை அரசு புலிகளை அழிக்க பேருதவி செய்தது அமெரிக்காவும் கனடாவுமே ஆகும். மேலும் நேரெதிர் முரண்பாடுகளைக் கொண்ட இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, கியூபா, சீனா, ஜப்பான் என உலகமே ஓரணியில் திரண்டு இலங்கையரசிற்கு தேவையான அத்தனை வளங்களையும் அள்ளிக் கொடுத்து புலிகளை அழித்து முடித்தார்கள். ஆனால் இவர்களை குறை சொல்லிக் கொண்டிருப்பதில் பிரயோசனம் இல்லை என நினைக்கிறேன். தங்களிற்கான குழியை புலிகள் தாங்களே தோண்டியிருந்தார்கள்.

நீங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிற்காக செய்த வேலைகளை கூறுங்கள் ?

புலிகள் அமைப்பில் இணைந்து இந்தியாவில் ஆயுதப் பயிற்சியை முடித்த பின்னர் இயக்கத் தலைமையால் தேர்ந்தெடுக்கப் பட்ட சிலரிற்கு வெடிபொருட்கள் பற்றிய விசேட பயிற்சிகள் கொடுக்கப் பட்டது. அதில் நானும் ஒருவன். அது பற்றிய பயிற்சி முடிந்ததும் ஈழத்திற்கு திரும்பிய நாங்கள் புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினரான வெடி பொருள் பிரிவிற்கு பொறுப்பாக இருந்த அப்பையா அண்ணையோடு இணைந்து மானிப்பாய் பகுதியில் ஒரு ஆயுத தொழிற்சாலையை உருவாக்கி அங்கு இயக்கத்திற்கு தேவையான கண்ணி வெடிகள், கைக்குண்டுகள், பொறி வெடிகள் எறிகணைகள் என அனைத்து வெடிபொருட்களையும் தயாரிக்கத் தொடங்கியிருந்தோம். முதன் முதலாக ஒரு விமானத்தையும் தயாரித்து பரிசோதனை பறப்புக்களும் செய்திருந்தோம்.பின்னர் 1987 ம் ஆண்டு இந்தியப் படையின் வருகையோடு விமானம் செய்யும் முயற்சிகள் கைவிடப் பட்டது மட்டுமல்ல அந்த தொழிற்சாலையும் இந்தியப் படைகளால் தாக்கி அழிக்கப்பட்டது. அடுத்ததாக 89 ம் ஆண்டு காயமடைந்து நாட்டை விட்டு வெளியேறிய நான் வெளி நாட்டில் சிகிச்சை பெற்றுக் கொண்டு மீண்டும் புலிகளின் வெளிநாட்டு கட்டமைப்பு பிரிவில் முக்கியமாக வழங்கல் பிரிவில் இணைந்து வேலை தொடங்கியிருந்தேன்.

புலிகளுக்கு யுத்தத்தை நடத்த தேவையான வருமானம் எங்கிருந்து வந்தது?

அனைத்து இயக்கங்களினதும் ஆரம்ப கால தலைமறைவு வாழ்க்கை என்பது மிகவும் சிரமமானதாக இருந்தது. போராளிகள் தங்கள் பணத் தேவைகளை தங்கள் உறவுகள் மற்றும் குடும்பத்திலிருந்து பெற்றுக் கொண்டார்கள். பின்னர் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்யப் பண்ணைகளை அமைத்தார்கள். இயக்கங்கள் வளரத் தொடங்க நிதித் தேவை அதிகரித்தது. அப்போது வங்கிக் கொள்ளைகளிலும், அரச நிறுவனங்கள், செல்வந்தர் வீடுகள் என கொள்ளையடிக்கத் தொடங்கினார்கள். இதில் பிரபாகரன் கூடகுட்டிமணியோடு இணைந்து குரும்பசிட்டி என்னுமிடத்தில் ஒரு தனியார் வீட்டில் கொள்ளையடித்துவிட்டு பிடிபடாமல் இருக்க ஒருவரை சுட்டுக் கொன்று விட்டு ஓடிய சம்பவமும் நடந்திருக்கின்றது. ஆனால் எம் மக்கள் மத்தியில் இந்தக் கொள்ளைகள் இயக்கங்கள் மீதான வெறுப்பை விதைக்கத் தொடங்கியிருந்தது. அதனால் புலிகள் அமைப்பானது கொள்ளையடிப்பதை கைவிட்டுவிட்டு வேறு வழிகளில் நிதித் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக சுய உற்பத்திகளாக சவர்க்காரம், விளக்குமாறு, தும்புத்தடி, குளிர்பானங்கள் என உற்பத்தி செய்து விற்கத் தொடங்கியிருந்தார்கள். ஆனால் அவற்றின் தரம் குறைந்திருந்த காரணத்தால் மக்கள் அதனை பெரிதும் விருப்பத்தோடு வாங்கவில்லை. 84ல் ஒரு ரூபாய் சவர்க்காரத்தை விற்பதற்காக நான் ஒருவரோடு ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக பேசி உலக விடுதலைப் போராட்டங்கள் பற்றியும், நாம் ஏன் போராடவேண்டும் என்றும் நா வறண்டு போகுமளவிற்கு விளக்கம் கொடுத்தும் அவர் கடைசிவரை சவர்க்காரம் வாங்கவில்லை நிலைமை இப்படியாகத்தான் இருந்தது. அதே காலகட்டத்தில் தான் இந்தியா மற்றும் தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் போன்றவர்களின் உதவி புலிகளிற்கு பேருதவியாக இருந்தது. ஆனால் புலிகளின் தேவைகள் அதிகரிக்க அவர்கள் உலகளாவிய ரீதியில் போதைப் பொருட் கடத்தலில் ஈடுபட்டு அந்த வருமானத்தில் கள்ளச் சந்தையில் ஆயுதங்களை வாங்கி குவிக்க ஆரம்பித்தனர். இலங்கையரசே உலக நாடுகளிடம் கடன் வாங்கி ஆயுதம் வாங்கிக் கொண்டிருந்த போது புலிகள் தங்கு தடையின்றி நவீன ஆயுதங்களை தங்கள் பணத்தில் வாங்கியதன் இரகசியம் இதுதான். அதே நேரம் வெளிநாடுகளிலும் பெரிய சிறிய வியாபார நிறுவனங்கள், கோயில்கள், பாடசாலைகள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், வைத்திய சாலைகள் என வருமானம் வரும் அனைத்தையும் பினாமிப் பெயர்களில் புலிகள் இயக்கினார்கள். 94 ம் ஆண்டுகளிற்கு பின்னர்தான் புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து பெருமளவான நிதி சேகரிப்புக்கள் புலிகளால் மேற்க்கொள்ளப்பட்டது. புலிகளிற்கு அடத்தபடியாக பெருமளவு போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டது புளொட் அமைப்பாகும்.

விடுதலையின் பெயரால் மனித குலத்திற்கு எதிரான போதைப் பொருட் கடத்தலில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டது அறம் கிடையாது அல்லவா?

புலிகளின் விடுதலைப் போராட்டம் என்பது முழுக்க முழுக்க ஆயுதத்தை யுத்தத்தை மட்டுமே நம்பியது. இங்கு யுத்தம் என்று வரும் போதே அங்கு அறம் அடிபட்டுபோய் விடுகிறது. யுத்தத்திற்கான ஆயுதத்தை எதிரே நிற்பவனை கொன்று எடுத்தாலென்ன கண்ணுக்கு தெரியாத யாரோ ஒருவனை போதைக்கு அடிமையாக்கி அந்தப் பணத்தில் ஆயுதம் வாங்கினாலென்ன எல்லாம் ஒன்றுதான் என்ற மன நிலை இருந்தது .சுருக்கமாக சொன்னால் கொன்றால் பாவம் தின்றால் போகும் என்பதைப் போலத்தான் இதுவும்.

விடுதலைப் புலிகளின் போதைப் பொருள் கடத்தலுக்கான உலகளாவிய வலைப்பின்னல் இன்று யாரின் கட்டுப்பாட்டில் உள்ளது?

அந்த வலைப் பின்னல் புலிகள் அமைப்பானது 2001 ம் ஆண்டு தனது சர்வதேச அமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வந்த பின்னர் புதிதாக பொறுப்பெடுத்தவர்களின் விவேகமற்ற செயற்பாடுகளால் இன்று சர்வதேச உளவமைப்புக்களாலும்.சர்வதேச போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவாலும் முற்று முழுதாக அழிக்கப்பட்டு விட்டதோடு அதன் பொறுப்பாளர்களும் இன்று பல நாடுகளிலும் கைது செய்யப் பட்டு சிறைகளில் வாழுகிறார்கள்.

ஆரம்ப காலத்தில் புலிகள் அமைப்பால் செய்யப்பட்ட சகோதரப் படுகொலைகளை எப்படிப் பார்கிறீர்கள்?

ஈழ விடுதலைப் போராட்டத்தின் தோல்விக்கான முதற் படியாக அமைந்த விவேகமற்ற பக்கங்கள் அவை. வேகம் மட்டுமே இருந்த இளைஞர்களான எங்களிடம் அன்று விவேகம் இருந்திருக்கவில்லை. சரியான வழிநடத்தல்கள் இருந்திருக்கவில்லை. இந்திய இலங்கை உளவுப் பிரிவுகளின் சூழ்ச்சிகளை சரியாக இனம் கண்டு அவற்றை முறியடிக்கும் ஆளுமை இருந்திருக்கவில்லை. இவற்றின் தொடர்ச்சியே சகோதரப் படுகொலைகளிற்கு காரணங்களாக இருந்தது. ஈழ விடுதலை இயக்கங்கள் தங்களிற்குள் மோதிக் கொள்ளாமல் ஓரணியில் நின்று இயங்கியிருந்தால் 86 ம் ஆண்டே தமிழீழம் கிடைத்திருக்கும். இன்னொரு விடயம் சகோதரப் படுகொலைகள் என்பது புலிகளால் மட்டுமல்ல அனைத்து இயக்கங்களாலுமே நடத்தப்பட்டது. ஆனால் புலிகள் அதனை அதிகமாகவும் மோசமாகவும் செய்தார்கள்.

விடுதலைப் புலிகள் அமைப்பிற்காக நீங்கள் நேரடியாக எத்தனை கொலைகள் செய்துள்ளீர்கள்?

ஏனிந்த கொலை வெறிக் கேள்வி?, நான் எனக்காக எந்தக் கொலையையும் செய்திருக்கவில்லை. நான் செய்த கொலைகள் அனைத்துமே நான் சார்ந்து இயங்கிய அமைப்பிற்காகவே செய்யப்பட்டன. நான் நேரடியாக செய்த கொலைகள் இந்திய அமைதிப் படைக் காலத்தில்தான் நடந்தன. இந்தியப் படைகளிற்கு எங்களை அல்லது நாங்கள் பதுங்கியிருக்கும் இடங்களை. எங்களிற்கு உணவளித்து எம்மை பாதுகாத்தவர்களை காட்டிக் கொடுத்து இந்தியப் படைகளோடு சேர்ந்து இயங்கியவர்களை அழிக்கவேண்டிய தேவை இருந்தது. அப்படி எனது பொறுப்பில் இருந்த கிராமங்களில் பதினைந்து அல்லது பதினாறு பேர் என்னால் நேரடியாக அழிக்கப்பட்டிருக்கலாம்.

ஒரு உயிரைப் பறிக்கும் உரிமையை, உங்களின் வார்த்தைகளில் சொன்னால் அழிக்கப்பட வேண்டியவர்களை அழிக்கும் உரிமையை விடுதலையின் பெயரில் நீங்கள் எடுத்துக் கொண்டது சரியா?

நான் இணைந்திருந்தது ஆயுதத்தால் மட்டுமே பேசத் தெரிந்த ஒரு அமைப்பு. அங்கு பட்டையும் கொட்டையும் (உருத்திராட்சம்) அணிந்து கொண்டு பஜனை பாட முடியாது. ஆயுதத்தை வைத்து ஆராதனை செய்துகொண்டிருக்க முடியாது. ஆயுதம் தூக்கிய இயக்கம் மட்டுமல்ல ஆயுதம் தூக்கிய ஒரு தனி மனிதன் ஆனாலும் அடுத்தது வன்முறை அல்லது கொலைதான். இது உலக நியதி. உலகம் இப்படித்தான் இயங்குகிறது. சரி பிழை என்பதெல்லாம் அடுத்த கட்டம்.

ஆகவே நீங்கள் கொலைகளை ஆதரிக்கிறீர்களா?

இல்லை யாருடைய உயிரையும் எடுக்கும் உரிமை எவருக்கும் இல்லை. மரண தண்டனை உட்பட. ஆனால் என்னை ஒருவன் கொல்ல வரும்போது அதனை எதிர்த்து போராட வேண்டிய தேவை எனக்குண்டு அல்லவா?

நீங்கள் நேரடியாக செய்த ஒவ்வொரு கொலையையும் விபரிக்க முடியுமா?

இது மனம் விட்டு விபரிக்கிற ஒரு சம்பவம் அல்ல. மோசமான ஆனால் விரும்பியோ விரும்பாமலோ தவிர்க்க முடியாத சம்பவங்கள். ஒருவரை போட வேண்டும்[ கொலை செய்யவேண்டும்] என முடிவு செய்து விட்டால் அவரைப் பற்றிய தகவல்கள் அவரது நடமாட்டம் என்பவற்றை திரட்டுவோம். பின்னர் ஒரு கணத்தில் ஒரு துப்பாக்கி குண்டு அவரது தலையை பிளக்கும் அவ்வளவுதான். சில நேரங்களில் தவறுதலான தகவல்களால் தவறுகளே செய்யாதவர்களும் தவறான முறையில் புலிகளால் கொல்லப்பட்ட சம்பவங்களும் நடந்திருக்கின்றது.

ஒருவரை கொலை செய்யும் கணத்தில் உங்கள் மன நிலை எப்படி இருக்கும்?

ஆரம்பத்தில் கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது சங்கடத்தை அல்லது பதற்றத்தை போக்க மது அருந்தவேண்டியிருந்தது (கள்ளு) பின்னர் போகப்போக பழகிப்போனது.

விடுதலைப் புலிகள் மது அருந்த மாட்டார்கள் என கூறுவார்களே?

புலிகள் அமைப்பில் மது அருந்தக்கூடாது புகைப் பிடிக்கக்கூடாது என்பது ஒரு பொதுவான விதிதான். பிரபாகரன் தேனீர், காப்பி கூட அருந்தமாட்டார். ஆனால் பல முன்னாள் போராளிகள் இதில் விதி விலக்காக இருந்தார்கள். களவாக புகைபிடிக்கவும் மது அருந்தவும் செய்தார்கள். போராளிகளிடையே சிகரற்றிக்கு 'சயன்ஸ்' என்கிற சங்கேத மொழி கூட இருந்தது. நான் முதலாவதாக காயமடைந்த அன்று வடமராச்சி பகுதியில் நாங்கள் பதினைந்து பேர் பல நூறு இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டிருந்தோம். அன்று முழுதும் எமக்கு உணவு கிடைக்கவில்லை தென்னையில் இருந்து இளநீரைக் குடித்து தேங்காயை சாப்பிட்டதுடன் பனையில் இருந்து கள்ளையும் இறக்கிக் குடித்திருந்தோம். அன்றிரவு முற்றுகையை தகர்த்து வெளியே வரும் போது எமது போராளிகளில் பலர் இறந்து போனார்கள். நான் கடுமையாக காயமடைந்திருந்தேன். போதையில் இருந்ததானால் அதிகளவு இரத்தம் வெளியேறியதால் மயக்கமடைந்திருந்தேன்.

நீங்கள் நேரடியாக சம்பந்தப்படாமல் மறை முகமாக சம்பந்தப்பட்ட கொலைகள் எத்தனை?

கண்ணி வெடிப் பிரிவில் இருந்ததனால் கண்ணி வெடியை வைத்து அடிச்சிட்டு போய்க் கொண்டே இருக்கவேண்டியது தான். கணக்கெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

உங்கள் உயிர் நண்பனை கொலை செய்ததாக ஒரு முறை கூறியிருந்தீர்கள், அந்தக் கணத்தில் உங்கள் மனநிலை எப்படி இருந்தது?

ஆம். அவன் எனது சிறு வயது நண்பன். அவனை நானே கொலை செய்தேன். அவன் வேறு இயக்கத்தில் இணைந்திருந்தான் புலிகள் அமைப்பால் அந்த இயக்கம் தடை செய்யப் பட்ட பின்னர் இந்தியாவில் தங்கியிருந்தவன் இந்தியப் படைகள் ஈழத்திற்கு வந்தபோது அவனும் இந்திய உளவமைப்பால் ஈழத்திற்கு அழைத்து வரப் பட்டிருந்தான். அவனை நோக்கி துப்பாக்கி நீண்டது ஒரு கணத்தில் நான் எடுத்த முடிவு. ஏனெனில் கொல் அல்லது கொல்லப் படுவாய் என்கிற கால கட்டம் அது. ஆனால் அந்தக் கொலையால் எனது மனதில் உள்ள தாக்கம் என் மரணம் வரை தொடரும். அய் மிஸ் ஹிம்.

நீங்கள் செய்த கொலைகளுக்காக எப்போதாவது வருந்தியிருக்கிறீர்களா?

தம்பி! ஒரு முக்கியமான விடயம் கொலைகள் என்பது எவையுமே எனது தனிப்பட்ட காரணங்களிற்காக செய்யப்பட்டது அல்ல. நான் செய்த கொலைகள் எல்லாமே ஒட்டு மொத்த ஈழத் தமிழ் மக்களின் விடுதலை என்று உதித்த, அந்த மக்களின் பிரதிநிதிகள் என்று செயற்பட்ட ஒரு அமைப்பின் உறுப்பினராக இயங்கிய எனக்கு வழங்கப்பட்ட கட்டளைகளாகும். ஒரு இராணுவமாகட்டும், ஆயுத குழுவாகட்டும் கட்டளைக்கு கீழ்படிதல் என்பது மிக முக்கியமானது. அதன்படி எனக்கான கட்டளைகளிற்கு நான் கீழ்ப்படிந்து இயங்கினேன். கொலைகள் என்பன எனக்கு வழங்கப்பட்ட கட்டளைகள். ஆனால் குற்ற உணர்வு என்பது இருக்கத்தான் செய்கின்றது. தினமும் அதற்காக வருந்திக் கொண்டுதான் இருக்கிறேன்.

விடுதலையின் பெயரால், விடுதலைப் புலிகள் எத்தனை சக தமிழர்களை கொலை செய்து இருப்பார்கள் என நினைக்கிறீர்கள்?

அதுபற்றிய சரியான தரவுகள் யாரிற்கும் தெரியாது என நினைக்கிறேன். நான் உட்பட.

விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு கொலைகார அமைப்பு என்று சிலர் குற்றம் சாட்டுகிறார்களே?

ஆயுதம் ஏந்திய அனைத்து தமிழ் அமைப்புக்களுமே கொலைகளை செய்த அமைப்புக்கள்தான். அதில் விடுதலைப் புலிகள் விதி விலக்கல்ல.

நீங்கள் உலகத்தில் அதிகம் நேசிப்பவர் யார்?

எனது மகள்.

உங்களின் மகளை நீங்கள் நேசிப்பது போல நீங்கள் கொலை செய்தவர்களை சில உயிர்கள் நேசித்திருப்பார்கள், நேசிப்பவர்களை கொலை செய்தது மூலம் அவர்களின் வாழ்வில் மிகப் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியது சரியா?

தவறுதான். இதற்கான பதிலை ஏற்கனவே கூறிவிட்டேன். அதாவது கட்டளைகளிற்கு கீழ்படிதல். இன்றும் நான் செய்த கொலைகளுக்காக மிகவும் வருந்துகிறேன்.

நீங்கள் கொலை செய்த ஒருவரின் உறவினரை, அல்லது நீங்கள் கொலை செய்த ஒருவரை நேசிப்பவரை சந்திக்க நேர்ந்தால் என்ன செய்வீர்கள்?

சொல்லத் தெரியவில்லை.

புலிகள் அமைப்பானது இலங்கை இந்தியா தவிர்ந்து வெளி நாடுகளிலும்.குறிப்பாக பிரான்சிலும் சில கொலைகளை செய்ததாக அறிய முடிகிறது அதைப் பற்றி சொல்ல முடியுமா?

பிரான்சில் மாத்திரம் சபாலிங்கம், நாதன் , கஜன் என மூன்று பேரை புலிகள் கொலை செய்துள்ளார்கள்.

சாபாலிங்கம் புலிகளால் கொல்லப் படவில்லையென்று நீங்களே முன்பு சில இடங்களில் மறுத்திருக்கிறீர்களே?

உண்மைதான் காரணம் அன்று புலிகள் அமைப்பு தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தது அதற்கென பல தேவைகளும் நோக்கங்களும் இருந்தது. அதன் காரணமாக புலிகள் அமைப்பை கடுமையாக விமர்சனம் செய்து வந்த சபாலிங்கம் புலிகளின் அன்றைய சுவிஸ் பொறுப்பாளரின் வழிநடத்தலில் கொல்லப்பட்டார். அந்த சுவிஸ் பொறுப்பாளர் இப்பொழுது வேறொரு நாட்டில் வசிக்கிறார். அதனை புலிகள் தாம் செய்யவில்லையென மறுத்ததோடு பத்திரிகைகளில் எழுதிக்கொண்டிருந்த என் போன்றவர்களிற்கும் சபாலிங்கத்தின் கெலையை மறுக்கும்படி உத்தரவு கிடைத்திருந்தது. ஆனால் இன்று புலிகளோ அவர்களின் தேவைகளோ நோக்கங்களோ எதுவும் இல்லாத காரணத்தால் நான் அதனை மறுத்துக்கொண்டிருக்கவேண்டிய தேவை இல்லை. சபாலிங்கத்தை கொலை செய்தது விடுதலைப்புலிகள் தான்.

நாதன், கஜன் கொல்லப் பட்டதற்கான காரணங்கள் தெரியுமா?

 

உண்மையில் நாதன்தான் புலிகளில் இலக்கு. காரணம் நாதனே புலிகளின் பிரான்சிற்கான நிதிப் பொறுப்பில் இருந்தவர். இவர் புலிகளின் பெருமளவு நிதியை கையாடல் செய்ததால் பல தடைவை புலிகளின் புலனாய்வு பொறுப்பாளரால் எச்சரிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் தொடர்ந்தும் நிதி கையாடல் செய்ததால் அவரை பாரிசில் வைத்து புலிகள் கொலை செய்தனர். ஆனால் அவரோடு கூடவே நின்றிருந்த கஜன் கொலையாளியை அடையாளம் கண்டுவிட்டிருந்ததால் அவரும் கொல்லப்பட்டார்.

விடுதலைப் புலிகள் அமைப்பு அழிந்து விடும் என, அதன் அமைப்பில் அங்கத்தவராக இருந்த காலங்களில் நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?

இல்லை கனவிலும் நினைத்திருக்கவில்லை. புலிகள் அமைப்பு மிகத் திறமையான போராளிகளின் வீரத்தாலும், தியாகங்களாலும் திறைமைகளாலும் நன்கு திட்டமிடப்பட்டு சிறுகச் சிறுக கட்டியமைக்கப்பட்டதொரு விடுதலை அமைப்பு. ஒற்றைக் கைத் துப்பாக்கியோடு தொடங்கப்பட்டு ஆட்லெறிகள்.பல குழல் எறிகணைகள், ஏவுகணை, விமானம் என கண் முன்னாலேயே வளர்ந்து நின்ற இயக்கம். இப்படி அழிந்து போகும் என நான் கனவிலும் நினைத்திருக்கவில்லை.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தோல்விக்கு பிரதான காரணமாக நீங்கள் நினைப்பது என்ன?

அதற்கு நிறைய அக புற காரணிகள் உள்ளன.பிரதான காரணங்களில் முதலாவது சர்வதேச அரசியல் ஓட்டத்தை சரியாக கணித்து அதற்கேற்ப சில ராஜதந்திர நகர்வுகளை செய்து புலிகள் தங்களிற்கானதொரு நெளிவு சுழிவு அரசியலை செய்யாதது. இரண்டாவது, புலிகளின் பெரு வெற்றிக்கு பின்னர் அவர்கள் ஒரு நிழல் அரசை அமைக்கத் தொடங்கியபோது இயக்கத்தினுள் எழுந்த அதிகார குழுக்கள் தங்களில் யார் அதிகம் பிரபாகரனை புகழ்ந்தும் போற்றியும் அதிக அதிகாரங்களை தங்கள் கைவசப்படுத்த முயல்வது என்பதில் போட்டியிட்டனர். இந்தப் புகழ்ச்சிகளிற்கு இறுதிக் காலங்களில் பிரபாகரனும் மயங்கத் தொடங்கியிருந்தார் என்பது கவலைக்குரிய விடயம். இந்த அதிகாரக் குழுக்களில் முக்கியமானவை வெளிநாட்டு பிரிவுகளை கையகப்படுத்திய கஸ்ரோ தலைமையிலான அனைத்துலகச் செயலகம். மற்றும் சூசை தலைமையிலான கடற்புலிகள். இந்த அதிகாரப் போட்டியில் அதுவரை உண்மையாக விசுவாசத்தோடு உழைத்த தலைமையை புகழ்ந்து கொண்டிருக்காமல் மக்கள் விடுதலையை முன்வைத்து வேலை செய்த பல மூத்த போராளிகள் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் . வெளிநாட்டு கட்டமைப்பு பொறுப்பாளர் கே.பி. போன்றவர்கள் உட்பட பலர் புலிகள் இயக்கத்தை விட்டு தூக்கியெறியப்பட்டனர். அதே போல 2001 ம் ஆண்டு என்னையும் புலிகளின் தலைமை வெளியேற்றியது.

சூசை தலைமையிலான கடற்புலிகள் அமைப்பு விட்ட தவறு என்ன?

சூசை தலைமையிலான கடற் புலிகளின் தவறு என்று சொல்லமுடியாது, சூசையின் பேராசை என்றுதான் சொல்லவேண்டும். புலிகளின் கே.பி கம்பனியின் சர்வதேச வலையமைப்பில் 96 களிற்கு முன்னர் இருந்த பெரும்பாலானவர்கள் சம்பளத்திற்கு பணிபுரிபவர்களாகவே இருந்தனர். ஆனாலும் அவர்கள் விசுவாசத்தோடும், நேர்மையாகவும் வேலை செய்தனர். 96 களின் பின்னர் பெருமளவான பயிற்றப்பட்ட கடற்புலிகள் சர்வதேச வலையமைப்பில் இணைக்கப் பட்டனர். சர்வதேச கடலோடிகளில் பெரும்பாலானவர்கள் கடற்புலிகளாக இருந்தார்கள். ஆனால் ஆயுதச்சந்தை முகவர்களுடான தொர்புகள், பேரம் பேசுதல் என்பன பழையவர்களிடமே இருந்தது. ஆனால் சூசையோ கப்பல் ஓடத் தெரிந்து விட்டால் ஆயுதங்களை கொண்டு வந்து இறக்கிவிடலாமென நினைத்தார். அதனால் பல குழுக்களாக இயங்கிய சர்வதேச வலையமைப்பை மொத்தமாக பறித்தெடுத்து தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருந்தார். அதுவரை பல நவீன ஆயுதங்களை வன்னிக்குள் கொண்டு போய் சேர்த்தவர்களை ஒட்டு மொத்தமாக நீக்கி சூசை பொறுப்பெடுத்த பின்னர் ஒரு ஆணியைக் கூட சூசையால் வன்னிக்குள் கொண்டு போய் சேர்க்கமுடியவில்லையென்பது சோகமான உண்மை.

இறுதி போரின் முடிவை எப்படிப் பார்கிறீர்கள்?

30 ஆண்டுகாலம் இடைவிடாத யுத்தம் முடிவிற்கு வந்தது மகிழ்ச்சிதான். ஆனால் இந்த 30 ஆண்டு காலம் ஈழத் தமிழினம் கொடுத்த விலையின் பலாபலன் என்னவென்று பார்த்தால் எதுவும் இல்லை என்பதுதான் பதிலாக அமையும். உயிரிழப்புக்களை தவிர்த்து எமக்கான தீர்வுகளை பெற்றுக் கொள்க்கூடிய பல சந்தர்ப்பங்கள் கிடைத்தும் புலிகள் அமைப்பு அதனை சரியாக தமக்கு சாதகமாக பயன்படுத்தாமல் நழுவ விட்டது. இன்று அந்த அமைப்பும் முழுதாக அழிந்துபோனதோடு ஈழத் தமிழ் மக்களையும் ஒரு அரசியல் சூனியத்திற்குள் தள்ளிவிட்டு சென்றுள்ளனர். இதிலிருந்து தமிழினம் மீண்டு வருவதற்கு பல காலங்கள் எடுக்கும். ஈழத் தமிழ் மக்களை சரியாக வழி நடத்தும் ஒரு தலைமையும் அமையவேண்டும். அமையுமா என்பது கேள்விக் குறிதான்?.

தொடரும்...

http://aruliniyan.blogspot.in/2014/01/blog-post_31.html

Link to comment
Share on other sites

  • Replies 143
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கேள்ளி பதிலைச் சாத்திரியாரே எழுதிக் கொடுத்திருப்பார் போலும்... எல்லாம் ஒரு விளம்பரம்.... நான் நிர்வாணமாக நிற்பேன்... ஆனால் பார்க்காதீர்கள் என்பது போலக் கிடக்கு. படிக்காதீர்கள் என்ற கதை

Link to comment
Share on other sites

புலிகள் விட்ட தவறுகளையும் கொலைகளையும் பட்டியல் இடும் சாத்திரியார்... இவைகளை புலிகளுக்காக செய்தேன் என்று கூறுவது... வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது... இவர்கள் போன்றவர்கள்தான் புலிகளின் தவறுகளுக்கும் கொலைகளுக்கும் உடந்தையாளர்களும், தமிழ் மக்களை ஏமாற்றியதில் பெரும்பங்கு வகிப்பவர்கள் எனும்போது... வருங்காலத்திலும் இவர்களால் தமிழ் இனத்திற்கு என்னென்ன கெடுதல்கள் நேரிடுமோ என்றே எண்ணத் தோன்றுகிறது.  :(

Link to comment
Share on other sites

ஆனால் புலிகளின் தேவைகள் அதிகரிக்க அவர்கள் உலகளாவிய ரீதியில் போதைப் பொருட் கடத்தலில் ஈடுபட்டு அந்த வருமானத்தில் கள்ளச் சந்தையில் ஆயுதங்களை வாங்கி குவிக்க ஆரம்பித்தனர்.

"ஆரம்பித்தனர்" அல்ல.. "ஆரம்பித்தோம்.". :D வெளிநாட்டு வழங்கல் பிரிவில் இருந்துகொண்டு திருப்பதி உண்டியல் காசிலா வாங்கி அனுப்பினார் சாத்திரி அண்ணா?? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு  இயக்கத்தில் இருந்து கொண்டு

அதன் அத்தனை கட்டுப்பாடுகள்

அதன் அத்தனை வரம்புகளையும் மீறிக்கொண்டு

சொன்னார்

சுட்டேன் என்று  மட்டும் அடிக்கடி சொல்வது............???

 

எனக்கு இதிலிருந்து பல உண்மைகள் தெரிகின்றன.

2001 இல் வெளியேற்றப்பட்டது

கேபியுடனான  தொடர்பு

ஆக்கினோம்

அழித்தோம்

முள்ளிவாய்க்கால் முடிவு.........................

இதற்கு மேல் எழுதவிரும்பவில்லை...

 

இதுவும் கடந்து போகும்..........

Link to comment
Share on other sites

அதனை புலிகள் தாம் செய்யவில்லையென மறுத்ததோடு பத்திரிகைகளில் எழுதிக்கொண்டிருந்த என் போன்றவர்களிற்கும் சபாலிங்கத்தின் கெலையை மறுக்கும்படி உத்தரவு கிடைத்திருந்தது. ஆனால் இன்று புலிகளோ அவர்களின் தேவைகளோ நோக்கங்களோ எதுவும் இல்லாத காரணத்தால் நான் அதனை மறுத்துக்கொண்டிருக்கவேண்டிய தேவை இல்லை. சபாலிங்கத்தை கொலை செய்தது விடுதலைப்புலிகள் தான்.

சூழ்நிலை மாற மாற பேட்டிகளின் உள்ளடக்கமும் மாறும்போலை.. :D

Link to comment
Share on other sites

போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்தவர்கள் தேசிய மேளம் அடிக்கின்றார்கள் .இன்னும் பிழைப்புக்காக

போராடப்போனவனுக்கு தான் தெரியும் தோல்வியின்  வலி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ பாவம். குறித்த நபரே சொல்கின்றார். நான் ஆயுதம் தூக்கிப் பார்க்கத் தான் இயக்கம் போனது என்று. அப்படிப்பட்ட ஞானசூனியம் அவர். அவருக்கு வலி என்று, இவருக்கு வலி(ப்பு) வருதாம்...

Link to comment
Share on other sites

அறுபது எழுபது வயதில் கொடுக்க வேண்டிய பேட்டியை இப்பொழுது கொடுத்துத் தொலைத்திருக்கிறார் சாத்திரியார். சிக்கல் ஏதும் வராமல் இருக்கக் கடவது.

Link to comment
Share on other sites

போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்தவர்கள் தேசிய மேளம் அடிக்கின்றார்கள் .இன்னும் பிழைப்புக்காக

போராடப்போனவனுக்கு தான் தெரியும் தோல்வியின்  வலி .

percussion_drums.gif

தாளத்தை அடிச்சே காலத்தை ஓட்டுங்கோ அண்ணே.

புலிகள் விட்ட தவறுகளையும் கொலைகளையும் பட்டியல் இடும் சாத்திரியார்... இவைகளை புலிகளுக்காக செய்தேன் என்று கூறுவது... வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது... இவர்கள் போன்றவர்கள்தான் புலிகளின் தவறுகளுக்கும் கொலைகளுக்கும் உடந்தையாளர்களும், தமிழ் மக்களை ஏமாற்றியதில் பெரும்பங்கு வகிப்பவர்கள் எனும்போது... வருங்காலத்திலும் இவர்களால் தமிழ் இனத்திற்கு என்னென்ன கெடுதல்கள் நேரிடுமோ என்றே எண்ணத் தோன்றுகிறது.  :(

சோழி பச்சை முடிஞ்சுது. கோடி பச்சை தர வேணும் உங்கள் கருத்துக்கு.

 

புலி வாழ்ந்தவரை புலியை வைச்சு பிழைப்பு , புலி இல்லாத இந்த நாட்களில் புலியை விற்றுப்பிழைப்பு வியாபாரம் அமோகமாகவே நடக்கிறது. 
 
காலம் இந்தக் கயமைகளுக்கு ஒருநாள் தனது தீர்ப்பை எழுதும். 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார் ஒண்ணும் தெரியாத பாப்பா போட்டுக்கிட்டாளாம் தாப்பாள் என்ற மாதிரி பேட்டி கொடுத்திருக்கின்றார். மிகுதியையும் வாசிக்க ஆவல்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகத்தினர் கவனத்திற்கு,
மரத்தால் விழுந்தவரை எருமை மாடு ஏறி உலக்குவது போல சாக்கிளியின் sorry சாத்திரியின் கிசுகிசு உள்ளது.
தயவு செய்து தணிக்கை செய்யவும்.

Link to comment
Share on other sites

from FB : Vasu Devan

 

தம் தொப்புளைப் பார்த்துக் கொண்டே தம்மை வரலாற்றைத் தீர்மானிக்கும் நாயகர்களாகவும், வரலாற்றை முழுமையாகவும், 'உண்மையாகவும்' எழுத அழைக்கப்பட்டிருக்கும் 'தெரிவு' செய்யப்பட்டவர்களாகவும் தமிழ் எழுத்தாளர்கள் சிலர் ஈழப்போராட்டம் பற்றி 'அறுதியான' கருத்துகளை முன்வைப்பதானது நகைப்பையூட்டுவதாக உள்ளது.

இவர்களில் ஒரு பகுதியினர் போராட்டத்துடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்தவர்கள். இன்னொரு பகுதியினர் உள்ளிருந்து குளிபறித்துப் பின்னர் வெளியிருந்தும் குளிபறித்துக் கொண்டிருப்பவர்கள். நான் "போராளி" என்று கூறுவதும், போராட்டத்தை அழிக்கும் நோக்கில் நேரடியாகவும் வெளிப்படையாகவும் பிரகடனப்டுத்தியும் செயற்பட்டதும் எவ்வகையிலும் யாருக்கும் முரண்பாடான ஒன்றாகத் தெரியாதது ஆச்சரியமளிக்கிறது. தவறான போராட்டத்தில் தவறான முறையில் ஈடுபட்டவர்கள் யாரும் தம்மைப் அந்தப் போராட்டதின் பங்காளிகள் என்று பறைசாற்றுவதில்லை.

'புத்திசாலித்தனமான' சொல்லாடல்களையும், சந்தர்ப்பவாத 'அறிவியலையும்' மட்டுமே ஆயுதமாக்கி அரசியலோ அன்றில் வரலாறோ தீரமானிக்கப்படுவதில்லை.

பிரஞ்சுப் புரட்சி மற்றும் பரிஸ் கம்யூன் புரட்சி பற்றிய வரலாற்றாளர்கள் மத்தியில் காணப்பட்ட ஒரு முக்கிய முரண்பாடு என்னவென்றால், அவர்கள் இப்புரட்சிகளின் வரலாற்றை இருகூறுகளாகப் பிரித்துப் பார்க்க முயன்றார்கள். அதாவது, புரட்சியின் நல்ல பக்கங்கள் என ஒரு பகுதியாகவும், தீய பக்கங்கள் என இன்னொரு பகுதியாகவுமாக. புரட்சியின் நோக்கங்கள் நியாயமானவையென்றும் அப்புரட்சி நடைமுறையில் பல அநீதிகளைக் கொண்டிருந்தது என்றும் விவாதங்களை முன்னெடுத்தார்கள்.

விதிவிலக்கற்ற வகையில் இடதுசாரிகளாலும், கார்ல் மாக்ஸினாலும் கூட, விதந்துரைக்கப்பட்ட இப்புரட்சிகள் பயங்கரங்களையும், கொடூரங்களையும் தம்மகத்தே கொண்டிருந்தன. புரட்சியாளர்கள் எந்த மக்களுக்காகப் புரட்சியை ஆரம்பித்தார்களோ அவர்களில் பலரையே அவர்கள் பலியாக்கினார்கள். புரட்சியின் சூழ்நிலைகள்,அதன் எதிர்பாராத போக்குகள் மற்றும் உள்ளார்ந்த எதிர்ப்புரட்சிச் சக்திகள் போன்றவை அர்ப்பணிப்பு மிக்க புரட்சியாளர்களை கொடூரம் விளைவிப்பவர்களாகவும் மாற்றியிருந்தது. இது வரலாற்றில் யாரும் மறுக்கமுடியாத உண்மை.

இக்கொடூரங்களை முன்நிறுத்தி, இவ்விரண்டு தோல்விகண்ட புரட்சிகளையும் அதன் இலக்குகளையும் அழிக்கும் முயற்சியில் பிற்போக்குவாத, தனிப்பட்ட வஞ்சத்தைத் தீர்க்கும் நோக்கிலான கருத்துகள் முன்வைக்கப்பட்டன. தோற்றுப்போனவர்களின் முதுகில் சாவரி செய்வதைப்போல் இலகுவானதும் இழிவானதுமான செயலொன்று இருக்முடியாதென்பதில் இரண்டு நிலைப்பட்ட கருத்திருக்கமுடியாது.

ஆனால், காலப்போக்கில் வரலாற்றாளர்களில் மிகப்பெரும்பான்மையினர் இவ்விரண்டு புரட்சியின் மீதும் நல்ல பக்கங்கள், தீய பக்கங்கள் எனப் பிறிதாக்கம் செய்யமுடியாதென்றும் அவற்றை ஒரு முழுமையான "பளொக்" காக மட்டுமே பார்க்கமுடியும் என்றும் இணங்கிக் கொண்டார்கள். பிரஞ்சுப் புரட்சியின் இரண்டாவது நூற்றாண்டு விழாக்கள் முன்னெடுக்கப்பட்ட வேளையில் இது மிகவும் உறுதியான முறையில் வெளிப்படுத்தப்பட்டது.

வரலாறு அது நடைபெற்ற காலத்திலிருந்து நகர்ந்து செல்கையில் அதுபற்றிய கருத்துகளும் பார்வைகளும், ஆய்வுகளும் மாறுபட்டுச் செல்கின்றன. இது ஒரு தவிர்க்கமுடியாத வரலாற்று இயல்பாகும். இவ்விடயம் தனியாக பிரஞ்சுப் புரட்சிக்கும், பரிஸ் கம்யூன் புரட்சிக்கும் மட்டுமே பொதுவான வியடம் அல்ல.

பரிஸ் கம்யூன் புரட்சிவாதிகள் 26 மே 1871 ல் நடாத்திய படுகொலைகள் பாரதூரமான கொடுரங்கள் நிறைந்தவை. இருப்பினும் கார்ல் மாக்ஸ் இந்தப்புரட்சியை தலையில் வைத்துக் கொண்டாடினார் என்பதையும் மறக்காதிருத்தல் வேண்டும். இதற்கான காரணத்தை கார்ல் மாக்ஸிடம் கேட்டறிந்து கொள்ளும் வாய்ப்பு எமக்கில்லை. அவரின் ஆவியுடன் கதைப்பவர்களில் நம்பிக்கை வைப்பதும் உவப்பான ஒன்றல்ல.

புரட்சி, போரட்டம் எனும் பரிமாணங்களுக்குள் வரலாறு நுழையும்போது வன்முறையும் கொடூரங்களும் அனுமதியின்றியே அங்கு நுழைந்து விடுகின்றன. அநீதியின் பிரசன்னம் அங்கு தவிர்க்கமுடியாததாகிறது. மனித அறிவிற்கும், விருப்பிற்குமிடையிலான முரண்பாடுகளை உளவியற் தளத்தில் அணுகுவது பற்றி நாம் கற்றுக்கொள்ள இன்னமும் ஏராளமான விடயங்கள் உள்ளன.

இவ்வகையில்தான் ஈழப்போராட்டமும் அதன் "நல்ல, தீய" பக்கங்களும் பார்க்கப்படல் வேண்டும் எனத்தோன்றுகிறது. ஆசியக் கண்டத்தில் மிகப்பெரிய பொருளாதார மாற்றங்கள் நடைபெற்ற அல்லது நடைபெறும் ஒரு காலகட்டத்தில், உலகின் வல்லரசுகள் தங்கள் நலன்களை இக்கண்டத்தில் நிலைநிறுத்த உக்கிர முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் நிலையில், ஈழப்போராட்டம் பாரிய அழுத்தங்களுக்கு முகம் கொடுத்துத் தோற்றுப்போனது. ஈழத்தில் தமிழர்களின் இருப்பு நிலைக்கும், இப்பிரதேசத்திலான சர்வதேச நலன்களுக்குமான ஒரு போராட்டமாக இந்தப் போராட்டத்தைப் பார்த்தல் உகந்தது.

அண்மைக் காலங்களில் ஈழப்போராட்டதின் இறுக்கட்ட இலக்கிய விபரிப்புகள் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன. இறுதிக்கட்ட அவலங்களின் சாட்சிகள் தங்களுக்குள்ளேயே போட்டி போட்டுக்கொள்ளும் நிலைமையொன்று உருவாகியுள்ளதாகவும் தோன்றுகிறது. போராட்டத்துடன் நெருங்கிப் பிணைந்திருந்தவர்கள் கூட "நான் அவனில்லை அல்லது அவளில்லை" எனும் நிலைப்பாட்டை உறுதி செய்யும் வண்ணமாகவும், "பாம்புக்குத் தலை, மீனுக்கு வால்" என்ற நிலைப்பாட்டிலும் தான் இன்றுள்ளார்கள் எனத்தோன்றுகிறது. அவர்களுக்கு வேறு வழிகள் இருப்பதாகவும் தெரியவில்லை.

ஈழப்போராட்டத்தின் சாட்சிகளின் பதிவுகள் ஆரம்ப நிலையில்தான் இருக்கிறன. இன்னமும் ஏராளமான விடயங்கள் வெளிவரவேண்டியிருக்கிறது. அதற்கான சூழ்நிலைகள் இன்னமும் உருவாகியிருப்பதாகவும் சொல்லமுடியாது. போரில் இறந்தவர்களுக்கு வெளிப்படையாக அஞ்சலி செலுத்த உரிமையற்ற நாட்டில், போர் தொடர்பான கருத்துகளை வெளிப்படையாக முன்வைக்கும் உரிமை இருப்பதாக யாரும் அப்பாவித்தனமாகக் கருதிவிடமுடியாது.

சாட்சியங்களும் ஞாபகக் குறிப்புகளும் வரலாறாக மாற்றம் பெறுவதற்கு அது புறநிலை ஆய்வொன்றினூடாக அணுகப்படவேண்டும். குறிப்பாக அப்படியான ஒரு ஆய்வு, இவ்வரலாற்றுச் சம்பவங்களுடன் நேரடிப் பங்காற்றல் இல்லாதவர்களினால் முன்னெடுக்கப்படவேண்டும். இந்நிலைகள் சாத்தியப்படவேண்டுமானால் அதற்குக் காலம் முன்னகரவேண்டும்.

அதுவரையும் பதிவுகளையும், சாட்சியங்களையும், ஞாபகக் குறிப்புகளையும், புனைவுகளையும், பொய்களையும் உங்வாங்கி சலனமற்றுப் பகுப்பாய்வு செய்யும் பக்குவம் நம்மெல்லோருக்கும் வேண்டும். தீர்ப்பு வழங்குவது வரலாற்றுக்கு மட்டுமே உள்ள கடமை.

- 30.01.2014.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்....!

 

அர்ச்சுனன் கொன்றால், அது 'சங்காரம்'!

 

கர்ணன் கொன்றால், அது ' அகங்காரம்' !

 

எங்கோ 'செஞ்சோற்றுக் கடன்' ஒன்று தீர்க்கப்படுகின்றது! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு பேட்டியை விடுதலைப்புலிகள் இருந்த போது கொடுத்திருந்தால்.. இதனைப் பற்றிய நம்பகத்தன்மைகளை குறைந்த பட்சம்.. உறுதிப்படுத்தவாவது முடிந்திருக்கும்.

 

இது இறந்த ஒருவனைப் பற்றி அவன் இறப்பின் பின் திட்டிக் கொண்டு திருப்திப்பட்டுக் கொள்வதற்கு.. நிகரானது..! அவன் எழும்பி வந்து.. விளக்கமா கொடுக்கப் போகிறான் என்ற அசாத்திய.. துணிவில் செய்வது.

 

மேலும்.. இயக்கத்தில் இருந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக.. இவர் மூலம் தான் இயக்கம் இயங்கிக் கொண்டிருந்தது என்பது சுத்துமாத்து. இவர் சொல்வது எல்லாம் சத்தியமான உண்மைகள் என்பதும்.. பெரும் மிகைப்படுத்தலாக.. உள்ளது. இவ்வகையான பேட்டிகள்... மூலம்.. இயக்கம் பற்றிய வரலாற்றை அறியாதவர்களை ஏமாற்றலாம்.. ஆனால் ஈழ மக்களை ஏமாற்ற முடியாது.

 

இது புலிக் காய்ச்சலாளர்களோடு... சாத்திரியை இன்னும் நெருங்கச் செய்யலாமே தவிர.. வேறு எந்த வகையிலும்.. இது அவருக்கு.. உதவப் போவதில்லை..! இது சாத்திரியின் இலக்கற்ற செயற்பாடுகளை தெளிவாக இனங்காட்டுகிறது. இவரை ஏன் இயக்கம் விரட்டி அடித்தது..  என்பதற்கு இதுவே நல்ல சாட்சியாகவும் உள்ளது.

 

நேற்றைய தினம்.. முகநூலிலும்.. இதன் தலைப்பை கண்டோம். இது.."கேள்வியும் நானே பதிலும் நானே" வகை என்று கண்டறிந்து படித்து நேரத்தையே வீணடிப்பதை தவிர்த்துக் கொண்டோம். :icon_idea::)

 

Link to comment
Share on other sites

முதலில் அன்றைய கால கட்டத்தில் பெரிய இயக்கமாக இருந்த புளொட் அமைப்பில் சேருவதற்காகவே போயிருந்தேன். இயக்கத்திற்கு போனதுமே கையில் ஆயுதம் தருவார்கள் என எதிர்பார்த்து போயிருந்த எனக்கு அவர்கள் ஒட்டுமொத்த மக்கள் போராட்டம் நடக்கவேண்டும் என்று சொல்லி அரசியல் வகுப்புக்களை வைத்து வாழ்க்கையை வெறுக்கப் பண்ணி விட்டார்கள்.  :icon_idea: 

 

.அவர் உடனடியாகவே எனது கைகளில் 3.8 றீற்றா வகை கைத் துப்பாக்கியை கொடுத்து குறி பார்த்து சுடும்படி சொன்னார். புத்தகங்கள், பாடமாக்கல்கள், சொற்பொழிவுகள் எதுவுமே இல்லை. அது எனக்கு பிடித்திருந்தது. எனவே புலிகள் அமைப்பில் இணைந்து விட்டேன். இணைந்த பின்பு பயிற்சிகள் கடினமாக இருந்தது. :lol:

 

நான் இணைந்திருந்தது ஆயுதத்தால் மட்டுமே பேசத் தெரிந்த ஒரு அமைப்பு. அங்கு பட்டையும் கொட்டையும் (உருத்திராட்சம்) அணிந்து கொண்டு பஜனை பாட முடியாது. ஆயுதத்தை வைத்து ஆராதனை செய்துகொண்டிருக்க முடியாது. :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=135566#entry981545

 

சாத்திரி, ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு கதை சொல்கிறார்.  2009-10களில் பொட்டம்மானின் பிரிவில் இருந்ததாக வாசித்த ஞாபகம்.  இப்போது கே.பி.யின் பிரிவில் என்று சொல்கிறார்.  இதுவரை காலமும் அனைத்துலகப் பொறுப்பாளரைக் குறை கூறிவந்தார்.  இப்போது சூசையைக் குறை கூறுகிறார்.

 

நிர்வாகத்தில் இருப்பவர்கள், இவருடைய பழைய பதிவுகளை மீள இங்கு இணையுங்கள். முக்கியமாக 2008-2012 வரையான பதிவுகள். அப்போதுதான் இவரின் உண்மையான முகம் தெரிய வரும்.

Link to comment
Share on other sites

ம்ம்ம்....!

 

அர்ச்சுனன் கொன்றால், அது 'சங்காரம்'!

 

கர்ணன் கொன்றால், அது ' அகங்காரம்' !

 

எங்கோ 'செஞ்சோற்றுக் கடன்' ஒன்று தீர்க்கப்படுகின்றது! :D

 

கர்ணணின் செஞ்சோற்றுக்கடனிற்கும் இங்கு செய்யப்படும் தண்ணி கடனுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது புங்கை.

Link to comment
Share on other sites

http://www.yarl.com/forum3/index.php?showtopic=135566#entry981545

 

சாத்திரி, ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு கதை சொல்கிறார்.  2009-10களில் பொட்டம்மானின் பிரிவில் இருந்ததாக வாசித்த ஞாபகம்.  இப்போது கே.பி.யின் பிரிவில் என்று சொல்கிறார்.  இதுவரை காலமும் அனைத்துலகப் பொறுப்பாளரைக் குறை கூறிவந்தார்.  இப்போது சூசையைக் குறை கூறுகிறார்.

 

நிர்வாகத்தில் இருப்பவர்கள், இவருடைய பழைய பதிவுகளை மீள இங்கு இணையுங்கள். முக்கியமாக 2008-2012 வரையான பதிவுகள். அப்போதுதான் இவரின் உண்மையான முகம் தெரிய வரும்.

இவரது பழைய பதிவுகளை எடுத்து மீளப் போட்டு இவரை பெரியாள் ஆக்க வேண்டிய அவசியம் இல்லை இது ஒரு வெற்று வேட்டு. இதுகளை கருத்து எழுதி பெரியாள் ஆக்காமல் இருந்தால் காணும். விட்டா புலிகள் இயக்கத்தை ஆரம்பித்தவரே இவர் தான் சொல்லுவார்.  பூனை இலைச்சா எலிக்கு கொண்டாட்டம் இங்கை புலி இளைச்சது பல நரிகளுக்கு கொண்டாட்டமாக போய் விட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கர்ணணின் செஞ்சோற்றுக்கடனிற்கும் இங்கு செய்யப்படும் தண்ணி கடனுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது புங்கை.

எனக்குச் சில 'குழப்பங்கள்' உண்டு சாந்தி! உங்களைப்போல ஆக்கள் தான் தீர்த்து வைக்க வேணும்!

:icon_idea:

திருதராட்டினன் பிறப்பால் குருடன் என்பதனால், அவனது ஆட்சியுரிமை பாண்டுவுக்குப் போனது 'நியாயம்' !

 

ஆனால் பாண்டுவுக்குப் பிறகு, அந்த உரிமை, திருதராட்டினனின் மகனான ;துரியோதனனுக்குப்' போக வேண்டியது தானே 'நியாயம்'? :o

Link to comment
Share on other sites

அது ஒரு நாள் என்றாலும் போராடியவன் சொல்ல வேண்டிய கருத்து. 


போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்தவர்கள் தேசிய மேளம் அடிக்கின்றார்கள் .இன்னும் பிழைப்புக்காக

போராடப்போனவனுக்கு தான் தெரியும் தோல்வியின்  வலி .

அது ஒரு நாள் என்றாலும் போராடியவன் சொல்ல வேண்டிய கருத்து. உங்களுக்கு அந்த அருகதை இல்லை .

Link to comment
Share on other sites

முதலில் பிறந்தது தர்மன் என்கிறார்களே?!  :o

Link to comment
Share on other sites

தமிழர்களுக்குள் தமிழர்கள் போட்டுத்தள்ளியபடியால்தான் தமிழர்கள் போராட்டம் பயங்கராவாதமானது. அதையே இப்போது தமிழர்கள் பேசிக்கொள்கின்றார்கள். சிங்களம் செய்த படுகொலைகள் அனைத்தும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கானது என்பதே. ஒரு வகையில் சிங்களத் தமிழ் போட்டுத் தள்ளல்கள் பயங்கரவாதம் என்ற நேர்கோட்டில் சந்திக்கின்றது. இதில் சிங்களவருக்கே வெற்றி.

 

என்னுமொரு பக்கம் இவற்றுக்கு அப்பால் எண்ணற்ற போராளிகளின் தியாகங்கள், மக்களின் மரணங்கள் வலிகள் என பேசுவதற்கு ஏராளமான விசயங்கள் இருக்கின்றது.

 

ஏன் போட்டுத்தள்ளினார்கள் ? அதற்கான மனநிலை எங்கிருந்து வருகின்றது? இது ஒரு தனிமனிதனின் குற்றம் இல்லை மாறாக சாதி மத வர்க்க பிரதேசவாத பேதம் நிறைந்து திருத்தம் பெற முடியாத ஒரு காட்டுமிராண்டிச் சமுதாயத்தில் ஒரு போராட்டம் என்னும் போது இவைகள் சாதராண விசயங்களாக எதிர்பாரக்கப்படவேண்டியவை. இத்தகைய சமுதாயங்களில் போராட்டத் தோல்வி என்பது சர்வசாதராணமாக எதிர்பாக்கவேண்டிய விசயங்கள். இவைகள் தான் தாமதமாக எமக்குப் புரிகின்றது.

 

இங்கே சில விசயங்கள் எழுதப்பட்டஉடன் சிலருக்கு ஆதங்கம் சிலருக்கு கோபம் என பல உணர்வுகள் வெளிப்படுகின்றது. ஆனால் கொலைகள் அனைத்தும் தமிழர் பூமியில் அழிக்கமுடியாத பதிவுகள். அவற்றைப் பூசி மொழுகுவதற்கோ இல்லை நியாயப்படுத்துவதற்கோ எதுவும் இல்லை காரணம் அதற்கான தீர்ப்பு பயங்கரவாதம் அதற்கான தண்டனை முள்ளிவாய்க்கால். எல்லாம் முடிந்துவிட்டது.

 

கொலைகள் தீர்ப்புகள் தண்டனைகள் அனைத்தும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு முடிந்த முடிவுகள். ஆனால் தொடக்கம் ஒன்று உள்ளது அதுவானது "ஏன் இந்தக் கொலைகள்? இதன் அடிப்படை சமூகப் பின்னணி உளவியல் என்ன? எங்கே பிரச்சனை இருக்கின்றது?" இவற்றை தேடவேண்டிய அவசியம் தொடரச்சியாக உள்ளது. ஆனால் இதில் கேள்வி கேட்பவரும் பதில் அளிப்பவரும் இக்கேள்விகளை பின்னணியாகக் கொண்டு இவற்றைச் செய்யவில்லை என்பது துரதிஸ்டம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரமணன்.. இவர்களால் இந்த உலகில் எதுவும் ஆகப்போவதில்லை. இணையத்தில்.. பேஸ்புக்கில் ஆயிரம் குப்பைகள் கொட்டிக்கிடங்கின்றன. அவற்றில் ஒன்றாக இதுவும் கிடக்கும்.

 

இன்றைய பிரச்சனைகளையும்.. அதில் இருந்தான... மக்களின் விடிவு நோக்கியுமே ஒரு உண்மையான போராளி சிந்திப்பான்.

 

இன்று உலக அரங்கில் எம்மினம்.. எதிரியின் இராஜதந்திர நகர்வுகளோடு போராட வேண்டிய இத்தருணத்தில்.. சில விசமத்தனமான விளம்பரம் தேடிகளின் பால் கவனத்தைச் செலுத்தி அவர்களின் துர்நாற்றம் பிடித்த குப்பைகளை மணக்கச் செய்வதால் என்ன பயன்..???!

 

நன்றி..! இத்தோடு இத்தலைப்பில் இருந்தும் விடைபெறுகின்றோம். உண்மையில்.. இது ஒரு அநாவசியமான  தலைப்பு. :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.