Jump to content

மறந்த குருவிகளும் பறந்த பெயர்களும் .


Recommended Posts

வணக்கம் கள உறவுகளே ! வாசகர்களே !

ஓர் போட்டிக் குறுந்தொடர் ஊடாக உங்களைத் தொடுகின்றேன் . எமது வாழ்வில் பாதியை புலத்தில் துலைத்து நிற்கின்ற நாங்கள் , எமது அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்து தாயகத்து வான்வெளிகளில் சுதந்திரமாகப் பறந்த பல குருவிகளது பெயர்கள் பலதை எமது ஞாபகத்தில் தொலைத்து நிற்கின்றோம் . போனவருடம் நான் தாயகம் சென்ற பொழுது எனது அண்ணையின் உதவியுடன் ஒரு சில குருவிகளை அடையாளம் காணமுடிந்தது . ஆயினும் பல குருவிகளைக் காண முடியவில்லை என அறிந்து வேதனையடைந்தேன் . மேலும் இந்தக் குருவிகளுக்கு சங்க இலக்கியங்களில் சுத்தமான தூய தமிழ் பெயர்கள் இருந்ததையும் அண்ணை தந்த புத்தகம் மூலம் அறிந்து கொண்டேன் .எனது சிற்றறிவின் தேடல்களை உங்களுக்குத் தருகின்றேன் . இந்தக் குருவிகள் பல ஊர்களில் பலவகையான பெயர்களில் அழைக்கப்படுகின்றன .

போட்டி விபரம்:

நான் ஒரு குருவியின் படத்தைப் போடுவேன் . நீங்கள் அந்தக் குருவிக்கன தூய தமிழ்ச் சொல்லைத் தரவேண்டும் . சரியான தூய தமிழ்ப் பெயரைத் தருபவருக்கு என்னால் ஓர் சிறப்புப் பரிசு தரப்படும் . யாரும் அதற்கான பெயரைச் சொல்லாதுவிட்டால் 48 மணித்தியாலாங்களின் பின்பு நான் போட்ட குருவிப் படத்திற்கான சரியான தூயதமிழ் பெயரை அறிவிக்கின்றேன் . எங்கே மறந்த குருவிகள் என் கையில் , பறந்த பெயர்கள் உங்கள் கையில் ..............

நேசமுடன் கோமகன்

**********************************************************************************

01 செம்பூழ் ( செம்பகம் , செம்போத்து )

coucal.jpg

Link to comment
Share on other sites

  • Replies 445
  • Created
  • Last Reply

செண்பகம் :rolleyes:

மிக்க நன்றிகள் தமிழினி . மற்றவர்களது பதிலையும் பார்து ஒரு முடிவிற்கு வருவோம் . எதுவும் 48 மணித்தியாலும் சென்றுதான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செம்பகம் :rolleyes:

** Reason for edit: எழுத்துப்பிழை

ஏன் "செண்பகம்" என்று எழுதக்கூடாதோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் செம்பகம் தான் சரியென்று :) கண பேர் பதிலை சரியாகச் சொன்னால் பரிசை யாருக்கு கொடுப்பீர்கள் கோ :lol::D

Link to comment
Share on other sites

கிருபன் அண்ணா, செண்பகம் என்றால் கூகிள் ஆண்டவரின் தரவுப்படி பூ என்று வருகின்றது. :)

என்னைப்பொறுத்தவரை செண்பகம் தான் சரி என நினைக்கின்றேன்.

செண்பகம் தான் தமிழீழ தேசியப்பறவை என்பதை இன்று தான் அறிந்துகொண்டேன்.

நன்றி கோ அண்ணா.

Link to comment
Share on other sites

செண்பகம்

மயிர்க்கொட்டியை (மசுக்குட்டி) தேடித் தேடிச் சாப்பிட்டு ஒருவிதமான அடைத்த குரலில் கத்தும் பறவை. ஊரில் மட்டுமே கண்டு இருக்கின்றேன்

Link to comment
Share on other sites

நான் நினைக்கிறேன் செம்பகம் தான் சரியென்று :) கண பேர் பதிலை சரியாகச் சொன்னால் பரிசை யாருக்கு கொடுப்பீர்கள் கோ :lol::D

ஏன் அவதிப்படுகிறியள் அங்கை ? ஜஸ்ற் 48 அவேர்ஸ் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் அண்ணா, செண்பகம் என்றால் கூகிள் ஆண்டவரின் தரவுப்படி பூ என்று வருகின்றது. :)

என்னைப்பொறுத்தவரை செண்பகம் தான் சரி என நினைக்கின்றேன்.

செண்பகம் தான் தமிழீழ தேசியப்பறவை என்பதை இன்று தான் அறிந்துகொண்டேன்.

நன்றி கோ அண்ணா.

ஊரில் செம்பகம் எனத் தான் கூப்பிட கேள்விப்பட்டு உள்ளேன்...இந்தப் பறவை வீட்டுக்கு வந்தால் காசு வருமாம் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் அண்ணா, செண்பகம் என்றால் கூகிள் ஆண்டவரின் தரவுப்படி பூ என்று வருகின்றது. :)

சென்னைப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரகராதியில் இப்படி உள்ளது!

செண்பகம் 1 ceṇpakam,

n. <campaka.

Champak, 1. tr., Michelia champaca;

வண்டுணாமலர். பெருஞ் செண்பகமும் பிண்டியும் பிரம்பும் பெருங்.உஞ்சைக்.50, 25).

செண்பகம் 2 ceṇpakam,

n. Crow pheasant.

See செம்போத்து.

செம்பகம் cempakam,

n. <campaka.

See செண்பகம்1. Colloq.

.

செம்போத்து cem-pōttu,

n. <id. +. [K. cempōta, M. cempōttu.]

Crow pheasant, Centropus rufipennis ;

ஒருவகைப் பறவை. (பிங்.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செம்பகம்

Link to comment
Share on other sites

செம்பகம்.

தோட்டங்களுக்கு கண்டகண்ட மருந்துகள் அடிக்க தொடங்க செண்பகமும் புழுணியும் எம்மண்ணில் இருந்து அருகி விட்டது .

Link to comment
Share on other sites

செண்பகம்

மயிர்க்கொட்டியை (மசுக்குட்டி) தேடித் தேடிச் சாப்பிட்டு ஒருவிதமான அடைத்த குரலில் கத்தும் பறவை. ஊரில் மட்டுமே கண்டு இருக்கின்றேன்

மிக்க நன்றிகள் நிழலி உங்கள் கருத்திற்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செண்பகம் _ பூ

செம்பகம் _ பறவை

http://www.youtube.com/watch?v=S6RuNwsRJEU

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செம்பகம் இப்போ ஊரில் இல்லாது போய்டா...இப்படித் தான் தம்பளப் பூச்சி பற்றி அறிய ஆவலில் தேடினால் அதுவும் சுனாமிக்கு பின் இல்லாமல் போய்ட்டாம்.

Link to comment
Share on other sites

குருவிக் கூட்டிற்கு வந்து கருத்துக்களை எழுதிய கிருபன் , புத்தன் , அர்ஜுன் , புத்தன் , குளக்காட்டான் , சுபேஸ் நுணாவிலான் , யாயினி ஆகியோருக்கு மிக்க நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பளப்பூச்சி சிகப்பாக மிருதுவாக குட்டியாய் மினுக் மினுக்கென இருக்கும் கடந்த தை மாதம் தாயகம் சென்றிருந்தபோது பனங்கிழங்கு கிண்டினேன் அப்போது அம்பிட்டுது. இப்போது தாயக மண்ணில் இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செந்நிற .........காகம் ..............>...........செங் காகம் .........மருவி ........நாளடைவில் .....செம்பகம் ..ஆனது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பளப்பூச்சி சிகப்பாக மிருதுவாக குட்டியாய் மினுக் மினுக்கென இருக்கும் கடந்த தை மாதம் தாயகம் சென்றிருந்தபோது பனங்கிழங்கு கிண்டினேன் அப்போது அம்பிட்டுது. இப்போது தாயக மண்ணில் இருக்கு.

ஓ இப்பவும் தம்பளப் பூச்சி இருக்கா..ஒரு படமாவது கண்டு பிடிச்சு எடுத்துடனும் என்று தேடிய இடத்தில் தான் அந்த பூச்சி இனம் அருகி விட்டது என்ற தகவலை ஒரு வலைப்பகுதியில் போட்டு இருந்தார்கள்....உங்கள் கருத்து பகிர்வுக்கு மிக்க நன்றிகள் எழுஞாயிறு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
post-6449-0-31144800-1338710983_thumb.jp
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பூச்சிவகைகள், மழைக்காலத்தில் வரும்போது, இதைச் சிவபெருமானின் வெத்திலைத் துப்பல், என வயதானவர்கள் கூறுவதுண்டு, எழு ஞாயிறு!

நீங்கள் சொல்வது, இதைத் தானே?

Velvet-Mite-1.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படங்கள் இணைத்தமக்கு மிக்க நன்றிகள் எழுஞாயிறு மற்றும் புங்கையூரன் அண்ணா..:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பூச்சிவகைகள், மழைக்காலத்தில் வரும்போது, இதைச் சிவபெருமானின் வெத்திலைத் துப்பல், என வயதானவர்கள் கூறுவதுண்டு,

நானும்... கம்பளிப் பூச்சியை, சிவபெருமானின் வெத்திலைத் துப்பல் எனச் சொல்லக் கேள்விப்பட்டுள்ளேன். :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.