Jump to content

முகநூலில் ரசித்தவை


Recommended Posts

  • Replies 178
  • Created
  • Last Reply
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைக்குரல் வழிந்தோடும் சிம்பொணி எனும் ஆக்கத்தில் வரும் சில தரவுகள் தளம்பல் நிலையானவை. இக்கட்டுரையாளர் சுவாரஸ்சியத்துக்காக சிலவேளை தகவல்கள் தவறாக இருப்பதை கண்டுகொள்ளவில்லையோ எனத்தோன்றுகிறது.

 

ஜேன் சிபலியஸ் என்பவர் பிறந்தது பின்லாந்தின் தலைநகரம் ஹெல்சின்கியிலிருந்து இருநூறு கிலோமீற்றர்கள் தொலை தூரத்திலுள்ள "ஹமென்லின்னா" எனுமிடத்தில்.

 

இவர் சுவீஸ் பின்லாந்திய அடிப்படைக்கலபின, கொஞ்சம் வசதியான குடும்பத்தில் பிறந்தவர்.

 

அப்போதைய இம்பீரியர் அலெஸ்க்சாண்டர் யூனிவர்சிற்ரி ஆஃப் பின்லான்டில்  (Imperial Alexander university of Finland  தற்போதைய ஹெல்சிங்கிப் பல்கலைக்கழத்தில்) உயர்கல்வி படித்தபின்பு, ஆயிரத்துஎண்ணூறு ஐம்பதுகளில் உலகின் புகழ்பெற்ற ஜேர்மனிய இசைமேதையாகிய அல்பேர்ட் பார்க்கர் என்பவருடன் பேர்லினிலும் விஜன்னாவிலும் படித்துள்ளார்.

 

இவர் ஏழிற்கு மேற்பட்ட சிம்பொணிகளை இவர் உருவாக்கிய்ள்ளார்

 

இவரது பெயரில் சர்வதேச வயலின் இசைப்போட்டி ஒன்று நடைபெற்வருகின்றது. தவிர ஹெல்சின்கிப் பல்கலைக்கழகத்தின் இசைப்பிரிவுக்கு சிபலியஸ் அக்கடமி எனும் பெயரிலேயே அமையப்பெற்றிருக்கின்றது.

 

இவரது சிம்பொணி இசைத்தட்டுக்களது காப்புரிமைமூலம் கிடைக்கும் வருடவருமானம் இலட்சக்கணக்கான யூரோக்களாகும்.

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டில் இருந்த ஒரு பழைய ஆட்டுக்கல்லை வெளியே முற்றத்தில் வைத்திருந்தார்கள். போதாகுறைக்கு சைக்கிள் காண்டிலில் வழமையாக போடப்பட்டிருக்கும் ரப்பர் கைபிடியும் இருக்கவில்லை. நான் ஏற தாள இதேவயதில் இருந்தபோது இதே கன்சப்டில் அதுவும் செல்வ் ஷ்டடி ஆக சைக்கிள் ஓட பழகியபோது ஆட்டுக்கல்லில் மோதி காண்டில் பார் நெற்றியை குத்தி கிழித்ததில் வீட்டில் ஒரே ரகளை. அதை மறக்க முடியாது. ஆனா பழகிட்டமெல்ல.

Link to comment
Share on other sites

  • 1 month later...

சைக்கிள் வாழ்வியலைக் கற்றுத்தந்தது...

 

வெறிச்சோடிய 

தெருக்களில் 

படுத்திருந்த 

நாய்களுக்கு 

திகில் கொடுத்து

கெந்திக் கெந்தி

பலன்ஸ் பிடிக்கக்

கற்றுத் தந்த

அப்பாவின்

சைக்கிளும்..  

 

ஆர்வம்  நிரம்பிய

ஏகாந்தப் பொழுதுகளில்

காதோடு 

காற்று உரச 

மனதோடு

வேகம் அள்ளிப்பிடிக்க 

அருகிலிருந்து

தான் விழுந்த போதும் 

என்னை விழவிடாமல்

தாங்கிப்பிடித்து  

ஓடி ஓடியே 

சொல்லித் தந்த

அப்பாவும்..  

 

பார்த்துப் பார்த்து

மகிழும்படியான

வாழ்வினை

இதயம் இயங்க மறுத்த 

ஒருநாள்

அப்பா  

விட்டுச் சென்ற போதும் 

பின் நாட்களில் 

வெயிலும்

மழையும்  

இருட்டுமாக

அப்பொழுதெல்லாம்

சைக்கிள்  

வாழ்வியலைக்

கற்றுத்தந்தது...

 

இப்பவும்

தனியாகக்

கைவிடப்பட்ட   

ஒரு சைக்கிளை

பார்க்கும்போது  

பனியைத் தூவி

அந்தரத்தில் மிதந்த 

பழைய நினைவுகளை

இழுத்து எடுத்து  

அந்தப் பொழுதிற்கு

உயிர் கொடுக்குது 

அப்பா

தாங்கிப்பிடித்த 

நினைவுகளும் 

சைக்கிளும். 

 

 

நாவுக் அரசன் 

ஒஸ்லோ 25.10.14

 

 

10606289_10204725512678903_6372576705399

 

 

1614062_628336627244112_2862959021417443

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
T. இராஜெந்தரை ஏளனம் செய்யும் அனைவரும் கட்டாயம் பாருங்கள் இந்த காணொளியை இந்த வார Super Singer ல் அவர் காட்டிய திறமையை.
Link to comment
Share on other sites

தானும் உண்டு மீன்களுக்கும் உணவை பகிரும் அன்னம்

 

https://www.facebook.com/video/video.php?v=4932497509992

Link to comment
Share on other sites

அடுப்படியில் அக்கினியுடன் போராடி குடும்பத்துக்கு ஆகாரம் மூன்று நேரம் சமைக்கும், தீபாவளிக்கு பட்டாச்சு வெடிக்கவிடாமல் பூந்திரி மத்தாப்பு வேண்டிக்கொடுத்து, " அம்குழை, நெடுநிலை யாஅம் ஒற்றி, நனைகவுள் படிஞிமிறு கடியும் ... " என்று பெண்களை பூவிலும் மென்மையானவர்கள் எண்டு சங்கத்தில் எழுதியவர்களின் கனவை அவர்கள் அங்கத்தில் வைத்துப் பெண்களை அதிகம் ஜோசிக்கவிடாமல் சொப்பன சுந்தரிகள் போல வாழ விதிக்கப்பட்ட நாட்டில், ஒரு குடும்பப்பெண் இந்தியாவின் அதிவேக ,அதிதூரம் போய் இலகுகளை தாக்கும் அக்கினி-V என்ற ஏவுகணையை வடிவமைத்து சாதனை செய்துள்ளார் டாக்டர் தெஸ்சி தாமஸ்.

 

பொதுவாக பெண்கள் போக விரும்பாத துறை என்யினியரிங் என்ற பொறியியல்,,அதிலும் ரொக்கட் என்யினியரிங் அதிகம் பெண்கள் கனவிலையும் நினைக்க மாட்டார்கள். ஆனால் அந்த துறையை சவாலாக எடுத்துப் படித்து அதில சயன்டிஸ் என்ற அளவுக்கு வந்து இந்திய ஏவுகணை திட்டத்தின் தலைமை விஞ்ஞானியா இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் ஏவுகணைத் திட்டங்கள் பெரும்பாலானவற்றில் தலைமைப் பொறுப்பில் இருந்திருக்கிறார் டாக்டர் தெஸ்சி தாமஸ்.

 

டெய்சி கேரளாவில் ,துணி வியாபாரம் செய்யும் அப்பாவுக்கும், சாதாரண குடும்ப பெண் போல குடும்பத்தை நிர்வகித்த அம்மாவுக்கும் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ கும்பத்தில் பிறந்த பெண் .அவரின் பெற்றோர்கள் கல்கத்தாவில் இருந்து ஏழைகளுக்கு சேவை செய்த அன்னை தெரேசாவின் கிருஸ்தவ சபையில் பற்று உள்ளதால்,அன்னை திரேசாவின் நினைவாக பிறந்தவுடன் தெஸ்ஸி என்று பெயர் வைத்து இருக்கிறார்கள்,

 

ஆனால் தெஸ்ஸி உயர் படிப்புக்கு தேர்ந்தெடுத்தது அன்னை திரேசா நம்பிய கருணைக்குப் பதிலாக ரொக்கட் என்யினியரின்,,அதுக்கு காரணம் சின்ன வயசிலேயே தெஸ்ஸியின் வீட்டுக்கு அருகில் ஒரு ராணுவ பரிசோதனை ரொக்கட் ஏவு தளம் இருந்ததுவே காரணம், அதன் பாதிப்பில் பிற்காலத்தில் ரொக்கெட் என்யினியராக வரவேண்டும் எண்டு பெற்றோரிடம் சொல்ல அவர்கள் உற்சாகம் கொடுத்து இருக்கிறார்கள்.

 

தெஸ்ஸி என்யினியரின் Bsc பட்டப்படிப்பு முடிய, ராணுவ தளபாட உற்பத்தி இல் M tech மாஸ்டர் என்யினியரின் பட்டப் படிப்பு முடிய ரொக்கட் தொழில்நுட்பத்தில் என்யினியரின் Phd டாக்டர் பட்டம் படிக்கும் போது இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தினால் உள்வாங்கப்பட்டார். அதன் பின் முக்கியமான மூன்று நீண்ட தூரம் பாயும் ஏவுகணைகள் வடிவமைக்கும் பொறுப்பு இவரிடம் கொடுக்கப்பட்டுள்ளது,

 

வீட்டில் கடற்படையில் வேலை செய்யும் கணவனுடனும்,ஒரு ஆண் குழந்தையுடனும் குடும்பப்பெண்ணாக இருந்துகொண்டு , வேலையில் விஞ்ஞானியாகவும் இருந்துகொண்டு ,மிகவும் கச்சிதமா வடிவமைத்த ஏவுகணைகள், பரிசோதிக்க ஏவிய ஒவ்வொரு முறையும் அவை குறி பிசகாமல் அதன் இலக்குகளை தாக்கியும் இருக்கு டாக்டர் தெஸ்சி தாமஸ் இன் ரோக்கெட் டெக்னோலோயி..

ஒரிசாவில் இருந்து ஏவப்பட்ட 3000 கிலோமீட்டர் வரை சென்று தாக்கும் அக்னி -III வங்காள விரிகுடாவில் வைத்த ஒரு இலக்கை குறி தவறாமல் laser gyro-based inertial navigation system (RINS) என்ற வழிநடத்தலில் சென்று தாக்கி இருக்கு . அதன் பிறகு அக்னி-IV அக்னி-V (5000 கிலோமீட்டர் வரை micro-navigation system (MINGS இல் சென்று தாக்கும் ஏவுகணைகளை வடிவமைத்ததிலும் உருவாக்கியதிலும் பெரும்பங்கு வகித்திருக்கிறார்.

 

இவைகள் 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில்வெற்றிகரமாக பரிசோதனை செய்து பார்க்கப் பட்டன. அக்னி-V 1000 கிலோ எடையுள்ள அனுஆயுதத்தை 5000 கிலோமீட்டர் வரை தோட்டாவின் வேகத்தில் கொண்டு செல்லும் சக்தி கொண்டவை. அக்னி-V ஏவுகணை ஒரு சிறிய துணைக்கோளையும் (satellite) வின்வெளியில் ஏவும் திறனும் எதிரிகளின் துணைக்கோள்களை அழிக்கும் திறனும் கொண்டது. அதனால் " இந்தியாவின் அக்கினி புத்திரி " எண்டு சொன்னார் அப்போது இந்திய பிரதமரா இருந்த டாக்டர் மன் மோகன் சிங்...

இந்தியாவின் அறிவியல் சொத்து, புதுமைப் பெண்ணினத்தின் பெருமை. சாதனை செய்யத் துடிக்கும் பெண்களுக்கு வழிகாட்டி. உண்மையான ரோக்கெட் சயன்ஸ் ஹீரோயின்டாக்டர் தெஸ்சி தாமஸ் . இந்தியா அண்மையில் செவ்வாய்க் கிரகத்தை சுற்ற அனுப்பிய சட்லைட் இன் வடிவமைப்பு,அதை ஏவிய தொழில்நுட்ப விடயங்களிலும் மற்ற இரண்டு பெண் பிசிக்ஸ் விஞ்ஞானிகளுடன் சேர்ந்து செயற்பட்டுள்ளா .

 

சினிமாவில் இடுப்பை நெளிக்கும் ஹீரோயின்களுக்குக் கோவில் கட்டி அதுக்கு கும்பாவிசேகம் செய்து அந்த நடிகைக்கு ரசிகர் மன்றம் அமைத்து நடிகையின் பிறந்தநாளுக்கு கடமை உணர்ச்சியோடு விரதம் இருக்கும் மகாஜனங்கள் பெருவாரியாக உள்ள ஒரு நாட்டில் இந்த ஹீரோயினைப் பற்றியும் அந்த மக்கள் தெரிந்து கொள்ளட்டுமே என்ற ஆசைதான் இதை எழுதத் தூண்டியது...

நாவுக் அரசன் 

ஒஸ்லோ 12.11.14.

10469916_10204860825381636_3138838788568
 

 

Link to comment
Share on other sites

மஞ்சுள வெடிவர்த்தன.(கீழே படத்தில் உள்ளவர்) தமிழ் பத்திரிகையாளர் நிர்மலராஜன் படுகொலை செய்யப்பட்டது பற்றி சிங்களத்தில் எழுதிய கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு கீழே உள்ள கவிதை.. பராக்கிரம கொடித்துவக்கு என்ற சிங்களவருக்கு பிறகு அருமையா சிங்களத்தில் எளிமையா எழுதும் மஞ்சுள அட்டகாசமான கவிஞ்சர்.

 

மார்க்சிஸ்ட் கொள்கைப்பிடிப்பு உள்ள மஞ்சுள, சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க மண்டையில் போடப்பட்டபின் பயத்தில் இலங்கையை விட்டு தப்பி ஓடி அரசியல் அகதியா வாழும் அவர் ஒரு பத்திரிகையாளர் ,கவிஞ்சர்,நடிகர்.அவரின் கவிதைகள் ஆங்கிலத்தில் வாசித்தபோது நிறையவே அவரின் கவிதைமொழி உத்தி ஜோசிக்க வைத்தது எப்படி இவர் சிம்பிளா மிகப்பெரிய விசியங்களை நாலு வரியில் சொல்லி மூஞ்சையில் அறைய வைக்க முடிகிறது என்று மண்டைக்குள்ள அதிர்ச்சியா இருந்தது . மிக மிக எளிமையா எழுதுற ஒருவர் மஞ்சுள. அவர் கவிதை வாசித்தா குறஞ்சது எல்லாருக்குமே ஒரு சின்ன எறும்பு கடிச்ச அளவு உணர்ச்சியாவது நரம்பில பாயும் ..இல்லாட்டி அவர்கள் சொரணை நரம்பு செத்துப்போன ஜென்மங்கள்..,,

 

988417_10204906115433859_347937065782269

 

 

My pen

Hasn’t a voice

My voice

Has no wings

Birds with a voice

Never sing

They only chatter

And

Birds with wings never fly

The year

Just Passed like a day..

If you could sing

Thousands of songs

If you could fly

To a far distant place

The year

Just passed like a day

And next

Is a New

Day?

My pen

Hasn’t a voice

Nimalarajan

My voice

Has no wings....

 
 
 
 

நாவுக் அரசன் 

ஒஸ்லோ 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 4 weeks later...
10380890_768186823231314_437536646543060

1505254_768186846564645_1122871463161305

 

இந்திய விடுதலைப் போராட்டம் உச்சகட்டத்தில் நடந்து கொண்டிருந்த சமயம், 1940களில் ஒரு வடமாநில இளைஞன் ஆங்கிலேய நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறான்.
 
சுதந்திரம் கேட்டுப் போராடினாயா" நீதிபதி கேட்கிறார். "இல்லை நான் போராடவில்லை...என்னை விட்டுவிடுங்கள் " என்று சொன்னவன் அத்தோடு நிற்கவில்லை.. இவர்கள்தான் போராடினார்கள் என்று போராளிகளையும் காட்டிக்கொடுக்கிறார்!
 
அதே காலகட்டத்தில் தெற்கே தமிழகத்தில் விடுதலைப் போரில் பங்கேற்ற ஒரு இளைஞனை காவல்துறை கைது செய்கிறது! 
சிறையில் வைத்து சித்ரவதை செய்கிறார்கள். எத்தனையோ கொடுமைகளுக்குப் பிறகும் அவனிடமிருந்து எதையும் பெற முடியவில்லை. போராளிகள் ஒருவரைக்கூட அவன் காட்டிக்கொடுக்கவில்லை!
 
கோபத்தின் உச்சத்தில் அதிகாரி ஒருவன் அந்த இளைஞனின் மீசையை தன் கையிலிருந்த சிகெரெட்டால் சுட்டுக் கருக்குகிறான். அந்த இளைஞனின் நெஞ்சுறுதியை குலைக்க முடியவில்லை. 
தண்டனை வாங்கிக் கொண்டு, விடுதலை கனல் நெஞ்சில் எறிய சிறை புகுகிறான் அந்த இளைஞன்!
 
நாடு விடுதலை அடைகிறது...!
 
50 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தமண்ணில் தேர்தல் நடக்கிறது. அன்று காட்டிக் கொடுத்த அந்த வடநாட்டு இளைஞன் இந்தியாவின் பிரதமர் ஆகிறார். சித்ரவதைகளை அனுபவித்து சிறைவாசம் கண்ட தமிழ்நாட்டு இளைஞன் ஒரு சாதாரண சின்னப் பையனிடம் தேர்தலில் தோற்றுப் போகிறான்!
 
அந்த வடநாட்டு இளைஞன் வாழ்வின் எல்லா வசதிகளையும் அனுபவிக்கிறான். இவனோ, துறவி போல மக்கள் நல அரசியலை முன்னெடுத்துப் போராடுகிறான்.
 
அவன், ஒரு குறிப்பிட்ட வயதோடு அரசியல் போதும் என்று ஓய்வெடுத்துக் கொள்ளப் போகிறான். இவனோ, மரணிக்கும் வரையும் ஓய்வு கிடையாது என்று சொல்லி, மண்ணின் வளம் கொள்ளை போவதையும், நதிகளை மீட்கவும் காலம் பார்க்காமல் உழைக்கிறான்!
 
90 வயது முடியும் போது, ஓய்வில் இருக்கும் அந்த வடநாட்டு இளைஞனுக்கு "பாரத ரத்னா" விருது கிடைக்கிறது! இந்த தமிழ்நாட்டு இளைஞனுக்கு பிழைக்கத் தெரியாதவன் என்னும் பழிச்சொல் பரிசாகக் கிடைக்கிறது!
 
இதுதான் இந்தியாவின் அரசியல்! தர்மம் வெல்லும்... உண்மை வெல்லும் என்று சொல்வதெல்லாம் நமது அரசியலுக்குப் பொருந்தாது என்கிற எண்ணமே மேலோங்குகிறது!
 
1924 டிசம்பர் 25ஆம் நாள் பிறந்தவர் அந்த வடநாட்டு இளைஞர். 1925 டிசம்பர் 25ஆம் நாள் பிறந்தவர் இந்தத் தென்னாட்டு இளைஞர்.
 
அவர் அடல் பிகாரி வாஜ்பேயி. 
இவர் அருமை அய்யா நல்லகண்ணு!!!
 
அன்று அவர் தேசத் துரோகி, இவர் விடுதலைப் போராட்ட தியாகி. 
இன்று அவர் தேசபக்தர்... இவர் தேச விரோதி!!!
 
    பாரத் மாதாகி ஜே!!!    
 
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் 
தீரா இடும்பை தரும்.
 
////தியாகங்களை மதிக்கத் தெரியாத தேசம் அல்லலுறும்... அழிந்து போகும்//////
Link to comment
Share on other sites

நேற்று கிண்டி ’சில்ரன்ஸ் பார்க்” குக்கு குடும்பத்துடன் போயிருந்தோம்.

அங்கே ஒரு விளையாட்டு .

 

ஒட்டு வீட்டின் கூரை மாதிரி "A" வடிவ அமைப்பு அது.

 

அந்த பரந்த பெரிய வடிவ A யின் சட்டங்கள் உறுதியான கம்பிகளால் செய்யப்படிருந்தன.குறுக்கும் நெடுக்கும் செவ்வகமாக கயிறுகள் சட்டத்தில் அங்கேயும் இங்கேயும் ஒடின.

 

கயிற்றில் கால்வைத்து A வின் முனையைத் தாண்டி, இந்தப் பக்கமாக இறங்கி வரவேண்டும்.

 

பாதி குழந்தைகள் இதை எளிதாக விளையாண்டாலும் பாதி குழந்தைகள் திணறின.பல பெண் குழந்தைகள் அதை விளையாடாமல் போனதும் அதை அவர்கள் பெற்றோர்கள் கண்டுகொள்ளாததும் நம் சமூகத்தை பிரதிபலிப்பதாக இருந்தது.

எங்கள் வீட்டுப் பிள்ளை A வின் மேலே வரை ஏறிவிட்டாள்.இந்த முனையிலிருந்து அடுத்த முனைக்கு காலைப் போட பயம்.

 

அதற்கு ஒரு வாக்கியம் சொல்லிக் கொடுத்து கையைப் பிடித்து உதவி செய்தேன். அந்த வாக்கியம் “ரொம்ப யோசிக்காத சட்டுன்னு கால இந்தப் பக்கம் வெச்சிரு”.

அது மாதிரியே அதிகம் யோசிக்காமல் தாண்டிப்பழகி விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தாள்.

 

அப்போது அங்கே ஒரு சிறுவனும் அப்பாவும் அம்மாவும் வந்தார்கள்.அந்த சிறுவன் பதட்டம் நிறைந்தவனாக இருந்தான்.

 

ஏதோ ஒரு அதீத Anxiety பிரச்சனை அவனுக்கு இருந்திருக்க கூடும்.

அதில் ஏறுவதற்கு வந்து கொண்டிருக்கும் போதே, தூரத்திலேயே அதைப் பார்த்து பயந்திவிட்டிருக்கிறான்.அந்த பயம் காரணமாக அதில் எப்படி ஏறுவது என்று அதிகம் யோசனை செய்திருக்கிறான் என்று தெரிந்தது.

 

எதற்கு பயப்படுகிறோமோ அது பற்றி அதிகம் யோசிப்போம்தானே ( காலேஜில் முதல் செமினார்,முதலிரவு,பிரசவம் இதெல்லாம் இதற்கு உதாரணங்கள்).கிட்டே வரும் போதே அவன் உடல் சரியானதாக இல்லை.

 

காய்ச்சல் வந்தாற் போல இருந்தான்.ஆனால் ” பெரிய பையன்”. ஈகோவால் ஏற முயற்சி செய்கிறான்.

அந்தக் கயிறில் கால் எடுத்து வைத்ததுமே அவன் கால் நடுங்கி நடுக்கத்தைப் பார்க்க வேண்டுமே கிடு கிடுவென ஒரு காலிங் பெல் வைப்பிரேட் ஆவதைப் போல நடுங்கிக் கொண்டிருந்தது.

 

அவன் அப்பா அவனை “ஏறுடா ஏறு! அப்பா நானிருக்கிறேன்” என்றார்.அவனால் ஏறமுடியவில்லை.இதனால் இன்னும் அவமானப்பட்டாரோ அல்லது மனக்கஷ்டப்பட்டாரோ தெரியவில்லை திரும்ப திரும்ப அதே வாக்கியத்தை சொல்லிக் கொண்டிருந்தார்.

 

அவர் கத்த கத்த அவன் கால்கள் அதிகம் ஆடிக்கொண்டிருந்தன.எனக்கு அதைப் பார்த்து தாளவில்லை.என் கண்களில் நீர் முட்டிவிடும் போல.ஏனென்றால் அந்தச் சிறுவன் ”சிறுவயதில் உள்ள நான்தான்”.

 

நான் அப்படித்தான் இருந்தேன்.நான் அப்படி பயந்திருக்கிறேன்.

பத்மநாபபுரம் பேலஸ் படிக்கட்டில் எறுவதற்கு அஞ்சி அழுதிருக்கிறேன்.கால் எல்லாம் நடுங்கும்.மகாபலிபுரம் உச்சிக் கோவிலில் கிழே பள்ளத்தைப் பார்க்க பயந்து கோவிலை ஒட்டி பல்லி மாதிரி நின்று அழுதிருக்கிறேன்.

 

இதோ இந்தச் சிறுவன் கால்கள் நடுங்குகிறதே இதைவிட பலமடங்கு நடுங்கும். என் மகளை சுத்தமாக மறந்துவிட்டேன்.அந்தச் சிறுவனை அணைத்துக் கொள்ள வேண்டும் போல வாஞ்சை பிறந்தது.அவன் என் பக்கம் இறங்கும் போது அவனுக்கு உதவி செய்வது போல செய்தேன்.

 

அவன் என்னை நம்பினான்.நான் அவனிடம் சொன்னேன்.

”நீ ஏறும் போது இந்தக் கயிறு அசையிரதால பயமாயிருக்கோ”

“..........................”

“இதப் பாரு இது ஸ்டிராங்கான கயிறு.இது அப்படியே இருக்கும்.இதோ நான் ஏறுறேன் பாரு.நீ இப்ப மொதல் கயிறு மட்டும் ஏறிட்டு கிழ இறங்கிரு”

பையன் என்னை நம்பிவிட்டான்.சரண்டராகிவிட்டான்.முதல் கயிரு ஏறி இறங்கினான்.

“இன்னும் ரெண்டு தடவை ஏறி இறங்கு” ( இப்போது வலது கையைக் காட்டி அவன் தந்தையை அடக்கிவிட்டேன்)

உற்சாகம் கொஞ்சம் வந்தாற்போல ஏறி இறங்கினான்.

 

இன்னும் ஏறி அந்தக் கம்பிய தொடு. உயரம் ஏறி கம்பியைத் தொடும் போது கால் நடுங்கியது. நான் மேலே ஏறி அவனைப் பிடித்துக் கொண்டேன்.”இப்பப் பாரு ஒண்ணும் நடக்காது.சும்மா சுத்தி முத்திப் பாரு.நீ உயரத்துல இருக்க.ஆனா ஒண்ணுமே நடக்கல”

 

அவனை விட்டு இறங்கினேன்.அவன் உயரத்தை ரசிக்க ஆரம்பித்தான்.கால் நடுக்கம் குறைந்திருந்தது.

“கிழ இறங்கு”

இறங்கினான்.

”அப்படி ரெண்டு மூணுதடவ ஏறி இறங்கு”
ஏறி இறங்கினான்.கால் நடுக்கமே இல்லை.

”இப்ப கால அந்தப் பக்கம் போடு.அப்படி உயரமாத் தூக்கி டக்குன்னு போட்டுரனும்.அதிகம் யோசிக்க கூடாது”

இரண்டு நிமிட போராட்டத்துக்கப்புறம் காலைப் போட்டு அந்தப் பக்கம் இறங்கினான்.

தைரியம் வந்துவிட்டது.உற்சாகமாக விளையாட ஆரம்பித்து விட்டான்.

 

அவன் விளையாட ஆரம்பித்த பிறகுதான் நான் என்னையறியாமல் பயிற்சியாளராக ஆனது தெரிந்தது. 

யாருக்குதான் பயமில்லை. எல்லோரும் எதற்காவது பயந்து கொண்டேதான் இருக்கிறோம்.

 

சும்மா ஒரு மனிதனைப் பார்த்து “உன்னால் முடியும்” “நானிருக்கிறேன்” என்று சொல்லி தன்னம்பிக்கையை ஏற்றவே முடியாது.

அவனது பயத்தை,பயத்தின் காரணத்தை சின்ன சின்ன Elements ஆக உடைக்க வேண்டும். உடைத்த Elements க்கு ஆக்கப்பூர்வமான வழியை சொல்ல வேண்டும்.

அப்படியில்லாமல் வெறுமே உறுமினால் நாம் உறுமும் வெற்றுத் தன்னம்பிக்கை வாசகங்கள்,

 

மேலும் மேலும் கேட்பவரின் தன்னம்பிக்கையை சிதைக்கவே செய்யும். 

 

Vijay Bhaskarvijay

Link to comment
Share on other sites

ரஜினி என்னும் அரசியல்வாதி !

2014- ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர் ஒருவர் இணையத்தில் வெளியிட்ட கடிதத்தை உங்களுக்கு தருகிறேன்.

சூப்பர்ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு,

வணக்கம். உங்கள் ரசிகன் ஒருவன் எழுதும் கடிதம் இது. உங்களை பற்றி பேசினாலும் ஹிட். ஏசினாலும் ஹிட் என்ற கணக்கில் இந்த கடிதத்தை நான் நிச்சியமாக எழுதவில்லை.

உங்கள் படங்களை பற்றி நான் இங்கே விமர்சிக்கபோவதும் இல்லை. ஏனென்றால், ஓவர் ஆக்டிங் இல்லாமல், கதைக்கு தேவையான எதார்த்த நடிப்பை தருவதில் தமிழில் உங்களுக்கு நிகர் வேறு யாருமில்லை என்பது என் கருத்து. "ஆறிலிருந்து அறுபது வரை", "ஜானி" போன்ற படங்களில் உங்களது நடிப்பை பார்த்து வியந்து இருக்கிறேன் இல்லை இன்னமும் வியந்து கொண்டே இருக்கும் உங்கள் ரசிகன் நான். "எந்திரன்" னிலும் உங்கள் நடிப்பு அருமை.

உங்கள் அரசியல் பிரவேச அறிவிப்புகள், ஜெயலலிதா தொடங்கி ஒக்கேனக்கல் வரை நீங்கள் தந்த மாறுபட்ட அறிக்கைகள் ஆகியவற்றை பற்றியும் நான் இங்கே குறை கூற போவதில்லை. அரசியலுக்கு நீங்கள் வருவதும், வராமல் போவதும், வருவதாக கூறிக்கொண்டே இருப்பதும் உங்கள் தனிப்பட்ட முடிவு.

நான் உங்களுக்கு இந்த கடிதம் எழுவதற்க்கான மையப்புள்ளியாய் இருப்பது வேறு விஷயம். அது நான் உட்பட, தமிழ்நாட்டு பொதுமக்கள் சம்பந்தப்பட்ட விஷயம்.

ரஜினிகாந்த், இன்று தமிழ் சினிமாவில் மட்டும் அல்லாது உலக அளவிலும் உங்களின் இந்த பெயர் பிரபலம். இன்று இந்திய சினிமாவில், ஒரு படத்துக்கு அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் நீங்கள்.

ஆசியாவில், ஜாக்கிசானுக்கு அடுத்த இடத்தில் சம்பளம் வாங்கும் நடிகரும் நீங்கள்தான். தெரிந்த கணக்குபடி, உங்கள் சம்பளம் சுமார் இருபத்தி ஐந்து கோடியை தாண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி.

திரையுலகமும், ரசிகர்களும் உங்களுக்கு தந்திருக்கும் இந்த இடத்திற்கு மிகபொருத்தமானவர்தான் நீங்கள். "சூப்பர் ஸ்டார்" என்று உங்கள் இடத்தில் இன்னொருவரை வைத்து நினைத்து பார்க்ககூட எங்களால் முடியவில்லை.

என்னுடைய கேள்வி இதுதான்....நீங்கள் சினிமாவில் சம்பாதிக்கும் கோடிக்கணக்கான ருபாய் பணத்தை என்ன செய்கிறீர்கள்? சமுகத்திற்கு, தமிழ்நாட்டிற்கு உங்கள் பங்களிப்பு என்ன?

நமது நாட்டில் பிரதமரை விமர்சிக்கலாம். ஏன், கோவில் வாசல்முன்பு கூட்டம்போட்டு, 'பகுத்தறிவாளர்கள்' என்ற பெயரில் கடவுளை கூட கன்னாபின்னாவென்று பேசலாம். நான், எனக்கு பிடித்த சினிமா நடிகரான உங்களிடம் எனது கேள்வியை, சந்தேகத்தை கேட்க கூடாதா?

ஒட்டு போட்டு தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகளை போல, நான் உங்களை இப்படி கேள்வி கேட்க காரணமே ...சாட்சாத் நீங்கள்தான்.

"அன்னை தமிழ்நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா" என்று எங்களை நோக்கி கை நீட்டியவர் நீங்கள்தான்.

நீங்களே கதை,வசனம் எழுதிய "பாபா" படத்தின் இறுதிகாட்சியில்,கடவுளை விட பெரியது மக்கள்சேவைதான் என்று எங்களுக்கு அறிவுரை

சொன்னது நீங்கள்தான்.

கமல், தான் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை, அதே சினிமாவில் முதலீடு செய்கிறார். விஜயகாந்த், தான் சொன்னபடி அரசியலுக்கு வந்து செலவு செய்கிறார்.

நேற்று வந்த நடிகர் சூர்யா கூட "அகரம் அறக்கட்டளை" தொடங்கி, ஏராளமான ஏழை மாணவர்களின் கல்விசெலவுகளை எற்றுவருகிறார். அரசியல் நோக்கமாக இருந்தாலும் நடிகர் விஜய், நிறைய கம்ப்யூட்டர் சென்டர்களை தொடங்கி, இலவச பயிற்சி தருகிறார். ஏன், த்ரிஷா கூட புற்றுநோய் மருத்துவமனை, அநாதை இல்லம் என்று அவ்வபோது வலம் வருகிறார்.

ஆனால், இவர்களுக்கு எல்லாம் முன்னுதாரணமாக இருக்கவேண்டிய நீங்கள் செய்த சமுக பங்களிப்புகள் என்ன?

"நான் ஆன்மிகவாதி", "தாமரை இலை தண்ணீர் போல வாழ்பவன்", "இமயமலையை விரும்பும் பற்றில்லாதவன்" என்றும், குட்டி தத்துவ கதைகள், ரமண மகரிஷியின் எளிமை என்றெல்லாம் நீங்கள் பேசுவதற்கும், வெளிக்காட்டி கொள்வதற்கும் , யாதார்த்ததில் நீங்கள் செய்யும் காரியங்களுக்கும் இடையே அந்த 'இமயமலை' அளவுக்கு முரண் இருக்கிறேதே, அய்யா.

"இமயமலை"யை விரும்புகிறவர், வசதி அற்றவருக்கும் தரமான சேவை தரும் மருத்துவமனையோ அல்லது கல்விநிலையமோ அல்லவா நடத்தவேண்டும்?

இப்படி நான் எழுதியதிற்கு மன்னிக்கவும். அரசியலை போலவே ஆன்மிகமும் உங்கள் சொந்த விஷயம்.

ஆன்மிகத்தையே தொழிலாக வைத்திருக்கும் சாமியார்கள் எல்லாம் உத்தமர்களா என்ன?

நான், உங்களுக்கு இப்படி ஒரு கடிதம் எழுதியதின் காரணத்திற்கு வருகிறேன்.

நீங்கள் கட்டிய ஸ்ரீ ராகவேந்திரா கல்யாண மண்டபத்தின் ஒரு நாள் வாடகை...கிட்டத்தட்ட ஒரு லட்ச ருபாய். இதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் வருமானம் ஆண்டுக்கு குறைந்தபட்சம் சுமார் மூன்று கோடி ருபாய்.

1991 - இல் நீங்கள், உங்கள் மனைவி லதா அவர்களின் மூலம் "ஆசிரமம்" என்று ஒரு பள்ளியை சென்னையில் தொடங்கியபோது மிகவும் சந்தோஷம் அடைந்தேன். பெயரை பார்த்துவிட்டு,அது ஏதோ ஏழை குழந்தைகளுக்கான இலவச கல்வி நிலையம் என்று நினைத்தேன்.

அப்புறம்தான், புரிந்தது, அது, நுனி நாக்கில் I am studying in Ashram என்று பேசும் மேல்தட்டு, மேல்நடுத்தர வர்க்க பிள்ளைகள் மட்டுமே படிக்ககூடிய அல்லது படிக்க முடிந்த ஒரு பள்ளி என்று.

சென்னைவாசிகளை கேட்டால் அவர்களே சொல்வார்கள்.இன்று, சென்னையில், அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளில்...உங்களது ஆசிரமமும் மன்னிக்க ஆஸ்ரமும் ஒன்று.

TASSC (The Ashram School Specialised Curriculum) என்று மார்க்கெட்டிங் செய்து, கொள்ளைலாபம் பார்க்கும் உங்கள் பள்ளியை பற்றி இரண்டு உதாரணங்களை இங்கே உங்கள் முன்வைக்கிறேன்.

"அங்கு படித்து கொண்டுஇருந்த என் மகனை வேறு பள்ளிக்கு மாற்றிவிட்டேன். வெளியில் தெரிவதைபோல, சிறந்த கல்வி தரப்படுவதில்லை. அதே சமயம், ஆண்டுக்கு 5000 ருபாய் தொடங்கி கட்டணத்தை ஒவ்வொரு வகுப்பிலும் ஏற்றிகொண்டே செல்கிறார்கள்" என்று தெரிவித்தார் ஒரு பெண்மணி.

சென்ற வருடம் ஜூன் மாதம், complaints.india இணையதளத்தில் உங்கள் பள்ளியில் பணிபுரிந்த ஒரு ஆசிரியை "ஆஸ்ரம் பள்ளி நிர்வாகம் எங்களுக்கு ஒழுங்காகவே சம்பளம் தருவது இல்லை. திருமதி.லதா ரஜினியிடம் புகார் அளித்தும் பயனில்லை. உடனடி நடவடிக்கை எடுங்கள்" என்று வெளிப்படையாகவே புகார் தெரிவித்தது உங்களுக்கு தெரியுமா?

தலைவா என்று உங்களை அன்புடன் அழைத்து, உங்கள் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யும் ஒரு ஏழை ரசிகன், தனது வீட்டு குழந்தையை உங்கள் பள்ளியில் சேர்க்கவந்தால், நீங்கள் உருவாக்கி இருக்கும் "பிம்பங்கள்" எல்லாம் உடைந்து சுக்குநூறாக சிதறிவிடுமே சார்.

முழுவதும் இலவச கல்வி தராவிட்டாலும் பரவாயில்லை. ஒரு பத்து பணக்கார வீட்டு பிள்ளைகளை சேர்த்துகொள்ளும் உங்கள் பள்ளி நிர்வாகம், குறைந்தபட்சம் நாலு ஏழை,நடுத்தர வகுப்பு பிள்ளைகளையாவது கட்டணம் இல்லாமல் சேர்த்துகொண்டால் என்ன?

சமிபத்தில் அரசு பள்ளி கட்டண முறைகளை முறைபடுத்திய பின்புதான், புகார்களுக்கு பயந்து உங்களின் ஆஸ்ரம் போன்ற பள்ளிகளில் கட்டணம் ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் வந்து இருக்கிறது.

அடுத்தது, உங்கள் துறைக்கு வருகிறேன்.

நீங்கள் சார்ந்த சினிமாதுறை பிரச்சினைளை எப்போதாவது முன் நின்று தீர்த்து இருக்கீர்களா? அரசின் தயவை எதற்கு எடுத்தாலும் அவர்கள் நாடுவதை தடுத்து,உங்கள் சொந்த செலவில் அவர்களின் தேவைகளை எப்போதாவது நிறைவேற்றி உள்ளீர்களா?

சினிமா உங்களுக்கு தொழில். அதில் நீங்கள் பணமும், புகழும் குவிப்பது நியாயமானதே..

அதுதான், சினிமாவில் கோடிகோடியாய் சம்பாதித்து வருகிறீர்களே, பள்ளி போன்ற இன்ன பிற விஷயங்களில், சேவை மனப்பான்மையோடு செயல்பட ஏன் சார் உங்களுக்கு மனம் வரவில்லை?

"என் உடல், பொருள், ஆவியை தமிழுக்கும், தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா". - படையப்பா படத்தின் பாடல் வரிகள் நினைவில் இருக்கிறதா?

சொல்லுங்கள் சார், நீங்கள் இதுவரை தமிழுக்கு, தமிழக மக்களுக்கு என்ன கொடுத்தீர்கள் அல்லது கொடுக்க போகிறீர்கள்?

எல்லா தொழிலிலும் உங்களுக்கு சுயநல நோக்கும், லாபமும்தான் பிரதானமா?

"பாட்ஷா" படத்தில் சொன்னதுபோல, உங்கள் இதயத்தை தொட்டு பதில் சொல்லுங்கள்.

உங்கள் பதில் "ஆம்" என்றால்,

அது ஒன்றும் தவறு இல்லை. நீங்கள் அரசியல்வாதிகளை போன்று ஊழல் செய்தோ, அதிகாரிகளை போன்று லஞ்சம் வாங்கியோ சம்பாதிக்கவில்லை. இந்த வயதிலும், எந்திரன் படத்துக்கான உங்கள் உழைப்பை கண்டு வியந்தவர்கள் நாங்கள்.

ஆனால், எனது இரண்டு கோரிக்கைகளை மட்டும் உங்கள் முன்வைக்கிறேன்.

எதோ "எந்திரன்" விஞ்ஞானபடம் என்பதால் தப்பிவிட்டது. கண்டிப்பாக அடுத்துவரும் உங்கள் "ராணா" படத்தில், டைட்டில் பாடலில் தமிழ் மக்களுக்கு நீங்கள் என்னவேண்டுமானாலும் தருவீர்கள் போன்ற வரிகள் இருக்கும்.

இனி,இதுபோன்ற ,வழக்கமாக உங்கள் படங்களின் "டைட்டில்" பாடல்களில் வரும் 'வாழ வச்சது தமிழ்ப்பால்', 'அண்ணன் வந்தால் தமிழ்நாடு அமெரிக்கா' போன்ற அர்த்தமற்ற, அனாவசிய வார்த்தைகளை தவிருங்கள். வசனங்களிலும் அவ்வாறே.

மேடைகளில், வார்த்தைக்கு வார்த்தை "என்னை வாழ வைத்த தமிழ் மக்களே" என்று முழங்குவதை நிறுத்துங்கள். வேண்டுமானால்,

"என்னை வாழ வைத்த ரசிக பெருமக்களே" என்று சொல்லிக்கொள்ளுங்கள்.

தமிழ், தமிழ்நாடு, தமிழ் மக்கள் போன்ற உணர்வுபூர்வமான வார்த்தைகளை, அரசியல்வாதிகளை போலவே, உங்கள் சொந்த 'பிசினஸ்''க்கு தயவுசெய்து பயன்படுத்தாதீங்க, ரஜினி சார்.

வழக்கம்போல,"எந்திரன்" சாதனைகளை "ராணா"வில் முறியடிக்க காத்திருக்கிறோம்.

பின் குறிப்பு : Chennai , Karnataka , Dubai, Coimbatore , Singapore , Australia யில் உள்ள ரஜினி சொத்துகளின் தற்போதைய மதிப்பு சுமார் 10,000 கோடி

இப்படிக்கு,

தமிழ்நாட்டு பொதுமக்கள் சார்பாக,

உங்கள் ரசிகர்களில் ஒருவன்.

10888375_361639424008153_841557771248193
 
Arun Kumar

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
Dear Sri Lankan Sinhalese,
 
In the last few days, especially after the election result day there are two common opinions spreading across among my facebook friends circle.
 
One is largely from Mr Mahinda Rajapaksa's supporters, who now think Sri Lankan Tamils and Sri Lankan Muslims have voted out their favorite leader and LTTE has just realised its dream. Even Mr Rajapaksa echoed the same sentiment. While it may be true that the overwhelming votes of Tamil speaking people ousted Mr Rajapaksa from the top seat, one shouldn't forget that Tamil speaking people still didn't chose to boycott the election like they did in 2005 (following the instruction from LTTE) but voted for another Sri Lankan Sinhalese person Mr Sirisena. Be it a parliament election, local council election or a provincial council elections, over the last few elections Tamils shown their intent in expressing their views through democratic means. So the sickening logic of Tamils being racists or separatists is nothing but a grape sour adversity. Grow up guys. The reason why Tamil speaking people voted for Mr Sirisena is not because he brings hope. Tamil speaking people just don't have any energy to live through another Rajapaksa term. The amount of corruption, authoritarianism and family rule affected the whole country. Tamil speaking people had few more issues than that. The bullying, intimidation, attacks, forced demographic changes, state oppression, not being able to light a small lamp for their lost loved ones, the barbaric act of BBS against the Muslim people ... the reasons nothing to do with LTTE, nothing to do with separatism, to an extent it was nothing to with any political solution or the lack of it either. Mr Rajapaksa regime dug their own grave and when opportunity arrived Tamil speaking people offered their hands to fill it with sand, most importantly in a democratic way.
 
Another opinion is from the people who are more moderate and probably the supporters of common opposition. They embrace the Tamils' vote and they don't see the so called "country dividing votes map" in a racist way. They think Tamils, Muslims and Sinhalese are all part of one united country and it doesn't really matter a vote is a Tamil vote or Sinhalese vote. Well, a wise thought in a broader perspective, but the reality is different.
 
The bottom line is, no sensible person would not think him or herself being a racist. The racist ideologies arise only over single reason. "Insecurity". Sri Lankan Sinhalese felt insecure of Tamils in early independence and the fire was well fanned by the politicians. Unlike Jinnah, no Tamil leaders pledged for a separate country during the 1940s and leaders like Ramanathan and Arunasalam were seen as the national leaders and not Tamil leaders. Things changed soon after the independence. The reasons are well discussed with different eyes over the years. Introspectively Tamils started feeling the same insecurity felt by Sinhalese, hence the mistrust, hence the democratic and later armed conflict in Sri Lanka.
 
During my teen and twenties it was often said in the Sri Lankan media that its the LTTE who not letting Tamils to enjoy their rights. It was the LTTE blocking a meaningful devolution to Tamil people. It may be partly true too. The 13th amendment was rejected by LTTE, rightly so. 13th amendment gives powers to provincial council governors only. Chandrika's devolution package had something in it, but was rejected by both LTTE and UNP. The peace talk during early 2000 failed due to both the parties. At one point Sinhalese politicians conceptually agreed to a Federal solution, well LTTE turned down that too. Those days the intellectual society of Sinhalese community always gone for a political solution inclusive of meaningful devolution of power. In every election manifesto had something to address the national problem. Each and every Sri Lankan leaders favored a devolution package to Sri Lankan ethnic problem so long as LTTE did exist. After that they all comfortably forgotten the ethnic problem. They first trimmed the federal solution to 13+. Then 13. Then 13-. Now the national problem is comfortably squeezed into a terrorist problem. The terrorists are eradicated, so is the ethnic problem. The country is in peace. The people who talked about devolution now gone to silent. They treat everything as a economic problem. They also claim Tamils are living peacefully in this country. Dr Sanjive Weerawarna, a person I adore and owe a lot, talked about a federal solution in his blog post sometimes back. Now he even gone silent. It is the tactic which most of the Sinhalese moderate people following and the rest go against the any kind of power sharing within the country. Now that there is no LTTE, there is nobody to trouble us, so why should we solve this national problem? Let them live and die through. In effect Tamils feel cheated with few even think "what if LTTE...". Those who raise their voices got killed, expelled or oppressed.
 
In computer operating systems, there is a known algorithm called "Ostrich Algorithm". When there is "race condition" occurs, just pretend nothing happened. Keep going just like how ostrich would dig its head into the soil when there is a danger around. Every Sinhalese person in Facebook irrespective of the side is doing it. Since they keep quiet politicians understandably are quiet too. So the first since 1956, no election manifesto or political leader talked about addressing the ethnic problem in this country. They comfortably left it worrying it would have a reciprocating effect in their campaign. Even the Tamils worried about discussing it, because their sole intention was to expel Rajapaksa this time and any comment on national problem wouldn't go well with Sinhalese. How about that?
 
There is reason why the voting pattern of the country looks like the way it is now. While Sinhalese votes are divided pretty much evenly, Tamil speaking votes overwhelmingly gone against Rajapaksa regime. Why there isn't an even divide in those areas? Why have they all gone for one candidate? The reason is their problems are unique and different from the majority Sinhalese community in the country. Since they are undivided, the problems are very common. Tamils speak different language, although there are similarities, their culture is also so different to those who live in south. Every time someone says its a Sinhalese Buddhist nation, it hurts. Isn't it a Tamil nation? Isn't it an Islamic state? Why is it only for Sinhalese Buddhist nation? They don't care who the majority ethnic in the country. Its every man's wish to see their race, language and culture is in the forefront and celebrated. I was born and brought up in this country. My father was. My grandfather was. The ancestry tree's root are in this very special land we have an emotional attachment with it. But in Sri Lanka its only the Sinhala Buddhism is more celebrated than the rest. Have you ever thought why would a Tamil Hindu need a 12 poya day holidays a year? Some would say its unavoidable because its so important for a Sinhala Buddhist. Yes but not for a non Buddhist. The best way to hold the unity is to embrace the diversity of the country. Since we speak different languages, its important to devolve the power to states, so that the individual state can celebrate their own cultures, languages etc. Unity in diversity. If it takes to a single square root of land to satisfy this need, then we should devolve the power to that small piece of land too. Then the small piece of land will realize it cannot survive in its own, then it starts to rely more on the central government, there comes the real unity of the nation. Unity can never be prevailed through suppressing the opposing voices. Rajapaksa regime tried it. Hence they are voted out. So try to understand the voting pattern in the country. It doesn't infer separatism. It only shows the true aspirations of the Tamil people. Kindly don't ignore this message by comfortably tagging it as a LTTE campaign. Hopefully the common opposition gets it. If not, remember Tamil speaking people will continue to show their displeasure through democratic means.
My fellow Sri Lankan Tamils who live in and out of the country.
 
While most of the Tamils, the majority who spent their teens in 80s and 90s in Sri Lanka are having a different take on this national question. They are fed-up, tired and not prepared to trust a single political leadership of Sri Lanka. They have their reasons and probably that's why they keep telling to boycott the election or not to put a trust on any Sinhalese leaders. But the next generation of Tamils are moving on. They want to fight for their rights through democratic means under the united Sri Lankan structure. The concept of Tamil Eelam is long gone in their mind and there is also a sense that we lost one too many lives, culture and people due to the armed conflict. I don't think any sensible youth in or out of Sri Lanka would want to take up arms for their rights. We should understand this generational evolution and should change our ideologies and politics duly. The former chief minister of Tamil Nadu, Mr Annathurai given up the fight for the separate country "Tamil Nadu" and stayed under the united structure of India. The result is, the state Tamil Nadu does still exist and they are able to hold the grip on their value system without threatening the integrity of India. The current Sri Lankan Tamil generation wants to imitate something of similar and that's probably the feasible option too. So we should stop being emotional and critical. We would make ourselves utter foolish if we act that way while comfortably living in another country. Just get on with the life.
 
For the Tamils living in Sri Lanka, there is a worrying development of verbally attacking the people living overseas. We should remember that those people have equal stake in Sri Lanka's on going problem. They may be living abroad earning dollars or pounds. But they also left their loved nation for a reason. They have lost their loved ones. They were threatened and bullied. They were ill treated. There are thousands of reasons. Most of the diaspora Tamils are asylums, including the ones migrated on skill and academic basis. They chose the western countries over India for economic reason, yet they still left their own hometown and some of them still living their past. Please respect their feelings. Its easy to tag someone a diaspora, a Colombo based person, etc.. but they all gone through the same painful path. Some walked in 80s. Some in 90s. Some now. Just because some are walking the road now doesn't give any authority over the road. Foolish people are everywhere. Single out them and explain the situation to them or criticize.
 
There are few people, notably Tamil Civil Society and Kumaravadivel Guruparan continuously campaigned against both Mr Rajapaksa and Mr Sirisena. They are not diaspora Tamils. And they had their reasons and logic too. Its their view on how to address this election. Me personally favored what the majority Sri Lanka thought for their respective reasons. We should all try to oust Mr Rajapaksa. Well its done now. Does it bring any pleasure? Yes for Rajapaksa's loss and No for Maithree's win. I have very low expectation on Maithree. But I hope he would at least let a free of speech space in the country where Tamils can express their views clearly. Even this post is written with that hope. Under the Rajapaksa regime I would have worried of possible white van kidnapping, intimidation or even a airport pickup and eventually have deleted this post. I have hence deleted so many posts like this.
 
This time I don't and that's the "change". Wish its not the only change.
 
Jeyakumaran Chandrasegaram
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்ல மறந்த கதை :o

 

 

"சாமீ...மனைவியால குடும்பத்துல பிரச்சினை.. அதை தீர்க்க என்ன வழி சாமீ..?"

 

"மகனே..இன்னும் 48நாட்களில் உன் குடும்பப் பிரச்சினைகள் தீரும்."

(கிழிஞ்சுது...அது தெரிஞ்சிருந்தா நான் ஏன் சாமியார் ஆகறேன்..?)

 

 

"ஒரு சின்ன சந்தேகம் சாமீ...ஒரு மனிதன் எப்போது முற்றும் துறந்தவன் ஆகிறான்..?"

"ஆசைகளைத் துறக்கும்போது மகனே...."

(பாத்ரூம் கதவ சாத்திட்டு குளிக்கும்போதுடா....பக்கி !)

 

 

"நீங்க சாமியார் ஆக என்ன காரணம் சாமீ?"

 

"எனக்குக் கிடைத்த ஞானம்தான் காரணம் மகனே!"

(முழுப் பேரு ஞானாம்பாள்..)

 

 

"உங்க ஞானத்தை நான் பார்க்க முடியுமா...சாமீ..?"

 

"முடியாது மகனே... ஒவ்வொருவரின் ஞானமும் வேறுவேறானது..அரே ஓ சம்போ..."

(பக்கத்து ஊர்ல பத்தரகாளி கோயில் முன்னாடி பொட்டிக்கடை வெச்சிருப்பா...போயி பாத்துக்கோ..)

Link to comment
Share on other sites

10624811_10205411062857229_2104005712915

 

 

எல்லாக்காலங்களிலும் ,எல்லாக் காரணங்களுக்காகவும் உலகம் முழுவதும் படைப்பாளிகள் பலி வேண்டப்படும் இன்றைய நாட்களில் விடுதலைப் போராட்டம் முப்பது வருடம் நடந்த இலங்கைத் தீவின் வடக்கில் வாழ்ந்த ஒரு சிறந்த கவிஞ்சரும் காணமல் போன சம்பவத்தில் , இன்றைவரை அந்தக் கவிஞ்சருக்கு என்ன நடந்தது என்று அறியவே முடியாத புதிரில் இருந்து விடுபடாமல் தன் கவிதைகள்,பாடல்கள் மூலமாக " தெருவெங்கும் தமிழ் ஓசை கேட்க்கும் தேசத்தில் விடிவெள்ளி பூக்கும்..." என்று வாழ்ந்து கொண்டிருப்பவர் புதுவை இரத்தினதுரை.
 
புதுவை யாழ்பாணத்தில் உள்ள விவசாயக் கிராமமான புத்தூரில் பிறந்தவர், அந்த ஊரின் பெயரை முன்னுக்கு இணைத்து புதுவை என்று போட்டு கவிதை எழுதியவர். ஆரம்பத்தில் கொமினிஸ்ட் முற்போக்கு கொள்கைகளில் நம்பிக்கை வைத்து மரபுக் கவிதைகள் எழுதியவர், முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்து எழுதியவர். பின்னர் மத்திய கிழக்கு நாட்டுக்கு வேலைக்கு போய் வந்தபின் ,மறுபடியும் புதுக்கவிதை,கொஞ்சம் வசனநடை கலந்த புதுக்கவிதைகள், அலன் ஜின்ச்பேர்க் போல நீண்ட சமுதாயக் கோபம் கொப்பளிக்கும் கவிதைகள் ரசிக்கும்படி ,எளிமையாக எழுதியவர். 
 
விடுதலைப் போராட்டம் அவரை உள் வாங்கியபோது விடுதலைக் கவி எழுச்சிப் ஆகி இந்த மண் எங்களின் சொந்த மண் என்று நிலம் அதிர பாடல்கள் எழுதியவர். தொண்ணுறுகளில் யாழ்பாணத்தில் இருந்து வெளிவந்த முக்கியமான ஒலி நாடாக்களில் அவர் எழுதிய பாடல்கள் இருந்தது. " நெய்தல் " என்ற ஒலி நாடாவில் அவர் எழுதிய கடலும் கடல்சார்ந்த மக்களின் வாழ்க்கை,அவர்கள் போர்க் காலத்தில் எதிர்கொண்ட கஷ்டங்கள்,கடல் மீதினில் ஏறிச் சென்று வீரச் சண்டை பிடித்த வீரர்களின் வீரம், தியாகம், அர்ப்பணிப்பு எல்லாத்தையும் இந்திய சினிமா பாடல்களின் பாடலாசிரியர்களே மூக்கில விரலை வைச்சு ஜோசிக்கும் அளவுக்கு உப்புக் காற்று கரை எல்லாம் அலைகளுடன் விளையாடிய தீரத்தை எழுதினார்.
 
புதுக்கவிதைகளில் பல புதுமை செய்த புதுவை கவிதைகளை இருவத்தி ஐந்து வருடங்களின் முன்னமே அடுத்த கட்டத்துக்கு கொண்டு போனவர் .யாழ்பாணம் வின்சர் தியடரில் அந்த நாட்களில் இலக்கிய நிகழ்வு நடக்கும்,அதில புதுவையே வந்து அவரின் கவிதைகளை மேடையில் வாசிப்பார்,தியேட்டர் நிரம்பி வழியும் அவர் கவிதை வாசிப்பதைக் கேட்க,அதில் அவர் வாசித்த " எல்லாள மன்னன்......" என்ற கவிதையை பலர் மீண்டும் மீண்டும் வந்து வாசிக்கும் படி கேட்டார்கள்,அவரும் ஒவ்வொரு முறையும் அந்தக் கவிதை வாசிப்பார்,உணர்ச்சிப் பிரவாகமாக இருக்கும் அந்தக் கவிதை, அப்படி ஒரு கவிதை எப்படி அவரால் எழுத முடிந்தது என்பது இன்றுவரை ஒரு வரலாற்று ஆச்சரியம்,தன் கவிதை மூலம் நிறைய ரசிகர்களை ஒரு தியேட்டரில் ஆடாமல் அசையாமல் கட்டி வைச்சு ரசிக்க வைத்த வேறு ஒரு தமிழ் கவிஞ்சரை நான் யாழ்பாணத்தில் கண்டதேயில்லை.
 
வில்லியம் பர்ரோஸ், ஜேக் கெரோவாக், ஆலன் கின்ஸ்பெர்க் ஆகிய beat generation எழுத்தாளர்களைப் பற்றி இன்றைக்கு உலக அளவில் எழுதுகிறார்கள், ஆனால் எங்கள் உள்ஊர்க் கவிஞ்சன் இவர்கள் எல்லாருக்கும் மேலாக எழுத்துக்கு ஒரு அரசியலும், தத்துவப் பார்வையும் உண்டு என்றால் அதுவேதான் என் எழுத்தின் அடிப்படை என்று அரசியல். சமூகத்தின் போலித்தனங்களுக்கு எதிராகத் தன் உடலையே ஆடுகளமாகப் பயன்படுத்தி எழுதித் தள்ளிய புதுவை இரத்தினதுரை பற்றி அதிகம் பேருக்கு தெரியாது.
 
" வா வென்று என்று சொன்னதும் தமிழே எங்கள் வாசலில் வந்ததும் தமிழே நீரோடு நிலம் எங்கும் பச்சை,நாங்கள் நீறாக எரிகின்ற போதிலும் தமிழே ,," என்று இலகுவான தமிழில் சங்க இலக்கியம் எழுதிய புதுவையை இரண்டு முறை நேரடியாக சந்தித்து இருக்கிறேன், 
 
முதல் முறை , " ஈழம் ஈன்ற வீரத் தாய்கள் எழுந்து நில்லுங்கள் அம்மா, ஈழம் இன்று எரியும் நிலை,,,,," ,என்ற கிழக்கு மாகாணப் போராளிகள் அதிகம் இணைந்து நடத்திய தமிழ் ஈழ இசைக்குழு ஒரு பாடல் ஒலிப்பதிவில் பேஸ் கிட்டார் வாசிக்க கேட்டபோது, அவர்களின் ரெக்கோர்டிங் ஸ்டுடியோ இருந்த முகாமில் , வெளியே வேப்ப மரத்துக்கு கீழே ஒரு கதிரையில் இருந்து வெத்திலை போட்டுக்கொண்டு இருந்தார். கவிதைகள் பற்றி எனக்கோ, பேஸ் கிட்டார் பற்றி அவருக்கோ அதிகம் தெரியாததால் அவருடன் பேச தயக்கமா இருந்தது .
 
என்றாலும் ரெக்கோர்டிங் இடைவெளியில் வெளியே போய் அவருடன் கதைத்தேன்,முக்கியமா அவர் எழுதிய இரண்டு கவிதை பற்றி சொன்னேன் ,ஆர்வமாகக் கேட்டார். அதை விட ஆச்சரியமா நான் அந்த இரண்டு கவிதைகளின் முழு வரிகளையும் சொன்னேன் , அதில ஒன்று யாழ்பாணத்தில் இருந்த சட்டநாதர் கோவில் தேர் முட்டியில் இரவு தூக்கம் வராத ஒரு கவிஞ்சன் விடியும் வரை நடக்கும் சம்பவங்களின் விவரணம் கவிதை மொழியில் சொல்லப்பட்டு இருக்கும், சட்டநாதர் கோவில் தேர் செய்த போது அதில தான் வேலை செய்தததாக சொன்னார் புதுவை, " தூக்கம் வராத கவிஞ்சனும் விடியாத இரவும்.." என்ற அட்டகாசமான அந்தக் கவிதை இன்றுவரை கட்டாயம் கவிதைகளை எப்படி உன்னிப்பாக நம்மைச் சுற்றி நடப்பவைகளில் இருந்து எழுத முடியும் என்றதுக்கு இலக்கியப் பாடத்திட்டத்தில் வைக்கப் பட வேண்டிய கவிதை என்று நினைக்கிறன்.
 
மற்றக் கவிதை , " ராசா வீதியில் எங்கள் இளவரசி..." என்ற கவிதை, அது பொம்பர் குண்டுபோட்டு சிதறிய ஒரு சின்னப் பெண் பிள்ளையின் அவலத்தை சொல்லும் கவிதை, அதையும் கேட்டுப்போட்டு,அந்த சம்பவத்தை தான் நேரில் பார்த்ததாகவும்,தானும் அந்தக் குண்டுத் தாக்குதலில் அந்த வீதியால் போன நேரம் மயிரிழையில் தப்பியதாகவும் சொன்னார். அவர் மிகவும் சந்தோசப்பட்டார் நான் அவரின் இரண்டு கவிதைகளை ரசித்து அதைப்பற்றி அவருக்கே சொன்னதில்,எனக்கும் ஒரு வித திருப்பதி இருந்தது. அந்த ரேகொர்டிங்கில் வந்த பாடல் வெளிவந்து சில நாட்களில் யாழ்ப்பாணமே ரிவரிசா ராணுவ நடவடிக்கையால் இடம்பெயர, இன்று வரை நான் பேஸ் கிட்டார் ஒரு ரேகொர்டிங்கில் வாசித்த பாடல் " ஈழம் ஈன்ற வீரத் தாய்கள் எழுந்து நில்லுங்கள் அம்மா, ஈழம் இன்று எரியும் நிலை,,,,, " என்ற அந்தப் பாடல் ,இடம்பெயந்து கிளிநொச்சி வந்த போது அந்தப் பாடலை எப்பவும் தமிழ்ஈழ வானொலியில் போட்டுக்கொண்டே இருந்தார்கள்.
 
ரெண்டாவது முறையாக வன்னியில் அவர் தமிழ் ஈழத் தேசியகவி ஆகி ,ஒட்டன்குளம் என்ற இடத்தில யாழ் ரமணன் அண்ணையைச் சந்திக்கப் போன போது,அருகில் உள்ள முகாமில் தமிழ் ஈழ இசைக்குழு உறுப்பினர்கள் இருப்பதாக சொன்னார்கள்,சும்மா போய்ப் பார்ப்பம் என்று போனேன்,அங்கே புதுவை வெத்திலை போட்டுக்கொண்டு மும்மராமா பாடல் எழுதும் சூழ்நிலையில் இருந்தார். ஆனால் மலேரியாக் காச்சல் வந்து நடுங்கிக்கொண்டு இருந்தார் ,ஆனால் வாயில் இருந்து வந்த பாடலின் வரிகளின் வார்த்தைகள் அவர் கவிதைகள் போலவே நடுங்கவேயில்லை.
 
என்னை அவருக்கு உடனடியா அடையாளம் தெரியவில்லை. கொஞ்ச நேரத்தில் வந்து கதைத்தார்,, அதுதான் அவரைக் கடைசியா சந்தித்த சம்பவம்,.
 
" தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளை..." என்ற ஒவ்வொரு மாவீரர் தினத்திலும் நினைக்க வைத்து அவர் எழுதிய பாடல் குலுங்கிக் குலுங்கி தேச விடுதலைக்கு தங்கள் பிள்ளைகளைக் கொடுத்த பெற்றோர்களை அழவைத்து," எழுந்து வாருங்கள்,நிமிர்ந்து வாருங்கள் தமிழ் ஈழம் மலரும் நேரம் இதுதான் துணிந்து வாருங்கள்..." என்று விடுதலைக்கு தன் கவிதைகள்,பாடல்கள் மூலம் ராஜா பாட்டை போட்டுக் கொடுத்த கவிஞ்சர் புதுவை இரத்தினதுரை அவர்களை தமிழ் ஈழத் தேசியக் கவி என்று சொல்ல ஆயிரம் தகுதி உள்ள ஒரு படைப்பாளி. 
 
புதுவை இரத்தினதுரை ஒரு வரலாற்று ஆவணம். ஒரு மொழியின் வீரியத்தைத் தேடி எடுத்து விழிகளில் சுமக்க வைத்துக் காலம் செய்த கோலத்தில் காணமல் போன கவிதை..........
 
நாவுக் அரசன் 
ஒஸ்லோ
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.