Jump to content

தோழர்களே சிறிது சிந்தித்து பாருங்கள்! நமக்கான தேசம் எது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தோழர்களே சிறிது சிந்தித்து பாருங்கள்! நமக்கான தேசம் எது?

2d7ww3l.jpg

தமிழ் நாட்டிற்கு சொந்தமான கச்சதீவை சிங்களவனுக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டு ஒப்பந்தத்தின் பெயரால் அடிமை சாசனத்தை எழுதிவிட்டு, தமிழர் நாட்டின் மீனவர்கள் அன்றாடம் அல்லல் படுவதை கண்டு கனிவோடு கன்னடத்தான் தயாரிக்கும் இந்த புதிய அடிமை ஒப்பந்ததை இந்த அரசும் டெல்லி ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகளும் இணைந்து தயாரித்துவிட்டு தற்பொழுது அதனை கையெழுத்திட பேனாவைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். அச்சிடப்பட்ட காகிதத்தில் கையெழுத்திட தான் பேனாவை எடுத்துள்ளனரே தவிர அதில் புதிதாக எதனையும் எழுதுவதற்ககோ திருத்துவதற்கோ அல்ல. இது தெரிந்தும் எதிர்க்கிறோம் என சவடால் விட்டுக் கொண்டு நமது அரசியல் " மாவீரர்கள்" தெரு முக்கில் மல்லுக்கட்டிக் கொண்டு நிற்கின்றனர்.

மக்கள் தொகையில் வெறும் 1 விழுக்காட்டிற்கும் குறைவான "ஏழைகள்" ஈடுபட்டிருக்கும் பங்குச்சந்தை சூதாட்டத்தில் யாருக்கும் நஷ்டம் வந்துவிடக்கூடாது என அவர்களுக்கு வரிச்சலுகைகளை வாரி வழங்கவும் அதற்குத் பணத்தை திட்டமிடவும் நேரமிருக்கிறது இந்திய அரசுக்கு. ஆனால் தமிழக மீனவர்களின் மரணத்திற்கு நிவாரணம் ஒதுக்கக் கூட காசில்லை என் கபட நாடகமும் ஆடுகிறது. ஆனால் சிங்கள மீனவன் எவனாவது இங்கு வந்துவிட்டால் பிரியாணியில் இருந்து ராஜ உபசரிப்புதான்..

"இவற்றையெல்லாம் நாங்கள் எதிர்க்கிறோம்" என்று சொல்லிக் கொண்டே அரசியல் கூட்டம் கர்..புர். என்ற வெறியுடன் சத்தமிட்டுக் கொண்டு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கிறது. இவற்றுக் கெல்லாம் ஆரம்பப் புள்ளி வைத்த அவர்களே இவ்வாறு சொல்கிறார்கள் என்றால் "விரைவில் தேர்தல்" வருகிறது என்று அர்த்தம். அவர்கள் அலைவதைப் பார்த்தால் விரைவில் ஈழத்திற்கு சென்று ஈழத்தை அமைத்துவிட்டுதான் தேர்தலுக்காக வருவார்கள் போலிருக்கிறது. இவர்களுக்கு பிரச்சனை தமிழினம் சார்ந்தபிரச்சனைகளோ தமிழகத்தின் பிரச்சனைளோ அல்ல..

இங்கு தமிழகத்தில் இந்த நிலை இருக்க டெல்லி ஏகாதிபத்தியத்தில் என்ன நடக்கிறது?..

இந்திராகாந்தி ஆட்சிக் காலமானாலும், அவர் தந்தையார் நேருவின் ஆட்சிக் காலமானாலும், இந்திராவின் மகன், மருமகள், பேரன் ஆட்சிக் காலமானாலும், வாஜ்பாயி ஆட்சிக் காலமானாலும் இந்திய ஆளும் வர்க்கத்தினர் தமிழகத் தமிழர்களை சந்தேகப் பட்டியலில் வைத்துக் கண்காணிப்பதிலும், தமிழர்களைப் பகைவர்களாகக் கருதுவதிலும் மாற்றமில்லை. ஈழத் தமிழர்களையும் அதே அளவுகோல் கொண்டுதான் பார்க்கிறார்கள் இந்த பாகுபாட்டைத் தான் ‘இந்தி’ய தேசியம் என்கிறோம். தமிழகத் தமிழர்பால் பகைமை அணுகுமுறையையே இந்திய அரசு கொண்டிருக்கிறது. காவிரி நீர்ச் சிக்கலில், கன்னடர் பக்கமும், முல்லைப் பெரியாறு அணைச்சிக்கலில் மலையாளிகள் பக்கமும் இந்திய அரசு இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் தமிழர்களுக்குப் பகைவர்களாக யார் யார் மாறுகிறார்களோ அவர்கள் எல்லாம் இந்திய அரசுக்கு நண்பர்களாகவும் வேண்டியவர்களாகவும் மாறிவிடுகிறார்கள். நடுவண் அரசாங்கத்தில் எக்கட்சி அல்லது எக்கூட்டணி ஆட்சி நடத்தினாலும் சாரத்தில் இக்கொள்கையே கடைபிடிக்கப்படுகிறது.தமிழன எதிர்ப்பு என்பது இந்திய அரசின் நிரந்தர கொள்கையாகும்!

அதாவது ஏனைய பொருளாதார வளங்களுக்கே தமிழரும் தமிழ்நாடும் தேவை படுகிறாரகள்..

அசாமில் பெட்ரோல் எடுக்க அந்த அரசிற்கு உரிமைத் தொகை கொடுத்து வரும் “இந்தி”ய அரசு, தமிழகத்தின் காவிரிப்படுகையிலிருந்தும், நரிமணித்திலிருந்தும் திருடிச் செல்லும் பெட்ரோலுக்கு நம்மிடையே “இறக்குமதி” வரியை விதித்துக் கொள்ளையடிப்பதை என்னசொல்ல?

தோழர்களே சிறிது சிந்தித்து பாருங்கள்.. ஈழபிரச்சனையில் ஒருபுறம் டெல்லி ஏகாதிபத்தியத்தின் மிரட்டல்.. இன்னோரு பக்கம் தமிழகத்தின் நெருக்குதல் இவற்றை கையாள்வதற்கு மருத்துவ மனையே சிறந்த இடம் என்று சிந்தித்த மூத்த ராஜ தந்திரி ..முத்தமிழ் "விற்ற கருநாகம்" ஒருபுறம்.. சிங்கள ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் இறந்த மீனவர் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல போகிறேன் என்று .. இழவு வீட்டிற்கு புல்லோடு புல் மேக்கப்பையும் ஏற்றி கொண்டு 50 கார்கள் புடைசூழ திரியும் நடிகர் (கம்) அரசியல் பிழைப்புவாதி விசயகாந்த் ஒருபுறம்.

ஈழத்தில் மக்கள் முள்வேலி கம்பிக்குள் வெந்து சாவதைப் பற்றி "மிகவும் கவலையுற்று" ஊட்டியில் குலுகுலுவென ஏசி அறையில் மக்களின் கஷ்டத்தை பற்றி சிந்தித்துக் கொண்டு, ஒரே அறையில் இருந்து கொண்டு நாட்டுநடப்புகளைப் பற்றியெல்லாம் துள்ளியமாகக் கண்டிறிந்து "அறிக்கை" மட்டுமெ விடும் அரசியல்வாதியாக செயலலிதா ஒருபுறம்."நாங்களும் இருக்கோம்ல" என்றபடி முன்னர் பதவி தந்த "இந்தி"ய அரசைப் பற்றி வாய்கூட திறக்காமல் தமிழக அரசை மட்டுமே கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திக் கட்சி வளர்க்கும் இராமதாஸ் ஒருபுறம்.

இவர்கள் மட்டுமா? தமிழகத்தின் தலைச்சிறந்த "அரசியல் நகைச்சுவையாளர்" வைகோ, "அடங்க மறு" என்று அறிமுகமாகி "சீட்" கொடுத்தால் அடங்கிப் போ" என்று புதியத் தத்துவம் படைத்த திருமா, "அகில இந்திய" சமத்துவக் கட்சி" என்கிற தனியார் பொது நிறுவனத்தின் உரிமையாளர் "நாட்டாண்மை" சரத்குமார், "2011-ல் தமிழக முதல்வராகப்போகும்" "லட்சிய" தி.மு.க. டி.ஆர்.இராசேந்தர்,ஈழத்தில் தமிழ் மக்கள் குறைந்துவிட்டார்கள் எனவே பெரும்பான்மையான் சிங்களருக்கு அடங்கிபோகவேண்டும் புதிய கீதையை உதித்த மார்சிஸ்டு வரதராசனார்( பன்னிகள் கூடத்தான் இந்த நாட்டில் அதிகமாக உள்ளது அதற்காக அதற்கு அடங்கி போக முடியுமா?).. ஈழ பிரச்சனையை அடிக்கடி ஊறுகாயை போல தொட்டு கொள்ளும் இந்திய கம்னியுசுட் கட்சி.. தீடீர் கட்சியான "அகில இந்திய" நாடாளும் மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் கார்த்திக உள்ளிட்ட அனைத்து அரசியல்வாதிகளும் நமக்கு ஒன்றைத் தான் சொல்ல வருகிறார்கள்.

2e0mfy9.jpg

தமிழினத்தை புது டெல்லி ஏகாதிபத்தியதிற்கு எம்.பி சீட்டுகளாக மாற்றி யார் அதிக விலைக்கு விற்கிறார்கள் என்பதில் இவர்களுக்குள்ளே அறிக்கை அக்கபோர் சண்டை ஆகியவை ஏற்படுகின்றன..புது டெல்லி இந்திக்காரன் வீசி எறியும் எலும்பு துண்டுகளுக்காக பதவி பணம் என ஒரே கொள்கை உடையவர்களாக உள்ளார்கள்!இவர்களுக்கு தமிழனத்தை காப்பதெற்கேன்று தனி கொள்கை எதுவும் இல்லை!இதற்கு மாற்றாக தமிழக மக்களின் அரசியல் நிலை எதுவாக இருக்க வேண்டும்..? தமிழ்த் தேசிய இனத்தின் தன்னுரிமையைப் பாதுகாப்பதாகவும், தமிழ் இனத்தை

உலகமயப் பணக்காரனுக்கு மட்டுமின்றி தில்லிக்காரனுக்கும் விற்கும் இந்தியனுக்கு எதிரானதாக புரட்சிகரத் தமிழ்த் தேசிய அரசியல் நிலையைத் தான் நாம் முன்னெடுக்க வேண்டும்.

மார்வாடி, குசராத்தி சேட்டுகள் தமிழகத்தின் பெரு வணிகங்களை கைப்பற்றத் தொடங்கியுள்ளனர். பீகாரிகள் ரயில்வே வேலை, ரோடு வேலை என தமிழகத்திற்குள் நுழைந்து விட்டனர். தமிழத்திலேயே தமிழன் அகதியாக தெருத்தெருவாய் பிச்சை எடுத்து அலையும் நாள் வெகு தொலைவில் இல்லை எனத் தெரிகிறது. அயலவன் வந்து சுரண்ட நமது தமிழ் மண் வேட்டைக்காடு அல்ல. நமது எதிரி நம்மை வீழ்த்த நினைக்கும் அண்டை தேசிய இனங்கள் மட்டுமல்ல தில்லி ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளாக இங்கு செயல்படும் “இந்தி”யத் தேசியத்தை ஆதரிக்கும் அனைவரும்தான் என உணர வேண்டும்.தமிழ் தேசியமே தீர்வு என உணரவேண்டும்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.