Jump to content

அவலங்களைப் பார்த்து அழும் ஆர்பர் அம்மையாரும், சிங்கள அரசியலும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்இணைய செய்தி ஆய்வு

ஆக்கம் - சுகன்

அவலங்களைப் பார்த்து அழும் ஆர்பர் அம்மையாரும், சிங்கள அரசியலும்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கான ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அம்மையார் இலங்கைக்கு வருகை தந்திருக்கின்றார். இவர் வருகையை ஒரு தேவ தூதனின் வருகையாக தமிழர் தரப்பும், தலையிடியாக சிங்கள தரப்பும் கருதுகின்றது.

வெலிக்கடை சிறையில் வாடும் கைதிகள் அம்மையாரை சந்திக்க அனுமதி கோரி உண்ணாவிரதமிருந்து சிங்கள காடையர்களாலும் காவலர்களாலும் தாக்கப்பட்டனர். தொடர்ந்து உண்ணாவிரதமிருந்து ஐந்து அரசியல் கைதிகள் அம்மையாரை சந்தித்தனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அம்மையாரைச் சந்திக்க பெரும் பிராயத்தம் மேற்கொண்டனர்.

புலிகள் அம்மையாரை வன்னிக்கு வரச் சொல்லி அழைப்பு விடுத்தனர்.

காணமல் போனவர்களின் உறவுகள் அம்மையாரை சந்திக்க அரசு அனுமதி மறுக்குமாயின் உண்ணா நிலை போராட்டம் தொடங்கப்போவதாக மனோகணேசன் முற்கூட்டியே தெரிவித்து அம்மையாரை சந்தித்தார்.

img0466pw7.jpg

யாழில் காணமல் போனவர்களின் உறவுகள் அம்மையாரை சந்திக்க பாதுகாப்பு படையினர் விடவில்லை இருந்தும் யாழ் பெரிய கோவிலுக்குள் சிரமத்தின் மத்தியில் நுழைந்து அம்மையாரை நோக்கி கதறி அழுத உறவுகளை பார்த்து அம்மையாரும் கண்ணீர் மல்கியுள்ளார்.

louisearbour121020072nl9.jpg

மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்தவே இவ்வளவு போராட்டங்கள் செய்ய வேண்டியுள்ளது. இந்த நிலையில் மனித உரிமை மீறல்களை கட்டுப்படுத்துவதை குதிரைக்கு எப்போ கொம்பு முளைக்கும் என்று காத்திருப்பது போல் ஒன்று தான்.

ஐ நா அதிகாரிகள் கண்ணீர் விடும் அளவுக்கு தமிழர்களின் நிலமை மோசமாக உள்ளது. இருந்தும் அரசு மீது போதிய அழுத்தம் பிரயோகிக்க முடியாதவர்களாகவே அவர்கள் உள்ளனர்.

சிங்களம் மனித உரிமைகளுக்கு செவிசாய்க்கும் மன நிலையில் இல்லை என்பதும் அதன் யுத்த முனைப்பு மளுங்கக் கூடிய மன நிலையில் இல்லை என்பதும் பேரினவாத தலைமைகள் வெளிவிடும் அறிக்கைகளில் இருந்து தெரிகின்றது.

எண்பத்தைந்து சதவீத சிங்கள மக்கள் யுத்தத்தை தான் விரும்புகின்றனர் என்று சொல்லப்படுகின்றது. யுத்தம் செய்யாவிடில் மகிந்தர் தொடர்ந்து ஆட்சிக்கதிரையில் இருக்க முடியாது. யுத்தத்தில் தோல்வியுற்றாலும் இருக்க முடியாது. சிங்கள மக்களுக்கு பேரினவாதம் என்னும் பசியை ஏற்படுத்தி, அதற்கு தீனி போட்டு அண்டாது என்ற நிலைப்பாட்டில் சிங்கள தேசம் மாற்றப்பட்டுள்ளது.

ஏதோ ஒரு வகையில் தமிழர்களுக்கு உரியதை வழங்க வேணும் என்ற உண்மையையும் பொதுவான ஜனநாயக, மனிதாபிமான அடிப்படையிலான கருத்துருவாக்கத்தை சிங்கள மக்களிடம் சிங்களத்தலைமைகளோ அல்லது ஊடகங்களோ வளர்ப்பதில்லை.

சிங்கள தேசிய இனம் என்பது எவ்வளவு முக்கியமோ அதை விட பன்மடங்கு தமிழரை ஒரு தேசிய இனமாக தாம் கருதுவதும் முக்கியமில்லை ஏனைய நாடுகளும் ஐ. நா வும் தமிழரை ஒரு தேசிய இனமாக கருதவும் கூடாது என்ற கருத்தை மையப்படுத்தி நகர்வதே சிங்கள அரசியல். இதன் எதிர்விளைவாக தமிழர் தரப்பு தனிஅரசை நிர்மாணிப்பதற்கு வழி செய்கின்றது. காலனித்துவ அரசுகள் வெளியேறிய பின்னர் இந்நாள் வரை ஒரு சிறு தீர்வையோ அல்லது தீர்வைப்பற்றிய ஆக்கபூர்வமான பரிசீலனைகளை கூடவோ சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாததவர்களாக இருப்பது வெளிப்படையானது. இந்த வெளிப்படையான சிங்களத்தின் நிலைப்பாடு ஐ.நா வுக்கு புரியாத ஒன்றல்ல.

சிங்கள மக்கள் தமது படைகளின் வீர பிரதாபங்களில் விருப்பு உள்ளவர்களாக இருக்கின்றனரே தவிர படைகள் ஆக்கிரமித்து நிற்கும் தமிழர் பிரதேசங்கள், பாடசாலைகள் , இதன் நிமிர்த்தம் பாதிக்கப்படும் கல்வி , அகதிகளாக வாழும் பல லட்சம் தமிழ் மக்களின் நிலை, கொல்லப்படும் மக்களின் எண்ணிக்கை, தமிழர் பிரதேசங்களில் இருந்து வெளியேறும் தமிழர்களின் எண்ணிக்கை , போரில் உடல் உள பாதிப்புகள் எவை என்பது பற்றிய பொதுவான கண்ணோட்டம் போன்ற பல காரணிகளில் இருந்து விலக்கி வைக்கப்பட்டு பேரினவாத உணர்வு அவர்களிடம் ஊட்டப்படுகின்றது. போரை விரும்பும் சிங்கள மக்கள் போரின் விளைவுகள் பற்றிய சிந்தனை அற்றவர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இனவாதப்பசிக்கு தீனி என்பதற்கு எதாவது தமது நிலங்களில் பயிர் செய்து விளைவித்து உண்ண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இல்லை மாறாக தமிழர் நிலங்களின் பயிர்களை மேய்ந்து விடுவது தான் சிறந்த மார்க்கம் என்ற நிலைப்பாடு தான் எண்பத்தைந்து சதவீத மக்களின் போருக்கான ஆதரவும் மாறி மாறி வரும் சிங்கள தலைமைகளின் நிலைப்பாடும்.

ஆனால் புலிகள் என்ற வேலி இவர்கள் கனவுக்கு பிரச்சனையாக உள்ளது. இனவாத பசி எவ்வகையானது என்பதும் வெளிப்படையானது அதற்கு உணவு எங்கே இருக்கின்றது என்பதும் வெளிப்படை ஆனால் இப்போது பிரச்சனை புலிகள் என்ற வேலி. வேலியை முட்டி மோதவரும் மாடுகளுக்கு வேலியும் வேலிக்குள் இருக்கும் பயிரும் வேறு வேறல்ல அது புலிகள் என்பதாக வன்னி பெருநிலப்பரப்பு உள்ளது. இது யதார்த்தமாக இருந்தாலும் ராணுவத்தளபதிகளும் மகிந்தரும் ஊடகங்களும் வேலி ஒன்றுதான் உள்ளது. அதை பிரித்து விடுவோம் என்று சிங்கள மக்களை சமாளிக்கின்றனர். இல்லாவிடில் வளர்ந்து விட்ட இனவாத பசி அவர்களை கடித்துக் குதற அதிக நேரம் செல்லாது.

இதன் நிமிர்த்தம் பேரினவாதம் எல்லை மீறுகின்றது என்பதை சுட்டிக்காட்டினாலும் பிரச்சனை. அதை நடைமுறைப்படுத்த யுத்தம் அவசியம் ஆனால் யுத்ததில் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற நிலைக்கு சிங்கள மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களுக்குள் இருக்கும் அடிப்படை பிரச்சனைகள் பற்றியோ சர்வதேசத்தின் அழுத்தங்கள் பற்றியோ அவர்களுக்கு எது வித அக்கறையும் இல்லை. பொருளாதார பின்னடைவுகள் மற்றும் சர்வதேசத்தின் அழுத்தங்களை வைத்து தமிழர் தரப்பை நியாயத்துடன் அணுக வேண்டும் என்பது கண்ணுக்கெட்டாத தூரத்தில் சென்று விட்டது.

தற்போது தாம் மட்டுமல்ல சர்வதேசம் நியாயங்கள் பேசினாலும் அதை உள்வாங்கும் மனநிலையில் சிங்கள மக்கள் இல்லை. இதன் வெளிப்பாடு தான் சர்வதேசம் சிங்கள அரசின் பயங்கரவாதம் பற்றி கதைத்தால் உடனே கதைப்பவர் பயங்கரவாதி என்று ஒரு தோற்றத்தை உருவாக்குவது. எரிக்சொல்கைமும் புலி சார்பானவர். அலன் றொக் புலிகளிடம் லஞ்சம் வாங்கியவர். நோர்வேயும் பிரிட்டனும் சேர்ந்து புலிகளை பலப்படுத்துகின்றது. என்று தொடரும் சிங்கள ஊடகங்களின் பிரச்சாரம்.

புலிகள் பலமாக இருக்கின்றார்கள் என்பதை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை. அது உண்மை பொய்களுக்கப்பால் புலிகள் பலவீனமானவர்கள் என்ற செய்திகள் அவர்களுக்கு தேவைப்படுகின்றது. உதாரணமாக லங்கா தீப செய்திகளில் சில

புலிகள் தலமை எரித்திரியாவுக்கு தப்பியோட திட்டம்; புலிகளின் இறுதி ஆயுதக்கப்பலையும் அழித்து விட்டோம்; கிழக்கில் இருந்து புலிகளை ஒழித்து விட்டோம்; பிரபாகரனக்கு பிளட் பிறசர் கூடிவிட்டது நீரிழிவு நோய் கூடிவிட்டது; புலிகள் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடுகின்றனர்; புலிகள் இயக்கத்திற்குள் கடும் உட்பூசல். இப்படி தினமும் பல செய்திகள் தொடர்கின்றது. குறிப்பிட்டு சொல்வதாயின் அமெரிக்க தூதுவர் றோபேர்ட் பிளேக்கிற்கும், விமல் வீர வன்சவுக்கும் இடையிலான சந்திப்பில் வீரவன்ச தெரிவித்த நம்பிக்கைகளில் ஒன்று - இன்னும் கொஞ்ச நாளில் புலி உறுப்பினர் ஒருவரே பிரபாகரளை கொன்று விடுவார் என்பதாகும். எட்டப்பன் காக்கைவன்னியன் காலம் தொட்டு துரோகம் என்பது தமிழனின் நீண்ட நெடிய வரலாறு என்பதால் இந்த எதிர்பார்ப்பு பொதுவானது. ஆனால் யுத்தத்தை வெல்லமுடியும் என்ற நம்பிக்கையில் படைபலத்துக்கு சமமான என்னு மொரு நம்பிக்கை அவர்களிடம் இருப்பது தெரிகின்றது.

அடுத்து ராணுவம் பலத்துடன் இருக்கின்றது என்பதும் முக்கியமானது. சம்பூர் வெற்றி , கிழக்கு வெற்றி. ராணுவம் நூறு வீத பலத்துடன் இருக்கின்றது என்று கூறும் அறிக்கைகள் போன்ற பல செயற்பாடுகள் அவர்களுக்கு தேவையானவை.

பேரினவாத பசியும் அவற்றுக்கு தீனி போடுதலும் சமாளிப்புக்களும் விரிவடைந்து செல்கின்றதே தவிர மாற்று சிந்தனை என்பது சிங்களத்திடம் மிச்சமில்லாமல் பிடுங்கப்படுகின்றது. ஒவ்வொரு முறையும் புலிகள் விஸ்வருபம் எடுக்கும் போதும் ஆட்டம் காணும் சிங்கள மக்களை மீண்டும் ஒரு வழியாக பழைய மனநிலைக்கு கொண்டுவருவதும் அதனூடாக அரசியல் நடத்துவதும் சிங்களத்தின் வரலாறு.

கடந்த காலங்களில் வேலிகளை பிரித்துக்கொண்டு, பட்டியில் திறந்து விட்ட மாடுகளாக மாங்குளம் வரை வந்து கட்சியில் ஆனையிறவையும் பறிகொடுத்தார்கள். பலாலியில் விமானம் பறந்தது என்ற செய்தி முன்னர் வந்தபோது பட்டத்தைக் கூட பார்க்கவில்லை என்று சிரித்தார்கள் தொடர்ந்து கட்டுநாயக்காவில் குண்டு விழ கதிகலங்கினார்கள். ஆனால் மீண்டும் யுத்தம் என்பது சிங்களத்தின் தெரிவாக இருக்கின்றது. சிங்களத்திடம் இருக்கும் பேரினவாதப்பசிக்கு யுத்தமும் அதை சார்ந்த சூழலையும் கட்டியமைப்பதைத் தவிர வேறு ஒரு மார்க்கமும் தீனி போடாது என்பது வெளிப்படையானது.

எனவே சிங்களம் பேரினவாத பசியில் இருந்து விடுபட வேண்டுமானால் ஒன்றில் நாடு பிரிபட வேண்டும் அல்லது தமிழர்கள் ஒழித்துக்கட்டப்பட வேண்டும் என்ற இரண்டு தீர்வைதான் இந்த ஐம்பது வருடகால சிங்கள மக்கள் தெரிவு செய்துள்ளனரே தவிர வேறு எந்த அனுசரிப்புக்கும் அவர்கள் உடன்படக்கூடிய மனநிலையில் இருந்ததும் இல்லை இருக்கப்போவதும் இல்லை.

இவ்வாறான சிங்களத்தின் மன நிலையில் ஆர்பர் அம்மையாரின் வருகையை தேவனின் வருகையாக நோக்கும் தமிழர் தரப்பின் எதிர்பார்ப்புகளை ஐ. நா கருத்தில் எடுக்குமா? எத்தனை எதிர்பார்ப்புகள் இப்படி கடந்த காலங்களில் இருந்தது எனினும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. இதுவும் அப்படிப்பட்ட ஒரு ஏமாற்றம் தான் என்பது தவிர்க்க முடியாத உண்மை என்று கருத இடமுண்டு. லூயிஸ் ஆர்பர் அம்மையார் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்துள்ளார். ஐ .நா வின் மனித உரிமை கண்காணிப்பகத்தை இலங்கையில் நிறுவதற்கு அம்மையார் கோரிக்கையை விடுத்தார். அதை அனுமதிக்கப்போவதில்லை என்று அரசு மறுப்பும் தெரிவித்து விட்டது.

சிங்கள மக்கள் தெளிவாகவும், வெளிப்படையாகவும் தமது நிலைப்பாட்டை ஐம்பது வருடமாக காட்டுகின்றார்கள். எனவே தமிழர்கள் சிங்களம் சுட்டிக்காட்டும் இரண்டு தீர்வில் ஜனநாயகத்திற்கு விரோதமில்லாத தீர்வை தேர்ந்தெடுக்க வேண்டியதைத் தவிர, தமிழர் நிம்மதியாக வாழ வேறு மார்க்கம் எதுவும் இல்லை என்பது தெளிவானது.

(படங்களை இணைத்துக்கொள்ள உதவிய தளங்களுக்கும் நன்றிகள்.

http://www.virakesari.lk/VIRA/Louis/index.htm

http://www.tamilwin.net/article.php?artiId...token=dispNews)

ஆக்கம் - சுகன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்டுரைக்கு எதிர்வினை செய்வதற்கு முதல் இணைத்த படங்கள் யாரிடமிருந்தென நன்றி தெரிவித்த நாகரிகத்திற்கு வாழ்த்துக்கள்.

கடவுளுக்குரியதை கடவுளுக்கும் செசாருக்குரியதை செசாருக்கும் வழங்க முனைந்தோர் புகழ் ஓங்குக.

Link to comment
Share on other sites

மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்தவே இவ்வளவு போராட்டங்கள் செய்ய வேண்டியுள்ளது. இந்த நிலையில் மனித உரிமை மீறல்களை கட்டுப்படுத்துவதை குதிரைக்கு எப்போ கொம்பு முளைக்கும் என்று காத்திருப்பது போல் ஒன்று தான்.

உண்மையான விசயம். "உன்ர உடுப்பில ஊத்தை இருக்கு" என்று சொன்னால், "அந்தா, அவன்ர உடுப்பிலயும் ஊத்தை இருக்கு" என்று மற்றையவரைக் கைகாட்டும் ஒரு போக்கைத்தான் சிங்கள அரசும் செய்கிறது. மற்றைய நாடுகளில் நடக்கும் மனித உரிமை மீறல்களைச் சுட்டிக்காட்டி நாம் அதைவிடப் பறவாயில்லை என்று சொல்கிறார்கள். ஒருவகையில் தாமும் மனித உரிமை மீறல்கள் செய்கிறோம் என்பதை அவர்கள் ஒத்துக்கொள்கிறார்கள். :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்கத்திற்க்கு நன்றிகள்,ஆனாலும் ஜனநாயகத்திற்க்கு விரோதமான தீர்வைதான் தமிழ் மக்கள் எடுக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.