Jump to content

இங்கிலாந்து vs இந்தியா ஒருநாள் போட்டி தொடர்


Recommended Posts

பதிலடி கொடுக்க இளம் படை ரெடி: ஒருநாள் தொடர் நாளை ஆரம்பம்
ஆகஸ்ட் 23, 2014.

 

பிரிஸ்டல்: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கவுள்ளது. இதில் சஞ்சு சாம்சன், குல்கர்னி, கரண் சர்மா போன்ற இளம் வீரர்கள் களமிறங்க உள்ளனர். இவர்கள், டெஸ்ட் தொடர் தோல்விக்கு சரியான பதிலடி கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1–3 என, இழந்தது. இதையடுத்து, ஒருநாள் தொடரில் பயிற்சியாளர் பிளட்சருக்கு உதவ, சஞ்சய் பங்கர், பாரத் அருண் உள்ளிட்டோர் சென்றுள்ளனர். இவர்கள் பணியை மேற்பார்வை செய்யவுள்ள ‘இயக்குனர்’ ரவி சாஸ்திரி, நேற்று அணியினருடன் இணைந்தார்.

 

இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை பிரிஸ்டலில் நடக்கவுள்ளது. ஒருநாள் அரங்கில் ‘உலக சாம்பியன்’ இந்தியா தான். சர்வதேச தரவரிசையிலும் ‘நம்பர்–2’ (112 புள்ளி) ஆக உள்ளது.

இங்கிலாந்து அணி (109) ஐந்தாவது இடத்தில் தான் உள்ளது. ‘நடப்பு உலக சாம்பியன்’ அந்தஸ்தை தக்கவைக்க, இந்திய அணியை தயார் செய்ய வேண்டிய பொறுப்பு, இந்திய கிரிக்கெட் போர்டுக்கு (பி.சி.சி.ஐ.,) உள்ளது.

இப்போதைய நிலையில், இங்கிலாந்து மண்ணில் மற்றொரு தொடரை இழக்காமல் இருப்பதே முக்கியம். ஒருநாள் கோப்பையை இந்தியா வெல்லும் பட்சத்தில் ரசிகர்களுக்கு மிகுந்த ஆறுதலாக இருக்கும்.

 

கோஹ்லி எழுச்சி:

நேற்று முன்தினம் நடந்த பயிற்சி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது. டெஸ்ட் தொடரில் சொதப்பிய கோஹ்லி (10 இன்னிங்ஸ், 134 ரன்கள்), பயிற்சியில் 71 ரன்கள் எடுத்து அசத்தினார்.

ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரையில் இவர் தான் இப்போதைய ‘ரன் மெஷின்’. இதுவரை 134 போட்டிகளில், 5,634 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 19 சதம், 30 அரைசதங்கள் அடங்கும். இவருடன் ரெய்னாவும் இணைந்து அசத்த உள்ளார்.

 

சபாஷ் சஞ்சு:

அணியில் புதிதாக இடம் பெற்றுள்ள சஞ்சு சாம்சன், 19, தவால் குல்கர்னி, 25, உள்ளிட்டோர் ஆஸ்திரேலியாவில் நடந்த இளம் வீரர்களுக்கான தொடரில் மிரட்டியவர்கள். கடந்த ரஞ்சி சீசனில் கேரள அணிக்காக பங்கேற்ற சாம்சன் 530 ரன்கள் குவித்தார். இவர் துடிப்பான விக்கெட் கீப்பர் என்பது கூடுதல் சிறப்பு.

கரண் கலக்கல்:

சுழற்பந்து வீச்சாளர் கரண் சர்மா, 23, ஐ.பி.எல்., தொடரில் ஐதாராபாத் அணிக்காக ரூ. 3.75 கோடிக்கு வாங்கப்பட்டார்.  ஏழாவது ஐ.பி.எல்., தொடரில் இவரது ‘எக்கானமி ரேட்’ 3.93 தான்.

அடுத்து வேகப்பந்து வீச்சாளர் குல்கர்னி, 58 முதல்தர போட்டிகளில் 181 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார். இவர்களுடன் அனுபவ ரோகித் சர்மா, அம்பதி ராயுடு, ஜடேஜாவும் கைகொடுக்கலாம்.

தோனிக்கு சவால்:

தரவரிசையில் இங்கிலாந்து பின்தங்கியிருந்தாலும், சொந்தமண்ணில் அவ்வளவு எளிதாக வெற்றியை விட்டுத் தராது. இதனால், டெஸ்ட் தொடரை போல, ஒருநாள் போட்டிகளிலும் கேப்டன் தோனிக்கு கடும் சவால் காத்திருக்கிறது.

 

http://sports.dinamalar.com/2014/08/1408811025/samsoncricket.html

 

Link to comment
Share on other sites

திருப்பிக் கொடுக்க வேண்டிய நேரம்: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகள் பற்றி சுரேஷ் ரெய்னா
 

 

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தன்னம்பிக்கையுடன் போராடி திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

பிசிசிஐ.டிவி இணையதளத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

 

வங்கதேச ஒருநாள் தொடர் முடிந்தவுடன் டெல்லி, லக்னோவில் பயிற்சி மேற்கொண்டேன். மும்பையில் பந்த்ரா குர்லாவில் சிறப்புப் பயிற்சிக்காக சென்றிருந்தேன்.

அங்குதான் சச்சின் டெண்டுல்கரைச் சந்தித்தேன், அர்ஜுன் டெண்டுல்கர் அங்குதான் வலைப்பயிற்சி செய்து வருகிறார். அப்போது சச்சின் எனக்கு சில அறிவுரைகளை வழங்கினார். இங்கிலாந்தில் எப்படி ஆடினால் பரிமளிக்க முடியும் என்று நான் அவரிடம் கேட்டேன். அவர் சில ஆலோசனைகளை வழங்கினார். அதேபோல் பிரவீண் ஆம்ரேயிடமும் நீண்ட நேரம் பேட்டிங் உத்திகள் பற்றி விவாதித்தேன்.

 

இங்கிலாந்து ஸ்விங் பந்துகளை எதிர்கொள்ள டேப் சுற்றிய டென்னிஸ் பந்தில் பந்து வீசச் செய்து பேட்டிங் பயிற்சி மேற்கொண்டேன்.

இந்திய அணி கடினமான காலக்கட்டத்தில் உள்ளது. இப்போதுதான் சிறந்த குணாம்சத்தை நாம் வெளிப்படுத்த வேண்டும். இதுபோன்ற தோல்விகளிலிருந்து மீள்வது கடினம்தான், ஆனாலும் மீண்டு வந்து நிரூபித்துதான் ஆகவேண்டும். போராட்டக் குணத்தைக் கொண்டு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

6ஆம் நிலையில் நான் களமிறங்கினாலும் இருமுனைகளிலும் வெவ்வேறு பந்துகள் என்ற புதிய விதிமுறை வந்த பிறகு புதிய பந்தை எதிர்கொள்வது போல்தான் எதிர்கொள்ள நேரிடுகிறது.

 

பவர் பிளே மிக முக்கியமான கட்டமாகும். அப்போதுதான் எல்லாப் பந்துகளையும் அடிக்கச் சென்று விக்கெட்டுகளை மடமடவென இழக்க நேரிடுகிறது. யாராவது ஒரு செட்டில் ஆன பேட்ஸ்மென் பவர் பிளேயின் போது பேட்டிங் கிரீசில் இருப்பது அவசியம்.

இங்கிலாந்தில் பேட் செய்வது பற்றி சவ்ரவ் கங்குலியிடமும் விவாதித்துள்ளேன்.

இவ்வாறு அந்தப் பேட்டியில் கூறியுள்ளார் சுரேஷ் ரெய்னா.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE/article6345138.ece

Link to comment
Share on other sites

முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது
 

 

பிரிஸ்டல் மைதானத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி தொடர் மழை காரணமாகக் கைவிடப்பட்டது.

புதன் கிழமையன்று கார்டிஃபில் 2வது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.

இங்கிலாந்தில் இந்தியா அனைத்து அணிகளுக்கும் எதிராக விளையாடிய ஒருநாள் போட்டிகள் மொத்தம் 62 இதில் 29 போட்டிகளில் வென்று 29 போட்டிகளில் தோற்றுள்ளது. ஒரு போட்டி ‘டை’ஆகியுள்ளது.

 

இங்கிலாந்துக்கு எதிராக இங்கிலாந்தில் 34 ஒருநாள் போட்டிகளில் 12 போட்டிகளில் வென்று 18 போட்டிகளில் தோல்வி கண்டுள்ளது. ஒரு போட்டி டை.

தனிப்பட்ட வீர்ர்களில் சுரேஷ் ரெய்னா இங்கிலாந்துக்கு எதிராக 11 அரைசதங்களை எடுத்துள்ளார். திராவிடும் 11 அரைசதங்களை எடுத்துள்ளார். இருவரும் ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக சதம் கண்டதில்லை.

கேப்டன் தோனி இங்கிலாந்துக்கு எதிராக 9 ஒருநாள் அரைசதங்களை எடுத்துள்ளார்.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81/article6350569.ece

Link to comment
Share on other sites

ரெய்னா அதிரடி சதம்; தோனி, ரோகித் சர்மா அரைசதம்: இந்தியா 304 ரன்கள் குவிப்பு
 

 

கார்டிஃபில் நடைபெற்று வரும் 2வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 304 ரன்கள் எடுத்துள்ளது.

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் குக் முதலில் இந்திய அணியை பேட் செய்ய அழைத்தார். முதல் 2 ஓவர்களில் ரன்கள் எடுக்க முடியவில்லை. பிறகு ரோகித் சர்மா முதல் பவுண்டரி அடிக்க தவன் அதன் பிறகு 2வது பவுண்டரியை அடித்தார்.

 

ஆனாலும் கிறிஸ் வோக்ஸ், ஜேம்ஸ் ஆண்டர்சன் திறமையாக வீச இந்திய தொடக்க வீரர்கள் எதிர்பார்த்த துவக்கத்தை கொடுக்க முடியவில்லை. ஷிகர் தவன் ஒருநாள் போட்டியில் தன்னை நிரூபிக்க வேண்டியவர் ஆனால் அவர் கால்கள் நகர மறுத்தது.

ஒருவழியாக 2 பவுண்டரிகளுடன் அவர் 22 பந்துகளில் 11 ரன்கள் எடுத்திருந்த போது வோக்ஸ் வீசிய ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே சென்ற பந்தை தவன் தொட்டார் கீப்பரிடம் கேட்ச் ஆனது.

 

அதே ஓவரில் இந்தியாவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. கோலி இறங்கி 2 பந்துகளைத் தடுத்தாடினார். ஆக்ரோஷமாக ஆட திடீர் முடிவெடுத்து அடுத்த பந்தை அவர் தேவையில்லாமல் மேலேறி வந்து அடித்தார். ஆனால் மிட் ஆஃபில் குக் கையில் கேட்ச் பரிசாக அளிக்கப்பட்டது.

ரஹானே, ரோகித் சர்மா மீட்பு:

ரஹானே, ரோகித் சர்மா தோள்களில் மீட்கும் பொறுப்பு இறங்கியது. ஆட்டத்தின் 11வது ஓவரை ஜேம்ஸ் ஆண்டர்சன் வீச ஒரு பந்தை சுழற்று சுழற்றினார் பந்து பவுண்டரிக்குப் பறந்தது. அதே ஓவரில் கவர், மிட் ஆஃபிற்கு இடையே மேலும் ஒரு அபாரமான பவுண்டரியை அடித்தார் ரோகித். ரஹானே ஸ்டோக்ஸ் பந்தை மிட் ஆனுக்கு பவுண்டரி அடித்து தன் இருப்பை கவனிக்கச் செய்தார்.

 

அதன் பிறகு ஸ்டோக்ஸ் வீசிய லெந்த் பந்தை 15வது ஓவரில் ரோகித் சர்மா ஃப்ரீ ஹிட் ஷாட்டை ஸ்கொயர் லெக்கில் சிக்சர் அடித்தார். பிறகு ரஹானே ஒரு எக்ஸ்ட்ரா கவர் பவுண்டரி அடித்து, அடுத்து ஒரு சிங்கிள் எடுக்க இருவரும் இணைந்து 49 பந்துகளில் அரைசதக் கூட்டணி கண்டனர்.

இருவரும் இணைந்து ஸ்கோரை 107 ரன்களுக்கு உயர்த்தினர். அப்போது 47 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் எடுத்த ரஹானே டிரெட்வெல் பந்தில் ஸ்டம்ப்டு ஆனார். அவர் டிரெட்வெல் பந்தில் பீட் ஆகி கால்களை உள்ளே கொண்டு வரும் முன் ஸ்டம்ப்டு ஆனதாக தீர்ப்பளிக்கப்பட்டது.

ரெய்னா களமிறங்கினார். ரோகித் சர்மா ஸ்டோக்ஸ் பந்தை திருப்பி விட்டு ஒரு ரன் எடுத்து 82 பந்துகளில் அரைசதம் கண்டார். இவரது இந்த இன்னிங்ஸ் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

 

ஆனால் 52 ரன்கள் எடுத்த நிலையில் ஆஃப் ஸ்பின்னர் டிரெட்வெல் பந்தை தேவையில்லாமல் மேலேறி வந்து விளையாடி மிட் ஆஃபில் கேட்ச் ஆனார்.

ரெய்னாவின் சதமும்; தோனியுடன் சேர்ந்து எடுத்த 144 ரன்களும்:

29.2 ஓவர்களில் 132/4 என்ற நிலையில் ரெய்னாவுடன் தோனி ஜோடி சேர்ந்தார். ரோகித் அவுட் ஆகும் போது ரஹானே 15 ரன்களில் இருந்தார். அதன் பிறகு ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துகளில் 3 பவுண்டரி அடித்து ஒரு பெரிய இன்னிங்ஸிற்குத் தயார் என்று காண்பித்தார்.

இன்னிங்ஸின் 38வது ஓவரில் வோக்ஸ் வீச, முதல் பந்தை நேராக சிக்சருக்குத் தூக்கினார் ரெய்னா. பிறகு அதே ஓவரில் 4வது பந்தை லாங் லெக் திசையில் 2வது சிக்சருக்குத் தூக்கினார். 6வது பந்தை மிட்விக்கெட்டில் பவுண்டரி விளாச, அந்த ஓவரில் 20 ரன்கள் எடுக்கப்பட்டது.

அதிலிருந்து ஆரம்பித்ததுதான் இங்கிலாந்தால் ரெய்னாவைக் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. 39வது ஓவரில் 14 ரன்கள் வந்தது. 40வது ஓவரி ஜேம்ஸ் ஆண்டர்சன் வீச வர 3 அற்புதமான பவுண்டரிகளை அடித்தார் ரெய்னா. அவர் சரேலென 57 பந்துகளில் 76 ரன்களுக்குச் சென்றார். பவர் பிளேயில் தோனி, ரெய்னா ஜோடி 62 ரன்களை விளாசியது இதுதான் திருப்பு முனையாக அமைந்தது.

 

40 ஓவர்களில் 218 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் இருந்த இந்தியா கடைசி 10 ஓவர்களில் 83 ரன்கள் விளாசியது.

ரெய்னா 74 பந்துகளில் 12 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் அடித்து சரியாக 100 ரன்களில் வோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். துணைக் கண்டத்திற்கு வெளியே ரெய்னாவின் அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோராகும் இது.

கேப்டன் தோனி அபாரமாக விளையாடி 52 ரன்களை 6 பவுண்டரிகளுடன் 51 பந்துகளில் எடுத்து வோக்ஸ் வீசிய கூக்ளியில் பவுல்டு ஆக, இந்தியாவின் ரன் விகிதம் சற்றே சரிவு கண்டது. ரவீந்திர ஜடேஜாவுக்கு பந்து மட்டையில் சிக்கவில்லை. அஸ்வின் 5 பந்துகளில் 10 ரன்கள் எடுக்க இந்தியா 304 ரன்களை எட்டியது.

இங்கிலாந்து தரப்பில் வோக்ஸ் 52 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆண்டர்சன் கொடுத்த 57 ரன்களில் ரெய்னா அடித்த 6 பவுண்டரிகள் அடங்கும்.

இலக்கைத் துரத்த இங்கிலாந்து அணி இனிமேல் களமிறங்கவுள்ளது.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-304-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6357118.ece

Link to comment
Share on other sites

கிரிக்கெட்: இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா
 

கார்டிப்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இரு அணிகள் மோதும் இரண்டாவது ஒரு நாள் போட்டி கார்டிப்பில் நடக்கிறது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி முதலில் 'பீல்டிங்' செய்ய முடிவு செய்தது. இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 304 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் சுரேஷ் ரெய்னா 100 ரன்களுக்கு அவுட்டானார். ரோகித் சர்மா 52, ரஹானே 41, தோனி 52 ரன்கள் எடுத்தனர். பின் மழை குறுக்கிட்டதால் 'டக்ஸ்வொர்த்-லிவிஸ்' முறைப்படி இங்கிலாந்து அணிக்கு 47 ஓவரில் 295 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து 38 ஓவரில் 161 ரன்களுக்கு 'ஆல் அவுட்டாகி' 133 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1056034

 

Link to comment
Share on other sites

ஜடேஜா 4 விக்கெட்டுகள்: 161 ரன்களுக்குச் சுருண்டது இங்கிலாந்து; இந்தியா வெற்றி

 

கார்டிஃப்பில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் ஜடேஜா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற 161 ரன்களுக்குச் சுருண்டது இங்கிலாந்து. 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்று முன்னிலை பெற்றது.

இந்தியா முதலில் பேட் செய்து ரெய்னாவின் அதிரடி சதம் மற்றும் ரோகித், தோனி அரைசதங்கள் மூலம் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 304 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து மழை பெய்ததால் ஆட்டம் 3 ஓவர்கள் குறைக்கப்பட்டது, இங்கிலாந்து அணி 47 ஓவர்களில் 295 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று டக்வொர்த் முறையில் புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

 

ஆனால் ஆட்டத்தின் எந்த நிலையிலும் இந்தியாவை இங்கிலாந்து பேட்டிங் அச்சுறுத்தவில்லை. கடைசியில் 38.1 ஓவர்களில் இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி கண்டது.

தோனியின் கள அமைப்பு, பந்து வீச்சு மாற்றங்கள் கை கொடுக்க, அருமையாக பந்து வீசியதோடு, இந்திய அணியின் பீல்டிங்கிலும் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. குறிப்பாக கடைசியில் ரஹானே பவுண்டரி அருகே கிட்டத்தட்ட சிக்சருக்குச் சென்ற பந்தைக் கேட்ச் பிடித்ததைக் குறிப்பிடலாம்.

இங்கிலாந்தின் துவக்கம் நன்றாக அமைந்தது குக் (19) ஹேல்ஸ் (40) இணைந்து 54 ரன்களைச் சேர்த்தனர். அப்போது மொகமது ஷமி வீசிய பந்து ஒன்றுக்கு அதிகமாக ஆஃப் திசையில் நகர்ந்த குக் பந்தை அடிக்க முயன்று கோட்டைவிட்டு எல்.பி.ஆனார்.

 

அதே ஓவரின் கடைசி பந்தில் இயன் பெல்லுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மொகமது ஷமி வீசிய இன்ஸ்விங்கரை ஆடாமல் அவர் விட பந்து ஸ்டம்பைத் தாக்கியது.

துவக்கத்தில் மோகித் சர்மா நல்ல லெந்த் மற்றும் லைனில் வீசி கட்டுக்குள் வைத்திருந்தார். பெல் அவுட் ஆன பிறகு ஜோ ரூட் களமிறங்கி 4 ரன்களை எடுத்த நிலையில் புவனேஷ் குமாரின் மிகப்பெரிய இன்ஸ்விங்கரை ஆடாமல் விட்டு பவுல்டு ஆனார். அற்புதமான பந்து அது. சுமார் 15 டிகிரி அந்தப் பந்து உள்ளே ஸ்விங் ஆகி வந்ததாக வர்ணனையில் கூறப்பட்டது.

 

ஜடேஜா பந்து வீச வந்தவுடன் ஆட்டம் மொத்தமாக இந்தியா பக்கம் வந்துவிட்டது. அபாய துவக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் 40 ரன்களில் இருந்தபோது தேவைப்படும் ரன் விகிதம் கடுமையாக எகிறிக் கொண்டிருந்ததால் ஜடேஜா பந்தை ஸ்வீப் செய்தார் ஆனால் பந்து மட்டையின் மேல் விளிம்பில் பட்டு பின்னால் கேட்ச் ஆனது. அஸ்வின் கேட்சை எடுத்தார். அந்த இடத்தில் ஃபீல்டரை நிறுத்தியது ஒருநாள் கிரிக்கெட்டில் தோனியின் அனுபவத்தைக் காட்டியது.

அடுத்ததாக அபாய வீரர் ஜோஸ் பட்லர் 2 ரன்களில் ஜடேஜாவின் வெளியே திரும்பிய பந்தை டிரைவ் ஆடி கவர் திசையில் கோலியிடம் எளிதான கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்து 85 ரன்களில் அதன் பாதி விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது.

 

மீதமிருக்கும் அதிரடி வீரர் இயன் மோர்கன் மட்டுமே. அவர் 28 ரன்கள் எடுத்திருந்த போது, அஸ்வின் பந்தை மிகவும் ரீச் செய்து ஸ்வீப் ஆட பந்து சரியாக மட்டையில் சிக்காமல் டீப் ஸ்கொயர் லெக்கில் மொகமது ஷமியிடம் கேட்ச் ஆனது.

பென் ஸ்டோக்ஸ் என்ற மற்றொரு அதிரடி வீரர் 23 ரன்கள் எடுத்திருந்த போது ஜடேஜாவின் பந்தை நன்றாகவே லாங் ஆன் நோக்கி தூக்கி அடித்தார். அது சிக்சர் நோக்கிச் சென்ற போது ரஹானே அருமையாக அதனை நல்ல பேலன்சுடன் கேட்ச் ஆக்கினார்.

 

ஜோர்டான் களமிறங்கி ரன் எடுக்காமல் ரெய்னாவின் பந்தில் நேராக எல்.பி.ஆகி வெளியேறினார். கிறிஸ் வோக்ஸிற்கு ஷமி பந்தில் எளிதான கேட்ச் ஒன்றை ரோகித் சர்மா மிட்விக்கெட்டில் தவற விட்டார். அவர் அதன் பிறகு ஒரு சிக்ஸ் அடித்தார். ஆனால் 20 ரன்களில் அவர் ஜடேஜா பந்தை மேலேறி வந்து ஆட முயன்று கோட்டைவிட்டு தோனியிடம் ஸ்டம்ப்டு ஆனார்.

டிரெட்வெல் கடைசியாக 10 ரன்களில் அஸ்வினிடம் அவுட் ஆக இந்தியா வெற்றிக் கொண்டாட்டத்தைத் தொடங்கியது. மோகித் சர்மா விக்கெட் எடுக்காவிட்டாலும் 6 ஓவர்களில் 18 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். ஜடேஜா 7 ஓவர்களில் 28 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

அஸ்வின் 38 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆட்ட நாயகன் ரெய்னா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார். இந்திய அணி ஒன்று திரண்டு பேட்டிங், பவுலிங், பீல்டிங் அனைத்துப் பகுதிகளிலும் கறாரான அணுகுமுறையுடன் விளையாடி வெற்றியைச் சாதித்துள்ளது.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9C%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9C%E0%AE%BE-4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-161-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/article6357530.ece

Link to comment
Share on other sites

இந்திய ஒருநாள் போட்டி வெற்றி: சில சாதனைகள்
 

 

இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் சுரேஷ் ரெய்னா எடுத்த சதம் துணைக் கண்டத்திற்கு வெளியே எடுக்கும் முதல் சதம் ஆகும். ஒரு நாள் போட்டிகளில் அவரது 4வது சதம்.இங்கிலாந்துக்கு எதிராகவும் அவரது முதல் சதம் இதுவே.

ஒருநாள் போட்டிகளில் 10வது ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார் ரெய்னா, இங்கிலாந்துக்கு எதிராக 5வது ஆட்ட நாயகன் விருதாகும்.

இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்களைக் கடந்தார் ரெய்னா. 29 போட்டிகளில் அவர் இங்கிலாந்துக்கு எதிராக மட்டும் 1098 ரன்களை 47.73 என்ற சராசரியில் எடுத்துள்ளார்.

 

கார்டிஃப் மைதானத்தில் விராட் கோலி, ஷிகர் தவன் ஆகியோருக்குப் பிறகு சதம் எடுக்கும் 3வது இந்திய வீரர் ஆவார் ரெய்னா.

28 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஜடேஜா இங்கிலாந்துக்கு எதிராக சிறந்த பந்து வீச்சை நிகழ்த்தினார். ஒருநாள் போட்டிகளில் 4 அல்லது அதற்கும் கூடுதலான விக்கெட்டுகளை 6வது முறையாகக் கைப்பற்றியுள்ளார் ஜடேஜா.

பேட்டிங்கில் ஜடேஜா இங்கிலாந்து மைதானங்களில் வைத்திருக்கும் சராசரி 83.50.

 

இந்தியா 133 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது இங்கிலாந்தில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பெற்ற வெற்றியாகும். மேலும் கார்டிஃப் மைதானத்தில் இந்தியா 4-இல் 3 வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்தில் இங்கிலாந்து அணி எதிரணியினரின் 300 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக இதுவரை துரத்தியதில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு முறை கராச்சியிலும், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக பிரிட்ஜ் டவுனிலும் துரத்தியதே இங்கிலாந்தின் பெரிய துரத்தல்கள்.

 

சவுரவ் கங்குலி, மொகமது அசாருதீனுக்குப் பிறகு அயல்நாட்டு மண்ணில் 100 ஒருநாள் போட்டிகள் விளையாடிய இந்திய கேப்டன் என்ற பெருமையைப் பெற்றார் தோனி.

ரெய்னாவும் தோனியும் ஜோடி சேர்ந்து எடுத்த 144 ரன்கள் 5வது விக்கெட்டுக்காக சேர்த்த 3வது பெரிய ஸ்கோராகும். செப்டம்பர் 11, 2011-ல் ரெய்னாவும் தோனியும் இணைந்து லார்ட்ஸில் 169 ரன்களைப் புரட்டி எடுத்ததே அதிகபட்ச ஜோடி ரன்களாகும்.

தோனியின் நேற்றைய அரைசதம் அவரது 55வது அரைசதமாகும். இங்கிலாந்துக்கு எதிராக 10வது அரைசதமாகும்.

மேலும் 5வது விக்கெட்டுக்காக ரெய்னா-தோனி செய்த சாதனை என்னவெனில் இருவரும் இணைந்து இந்த விக்கெட்டுக்காக 2091 (சராசரி 53.61) ரன்களைச் சேர்த்த்துள்ளனர்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6360670.ece

 

Link to comment
Share on other sites

3வது ஒருநாள் போட்டி: ராயுடு களமிறங்குகிறார்; இந்தியா முதலில் ஃபீல்டிங்
 

 

நாட்டிங்கமில் நடைபெறும் 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தோனி முதலில் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். காயமடைந்த ரோகித் சர்மாவுக்குப் பதிலாக அம்பாதி ராயுடு அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நிலைமை பந்து வீச்சுக்குச் சாதகமாக இருப்பதால் பீல்டிங் தேர்வு செய்திருப்பதாக தோனி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியில் கிறிஸ் ஜோர்டானுக்குப் பதிலாக (கிளென் மெக்ரா போல் வீச முயற்சி செய்யும்) ஸ்டீவ் ஃபின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ரோகித் சர்மா இல்லாததால் ரஹானே தொடக்க வீரராகக் களமிறங்குவார். இங்கிலாந்தில் அவர் ஏற்கனவே தொடக்க வீரராகக் களமிறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://tamil.thehindu.com/sports/3%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/article6365030.ece

Link to comment
Share on other sites

அஸ்வின், தோனி அபாரம்: 227 ரன்களுக்குச் சுருண்டது இங்கிலாந்து

 

டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறும் 3வது ஒருநாள் போட்டியில் தோனியினால் பேட் செய்ய அழைக்கப்பட்ட இங்கிலாந்து 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

தொடக்க விக்கெட்டுக்காக குக் மற்றும் ஹேல்ஸ் 18 ஓவர்களில் 82 ரன்கள் சேர்த்ததோடு இங்கிலாந்தின் மகிழ்ச்சி முடிவுற்றது. அஸ்வின் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஸ்பின்னர்கள் தங்களிடையே 6 விக்கெட்டுகளைப் பகிர்ந்து கொண்டனர். மீண்டும் இங்கிலாந்து இந்தியச் சுழலில் சிக்கியது.

முதல் 4 விக்கெட்டுகளுமே தோனியின் உதவியுடன் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

டிரெட்வெல் கடைசியில் 30 ரன்கள் எடுக்க கடைசி 5 ஓவர்களில் தேவையில்லாமல் இந்தியா 45 ரன்களை விட்டுக் கொடுத்தது. முதலில் அலெக்ஸ் ஹேல்ஸ் 42 ரன்கள் எடுத்து ரெய்னாவின் பந்தை ஸ்வீப் செய்து தோனியிடம் எளிதான கேட்சில் சிக்கினார்.

சிறிது நேரத்திற்கெல்லாம் அலிஸ்டர் குக் 44 ரன்கள் எடுத்து ராயுடு பந்தை மேலேறி வந்து அடிக்க முயன்று லெக் திசைப் பந்தில் பீட்டன் ஆக தோனி ஸ்டம்ப்டு செய்தார். ஆனால் அது மட்டையின் விளிம்பில் பட்டுச் சென்றதால் உண்மையில் கேட்ச்தான். ஆனால் ஸ்டம்ப்டு என்றே அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோ ரூட்டிற்கு ஜடேஜா அபாரமான பந்தை வீசினார். முன்னால் வந்து தடுத்தாடிய ஜோ ரூட்டின் மட்டையைக் கடந்து பந்து செல்ல தோனி ஸ்டம்ப்டு செய்தார்.

அபாய வீரர் மோர்கன் 10 ரன்கள் எடுத்து அஸ்வினின் திரும்பிய, எழும்பிய பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்தார். முதல் 4 விக்கெட்டுகளிலும் தோனியின் உதவியால் கைப்பற்றப்பட்டது.

 

இயன் பெல் பவுண்டரி அடிக்காமல் 28 ரன்கள் எடுத்து. மோகித் சர்மாவின் அபாரமான த்ரோவில் ஸ்டம்பில் பந்து நேரடியாகப் பட ரன் அவுட் ஆனார். வைட் லாங் ஆஃபிலிருந்து நேராக ஸ்டம்பில் அடித்தார் மோகித் சர்மா.

 

ஸ்டோக்ஸின் துயரம் தொடர்கிறது. 2 ரன்கள் எடுத்து அவர் அஸ்வின் பந்தை எட்ஜ் செய்ய முதல் ஸ்லிப்பில் ரெய்னா வலது புறம் டைவ் அடித்து அபாரமான கேட்சைப் பிடித்தார்.

கிறிஸ் வோக்ஸ் 15 ரன்கள் எடுத்து மொகமது ஷமியின் ஷாட் பந்தை புல் செய்து மோகித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தபோது இங்கிலாந்து 182/7 என்று ஆனது.

கிறிஸ் பட்லர் தன் பங்கிற்கு 42 ரன்கள் சேர்த்தார். ஆனால் அவரை எழும்ப விடவில்லை இந்தியப் பந்து வீச்சும் பீல்டிங்கும். கடைசியில் டிரெட்வெல் 18 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 30 ரன்கள் எடுக்க இங்கிலாந்து 227 ரன்களை எட்டியது.

இந்தியத் தரப்பில் அஸ்வின் 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், குமார், ஷமி, ரெய்னா, ராயுடு, ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.இந்தப் பிட்ச் ரன்கள் குவிக்கும் பிட்ச், அதனால் இந்தியா 228 ரன்களை எளிதில் எடுத்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-227-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/article6365233.ece

Link to comment
Share on other sites

கிரிக்கெட்: இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

 

நாட்டிங்காம்: இங்கிலாந்திற்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்தது. இங்கிலாந்து அணி 50 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 227 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியின் குக் 44 ரன்களும், ஹேல்ஸ் மற்றும் பட்லர் தலா42 ரன்களும் எடுத்தனர்.

 

இந்திய அணியின் அஸ்வின் அதிகபட்சமாக 3 விக்கெட்களை வீழ்த்தினார். 228 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி, 43 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் ராயுடு 64 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார். ரஹானே 45 ரன்களுக்கும், கோஹ்லி 40 ரன்களுக்கும், ரெய்னா42 ரன்களுக்கும் அவுட்டானார்கள். 5 தொடர்களை கொண்ட ஒரு நாள் போட்டியில், இந்திய அணி 2-0 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் இரண்டுபோட்டிகள் மீதமுள்ளன. முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1058329

Link to comment
Share on other sites

3வது ஒருநாள் போட்டியில் எளிதில் வென்றது இந்தியா

 

டிரெண்ட் பிரிட்ஜில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் இந்தியா, இங்கிலாந்தை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் தொடரில் 2-0 என்று முன்னிலை வகிக்கிறது.

 

முதலில் ஆடிய இங்கிலாந்து இந்திய சுழற்பந்து வீச்சில் 227 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க தொடர்ந்து ஆடிய இந்தியா 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்திய அணியில் ரஹானே 45 ரன்களையும், விராட் கோலி 40 ரன்களையும் எடுக்க அம்பாட்டி ராயுடு 77 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார்.

சுரேஷ் ரெய்னா 42 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து அதில் 5 பவுண்டரிகளை அடித்து ஸ்கோர் 207 ரன்களாக இருந்த போது அவுட் ஆனார். ஜடேஜா 12 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார்.

 

டிரெட்வெல் வீசிய பந்தை மிட்விக்கெட் திசையில் தூக்கிவிட்டு 2 ரன்கள் ஓடியபோது இந்திய அணி வெற்றி பெற்றது.

ஷிகர் தவன் 16 ரன்கள் எடுத்து மீண்டும் சொதப்பினார். ஓரளவுக்கு சிரமம் இல்லாமல் ஆடிய அவர் வோக்ஸ் வீசிய பந்தை விளாசும் போது, கட் ஷாட்டை தரையில் ஆடாமல் நேராக பீல்டர் கையில் கேட்ச் கொடுத்தார்.

 

ரஹானே மிகவும் அற்புதமாக ஆடினார். அதுவும் வேகப்பந்து வீச்சாளர்களை எக்ஸ்ட்ரா கவர் மற்றும் கவர் திசையில் தூக்கி பவுண்டரிகளை விளாசியது கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தின் ஆட்டத்தை நினைவுபடுத்துவது போல் அமைந்தது.

அவர் 56 பந்துகளில் 6 பவுண்டரி ஒரு சிக்சருடன் 45 ரன்கள் எடுத்து ஸ்டீவ் ஃபின் வீசிய பந்தை தேர்ட்மேன் திசையில் தட்டி விட தவறாக முடிவெடுத்து விக்கெட் கீப்பர் பட்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

 

விராட் கோலி, டிரெட்வெல் பந்தை நேராக சிக்சருக்கு அடித்தார். 2 பவுண்டரிகளில் ஒன்று அவரது சிக்னேச்சர் ஷாட் கவர் டிரைவ் இருந்தது. 40 ரன்களை எடுத்த அவர் மீண்டும் வலது கையை அழுத்தி ஒரு ஷாட்டை ஆட முயல மிட் ஆனில் டிரெட்வெல்லிடம் கேட்ச் கொடுத்து ஸ்டோக்ஸ் பந்தில் அவுட் ஆனார். அவரது வழக்கமான, அவரது பலமான ஷாட்டிலேயே அவர் அவுட் ஆவது நல்ல அறிகுறியாகத் தெரியவில்லை.

120/3 என்ற நிலையில் அம்பாட்டி ராயுடுவும், ரெய்னாவும் இணைந்தனர். 15 ஓவர்களில் 87 ரன்களைச் சேர்த்தனர்.

 

120/3 என்ற நிலையில் இங்கிலாந்து கொஞ்சம் நெருக்கடி கொடுத்திருக்கலாம் ஆனால் இங்கிலாந்து ஒன்றுமே செய்யவில்லை. டெஸ்ட் போட்டிகளில் இந்தியா எப்படி ஆடியதோ அதே போல் ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து ஆடியது.

ரெய்னாவுக்கு ஷாட் பிட்ச் பலவீனம் என்று தெரிந்திருந்தும் ஷாட் பிட்சை வீசி அவரை தொந்தரவு செய்யவில்லை. ஃபுல் லெந்த்தில் வீசியது இங்கிலாந்து, குட் லெந்த்தில் வீசியது இந்திய பேட்ஸ்மென்களுக்கு பிரச்சினைகளைக் கொடுக்கவில்லை.

ராயுடு 63 பந்துகளில் அரைசதம் கண்டார். ரெய்னா. 42 ரன்களில் டிரெட்வெல் பந்தை அடித்து ஆட அதனை வோக்ஸ் அருமையாக கேட்ச் பிடித்தார். ஆனால் இந்தியா 40.2 ஓவர்களில் 207/4 என்று வெற்றியை உறுதி செய்து விட்டது.

ஆட்டநாயகனாக 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சிக்கனமாக வீசிய அஸ்வின் தேர்வு செய்யப்பட்டார்.

 

http://tamil.thehindu.com/sports/3%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/article6365357.ece

 

Link to comment
Share on other sites

Tஇந்தியப் பந்து வீச்சு அபாரம்: இங்கிலாந்து 206 ரன்களுக்குச் சுருண்டது

எட்ஜ்பாஸ்டனில் நடைபெறும் 4வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியப் பந்து வீச்சை மீண்டும் சமாளிக்கத் திராணியற்று இங்கிலாந்து 206 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

டாஸ் வென்று மிகவும் சரியாகப் பிட்சைக் கணித்த தோனி இங்கிலாந்தை முதலில் களமிறக்கினார். அதற்கான பலனை புவனேஷ் குமார் உடனே அளித்தார்.

அவர் அபாய வீரர் ஹேல்சை இன்ஸ்விங்கரில் பவுல்டு செய்து அதே ஓவரில் குக் விக்கெட்டையும் வீழ்த்தி அபாரத் தொடக்கம் கொடுத்தார். பிறகு கேரி பாலன்ஸ விக்கெட்டை 7 ரன்களில் மொகமது ஷமி வீழ்த்தினார். இங்கிலாந்து 23/3 என்று ஆனது.

ரூட் மற்றும் இயான் மோர்கன் 4வது விக்கெட்டுக்காக 80 ரன்கள் சேர்த்தனர். ஆனால் அது மந்தமாக சேர்க்கப்பட்டது. அதன் பிறகு அடித்து ஆடியிருக்க வேண்டும். ஆனால் ஸ்கோர் 103-ஐ எட்டியபோது மோர்கன் 32 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஜடேஜாவின் பந்தை லெக் கல்லியில் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்தார்.

81 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்த ஜோ ரூட், ரெய்னாவை ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்று பந்து டாப் எட்ஜ் எடுக்க தேர்ட்மேன் திசையில் குல்கர்னியிடம் கேட்ச் ஆனது.

மொயீன் அலி களமிறங்கி மிகவும் அசத்தலாக ஆடினார் அவர் 3 பவுண்டரி 2 சிக்சர்களை அடித்து 43 ரன்களை எடுக்க அவரும் பட்லரும் இணைந்து 50 ரன்களைச் சேர்த்து ஸ்கோரை 164 ரன்களுக்கு உயர்த்திய போது ஷமி பந்தில் பட்லர் எல்.பி.ஆனார். ஆனால் அது நாட் அவுட்டாக இருக்கலாம் என்று ரீப்ளேயில் தெரிந்தது.

பிறகு மொயீன் அலி மேலும் மேலும் 20 ரன்கள் சேர்க்க கிறிஸ் வோக்ஸ் 10 ரன்களை எடுக்க ஸ்கோர் 194 ரன்களை எட்டியபோது வோக்ஸ் ரெய்னாவின் நேரடியான த்ரோவுக்கு ரன் அவுட் ஆனார். அபார ஃபீல்டிங்.

பிறகு 50 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்சர்கள் அடித்த மொயீன் அலி 67 ரன்களில் அஸ்வின் பந்தை கட் செய்ய முயன்று பவுல்டு ஆனார்.

ஸ்டீவ் ஃபின் விக்கெட்டை ஜடேஜா வீழ்த்த கடைசியாக குர்னியை, ஷமி வீழ்த்தினார். ஆண்டர்சன் 1 ரன் நாட் அவுட்.

இந்திய அணியில் குமார், ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஷமி 28 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

http://tamil.thehindu.com/sports/இந்தியப்-பந்து-வீச்சு-அபாரம்-இங்கிலாந்து-206-ரன்களுக்குச்-சுருண்டது/article6372973.ece?homepage=true

Link to comment
Share on other sites

ரஹானே 106; தவான் 97 நாட் அவுட்: ஒருநாள் தொடரை வென்றது இந்தியா

 

 

இங்கிலாந்துக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் ரஹானே, தவன் ஆகியோரது அபார பேட்டிங்கினால் இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

207 ரன்கள் வெற்றி இலக்கை இந்தியா 30.3 ஓவர்களில் எட்டியது. மேலும் கடைசி பந்தை ஷிகர் தவன் சிகர் அடிக்க இந்தியா 212/1 என்று 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை அபார வெற்றி பெற்று ஒருநாள் தொடரை வென்றது.

 

இந்த வெற்றியின் மூலம் இந்தியாவின் அதிக வெற்றிகளைக் குவித்த கேப்டன் என்ற சாதனையை தோனி நிகழ்த்தியுள்ளார்.

ரஹானே 100 பந்துகளில் 10 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 106 ரன்களை விளாச, ஷிகர் தவன் 81 பந்துகளில் 11 பவுண்டரி 4 சிச்கர்களுடன் 97 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். கோலி 3 பந்துகளில் 1 ரன் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார்.

 

ரஹானே, தவன் இணைந்து முதல் விக்கெட்டுக்காக 28.4 ஓவர்களில் 183 ரன்களைச் சேர்த்தனர். ரஹானே கடினமான பந்துகளை சிக்சருக்கும் பவுண்டரிக்கும் விரட்டியவர் கடைசியில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் குர்னி வீசிய தாழ்வான புல்டாசை கவர் பாயிண்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ரஹானேயின் முதல் சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 

அவர் அவுட் ஆகும் போது தவான் 69 ரன்களில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B0%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-106-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-97-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/article6373649.ece

 

Link to comment
Share on other sites

இந்தியா-இங்கிலாந்து கடைசி ஒருநாள் போட்டி
 

 

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் லீட்ஸில் இன்று நடைபெறுகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் படுதோல்வி கண்ட இந்திய அணி, பின்னர் தொடர்ச்சியாக 3 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. ஏற்கெனவே தொடரைக் கைப்பற்றிவிட்டதால் ஒப்புக்காக ஆடப்படும் இந்த ஆட்டம் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஆனாலும் இந்தப் போட்டியை வெல்ல வேண்டும் என்பதில் இந்திய அணி தீவிரமாக உள்ளது. அதேநேரத்தில் இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றியை பெற முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

உலகக் கோப்பை போட்டிக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் இந்திய அணி இந்தத் தொடரில் சிறப்பாக ஆடியிருப்பது வீரர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தொடக்க ஆட்டக்காரர் ரஹானே தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார். ஷிகர் தவன் கடந்த ஆட்டத்தில் 97 ரன்கள் குவித்து மீண்டும் பார்முக்கு திரும்பியிருப்பது பேட்டிங்கிற்கு பலம் சேர்த்துள்ளது.

 

அதேநேரத்தில் இந்தத் தொடரில் இதுவரை விளையாடாதவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம் என தெரிகிறது. கேப்டன் தோனிக்கு ஓய்வளித்துவிட்டு அவருக்கு பதிலாக சஞ்ஜூ சாம்சன் சேர்க்கப்படலாம். இதேபோல் வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஸ்வர் குமார், முகமது சமி ஆகியோருக்கு ஓய்வளித்துவிட்டு உமேஷ் யாதவ், கரண் சர்மாவுக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

தொடர் தோல்வி கண்டுள்ள இங்கிலாந்து அணி விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. அதனால் ஆறுதல் வெற்றி பெற அந்த அணி தீவிரம் காட்டும். இந்தத் தொடரில் அலெக்ஸ் ஹேல்ஸ், கேப்டன் குக் ஆகியோர் மட்டுமே ஓரளவு விளையாடியுள்ளனர். அந்த அணியின் மிடில் ஆர்டர் முற்றிலுமாக செயலிழந்த நிலையில், இயான் பெல் இந்த ஆட்டத்தில் விளையாடாதது மேலும் பின்னடைவாக அமைந்துள்ளது. பந்துவீச்சிலும் இங்கிலாந்தின் நிலைமை கவலைக்குரியதாகவே உள்ளது.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/article6381068.ece

Link to comment
Share on other sites

5-வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்து ஆறுதல் வெற்றி

 

 

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே லீட்ஸில் நடைபெற்ற 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், சதமடித்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாய் இருந்தார்.

இங்கிலாந்து நிர்ணயித்த 295 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணி, முதல் ஓவரிலேயே ரஹானேவை இழந்தது. தொடர்ந்து சொதப்பி வரும் கோலி, 6-வது ஓவரில் ஆண்டர்சன் வீசிய பந்தில் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்த தவான், ராயுடு ஜோடியால் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியாமல் போனது. தவான் 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மோயின் அலியின் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார்.

 

சிறப்பாக ஆடிய ராயுடு 59 பந்துகளில் அரை சதம் கண்டார். ஆனால் அவரும் அடுத்த சில ஓவர்களில் 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரெய்னா 18 ரன்கள், தோனி 29 ரன்கள், அஸ்வின் 16 ரன்கள் என சீரான இடைவேளையில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, மறுமுனையில் ஆடிவந்த ரவீந்திர ஜடேஜா மட்டும் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒரு கட்டத்தில் இந்தியா 9 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

 

30 பந்துகளில் 86 ரன்கள் தேவை என்கிற நிலையில், கடைசி விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஜடேஜா, உமேஷ் யாதவ் இணை, 24 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்தது. இதில் 2 பந்துகளை மட்டுமே சந்தித்த யாதவ், ஒரு ரன் கூட சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முடிவாக, 49-வது ஓவரில் ரவீந்திர ஜடேஜா 87 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 41 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

 

5 போட்டிகள் கொண்ட இந்த ஒரு நாள் தொடரில், முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. அடுத்த 3 போட்டிகளிலும் இந்தியா அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. 5-வது போட்டியிலாவது இங்கிலாந்து வெற்றி பெறுமா என்ற ஏங்கிய சொந்த ஊர் ரசிகர்களுக்கு, இந்த வெற்றி பெரிய ஆறுதலாக அமைந்தது. 113 ரன்கள் அடித்த இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் ஆட்டநாயகனாகவும், இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 

முன்னதாக டாஸ் வென்ற, இங்கிலாந்தை பேட்டிங்கை செய்ய அழைத்தார். துவக்க வீரர் ஹேல்ஸ் 4 ரன்களுக்கு வெளியேற, வழக்கத்தை விட முன்னதாக களமிறக்கப்பட்ட மோயின் அலி 9 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். கேப்டன் குக் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுமுனையில் ஆடிவந்த ஜோ ரூட், இந்திய பந்துவீச்சை சிறப்பாக சந்தித்தார். 68 பந்துகளில் அரை சதம் தொட்ட ரூட், பவர்ப்ளேவில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

 

அவருடன் இணைந்த பட்லரும் தன் பங்கிற்கு, இந்தியாவின் பந்துவீச்சை சிதறடித்தார். பவர்ப்ளே ஓவர்களில் (5 ஓவர்கள்) 54 ரன்கள் குவிய, இங்கிலாந்து அணியின் ரன்ரேட் உயர்ந்தது. 40 பந்துகளை சந்தித்த பட்லர் 49 ரன்களில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனதால் அரை சதத்தை தவறவிட்டார். 104 பந்துகளில் 97 ரன்கள் எடுத்திருந்த ரூட், ஜடேஜாவின் பந்தை சிக்ஸருக்கு விளாசி, சதத்தை எட்டினார். இது அவரது சொந்த மண் என்பது குறிப்பிடத்தக்கது.

முடிவாக 50 ஓவர்களில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 294 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை எட்டியது.

 

 

http://tamil.thehindu.com/sports/5%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/article6385740.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.