Jump to content

விமர்சிப்பவன் எதிரியா?


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு விமர்சனம் உடன்பாடற்றதாக இருக்கலாம். ஆனால் அது தேவையற்றதாக இருக்க முடியாது. மனித உடலி்ல் வலியின் செயற்பாட்டை இது ஒத்திருக்கிறது. அதாவது இது நலமற்ற நிலையின் மீது கவனத்தைக் குவிக்கச் செய்கிறது. என்று விமசனம் பற்றி  Winston Churchill கூறுகிறார்.

(Criticism may not be agreeable, but it is necessary. It fulfils the same function as pain in the human body. It calls attention to an unhealthy state of things. ― Winston Churchill)

சுதந்திரத்திற்கான அச்சுறுத்தல் விமர்சனமின்மையே என்கிறார்.1986 இல் இலக்கியத்திற்காக நோபல் பரிசுபெற்ற நைஜீரிய நாட்டு எழுத்தாளும் நாடகசாரியருமான Wole Soyinka.

(The greatest threat to freedom is the absence of criticism. ― Wole Soyinka)

எமது சமுதாயம் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளுமளவுக்கு பண்படைந்துள்ளதா அல்லது நெகிழ்ச்சித்தன்மையுள்ளதா?

எமது சமுதாயம் விமர்சனத்தை எவ்வாறு பார்க்கிறது?  விமர்சனம் செய்பவர் எவ்வாறு சமூகத்தால் நோக்கப்படுகிறார்? விமர்சிப்பவருக்கும், விமர்சிக்கப்பட்டவருக்குமான உறவு எவ்வாறு இருக்கிறது என்று நோக்குவோமெனில் நாம் கடந்துசெல்லுவேண்டிய பாதை அதிகமாய் இருப்பதுபோல இருக்கிறது

எமது சமுதாயம் உணர்ச்சிகளினால் கட்டுண்டது. பலரும் விமர்சனங்களை அறிவார்த்தமாக பகுத்தாராய்வு செய்வதில்லை. தன்னைச் சூழவுள்ள மனிதர்கள், நெருக்கமானவர்கள், தாம் சார்ந்துள்ள நிறுவனங்கள், குழுக்கள் என்று விமர்சனங்களை பல வித நிறங்களைக்கொண்ட கண்ணாடிகளுக்குள்ளால் பார்ப்ப‌தே வழமையாக இருக்கிறது. அதன் காரணமாக விமர்சனம் புகழ்ச்சியாக இருக்கும்போது மட்டுமே பலராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

மாற்றுக்கருத்துடைய விமர்சனங்கள் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. மாற்றுக்கருத்துடைய விமர்சனத்தை முன்வைப்பவரை எதிரியாகநோக்கும் சிந்தனையையும் கொண்டது எமது சமூகம். எவையும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது கிடையாது.

அதேவேளை விமர்சனத் தர்மம், விழுமியங்கள், நெறிமுறைகளுக்கு உட்பட்டு விமர்சனம் அமையவேண்டும் என்பதும் மிகவும் அவசியம்.


பலரிடம் உள்ள பலவீனம் என்னவென்றால், அவர்கள் புகழ்ச்சியினூடாக பாழாகிப்போவதையே விரும்புகிறார்கள், விமர்சனத்தினூடாக மீட்கப்படுவதைவிட  என்கிறார் Norman Vincent Peale என்னும் அறிஞர்.

(The trouble with most of us is that we would rather be ruined by praise than saved by criticism. - Norman Vincent Peale)



புகழ்ச்சியை அதிகம் உள்ளடக்காது, மாற்றுக்கருத்துக்களை முன்வைத்து எழுதப்படும் விமர்சனங்களால் விமர்சகருடன், விமர்சிக்கப்பட்டவரும் அவரது ஆதரவாளர்களும் முரண்பட்டுக்கொள்ளும் நிலையே எமது சமூகத்தில் அதிகம் காணப்படுகிறது. இது வளமான ஒரு பண்பட்ட சமூகத்திற்கு உகந்ததல்ல.

விமர்சனங்களும் விமர்சிக்கப்படவேண்டும் என்னும் கருத்துடையவன் நான். ஆனால் விமர்சனங்கள் விமர்சிக்கப்படும்போது மிக முக்கியமாக அந்த கருத்துப்பரிமாற்றல் விவாதமாக மாறிவிடாதிருப்பது அவசியம். மற்றையவரின் நியாயமான கருத்தை / விமர்சனத்தை புரிந்துகொள்ளும் நெகிழ்ச்சித்தன்மை எம்மிடம் இல்லாதுவிட்டால் நாம் எமது முன்னேற்றத்தின் படிக்கட்டுகளை மூடிவிடுகிறோம் என்றே நான் கருதுகிறேன்.

நோர்வேயில் விமர்சனங்களை முதுகுக்குப்பின்னே விமர்சிக்கும் தன்மையே அதிகம். நேருக்கு நேர் தமக்கு கூறப்பட்டு புகழ்ச்சி தவிர்ந்த விமர்சனங்களை விமர்சித்து வளமான உரையாடலை நடாத்துபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் விரல்விட்டு எண்ணிவிடலாம். விமர்சனங்களில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டாது இருப்பதும் விமர்சனத்தை விரும்பாத தன்மையை ஒத்ததுதே.

வேதனை என்னவென்றால் பல மாபெரும் கலைஞர்களுக்கும், மனிதர்களுக்கும், கல்விமான்களுக்கும் மேலே கூறப்பட்ட நெகிழ்ச்சித்தன்மை இல்லாதிருப்பதே ஆகும். தற்பெருமையும், அதீத சுயநம்பிக்கையும் தேவைக்கு அதிகமாகும்போது வரட்டுக்கௌரவம் அதிகரித்து, நெகிழ்ச்சித்தன்மை அற்றுப்போகிறது. இதுவே வளர்ச்சியை தேக்கநிலையடையவைக்கிறது.

அண்மையில் ஒரு பேராசிரியரை எனது நண்பர் ஒருவர் சந்தித்தார். அப் பேராசிரியர் தமிழர்களிடத்தில் மட்டுமல்ல, இலங்கையிலும், வேறு பல நாடுகளிலும் தனது ஆராய்சிகளை மேற்கொண்டு தனக்கென்றெரு தனிஇடத்தை கல்விமான்களுக்கிடையில் பெற்றுக்கொண்டவர். பல் மொழி வித்துவர். தலைசிறந்த அறிஞர்.

எனது நண்பரோ நோர்வேயில் 27 வருடத்திற்கும் அதிகமாக வசிப்பவர். நோர்‌வே கலாச்சாரத்தின் அடிப்படையிலேயே சிந்திப்பவர். அவரின் பேச்சும் நோர்வேஜிய சிந்தனையோட்டத்தை ‌‌அடிப்படையாகக்கொண்டது. குறிப்பிட்ட அந்த பேராசிரியர் நோா்வேக்கு வந்து 5 - 6 ஆண்டுகள் ஆகியிருப்பினும் அவரிடம் நோர்வேஜியப் புலமை இல்லை. 

போராசிரியர் தமிழக்குழந்தைகளுக்கு தமிழின் தொன்மை, பெருமைபற்றி கற்பித்துக்கொண்டிருந்தார். அவரின் மொழியாடல் ஆங்கலமும், தமிழும் கலந்திருந்தது. மாணவர்களுக்கு தமிழ் கற்பதன் அவசியம் பற்றியும் கூறினார்.

என் நண்பருக்கு பேராசிரியர் சற்றேனும் நோர்வேஜிய அறிவு இல்லாதிருப்பதும், தமிழை சற்றெனும் அறிந்த குழந்தைகளிடம் அவர் தமிழ் கற்றுக்கொள்ளுங்கள் என்று கூறுவது இரட்டை நாக்கால் பேசுவதுபோல் இருக்கிறது என்றார், என்னிடம். அவரிடமே இதுபற்றிக் கேட்கலாமே என்றேன் நான். சம்மதித்தாா்.

நண்பர், இடைவேளையின் போது சற்று காரமாகவே தனது கேள்வியைக் கேட்டார். பேராசிரியர் ஆம், நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. ஆனால் தனது தொழில், வயது, சூழ்நிலை போன்றவற்றினாலேயே தான் இம்மொழியை இன்னும்  கற்கவில்லை. அதற்கான சந்தர்ப்பம் சூழ்நிலைவந்தால் நான் இம்மொழியை கட்டாயம் கற்பேன். நோர்‌வே மொழியை கற்கக் கூடாது என்று நான் நினைக்கவில்லை என்பதை மிகவும் அழகாகவும், பண்பாகவும், நெகிழ்ச்சித்தன்மையுடனும் விளக்கியபோது நண்பர் தனது விமர்சனம் தவறு என்று ஓரளவு புரிந்துகொண்டார். பேராசிரியருக்கும் அக் கேள்வி பலத்த சிந்தனையை தூண்டிவிட்டிருக்கும் எனது எண்ணம்.

இப்படியான ஒரு அறிஞர் ஒரு சாதாரண மனிதனின் விமர்சனத்துக்கு பணிவாக விடையளித்து உரையாடியது ”நிறைகுடம் தளும்பாது” என்பதை உறுதிப்படுத்தியது.

விமர்சனத்தை தனிப்பட்ட தாக்குதலாக எடுக்காது, அதன் சாரம்சத்தை உணர்ச்சிகளை தவித்து, குழுவாதங்களை தவித்து ஆறிவுபூர்வமாக சிந்திப்போமேயானால் பண்பட்ட, வளமான ஒரு சமுகமாற்றத்திற்கு நாம் அடித்தளமிடுகிறோம்.

இதைத்தவிர்த்து விமர்சனத்தை விஷம் என்று கருதி, விமர்சித்தவனையும் கோடாலிக்காம்பு என்று விமர்சித்து, குழுவாதங்களை மீண்டும் மீண்டும் நிறுவமுற்படுவது பண்பட்ட, வளமான சமூகத்தை நோக்கி இட்டுச்செல்லுமா என்றும் கேள்வியை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

நஞ்சற்ற நெஞ்சமே வளமான சமூகத்தின்  சாரளம் என்பேன் நான்.

விமர்சனம் பற்றி உங்கள் கருத்து என்ன நண்பர்களே!
----------------

விமர்சனத்தை எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம் என்பதை கீழுள்ள வரைபு அழகாகக் காட்டுகிறது. இந்த செயற்பாடு (Process)  ஆறு பகுதிகளைக்கொண்டது.

  1. செவிமடுத்தல்
  2. உள்வாங்கிக்கொள்ளுதல்
  3. விமர்சனம் பற்றிய உங்கள் கருத்தினை பகிர்தல்
  4. உண்மையான கருத்துக்களை ஏற்றுக்கொள்ளல்
  5. விமர்சித்தவருக்கு நன்றி தெரிவித்தல்
  6. நீங்கள் ஏற்றுக்கொண்ட விமர்சனக்கருத்துக்களுக்கேற்ப உங்களை மாற்றிக்கொள்ளல்.
    மீண்டும் 1வது இலக்கத்திற்கு செல்லல். (இது ஒரு தொடர்ச்சியான செயற்பாடு)
How_to_receive_criticism.png
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

But I say to you, Love your enemies and pray for those who persecute you, so that you may be sons of your Father who is in heaven; for he makes his sun rise on the evil and on the good, and sends rain on the just and on the unjust. Jesus Christ.

 

 எதிரி சுகம் பெறவேண்டும் என்று வணங்கி கொண்டு இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

அவர் அது சொன்னார் ....
இவர் இது சொன்னார் ....
என்பதெல்லாம் காலம் சூழ்நிலை பொறுத்தது.
 
விமர்சனம் என்பது .... ஒருவிடயம் பற்றிய  உங்களது சொந்த பார்வை.
அதை யார் தவிர்கிறான் ?
விமர்சனம் என்ற போர்வையை போர்த்தி விட்டு ....... கண்ட அவதூறுகளை எல்லாம் கொட்டுவதை யார் தான் ஏற்க போகிறான் ?
 
என்ன சொல்கிறார்கள் என்பதை விட ....
யார் சொல்கிறார்கள் என்பது ரொம்ப முக்கியம்.
 
மலேசிய அரசு மந்திரவாதியை அழைத்து தொலைந்த விமானத்தை தேடுவதற்கும் ....
ஒரு மலேசிய பிரஜை மந்திரவாதியை அழைத்து தனது தொலைந்த சயிக்கிளை தேடுவதற்கும் ....
நிறைய வேறுபாடு உண்டு.
உலக அரசியலையே குழப்பி விட்டது மலேசிய அரசு. 
 
சுவாமி விவேகாந்தர் வாருங்கள் ........ தியானத்தின் மூலம் சாந்தியை காட்டுகிறேன் என்று அழைப்பதற்கும்.
சுவாமி நித்தியானதா ............... சாந்தி காட்ட அழைப்பதற்கும் .
நிறைய வேறுபாடு உண்டு.
 
விமர்சனங்களை வியாபாரம் செய்து காசு பார்த்துகொண்டு .... அதை ஏற்றுகொள்ளுங்கள் என்றால். சமூகம்  
ஏற்றுகொள்ளுமா ?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சொற்பதமே தப்பு

 

முதலில்

விமர்சிப்பவர் யார்?

அவரது வழி என்ன?

அவரது கொள்ளை  அல்லது லட்சியம் என்ன?

அது சார்ந்து அவரது செயற்பாடுகள் என்ன?

விமர்சிக்கப்போகும் விமர்சனம் சார்ந்து  அவரது நிலை என்ன?

 

இதற்கெல்லாம் விமர்சனம் வைத்தபின்பே

இன்னொன்றை  ஒருவர் விமர்சிக்கமுடியும்

எதுவும் வைக்காமல்

தான் ஒழித்துக்கொண்டு அல்லது தன்னை மறைத்துக்கொண்டு

இன்னொரு பயனுள்ள  அல்லது நடந்து கொண்டிருக்கும் ஒரு விடயத்தை  

ஒருவர் விமர்சிப்பாராயின் அது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல.

அது விமர்சனமும் அல்ல

தூற்றுதல் மட்டுமே.

அதை அனுமதிக்கமுடியாது..........

அனுமதிக்கவும் கூடாது...........

Link to comment
Share on other sites

உதைத்தைதான் திரும்ப திரும்ப கோத்தாவும் சொல்லுகின்றான் . :icon_mrgreen:

அரசும் சரி புலிகளும் சாடிக்கு ஏற்ற மூடிகள் .

அவர்களுக்கு முதல் அலர்ஜி விமர்சனம் தான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருதுவும் விசுகரும் சொல்வதை ஒரே வரியில் சொல்லி விடலாம்: "conflict of interests உள்ளவர்கள் செய்யும் விமர்சனம் ஏற்றுக் கொள்ளப் படாது"

 

அர்ஜூன்,  சிறி லங்கா மீது விமர்சனம் வைப்பது அவர்கள் மீது கோபத்திலிருக்கும் தமிழர்கள் மட்டும் அல்லவே! அமெரிக்காவும், ஐ.நாவும், ஐரோப்பிய யூனியனும் தான் விமர்சிக்கின்றன. இதுக்கு கோத்தா என்ன பதில் சொல்லுவார் எண்டு ஒருக்கா யோசிச்சுச் சொல்லுங்கோவன்! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே என்று அந்தப் பரமசிவனிடமே தவறு கண்ட நக்கீரன் தான் உண்மையான விமர்சகன். நக்கீரன் ஒரு தீவிர சிவ பக்தன். இருந்தாலும்.. விமர்சனம் என்று வருகின்ற போது.. அவன் அதற்கு தான் முன்னுரிமை கொடுத்தான். அவனது அறிவுக்கு..தவறென்று பட்டத்தை தவறென்று சுட்டிக்காட்டினான். அதை பரமசிவனே தாங்கிக்காத போது.. விமர்சன உலகில் பலரும் அதே வழியில்.. அதை தாங்க முடியாது தான் தவிக்கின்றனர். எப்போதுமே பாராட்டுடன் கூடிய நேர் விமர்சனத்தையே விரும்புகின்றனர் சிலர். அதற்காக கண் முன்னாள் காணும் தவறுகளை விமர்சிக்க வாய்ப்பிருந்தால்.. விமர்சிக்காமல் போக முடியாது தானே. விமர்சகன்.. எதுக்கும் அஞ்சத் தேவையில்லை. அதேவேளை.. தன்னை நோக்கி வரும் விமர்சனங்களையும் அலசக் கூடியவற்றை கருத்தில் எடுக்கும் பக்குவத்தைக் கொண்டிருக்க வேண்டும். அவசியமற்றவற்றை தவிர்ப்பது நல்லது. நேர விரயத்தை தடுக்கும்.

 

 

(பரமசிவன்.. நக்கீரன்.. ஒப்புவமைகளுக்காக.. பாவிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் எல்லா வகையிலும்..உயர்ந்தவராகவும் மற்றவர் ஆற்றல் மிகுந்தவராகவும் அதில் கருத்தில் எடுக்கப்பட்டுள்ளது.)

Link to comment
Share on other sites

மருதுவும் விசுகரும் சொல்வதை ஒரே வரியில் சொல்லி விடலாம்: "conflict of interests உள்ளவர்கள் செய்யும் விமர்சனம் ஏற்றுக் கொள்ளப் படாது"

 

அர்ஜூன்,  சிறி லங்கா மீது விமர்சனம் வைப்பது அவர்கள் மீது கோபத்திலிருக்கும் தமிழர்கள் மட்டும் அல்லவே! அமெரிக்காவும், ஐ.நாவும், ஐரோப்பிய யூனியனும் தான் விமர்சிக்கின்றன. இதுக்கு கோத்தா என்ன பதில் சொல்லுவார் எண்டு ஒருக்கா யோசிச்சுச் சொல்லுங்கோவன்! :lol:

ஒரு ரிப்போர்ட்டும் வாசிக்கவில்லை போலிருக்கு . :icon_mrgreen: அரசைவிட புலிகளில் தான் சர்வதேசம் காட்டமான விமர்சனம் வைத்திருக்கு .

அவர்கள் கை விட்ட கேஸ்கள் என்றபடியால் எவரும் கணக்கில் எடுப்பதில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ரிப்போர்ட்டும் வாசிக்கவில்லை போலிருக்கு . :icon_mrgreen: அரசைவிட புலிகளில் தான் சர்வதேசம் காட்டமான விமர்சனம் வைத்திருக்கு .

அவர்கள் கை விட்ட கேஸ்கள் என்றபடியால் எவரும் கணக்கில் எடுப்பதில்லை .

 

ஒருவேளை நீங்கள் நீதி பதியாக இருந்தால் .............
 
கொலை யுண்டவனுக்கு  மரண தண்டனையும் ....
கத்தியால் குத்தியவனுக்கு 30 நாள் சிறையும் 
என்று தீர்ப்பு வழங்கி இருப்பீர்கள்.
 
ரொம்பதான் காமடி பண்ணுறீங்க.

உதைத்தைதான் திரும்ப திரும்ப கோத்தாவும் சொல்லுகின்றான் . :icon_mrgreen:

அரசும் சரி புலிகளும் சாடிக்கு ஏற்ற மூடிகள் .

அவர்களுக்கு முதல் அலர்ஜி விமர்சனம் தான் .

 

உங்களுக்கு புலி அலர்ச்சி இருக்கும்போது ..........
அலற்சிகளின் அலர்ஜி மேலே அவர்கள் அலர்ஜி கொள்வதில் என்ன தப்பு ?
 
தொற்றுவியாதிகள் தொற்றிவிடும் சாத்தியம் இருக்கிறது அல்லவா ??
Link to comment
Share on other sites

மேற்படி கட்டுரை விமர்சனம் என்பதின் உண்மையான அரத்தத்தை உணர்த்தி நிற்கிறது. கட்டுரையை இங்கு இணைத்த சஞ்சயனுக்கு நன்றி. விமர்சனம் என்பது முழுவதுமாக பக்கசார்பற்று இருப்பது ஜதார்த்தத்தில் கடினம். இருந்தாலும்  ஒரளவிற்காவது  பக்க சார்பற்று இருக்கவேண்டியது அவசியம்.

 

எதிர்கருத்தை விமர்சிக்கும் போது அதன் சாதக பாதக அம்சங்களை ஆராய்வதில் நடுநிலை தேவை. தனது கருத்தை நியாயபடுத்துவதற்காக  உங்களுக்கு  ஒன்று தெரியாது. உங்களுக்கு  அறிவு இல்லை .நான் எல்லாம் தெரிந்தவன். எனது கருத்தை ஏற்று கொள்ளாதவர்கள் எல்லோரும் ஐந்து அறிவு உடையவர்கள்,  என்ற கூறி மற்றவர்களின் விமர்சனங்களை கேலி செய்வதை விமர்சனமாக கருத முடியாது. அதை மட்டும் செய்பவர்களும் மற்றவர்களை சீண்டுபவர்களும்  தங்களால் வெறுப்பவர்களை திட்டி தீர்ப்பதற்காக   கருத்து களங்களுக்கு வருபவர்களும் தங்களை விமர்சகர்களாகவே கருதுகிறார்கள்.

 

 "இவை தவறானவை முற்றாக இதை நிராகரிக்கிறேன்".  "இவை ஒரளவு சரியானவை சிறிது மாற்றங்கள் செய்யலாம்", "இவை சரியானவை என்னால் ஏற்றுகொள்ள கூடியவை", என்ற பகுப்பாய்வுடன், அதற்குரிய காரணங்களை தெளிவாக கூறி அத்துடன்  தன்னுடன் வாதிடுவரை உரிய மரியாதையுடன் விமர்சிப்பவரே உண்மையான விமர்சகர் ஆவார். அவ்வாறான ஆக்கபூர்வமான  விமர்சனங்களை மேற்கொள்பவர்களாக மாறுவதற்கு  நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

விமர்சனம் என்னும் மனித அறிவுசார் நாகரீகத்தை தமிழ்ச்சமூகம் தொடுவதென்பது எக்காலத்தில் நிகழும் என்று கூற முடியாது.

தமிழ்ச்சமூகத்துக்குத் தெரிந்த விமர்சனம் என்பதும் அதன் தோற்றுவாய் என்பதும் அறிவுக்கு எதிர்த்திசையில் உருவானது. அதன் மரபில் இருந்து அது மீள்வது என்பது நடைமுறைச்சாத்தியம் இல்லை.

தோற்றுவாய் என்பதன் அடிப்படையில் வசைபாடுதல் குறை கூறுதல் தாழ்த்துதல் நய்யப்புடைத்தல் ஒடுக்குதல் அடக்குதல் சுரண்டல் அனைத்தும் சம்மந்தப்படும் சாதீய நடைமுறையை ஏற்க வைப்பதும் ஏற்பதும் தான் இச்சமுகத்துக்கான தோற்றுவாய். கூடவே மதவாதங்களும் பிரதேசவாதங்களும் இணைந்துகொள்ளும். இவைகள் முடிவு அற்ற பாரம்பரியமாக சமூக வரலாறாக தொடர்கின்றது. அறிவுக்கு அப்பாற்பட்ட இந்தக் குணாம்சத்தை கடந்த ஒரு விமர்சனம் என்பது தமிழ்ச்சமூகத்தில் சாத்தியமில்லை.

இச்சமூகத்தின் முற்றுமுழுதான விமர்சனத் தோற்றுவாய் என்பது சாதி மத பிரதேச ஏற்றதாழ்வுகள் அடிப்படையில் நீ இதை செய்யக் கூடாது அதைச் செய்யக்கூடாது என்ற கட்டளைகளில் தொடங்கி எப்படி செய்யலாம் என்ற கேள்விகளாகப் பெருகி சமூகம் எங்கும் வியாப்பித்து நிற்கின்றது. எங்கும் குறுக்கீடுகள் தலையீடுகள் வசைகள் சொட்டை நொட்டைகள் பிறப்பில் தொடக்கம் மொட்டை வழித்தல் காதுகுத்து சாமத்திய வீடு காதல் கலியாணம் தாலியறுப்பு செத்தவீடு என்று எங்கும் முடிவற்ற விமர்சனங்களும் தலையீடுகளுடம் கட்டளைகளும் கேள்விகளும் அறிவுக்கு முரணாக தொடர்கின்றது. இதற்கு முடிவில்லை.

தமிழ்ச்சமூகத்தில் பிறக்கும் ஒரு குழந்தை பெயருடன் பிறப்பதில்லை இன்னாருக்குத்தான் என்ற மரபணுச் சோதனை ஆதாரத்துடன் பிறப்பதில்லை ஆனால் அது இன்ன சாதி என்றுதான் பிறக்கின்றது. இச்சமூகத்துக்குத் தெரிந்த விமர்சனத்தின் விழைவு அது.

இச்சமூகம் ஒரு கருத்தை அல்லது செயலை நடைமுறையை எப்படி விமர்சிக்கவேணும் என்பதை மேற்சொன்ன பாரம்பரியத்தின் ஊடாக தன்னகத்தே வைத்துள்ளது. அதனால் விமர்சனங்கள் இச்சமூகத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டுவராமாட்டாது. விமர்சனங்கள் எந்த முடிவையும் எட்டமாட்டாது. நீ இன்ன சாதி என்று ஆயிரம் வருடம் சுட்டிக்காட்டும் ஒரு போக்கே நீ செய்வது பிழை என்ற போக்கை உருவாக்குகின்றது. பிழை என்பது பிழைதான் சரி என்பது சரிதான். பிழையும் சரியும் மண்டையில் போடுவதை அல்லது தற்கொலை செய்வதை தனது இறுதி எல்லையாகக் கொண்டுள்ளது. இது சரி இது பிழை என்பதை இவன் சரி இவன் பிழை என்ற அடிப்படையே தீர்மானிக்கின்றது. விமர்சனம் என்பதும் அதனூடாக புதிய அணுகுமுறைகள் அனுசரிப்புகள் மாற்றுவழிகள் மாற்றங்களை நோக்கி நகர்த்தல் இவ்வாறான பல்வேறு நடைமுறைச்சாத்தியமான விசயங்களுக்கும் இச்சமூகத்தின் மரபுசார் குணத்துக்கும் ஏணிவைத்தாலும் எட்டாது. சுருக்கமாகச் சொன்னால் விமர்சனம் என்ற வார்த்தைக்கும் பொருளுக்கும் இச்சமூகத்தில் வேறுவிதமான அர்த்தம். ஓரளவு நாகரீகமாக தோற்றமளிக்கும் இச்சமூகம் அதன் அகநிலையில் தனது அடிப்படை காட்டுமிராண்டிக்குணத்தை தக்கவைப்பதையே தனது இயக்க சக்தியாகவும் பாரம்பரியம் பண்பாடாகவும் கொண்டுள்ளது. அதனால் மாற்றங்கள் என்பது இலகுவானதில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.