Jump to content

என்னென்ன காய்கறி எப்படி பார்த்து வாங்க வேண்டும்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2.jpg
என்னென்ன காய்கறி எப்படி பார்த்து வாங்க வேண்டும்?

1. வாழை தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக் கும் தண்டு பகுதி சிறுத்தும் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும்.

2. வெள்ளை வெங்காயம்: நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும்

3. முருங்கைக்காய் : முருங்கைக் காயை கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களை பயன்படுத்தி சிறிது முறுக்கினால், எளிதாக வளைந் தால் அது நல்ல முருங்கை காய்

4. சர்க்கரை வள்ளிகிழங்கு: உறுதியான கிழங்கு இனிக்கும், அடி பட்டு கருப்பாக இருந்தால் கசக்கும்

5. மக்கா சோளம்: இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் இருந்தால் அதுநல்ல மக்காச்சோளம்.

6.தக்காளி: தக்காளி நல்ல சிவப்பில் தக்காளி இருந்தால் அதை வாங்கலாம் (குறிப்பு பெங்களூர் தக்காளி ஒரு வாரம் ஆனாலும் கெடாது இருக்கும்).

7. கோவைக்காய் : முழுக்க பச்சையாக வாங்க வேண்டும். சிவப்பு லேசாக இருந்தாலும் வாங்க வேண்டாம். பழுத்து ருசி இல்லாமல் இருக்கும்

8. சின்ன வெங்காயம்: பழைய வெங்காயம் வாங்குவதே நல்லது. இரண்டு பல் இருப்பதாக, முத்து முத்தாக தெளிவாக இருப்பதை வாங்கவும்

9. குடை மிளகாய் : தோல் சுருங்காமல் fresh ஆக இருப்பதை வாங் கவும். கரும்பச்சையில் வாங்கவேண்டாம். அடிபட்டிருக்கும். எல்லா நிற குடை மிளகாய்களும் ஒரே சுவையில் தான் இருக்கும்

10. காலிபிளவர்: பூக்களுக்கிடையே இடைவெளி இல்லாமல் அடர்த் தியாக காம்பு தடினமனாக இல்லாமல் வாங்கவும்

11. மாங்காய்- தேங்காயை காதருகே வைத்து தட்டி பார்ப்பது போல மாங்காயும் தட்டி பார்க்கவும். சத்தம் வரும். அத்தகைய மாங்காயில் கொட்டை சிறிதாக இருக்கும்

12. பீர்க்கங்காய் ( நார்ச்சத்து உள்ள மிக நல்ல காய் இது ) : அடிப் பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுதும் ஒரே சைசில் இருக்கு மாறு பார்த்து வாங்குவது நல்லது

13. பரங்கிக்காய் கொட்டைகள் முற்றியதாக வாங்கவும்

14. புடலங்காய் : கெட்டியாக வாங்கவும். அப்போதுதான் விதைப்பகு தி குறைவாக, சதை பகுதி அதிகமாக இருக்கும்

15. உருளை கிழங்கு: முளை விடாமல் பச்சை நரம்பு ஓடாமல் கீறி னாலே தோல் உதிர்ந்து பெயர்ந்து வர வேண்டும்

16. கருணை கிழங்கு: முழுதாக வாங்கும் போது பெரியதாக பார்த்து வாங்குவது நல்லது. வெட்டிய கிழங்கை விற்றால், உள் புறம் இளம் சிவப்பு நிறத்தில் இருக்குமாறு பார்த்து வாங்கவும்

17. சேப்பங்கிழங்கு : முளை விட்டது போல் ஒரு முனை நீண்டிருக் கும் கிழங்கு சமையலுக்கு சுவை சேர்க்காது. உருண்டையாக பார் த்து வாங்கவும்

18. பெரிய வெங்காயம் மேல் (குடுமி) பகுதியில் தண்டு பெரிதாக இல்லாமல் பார்த்து வாங்கவும்

19. இஞ்சி: லேசாக கீறி பார்க்கும் போது தோல் பெயர்ந்து வருவது நல்லது. நார் பகுதி குறைவாக இருக்கும்

20. கத்திரிக்காய்: தோல் softஆக இருப்பதுபோல் பார்த்து வாங்கவும்

21. சுரைக்காய் : நகத்தால் அழுத்தினால் நகம் உள்ளே இறங்க வேண்டும். அப்போது தான் இளசு என்று அர்த்தம்

22. பூண்டு: பல் பல்லாக வெளியே தெரிவது நல்லது. வாங்கலாம்

23. பீன்ஸ் பிரன்ச் பீன்ஸில் நார் அதிகம். புஷ் பீன்ஸில் நார் இருக் காது. தோல் soft-ஆக இருந்தால் சுவை அதிகமாய் இருக்கும்

24. அவரை: தொட்டு பார்த்து விதைகள் பெரிதாக இருக்கும் காய்கள் தவிர்ப்பது நல்லது. இளசாக வாங்கினால் நார் அதிகம் இருக்காது

25. பாகற்காய்: பெரிய பாகற்காயில் உருண்டையை விட, தட்டையா ன நீண்ட காய் நல்லது

26. வாழைப்பூ : மேல் இதழை விரித்து பூக்கள் கருப்பாகாமல் வெளி ர் நிறத்தில் இருக்கிறதா என பார்க்கவும். அப்படி இருந்தால் பிரெஷ் காய் என்று அர்த்தம்

27. மொச்சை :கொட்டை பெரிதாக தெரியும் காய் பார்த்து வாங்கவும்

28. சௌசௌ : வாய் போன்ற பகுதி விரிசல் பெரிதாக இல்லாத படி பார்த்து வாங்கவும். விரிசல் இருந்தால் முற்றிய காய்

29. முள்ளங்கி: லேசாக கீறினால் தோல் மென்மையாக இருந்தால் அது இளசு- நல்ல காய்

30. வெள்ளரி மேல் நகத்தால் குத்தி பார்த்தால் நகம் உள்ளே இறங்கி னால், நல்ல காய். விதைகள் குறைவாக இருக்கும்

31. பச்சை மிளகாய் :நீளமானது சற்று காரம் குறைவாக இருக்கும். சற்றே குண்டானது தான் காரம் தூக்கலாக வாசனையும் பிரமாதமா க இருக்கும்.

http://anonymouse.org/cgi-bin/anon-www.cgi/http://raone1news.blogspot.com/search?updated-min=2014-01-31T10:30:00-08:00&updated-max=2014-02-24T00:29:00%2B05:30&max-results=50&start=46&by-date=false

Link to comment
Share on other sites

அருமையான பதிவு பெருமாள். நன்றி

அப்படியே ஒரு சின்ன தொகுப்பு

32) வாங்கும் மரக்கறிகள் இயற்கையானவையா என்றும் கேளுங்கள். கிருமிநாசினி, இரசாயன உரம் கண்டபாட்டுக்கு பாவித்த காய்,கறிகளை தவிருங்கள். முக்கியமாக தெற்காசியாவில் விளையும் காய்கறிகளை கவனிக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

bhindi.jpg

 

33) வெண்டிக்காயின்... வால் பகுதியை, முறித்துப் பார்த்து... அது உடைந்தால், பிஞ்சு வெண்டிக்காய். அதனை வாங்கவும்.
வெண்டிக்காயின் வால் பகுதியை... உடைக்கும் போது, கடைக்காரர் பார்க்கமல் உடைப்பது, உங்கள் கெட்டித்தனம்.
அவர் கண்டால், அவரிடம் பேச்சு வாங்கவும்.... ரெடியாய் இருக்க வேண்டும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பதிவு பெருமாள். நன்றி

அப்படியே ஒரு சின்ன தொகுப்பு

32) வாங்கும் மரக்கறிகள் இயற்கையானவையா என்றும் கேளுங்கள். கிருமிநாசினி, இரசாயன உரம் கண்டபாட்டுக்கு பாவித்த காய்,கறிகளை தவிருங்கள். முக்கியமாக தெற்காசியாவில் விளையும் காய்கறிகளை கவனிக்கவேண்டும்.

• அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.http://www.yarl.com/forum3/index.php?showtopic=136856&hl=

உண்மைதான் விவசாயிவிக் தெற்காசியாவின் காய்கறிகள் என்ன மளிகை சாமான்கள் வரை இதன் தாக்கம் அதிகரித்த வண்ணமே உள்ளது  உதாரணமாய் ஊரிலை உழுந்து மூன்று மாதத்துக்கு மேல் கிடந்தால் உழுத்து போய் விடும் ஆனால் இங்கு அதே உழுந்தை trs பிராண்ட் கழுவிப்பாருங்கள் வெள்ளை பதார்த்தமாய் சிங் முழுக்க கிடக்கும் .போறபோக்கில் ஆளாளுக்கு  நீர்விவசாயம் (Hydroponics) வீட்டு தோட்ட முறைதான் தீர்வாக முடியும் என நினைக்கிறன்.

Link to comment
Share on other sites

bhindi.jpg

33) வெண்டிக்காயின்... வால் பகுதியை, முறித்துப் பார்த்து... அது உடைந்தால், பிஞ்சு வெண்டிக்காய். அதனை வாங்கவும்.

வெண்டிக்காயின் வால் பகுதியை... உடைக்கும் போது, கடைக்காரர் பார்க்கமல் உடைப்பது, உங்கள் கெட்டித்தனம்.

அவர் கண்டால், அவரிடம் பேச்சு வாங்கவும்.... ரெடியாய் இருக்க வேண்டும். :D

போன கோடை சந்தையில் நேற்று பிடுங்கிய பிஞ்சு காய் என்று சொல்லியும் நுனியை உடைத்த தாய்க்குலத்திற்கு சாதரணமாக கொடுக்கும் ஒரு டொலர் கழிவு விலையை கொடுக்கவில்லை. அவரை மேசையை தொட விடகூடாது என்று இப்போது சட்டம்.

ஆதனால் அண்ணரின் கடைசி வரி அறிவுரையை கட்டாயம் கடை பிடியுங்கள். விவசாயிகளின் சாபம் வேண்டாம். :D

Link to comment
Share on other sites

• அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.http://www.yarl.com/forum3/index.php?showtopic=136856&hl=

உண்மைதான் விவசாயிவிக் தெற்காசியாவின் காய்கறிகள் என்ன மளிகை சாமான்கள் வரை இதன் தாக்கம் அதிகரித்த வண்ணமே உள்ளது உதாரணமாய் ஊரிலை உழுந்து மூன்று மாதத்துக்கு மேல் கிடந்தால் உழுத்து போய் விடும் ஆனால் இங்கு அதே உழுந்தை trs பிராண்ட் கழுவிப்பாருங்கள் வெள்ளை பதார்த்தமாய் சிங் முழுக்க கிடக்கும் .போறபோக்கில் ஆளாளுக்கு நீர்விவசாயம் (Hydroponics) வீட்டு தோட்ட முறைதான் தீர்வாக முடியும் என நினைக்கிறன்.

உண்மை சகோ.

தெற்காசியாவில் இயற்கை கிருமிநாசினிகள், பூச்சிகொல்லிகளை எதிர்க்க தொடங்கியதால் ஒவ்வொரு நாளும் தெளிக்கிறார்கள்.

மற்றும் ஜி.எம்.ஒ உணவுகளும் தெற்காசியாவில் பயிரிடபடுகிறது. ஜி எம் ஒ வாழை தமிழ்நாட்டில் வளர்கிறார்கள். எல்லாம் 5000 ஏக்கர் வளர்க்கும் கொர்பரட் விவசாய நிறுவனங்களின் அனுகூலத்திற்கு தான். இவை நீண்ட கால சோதனைக்கு உட்பட்டவை அல்ல.

தெய்வமா இருந்த தொழிலை கொலைகார தொழிலாக்கி விட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போன கோடை சந்தையில் நேற்று பிடுங்கிய பிஞ்சு காய் என்று சொல்லியும் நுனியை உடைத்த தாய்க்குலத்திற்கு சாதரணமாக கொடுக்கும் ஒரு டொலர் கழிவு விலையை கொடுக்கவில்லை. அவரை மேசையை தொட விடகூடாது என்று இப்போது சட்டம்.

ஆதனால் அண்ணரின் கடைசி வரி அறிவுரையை கட்டாயம் கடை பிடியுங்கள். விவசாயிகளின் சாபம் வேண்டாம். :D

 

இதுக்காகத் தான், வெண்டிக்காயை (கொஞ்சம் தேவைக்கதிகமாக) வாங்கிக் 'காருக்குள்' வைத்து, ஒவ்வொன்றாக நுனியை உடைத்துப்பார்த்து, நல்லதை வீட்டுக்கும், மற்றதைக் குருவிகளுக்குமாகப் போட்டு விடுவது! :D

 

தோட்டக்காரனுக்கும் சந்தோசம்!

 

கடைக்காரனுக்கும் சந்தோசம்!

 

மனுசிக்கும் சந்தோசம்!

 

எல்லாரும் சந்தோசப்படுகிறதைப் பார்த்து, எனக்கும் சந்தோசம்! :icon_idea:  

Link to comment
Share on other sites

இதுக்காகத் தான், வெண்டிக்காயை (கொஞ்சம் தேவைக்கதிகமாக) வாங்கிக் 'காருக்குள்' வைத்து, ஒவ்வொன்றாக நுனியை உடைத்துப்பார்த்து, நல்லதை வீட்டுக்கும், மற்றதைக் குருவிகளுக்குமாகப் போட்டு விடுவது! :D

தோட்டக்காரனுக்கும் சந்தோசம்!

கடைக்காரனுக்கும் சந்தோசம்!

மனுசிக்கும் சந்தோசம்!

எல்லாரும் சந்தோசப்படுகிறதைப் பார்த்து, எனக்கும் சந்தோசம்! :icon_idea:

நீங்கள் ஆயிரத்தில் ஒரு சந்தை நுகர்வோர் அண்ணா.

கனடா வந்தால் கட்டாயம் சந்தைக்கு வாங்கோ. கழிவு விலை கட்டாயம் கிடைக்கும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

31 வகையான மரக்கறியள் இருக்கேக்கை வெண்டிக்காயை மட்டும் கண்ணைபுடுங்கி வைச்சு ஆராய்வதன் மர்மம் என்னவோ?... :rolleyes:  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

31 வகையான மரக்கறியள் இருக்கேக்கை வெண்டிக்காயை மட்டும் கண்ணைபுடுங்கி வைச்சு ஆராய்வதன் மர்மம் என்னவோ?... :rolleyes:  :lol:

 

அது லேடீஸ் பிங்கர் எல்லோ , அப்படியே வருடி நுனியில் நெட்டிமுறித்து ஆராய்யாமல் விட்டால் எப்படி...! :rolleyes:

 

மு. காயை திருகும்போது வி.விக் காதைத் திருகாமல் விட்டால் போதும்...! :)

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.