Jump to content

பிள்ளைகளுக்கு சிறுவயதில் மொபைல்! - பெற்றோர்கள் படிக்க வேண்டிய ஒரு பதிவு !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைகளுக்கு சிறுவயதில் மொபைல்! - பெற்றோர்கள் படிக்க வேண்டிய ஒரு பதிவு ! 

[Monday, 2014-02-24 20:52:08]
teens-on-cell-phones-200.jpg

பிள்ளைகளுக்கு சிறுவயதில் மொபைல் வாங்கி கொடுக்கும் பெற்றோர்கள் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு பதிவு !13 வயது மகளின் ஆண் நண்பர்கள் அனுப்பிய ஆபாச குறுஞ்செய்தியால் தாய் அதிர்ச்சி சிறுவர் சிறுமிகள் கையில் செல்போனை கொடுத்தால் எந்த மாதிரியான விளைவுகளை பெற்றோர் சந்திக்க நேரிடும் என்பதற்கு இதுவே சரியான முன் உதாரணம். இங்கிலாந்து நாட்டினை சேர்ந்தவர் சோனா சிபாரி. இவரது கணவர் கெய்த். இந்த தம்பதியருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். அவர்களில் ஒருவர் ஆன்னி. பள்ளிக்கூடத்தில் பயின்று வரும் ஆன்னிக்கு வயது 13. தங்கள் ஆசை மகளுக்கு சமீபத்தில் ஆப்பிள் ரக மொபைல் போன் ஒன்றை தம்பதியர் வாங்கி கொடுத்துள்ளனர்.

  

நள்ளிரவில் மெசேஜ்:

ஒரு நாள் இரவு மெத்தையில் சோனா படுத்திருந்தபோது, அவரது போனுக்கு குறுஞ்செய்தி (மெசேஜ்) வந்துள்ளது. இந்நேரத்தில், தனக்கு யார் செய்தி அனுப்புகிறார்கள். அதுவும் நள்ளிரவில் என்று அவர் சற்று யோசித்திருக்கிறார். பேசாமல் படுத்து விடலாம் என்று கருதிய அவர் தனது மகள் 70 மைல்கள் தொலைவில் பள்ளியில் இருப்பது நினைவுக்கு வந்தது.

எனவே, ஓர் ஆர்வத்தில் போனை எடுத்து அதனை பார்த்திருக்கிறார். பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில், டாம் என்ற சிறுவன் மெசேஜ் அனுப்பியிருந்தான். அது, ஹே பேபி. ஓமை காட் நேற்றிரவு நீ என்னிடமிருந்து தப்பி சென்று விட்டாய் ? நீ ஒரு முட்டாள். ஆஹாஹா,ஆ… நீ உனது இடத்திற்கு எந்நேரத்தில் சென்று சேர்ந்தாய்? என தகவல் கேள்வி எழுப்பி இருந்தது.

இதனை படித்து தன்னை சமாதானபடுத்தி கொள்ள சோனா முயற்சிக்கும்போது, பதில் மெசேஜில், 2 மணியளவில்! அது நன்றாக இருந்தது!! ஆஹாஹா என தெரிவித்திருந்தது. இப்பொழுது, நள்ளிரவாக இருந்தாலும், சோனா விழிப்புணர்வுக்கு வந்திருந்தார். இது தனது மகளுக்கு வந்திருக்கும் செய்தி என்பதை உணர்ந்து கொண்டார்.

அதை நிரூபிக்கும் விதமாக ஆன்னி என்ற பெயர் மெசேஜ்ஜை குறிப்பதாக இருந்தது. மேலும், மொபைலின் கான்டக்ட்ஸ் எனப்படும் தொடர்பு கொள்ளும் எண்களில் பல ஆண் நண்பர்களின் பெயர்கள் இருந்தன. இந்த செய்திகள் அனைத்தும் தயார் சோனா மொபைலுக்கு எப்படி தெரிய வந்தது என்று ஆச்சரியப்படலாம்.

சமீபத்தில் தான் தனது மகள் ஆன்னியின் பழைய மொபைலுக்கு பதிலாக ஆப்பிள் ஐபோன் 4 ரகத்திற்கு அதனை மாற்றியிருந்தனர். எனவே, ஆப்பிள் ரக போனை வைத்திருந்தால், அதில் ஐகிளவுட் என்ற புதிய ஆப்சன் வழியாக ஆப்பிள் தயாரிப்பு போன்களை ஒன்றிணைக்க முடியும். இதனால், ஆன்னியின் மொபைல் போன் எண்ணானது தானாகவே, சோனாவின் செட்டிங்சிற்குள் நுழைந்து அவரது கணக்கில் சேர்ந்து விட்டது. இது சோனாவிற்கு தெரியாது. ஆனால் செய்திகள் பரிமாறி கொள்ளப்பட்டு உள்ளன.

ஒரு மகளை உளவு பார்க்கும் வேலையில் எந்த ஒரு தாயும் ஈடுபடுவதில்லை. எனினும், தொலைதூரத்தில் மகள் உள்ள நிலையில், அவள் எந்தளவிற்கு இருக்கிறாள் என்பதனை தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பாக அமைந்த இதனை தவறவிட சோனா விரும்பவில்லை. இது நடந்து 24 மணிநேரத்திற்குள்ளாக மற்றொரு சந்தர்ப்பம் சோனாவுக்கு அமைந்தது.

காண்டம்களை கொண்டு வா

அன்று மாலை முடிந்து இரவு வேளை தொடங்கும்போது, அவரது மகள்கள் அனைவரும் வீட்டில் இருக்கின்றனர். தற்போது, மெசேஜ் அனுப்புவது ஆரம்பமானது. இப்பொழுது மெசேஜ் அனுப்புவது வசீகரமான ஜேக் என்ற சிறுவன். அந்த மெசேஜில், சனிக்கிழமை இரவு நடந்த பார்ட்டியில் கலந்து கொள்ள நீ செல்லவில்லை. இது அவமானமாக இருக்கிறது. நீ நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். எனது காண்டம்களை கொண்டு வா என கூறப்பட்டு இருந்தது.

அதற்கு பதில் செய்தியாக, ஆஹாஹா. நீ ரொம்ப நல்லவன். ஆனால் அதனை வைத்து என்ன செய்ய போகிறாய்? என ஆன்னி கேட்டிருந்தாள். இதனை பார்த்து அதிர்ச்சியான சோனா போனை தனது கணவர் கெய்த்திடம் கொடுத்தார். அதனை வாங்கி படித்த கெய்த் அதிர்ச்சியில் உறைந்தார். அதன் பின்பு, சோனாவை பார்த்து டி.பி.எச். என்றால் என்ன என மெசேஜில் வந்ததை பார்த்து கேட்டார். அதற்கு சோனா நேர்மையாக நடந்து கொள்ளுதல் என பதில் கூறினார்.

குறுஞ்செய்திகளை வழக்கமாக அனுப்புவதுபோன்று சிறு சிறு வார்த்தைகள் மற்றும் அவர்களுக்கு மட்டும் புரிந்து கொள்வது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தியிருந்த நிலையில், ஜேக் அடுத்ததாக அனுப்பிய மெசேஜ் தான் சோனாவுக்கு உண்மையில் அதிர்ச்சியை அளித்தது. உண்மையான விளையாட்டை நாம் விளையாடுவோமா? என ஜேக் கேட்டு உள்ளான். இதனை பார்த்தவுடன், இதற்கு மேல் பார்ப்பது சரியல்ல என சோனா உணர்ந்துள்ளார்.

கெய்த்தும், இதற்கு மேல் மெசேஜை பார்ப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும் என கூறி அதனை தற்காலிகமாக அணைத்து விட்டார். சில நிமிடங்கள் கழித்து போனை ஆன் செய்து பார்த்தபோது, நீ ஒரு மோசமான சிகரெட் புகைப்பவளா? என ஜேக் கேட்கிறான். இரு வினாடிகள் கழிந்ததும், பஹாஹா. ரொம்ப மோசமில்லை. சாதாரணமாக தான் புகைப்பேன் என ஆன்னி பதில் அனுப்பினாள். இதுவரை பார்த்திராத தனது மகளை அப்பொழுது உணர்ந்து கொண்ட சோனா அடுத்து என்ன செய்வது என தெரியாமல் அதிர்ச்சியில் நின்றிருந்தார்.

சிகரெட் புகைப்பவள்

தனது மகள் சிகரெட் புகைப்பவள், செக்சில் பைத்தியமானவள், மோசமான ஆங்கில இலக்கணம் கற்றுள்ளவள் என்பதனை அறிந்து சோனா வருத்தமடைந்தார். உடனடியாக, ஆன்னியை பள்ளியில் இருந்து அழைத்து அவளை இது குறித்து விசாரிக்க வேண்டும் என சோனா கருதினார். ஆனால், கெய்த் வேறு விதமாக யோசித்தார்-. இளம் வயதினர் தங்களது தைரியத்தை வெளிப்படுத்தும் விதமாக இது இருக்கலாம் என வாதிட்டார்.

இந்த குழப்பத்தை நாம் தான் ஏற்படுத்தி கொண்டுள்ளோம். அவள் உண்மையில் என்ன செய்கிறாள். என்ன நிலையில் உள்ளாள் என்பதனை நாம் அறியாமல் தவறான நடவடிக்கையில் இறங்கி விட கூடாது என கூறினார். மேலும், ஆன்னியை அழைத்து அவளிடம் தனிமையில் இது பற்றி கேட்டு கொள்ளலாம் என்று சமாதானப்படுத்தினார். ஒரு தாயாக சோனாவால் இதனை பொறுத்து கொள்ள முடியவில்லை.

எனினும், ஆன்னியிடம் இது குறித்து கேட்டு அதன் பின் அவள் தங்களை நம்பாமல் போய் விட்டால் என்ன செய்வது என்ற இயல்பான கவலை கெய்த்திற்கு இருந்தது. அதிர்ஷ்டவசமாக, வார விடுமுறையில் ஆன்னி பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டிற்கு வந்திருந்தாள். இது பற்றியும், ஆன்னி, இந்த வார இறுதியில் வீட்டிற்கு செல்ல இருக்கிறேன். ரொம்ப போராக இருக்கும் என மெசேஜ் அனுப்பியிருக்கிறாள்.

சில விசயங்கள் தெரியாதபோது, அது துன்புறுத்த போவதில்லை.

சோனாவுக்கு நம்பிக்கை

ஆனால், சோனா, ஆன்னியை பார்த்து நீ சிகரெட் குடிப்பாயா? பென், ஜேக் மற்றும் டாம் எல்லாம் யார்? என கேட்டு உள்ளார். இதனை கேட்டு ஆன்னி அழுதுள்ளாள். தனது தனிப்பட்ட உரிமையில் தலையிடுவதாக உள்ளது என்பது போன்ற பேச ஆன்னி முயன்றாள். சற்று நேரம் கழித்து, டீன் ஏஜ் பருவத்தில் இது போன்று தகவல்களை பரிமாறி விளையாடி கொள்வது சகஜம்தான் என்று ஆன்னி பதில் கூறியுள்ளாள்.

தனது மகள் மீது சோனாவுக்கு நம்பிக்கை இருந்தது. எனவே இத்துடன் விசயத்தை விட்டு விடுவது என்ற முடிவுக்கு சோனா வந்துள்ளார். தனது கணக்கில் இருந்த ஆன்னியின் மொபைல் எண்ணையும் சோனா நீக்கி விட்டார்.

டீன் ஏஜ் பருவத்தினர் தங்களது சக மாணவர்களுடன் இது போன்று விளையாடி கொள்வது சாதாரணமானது தான் என்ற நிலைக்கு சோனா வந்தார். இது போன்று கடினமான சூழ்நிலைக்கு சென்று மீண்டுள்ள சோனா அதுபோன்ற மற்றொரு சூழலுக்கு செல்ல விரும்பவில்லை. இங்கிலாந்து நாட்டில் கடந்த 2013ம் ஆண்டில் 14 ஆயிரத்து 500 கோடி குறுஞ்செய்திகள் பரிமாறி கொள்ளப்பட்டு உள்ளன என தகவல் ஒன்று தெரிவிக்கிறது.

btn-back.gif   lg-share-en.gif

http://www.seithy.com/breifNews.php?newsID=104353&category=CommonNews&language=tamil

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.