Jump to content

இவர் செய்யும், தவறுகள்... எத்தனை?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

27-1395898666-32copy.jpg

 

இணையம் ஒன்றில்... மேற்கண்ட படத்தைப் பார்த்தபோது, அதிர்ச்சியாக இருந்தது.
அவர் அந்தக் குடும்பத்தின்... தலைவன் என நினைக்கின்றேன்.
படத்தைப் பார்தவுடனேயே... பல தவறுகளையும், சட்ட மீறல்களையும் செய்கின்றார் என்று தெரிந்தாலும்...
அவை.. எவை.. என உங்களிடமிருந்து அறிய ஆவல்.
அந்தத் தவறுகளை, நீங்கள் சுட்டிக் காட்டினால்... அதனை வாசித்து, சிலராவது திருந்தினால்... மகிழ்ச்சியே.

Link to comment
Share on other sites

  • அளவுக்கு அதிகமான ஆட்கள்.
  • தலைக்கவசங்கள் அணியவில்லை.
  • அலைபேசியை கையில் பிடிக்காததால், பிழைபிடிக்க முடியாது. :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

  • அளவுக்கு அதிகமான ஆட்கள்.
  • தலைக்கவசங்கள் அணியவில்லை.
  • அலைபேசியை கையில் பிடிக்காததால், பிழைபிடிக்க முடியாது. :D

 

 

பேசிக்கொண்டே செல்வதாலேற்படும் கவனச்சிதறல்.  

 

 

எப்படி சொன்னாலும் திருந்தவே மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

பேசிக்கொண்டே செல்வதாலேற்படும் கவனச்சிதறல்.  

 

 

எப்படி சொன்னாலும் திருந்தவே மாட்டார்கள்.

 

உண்மைதான் நிலாக்கா.. ஆனால் handsfree முறையில் பேசும் உரிமை மேலை நாடுகளில்கூட வழங்கப்பட்டுள்ளதுதானே.. அதையே குறிப்பிட்டேன். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேவைக்கு அதிகமாக குழந்தைகளை பெற்று இந்திய சனத்தொகை உருப்படியை பெருக்கியது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் அளவுக்கு அதிகமாப் பெற்றதுபோலத் தெரியவில்லை.  மூன்றுதான் பெற்றிருக்கிறார் போலத் தெரிகிறது. அனைத்தையும் கொண்டிழுக்கிறார்.  அவறு அவரில் இல்லை இந்தியா(வா?)வின் போக்குவரத்துச் சட்டவிதிகளில் இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  • அளவுக்கு அதிகமான ஆட்கள்.
  • தலைக்கவசங்கள் அணியவில்லை.
  • வயசு குறைந்த பெண்ணை  திருமணம் செய்தது :icon_mrgreen:
  • அலைபேசியை மனைவி கையில்  கொடுத்து  பெண்ணை அவமதித்தது
  • மனைவிக்கு தங்கத்தில் வளையல்கள்  செய்து போடாதது :lol:
  • வீதியில் உரத்த குரலில் பேசுவது
  • மூன்றையும் பெண்ணாக பெத்தது :lol:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பகிர்ந்த.... இசைக்கலைஞன், நிலாமதி அக்கா, சசி_வர்ணம், கரு, விசுகு ஆகியோருக்கு நன்றி.
அவர் அந்த... வாகனத்தில், இப்படிச் செல்வது... பல‌ உயிருடன் சம்பந்தப் பட்ட விடயம், என்பதால்....
இதனைப் பற்றி... மேலும் கருத்துக்களை, எதிர் பார்க்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10154964_10151985445782944_182283986_n.j

 

நித்தியானந்தாக்களின் முன்னோடி. விசுவாமித்தரர் - மேனகை குத்தட்டாம். :)

Link to comment
Share on other sites

10154964_10151985445782944_182283986_n.j

 

நித்தியானந்தாக்களின் முன்னோடி. விசுவாமித்தரர் - மேனகை குத்தட்டாம். :)

எப்பிடி சகோ ஒரு வயது முதிர்ந்தவரால் இப்பிடி .....................முடியல ........... :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்பிடி சகோ ஒரு வயது முதிர்ந்தவரால் இப்பிடி .....................முடியல ........... :D  :D

 

வயசு.. இதுக்கெல்லாம் ஒரு பொருட்டு அல்ல. பொருள்.. இடம்.. காலம்.. இங்கு ஒரு பிரச்சனை  இல்லை. இந்த மூன்றையும்.. கையாளும் வகையில் தான் எல்லாம் இருக்கு. இது.. ஒன்னும்.. பெரிய உலக அதிசயமும் அல்ல. ஆனாலும்.. இதை தப்பென்னு சொல்லுற உலகம் இன்னும் இருக்கு. பலவாறு விமர்சிக்கும்.. உலகம் இன்னும் இருக்குது. அதுதான்.. பகிர்ந்து கொண்டம். ????!

:lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

27-1395898666-32copy.jpg

 

"கண்கள்... கதை பேசும்" என்பார்கள்.
 

பல வாகனங்களுக்கு, இடையில்.... வீதியில் சென்று கொண்டு இருக்கும் போது....
அந்தக் குடும்பத்தின்.... சோகம், தரும் செய்தி கிடைத்திருக்கலாம்.
பிள்ளைகளின்... அச்சதை பார்க்க, அப்படித் தெரிகின்றது.

 

இதற்கு... என்ன, செய்ய வேண்டும்?

Link to comment
Share on other sites

10154964_10151985445782944_182283986_n.j

 

நித்தியானந்தாக்களின் முன்னோடி. விசுவாமித்தரர் - மேனகை குத்தட்டாம். :)

 

வயது போன நேரத்தில விசுவாமித்திரருக்கு பிறசர் ஏறாமல் என்னெண்டு சமாளிக்கிறார்...  :o

எப்பிடி சகோ ஒரு வயது முதிர்ந்தவரால் இப்பிடி .....................முடியல ........... :D  :D

 

நீங்கள் கேரளா பக்காம் போகேலைபோல... அதுதான் இப்பிடிக் கேட்கிறீங்கள்!!  :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வண்டியை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு தொலைபேசியில் கதைக்கவேண்டும். இதனால் சகலருக்கும் பாதுகாப்பு.
 
Link to comment
Share on other sites

மூன்றாம் உலகிற்கு நாலு தரம் போட்டு வந்தால் இப்படி ஒரு கேள்வி எழவே மாட்டுது :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பிரயாணம் ஆபத்தானதுதான்  ஆனால் நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் பலர் இதைத்தான் செய்கிறார்கள். பொலிசார்தான் கட்டுப் படுத்த வேண்டும்,ஆனால் செய்யமாட்டினம். வருமானம் கெட்டிடும்...!

 

 கன காலத்துக்கு முன்பு ஒருமுறை  இங்கு , வீதிமுழுதும் லைட் பகல்போல் எரியுது. நான் லைட் இல்லாத சயிக்கிளை ஓடிக் கொண்டுவாரன், காரில போன பொலிஸ்காரன் இறங்கிவந்து , இப்படிப் போகக் கூடாது, இறங்கி சயிக்கிளை உறுட்டிக் கொண்டு போ என்கிறான். ம்.. . அவருக்குத் தெரியேல்ல உறுட்டிக் கொண்டு போனாலும் சயிக்கிளில் லைட் எரியாது என்டு...!  :rolleyes::D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது.
    • இணைத்த படம் தெளிவாக இல்லை. கவனம் செலுத்தவும் 😎 @தமிழ் சிறி
    • நன்றிகள் அண்ணை  நாம வருடக்கணக்கெல்லாம் இல்லை 6 மாதங்களுக்கு முன்னாடிதான் கடைசியாக போனது. சிங்கையில் எமது தோலின் கலரை  பார்த்துவிட்டு அவர்களுக்குள்ளே மூக்கை பொத்துவது போல பாவ்லா காட்டி கலாய்ப்பது சப்பைகளின் வழக்கம் (பிரவுன் தோல் என்றாலே நாறுவார்களாம் என்பதை சைகையில் காட்டுவது) . அவர்களுக்கு நடுவிலே சும்மா கமகமக்க போய் நின்று அவர்களது ரியாக்சன்களை ரசிப்பது எனது வழக்கம். சிறுவயது முதலே இருந்த  வாசனைதிரவிய பித்து சிங்கை போனபின் இன்னும் உட்சத்தில் உட்கார்ந்து கொண்டது.    
    • நான் படத்தை பார்த்து 🤪மாறி விளங்கிக் கொண்டேன். அண்ணன் பயன்படுத்தியதை தம்பி பயன்படுத்தி இருக்கிறார் என்று. 
    • இதனை வேற சொல்லித்தான் தெரியனுமா ......பங்காளி மாட்டிட்டாரு ....தமிழிலில் ஒரு பழமொழி "ஆழம் தெரியாமல் காலை விடாதே " சும்மாவா சொன்னார் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.