Jump to content

இயல்பாக இருப்பதே உடலுறவிற்கு முக்கியம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மறக்க முடியாத உடலுறவுக்கு, கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் எதிர்பார்ப்பு, கொஞ்சம் உத்திகள் மட்டுமே போதுமானது. அதிக எதிர்பார்ப்பு ஆபத்திலேயே முடியும்.

உறவின்போது இயல்பு கூடுதலாக இருந்தால் இனிமையும் தானாகவே அதிகரிக்கும். மறக்க முடியாத உறவு வேண்டும் என்று நினைத்தால் முதலில் மனதை ‘ரிலாக்ஸ்’ ஆக்குங்கள். எப்போதும் ‘ஹார்ட்’ ஆக இருக்க வேண்டியதில்லை. ‘சாப்ட்’ ஆகவும் இருப்பது அவசியம். எப்படி சந்தோஷப்படுத்துகிறேன் பார் என்று கடும் வேகத்தில் முயற்சித்தால் அது கஷ்டத்தில் தான் கொண்டு போய் விடும்.

எனவே இயற்கையான வேகமே போதுமானது. சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது அதை சரியாக பயன்படுத்திக் கொள்பவர்தான் புத்திசாலி. செக்ஸ் விஷயத்தில் வேகமாக இருப்பதை விட விவேகமாக இருப்பதுதான் இயல்பான, இனிமையான செக்ஸ் உறவுக்கு சிறந்தது. இது பெண்களை விட ஆண்களுக்குத்தான் முக்கியமாக தேவை. ‘வெரைட்டி’யாக முயற்சிப்பதில் தவறில்லை. அதேசமயம், அது விரக்தியில் கொண்டு போய் விட்டு விடக் கூடாது என்பதும் முக்கியமானது.

 

கடுமையான முயற்சிகளை பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. அமைதியான, ஆழமான, நீடித்த உறவைத்தான் பெரும்பாலான பெண்கள் விரும்புவார்கள். அதேபோல மனம் நிறைய கற்பனைகளை அடுக்கி வைத்துக் கொண்டு ‘உறவில்’ இறங்கக் கூடாது. அது எதிர்பாராத ஏமாற்றங்களுக்கு வழி விடலாம். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், களத்தில் இறங்கினால் எதிர்பாராத இன்பம் கிடைத்து மகிழ்ச்சியையும், கூடலையும் உறுதியாக்கி உற்சாகப்படுத்தும்.

 

அதேசமயம், படுக்கையில் போய் உட்கார்ந்து கொண்டு திட்டமிடுவதும் தவறு. கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் எதிர்பார்ப்பு, கொஞ்சம் உத்திகள் என சின்னச் சின்ன பிளானுடன் போனாலே போதுமானது. அதாவது அடிப்படை இருக்க வேண்டும். அபரிமிதமான திட்டமிடல்கள் இங்கு தேவையில்லை. உங்கள் மீது உங்களது பார்ட்னருக்கு ஆர்வம் கலந்த எதிர்பார்ப்பு இருக்க வேண்டுமே தவிர, ‘இன்னிக்கு என்ன பன்னப் போறானோ’ என்ற பீதி மட்டும் வந்து விடவே கூடாது.

 

 

img1140203042_3_1.jpg

 

அதேபோல ‘பொசிஷன்’ குறித்தும் ஏடாகுடமான எதிர்பார்ப்புகளுடன் போகக் கூடாது. உங்களுக்கு எது வசதியோ அதை மட்டுமே முயற்சித்தால் போதுமானது. அதனால் எந்த பாதிப்பும் நிச்சயம் வராது. அதில் அப்படி பார்த்தோமே, செய்து பார்த்தால் என்ன என்று முயற்சித்தால் சில நேரங்களில் ஏமாற்றமோ அல்லது கசப்பான அனுபவமோ ஏற்படக் கூடும். அதனால் முடிந்ததை செய்யுங்கள் - முக்கியமாக உங்களது பார்ட்னருக்கு பிடித்தமானதை மட்டும் செய்யுங்கள். இது மிகவும் சவுகரியமானது, பாதுகாப்பானதும் கூட.

 

செக்ஸ் என்பது கற்றுக்கொள்வதுதான். எல்லாம் தெரிந்தவர் எவரும் இல்லை. இன்னொரு முக்கியமான விஷயம். எதுவுமே முழுமையானதல்ல. முழுமையானது என்று இந்த உலகில் எதுவுமே கிடையாது. எனவே இன்று உறவு சரியில்லையே என்ற ஏமாற்றத்துடன் தூங்கப் போகாதீர்கள். நாளை இதை விட சிறந்த இரவாக அமையலாம்.

 

http://tamil.webdunia.com/miscellaneous/health/sexualproblems/1402/03/1140203042_3.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:unsure: அப்ப எப்பிடி ஸ்டார்ட் பண்ணிறது? :unsure:

Link to comment
Share on other sites

சரி ஓகே.. பொண்ணு யாரு?? :D

உங்கள் மீது உங்களது பார்ட்னருக்கு ஆர்வம் கலந்த எதிர்பார்ப்பு இருக்க வேண்டுமே தவிர, ‘இன்னிக்கு என்ன பன்னப் போறானோ’ என்ற பீதி மட்டும் வந்து விடவே கூடாது.

:lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
‘வெரைட்டி’யாக முயற்சிப்பதில் தவறில்லை.

 

ஏண்டாப்பா.. இதிலும்..கிங் சைஸ்.. எக்ஸ்ரா லார்ஜ்.. லார்ஜ்.. மீடியம்.. சிமால்.. எக்ஸ்ரா சிமால்.. என்று வெரைட்டி வைச்சிருக்கீங்களா.

 

ஒரு உலக்கை.. ஒரு உரல்.. சமாச்சாரத்துக்கு.. இத்தனை பில்டப் எதுக்கு. :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்சின் கஸ்ரம் இன்றுதான் புரிந்தது.ஆப்பிட்டதெல்லாம் உரலா இருந்தா அவர் என்ன செய்வார்,ஆட்டிட்டு வரவேண்டியதுதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்சின் கஸ்ரம் இன்றுதான் புரிந்தது.ஆப்பிட்டதெல்லாம் உரலா இருந்தா அவர் என்ன செய்வார்,ஆட்டிட்டு வரவேண்டியதுதான்

 

இப்படி எல்லாம் சொல்லுவீங்கன்னு தான்.. நான் உந்த விசயங்களில் அலேட்டா இருக்கிறம். சரியானதை சரியான வேளையில் தெரிவு செய்வது தான் கெட்டித்தனம். எல்லா உரலிலும் மா இடிக்கேலா.. எல்லா உரலிலும்... அவல் இடிக்கேக்கேலா... எல்லா உரலிலும் நெல்லுக் குத்தேலா.. அது அதுக்கு அது அது இருக்கனும். இதில அவசரப்பட்டு கவிழ்ந்தவை தான்.. எந்த உடலென்றாலும்.. ஏதோ உரல் கிடைச்சா காணும் என்று நடந்துக்கிறது. அது எங்களுக்கு பொருந்தாது. :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

களத்தில இறங்க சொன்னீங்களே சரி ஏ.கே 47னா இல்ல மல்டிபரல்லா கொண்டு போகணும்.?

Link to comment
Share on other sites

களத்தில இறங்க சொன்னீங்களே சரி ஏ.கே 47னா இல்ல மல்டிபரல்லா கொண்டு போகணும்.?

 

போர்க்களத்துக்கு ஆயுதம் எதுவுமின்றி செல் அங்கு ஒரு  ஆயுதத்தை எடுத்து கொள் உனக்கு திறமை இருந்தால். 
 -ஏர்னெஸ்டோ சேகுவேரா- 
 
    :D  :D  :D 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
மறக்க கூடிய உறவு வைப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
பாழை போனது ........... ஒழிச்சு பிடிச்சு விளையாட்டுக்கு ..... பூவரசு மரத்தில் ஏறுயதில் இருந்து 
எல்லாமே மறக்க முடியாததாக வந்து தொலைக்குது.
Link to comment
Share on other sites

ஏண்டாப்பா.. இதிலும்..கிங் சைஸ்.. எக்ஸ்ரா லார்ஜ்.. லார்ஜ்.. மீடியம்.. சிமால்.. எக்ஸ்ரா சிமால்.. என்று வெரைட்டி வைச்சிருக்கீங்களா.

 

ஒரு உலக்கை.. ஒரு உரல்.. சமாச்சாரத்துக்கு.. இத்தனை பில்டப் எதுக்கு. :lol::D

 

நெடுக்கர் நீங்கள் முதல்ல ஒரு கலியாணத்தை கட்டி முதன் முதலில் உரல்ல உலக்கையை போட்டு அரிசி இடிக்கும் போது எந்த பிரச்சினையும் இல்லாமல் அரிசி மாவானால் அதுக்கு பிறகு தங்கள் பில்டப்புகளை ஏற்றுகொள்ளலாம்.

     :D  :D  :D  :D  :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா,முளைக்க முதலே உரல், உலக்கை எண்டெல்லாம் கதைக்கிறாங்கள்! :o

 

அது மிருகங்களுக்குத் தான் பொருந்தும்!

 

மனுசனுக்குக் கண், காது, கன்னம், எண்டு ஆரம்பிச்சுக் கனக்க வேலை இருக்கே ! :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னப்பா,முளைக்க முதலே உரல், உலக்கை எண்டெல்லாம் கதைக்கிறாங்கள்! :o

 

அது மிருகங்களுக்குத் தான் பொருந்தும்!

 

மனுசனுக்குக் கண், காது, கன்னம், எண்டு ஆரம்பிச்சுக் கனக்க வேலை இருக்கே ! :wub:

 

 

நேரே உரல், உலக்கை என்று போகிறவர்களுக்குத்தான் இது அலுக்கும்.  உடம்பிலுள்ள அத்தனை தசைகைளையும் உணர்பவர்களுக்கு இது எப்பவுமே அலுக்காது.  :icon_idea:  :icon_idea:  :icon_idea:

 

பொறுமை உள்ளவர் பூமி ஆள்வார்.   :lol:

Link to comment
Share on other sites

ஏது நல்ல  விசயம்  எழுதினா எங்களுக்கும் பயனாகும் என்டு பார்த்தா இங்க சும்மா   உழுகிறீங்க.

 

ஆனா நல்ல தலைப்பு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி பெற வாழ்த்துக்ள் அண்ணா........................
    • போட்டி முடிவு திகதி 34வது ஆரம்பப் போட்டி நிறைவு பெறும் வெள்ளி 19 ஏப்ரல் 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி.   இன்னும் 25 மணித்தியாலங்களே உள்ளன. இதுவரை ஆறு பேர்தான் போட்டியில் கலந்துகொண்டுள்ளனர். இன்னும் குறைந்தது நான்கு பேராவது விரைவில் கலந்துகொண்டால்தான் யாழ்களப் போட்டி நடக்கும்! 😉
    • Yarl IT hub தொடர்பாக நானும் ஒரு பதிவை சில மாதங்களுக்கு முன் பகிர்ந்து இருந்தேன் என மிகுந்த அவையடக்கத்துடன் தெரிவித்து கொள்கின்றேன் 😀    
    • "சில கிருஸ்துக்கு முன்னைய காலத்து நகைச்சுவைகள்"  உலகின் மிகப் பழமையான பதிவு செய்யப்பட்ட நகைச்சுவையானது கிமு 1900 க்கு முந்தையதும் மற்றும் கழிப்பறை சம்பந்தமான நகைச்சுவையானதும் ஆகும் .   அப்போது தெற்கு ஈராக்கில் வாழ்ந்த சுமேரியர்களின் கூற்று இது:  "பழங்காலத்திலிருந்தே நிகழாத ஒன்று; ஒரு இளம் பெண் தன் கணவனின் மடியில் வாய்வு [பேச்சு வழக்கில் குசு] விடுவதில்லை" "Something which has never occurred since time immemorial; a young woman did not fart in her husband's lap." வால்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தால் [University of Wolverhampton] வெளியிடப்பட்ட உலகின் மிகப் பழமையான முதல் 10 கேலி [ஜோக்] பட்டியலில் இது தலைமை வகிக்கிறது. [Thursday July 31, 2008]  இந்த நகைச்சுவை உங்களுக்கு வேடிக்கையாக இருந்ததா? எனக்கு அப்படி இருக்கவில்லை.  ஒவ்வொரு சமூகத்திற்கும் நகைச்சுவைக்கான அணுகுமுறை உள்ளது. இந்த அணுகுமுறை அந்த சமூகத்தின் கலாச்சார மற்றும் பாரம்பரிய விழுமியங்களில் உள்வாங்கப் பட்டுள்ளது. ஒரு குழு மக்கள் வேடிக்கையாகக் கருதும் விடயம், உலகின் வேறு சில பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும், வேறுபட்ட பின்னணியைக் கொண்டவர்களுக்கும் புண்படுத்தக் கூடியதாக இருக்கலாம்.  என்றாலும் இதையே பதியப்பட்ட முதல் பண்டைய நகைச்சுவையாக கருதப்பட்டுள்ளது.  ......................................................... ஒரு பகிடி அதேநேரம் ஒரு புதிர், பண்டைய கிரீஸ், கிமு 429. கிரேக்க நாடக ஆசிரியரான சோஃபோக்கிள்ஸின் "ஓடிபஸ் டைரனஸ்" இல், ["Oedipus Tyrannus," by Greek playwright Sophocles,] ஒரு பாத்திரம் பின்வரும் வரியைக் கொடுக்கிறது, இது ஓரளவு நகைச்சுவையாகவும்  ஆனால் மூளைக்கு வேலையாகவும் உள்ளது. கேள்வி:  எந்த மிருகம் காலையில் நான்கு கால்களிலும், மதியம் இரண்டு கால்களிலும், மாலையில் மூன்று கால்களிலும் நடக்கும்? What animal walks on four feet in the morning, two at noon and three at evening? பதில்: மனிதன்.  குழந்தையாக நான்கு கால்களிலும், மனிதனாக  இரண்டு கால்களிலும் முதுமையில் ஊன்றுகோள்களுடன் மூன்று கால்களிலும்." ............................................................ பண்டைய கிரீஸ், கிமு 800 ,  பெயரில் ஒரு சிலேடை. ஹோமரின் "தி ஒடிஸி" - 2,800 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. அதில்,   "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸிடம் தனது உண்மையான பெயர் 'யாருமில்லை' ['Nobody']  என்று கூறுகிறார்." "Odysseus tells the Cyclops that his real name is 'Nobody.'" பின் ஒரு நேரம்,  "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸைத் தாக்கும்படி தனது ஆட்களுக்கு அறிவுறுத்தும் போது, சைக்ளோப்ஸ் [பயத்தில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, உதவி தேடி] கத்துகிறார்: 'உதவி, உதவி நோபோடி என்னைத் தாக்குகிறார் !' [ ஆனால் அது ஒருவரும் என்னைத் தாக்கவில்லை என கருத்துப் படுவதால்]   'Help, Nobody is attacking me!' உதவிக்கு யாரும் போகவில்லை. ....................................................... கிமு 1100 இல் பெயர் தெரியாத ஒருவரின், ஒரு வயதான திருமணமான ஜோடியைப் பற்றிய நகைச்சுவை ஒரு கண் பார்வையற்ற ஒரு பெண்ணுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகிறது. அவன் வேறொரு பெண்ணைக் கண்டதும் / காதலித்ததும் அவளிடம்,  "நீ ஒரு கண்ணில் பார்வையற்றவள் என்று கூறப்படுவதால் நான் உன்னை விவாகரத்து செய்கிறேன்"  'I shall divorce you because you are said to be blind in one eye.' என்று கூறினான்.  அவள் அவனுக்குப் பதிலளித்தாள்:  "திருமணமாகி 20 வருடங்கள் கழித்து நீங்கள் அதைக் இன்றுதானா கண்டுபிடித்தீர்கள்?" 'Have you just discovered that after 20 years of marriage?'" தொகுத்தது [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.