Jump to content

3 தேசிய விருதுகளை பெறும் `தங்கமீன்கள்'


Recommended Posts

408986-thanga-meengal.jpg

 

 

`தங்கமீன்கள்' திரைப்படத்திற்கு 3 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேப்போல் மறைந்த ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான பாலுமகேந்திராவின் `தலைமுறைகள்' நகுல் நடித்த `வல்லினம்' படத்திற்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த படங்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து தேசிய விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அதன்படி 61 ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதில், ராமின் இயக்கத்தில் கடந்தாண்டு வெளிவந்த `தங்கமீன்கள்' திரைப்படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த தமிழ்படம், சிறந்த குழந்தை நட்சத்திரம் (சாதனா), சிறந்த பாடலாசிரியர் (ஆனந்த யாழை... நா.முத்துகுமார்) ஆகியோரே இவ்விருதுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், பாலுமகேந்திராவின் `தலைமுறைகள்' திரைப்படம், சிறந்த ஒருமைப்பாட்டுக்கான விருதுக்கு தெரிவாகியுள்ளது. அதேபோன்று, ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில், நகுல் நடித்திருந்த `வல்லினம்' திரைப்படம் சிறந்த படத்தொகுப்புக்கான விருதை பெறுகிறது. இப்படத்தில் படத்தொகுப்பாளராக பணியாற்றிய சபு ஜோசப்பிற்றே இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் பிற மாநில திரைப்படங்களும் தேசிய விருதுக்கு தெரிவாகியுள்ளன.

என் விருதை பாலு மகேந்திராவுக்கும் சமர்பிக்கிறேன் '

நா முத்துக்குமார்

இதனிடையே, தனக்கு கிடைத்த விருது குறித்து முத்துக்குமார் வெளியிட்ட அறிக்கையில், `` சிறந்த திரைப்பட பாடலாசிரியருக்கான தேசிய விருது எனக்கு கிடைத்துள்ளது. இவ்விருது, இன்னும் தரமான பாடல்களை தமிழ் மக்களுக்கு தர வேண்டும் என்னும் கூடுதல் பொறுப்புணர்வை என் தோள்களின் மீது ஏற்றி வைத்திருக்கிறது.

இத்தருணத்தில் தங்கமீன்கள் இயக்குனர் ராம், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, பாடகர் ஸ்ரீராம் பார்த்தசாரதி ஆகியோருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்விருதை என் தந்தை நாகராஜனுக்கும், ஞானத்தந்தை பாலுமகேந்திராவுக்கும், இயக்குனர் ராமின் மகள் ஸ்ரீ சங்கர கோமதிக்கும், என் மகன் ஆதவன் நாகராஜனுக்கும், இந்த பாடலுக்காக என் கைகளைப் பிடித்து ஆனந்த கண்ணீர் விட்ட பெற்றோர்களுக்கும் சமர்பிக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் ராம் நெகிழ்ச்சி

‘தங்கமீன்கள்’ திரைப்பட இயக்குநரும் நடிகருமான ராம் கூறுகையில், ``என் குருநாதர் பாலுமகேந்திராவின் படத்துடன் என் படத்திற்கும் விருது கிடைத்தது பெரும் மகிழ்ச்சி.

சாதனாவுக்கு விருது கிடைத்திருப்பது கூடுதல் மகிழ்ச்சி. என் நண்பன் நா.முத்துக்குமாருக்கு விருது கிடைக்க வேண்டும் என்று நீண்ட காலமாகவே நினைத்து வந்தேன். இப்போது அதுவும் நிறைவேறிவிட்டது. இந்தப்படத்தை விருது வரைக்கும் கொண்டு சென்றது ஜே.எஸ்.கே சதீஸ்குமார்தான். அவருக்கும் நன்றி என்றார்.

http://virakesari.lk/articles/2014/04/17/3-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

 

 

தேசிய விருது கலைஞர்களின் நெகிழ்ச்சியான பேட்டி!

தேசிய திரைப்பட விருது பெற்ற தமிழ்பட கலைஞர்கள் தங்களின் மகிழ்ச்சியை, நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்கள். இதோ அந்த சந்தோஷ வார்த்தைகள்.

 
இயக்குனர் ராம் (தங்க மீன்கள்)
 
விஞ்ஞானம் வளர்ந்தாலும், நாகரீகம் சிதைந்தாலும் உறவுகள் இன்னும் மாறவில்லை. அதைத்தான் இந்த விருது உணர்த்துகிறது. தந்தை மகள் உறவுக்கு கிடைத்த தேசிய அங்கீகாரமாக இந்த விருதை பார்க்கிறேன். மக்களாலும், விருதுகளாலும் தங்க மீன்கள் கொண்டாடப்படுவதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு விருது கிடைத்ததை விட என் தயாரிப்பாளர் கவுதம் மேனன், பாடலாசிரியர் நா.முத்துகுமார், குழந்தை சாதனாவுக்கு விருது கிடைத்ததுதான் பெரிய மகிழ்ச்சி. ஒரே நேரத்தில் எனக்கும் என் குருநாதர் பாலுமகேந்திராவுக்கும் விருது கிடைத்திருப்பது பெருமையாக இருக்கிறது.
 
பாடலாசிரியர் நா.முத்துகுமார் (ஆனந்த யாழை மீட்டுகிறாய்.... தங்க மீன்கள்)
 
நான் எத்தனையோ பாடல்களை எழுதியிருந்தாலும் என் மனசுக்கு நெருக்கமான பாடல் ஆனந்த யாழை மீட்டுகிறாய்... மகளை பெற்ற ஒவ்வொரு தந்தையும் நேசித்த பாடல். அந்த பாடலுக்கு விருது கிடைத்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது. இன்னும் தரமான பாடல்களை தரவேண்டும் என்கிற பொறுப்பை என் தோள் மீது சுமத்தியிருக்கிறது. இந்த விருதை இயக்குனர் ராமின் மகளுக்கும், எனது மகனுக்கும் சமர்பிக்கிறேன்.
 
தயாரிப்பாளர் சசிகுமார் (தலைமுறைகள்)
 
பசங்க படத்திற்காக முதன் முறையாக தேசிய விருது வாங்கினேன். இப்போது இரண்டாவது முறையாக வாங்கப்போகிறேன். தலைமுறையை தயாரித்ததில் என் தலைமுறைக்கே பெருமையாக நினைக்கிறேன். தலைமுறையை ஒரு படமாக பார்க்கவில்லை. ஒரு பதிவாகத்தான் பார்க்கிறேன். இந்த விருதுக்கு சொந்தக்காரர் பாலுமகேந்திரா சார்தான். அவர் உயிரோடு இருந்திருந்தால் இரட்டிப்பு சந்தோஷம் இருந்திருக்கும்.
 
எடிட்டிர் சாபு ஜோசப் (வல்லினம்)
 
ஆண்மை தவறேல் எனது முதல் படம் வல்லினம் மூன்றாவது படம். மூன்றாவது படத்திலேயே தேசிய விருது என்பது என் வாழ்வில் கிடைத்த பெரும் பாக்கியம். வல்லினம் படத்தின் கதை கூடைப்பந்து போட்டியை மையமாக கொண்டது. அதில் நான்கு விளையாட்டு போட்டிகள் வரும் நான்கும் நான்குவித சூழ்நிலையில் வரும் அதற்கேற்ப அதனை படம் பிடித்திருப்பார்கள். மொத்தம் 60 மணிநேர புட்டேஜை பார்த்து அதிலிருந்து தேவையான ஷாட்களை செலக்ட் செய்து கோர்த்தேன். கடுமையான உழைப்பு அது அந்த உழைப்புக்கான பரிசு இந்த விருது. தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் சாருக்கும், இயக்குனர் அறிவழகன் சாருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
குழந்தை நட்சத்திரம் சாதனா (தங்க மீன்கள்)
 
சாதனா தற்போது இலங்கையில் இருக்கிறாள். இன்னும் இரண்டு நாட்களில் இந்தியா வர இருக்கிறாள். அப்போது அவள் மீடியாக்களை சந்தித்து பேசுவாள் என்று தங்க மீன் டீம் தெரிவித்துள்ளது. இருப்பினும் அவர் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்த தருணத்தை என்னால் மறுக்கவே முடியாது. இந்தப்படத்தில் என்னை நடிக்க வைத்து, ஊக்கம் அளித்த இயக்குநர் ராம், தயாரிப்பாளர் கவுதம் மேனன், இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா, ஜெஎஸ்கே பிலிம் கார்ப்பரேசன் மற்றும் மீடியாக்கள் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்லது  உற‌வே அப்படிபட்ட  நீங்கள் தமிழ்நாட்டில்  சீமான் தனது மகனுக்கு ஆங்கில மோகத்தால் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பதை எதிர்க்கவில்லையே. 😭  இலங்கையில்  தமிழர்களும் சிங்கலவர்களும் தங்கள் மொழிகளில் கல்வி கற்பது போன்று மற்றய நாட்டு மக்களும் தங்கள் மொழியில் கல்வி கற்பது போன்று சீமான் தனது மகனுக்கு தமிழ் வழி கல்வி கற்பித்திருந்தால் அது ஒன்றும் சாதனையில்லை  அது ஒரு அடிப்படை விடயம்.அதுவும் தமிழ் தமிழ் என்று சொல்லி அரசியல் செய்யும் சீமான் முதல் செய்ய வேண்டியது.    
    • யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு! யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த எரியூட்டி கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. முன்பதாக வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1375554
    • எந்தக் காலத்திலும் அதிகாரவெறி கொண்டவர்களாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும்தான் இந்த உலகம் அமைதியை இழந்து கொண்டிருக்கின்றது.........!   தொடருங்கள் ஜஸ்டின் .......!   👍
    • வ‌ங்க‌ளாதேஸ் எப்ப‌டி த‌னி நாடான‌து...............இத‌ற்க்கு ப‌தில் சொல்லுங்கோ மீண்டும் விவாதிப்போம் பெரிய‌வ‌ரே..........................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.