Jump to content

இனியாவின் தவிப்பு ...... (பாகம் 6 இருந்து 11 வரை)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இனியாவின் தவிப்பு ...... (பாகம் 6 )

beautiful-sunrise-640x250.jpg

(மறுநாள் காலை)

தாயார் : இனியா ..... இனியா பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மாச்சி .....

அம்மா அப்பா என்னை ஆசிர்வதியுங்கோ .....

எங்கள் ஆசிர்வாதம் எப்போதுமே உங்களுக்கு உண்டு ....

(இனியாவை கட்டித்தழுவிய படி கூறினார்கள்)

நாங்கள் எல்லோரும் கோவிலுக்கு போவோம் வெளிக்கிடுங்கள் கெதியாக அபிஷேகத்துக்கு முன் போகவேணும்

''இனியா தளயத்தளைய நடை பயின்று பூமியை தட்டி எழுப்பும் விதத்தில் அவளின் சேலையும் அவள் தோட்டத்தில் உள்ள தேன்வண்டுகளை கொட்டி கூப்பிடும் அளவுக்கு அவள் தலையில் மல்லிகை பூவும் முகத்தில் புன்னகை என்னும் பூக்கள் வடிய சிந்து பாடும் நடையோடு மனதில் அலைபோல் கற்பனைகளை சுமந்து அவள் மனதுக்குள் ஒரு சுயம்பரமே நடத்துகின்றாள் .....

சாதரணமாக கோவில் வீட்டுக்கு பக்கத்தில் என்று சொல்வாள் ஆனால் இன்று இவளுக்கு வெகு தூரம் போல் உள்ளது இவளின் தவிப்பு சீக்கிரமே வீடு போகவேண்டும் போல் உள்ளது .....''

நாங்கள் வேகமாக போகவேண்டாம் அச்சயா, அம்மா அப்பா நடக்க மாட்டார்கள்.

இதில பக்கத்திலதானே கோவில் ...

அச்சயா : என்னடி மனதுக்குள்ளே பட்டாம் பூச்சி பறக்கிறது போல இருக்கா? அதுவும் கலர்கலராக .... எனக்கு தெரியும் புகழிடமிருந்து என்ன வருமோ என்றுதானே ?!

ஹி .......ஹி (புன்னகைக்கிறாள் )

எதிரே வரும் ஐஸ் கிறீம் வானில் இருந்து ஒலிக்கின்றது ........

ஊரெல்லாம் உன் பாட்டு தான் உள்ளத்தை மீட்டுது

நாளெல்லாம் உன் பார்வை தான் இன்பத்தை கூட்டுது

நீயல்லால் தெய்வம் வேறெது..

நீ எனைச் சேரும் நாளெது.. ஓஹோ..

உன் பெயர் உச்சரிக்கும் -

உள்ளம் நித்தமும் தத்தளிக்கும் - இங்கு

நீயில்லாது வாழ்விலேது வேனிற்காலம் தான்

என் மனம் உன்வசமே - கண்ணில்

என்றுமுன் சொப்பனமே - விழி

காணும் காட்சி யாவும் உந்தன் வண்ணக்கோலம் தான்

ஆலம் விழுதுகள் போலே

ஆடும் நினைவுகள் கோடி

ஆடும் நினைவுகள் நாளும்

வாடும் உனதருள் தேடி

இந்தப்பிறப்பிலும் எந்தப்பிறப்பிலும்

எந்தன் உயிர் உனை சேரும்

ஊரெல்லாம் உன்.....

(கோவிலுக்குள் செல்கின்றனர் )

248174-koneshwaram-kovil-trincomalee-sri-lanka.jpg

தந்தை : இனியா.... மாப்பிள்ளை புகழ் போண் எடுப்பார் கெதியில் வீட்டுக்கு போக வேண்டும்

ஓம், அப்பா கொஞ்ச நேரம் இருந்துவிட்டு போவோம்

அம்மா உங்களால் நடக்க முடியுமோ ? ஓம், அம்மாச்சி

தந்தை : (ரகசியமாக )அம்மா, எணேய்.... பிள்ளையின் முகத்தை பார் எவ்வளவு சந்தோஷமாக இருக்கின்றாள் இப்பதான் ஒரு பாரம் குறைவதுபோல் இருக்கின்றது

தாயார் : உண்மைதான் பிள்ளையின் முகத்தை பார்க்க சந்தோஷமாக இருக்கு ...

சரி போவோம் வீட்டுக்கு பிள்ளைகளும் மருமக்களும் போண் எடுப்பார்கள் ......

(வீட்டு வாசலில் வரவேற்றனர் )

Cute-Puppies.jpg

இனியாவின் செல்லப்பிராணிகளான ஜிம்மியும் சிங்காவும் இருகால்களில் நின்று மறுகால்களினால் இனியாவை வரவேற்றனர் அப்போது இனியா கையில் கொண்டுவந்த பணிஷ்சை கொடுத்து தலையை தடவினால் ஜிம்மியும் சிங்காவும் இவளின் காதில் இரகசியமாக மூக்கினால் சுவாசித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்....

இனியாவின் சகோதர்களனான அண்ணா, சின்ன அண்ணா, ஆசை அண்ணா, அவர்களின் அண்ணிமார்களும் பிள்ளைகளும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்

அச்சயா : இனியா...... அம்மா சாப்பிட கூப்பிடுகின்றார் வாங்கோ ......

என்னமோ தெரியல, எனக்கு பசிக்குதில்லை அண்ணாக்களுடன் பேசியதிலேயே பசிபோயவிட்டது எவ்வளவொரு சந்தோஷம் ஹி ....ஹி

அச்சயா : இனியா சும்மா விடாத எனக்கு தெரியும் ஏன் பசிக்கவில்லை என்று புகழிடமிருந்து ஒன்றும் வரவில்லை என்றுதானே ?

அதுவும் ... ஒரு காரணம்தான் ... இருந்தாலும் எனக்கு என் உறவுகளுடன் கனநேரம் கதைத்ததில் எனக்கு மிகவும் சந்தோஷம்

(இனியா தனக்குள் ) நேரமோ மாலை எட்டு ஒன்பதாகிவிட்டது அயல் வீடுகளோ சத்தமும் அடங்கி போயின சோறு தண்ணீருக்கும் பசிக்கவில்லை ஏதோ எனது மனது பாரமாக இருக்கின்றது இதற்க்கு காரணம் இந்த புகழ் இவர் ஏன் போண் எடுக்கவில்லை ?????

(என்றவாறே என்ன செய்வதென்று தெரியாமல் ரேடியோவை போடுகிறாள்)

எங்கே எனது கவிதை

கனவிலே எழுதி மடித்த கவிதை

எங்கே எனது கவிதை

கனவிலே எழுதி மடித்த கவிதை

விழியில் கரைந்துவிட்டதா

அம்மம்மா விடியல் அழித்துவிட்டதா

கவிதை தேடித்தாருங்கள்

இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்

எங்கே எனது கவிதை

கனவிலே எழுதி மடித்த கவிதை

எங்கே எனது கவிதை

கனவிலே எழுதி மடித்த கவிதை

மாலை அந்திகளில் மனதின் சந்துகளில்

தொலைந்த முகத்தை மனம் தேடுதே

வெயில் தாரொழுகும் நகர வீதிகளில்

மையல் கொண்டு மலர் வாடுதே

மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில்

துருவித் துருவி உனைத் தேடுதே

உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை

உருகி உருகி மனம் தேடுதே.......

இனியாவின் தவிப்பு தொடரும் ..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருக்கு நன்றி ..ஒரு சில எழுத்து பிழைகளை தவிர்க்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் தமிழரசு

காதலில் தவிப்பவர்களுக்கு எப்படிப் பசி வரும் ம்ம்ம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகிர்வுக்கு, இசையும் கதையும் நான்றாக இருக்கு தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனியாவின் தவிப்பு ...... (பாகம் 7)

MayakkumMalai1.JPG

(இனியாவின் தொலைபேசி அழைக்கின்றது )

ஹலோ ...... ஹலோ ........

ஹலோ ..... ஹலோ ... நான் புகழ் பேசுகின்றேன், நீங்கள் யார் பேசுகின்றீர்கள் ?

நான் ... இனியா ..... (தயக்கத்துடன்)

சொறி .... என்னால் காலையில் உங்களுக்கு வாழ்த்து கூற முடியவில்லை .... வேலைக்கு சென்றிருந்தேன் இப்போதுதான் வந்தேன் உங்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் .......

நன்றி (இனியாவின் மனதுக்குள் வெறும் வாழ்த்துக்கல்தானா என சலித்து கொண்டாள்)

ஏன் .... இனியா தயக்கமாக கதைக்கின்றீர்கள் ?

தயக்கமா ...... ? தயக்கம் எதுவும் இல்லை ......

வீட்டில் எல்லோரும் சுகமாக இருக்கின்றார்களா ?

ஓம், அம்மா அப்பா சுகமாக இருக்கின்றார்கள்.

ஏதாவது பேசுங்களேன் இனியா .....

(அவளின் எதிர்பாப்போ வெறும் தூசுபோல் பறந்து போனதால் அவளால் சந்தோஷமாக பேசமுடியவில்லை வெறும் வார்த்தையில் வாழ்த்துக்கள்தான ?என தனக்குள்ளையே வினாக்கள் தொடுத்தாள் )

2867472708_06210e5bec.jpg

''ஆண்கள் எப்போதும் கைகளில் ஓடும் ரேகையைப்போல் இருப்பார்கள் பெண்களோ கையில் இருக்கும் கைக்குட்டையைப்போல் இருப்பார்கள் ''

நீங்கள் புரிந்திருப்பீர்கள் என நினைக்கின்றேன் .....

நிச்சயமாக உங்களை என்னால் புரிய முடிகின்றது

இப்போதாவது என்னை புரிந்து கொண்டீர்களே ....

வாழ்க்கை என்று ஒன்று வந்தாலே அதில் வாழும் ஒவ்வருவருக்கும் புரிந்துணர்வு வேண்டும் என்பதினை எனது பெற்றோரை பார்த்து கற்றுக்கொண்டேன்

ஆஹா ..... இம் ...அப்புறம் (மனதுக்குள் நல்லதொரு மாமா மாமி நான் கொடுத்து வைச்சனான் )

சரி நான் ஒருதடவை மாமா மாமியுடன் பேசவேண்டும் பிறகு நான் உங்களுக்கு திரும்ப போண் எடுக்கின்றேன் இப்போதைக்கு பாய் .....பாய்,

அம்மா உங்களுடன் இவர் கதைக்கவேண்டுமாம்,

தாயார் : தம்மா போணை ....

அச்சயா .... அச்சயா எங்கே இருக்கிறாய் ? ஒ ..... இங்கேயா இருக்கின்றாய்

அச்சயா : என்ன ..... முகத்தில கலர் .... கலராக மாற்றம் மின்மினி பூச்சிகள் பறக்குதோ ?

அதென்ன .... கலர் ....கலராக ....

அச்சயா : நீ .... இவ்வளவுகாலமும் வர்னத்தை உன் கண்ணாலதான் பார்த்திருப்பாய், ஆனால் மனசால் பார்த்திருக்கமாட்டாய் இனிமேல்தான் எல்லாம் நல்ல கலர்களாகத்தான் தெரியும் என்றவாறே ....

ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா..

நீயும் ஆனந்த பைரவி ராகமா..

இதயம் அலை மேல் சருகானதே..

ஒரு சந்தன பௌர்னமி ஓரத்தில்..

வந்து மோதிய இரும்பு மேகமே..

தேகம் தேயும் நிலவானதே..

காற்று மழை சேர்ந்து வந்து அடித்தாலும் கூட

கற்சிலையை போலே நெஞ்சு அசையாதது..

சுண்டு விரலால் தொட்டு இழுத்தாய்..

ஏன் குடை சாய்ந்தது..

காதல் சுகமானது..!

சொல்லத்தான் நினைக்கிறேன்…

சொல்லாமல் தவிக்கிறேன்..

காதல் சுகமானது..

வாசற்படி ஓரமாய் வந்து வந்து பார்க்கும்..

தேடல் சுகமானது..

அந்தி வெயில் குளித்து சிறு மருதானி போல..

வெக்கங்கள் வர வைக்குறாய்..

வெளியே சிரித்து நான் விளையாடினாலும்..

தனியே அழ வைக்குறாய்..

இந்த ஜீவன் இன்னும் கூட ஏன் உயிர் தாங்குது..

காதல் சுகமானது..!

(என்று பாடிக்கொண்டு இருக்கையில் )

ம் ...... புரியுது ....... புரியுது

(இருவரும் பேசியபடியே உறங்குகின்றார்கள்)

full-moon.jpg

இனியாவின் தவிப்பு தொடரும் ..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேரம் கிடைக்கும்போது முழுவதையும் வாசித்துவிட்டு எழுதுகின்றேன் தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள், தமிழரசு!

உங்கள் கதை நன்றாக இருக்கின்றது!

அதை விட, அதனுடன் இணைக்கப் படும் படங்கள் கூட, உங்கள் கதையுடன் போட்டி போடுகின்றன!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு தொடருங்கள் நன்றாக செல்கின்றது இனியாவின் தவிப்பு

ஏன் சில சொற்களை வாசிக்க முடியாமல் இருக்கின்றது.

எனக்கு மட்டும் தானா அல்லது மற்றவர்களுக்குமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருக்கு நன்றி ..ஒரு சில எழுத்து பிழைகளை தவிர்க்கலாம்

நன்றி நிலாமதி,

முடிந்தளவுக்கு எழுத்து பிழைவராது பார்த்துக்கொள்கின்றேன்.

தொடருங்கள் தமிழரசு

காதலில் தவிப்பவர்களுக்கு எப்படிப் பசி வரும் ம்ம்ம்..

நன்றி வாத்தியார்,

அனுபவமோ ....?

நன்றி பகிர்வுக்கு, இசையும் கதையும் நான்றாக இருக்கு தொடருங்கள்

நன்றி உடையார்,

எனது தொடர்கதை உங்களுக்கு இசையும் கதையுமாக மாறியுள்ளது எதிர்வரும் காலங்களில் இசையும் கதையும் எழுதுவதற்கு இருக்கின்றேன் உங்களின் ஆதரவை வேண்டி நிக்கின்றேன்.

நேரம் கிடைக்கும்போது முழுவதையும் வாசித்துவிட்டு எழுதுகின்றேன் தொடருங்கள்.

நன்றி விசுககு,

உங்கள் கருத்தை அறிய ஆவலாகவுள்ளேன்.

தொடருங்கள், தமிழரசு!

உங்கள் கதை நன்றாக இருக்கின்றது!

அதை விட, அதனுடன் இணைக்கப் படும் படங்கள் கூட, உங்கள் கதையுடன் போட்டி போடுகின்றன!!!

நன்றி புங்கையூரன்,

முதல்முதலில் நான் இணைக்கும் படங்களைப்பற்றியும் குறிப்பிட்டுள்ளீர்கள் இது எனக்கு மேலும் திறமையாக தொடர்கதையை தொடரவும் வழிகோலும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு தொடருங்கள் நன்றாக செல்கின்றது இனியாவின் தவிப்பு

ஏன் சில சொற்களை வாசிக்க முடியாமல் இருக்கின்றது.

எனக்கு மட்டும் தானா அல்லது மற்றவர்களுக்குமா?

நன்றி வாத்தியார்,

நான் நினைக்கின்றேன் உங்களிடம் நான் பாவிக்கும் பொன்ட் இல்லை என நினைக்கின்றேன் மற்றவர்கள் யாரும் இது பற்றி குறிப்பிடவில்லை, பாகம் 8 ஐ வேறு பொன்ட் பாவித்து எழுதுகின்றேன் பார்த்ததும் அதுபற்றி எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனியாவின் தவிப்பு ...... (பாகம் 8)

bromley_road_catford_london_se6_94074186457532073.jpg

(புகழ் சின்னக்கா) வதனி : தம்பி இனியாவுடனோ கதைத்தநீங்கள் என்னிடம் ஒரு தடவை போணைத்தந்திருக்கலாம் நானும் வாழ்த்தி இருப்பேன்

புகழ் : ஏன் அக்கா நீங்கள் என்னும் இனியாவுக்கு வாழ்த்து சொல்லவில்லையா ?

வதனி : எனக்கு அப்படி ஒரு அவசியமில்லை எல்லாம் உனக்காகத்தான் ....

புகழ் : ஏன் அக்கா ஒரு மாதிரி கதைக்கிறியள் ....?

வதனி : அதொன்றுமில்லை ...... அனால் புகழ் நீ ஒரு பொருளும் அனுப்பாதே இப்போதைக்கு, ...... அது நல்லதல்ல.....

புகழ் : ஏன் அக்கா அப்படி சொல்கின்றீர்கள் ?

வதனி : உன் அக்காவுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கினம், நீ மாமனாக இருந்து என்ன செய்ய வேண்டுமோ அதைச்செய்த பின் உன்னை கட்ட போறவளுக்கு என்ன வேண்டுமானாலும் அனுப்பு ....

புகழ் : அக்கா ... நீங்களோ இப்படி பேசுகின்றீர்கள் ! இதக்கு முன் இப்படி பேசியதில்லையே ஏன் இந்த திடீர் மாற்றம் ?

வதனி : உன் அத்தானோ தன் குடும்பத்தை பார்க்கின்றார் அவருக்கு பிள்ளைகளை பற்றியோ இவர்களின் எதிகாலங்கள் பற்றியோ கொஞ்சம் கூட நினைக்கிறார் இல்லை .....

புகழ் : அக்கா .... என் கடமையை நான் சரியாக செய்துவுட்டேன் உங்கள் மூவருக்கும் நல்ல மாப்பிளை பார்த்து கட்டி வைத்தேன், கட்டி வைத்ததோடு விடவில்லை மூன்று பேருக்கும் வீடு 50 பவுண் நகைகள் என என்னால் இயன்றவற்றை எல்லாம் செய்திட்டேன்.

இனி என் அப்பா அம்மாவுக்கு செய்யவேண்டிய கடமைதான் எனக்கு இருக்கு, இதற்க்கு மேலையும் நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமானாலும் செய்கின்றேன் செய்தபின் நான் இனியாவை திருமணம் செய்கின்றேன்.

அக்கா ...... நீங்கள் கண் கலங்க வேண்டாம் நான் இருக்கின்றேன்......

சகோதரபிறப்பு ஒரு முறைதான் வரும் என்று அம்மா அப்பா பலதடவை சொல்லியுள்ளார்கள், அந்த வார்த்தைகளை என்னால் மறக்க முடியவில்லை ..........!

ம் ...... அக்கா, நான் கொஞ்சநேரம் வெளியில் போய் வருகின்றேன் ஜோசிக்காதேங்கோ ....... எல்லாம் வெல்லலாம்.

வதனி : சரி .... தம்பி இந்த அக்காவை தப்பாக நினைக்காதேங்கோ ......

புகழ் : இல்லை ..... அக்கா .. நீங்கள் என்ர உடன் பிறப்பு

14-tree-flowers-path.jpg

(புகழ் பாக்கில் இருக்கின்றார் இருந்தவாறே தன் வாழ்க்கையை ஒரு கணம் சிந்திக்கும் போது அவன் கண்களில் நீர் கசிந்து கன்னத்தில் கண்ணீர் ஒடுவதைக்கூட உணராது கன்னத்தில் கை வைத்து அண்ணார்ந்து வனத்தை பார்த்து சுமைகளை கூறுகிறான்.

நான் ஒரு காலமும் என் உறவுகளை பாரமாக நினைத்ததில்லை அவர்களை என் வாழ்வின் பொக்கிஷமாக நினைக்கின்றேன்.)

பெரும்பாலும் இனியா என்னை புரிந்து கொள்வாள் ....பாவம் அவள் மனதில் எவ்வளவோ எதிர்பார்ப்புக்கள், தவிப்புக்கள் எனக்கு புரிகின்றது ...

ம் .... ம் ..... இன்று இல்லையென்றாலும் என்றோ ஒருநாள் என்னை புரிந்து கொள்வாள்.

சுமைகளின் மத்தியிலும் நெஞ்சை தட்டிஎளுப்பும் பாடல் வரிகள் மனதுக்குள் .....

12.jpg

ரகசியமானது காதல் மிகமிக

ரகசியமானது காதல்

முகவரி சொல்லாமல் முகம்தனை மறைக்கும்

ஒருதலையாகவும் சுகமனுபவிக்கும்

சுவாரசியமானது காதல் மிகமிக

சுவாரசியமானது காதல்

சொல்லாமல் செய்யும் காதல் கனமானது

சொல்லச் சொன்னாலும் சொல்வதுமில்லை மனமானது

சொல்லும் சொல்லைத் தேடித்தேடி யுகம் போனது

இந்த சோகம் தானே காதலிலே சுகமானது

வாசனை வெளிச்சததைப் போல

அது சுதந்திரமானதுமல்ல

ஈரத்தை இருட்டினைப் போல

அது ஒளிந்திடும் வெளிவரும் மெல்ல

ரகசியமானது காதல்....

கேட்காமல் காட்டும் அன்பு உயர்வானது

கேட்டுக் கொடுத்தாலே காதல் அங்கு உயிராகுது

கேட்கும் கேள்விக்காகத் தானே பதில் வாழுது

காதல் கேட்டு வாங்கும் பொருளும் அல்ல இயல்பானது

நீரினை நெருப்பினைப் போல

விரல் தொடுவதில் புரிவதும் அல்ல

காதலும் கடவுளைப் போல

அதை உயிரினில் உணரணும் மெல்ல

ரகசியமானது காதல்...

(பாடலின் முடிவில் கண்களை தொடைத்தவாறே பாக்கில் இருந்து வெளியில் வரும்போது தொலைபேசி மணி ஒலிக்கின்றது ........ரத்தத்தின் ரத்தமே இனிய உடன் பிறப்பே ......)

ஹலோ ...... ஹலோ .... அக்கா, சொல்லுங்கோ ....

தம்பி .... நான் ..... பெரியக்கா கதைக்கின்றேன் ....

இனியாவின் தவிப்பு தொடரும் ..........

Link to comment
Share on other sites

உங்கள் கதை நன்றாக இருக்கின்றது . எழுத எழுதத் தான் நல்ல எழுத்து நடை வரும் . எனவே பயப்படாது தொடருங்கள் :):):) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கதை நன்றாக இருக்கின்றது . எழுத எழுதத் தான் நல்ல எழுத்து நடை வரும் . எனவே பயப்படாது தொடருங்கள் :):):) .

நன்றி கோமகன்,

தொடர்ந்து உற்சாகப்படுத்தும் உங்களுக்கு மீண்டும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கள் தமிழரசு..நாலாம் பாகம் வரை படித்தேன்....மிகுதி படிக்கவில்லை...கதையை விடாமல் தொய்வின்றிக் கொண்டு செல்லுங்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கள் தமிழரசு..நாலாம் பாகம் வரை படித்தேன்....மிகுதி படிக்கவில்லை...கதையை விடாமல் தொய்வின்றிக் கொண்டு செல்லுங்கள்..

நன்றி சுபேஸ்,

மிகுதி பாகத்தையும் நேரம் கிடைக்கும் போது படித்துவுட்டு உங்களின் கருத்துகளை எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனியாவின் தவிப்பு ...... (பாகம் 9 )

Big%20Ben_%20Houses%20of%20Parliament_%20London_%20England.jpg

தம்பி..... நான் பெரியக்கா கதைக்கின்றேன் ஒரு குட் நியூஸ் வீட்டில உங்கள் திருமணத்துக்கு நாள் குறித்துவிட்டார்கள் தெரியுமோ ?

இல்லை அக்கா .... எனக்கு தெரியாது, எப்போது நாள் குறித்துள்ளார்கள் ?

இந்தமாதம் 28 ஆம் திகதியாம் எங்களெல்லோருக்கும் மிகுந்த சந்தோஷம் !

அப்படியோ ........, என்னால் நம்பமுடியவில்லை !! அக்கா .... நான் ஊருக்கு இன்னும் ஒருசில நாட்களில் வெளிக்கிடவேண்டும்

ஓம் நிங்கள் விரைவாக போவது நல்லதுதானே அங்கும் அப்பா அம்மாவிற்கு உதவியாக இருக்கும் இப்போது எமது உறவினர்கள் பலர் வெளிநாடுகளில் வசிப்பதினால் அங்கு இப்போது திருமண வேலைகளுக்கு ஆட்களை கூப்பிடுவது கஷ்ரம், அதோட உன்னையும் எல்லோரும் பார்ப்பதற்கு ஆவலாக இருப்பார்கள்

சரி தம்பி பிள்ளைகள் பிரளி பண்ணுகின்றார்கள் பின்பு கூப்பிடுகின்றேன் ....

ஓம் அக்கா, நானும் வெளியில் போகவேண்டும் போட்டு வந்த பின் கூப்பிடுகின்றேன்.

vallai-vely.jpg

அம்மா ..... மஹாராசி ஒரு செம்பு தண்ணி கொண்டுவாம்மா எனக்கு லேசா நெஞ்சுவலிக்குது அப்படியே அந்த குளிசை பையை எடுத்துவானை,

என்னங்கோ....... ஏலாமல் இருக்கோ ? இந்தாங்கோ கொஞ்ச சுடுதண்ணி கலந்து தல்லாம் குடியுங்கோ ....ஆக ஏலாமல் இருந்தால் வாங்கோ இவன் ராசன்ர ஆட்டோவில ஆஸ்பத்திரிக்கு போவோம்

இல்லை மஹா...... லேசான வலிதான் குளிசை போட்டால் சரியாகிவிடும் ஏன் வீண் செலவு ? இனியாவின் கலியாணத்தையும் கெதியில் செய்ய வேணும் இனியும் என்னுடைய உடல் நிலை தாக்கு பிடிக்குமோ என்ற சந்தேகம் எனக்குள் வந்துவிட்டது

உங்களுக்கு ஒன்றும் ஆகாது நீங்கள் என்னும் கனகலாம் இருப்பியல் நான் சொல்லுறன் இருந்துபாருங்கோ இனியாவின் குழந்தையையும் தூக்கி தோளில் போட்டு தாலாட்டு பாடுவீர்கள்

கல்யாணவேலைகளுக்கும் நாள் நெருங்கி விட்டது பிள்ளைகள் காசு அனுப்பவில்லை அவங்களுக்கு என்ன பிரச்சனையோ தெரியவில்லை ?

போனகிழமை தினா கதைக்கும் போது சொன்னவன் வியாபாரம் சரியான குறைவாம்

வழமையாக நடக்கும் வியாபாரம் நடக்கவில்லையாம்,

(என சொன்ன வாறே மனதுக்குள்)

எல்லாரும் ஒரு கடையை நம்பி இருப்பதினால் மூன்று பேருக்கும் ஒரே மாதிரியான கஷ்ரம் ......ம் ....எல்லாத்தையும் சன்னதி மருகன் பார்த்துக்கொள்ளட்டும்

(என்றவாறே தன் சேலை தலைப்பினால் கண்களை துடைத்து கொள்கின்றாள்)

என் கையிலும் காசு இல்லாமல் போய்விட்டது என்னால் பிள்ளைகளிடம் எதிர்பார்த்து இருப்பதற்கு மனதுக்குள் கஷ்ரமாக இருக்கு எல்லாம் இந்த பாழாப்போன சிங்களவனால

நாம் பெற்றோராக இருந்து பிள்ளைகளுக்கு என்ன செய்யவேண்டும் என அவர்களிடம் கேட்க்காமலே எல்லாவற்றையும் செய்து கொடுத்தோம் பிள்ளைகளின் சந்தோஷத்துக்கு

ஆனால் இந்த பிள்ளைகளுக்கு பெற்றோருக்கு என்ன செய்ய வேணும் என்று தெரியவில்லை

ஏன் அவர்களால் உணர்ந்து கொள்ள முடியவில்லையோ !?

(ஓடிவந்து மிகுந்த மகிழ்ச்சியுடன் )

அம்மா .... நாளைக்கு அண்ணாவும், புகழும் வருகினமாம்.

புகழும் அண்ணாவுடனா வருகின்றார் ? மஹா ...... எப்படி இவையள் சந்தித்தவையல்

அதை விடுங்கோ ...... நான் பக்கத்தில தேவி வீட்டில

போய் நாலு கோழி வாங்கி கொண்டுவாறன் அப்படியே துரை அண்ணையின்ர கடையில கட்டாகருவாடும் மரக்கறி பழங்கள் வாங்கிகொண்டுவாறேன் ......

kqrjaptn.jpg

இனி பார் உன்ரை அம்மா கால்ல சில்லு பூட்டின மாதிரி ஓடித்திரிவ அங்கேயும் ..... இங்கேயுமா ......

எதோ இங்கேயும் பிரச்சனை இல்லாமல் இருக்கவேணும் இப்ப கொஞ்சநாளா ராணுவம் கெடுபிடியாக இருக்கின்றது ......

bandaranaike-airport.jpg

(புகழும் தினாவும் பண்டாரநாயக்கா விமான நிலையம் வந்திறங்குகின்றார்கள் வரவேற்பதற்கு யாரும் போகவில்லை மாறாக விசாரணை எனச்சொல்லி சிவில் உடையில் வந்தவர்கள் இவர்களை அழைத்து செல்கின்றார்கள்.)

இனியாவின் தவிப்பு தொடரும் ..........

Link to comment
Share on other sites

உங்கள் முழுக் கதையையும் படித்து விட்டு கருத்தளிக்கலாம் என்று எண்ணியிருந்தேன். அதனால் சற்று தாமதமாகி விட்டது.

இயல்பான நடையுடனும் , எல்லோரும் வாசிக்கும் வண்ணம் எளிமையான சொல்லாடல்களும் அமைந்துள்ளது.

ஒரு குடும்பத்தில் நடக்கும் இயல்பு வாழ்வை சித்தரிக்கிறது.

இனியாவின் தவிப்பு உண்மையிலேயே உவப்பு.... தொடருங்கள் வாசித்துக்கொண்டுதான் இருக்கிறோம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசிப்பதில்அதிகம் நாட்டமின்மை காரணமாக பெரிய கதைகளைக்கண்டால் ஒருவித அலர்சிக் எனக்கு. அந்தவகையில் இதையும் வாசிக்காமல் விட்டதற்காக தற்போது வருந்துகின்றேன்.

ஒரு வித்தியாசமான முயற்சி.

நாடகமும் இசையும் - கதையும் கலந்த ஒரு பாணியில் மிகவும் அந்நியோன்னியமான ஒரு குடும்பக்கதை. தொடருங்கள்.

என் வாழ்த்து என்றும் தங்களுக்கு இருக்கும் தமிழ் அரசு.

Link to comment
Share on other sites

தமிழரசு! உண்மையிலேயே கதை வாசிக்க நல்லாய்ப் போகுது! ஆனால்... யானைப் பசி பசித்த வாய்க்கு சோளப்பொரி போல கொஞ்சமா இருக்குது. கொஞ்சம் அதிகமா எழுதுங்கோவன். ஆசையா இருக்கு........!

( நான் இன்னும் ரெண்டு பவுணைத் தொடரல...... என்ற குற்றவுணர்வு எனக்குள்ள இருக்கு... வெகுவிரைவில் தொடரணும்! :( )

நீங்கள் தொடருங்கள்!

பாராட்டுக்கள்! :)

Link to comment
Share on other sites

< நாம் பெற்றோராக இருந்து பிள்ளைகளுக்கு என்ன செய்யவேண்டும் என அவர்களிடம் கேட்க்காமலே எல்லாவற்றையும் செய்து கொடுத்தோம் பிள்ளைகளின் சந்தோஷத்துக்கு

ஆனால் இந்த பிள்ளைகளுக்கு பெற்றோருக்கு என்ன செய்ய வேணும் என்று தெரியவில்லை

ஏன் அவர்களால் உணர்ந்து கொள்ள முடியவில்லையோ !? >

இதுதான் தாயகத்திற்கும் , புலம் பெயர்ந்தோருக்கும் உள்ள பிரதான முரண் . இதன் பிரதான குற்றவாளிகள் இங்குள்ளவர்களே!!!!! வெளிச்சூழலில் வாழ்ந்தாலும் , தமது கஸ்ரநஸ்ரங்களை மனம்விட்டு கதைக்காததின் விளைவே , " வித்தை செய்கின்றவர்கள்" என்ற எண்ணப்பாட்டைத் தோற்றுவித்துள்ளது .

தமிழரசு உங்கள் கதையில் முன்னேற்றங்கள் காணப்படுகின்றன . தொடர்ந்து முன்னேறுங்கள் :):):) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு தமிழ் குடும்பமும் வாழ்வில் சந்திக்கும் பிரச்சினைகள் நடை முறைகள்.

கதையை சற்று கோர்வையாக சொன்னால் இன்னும் அழகு . மேலும் தொடர்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் முழுக் கதையையும் படித்து விட்டு கருத்தளிக்கலாம் என்று எண்ணியிருந்தேன். அதனால் சற்று தாமதமாகி விட்டது.

இயல்பான நடையுடனும் , எல்லோரும் வாசிக்கும் வண்ணம் எளிமையான சொல்லாடல்களும் அமைந்துள்ளது.

ஒரு குடும்பத்தில் நடக்கும் இயல்பு வாழ்வை சித்தரிக்கிறது.

இனியாவின் தவிப்பு உண்மையிலேயே உவப்பு.... தொடருங்கள் வாசித்துக்கொண்டுதான் இருக்கிறோம்....

நன்றி,

வாசிப்பதில்அதிகம் நாட்டமின்மை காரணமாக பெரிய கதைகளைக்கண்டால் ஒருவித அலர்சிக் எனக்கு. அந்தவகையில் இதையும் வாசிக்காமல் விட்டதற்காக தற்போது வருந்துகின்றேன்.

ஒரு வித்தியாசமான முயற்சி.

நாடகமும் இசையும் - கதையும் கலந்த ஒரு பாணியில் மிகவும் அந்நியோன்னியமான ஒரு குடும்பக்கதை. தொடருங்கள்.

என் வாழ்த்து என்றும் தங்களுக்கு இருக்கும் தமிழ் அரசு.

நன்றி....

Link to comment
Share on other sites

விமான நிலையத்தில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளீர்கள். தொடருங்கள்.

நன்றாக உள்ளது. ஒரு சில இடங்களில் வெடுக் வெடுக் என்று வசனங்கள்/சம்பவங்கள் முடிகின்றன. மற்றபடி நல்ல கதை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனியாவின் தவிப்பு சிறுகதையா இல்லை இசையும் கதையுமா என்று நினைக்கத் தோன்றுகிறது..ஒவ்வொரு பாகத்திலும் இணைக்கும் பாடல்கள் மற்றும் படங்கள் எல்லாம் மிகவும் நன்றாக இருக்கிறது.அவ்வப்போது வந்து ஒவ்வொரு பாகத்தையும் படித்து செல்வேன்.அனேகமாக எழுதுபவர்களுக்கு சொல்லும் விசயத்தை உங்களுக்கும் சொல்கிறேன் எழுத்துப் பிழைகளை கவனத்தில் கொள்ளவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனியாவின் தவிப்பு ...... (பாகம் 10)

Florida_Palm_Tree_Sunset_2_by_effaced.jpg

(இனியா வழிமேல் விழி வைத்து காத்துக்கொண்டு இருக்கின்றாள்)

ஏன் என்னும் அண்ணாவையும் புகழையும் காணோம் !

என்ன நடந்ததோ தெரியவில்லை இந்நேரம் இங்கு வந்திருக்கவேண்டும் ....... என்னாச்சோ

ஏன் ... இப்படி மனம் குழப்பமாக இருக்கின்றது

(ஜோசித்தவாறே ........ முன் கேற்ருக்கும் வீட்டு வாசலுக்கும் நடந்தபடி....... இருக்கின்றாள்)

நேரமும் 8 மணியாகிவிட்டது ........

அம்மா ..... அம்மா .... அம்மோய்

ஏன் ... என்ன இனியா ஏன் ....... பதட்டப்படுகின்றாய் ?

வெளியில் சென்ற இனியா சுற்றும் முற்றம் பார்த்துவிட்டு ஒரு வேளை மூத்தண்ணா பற்றிய விடயமோ ??

என்னடி ....... என்னடி என்ன இப்ப சொல்கின்றாய் ஐயோ ...... எனக்கு கையும் ஓடல்ல காலும் ஓடல

அம்மா சத்தம் போடாதேங்கோ, இந்த ஊரில் எங்களைப்பற்றி யாருக்கும் தெரியாது நாங்கள் இடம்பெயர்ந்து வந்திருக்கும் வந்தேறு குடிகள் என்றுதான் இந்த ஊர்காரருக்கு தெரியும் எங்களின் சொந்தக்கதை யாருக்கும் தெரியாது .......

முள்ளிவாக்காளில் கடைசியாக என்ன நடந்தது என்ன நடந்திருக்கும் (என்றவாறே விம்மி ..... விம்மி அழுதால்) இன்றுவரைக்கும் மூத்தண்ணா பற்றி பலரும் பலவிதமாக சொல்கின்றார்கள் என்னால் எதையும் நம்பமுடியவில்லை .......

இனியா ..... என்னை பேசாமல் இருக்க சொல்லியிட்டு நீ ..... குலுங்கி .......குலுங்கி அழுகின்ன்றாய், உன் அப்பாவின் காதில் விழுந்தால் உனக்கு தெரியும்தானே என்ன நடக்குமென்று ......

உடன் பிறந்த உனக்கே இவ்வளவு கவலைஎன்றால் மார்பிலும் தோளிளிலும் தூக்கி வளர்த்த எங்களுக்கு எவ்வளவு வேதனையாக இருக்கும்.

எனக்கேதோ .... மூத்தண்ணா எங்கோ பாதுகாப்பாக இருக்கின்றார் என்று மனதுக்குள் தோன்றுகின்றது

அவர் விரைவில் வருவாரம்மா .....

(என்று நினைக்கும்போதே அவர் பாடும் பாடல் வரிகள் ஒருசில மறக்கவா முடியும் .........)

விடியலுக்கில்லை தூரம் – விடியும்

மனதில் இன்னும் ஏன் பாரம்? – உன்

நெஞ்சம் முழுவதும் வீரம் – இருந்தும்

கண்ணில் இன்னும் ஏன் ஈரம்?

சரி ஒரு முறை பஸ் ஸ்டாண்டுக்கு போனெடுத்து கேட்போம் கொழும்பில் இருந்து கடைசியாக வரும் பஸ் எல்லாம் வந்திட்டுதோ எனக்கேட்டால் தெரியும்

(போணை எடுத்து கதைக்கின்றாள்)

ஹலோ ...... இஞ்ச, தம்பி கொழும்பில் இருந்து வரும் பஸ் எல்லாம் வந்திட்டுதோ ?

ஓமம்மா எல்லா பஸ்சும் வந்துவிட்டது ..... ஏன் கேட்கின்றியல்

அதொண்டுமில்ல தம்பி, சரி நான் போணை வைக்கின்றேன்

என்னவாம் அம்மா ......

எல்லா பஸ்சும் வந்திட்டுதாம், என்ன நடந்ததோ இந்த பிள்ளையளுக்கு, ஏன் ஒரு போனாவது எடுத்து சொல்லியிருக்கலதானே அவ்வளத்துக்கு இந்த பிள்ளையளுக்கு புத்தியில்லையோ .......

அம்மா, அண்ணா முதல்தடவை வரும்போது எந்தப்பிரச்சனையும் இல்லை இப்போது கொஞ்சம் கேடுபிடியாகத்தான் இருக்கின்றது எல்லாம் முடிந்து மூண்டு வருடமாகியும் இங்கு இருப்பவர்கள் நின்மதியாக இருக்கின்றார்கள் என்று சொல்கின்றார்கள் அனால் நாங்கள் நின்மதி அற்றவர்களாக இருப்பது யாருக்கு தெரியப்போகின்றது ???? (என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே கரண்டு வழமைக்கு மாறாக கடடாச்சுது )

பிள்ளை உள்ள வாம்மா, அப்படியே கதவை பூட்டி கீயை கையில் எடுத்துவாம்மா

அம்மா ரெண்சனாகதேங்கோ ... ஒன்றும் நடக்காது ஜோசிக்காதேங்கோ ......

மஹா...... மஹா, என்ன நடந்தது ஏன் அம்மா கரண்டு போனது ?

தெரியாது அப்பா, அப்படியே இருங்கோ நான் விளக்கு எடுத்துவருகின்றேன்

அம்மா நீங்கள் அப்பாவுக்கு கிட்ட இருங்கோ அப்பா விழுந்து போய்விடும்

ஏன் வெளியில் நாய்கள் வித்தியாசமாக குலைக்கிறது யாரும் வித்தியாசமான ஆட்கள் நடமாடுகிரார்களோ என்று

(ஆயிரம் கேள்விகள் அவள் மனதுக்குள் வந்து போகின்றன)

clouds-moon-night-sky-ysm-Favim.com-100000.jpg

நேரமும் 12 மணியாச்சுது என்னும் கரண்டு வரவில்லை என்று சொன்ன வாறே ஜன்னலின் இடை வெளி ஊடாக வானத்தை பார்க்கின்றாள் அங்கு தெரியும் நிலவின் ஒளியோ இவள் மனதை சற்று ஆறுதல் படுத்துவதாக இருந்தது .....

இனியா .... பிள்ள .... அம்மாச்சி எனக்கொரு தேத்தண்ணி போட்டுவாம்மா

ஏன் நித்திரை வரவில்லையோ..... என்ன ஜோசிக்கிறியல்......

என்னத்தை ஜோசிக்கிறது எல்லாம் பிள்ளையளை பற்றித்தான் மூத்தவனின் ஜோசனை ஒரு புறம் இனியாவின் கலியாணம் பற்றிய ஜோசனை மறுபுறம் இப்படியே காலம் போகுது ......

அப்பா, இந்தாங்கோ தேத்தண்ணி

(கொடுக்கும் போது கரண்டு வந்தது ...

மூவரும் கதைத்தவாறே நித்திரைக்கு சென்றனர்)

மறு நாள் காலையில் வெளியில் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் வந்து போன அடையாளமும் ஒருசிலரின் பாதணியின் அடையமும் இருப்பதை கண்ட இனியா .......

4329482269_7c3f80ac33.jpg

இனியாவின் தவிப்பு தொடரும் ..........

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.