Jump to content

தமிழக மாணவர் போராட்டங்களின் வெற்றி, உலகத்திற்கு முன்னுதாரணம் : சபா நாவலன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மாணவர் போராட்டங்களின் வெற்றி, உலகத்திற்கு முன்னுதாரணம் : சபா நாவலன்


 

உலகத்தில் இன்று என்ன நடைபெறுகிறது என்பது குறித்த குறைந்தபட்ச புரிதல் ஈழப்போராட்டத்தின் இராணுவரீதியான தோல்விலிருந்து தமிழக மாணவர் எழுச்சி வரைக்கும் மதிப்பீடு செய்வதற்கு அவசியமானது. இன்றைய தமிழக மாணவர் போராட்டஙகள் ஈழப் போராட்டத்திற்கும் இந்திய மக்களுக்கும் மட்டுமன்றி உலகம் முழுவதற்குமே முன்னுதாரணமாக உருவாகக்கூடிய சூழலைத் தோற்றுவித்திருக்கின்றது. ஐ.நா தீர்மானத்தோடும் ஜெயலலிதாவின் தீர்மானம் நிறைவேற்றி நாடகம் நடத்திய கையோடும் மாணவர் போராட்டங்கள் அது ஆரம்பித்த வேகத்தில் அழிந்துபோய்விடும் என்று அங்கலாய்த்த அதிகாரவர்க்கம் தோற்றுப்பானது.


 

thunisia_protest.jpg

 

இதுவரைக்கும் துனிசியாவில் மையான அமைதியைக் கிளித்துக்கொண்டு மேலெழுந்த மக்கள் எழுச்சியைக் கண்டோம். அங்கு சாரிசாரியாக மக்கள் தொலைதூரக் கிராமங்களிலிருந்தெல்லாம் நகரங்களுக்குப் படையெடுத்து போராடும் மக்களோடு இணைந்து கொண்டார்கள். துனிசியாவில் மூட்டிய நெருப்பு அரபு நாடுகள் முழுவதும் பரவியது. மக்கள் வெள்ளம் அரபு நாடுகளின் ஆயுதப்படைகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இறுதியில் ஒரு சர்வாதிகாரிக்குப் பதிலாக மற்றோரு சர்வாதிகாரி பிரதியிடப்பட்டார்.


 

ஒடுக்குமுறை இயந்திரம் முன்னிலும் பலமாக்கப்பட்டது. இனக்குழுக்களிடையே மோதல்கள அதிகரித்தன. பல்தேசிய கொள்ளைக்காரர்கள் மக்கள் பணத்தைச் சூறையாடுவதற்காக முகாமிட்டுக்கொண்டார்கள்.


 

அமரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உருவான தன்னெழுச்சியான போராட்டங்கள் அந்த அரசுகளைக் கேள்விகேட்டன. உலகில் போராட்டங்களை ஒடுக்கும் அமரிக்க அரசின் முற்றத்திலேயே வால் ஸ்ரீட் போராட்டம் தோன்றி உலகின் அதியுயர் அதிகாரத்தின் வேர்களை விசாரணை செய்தது. ஐரோப்பிய நாடுகள் முழுவதும் அப்போராட்டங்கள் பரவிப்படர்ந்தன. அதற்கு மேல் வளர்ச்சியடைய முடியாமல் அப்போராட்டங்கள் அனைத்தும் செயற்பாடற்று செத்துப்போயின.


 

neo_liberalism-300x213.jpg

 

1970 களில் ஆரம்பித்த உலக ஒழுங்கு இன்று கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. நவ தாராளவாத உலகமயமாதல் என அறியப்பட்ட உலக ஒழுங்கு உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்ட தசாப்தங்களுக்கு உள்ளாகவே அது மீட்சியடைமுடியாத நெருக்கடியைச் சந்த்துள்ளது. 1990 ஆம் ஆண்டு இந்தியாவிலும் லத்தீன் அமரிக்க நாடுகளிலும் பொருளாதார நெருக்கடிகளைத் தோற்றுவித்த பின்னர் அந்த நாடுகளில் நவதாராளவாத உலகமயமாதல் தனது கோரக்கரங்களை இறுக்க ஆரம்பித்தது. முன்னெப்போதும் இல்லாதவாறு ஊழல், சதி, போர் ஆகியவற்றை உலகமயமாக்கியது. பல் தேசிய நிறுவவனங்கள் அமரிக்காவிலும் ஐரோப்பாவிலுமிருந்து அந்த நாடுகளில் சென்று குடியேறிக்க்கொண்டன. அங்குள வளங்களையும் தொழிலாளர்களைம் ஒட்டச் சுரண்டின.


 

உள் நாட்டில் நேரடியாகத் தமக்குச் சேவையாற்றும் அரசுகளை மக்களின் எதிர்ப்பின்றி உருவாக்கிக்கொள்வதே பல்தேசிய நிறுவனங்களுக்காகச் செயற்படும் அமரிக்க ஐரோப்பிய அரசுகளின் பிரதான அரசியல் ஆயுதமாகத் திழழ்ந்தது. இதற்காக உள் நாட்டில் பொருளாதர பலம் மிக்க விரல்விடுக் கணக்கிடக்கூடிய பணக்கார வர்க்கத்தை உருவாக்கினர். இவர்கள் உள்ளூரில் மக்கள் எதிர்ப்பின்றிய ஏகாதிபத்திய சார்பு அரசு ஒன்று செயற்படுவதை ஜனநாயகம் எனக் கருதினர். உள் நாட்டைச் சந்தைப்படுத்தக் கூடிய சூழலில் வைத்திருப்பதைச் சமாதானம் என மக்களின் பொதுப்புத்தியாகினர்.


சந்தைப்படுத்தும் சூழல் என்பது பல்தேசிய நிறுவனங்களின் சுரண்டலுக்கான சூழல் என்பதே.


imf.jpg

 

இத்திட்டத்தைச் செயற்படுத்துவதற்காக அமரிக்கா தலைமையில் பல இராட்சத நிறுவனங்கள் உருவாகின. உலக வர்த்தக மையம்(WTO), உலக நாணய நிதியம், உலக வங்கிIMF), வட அட்லான்டிக் உடன்படிக்கை அமைப்பு (NATO) போன்ற நிறுவனங்கள் நேர்த்தியான திட்டமிடலுடன் உலகை அமரிக்கா தலைமையிலான ஐரோப்பிய நாடுகளின் கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்தன.


 

பொருளாதார வார்த்தைகளில் சொல்வதானால், இந்தக் கட்டுப்பாட்டின் அடிப்படை நோக்கம் என்பது மூன்றாம் உலக நாடுகளிலிருந்து குறைந்த விலையில் இயற்கை வளங்களையும், மனித உழைப்பையும் சுரண்டி ‘உபரி உற்பத்தியை’ உறிஞ்சிக்கொள்வதாகும்.


 

இவ்வாறான சுரண்டலால் உருவாகக் கூடிய வறிய மக்களும் உழைப்பாளிகளும் ஒரு நேர உணவிற்கே கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். வாழ்வதற்காகப் போராட ஆரம்பித்தனர். இவர்களது போராட்டம் சுதந்திட சந்தைக்கு அதாவது பல்தேசிய நிறுவனங்களின் சுரண்டலுக்குத் தடையாக அமைந்தது. இவர்களைது போராட்டங்களைத் தற்காலிகமாகத் உறங்கு நிலையில் வைத்துக்கொள்ளும் நோக்கோடு தன்னார்வ நிறுவனங்களை (NGO) மேற்குறித்த இராட்சத நிறுவனங்களின் பண வழங்கலின் கீழ் உருவாக்கினர். தன்னார்வ நிறுவனம் என்ற கருத்துருவாக்கம் பின்னர் விரிவாக்கப்பட்டு பல அமைப்பு வடிவங்களைப் பெற்றது.


 

இவை அனைத்திற்கும் அப்பால் மக்கள் தாம் எதிர் நோக்கும் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராட ஆரம்பித்தனர். அவ்வாறான போராட்டங்கள் ஆயுதப்போராட்டமாகத் தோன்றிய போது பல வழிகளில் அழிக்கப்பட்டன.


 

ஈழத்தில் சந்தைப்படுத்தும் சூழலைத் தோற்றுவிப்பதற்காகவே விடுதலைப் புலிகளும் மக்களும் இரவோடிரவாக அழிக்கப்பட்டனர்.


 

தவிர, திட்டமிட்ட அரசியலோடு அரசியல் அமைப்புக்கள் தோன்றுவதை ஆரம்பத்திலிருந்தே அழிப்பதற்கு இந்த நிறுவனங்களூடான புதிய முறைகள் கையாளப்பட்டன. மக்கள் போராடுகின்ற போது அப்போராட்டங்களை அடுத்த கட்டத்திற்கு நகர விடாமல் தடுத்தனர். போராட்டங்களைத் தாமே தமது உள்ளூர் முகவர்களுக்கு ஊடாகவும் சந்தர்ப்பவாத-பாராளுமன்ற அரசியல் கட்சிகளுக்கு ஊடாகவும் கையிலெடுத்துச் சிதைத்தனர்.


 

otpor_until_victory_belgrad-300x192.jpg

 

அரபு நாடுகளில் போராட்டங்களின் பின்னணியில் ஒட்பொர் (OTPOR) என்ற அமைப்பு செயற்பட்டது. அதே அமைப்புத் தான் வால் ஸ்ரீட் போராட்டத்தையும் கையகப்படுத்தி அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் தடுத்தது. சில வேளைகளில் போராட்டங்கள் உருவாகாமல் தடுப்பதற்காக தாமே போராட்டங்களை உருவாக்கி அழித்தனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் இவ்வாறு 50 இற்கும் மேற்பட்ட போராட்டங்களை தோற்றுவித்து அழித்ததாக அமரிக்க தேசிய பாதுகாப்பு ஆணையகத்தின் (NSA) பெருந்தொகைப் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் ஒட்போர் அமைப்பு வெளிப்படையாகவே ஒத்துக்கொண்டுள்ளது.


 


 

இனப்படுகொலைக்கு சகல வழிகளிலும் பின்புலத்தில் செயற்பட்ட அமரிக்காவே மனித உரிமைஅமைப்புக்களின் துணையோடு ஐ.நா போர்க்குற்ற விசாரணை குறித்த தீர்மானத்தையும் முன்வைத்தது.


இலங்கையில் ராஜபக்சவை இன்னொரு இனவாதியால் பிரதியிடும் முயற்சியை மேற்கொள்ளும் அமரிக்க அரசு அதற்கான முன் நிபந்தனைகளை இப்போதே உருவாக்க ஆரம்பித்துவிட்டது. திடீர் எழுச்சிகளை உருவாக்குவதும், புலம் பெயர் அமைப்புக்களை உள்வாங்கிக்கொள்வதும். தன்னார்வ நிறுவனங்களை நாடு முழுவதும் விதைப்பதும். இனவாதக் கட்சிகளை எழுச்சிக் கட்சிகளாக மாற்றுவதும் அவர்களின் உடனடிச் செயற்பாடுகள். அடுத்த தேர்தலுக்கிடையில் ராஜபக்ச அரசு அமரிக்கா எதிர்பார்பதற்கு மேலாக இலங்கையின் வளங்கள் முழுமையையும் சீனவிடமிருந்து பறித்தெடுத்து அமரிக்காவிற்கு வழங்கினால் எழுச்சிகள் நிறுத்தப்படும். இல்லையெனின் இலங்கையில் பேரினவாதம் எதிரியல்ல ராஜபக்சவே எதிரி என்று தேர்தலுக்கு முன்னதக அறிவிக்கப்படும்.


 

இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கோடு அவ்வப்போது தோன்றும் திடீர் எழுச்சிகளுக்குப் பின்னணியில் ஒட்போர் போன்ற அமைப்புக்கள் செயற்படுகின்றனவா என்பற்கான ஆதாரங்கள் இன்னும் இல்லை என்றாலும் அதற்கான சாத்தியங்களை நிராகரிக்க முடியாது. ஒடுக்கப்படும் தமிழ்ப்பேசும் மக்களின் அடிப்படை உரிமையான சுய நிர்ணைய உரிமையைக்கூட அங்கீகரிக்க முடியாத இனவாதக் குழுக்கள் திடீர் மாணவர் எழுச்சிகளைத் தோற்றுவிப்பதன் பின்னணி குறித்த அரசியல் அவதானமாக நோக்கப்பட வேண்டும்.


 

அரபு நாடுகளிலெல்லாம் அரசியலற்ற திடீர் தனெழுச்சிகளை உருவாக்கி அவற்றை அழிப்பதற்கு ஆட்சி மாற்றம் எனபது கருவியாகப் பயன்பட்டுள்ளது.


 

balachandtan-300x211.jpg

 

சனல் நான்கு பிரபாகரனின் மகன் உயிரோடிருக்கும் படத்தையும் கொல்லப்பட்ட படத்தையும் வெளியிட்டபோது மனிதாபிமானிகளைக்குற்ற உணர்வுக்கு உட்படுத்தியது. இந்திய மற்றும் தமிழ் நாட்டுத்தொலைக் காட்சிகளில் மீண்டும் மீண்டும் அது குறித்த காட்சிகள் திரையிடப்பபட்டன.


ஈழத் தமிழர்களைப் பயங்கரவாதிகள் என்று தேடித்தேடி வேட்டையாடிய ஜெயலலிதாவும் இனப்படுகொலையை இலங்கை அரசு நடத்துவதற்கு நேரடி ஆதரவு வழங்கிய கருணாநிதியும் புதிய வேகத்தில் ஈழத் தமிழர் பிரச்சனை குறித்துப் பேச ஆரம்பிக்கின்றனர்.


 

துனிசியப் போராட்டத்திற்கு திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட புறச் சூழலைப் போன்றே தமிழ் நாட்டிலும் போராட்டத்திற்கான சூழல் உருவாக்கப்பட்டது.


 

இவ்வேளையில் லயோலா கல்லூரி மாணவர்கள் தமது ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கின்றனர்.


 

இனப்படுகொலையின் திரைமறைவுச் சூத்திரதாரிகளில் ஒருவர் எனக் கருதப்பட்ட திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளரும் முன்னை நாள் புலிகளின் தமிழகத் தொடர்பாளர்களில் ஒருவருமான ஜகத் கஸ்பர் என்ற பாதிரி இப்போராட்டத்தின் பின்புலத்தில் செயற்பட்டார் என்ற நம்பத்தகுந்த தகவல் பல் சந்தேகங்களை ஏற்படுத்தியது.


 

ஜெகத் கஸ்பர் போன்ற உயர் குடிப் பாதிரிகளுக்கு ஏகாதிபத்திய நிறுவனங்களுடனான தொடர்பு குறித்து விளக்குப் பிடித்துத் தேட வேண்டிய அவசியமில்லை. வன்னி இனப்படுகொலையில் இவர்களின் பங்கே இதற்குப் போதுமான ஆதரங்களை வழங்கியுள்ளன.


 

layola.jpg

 

லயோலாக் கல்லூரியில் ஜெகத் கஸ்பரால் தூண்டிவிடப்பட்ட போராட்டம், திராவிட இயக்கங்களின் சீர்திருத்தப் பாரம்பரியத்தில் வளர்ந்த தமிழ் நாட்டு மாணவர்களை குறித்த எல்லைக்குள் முடக்கிவிடவில்லை. அப்போராட்டம் அவருக்கு எதிரானதாகத் திரும்ப, அது கல்லூரி நிர்வாகத்தாலும் ஜெயலலிதா அரசாலும் அழித்துச் சிதைக்கப்பட்டது. பின்னதாக மாணவர் போராடங்கள் ஆங்காங்கே தன்னெழுச்சியாகத் தோன்றின. போர்க்குணம் மிக்க உணர்வுபூர்வமான போராட்டங்களாக தெருக்களில் மாணவர்கள் போராட ஆரம்பிக்கின்றனர். உலக மயம் உருவாக்கிய நுகர்வுச் சிந்தனைக்குள் முடங்கியிருந்த மாணவர்கள் தெருக்களில் புத்தகங்களையும் காவிக்கொண்டு போராட வெளிவந்தது ஆளும் வர்க்கம் எதிர்பார்க்காத அதிர்ச்சியை வழங்கியது.


 

திருஞான சம்பந்தர் என்ற பிராமணர் ராமேஸ்வரத்திலிருந்கு இலங்கையை நோக்கித் தேவாரம் பாடியதாக ஐதீகக் கதைகள் உண்டு. தமிழ் நாட்டிலிருந்து ஈழத் தமிழர்களுக்காக ஐரோப்பிய அமரிக்க நாடுகளில் வாழும் புலம்பெயர் நாடுகளை நோக்கித் தேவாரம் பாடும் ‘தமிழ் உணர்வாளர்கள்’ தன்னெழுச்சியான போராட்டங்களை பயன்படுத்திக்கொள்வதற்காக போட்டிபோட ஆரம்பித்த போது அது மாணவர்களிடையே பிளவுகளைத் தோற்றுவித்தது.


 

front-300x163.jpg

 

இவ்வேளையில் ஏகாதிபத்தியத் தலையீட்டை நிராகரித்தும், போராட்டங்களின் தொடர்ச்சியான வளர்ச்சியை முன்வைத்தும் ‘ஈழத் தமிழர் தன்னுரிமைக்கான மாணவர் அமைப்பு’ எழுச்சி மிக்க போராட்டத்தை சென்னை விமான நிலையத்தில் நடத்தியது. தமிழகம் முழுவது இவ்வமைப்பினர் நடத்திய போராட்டங்கள் தொடர்கின்றன. தெளிவான உறுதியான முழக்கங்களோடு எதிர்காலத்திற்கான அரசியல் திட்டமிடலுடன் இம்மாணவர் அமைப்பு நடத்தும் போராட்டங்கள், அரபு எழுச்சிகள் கடத்தப்பட்டு அழிக்கப்பட்டது போன்றும், வால் ஸ்ரீட் வகைப் போராட்டங்கள் மடிந்துபோனது போன்றும் தற்காலிகத் தன்னெழுச்சிப் போராட்டங்களாக அன்றி உறுதியான வெகுஜன அரசியல் பலத்தோடு முன்னெடுக்கப்படுகின்றன.


 

ஈழத்தில் ஒடுக்கப்படும் மக்களின் சுய நிர்ணைய உரிமையை அங்கீகரிக்கக் கோரியும், ராஜபக்ச என்ற மனித குல விரோதிக்கு அதிகபட்ச தண்டனை கோரியும் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி நடத்தும் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்வைக்கும் அரசியலை ஒட்போர் போன்ற அமைப்புக்கள் கையகப்படுத்தி சீர்குலைக்க முடியாது. அவர்கள் தெளிவாகத் தமது அரசியலையும் அதன் தலைமையையும் முன்வைக்கிறார்கள்.


 

பிரான்ஸ், கனடா, ஸ்பெயின், இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளில் ஆரம்பித்த மறுகணமே அசைவின்றி நின்றுபோன போராட்டங்களைப் போலன்றி தெளிவான அரசியலை முன்வைக்கும் இவர்களின் உறுதி ஏகாதிபத்தியங்களால் கையகப்படுத்தி அழிக்கப்பட்ட போராட்டங்கள் போன்றதன்று.


ஈழத் தமிழர் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணியின் வெற்றி என்பது தமிழகத்திற்கு மட்டுமன்றி, ஈழத்திற்கு மட்டுமன்றி உலகத்திற்கே முன்னுதாரணத்தை வழங்கவல்லது.


 

தன்னார்வ நிறுவனங்களும் .புரட்சி வியாபார’ அமைப்புக்களும் போராட்டங்களை மிக இலகுவில் கையகப்படுத்தி அழிக்கும் புதிய ஏகாதிபத்திய அரசியலின் முன்பு அதற்கு எதிரான புரட்சிகர அரசியலை முன்வைப்பது குறித்து உலகம் முழுவதும் பேசப்படும் நிலையில் தமிழக மாணவர்கள் அதற்கு முன்னுதாரணமானத் திகழ்கின்றனர்.


 

நன்கு திட்டமிடப்பட்ட ஏகாதிபத்திய அழிவு நிகழ்ச்சி நிரலுக்கு உட்படாத இவர்களின் போராட்டத் தந்திரோபாயமும் உறுதியான நீண்ட மக்கள் போராட்ட அனுபவம் மிக்க அரசியல் தலைமையும் தமிழகத்தின் பிழைப்புவாதிகளையும் கூட மிரட்டியிருக்கிறது.


 

2009 ஆம் ஆண்டு வன்னிப்படுகொலைகள் நடைபெற்ற போது தமிழகத்தில் இரத்த ஆறு ஓடப்போகிறது என்று படம்காட்டிய இந்த இனவாதிகள், எல்லாம் நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் பிரபாகரன் திரும்பி வருவார் என போலி நம்பிக்கை வழங்கி மக்களைப் போராடவிடாமல் தடுத்தனர். திட்டமிட்ட நிறுவனமயப்பட்ட மாணவர்களின் எழுச்சியின் வெம்மை தாங்காது தெருவிற்கு வந்த இந்த இனவாதிகள் மாணவர் போராட்டங்களுக்க அரசியல் வேண்டாம் என வெளிப்படையாகவே கூற ஆரம்பித்துவிட்டனர்.


உதிரிகளாக புலம் பெயர் தமிழர்களின் கடைகண் பார்வைக்காகவும், பொழுது போக்கு வியாபார விழாக்களையும், சினிமாக்களையும் விற்பனை செய்வதற்காகவும் ஈழ விடுதலை பேசும் பலர் மாணவர் போராட்டங்கள் குழுவாதத்திற்கு சிக்கியுள்லதாகக வதந்திகளைப் பரப்ப ஆரம்பித்துவிட்டனர்.


 

அழிக்கப்படும் மக்களின் அவலத்தில் அரசியல் வியாபாரம் நடத்தும் புலம் பெயர் அமைப்புக்கள் மாணவர் போராட்டத்தின் போர்குணத்தை அறிந்ததும் மௌனித்துப் போயினர். புலம் பெயர் ‘தேசிய’ இணையங்கள் போராட்டங்கள் குறித்த செய்திகளை முற்றாகப் புறக்கணிக்க ஆரம்பித்துவிட்டனர். இந்தப் புள்ளியில் உலகின் போராட்டங்களுக்கே முன்னுதாரணத்தை வழங்கிய தமிழக மாணவர்கள் தமிழ்ப் பேசும் மக்களுக்கு எதிரிகளையும் நண்பர்களையும் இனம்காட்டியுள்ள்னர்.


 

ngo-300x300.jpg

 

ஐரோப்பிய நாடுகள் நிதி வழங்கும் தன்னார்வ நிறுவனங்களின் நேரடியான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள புலம் பெயர் தமிழர் அமைப்புக்கள் பெரும்பாலானவை இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றே தீர்வு என்ற முடிவிற்கு வந்துள்ளன. ராஜபக்ச அரசிற்கு மாற்றாக சந்திரிக்கா தலைமையிலான அரசை இலங்கையிலுள்ள பல்தேசிய தரகுகளின் ஆதரவோடு நிலை நாட்டுவதே அவர்களின் அடிப்படை நோக்கமாகக் காணப்படுகிறது. இந்த நிலையில் ஈழத் தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை அடிப்படை முழக்கமாகக் கொண்ட தமிழக மாணவர்களின் போராட்டங்களை இலங்கையில் வாழும் தமிழர்கள் உன்னிப்பாக அவதானிக்கிறார்கள்.


 

முப்பது வருட ஆயுதப் போராட்ட வரலாற்றில் முதல் தடவையாக முதல் தடவையாக ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக எழுந்த மாணவர்களின் குரல் சந்தர்ப்பவாத அரசியலால் சிதைந்துபோகாது பாதுகாக்கப்பட வேண்டும்.


 

Link to comment
Share on other sites

ஜெயலாலிதா ஆட்சி கூட தமிழக மாணவர் போராட்டம் வெல்ல ஒரு காரணம்.

 

இலங்கை போன்ற நாடுகளில் மாணவர் போராட்டங்கள் நசுக்கப்படும். காரணம் அங்கு நிலவுவது இராணுவ ஆட்சி.

 

அதேவேளை எகிப்து போன்ற நாட்டில் இராணுவ ஆட்சியை ஒத்த ஆட்சி முபாரக்கால் நடந்தாலும் அமெரிக்க தலையீட்டால் மாணவர் போராட்டம் நசுக்கப்படவில்லை.

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.