Jump to content

இலங்கை இனப்பிரச்சனையை தீர்ப்பதில் இந்தியா தோல்வியடைந்துவிட்டதா..?


Recommended Posts

அப்படியானால் இந்தப் பிரச்சனையை எப்படித் தீர்ப்பது..

 

இலங்கை இனப்பிரச்சனையை தீர்ப்பதில் இந்தியா தோல்வியடைந்துவிட்டதென்று இந்திய நேசரான ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் மட்டக்களப்பில் கூறியிருக்கிறார்.

 

இலங்கையின் இனப்பிரச்சனையில் இந்திய மார்வாடிகளின் பொருளாதார பலம் எப்படி விளையாடியது என்பதையே இக்கட்டுரை எளிமையாகப் பார்க்கிறது.

 

முதல் தவறு :
ஜே.ஆர். இழைத்த முட்டாள்தனமான தவறு.. 1977 ல் ஆட்சிக்கு வந்ததும் இலங்கையை இன்னொரு சிங்கப்பூர் ஆக்குவேன் என்று அறிவித்தது.. அதைத் தொடர்ந்து ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், அமெரிக்காவுக்கு வர்த்தகத்தை திறந்துவிட்டு சுதந்திர வர்த்தக வலயத்தை அமைத்தார்.


இந்தியாவிற்கு அருகில் இந்தியாவை விஞ்சி இன்னொரு சிங்கப்பூரா..? இந்தியாவின் வர்த்தகத்திற்கு விழப்போகும் அடி இந்திராகாந்தியை விழிக்க வைத்தது.

 

ஜே.ஆர் இழைத்த அடுத்த மடைத்தனமான தவறு.. 1983ம் ஆண்டு யூலைக்கலவரத்தை நடாத்தி இந்திராகாந்திக்கு ஒரு வாய்ப்பை கொடுத்தது.

 

அவர் தமிழர்களின் பிரச்சனையையும் தீர்க்காமல், சிறீலங்காவின் பொருளாதாரத்தை அடித்து உடைக்க ஈழத் தமிழர்களை பயன்படுத்தப் போகிறார் என்பதை ஜே.ஆர் கணிப்பிடத் தவறினார்..

 

ஈழத்தில் போர் வெடித்தது, ஜே.ஆரின் சிங்கப்பூர் கனவு கலைந்தது, இந்தியாவின் காலடியில் விழுந்தார், இந்திய அமைதிப்படை வந்தது.

 

 

இரண்டாவது தவறு :
இந்திராகாந்திக்கோ, அவர் மகன் ராஜீவ்காந்திக்கோ, இந்திய கொள்கை வகுப்பாளருக்கோ உண்மையில் இலங்கைத் தமிழர் மீது அக்கறை இல்லை என்பதை சிங்களவர்கள் கண்டுகொண்டது இந்திய அமைதிப்படை ஈழத்தில் நடாத்திய படுகொலைகளுக்குப் பின்னர்தான்.


2009 வன்னியில் நடந்த அதே போர்க்குற்ற கொலைகளை இந்திய அமைதிப்படைகள் இலங்கையில் செய்தன, இந்திய படைகளுக்கு மட்டும் சர்வதேச தண்டனையில்லை எமக்கு மட்டும்தான் தண்டனையா..? என்ற இடத்திற்கு சிங்கள இனவாதம் போக வழிகாட்டியது இந்திய அமைதிப்படையே.

 

 

மூன்றாவது பெரிய தவறு :
இந்தியா சிங்களவருக்கும் எதிரி, தமிழருக்கும் எதிரி என்பதை சிறீலங்கா கண்டு கொண்டது,

அப்படியானால் இந்தியாவின் நண்பன் யார்..?


குறுங்காலத்தில் சிங்கள இனவாதம் இந்தியாவை அடையாளம் கண்டு கொண்டது..
இந்திய மார்வாடிகளையும், இந்திய பொருளாதாரத்தையும் இலங்கைக்குள் அனுமதித்தால் இந்தியா நண்பனாகும் என்பதைக் கண்டு கொண்டார்கள்.

 

குறுங்காலத்தில் 25.000 கோடிக்கு இந்திய வர்த்தகம் பெருகியது.. இலங்கை எரிந்தாலும், கிடந்தாலும் கவலை இல்லை வருவாய் வந்தால் போதும் என்று இந்தியா வேடமிட்டது.

 

ஒட்டுமொத்தத் தமிழரை அழித்தாலும் இந்தியா கவலைப்படாது என்பதை கண்டுகொண்ட இனவாதம் இந்தியாவிற்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்துக் கொண்டு, 2009 மே மாதம் இனப்படுகொலையை நடாத்தியது.

 

இந்தியா எதுவுமே செய்யவில்லை இனவாதம் தனது கணக்கு 100 : 100 வீதம் சரியெனக்

கண்டுகொண்டது.

 

 

நான்காவது பெரிய தவறு :
போர்க்குற்றவாளியான சிறீலங்காவை காப்பாற்ற ஜெனீவாவரை வந்து, இந்தியா இத்தனை பாடுபடுகிறதே.. ஏன்..?

 

 

சிறீலங்கா போர்க்குற்றவாளி நாடு என்று முடிவானால் பொருளாதாரத் தடை வரும். அப்படி வந்தால் சிறீலங்காவுடனான இந்திய வர்த்தகங்கள் முடங்கும்..

 

சிங்களம் சிரித்தது அடடா இவர்கள் அங்கும் போயும் நம்மைக் காப்பாற்றுகிறார்களே.. காரணம் என்ன.. வர்த்தகம்… வருவாய்… இந்திய பொருளாதாரத்தை கையில் வைத்திருக்கும் மார்வாடிகள்.. லக்சுமி மெற்றல், அம்பானி, டாடாட்டா, பிர்லா..

 

 

ஐந்தாவது பெரிய தவறு :
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் ஜெனீவாவில் வாக்களித்துவிட்டு வந்து தமிழக மக்களின் உணர்வுக்காகவே தாம் அப்படி வாக்களித்தாக அறிவித்தார்.

 

அதன் பின்…

 

தமிழக சட்டசபையில் தமிழீழத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டுமென்ற தீர்மானம் வந்தவுடன் அது ஒரு மாநிலத்தின் பிரச்சனை அதை மதிக்க முடியாது என்று நிராகரித்தார்.

 

அவர் முன்னர் தமிழக உணர்வுகளை மதிப்பதாகக் கூறியது நாடகமா.. இல்லை தமிழகத்தை ஒரு மாநிலமென புறக்கணித்தது நாடகமா..?

 

இதில் எது உண்மை நாடகம்..?

 

சர்வஜன வாக்கெடுப்பிற்கு ஆதரவு கொடுத்தால் இந்திய மார்வாடிகளின் வர்த்தகத்திற்கு ஆபத்து..

 

ஜெனீவாவில் உயிரற்ற பிரேரணைக்கு வாக்களித்தால் வர்த்தகத்திற்கு பங்கம் வராது..

 

அமைச்சரின் முதற் கூற்று நாடகம், அடுத்த கூற்று யதார்த்தம்..

 

தவறுகளில் எல்லாம் பெரிய தவறு ஆறாவது தவறு :

அன்று வர்த்தகத்திற்காக ஒட்டுமொத்த இலங்கையையும் கைவிட்ட வடஇந்தியர் இன்று அதே வர்த்தகத்திற்காக எட்டுக்கோடி தமிழ்நாட்டு தமிழர்களையும் கைவிட தயாராகிவிட்டனர்.

 

இனி -

 

இந்தியாவால் பிரச்சனையை தீர்க்க முடியாது நாம் தீர்க்கிறோம் என்று ரணிலும் சந்திரிகாவும் களமிறங்கப் போகிறார்கள்..

 

உண்மையில்…

 

இந்தியாவால் இலங்கை இனப்பிரச்சனையை தீர்க்க முடியாது..

 

ரணிலும், சந்திரிகாவும் ஏற்கெனவே ஒரு தடவை முயற்சித்து தோல்வியடைந்தவர்கள் அவர்களாலும் முடியாது..

 

அப்படியானால் என்ன செய்வது…?

 

இலங்கைத் தீவில் வலியை ஏற்படுத்தும் முள்ளு நாம் தேடும் இடத்தில் இல்லை..

 

நாம் தேடாத ஓரிடத்தில் அது இருக்கிறது..

 

மேற்கண்ட ஆறு தவறுகளையும் ஆழமாக சிந்தித்தால் முள்ளை அடையாளம் காணலாம்…
முள் இருக்கும் இடம் தெரியாது 30 வருடங்களாக தைலம் தடவியிருக்கிறோம் என்பதைக் கண்டறியவும் அது உதவும்.

 

முள்ளைத்தேட ஒரு வழிகாட்டி…

 

லக்சுமி மெற்றலின் உலகப் பொருளாதார பலம் என்ன..?
ரத்தன் டாட்டாவின் பலம் என்ன..?
ஆசியாவின் இரண்டாவது பணக்காரர் அம்பானியின் பலம் என்ன..?
உலகப்பணக்காரரின் 100 பேர் கொண்ட பட்டியலில் உள்ள இந்தியர்கள் எல்லாம் ஈழப் பிரச்சனையில் இதுவரை மௌனமாக இருப்பது ஏன்..?

 

அதிகம் ஏன் டெசோ புகழ் கலைஞரின் மருமகனே சிங்களவரை வைத்து கிரிக்கட் கிளப் நடாத்துகிறாரே ஏன்..?

 

இந்திய உளவுப்பிரிவுகளும், வடஇந்திய தலைமைகளும் இவர்களுடைய சேவகர்களே..
என்றாவது எமது மதியூக மந்திரிகள் இவர்களுடன் பேசியுள்ளார்களா..? என்று சிந்தித்தால் பிரச்சனையை தீர்க்காவிட்டாலும் நமது வைத்தியத்தின் தவறை கண்டு கொள்ள முடியும்.

 

வைத்தியம் செய்யாமல் இருப்பதைவிட, தவறான வைத்தியம் நோயாளிகளை விரைவாக மேல் உலகம் அனுப்பிவிடும்..


லக்சுமி மற்றல் உலகத்தின் ஆறாவது பெரிய பணக்காரர்..! ஐரோப்பிய பாதுகாப்பு, வான்வெளி அமைப்பின் நிர்வாக உறுப்பினர்..

 

இந்திய – அயல்நாட்டு உறவுப்பிரிவின் தலைவர் யார் முகேஷ் அம்பானிதான்…!!!
பாங் ஒப் அமெரிக்க கோப்பிரேசனின் நிர்வாக உறுப்பினரும் இவர்தான்..!!!

 

இந்திய அரசியலை தீர்மானிப்பது இவர்கள்தான், ஒரு வார்த்தை இவர்களுடன் பேசினோமா..?
சரியான வைத்தியம் எது..?

 

அதை முதல் கண்டுபிடித்தால் பின்னர் மாற்றம் ஆரம்பிக்கும்…

 

அலைகள் தென்னாசிய அரசியல் விவகாரப் பிரிவுக்காக..
கி.செ.துரை 01.04.2013 திங்கள் மதியம்.

 

http://www.alaikal.com/news/?p=125649

Link to comment
Share on other sites

இப்படி எல்லாம் குழ்ப்பி எடுக்க தமிழ் ஊடகங்களால்த்தான் முடியும் :unsure:

 

இருந்தாலும் இதில் உண்மை முழுமையாக இல்லை என மறுக்கவும் முடியாது. உலகில் இன்று பொருளாதாரமே முதன்மை படுத்தப்பட்டு அரசியல் முன்னெடுக்கப்படுகின்றது.

முள்ளிவாய்காலின் பின்னராக இந்தியாவும் அதிகம் முதலீட்டையே செய்கின்றது. அரசியல் தீர்வில் நாட்டம் காட்டவில்லை.

 

எனவே சிலவேளை தமிழர்களுக்கான திறப்பு இந்திய அரசியல் வாதிகளிடம் இல்லை மாறாக  கோடீஸ்வரர்களின் கைகளில் இருக்கலாம்.

குறிப்பாக கார்கில் பிரச்சனை நேரம் இந்தியாவில் என்பது பில்லியன்களை அன்று அமேரிக்கா முதலீடு சேய்திருந்தமையால் கிளிண்டன் பிரச்னையை தடுத்தார் என கூறப்படுகின்றது.

Link to comment
Share on other sites

இலங்கை இனப்பிரச்சனையை தீர்ப்பதில் இந்தியா தோல்வியடைந்துவிட்டதா?.... இந்தக் கேள்வியானது இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டி இந்தியாவுக்கு ஒரு பெருமையை கொடுப்பதற்கான முயற்சியாகவே தோன்றுகிறது. இந்த முயற்சி வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு என்று கருனாநிதியையும் கவிதைபாட வைத்துவிடும். எரிகிற வீட்டில் பிடுங்கியது இலாபம் என்பதுபோல், இந்தியா, இலங்கை இனப்பிரச்சனையைக் கையாள முயல்கிறதே தவிர, என்றுமே இனப்பிரச்சனையைத் தீர்த்து வைப்பதற்கு முயன்றதில்லை, முயலப்போவதுமில்லை. தமிழ்நாடு இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கு முயன்றது அதில் பல முக்கியமான தமிழர் உயிர்களையும் காவுகொடுத்துள்ளது.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.