Jump to content

கிளிநொச்சியில் மற்றொரு பாடசாலையின் அவலநிலை!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியில் மற்றொரு பாடசாலையின் அவலநிலை! photo.png

[sunday 2014-09-21 17:00]
patranthan-school-200-news.jpg

கிளிநொச்சி வலயத்திலுள்ள பரந்தன் இந்து மகா வித்தியாலயத்தின் வகுப்பறையின் அவலநிலை பார்ப்போர் மனங்களைப் பதைபதைக்க வைக்கிறது. ஏ9 வீதியிலிருந்து 150மீற்றர் தொலைவிலே இக்கல்விக்கூடம் அமைந்துள்ளது. பாடசாலை பெயர்ப்பலகையை குண்டுகள் துளைத்த தடயங்கள் இன்றுமுள்ளன. இங்கு க.பொ.த.உயர்தரம் கலை வர்த்தகப் பிரிவு வரை சுமார் 700 மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஆனால் போதுமான வகுப்பறைக் கட்டடங்கள் இல்லை. ஆதலால் மாணவர்கள் ஆபத்தான வசதி குறைந்த கொட்டிலில் இருந்து படிக்க வேண்டிய துர்ப்பாக்கியநிலை ஏற்பட்டுள்ளது.

சுமார் 08 வகுப்பறைகள் இவ்விதம் காணப்படுகின்றன. அதுமட்டுமல்ல தென்னையோலையால் வேயப்பட்ட அக்கொட்டிலின் கூரை எந்நேரமும் மாணவர்களின் தலையில் விழும் நிலையில் உள்ளன. அக்கூரை இரு இடங்களில் முட்டுக்கொடுத்த வண்ணம் ஆபத்தான நிலையிலுள்ளது. எந்நேரமும் முட்டு விழலாம். அப்படி முட்டு கழன்று கூரை வீழ்ந்தால் பாதிக்கப்படப் போவது ஆசிரியரும் அப்பாவி மாணவர்களுமே.

தனிக்களியால் மேடையொன்று போடப்பட்டுள்ளது. அதில் புழுதி எழும்புகிறது. போதுமான தளபாடங்களுமில்லை. 1சி பாடசாலையான இங்கு மேடையுடன் கூடிய மண்டபமோ பிரிக்கப்பட்ட வகுப்பறைகளோ இல்லை. வன்னி மாணவர்கள் இன்னமும் வசதியீனங்களுக்கு மத்தியில் படிக்க வேண்டிய கட்டாயமுள்ளது என்பதை இது உணர்த்தி நிற்கின்றது.

patranthan-school-210914-seithy%20%281%2

patranthan-school-210914-seithy%20%282%2

patranthan-school-210914-seithy%20%283%2

patranthan-school-210914-seithy%20%284%2

patranthan-school-210914-seithy%20%285%2

seithy.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு கல்வி முக்கியம் என்று பேசினால் மட்டும் போதாது. போரால் பாதிக்கப்பட்ட வடக்குக் கிழக்கு பாடசாலைகளை 21ம் நுற்றாண்டுக்குரிய தரமான கல்வியை வழங்கும் நிலைக்கு விரைந்து கொண்டு வர நடவடிக்கைகள் அவசியம்.

சிங்களப் பகுதிகளில் இப்படி ஒரு போர் நடந்து.. இன்றைய நிலை திரும்பி இருந்தால்.. இந்த நிலையை அங்கு காண முடியுமா..????! :rolleyes::icon_idea:

நெடுக்கு நிலைமை இப்படி இருக்கு ஆனால் இதை மறைக்க, தமிழ் மாணவர்கள் கல்வியில் அக்கறை இல்லை, தமிழன் இப்போது படிப்பது இல்லை என எம்மிட கதை பரப்புவீனம், இதன் உள் நோக்கம் தாயகதில் வாழும் மாணவர் சமுதாயம் மீது எமக்கு வெறுப்பு ஏற்பட்டு நாம் அவர்களுகு எந்த உதவியும் செய்யக்கூடாது என்பது ஆகும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கிளிநொச்சியில் மற்றொரு பாடசாலையின் அவலநிலை!

patranthan-school-210914-seithy%20%284%2

பொறு ராசா பொறு.....
யாழ்தேவி இப்பதானே ஓட வெளிக்கிடுது.......
 
ஓட்டைவீடும் மாடமாளிகையாகும்..
கொட்டில் பாடசாலையும் எட்டடுக்கு கட்டிடமாகும்.....
 
பொறு ராசா பொறு.....
யாழ்தேவி இப்பதானே ஓட வெளிக்கிடுது....
 
தரமான கல்வியும் வரும்...
தரணி காக்க பட்டதாரிகளும் வருவர்....
 
பொறு ராசா பொறு.....
யாழ்தேவி இப்பதானே ஓட வெளிக்கிடுது .....
 
சீமேந்தும் மண்ணும் கொழும்பிலையிருந்து வருமாம்
 
தச்சனும் மேசனும் யாழ்தேவியிலை வருவினமாம்
 
பொறு ராசா பொறு.....
யாழ்தேவி இப்பதானே ஓட வெளிக்கிடுது.....
 
இருந்து பார்.... :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

30 வருசமா இல(ழ)வு காத்த கிளி ராசா நீ -

பொறு -

இப்பதான் புலத்தில் இருந்து ஒரு படை புறப்படுகுது

யேல், ஹார்வர்ட், ஆக்ஸ்போர்ட், கேம்பிரிச் அத்தனை பல்கலையிலும் பயிலும் தங்கள் பிள்ளையளை

கூட்டிக்கொண்டு புலத்து அங்கிள்மார் போராட வரியினம் -பொறு

அக்காமார் எல்லா இப்போ ஐந்து கோடி செலவில் வயசுக்கு வந்ததை கொண்டாடாம அத்தனை காசையும் உனக்குத்தருவீனம் பொறு.

அரங்கேற்றம், கோவில்க் கூட்டம், நட்சத்திர ஆட்டம் எல்லாம் நிறுத்தி

நாலு காசுசேர்த்து வருகீனம் பொறு.

ஐபோன்களாலும், அரைகுறைத்தமிழிலும், லப்டப்புகளாலூம், பிஎம்டபில்யூக்களாலும் உன் புலத்து அண்ணைமார் ஒரு விடுதலைப்போர் நடத்துவீனம் பொறு

பொறுடா - பொறுக்க பிறந்த நிலத்து மகனே

பொறுக்க முடியாவிட்டால் வா அதோ அந்த துருப்பிடித்த கத்தியை எடுத்து

மலையென நிக்கும் உன் எதிரியின் நெஞ்சில் குத்து

நீ மடிந்தால் உன் ஐந்து வயதுத் தம்பியை அனுப்பு

அவனும் மடிந்தால் - உன் தந்தையை அன்னையிடம் அனுப்பு

எமக்குத்தேவை இன்னுமொரு நிலத்துப் பொறுக்கி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற அனைவரது ஆதங்கமும் ஏற்றுக்கொள்ளப்பட கூடியதே ஆனாலும் அதற்கான உதவிகளை செய்ய அனைவரும் முன் வரவேண்டும். புலம்பெயா் நாடுகளில் உள்ள அனைவரும் பங்காற்ற வேண்டுமே அன்றி அரசியல் பிழைகளை முன்னிறுத்தி கதைபேசுபவா்கள் தாங்கள் அனைவரும் பங்காளா்களா? என்பதை பற்றியும் சிந்திக்க வேண்டும். 

(யாரையும் குறிப்பிட்டல்ல... பொதுவாக..)

இது தான் இன்று தேவை

நாலு பேர் சேர்ந்தாலே

எவ்வளவோ செய்யலாம்...

சில நாட்களுக்கு முன் ஒருவர் கேட்டார்

புலத்திலுள்ள அனைவரும்

ஒருவருக்கு வருடத்துக்கு ஒரு ஈரோ  கொடுத்தால் எவ்வளவு சேரும்  என்று...

நினைத்துப்பார்ப்போம்....

எமது பலமறியாது  தூங்குகின்றோம். :(  :(  :( 

அப்படிக் கொடுத்துத்தான் ஏமாந்து போய் நிற்கிறோமே.  மீண்டும் இன்னொரு பகுதிக்குக் காசு தேவைப்படுகிறதோ?  

விசுகர்! அள்ளிக்கொடுத்தவர்கள் கிள்ளிக்கொடுக்க மாட்டார்களா என்ன?  :)  :icon_idea:

அந்த நிலை இனி  வராது அண்ணா

வரவும் விடமாட்டோம்

இனி  எவரும் எதையம் செய்ய  விடமாட்டோம்

இதோ சாட்சி............

ஏதோ

நான் பணம் கேட்டது   போல......

தேவைப்படுகிறதோ என.......

அப்படிக் கொடுத்துத்தான் ஏமாந்து போய் நிற்கிறோமே.  மீண்டும் இன்னொரு பகுதிக்குக் காசு தேவைப்படுகிறதோ?  

Link to comment
Share on other sites

அந்த நிலை இனி  வராது அண்ணா

வரவும் விடமாட்டோம்

இனி  எவரும் எதையம் செய்ய  விடமாட்டோம்

இதோ சாட்சி............

ஏதோ

நான் பணம் கேட்டது   போல......

தேவைப்படுகிறதோ என.......

முதலில் மக்களிடம் நம்பிக்கையை ஊட்டவேண்டும்.  அதன் பின்புதான் பணத்தைப் பற்றிப் பேச முடியும்.  முதலில் நேர்மையைச் செயலில் காட்டிவிட்டு மக்களிடமிருந்த பணம் பெறுவதைப் பற்றிப் பேசுவோம்.  எல்லோரும் வாய் வார்த்தைகளில்தான் நிற்கிறோம் என்பதை ஏன் மறக்கிறீர்கள்?  மக்கள் ஏமாற்றத்திலிருந்து இன்னும் மீளவே இல்லை.  ஆனால். மீண்டும் அவர்களை ஏமாற்றுவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்.   நாம் விட்ட பிழைகளையே மீண்டும் மீண்டும் விட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை ஏற்றுக் கொள்ள யாரும்  தயாராக இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போராட்டத்திந்கு முதல் இந்தப் பள்ளிக்கூடம் எந்த நிலையிலை இருந்தது? போராட்டத்திந்கு முதல் வன்னிiயைக் கவனிப்பார் யாருமில்லை. ஆனா. இப்ப எல்லாரும் வன்னியைத்தான் துPக்கிப் பிடிக்கினம். விடுதலைப் புலிகளின் புண்ளியம். ஏதொ நல்லது நடந்தழல் சரி.

மன்னிக்க வேண்டும் தமிழச்சி,

மக்கள் நம்பிக்கையை இழந்தது பணத்தை கொடுத்தல்ல. இங்கிருக்கும் பலா் போராட்டத்துக்கு பங்களித்தனா். சிலா் போராட்டத்தின் பெயாில் அமைப்புக்கள் சிலவற்றால் ஏமாற்றப்பட்டனா். ஆனால் யதாா்த்தமான விடயங்களை மக்கள் புாிந்து கொள்ள முடியாத அளவிற்க்கு பலா் பரப்புரை செய்கின்றனா்.  

இன்று புலம்பெயா் மக்களின் உதவி என்பது அமைப்புக்களுக்குள் நின்று செய்ய வேண்டிய அவசியமே இல்லை நேரடியாகவே  செய்யலாம். களத்தில் சாந்திக்கா போன்றோா் தங்களது வேலைகளுக்கு மத்தியிலும் தாயகம் நோக்கிய பணியை சிரத்தையுடன் செய்கின்றனா்.

பெரும்பாலன மக்கள் முன்னா் போராட்டத்திற்கு பங்களித்தவா்கள் தொடா்ந்தும் மக்களுக்கு உதவிக்கொண்டிருக்கின்றனா். அன்றும் இல்லை இன்றும் இல்லை என்று ஒதுங்கியிருந்த ஒரு தொகை கூட்டம் மற்றவா்களையும் செய்ய விடாது தாமும் செய்யாமல் இருக்கின்றாா்கள்.

ஆனாலும் தமிழ் அமைப்புக்கள் என்றால் கொள்ளையடிப்பாா்கள் என்ற தொனியில் மக்கள் நினைக்கிறன்றாா்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. 

விசுகு அண்ணா சொன்னது போல கிட்டத்தட்ட 400 ஆயிராம் தமிழா் வாழும் கனடாவில் ஒருவா் வாரம் ஒன்றுக்கு$1 வீதம் உதவினால்....?

எங்களால் முடியாதா?

ரிம் கொா்ட்டனில் ஒரு நாள் காலையில்$1.46 க்கு வாங்கும் காப்பியை நிறுத்த முடியாதா? 

நாம் இன்னும் காரணங்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றோம் என்பதே உண்மை...!

படம் பிடிக்க மறந்திருப்பாா்கள்... உங்களிடமிருந்தால் இணைத்து விடுங்கள்..!

எந்த கருத்து முன்வைக்கப்பட்டாலும், அதற்குள் விடுதலைப்புலிகள் என்ற பெயரை உள்ளே கொண்டுவருவதல் அவ்வளவு ஆா்வம்... வாழ்க வளமுடன்..!

நீயும் செய்யக்கூடாது

நானும் செய்யமாட்டேன்

இதன் அர்த்தம் எவனும் செய்யக்கூடாது

செய்யவிடேன் என்பதே....

இது தான் இன்றைய  தமிழரின் கொள்கை...... :(

உருப்பட  வாய்ப்பில்லை.. :(  :(

Link to comment
Share on other sites

மன்னிக்க வேண்டும் தமிழச்சி,

மக்கள் நம்பிக்கையை இழந்தது பணத்தை கொடுத்தல்ல. இங்கிருக்கும் பலா் போராட்டத்துக்கு பங்களித்தனா். சிலா் போராட்டத்தின் பெயாில் அமைப்புக்கள் சிலவற்றால் ஏமாற்றப்பட்டனா். ஆனால் யதாா்த்தமான விடயங்களை மக்கள் புாிந்து கொள்ள முடியாத அளவிற்க்கு பலா் பரப்புரை செய்கின்றனா்.  

இன்று புலம்பெயா் மக்களின் உதவி என்பது அமைப்புக்களுக்குள் நின்று செய்ய வேண்டிய அவசியமே இல்லை நேரடியாகவே  செய்யலாம். களத்தில் சாந்திக்கா போன்றோா் தங்களது வேலைகளுக்கு மத்தியிலும் தாயகம் நோக்கிய பணியை சிரத்தையுடன் செய்கின்றனா்.

பெரும்பாலன மக்கள் முன்னா் போராட்டத்திற்கு பங்களித்தவா்கள் தொடா்ந்தும் மக்களுக்கு உதவிக்கொண்டிருக்கின்றனா். அன்றும் இல்லை இன்றும் இல்லை என்று ஒதுங்கியிருந்த ஒரு தொகை கூட்டம் மற்றவா்களையும் செய்ய விடாது தாமும் செய்யாமல் இருக்கின்றாா்கள்.

ஆனாலும் தமிழ் அமைப்புக்கள் என்றால் கொள்ளையடிப்பாா்கள் என்ற தொனியில் மக்கள் நினைக்கிறன்றாா்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. 

விசுகு அண்ணா சொன்னது போல கிட்டத்தட்ட 400 ஆயிராம் தமிழா் வாழும் கனடாவில் ஒருவா் வாரம் ஒன்றுக்கு$1 வீதம் உதவினால்....?

எங்களால் முடியாதா?

ரிம் கொா்ட்டனில் ஒரு நாள் காலையில்$1.46 க்கு வாங்கும் காப்பியை நிறுத்த முடியாதா? 

நாம் இன்னும் காரணங்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றோம் என்பதே உண்மை...!

படம் பிடிக்க மறந்திருப்பாா்கள்... உங்களிடமிருந்தால் இணைத்து விடுங்கள்..!

எந்த கருத்து முன்வைக்கப்பட்டாலும், அதற்குள் விடுதலைப்புலிகள் என்ற பெயரை உள்ளே கொண்டுவருவதல் அவ்வளவு ஆா்வம்... வாழ்க வளமுடன்..!

நீங்கள் இவற்றை தற்போது நடைமுறையில் செய்து வருகிறீர்களா? முடியாதா முடியாதா என்று புலம்புவதை விடுத்து நான் செய்கிறேன் நீங்களும் செய்யுங்கள் என கூறலாமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் இவற்றை தற்போது நடைமுறையில் செய்து வருகிறீர்களா? முடியாதா முடியாதா என்று புலம்புவதை விடுத்து நான் செய்கிறேன் நீங்களும் செய்யுங்கள் என கூறலாமே?

நியாயமான கேள்வி ”உன்னைத்திருத்து உலகம் தானாய் திருந்தும்” என்று யாரோ சொன்னாா்கள் ஆனால் இந்த தமிழச் சமூகத்தில் என்னைத்திருத்தியும் சமூகம் திருந்தவில்லையே...!

நான் செய்கின்றேன் நீங்களும் செய்யுங்கள் என்று சொன்னால் சுயவிளம்பரம் என்பாா்கள் சொல்லாவிட்டால் செய்கிறீா்களா? என்பாா்கள்

என்ன செய்யலாம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.