Jump to content

Act Now and TYO join forces for the “Boycott Sri Lanka Cricket” campaign


Recommended Posts

Act Now and TYO join forces for the “Boycott Sri Lanka Cricket” campaign

The Sri Lankan state is accused by a UN panel of committing war crimes against Tamil civilians.

Now more than ever, a global boycott campaign of Sri Lanka is crucial. Building on the success of our boycott campaign against companies that import Sri Lankan goods, Act Now has teamed up with TYO to turn our combined strength onto the game of cricket.

The Sri Lankan team is due to tour England and Wales this summer.

ACT NOW!

Join the campaign to Boycott Sri Lanka Cricket campaign.

Sport and politics are inseparable.

Apartheid South Africa spent nearly 25 years in sporting isolation, during the 70’s and 80’s. It was banned from the Olympics, suspended from FIFA and barred from Rugby World Cups until it abandoned its racism.

In 2008, the England & Wales Cricket Board cut off all relations with Zimbabwe cricket, with many players personally opposed to touring. Robert Mugabe's government had committed so many human rights abuses that his cricket team was no longer welcome into the UK.

Sri Lanka is no exception - accused of intentionally killing upto 100,000 Tamil civilians the Sri Lankan cricket team should be barred from international cricket.

How can England play with a country that is accused of war crimes against its own citizens?

On Saturday 14th May 2011 at 10am the Sri Lankan Cricket team begin their tour of England, at Uxbridge Cricket Club (Gatting Way, Park Road, Uxbridge, Middlesex, UB8 1NR)

Join Act Now and TYO in a mass protest at the Uxbridge Cricket Club.

Those who commit war crimes should not be playing cricket with us.

We hope to see you all there at 9:30AM. Show your UNITY & SUPPORT.

http://www.youtube.com/watch?v=Or4_IRvZrXw

Link to comment
Share on other sites

*உலக கிண்ண கிரிக்கட் போட்டியும் சிறிலங்கா அரசு நகர்த்திய அரசியயலும்*

by ஆதி ஆதித்யன் <http://www.facebook.com/profile.php?id=100001893904045> on

Thursday, 21 April 2011 at 18:59

நடந்து முடிந்த உலக கிண்ண கிரிக்கட் போட்டியினூடாக சிறிலங்கா அரசு மிகப்பெரிய அரசியல் நகர்வை தமிழ் மக்களிடையில் பலவழிகளிலும் நகர்த்தி முடித்திருக்கிறது.

புலம் பெயர் தமிழர்களை விட ஈழத்தில் உள்ள தமிழ் மக்களிடையில் தனது அரசியல் நிலைப்பாட்டை நகர்த்துவதற்று உலக கிண்ண கிரிக்கட்டை பெரிதும் சிறிலங்கா அரசு பாவித்தது என்பது மறுக்கப்பட்வியலாத ஒன்று. எந்த அளவிற்கு அது வெற்றியளித்தது என்பதற்கப்பால் சிறிலங்கா அரசு விளையாட்டினூடாக நகர்த்திய அரசியல் என்பது சாதாரணமாக எடைபோட முடியாது என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

"விளையாட்டும் அரசியலும் வேறு வேறு" என்ற தொனிப் பொருளினூடு சிறிலங்கா அரசு தனது அரசியல் நகர்வுகளை ஆரம்பித்திருந்தது. அதை சில தமிழர்கள் ஆமோதித்ததோடு சிறிலங்கா கிரிக்கட்டை ஆதரிப்பதற்கான தமது நிலைப்பாட்டை "விளையாட்டும் அரசியலும் வேறு வேறு " என்ற கொள்கையினூடு நியாயப்படுத்தியும் இருந்தனர்.

அவர்களின் அரசியல் புரிதலின்மை மற்றும் தூரநோக்கற்ற சிந்தனைகளால் சிறிலங்கா அரசின் நிலைப்படு பல வழிகளிலும் தமிழ் மக்களிடையில் திணிக்கபட்டது. எப்படி திணிக்கப்பட்டது என்பதை விளங்கிக் கொள்ள முன் விளையாட்டுகளினூடு தமது தேசிய இனத்திற்காய் போராடிய தேசிய அணி வீரர்களை பற்றி நாம் கட்டாயம் அறிந்து வைத்திருத்தல் அவசியம். சிம்பாவே கிரிக்கட் அணியின் முக்கிய வீரர் ஹென்றி ஒலங்காவினதும் குத்துச்சண்டை வீரர் முகமது அலி அவர்களிருவரினதும் வரலாறுகள் இதற்கு சிறந்த உதாரணம் என்று கருதுகிறேன். 2003ம் ஆண்டு நடந்த உலக கிண்ண கிரிக்கட் ஆட்டத்தில் ஹென்றி ஒலங்கா தனது இனத்திற்காக தன்னால் இயன்ற முற்று முழுதான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அந்த நாட்களில் அவர் கூறிய வசனங்கள் இன்றும் எப்படி விளையாட்டினூடு அரசியல் நகர்த்தப்படுகிறது என்பதற்கு மிகப்பபெரிய எடுத்துக்காட்டாகும்.

“நாங்கள் தொழில்ரீதியான மட்டைப்பந்து ஆட்டக்காரர்களாக இருந்தபோதிலும், எங்களது தேசத்தில் நடக்கும் கண்மூடித்தனமான மனித உரிமைமீறல்களை படுகொலைகளைப் பார்த்துக்கொண்டு மனசாட்சியை மீறீ அமைதியாக இருக்க இயலாது. எங்களது மவுனம் எங்களது தேசத்தில் நடப்பவைகளைப் பற்றிய அக்கறையின்மையாக வெளிப்படுமோ என்றெண்னி இந்த சந்தர்ப்பத்தில் எங்களது அரசாங்கத்திற்கான எதிர்ப்பை உலகக்கோப்பைப்போட்டிகளில் கருப்புப் பட்டையை அணிந்து பதிவு செய்கின்றோம்.

— ஹென்றி ஒலாங்கா (முன்னாள் சிம்பாவே ம‌ட்டைப்ப‌ந்து வீர‌ர்)

“என்னை நீக்ரோ என்றழைக்காத வியட்காங்கையர்களை (வியட்நாமிய கம்யூனிஸ்டுகள்) நான் ஏன் கொல்லப்போகவேண்டும்” .”என்னுடைய சொந்த மக்களே இங்கு அடிமைகளாகவும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாகவும் கிடக்கும்பொழுது பத்தாயிரம் மைல்கள் கடந்து சென்று வெள்ளைக்காரர்களுக்கு அடிமையாக்க நான் ஏன் பழுப்பு நிறமக்களை சீருடை அணிந்து கொல்லவேண்டும்”.வியட்நாம் போருக்கான ராணுவத்தில் கட்டாயமாக சேர்க்கப்படஇ ராணுவ உயரதிகாரிகளால் தன் பெயர் அழைக்கப்பட்டபொழுது நான்காவது முறையும் முன்னுக்கு வராமல் நின்றதால் தண்டனைக்குள்ளாக்கப்பட்டார்.

—– முக‌ம‌து அலி (உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர்)

இந்த வீரர்கள் தமது இனத்துக்கெதிரான அரசின் நிலைப்பாட்டை,அடக்குமுறைகளை தத்தமது ஸ்தானத்தில் இருந்து எதிர்த்தார்கள். தம்மால் இயன்றவரை போராடினார்கள். இன்று நாங்கள் பேசக்கூடிய அளவிற்கு தமக்கெதிரன அரசின் அடக்குமுறைகளை வெளிக் கொணர்ந்தார்கள். இந்த போராட்டம் விளையாட்டினூடாகத் தான் நடந்தேறியது என்பதை யாராலும் மறுக்க முடியாது. சிம்பாவேயில் ஒரு இனத்திற்கெதிராக மாபெரும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பிட்டிருக்கின்றது என்ற சேதியை, அந்த வீரன் போட்டியில் கறுப்பு பட்டி அணியும் வரை அறிந்திராத அனைவருக்கும் சொன்னான். அது தான் மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டம். தனது இனத்திற்கெதிரான ஆக்கிரமிப்பை எதிர்ப்பதற்கு அந்த வீரன் எடுத்துக் கொண்ட ஆயுதம் விளையாட்டு என்பது மட்டும் போதுமானது அரசியல் எப்படியெல்லாம் செய்யமுடியும் என்பதற்கு. அரசியல் என்பது தேர்தல்களின் போதும் நாடாளுமன்றத்திலும் மட்டும் தான் செய்வதன்று. அப்படிப்பட்ட அரசியல்கள் அரசியல்வாதிகளால் ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அகோதா.

தீபம் தொலைக்காட்சியில் நடந்த அந்த உரையாடலில் சிறீலங்கா சிங்கள அரசு ஆதரவுக் கும்பலைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக லண்டனில் வசிக்கும் அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள்.. குறிப்பிடும் கருத்து.. சிறீலங்கா பொருட்களை சேவைகளை விளையாட்டை புறக்கணிப்பதால் சிறீலங்காவிற்கு எதுவும் பாதிப்பில்லை. சிறீலங்காவிற்கு இந்திய சீன சந்தைகள் திறந்து கிடக்கின்றனவாம்..??!

இந்திய சீன சந்தைகள் சிறீலங்காவிற்கு திறந்திருப்பதாகத் தெரியவில்லை. சிறீலங்காவின் இந்தியாவுக்கான ஏற்றுமதியை விட சீனாவுக்கான ஏற்றுமதியை விட இறக்குமதியே அதிகம். இதனை கருத்தில் கொண்டு தான் சிறீலங்காவிற்கு இந்திய.. சீன உல்லாசப் பயணங்களை ஊக்குவிக்க.. விசா தளர்வுகளை இந்த அரசுகள் மேற்கொண்டு சிறீலங்காவுடனான இருதரப்பு வர்த்தகச் சமநிலையை நோக்கி கொண்டு வர முயன்றனர். முயல்கின்றனர்.

உண்மை அப்படி இருக்க.. வரலாறு முழுவதும் பொய் பேசிக் கொண்டிருக்கும் இந்த சிறீலங்கா சிங்கள பேரினவாத ஆட்சிக்கு ஆதரவளிக்கும் கும்பல்கள்... ஜனநாயகம் என்ற போர்வையில் பொய்களை மக்கள் மத்தியில் விதைக்க தீபம் தெரிந்தோ தெரியாமலோ உதவி செய்வது வருத்தமளிக்கிறது.

சிறீலங்கா பொருட்களை சேவைகளை விளையாட்டை புறக்கணிப்பதால் உள்ள நன்மைகள்..

1. சிறீலங்காவின் ஏற்றுமதி வருமானத்தில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி இருக்கும். அந்நியச் செலவாணி வீழ்ச்சி இருக்கும்.

2. சிறீலங்காவின் உற்பத்தி வீழ்ச்சி தொழில் இழப்பு அதிகரிக்கும். இது உள்நாட்டில் சிங்கள அரசுக்கு நெருக்கடிகளை கொண்டு வரும்.

3. சிறீலங்காவின் வருமான வீழ்ச்சி இராணுவச் செலவீனங்களை கட்டுப்படுத்தி இராணுவ ஆக்கிரமிப்பில் ஆட்குறைப்பு போன்ற பல மாற்று நடவடிக்கைகளை எடுக்க அது தூண்டும்.

4. உலக அரங்கில் தமிழ் மக்கள் சிங்கள அரசின் பொருட்களை எதிர்க்கிறார்கள் சிங்கள அரசின் ஆட்சியை விரும்பவில்லை என்பதை வெளி உலகிற்கு எடுத்துக்காட்டும்.

5. சிறீலங்கா எயார் லைன்ஸ்மற்றும் சிறீலங்காவிற்கு உல்லாசப் பயணம் போவதை புறக்கணிப்பதன் மூலம் உல்லாசப் பயணத்துறையை நம்பி வாழும் சிறீலங்காவை நோக்கி இதர மக்களையும் அதைச் செய்யத் தூண்டி.. அதன் உல்லாசப் பயணத்துறையில் வீழ்ச்சியை உண்டு பண்ணலாம்.

6. உலக அரங்கில் சிறீலங்கா அரசுக்கு எதிராக தமிழ் மக்கள் திட்டமிட்ட நீண்ட கால நோக்கிலான ஒரு நடவடிக்கையை எடுக்கும் பலத்தை தேவையைக் கொண்டிருப்பதை உலகம் உணரச் செய்யும். அது எமது போராட்ட இலட்சியத்திற்கு அரசியல் உரிமைக் கோரலுக்கு உறுதி அளிக்கும்.

இந்த புறக்கணிப்பால் எழக் கூடிய தீமைகள் என்று பார்த்தால்..

1. உள்ளூரில் தமிழர் தாயகத்தில் இருந்து வரும் மூலப் பொருட்கள் சார்ந்த உற்பத்திகள் ஏற்றுமதியாவது தடைப்படலாம். இதனால் தமிழர்களின் பொருளாதாரம் பாதிப்படலாம். ஆனால் இன்று தமிழ் மக்களின் மூலப் பொருட்களை உற்பத்திகளை கொள்ளை விலையில் தமிழ் துரோகக் கும்பல்களைச் சேர்ந்த வர்த்தகர்களும்.. சிறீலங்கா இராணுவத்தினரும்.. அரசாங்க மற்றும் எதிர்கட்சி ஆதரவு வர்த்தகர்களும் கொள்வனவு செய்து அவர்களே அவற்றை வெளிநாடுகளுக்கு அனுப்பும் நிறுவனங்களுக்கு விற்று பெரும் இலாபம் சம்பாதிக்கின்றனர். இதனால் தமிழ் மக்களுக்கு கிடைக்கக் கூடிய வருமானம் கிடைப்பதில்லை. அவர்கள் எப்போதும் போல உள்ளூர் விலைக்கே உற்பத்திகளை விற்க வேண்டியவர்களாக இருக்கின்றனர்.

நிலைமை இப்படி இருக்க.. தீபம் இரண்டு துரோகிகளை கூப்பிட்டு வைத்து தமிழீழத்தை விட்டெறி.. புலிகளின் மிச்ச சொச்ச எச்சங்களை தூக்கி எறி என்று தமிழ் மக்களின் 67 ஆண்டு கால அரசியல் கோரிக்கையை ஏளனப்படுத்தும் மிக மோசமான செயலை செய்ய அனுமதிக்கின்றனர். சிங்களப் பேரினவாதிகளைப் போல இவர்கள் பேச தமிழ் மக்களின் விளம்பரத்தில் தமிழ் மக்களின் சந்தாவில் காலம் கழிக்கும்.. தீபம் செயற்படுவது வருத்தமளிக்கிறது. இதையிட்டு தீபம் சிந்திக்க வேண்டும்.

உருப்படியான பொருளியல் அரசியல் வல்லுனர்களை கூட்டி வந்து ஒரு ஆய்வரங்கத்தை நடத்தினால் அது செயற்திட்டங்களை கூர்மைப்படுத்த உதவும். மாறாக உருப்படாத தேசம்.. கீசம்.. போன்ற குப்பைகளில் காலம் கடத்தும் இழி பிறப்புக்களை கருத்துச் சொல்ல அழைப்பது ஏன். சிறீலங்கா அரசின் புலம்பெயர் மக்கள் மீதான பிரச்சார ரீதியான இன அடக்குமுறை கருத்துக்களை இங்கும் பரப்பவா..???!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உறவே,  இப்படியே  போனால் எம்மை இறுதியில் பச்சடி போட்டுவிடுவார்கள் என்பதை முன்னமே துல்லியமாக கணிப்பிட்டு  உயிரைக் காப்பாற்ற ஓடி வந்த நீங்கள் உட்பட்ட நாம் அனைவரும் அறிவு ஜீவிகள் தான். 😂   
    • @goshan_che மீண்டும் உங்களை கண்டது மகிழ்ச்சி… ஆனால் 2 (?) வார விடுமுறையில் மக்களின் வாக்களிக்கும் தன்மையை தீர்மானிக்க முடியுமா? நீங்கள் குறிப்பிட்டவாறு தமிழ்தேசிய கூட்டமைப்பு  தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றிற்கு மக்கள் வாக்களிக்க போவதில்லை என்ற முடிவிற்கு எவ்வாறு வந்தீர்கள்? 
    • நல்லது  உற‌வே அப்படிபட்ட  நீங்கள் தமிழ்நாட்டில்  சீமான் தனது மகனுக்கு ஆங்கில மோகத்தால் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பதை எதிர்க்கவில்லையே. 😭  இலங்கையில்  தமிழர்களும் சிங்கலவர்களும் தங்கள் மொழிகளில் கல்வி கற்பது போன்று மற்றய நாட்டு மக்களும் தங்கள் மொழியில் கல்வி கற்பது போன்று சீமான் தனது மகனுக்கு தமிழ் வழி கல்வி கற்பித்திருந்தால் அது ஒன்றும் சாதனையில்லை  அது ஒரு அடிப்படை விடயம்.அதுவும் தமிழ் தமிழ் என்று சொல்லி அரசியல் செய்யும் சீமான் முதல் செய்ய வேண்டியது.     சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ? சீமானை பற்றி வந்த நல்ல செய்தி ஆங்கில மோகத்தால்  தனது மகனுக்கு தமிழ்நாட்டில் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பது 🤣  
    • யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு! யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த எரியூட்டி கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. முன்பதாக வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1375554
    • எந்தக் காலத்திலும் அதிகாரவெறி கொண்டவர்களாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும்தான் இந்த உலகம் அமைதியை இழந்து கொண்டிருக்கின்றது.........!   தொடருங்கள் ஜஸ்டின் .......!   👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.