Jump to content

உலகமயமாதலின் ராசதந்திரமும் தமிழர்களின் ராசதந்திரத்தின் உலகமயமாதலும் - வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவு டன்பேசிய விடயங்களை வெளியிட முடியாது என்கிறார் மாவை

இந்தியாவுடன் என்ன கதைத்தோம் என்பதை முழுமையாக இந்தியாவும் வெளியிடமாட்டாது; நாமும் வெளியிட முடியாது. இராஜதந்திர ரீதியாக நடக்க வேண்டிய கால கட்டம் இது. அதனைப் பின்பற்றி நாமும் செயற்பட வேண்டியமை மிகவும் அவசியமாகும். - இவ்வாறு தெரிவித்தார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா.
- செய்தி

கொழும்பில் பேசிய சுப்பிரமணியசுவாமி வெளியுறவுத்துறை அமைச்சர் மட்டுமே தமிழர் கூட்டமைப்பை சந்திப்பார். பிரதமர் சந்திக்க மாட்டார் எனக் கொக்கரித்திருந்தார். இதுவே ராஜபக்சவினதும் சில அயல்நாட்டு அதிகாரிகளினதும் எதிர்பார்ப்பு. இப்போது மேல்மட்டச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

இந்தியா அமரிக்கா அல்லது வேறு எந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நிகழ்ந்தாலும் பேச்சுவார்த்தைகளில் இருதரப்பும் வெளியிட ஒப்பிய விடயங்களைத் தவிர ஏனைய விடயங்களை ஊடகங்களுக்கு வெளியிடுவது இராசதந்திர மரபும் நெறியுமல்ல.இது தொடர்ந்து பணியாற்றுவதைச் சிக்கலாக்கும்.

மாவை அண்ணா அவர்கள் பேசும்போது இராசதந்திர மரபுகளை மீறி  "என்ன கதைத்தோம் என்பதை முழுமையாக இந்தியாவும் வெளியிடமாட்டாது; நாமும் வெளியிட முடியாது" என்று கூறியுள்ளார்..இப்படி மறைப்பதற்க்கு ஏதோ இருக்கு என்ற தொனியில் அப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல பேசுவதும் இராசதந்திர நெறிமுறைகளுக்கு மாறானது. இது நம்பகத் தன்மையை பாதிக்கும்.

இந்தியாவோ அமரிக்காவோ யாருடன் பேசினாலும் இருதரப்பும் வெளியிட ஒப்புக்கொண்ட விடயங்களை மட்டும் சொல்லி மெளவுனம் சாதிப்பதே மரபு. செல்வநாயகம் காலத்தில் இருந்தே எங்கள் வரலாற்றில் இராசதந்திரம் வலுவற்றதாகவே இருந்து வருகிறது.

இந்த உலகமயமாதல் காலக் கட்டத்தில் இராசதந்திர மரபுகளை மீறினால் நாம் தனிமைப் பட்டு விடுவோம். உலகமயமாதலின் இராசதந்திரம் என்ன விலைகொடுத்தும் நம் போராட்டத்தை உலகமயமாவதுதான். கொசோவா தெற்க்கு சூடான் தெற்க்கு தீமோர் போன்ற நாடுகள் கொடுத்த விலையும் விட்டுக்கொடுப்புகளும்தான் அவர்கலது விடுதலைகான முதலீடு ஆனது. அதற்க்கு அவர்களது தனிமைப்படாமையை  முன்னிலைப்படுத்திய அரசியலும் இராசதந்திர நகர்வுகளும்தான் காரணம். அவர்களது இராசதந்திரத்தின் அடிப்படையாக விடுதலை தொடர்பான அரசியல் உறுதிப்பாடு இருந்தது. பரந்துபட்ட ஐக்கியம் இருந்தது. இந்த இரண்டும் அமைந்ததால்தான் அவர்களால்  விடுதலைக்குக் குறைந்த தீர்வுகளை விடுதலையை வெல்லுவதற்கான படிக்கட்டுகளாக்க முடிந்தது.  நமது புலம் பெயர்ந்த விடுதலைக் குழுக்களும் கூட்டமைப்பு அரசியல் வாதிகளும் கற்றுக்கொள்ள வேன்டிய பாடம் இதுதான்.

விடுதலையில் உறுதியோடு  விடுதலைக்கு முதலீடாகக்கூடிய விடயங்களில் மட்டும் தற்காலிக விட்டுக்கொடுப்புகளோடு நமக்குள்ளும் உலக அரங்கிலும்  தனிமைப் படுதலை தவிர்த்தும் எதிரியைத் தனிமைப் படுத்தியும் முன்னேறுவதுதான் நமக்குள்ள ஒரே வழி. இந்த உலகமயமாதல் காலக்கட்டத்தில் தனிமைப்படுதல் தோல்விக்கே வழிவகுக்கும்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/110976/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.