Jump to content

கடந்த கால சம்பவங்களை கிளற விரும்பிவில்லை: திசர பெரேரா


Recommended Posts

கடந்த கால சம்பவங்களை கிளற விரும்பிவில்லை: திசர பெரேரா
2014-09-01 10:50:27

 

கடந்த கால சம்பவங்களைக் கிளற விரும்பவில்லை என பாகிஸ்தானுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தொடர் நாயகனாக தெரிவான திசர பெரேரா தெரிவிக்கின்றார்.


தம்புளையில் சனிக்கிழமை நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான கடைசிப் போட்டியின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

சிலகால இடைவெளிக்குப் பின்னர் பாகிஸ்தானுடான தொடருக்கு அழைக்கப்பட்ட திசர பேரேரா, தான் விளையாடி இரண்டு போட்டிகளிலும் ஆட்டநாயகனானமை குறிப்பிடத்தக்கது.

சில காலம் இலங்கை அணியில் இடம்பிடிக்க முடியாமல் போனமைக்கு சில கருத்துமுரண்பாடுகளா காரணம் எனவும் அதனால் மன உளைச்சல் ஏற்பட்டதாக எனவும் அவரிடம் கேட்கப்படபோது,
'கடந்தவை கடந்தவையாக இருக்கட்டும். அது குறித்து பேச நான் தயாரில்லை.

ஏனெனில் அதனால் ஆகப் போகும் பயன் என்ன? கிடைக்கின்ற சந்தர்ப்பத்தை முறையாகப் பயன்படுத்தி எனது திறமையை வெளிப்படுத்துவதே எனது இன்றைய தேவையாக உள்ளது. என்னிடம் இருக்கும் திறமையை நான் அறிவேன். அது குறித்து நம்பிக்கையும் எனக்குள் இருக்கின்றது. நான் மனத்தாங்கலுடன்தான் அணிக்குள் மீண்டும் வந்தேன். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி என்னிடமிருக்கும் ஆற்றலும் திறமையும் மங்கவில்லை என்பதை உணர்த்தினேன்' என திசர பதிலளித்தார்.

 

காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற்றபோது இலங்கை அணியில் திசர பெரேரா இடம்பெறவில்லை. ஆனால் காலியில் நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் தம்புளையில் நடைபெற்ற தீர்மானம் மிக்க கடைசிப் போட்டியிலும் இலங்கை வெற்றிபெறுவதற்கு திசர பெரேராவின் பங்களிப்பு அளப்பரியதாக இருந்தது.

கடந்த ஒரு மாதமாக தனியாகவே பயிற்சியில் ஈடுபட்டுவந்ததாக திசர பெரேரா குறிப்பிட்டார்.

'இலங்கை குழாமில் இடம்பெறாததன் காரணமாக கடந்த ஒரு மாத காலமாக தனிப்பட்ட பயிற்சிகளில் ஈடுபட்டுவந்தேன். அனுஷ சமரநாயக்க, சுமித் வர்ணகுலசூரிய, ரூவின் பீரிஸ் ஆகியோர் எனக்கு பயிற்சிகளை வழங்கினர். காலை 8 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு பயிற்சிகளில் ஈடுபட்டுவந்தேன். இந்த மூவரும் எனக்கு வழங்கிய அறிவுரைகள், ஆலோசனைகள் நிறைந்த பலனைத் தந்துள்ளது' என திசர பெரேரா தெரிவித்தார்.

தோல்விகள் ஏமாற்றமளிக்கின்றன: - மிஸ்பா உல் ஹக்

இதேவேளை, தீர்மானம் மிக்க கடைசிப் போட்டியில் தோல்வி அடைந்தமைக்கு காரணம் என்னவென பாகிஸ்தான் அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக்கிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது,
'இந்தத் தோல்வியையிட்டு பெரும் ஏமாற்றம் அடைகின்றேன். எமது ஆரம்பம் சரியாக அமையவில்லை. எமது துடுப்பாட்ட வீரர்கள் சரியான நுட்பத்திறன்களைப் பிரயோகிக்கவில்லை. அடுத்தடுத்து விக்கெட்கள் சரிந்ததால் அழுத்தமும் அதிகரித்தது. முதலிரண்டு போட்டிகளில் விளையாடிய ஆடுகளங்களை விட இந்த ஆடுகளம் மாறுபட்டது. இதில் எமது துடுப்பாட்ட வீரர்கள் சிரமத்தை ஏதிர்கொண்டனர்' என பதிலளித்தார்.

இந்தப் போட்டியிலும் தொடரிலும் தோல்வி அடைந்ததால் அணித் தலைவர் என்ற வகையில் அழுத்தத்தை எதிர்கொள்கிறீர்களா என கேட்டபோது, "போட்டி என்று வந்தால் அழுத்தங்கள் ஏற்படும் அதேவேளை இலகுத்தன்மையும் இருக்கத்தான் செய்யும். இப் போட்டியில் சகலமும் இலங்கை அணிக்கு சாதகமாக அமைந்தது. எனினும், நடந்ததைப் பற்றி நினைக்காமல் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து திறமையை மெம்படுத்துவது பற்றி கவனம் செலுத்தவேண்டும்' என மிஸ்பா பதிலளித்தார்.

காலியில் நடைபெற்ற முதலாவது போட்டியில் பாகிஸ்தான் 4 விக்கெட்களால் வெற்றிபெற்றது.

அதே மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இலங்கை 77 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
தம்புளை ரங்கிரி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கடைசிப் போட்டியில் 7 விக்கெட்களால் வெற்றியீட்டிய இலங்கை தொடரை 2 - 1 என கைப்பற்றியது. (என். வீ. ஏ.)

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=6658#sthash.tQxFHcAV.dpuf

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.