Jump to content

உலகக் கோப்பையை வெல்வதே முக்கியம் என்று கிளார்க் கூறிய பிறகு ஜிம்பாப்வேயிடம் தோல்வி


Recommended Posts

உலகக் கோப்பையை வெல்வதே முக்கியம் என்று கிளார்க் கூறிய பிறகு ஜிம்பாப்வேயிடம் தோல்வி

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக காயத்தினால் வெளியேறும் மைக்கேல் கிளார்க். | படம்: ஏ.பி.

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை இழப்பது பிரச்சினையல்ல, உலகக் கோப்பையை வெல்வதே முக்கியம் என்று ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறிய பிறகு ஜிம்பாப்வேயிடம் தோல்வி தழுவி முதலிடத்தை இழந்தது ஆஸ்திரேலியா.

இதன் மூலம் முதலிடத்தை ஆஸ்திரேலியாவுடன் பகிர்ந்து கொண்ட இந்திய அணி இப்போது முதலிடத்தில் தனியான அணியாகத் திகழ்கிறது.

ஹராரேயில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தர்மசங்கடமான தோல்வியைத் தழுவியது.

கேப்டன் மைக்கேல் கிளார்க் மட்டுமே தனது காயத்திற்கு எதிராக போராடி 68 ரன்களை எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். ஹேடின் 49 ரன்களையும், கட்டிங் 26 ரன்களையும் எடுக்க 209 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளுடன் ஆஸ்திரேலிய இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே 106/5 என்ற நிலையிலிருந்து சிகும்பரா (52 நாட் அவுட்), உத்சேயா (30 நாட் அவுட்) ஆகியோரது அபாரமான பேட்டிங்கினால் 48 ஓவர்களில் 211/7 என்று வெற்றி பெற்றது.

1983ஆம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டிகளில் ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியாவை வென்ற பிறகு சுமார் 31 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆஸ்திரேலியாவை வென்றுள்ளது ஜிம்பாப்வே.

தரவரிசையில் 10ஆம் இடத்தில் உள்ள ஒரு அணி முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவை அதன் 1ஆம் இடத்திலிருந்து கீழே தள்ளியது.

ஜிம்பாப்வேயின் ஸ்பின் பந்து வீச்சிற்கு எதிராக ஆஸ்திரேலியா பேட்டிங் திறன் அம்பலமானது. ஸ்பின்னர்கள் 36 ஓவர்களில் 117 ரன்களை விட்டுக் கொடுத்து 6 ஆஸ்திரேலியா விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

60 பந்துகளில் 44 ரன்கள் வெற்றிக்கு தேவை என்ற நிலையில் வெற்றிக்கு இட்டுச் சென்ற சிகும்பராவை ரன் அவுட் செய்ய வேண்டிய எளிதான வாய்ப்பை மிட்செல் ஸ்டார்க் தனது மோசமான த்ரோவினால் பாழ் செய்தார்.

மேலும் ஜேம்ஸ் ஃபாக்னர், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் கடைசியில் நோ-பால், வைடு என்று வீச வெற்றி வாய்ப்பு பறிபோனது.

மைக்கேல் கிளார்க் காயம் காரணமாக வெளியேறினாலும் கடைசியில் களமிறங்கி அவரது நோக்கத்தைப் பறைசாற்றினார். மேலும் பந்து வீச்சில் ஆஸ்திரேலியா சொதப்பி வரும்போது மீண்டும் பீல்டிங்கில் களமிறங்கி காயத்துடன் 47வது ஓவரை வீசவும் செய்தார்.

கிளார்க் இறங்கியவுடன் தீவிரம் சூடு பிடிக்க 100/2 என்று இருந்த ஜிம்பாவே 106/5 என்று சரிவு கண்டது.

செவ்வாயன்று தென் ஆப்பிரிக்காவை வென்று ஆஸ்திரேலியா இறுதிக்கு முன்னேற வேண்டும். ஜிம்பாப்வே அணியில் உத்சேயா அன்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஹேட்ரிக் எடுத்தார். அன்றும் தென் ஆப்பிரிக்காவை 231 ரன்களுக்கு மட்டுப்படுத்தியது ஜிம்பாப்வே ஆனால் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சை எதிர்கொண்டு வெற்றி பெற முடியவில்லை.

இந்த நிலையில் உலகக் கோப்பையே இலக்கு தரநிலை பற்றி அதிகம் கவலையில்லை என்று கூறிய மைக்கேல் கிளார்க் அணி ஜிம்பாப்வேயிடம் வரலாறு காணாத தோல்வி கண்டது பயிற்சியாளர் டேரன் லீ மேன் உட்பட பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

http://tamil.thehindu.com/sports/உலகக்-கோப்பையை-வெல்வதே-முக்கியம்-என்று-கிளார்க்-கூறிய-பிறகு-ஜிம்பாப்வேயிடம்-தோல்வி/article6369601.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இவ‌ர்க‌ள் இந்த‌ முறை கோப்பை வெல்ல‌ மாட்டின‌ம் இவ‌ருக்கு ப‌தில் மாற்று வீர‌ரை தெரிவு செய்தாலும் க‌ர்விய‌ன் மைதான‌த்தில் இவ‌ர்க‌ளால் அடிச்சு ஆட‌ முடியாது வெஸ்சின்டீஸ் மைதான‌ங்க‌ளில் இங்லாந் அணி அதிக‌ம் தோற்று இருக்கு போன‌ வ‌ருட‌மும் 20ஓவ‌ர் தொட‌ரை வெஸ்சின்டீஸ் அணி இவ‌ர்க‌ளை வென்றார்க‌ள்   நாச‌மாய் போன‌ வெஸ்சின்டீஸ் தேர்வுக்குழு சுனில் ந‌ர‌னை தேர்வு செய்தால் அணிக்கு கூடுத‌ல் ப‌ல‌மாய் இருக்கும்..................ஜ‌பிஎல்ல தொட‌க்க‌ வீர‌ராய் இற‌ங்கி ப‌ல‌ விளையாட்டில் அடிச்சு ஆடி அணிக்கு வெற்றிய‌ பெற்று கொடுத்த‌வ‌ர்......................................................
    • அப்படி தான் செய்திகள் சொல்கிறது பையா. ஓட்டங்களை மெதுவாக எடுக்கிறாராம்.
    • கிட்ட‌ த‌ட்ட‌ ஒரு மாத‌மும் ஒரு கிழ‌மையும் இருக்கு வீர‌ர்க‌ளுக்கு ஓய்வில்லாம‌ போட்டிய‌ தொட‌ர்ந்து ந‌ட‌த்துகின‌ம் ஜ‌பிஎல் முடிந்த‌ கையோடு வீர‌ர்க‌ள் க‌ர்விய‌ன் தீவை நோக்கி ப‌ய‌ணிக்க‌னும்........................... நியுசிலாந் Bரீம் பாக்கிஸ்தான் சென்று பாக்கிஸ்தானை வென்று விட்டின‌ம் தொட‌ரையும் வென்று விட்டின‌ம்.................சென்னை அணிக்காக‌ விளையாடும் இர‌ண்டு நியுசிலாந் வீரர்க‌ள் இதுவ‌ரை அடிச்சு ஆட‌ வில்லை இவ‌ர்க‌ளுக்கு ப‌தில் பாக்கிஸ்தான் தொட‌ரில் சிற‌ப்பாக‌ விளையாடின‌ வீர‌ர்க‌ளை நியுசிலாந் தேர்வுக்குழு தேர்வு செய்யுக் கூடும் என்று நினைக்கிறேன்.............................  
    • தமிழரசு கட்சியாலேயே அந்த எதிர்ப்பு  மேற்கொள்ளப்பட்டதாகவே நான் கூறியுள்ளேன். அதை வாசிக்க வில்லையா?  அல்லது வாசித்தும்  ஏதோ எழுதவேண்டும் என்பதற்காக எழுதி உள்ளீர்களா?  இப்போதும் கருத்துக்களை நேர்மையாக எதிர் கொள்ளாமல் தந்தை செல்வாவின் பிரபல்யத்துக்கு  பின்னால் ஒழிய வேண்டிய நிலை.   தந்தை செல்வா இன்னும் சில ஆண்டுகள் உயிரோடு இருந்து அவர் ஆயுததாரிகளால்  சுட்டுக்கொல்லப்பட்டிருந்தால் நீங்கள் பிளேட்டை மாத்தி கூறி இருப்பீர்கள். 😂
    • என் inspiration ஆல் இப்படி பல தரவுகளை ஆராய்ந்தமை அதை நான் உட்பட பலருக்கு அறியதந்தமைக்கு நன்றி. என் கட்டுரை வேறு எந்த பலனை தராவிடிலும் - இது ஒன்றே போதும். நான் எப்பவுமே இவற்றை அங்குதான் போய் சாப்பிடுவது.  தவிரவும் கோப்பித்தூள், மிளகாய்தூள், எல்லாம் அங்கே இருந்து நேரடியாக அனுப்ப ஏற்பாடு செய்துவிட்டேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.