Jump to content

மகிந்த ராஜபக்‌ஷவும் அவர் வெளிக் கிளப்பும் வெள்ளை யானைகளும் - - வி.ஏ.கே.ஹரேந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த ராஜபக்‌ஷவும் அவர் வெளிக் கிளப்பும் வெள்ளை யானைகளும் - - வி.ஏ.கே.ஹரேந்திரன்
30 மார்ச் 2013

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்‌ஷவின் சொந்த கிராமமான ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் மத்தல பிரதேசத்தில் சீனாவின் நிதியுதவியுடன் பன்னாட்டு விமான நிலையமொன்று திறக்கப்பட்ட செய்தியே கடந்த வாரத்தில் இலங்கை நாளிதழ்களில் பிரதான இடத்தைப் பிடித்திருந்தன. இந்த விமான நிலையத்தைத் திறந்துவைத்து உரையாற்றிய அதிபர் மகிந்த ராஜபக்‌ஷ, சர்வதேசத்திற்கு மற்றுமொரு கதவு திறக்கப்பட்டதாகத் தெரிவித்திருந்தார்.

எனினும், இந்த விமான நிலையத்தின் ஊடாக குறைந்தது அடுத்த 20 வருடங்களுக்கேனும் வருமானம் ஈட்ட முடியாது என பொருளாதார வல்லுநர்கள் கடிந்துகொண்டுள்ளனர். ஐ.நா., சர்வதேச அழுத்தம் எனக் கூறி இனவாதத்திலும் அபிவிருத்தி, பொருளாதாரம் என்ற கவர்ச்சியான வார்த்தைகளினால் பல வெள்ளை யானைகளை மகிந்த அரசாங்கம் கிளப்பிவிட்டுள்ளது.

கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது இலங்கை மக்களின் வாழ்க்கைச் செலவு பல மடங்காக அதிகரித்துள்ளது. எனினும், இதற்கேற்றார் போல் இதுவரை சம்பள உயர்வுகள் வழங்கப்படாததால் மக்கள் பெருத்த நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். இலங்கையின் உள்நாட்டு உற்பத்தி பாரியளவில் வீழ்ச்சி கண்டுள்ளது. ஏற்றுமதிகள் குறைவடைந்துள்ளன. அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் பொருளாதார நெருக்கடிகளினால் இலங்கையின் ஏற்றுமதியில் பாரிய அடி வீழ்ந்துள்ளது.

இதனைத்தவிர, தமக்கு ஒன்றும் பாதிப்பு இல்லையென கூவித்திரிந்த போதிலும், ஜி.எஸ்.பி. வரிச் சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் நிறுத்தியதால் இலங்கை அரசாங்கத்திற்கு பாரிய நீண்டகால நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன்களைப் பெற்று, பொருளாதாரத்தை சீர்செய்துவிடலாம் என்ற சில பொருளாதார நிபுணர்களின் ஆலோசனைக்கமைய மகிந்த அரசாங்கம் முன்னதாக கடன் பெற்றுக்கொண்டது. கடுமையான நிபந்தனைகளுடன் கடன்களைப் பெற்றுக்கொண்ட போதிலும், குறித்த பொருளாதார வளர்ச்சிக்கான இலக்குகளை இலங்கை தவறவிட்டுள்ளது.

இறுதியாக சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை அரசாங்கம் கடன்கோரியிருந்த போதிலும், முன்னதாக வழங்கப்பட்ட இலக்குகளை அடைந்தால் மாத்திரமே அடுத்த கட்ட கடன்கள் குறித்து யோசிக்க முடியும் என சர்வதேச நாணய நிதியம் திடமாக கூறிவிட்டது. இதனால், முன்னதாக விதித்திருந்த கட்டுப்பாடுகளையும் தற்போது மகிந்த அரசாங்கம் மீறிச் செயல்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இவற்றுக்கு மேலதிகமாக சைப்பிரஸ் நெருக்கடியும் இலங்கையின் பொருளாதாரத்தில் கல்லைத் தூக்கிப் போட்டுள்ளது. இங்கு இலங்கை மேற்கொண்டிருந்த முதலீடுகளினால் மிகப் பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளது.

பொருளாதார ரீதியாக பலத்த சவாலை எதிர்கொண்டுள்ள இலங்கை அரசாங்கத்தின் நெருங்கிய தோழனான சீனாவும் இலங்கை அரசாங்கத்தை சிக்கிலில் தள்ளியுள்ளது. இறுதியாக இலங்கை அரசாங்கம் கேட்டிருந்த கடனை சீனா வழங்காதது இலங்கைக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தைத் தந்துள்ளது.

இதற்கு மேலதிகமாக மற்றுமொரு உற்ற நண்பனான ஈரானும் இலங்கையைக் கைவிட்டுள்ளதாக அறியமுடிகிறது. உதவிகள் சிலவற்றைச் செய்யுமாறு இலங்கை அரசாங்கம் இறுதியாக கேட்கப்பட்டிருந்தபோதிலும், தம்மால் தற்போதுக்கு எவ்வித உதவிகளையும் செய்யக்கூடிய நிலையில் இல்லையென ஈரான் அரசாங்கமும் கைவிரித்துவிட்டது.

இந்த எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தில் முடிந்ததன் காரணமாகவே மகிந்த ராஜபக்‌ஷ அண்மையில் ஜப்பானுக்கு விரைந்திருந்தார். இதிலும் எதிர்பார்த்தளவு இல்லாவிட்டாலும் ஜப்பானிடமிருந்து இலங்கைக்கு தற்போதைக்கு ஓரளவு உதவி கிடைத்துள்ளது.

''யுத்தத்தில் வெற்றிபெற்றுவிட்டோம்'' அல்லது அபிவிருத்தி அல்லது சர்வதேசத்தின் போர்க் குற்றச்சாட்டுக்கள் என்ற சுலோகங்கள் மகிந்த அரசாங்கத்தை சிங்கள மக்கள் மத்தியில் எத்தனை நாளைக்கு காப்பாற்றும் என்பது தெரியாததால் மற்றுமொரு வியூகத்தை மகிந்த அரசாங்கம் வகுத்துள்ளதை அண்மைய சம்பவங்கள் நன்கு உணர்த்துகின்றன.

தற்போதைய அரசாங்கத்தின் மீது சிங்கள மக்களுக்கு அதிருப்தி வராமல் இருப்பதற்கும், சிங்கள மக்களை திசை திருப்பி, உணர்வுபூர்வமான, இனரீதியான கோடொன்றை வரைந்தால் மாத்திரமே தம்பக்கமுள்ள குறைகளை மறைத்துக்கொண்டு ஆட்சியை நீடிக்கலாம் என்பதை மகிந்த அரசாங்கம் கணக்கு போட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

இதில் மிக அண்மைய பதிவாக கடந்த 28ஆம் திகதி இரவு கொழும்பு, பெப்பிலியான என்ற பிரதேசத்திலுள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான முன்னணி வர்த்தக நிலையமொன்று தாக்கப்பட்ட சம்பவம் சிறந்த உதாரணமாகும்.

இந்தத் தாக்குதலை அரச ஆதரவு அமைப்பான பொதுபல சேனாவே நடத்தியிருந்தது. காவல்துறை கைக்கட்டி பார்த்துக் கொண்டிருக்க காவி உடை அணிந்தவர்கள் கற்களைக் கொண்டுத் தாக்கியவுடன் கூடவே வந்த கும்பல் கரகோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர். இவர்களைத் தடுக்கக் கூடாது என காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டதா? அல்லது அரசாங்கத்தின் உச்ச ஆதரவைப் பெற்ற இந்த அமைப்பு மீது கைவைத்தால் வீண் வம்பு என காவல்துறை வேடிக்கைப் பார்த்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சிறுமைபான்மையினரான முஸ்லிம்கள் மீது தற்போது கட்டவிழ்த்துவிடப்படுகின்ற, கட்டவிழ்த்துவிடுவதற்கு திட்டமிட்டுள்ள செய்திகளை, சம்பவங்களை ஊடகங்களில் அப்பட்டமாக பேசுவது மிகப்பாரிய விளைவுகளை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சமும் இருக்கிறது.

ஆனால், பேசாமல் இருந்தால் சிறுபான்மையினர் மீது சிங்கள ஆட்சியாளர்கள், அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள முன்னெடுக்கும் இந்த கீழ்த் தரமான அரசியல் செயல்பாடுகள் இலங்கை வரலாற்றில் மீண்டுமொரு கசப்பான, கறுப்பு அத்தியாயத்தை பதிவுசெய்துவிடுமோ என்ற அச்சமும் இருக்கிறது.

- வி.ஏ.கே.ஹரேந்திரன்

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/90214/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

 தற்போதைய அரசாங்கத்தின் மீது சிங்கள மக்களுக்கு அதிருப்தி வராமல் இருப்பதற்கும், சிங்கள மக்களை திசை திருப்பி, உணர்வுபூர்வமான, இனரீதியான கோடொன்றை வரைந்தால் மாத்திரமே தம்பக்கமுள்ள குறைகளை மறைத்துக்கொண்டு ஆட்சியை நீடிக்கலாம் என்பதை மகிந்த அரசாங்கம் கணக்கு போட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

 

 

இதுதான் தோற்றுப்போன மகிந்த சிந்தனையின் யதார்த்தம் - வங்குரோத்து நிலைமையை நோக்கி செல்கின்றது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.