Jump to content

தமிழக மாணவர் எழுச்சியும் ஐ.நா தூக்குத் தண்டனை நாடகமும் : சபா நாவலன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மாணவர் எழுச்சியும் ஐ.நா தூக்குத் தண்டனை நாடகமும் : சபா நாவலன்


 


வன்னிப் படுகொலை விட்டுச் சென்றிருக்கும் வருடாந்த வைபவங்களுள் ஐக்கிய நாடுகள் சபைக்கு ஊடாக ராஜபக்சவைத் தூக்கில் போடுவோம் என்ற பெயரில் நடத்தப்படும் சந்தர்ப்பவாதிகளின் ஒன்றுகூடல் பிரதானமானதாகும். அவலங்களின் அழுகுரல்கள் நான்கு வருடங்களின் பின்னர் இன்னும் ஒலித்துக்கொண்டிருக்க மக்கள் ராஜபக்சவை யாராவது தண்டித்து விடுவார்கள் என நாட்களை நம்பிக்கையோடு ஓட்டுகிறார்கள். ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையம் கூடுவதற்கு சற்று முன்னதும் பின்னதுமாக புலம் பெயர் நாடுகள் தூக்குததண்டனை நாடகம் ஆரம்பித்துவிடும்.
நாடகத்தில் நடிப்பதற்காக புலம்பெயர் தமிழ் அரசியல் தலைவர்கள், இலங்கை அரசு, அமரிக்க அரசு, இந்தியா, தமிழ் நாட்டின் அரசியல் வாதிகள் என்று ஒரு நட்சத்திரக் கூட்டம் தயாராகிவிடும். மிரட்டல்கள், வெற்றி முழக்கங்கள், சொல் வீச்சுகள் ஆகியவற்றோடு இறுதிவரை நகர்ந்து செல்லும் நாடகத்தின் முடிவு முன்னமே எதிர்பார்தவாறு இலங்கை அரசைக் காப்பாற்றிவிடும்.


 

வன்னிப் படுகொலைகளை நடத்துமாறு இலங்கை அரசை ஊக்கப்படுத்திய நாடுகளில் ஒன்றான அமரிக்க அரசிற்கு ராஜபக்ச ஆட்சி ஒரு வரபிரசாதம். தண்டிக்கப் போகிறோம் என்று ஆதாரங்களைக் காட்டிப் பயமுறுத்தியே இலங்கையை அவர்களின் பல்தேசிய முதலாளிகளுக்காக ஒட்டச் சுரண்டிவிடுவார்கள். மனித உரிமை ஆணயகத்தில் தீர்மானம் நிறைவேற்ற சில மாதங்களின் முன்னதாகவே பேரங்கள் ஆரம்பமாகிவிடும்.


 

பேரத்தில் பெற்றுக்கொண்ட பலாபலன்களுக்கு ஏற்றவாறு அமரிக்க அரச தீர்மானம் முன்வைக்கப்படும்.


mahintha1.png

 

ராஜபக்ச பேரினவாத அரசு தெற்காசியாவின் அதி உயர் கிரிமினல் அரசுகளில் ஒன்றாகும். சிங்கள பௌத்த அடிப்படை வாதத்தைத் தோற்றுவிப்பதும் அது ஏற்படுத்தும் மனிதக் கொலைகளின் எச்சங்களிலிருந்து தனது குடும்ப ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதும் ராஜபக்ச ஆட்சியின் உள்ளூர் தந்திரோபாயம். உலகின் ஆதிக்க பலம் மிக்க நாடுகளால் எந்த நேரத்திலும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படத்தக்க அத்தனை ஆதரங்களையும் விட்டுவைத்திருக்கும் ராஜபகச அரசு, அதற்காகவே அமரிக்க எதிர்ப்பு நாடுகளோடு சாத்தியமான அணிசேர்க்கைக்கு முயல்கிறது.


 

அமரிக்க ஏகபோக அரசு அழிக்க முயலும் நாடுகளோடு உறவை வளர்த்துக்கொள்ள முயலும் ராஜபக்ச குடும்ப அரசை கவிழ்க்கப்போவதாக இந்திய அமரிக்க அரசுகள் மிரட்டி சமநிலைக்கு அழைத்து வருவதற்கான நிகழ்வுகளில் ஒன்றே போர்க்குற்ற விசாரணை.


 

அமரிக்காவின் எழுதப்படாத அடிமை நாடாக இந்திய அரசு மாறி நாளாகிவிட்டது. தெற்காசியப் பிராந்தியத்தில் அமரிக்க நலனுக்காக அனைத்தையும் மேற்கொள்ளத் தயாரான இந்திய அரசு தேற்காசியாசாபக் கேடு. தெற்காசியாவில் மக்கள் நலன் சார்ந்த ஒவ்வொரு அசைவுமே இந்திய அரசினது பல்தேசிய முதலைகளின் கோரப்பசிக்கு எதிரானதாகவே அமையும் என்ற நிலை காணப்படுகிறது.


 

இவர்களுக்கு மத்தியில் தூக்குததண்டனை நாடகத்தின் கதாநாயகர்களாக உதித்தவர்கள் தான் இந்திய மாணவர்கள். ஈழப் போராட்டத்தை மையமாக முன்வைத்து அவர்களின் நெருப்பாக எழுந்த அவர்களின் குரல் குறிப்பான அரசியலை மையப்படுத்தி சென்னை விமான நிலைய முற்றுகையாக எழுச்சி பெற்றது. இந்திய அரசிற்கு எதிரான முழக்கங்களோடு விமான நிலையத்தில் போராடிய மாணவர்களிடம் தெளிவான அரசியல் தெரிந்தது.


 

vaiko_praba.jpg

 

சீமான்,வைகோ,நெடுமாறன் போன்ற அரசியல் கோமாளிகள் மாணவர்களின் போராட்டத்தில் ஆள்பிடிக்க வலைவீசினார்கள். யாரும் அகப்படாத நிலையில் இந்திய உளவுத்துறையும் திமுகவும் இணைந்து ஏற்பாடுசெய்த மற்றொரு நாடகத்தில் கருணாநிதி மத்திய அரசிற்கான ஆதரவை விலக்கிக்கொண்டார். 2009 இனப்படுகொலைகளின் போது கருணாநிதி இலங்கை அரசோடு இணைந்து நடத்திய நாடகத்தின் புதிய பதிப்பு இது.


 

இதைவிட மாணவர்கள் மத்தியில் ஆள்பிடிக்க முடியாமல் தோற்றுப்போன பரம்பரை ஈழ வியாபாரிகள் கும்பல் நிராயுதபாணிகளான பௌத்த துறவிகளைத் தாக்கியது.


 

ஒரு புறத்தில் மாணவர்கள் போராட்டத்தைத் திசைதிருப்பவும், மறுபுறத்தில் தமிழ் நாட்டின் மாணவர் போராட்டத்தின் உணர்வலைகளை சிங்கள மக்களுக்கு எதிரான இனவாதப் போராட்டமாக குறுக்கிக் காட்டவும் இத்தாக்குதல் பயன்பட்டிருக்கிறது.


 

பௌத்த துறவிகள் மீதான் ஒவ்வொரு அடியும் புலம்பெயர் தமிழ் இனவாதிகளுக்கு மகிழ்சியை வழங்கியதற்கும்அதிகமாக இந்திய உளவுத்துறையும், இலங்கை அரசும் கொண்டாடியிருப்பார்கள் என்பது அனுமானம் என்றாலும் உண்மை.


 

இறுதியாக புலம் பெயர் தமிழ் அரசியல் தலைவர்களின் கும்மாளம் இந்தத்தடவை முன்னையதிலும் அதிகமாகவே இருந்தது. இந்திய அரசியல் வாதிகளும் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர்களும் தாம் வழங்கிய துண்டறிக்கையுடனேயே காலைக்கடன் கூடக் கழிக்கப்போவதாக இவர்கள் பிரச்சாரம் செய்தார்கள். ஜெனிவாவிற்கி அப்பாவி மக்களையும் அழைத்துக்கொண்டு ஊர்திகளில் சென்று திரும்பினார்கள். அமரிக்கா ராஜபக்சவோடு பேரம் பேசுவதற்கு வழமைபோல உதவியாக இருந்த இவர்கள் இந்தியா சொன்னதால் தான் அமரிக்கா இலங்கையை தப்பிக்க விட்டதாக எல்லாம் முடிந்ததும் மக்களை நம்பக் கோரினார்கள்.


 

ஈராக்கின் மீது படையெடுத்து லட்சம் லட்சமாக மக்களை அழித்துப் போட்டபோது ஐக்கிய நாடுகள் நிறுவனம், அமரிக்காவின் நட்பு நாடுகள், ஏன் இந்தியா கூட எதிர்த்தபோது அமரிக்கா படையெடுத்தது. இந்தியப் பாதுக்கப்பில் ஓட்டை விழுந்துவிடும் என்று ஆப்கான் கணவாய்களையே உற்றுப் பார்த்துகொண்டிருந்த இந்தியா அழுததையும் கண்டுகொள்ளாமல் அங்கு படைகளை அனுப்பியது அமரிக்கா.


 

தெற்காசியாவில் இந்தியாவின் அயல் நாடுகளைக் கையாள்வதற்கு தனது நம்பிக்கைக்கு உரிய நண்பனான இந்தியாவை நம்பியிருக்கும் அமரிக்கா தனது பிராந்திய நலனை இந்தியாவின் ஊடாகவே உறுதிப்படுத்திக்கொள்கிறது.


 

புலம் பெயர் தமிழ் அரசியல் ‘மேதைகளும், தலைவர்களும்’ பிரித்தானியப் பாராளுமன்றக் கட்டத்திலும், ஐந்து நட்சத்திர விடுதிகளிலும் அழிக்கும் ஐரோப்பிய அரசியல்வாதிகளோடு கூட்டம் போட்டு கும்மாளமடித்து அமரிக்காவை திருப்திப்படுத்தியிருந்தோம் என்கிறார்கள். தாம் பேசியதைக்கேட்டு ‘புல்லரித்துப்’ போன அமரிக்கா இலங்கை அரசின் மீது சர்வதேச விசாரணை நடத்த முற்பட்ட வேளையில் இந்திய அரசு தலையிட்டு கெடுத்துவிட்டதாக ஆரம்பத்தில் கூறியவர்கள் பின்னதாக இந்தியா சமர்ப்பித்த ‘வெற்று’ ஆலோசனைகளைக் கண்டு இந்தியாவைப் பாராட்டினார்கள்.


 

இவர்களின் வில்லத்தனம் அப்பாவித்தனமாகத் தோன்றினாலும் ராஜபக்சவிற்கு பலம் சேர்பதே இதுதான். ராஜபக்சவைக் காப்பாற்றுவதுகூட இதுவே.


 

இந்த நிலையில், 2009 வன்னிப்படுகொலைகள் சிறுவர்களாக்விருந்த தமிழக மாணவர்கள் இந்த ஈழ நாடகத்தின் முதலாவது கதாநாயகர்களாக எழுச்சி பெற்றார்கள். ராஜபக்ச தண்டிக்கப்பட வேண்டும் என்று ஆரம்பித்தவர்கள், இந்திய அரசும் போர்க்குற்றவாளி தான் என்றார்கள். தமிழக இனவாத அரசியல் வாதிகளைப் புறந்தள்ளினார்கள். அமரிக்க அரசை தெருவில் இழுத்துக் கேள்விகேட்டார்கள்.


 

ராஜபக்ச அரசின் ஆதாரத் தூண்களான பல்தேசிய நிறுவனங்களை நோக்கி முழங்கினார்கள். விமான நிலையத்தை முற்றுகையிட்டார்கள், இராணுவ மையத்தை முற்றுகையிட்டார்கள். மரீனா கடற்கரையில் உண்ணாவிரதமிருந்தார்கள். போராட்டங்கள் தொடர்கின்றன.


 

புலம்பெயர் தலைமைகள் முன்வைக்கும் அரசியலுக்கு நேர் எதிரான திசையில் ஆரம்பித்திருக்கும் மாணவர்களின் கோரிக்கைகளை கண்டு ஜெயலலிதாவும் கருணாநிதியும் மட்டுமல்ல, இந்திய அரசும் அமரிக்க அரசும் கூட மிரண்டுபோனது.


 

இன்றைய முதலாளித்துவ  நெருக்கடி தன்னெழுச்சியான போராட்டங்களை உலகம் முழுவதும் தோற்றுவித்திருக்கின்றது. இப் போராட்டங்களை எல்லாம் மக்கள் சார்ந்த புரட்சிகர அரசியல் தலைமைகள் வழிநடத்துவதற்குப் பதிலாக எதிரிகளால் கையகப்படுத்தப்பட்டிருக்கிறது. வால் ஸ்ரீட் போராட்டத்திலிருந்து அரபு நாடுகளின் எழுச்சி வரைக்கும் பிற்போக்கு அரசியல் தலைமைகளால் கையகப்படுத்தப்பட்டு சீரழிக்கப்பட்டடுகள்ளது. இந்த நிலைமையைப் தமிழக மாணவர்கள் புரிந்துகொள்வதும் புரட்சிகர அரசியல் தலைமைகளை அடையாளம் கண்டுகொள்வதும் அவசியம். ஈழப் போராட்டத்தில் மட்டுமல்ல தெற்காசியாவை அழிந்துகொண்டிருக்கும் ஏகாதிபத்தியத்திலிருந்து விடுதலை செய்வதற்கு தமிழக மாணவர்கள் முன்னணி சக்திகளாக உலகத்திற்கே உதாரணமாக முடியும்.


 

இதுவரைக்கும் தமிழகதில் தமது முற்றத்தில் கொல்லப்படும் அவலங்களைக் கண்டுகொள்ளாது புலம்பெயர் ஈழத் தமிழர்களுக்கு உணர்ச்சியூட்ட மட்டும் தமிழ் இனவாத அரசியலை முன்வைத்து வியாபாரம் நடத்திய கும்பல்களை மாணவர்கள் இனம்காட்டியுள்ளனர்.. சீமானில் ஆரம்பித்து சின்னதான இனவாதக் குழுக்களைக் கூட மாணவர்கள் புறக்கணித்துள்ளனர்.


 

ஊறுகாய் போன்று அவ்வப்போது இடதுசாரி அரசியலைத் தொட்டுக்கொண்ட ஈழ ‘உணர்வாளர்கள்’ இப்போது தீவிர இடது அரசியல் வேண்டாம் என்று கூறும் அளவிற்கு மாணவர்களின் போராட்டங்கள் அவர்களை மிரட்டுகின்றன.


 

ஈழத் தமிழர்களின் அவலங்களை அமரிக்க அரசு தனது அரசியல் பொருளாதார அதிகாரப் பேரத்திற்காகப் பயன்படுத்திக்கொள்கிறது. வாக்குப் பொறுக்கும் அரசியல் கட்சிகள் தமது வாக்கு வங்கியை நிரப்பிக்கொள்வதற்காகப் பயன்படுத்திக்கொள்கின்றார்கள். இந்திய அமரிக்க சீன அரசுகள் தமது நலனுக்கு உகந்த பல்தேசியப் நிறுவனங்களின் சுரண்டலுக்காகப் பயன்படுத்திக்கொள்கின்றன.


 

இவற்றின் உள்ளூர் முகவர்களே புலம் பெயர் அமைப்புக்களும், தமிழக இனவாதிகளும், தேசிய வெறியூட்டும் அரசியல் கொள்ளைக்காரர்களும். இவை அனைத்திற்கும் அப்பாலான அரசியல் இன்று மக்கள் உணர்ந்துகொள்ள ஆரம்பித்துவிட்டனர். அரசுகளுக்குப் பதிலாக புலம்பெயர் நாடுகளிலுள்ள ஜனநாயக முற்போக்கு இயக்கங்களுடனும், உலகம் முழுவதிலும் உள்ள போராடும் மக்களோடும் கூட்டிணைவை ஏற்படுத்திக்கொள்ளும் மக்கள் இயக்கத்தை ஈழத்தில் ஒடுக்கப்படும் மக்களும் , தேசிய உணர்வுகொண்ட புலம்பெயர் மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.

 

http://inioru.com/?p=34259

Link to comment
Share on other sites

நான் நினைச்சேன் சபா நாவலன் கொஞ்சம் தெளிஞ்சுட்டார் எண்டு ஆனால் சந்தர்ப்பம் குறைவாகவே உள்ளது அந்த மாணவர்கள் நெடுமாறன் ஐயாவை சுயநலம் இல்லாத மனிதர் என்று சொல்லியது முன்னாள் இந்திய ஏகாதியபத்திய அருவருடி சபா கேட்கலை போல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபா நாவலன் முன்னாள் இந்திய ஏகாதிபத்திய அடிவருடி என்று சொல்லும் அன்பு இப்போது எதை வருடிக்கொண்டிருக்கின்றீர்கள்? <_<

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.