Jump to content

ஆளுங்கட்சியும், வடநாட்டுக் கட்சிகளும் தமிழினத்திற்கு எதிராக ஒரே நிலையில்...


Recommended Posts

ஆளுங்கட்சியும், வடநாட்டுக் கட்சிகளும் தமிழினத்திற்கு எதிராக ஒரே நிலையில்...
 
            த‌.தே.பொ.க. / வெள்ளி, 22 மார்ச் 2013 11:24        
    

நாட்டு மக்களுக்கு உறுதியளித்தவாறு ஒரு மெல்லிய திருத்தத்தைக் கூட சேர்க்க முனையாமல் எற்கெனவே தான்
நீர்த்துப்போகச் செய்த அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரித்து இந்தியா ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் வாக்களித்தது.


இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானம் இலங்கையை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது என்ற போதிலும் அந்த
மன்றத்தில் கூட இலங்கையில் நடந்தது தமிழினப்படுகொலை என்றோ, இப்போதைய தேவை
2008-2009 இறுதிகட்ட போரின் போது நடைபெற்ற மனிதகுலத்திற்கெதிரான குற்றங்கள்
மீது தற் சார்பான பன்னாட்டுப் புலன் விசாரணை என்றோ ஒரு தீர்மானம் நிறைவேற்றப் படவில்லை.


இவ்வாறானதொரு தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற மறுத்தது. காங்கிரசு கட்சி மட்டுமல்ல. பாரதிய
சனதா, சமாஜ்வாதி, திரிணமூல், பகுசன் சமாஜ், மார்க்சிஸ்ட், ஐக்கிய சனதா தளம்போன்ற எதிர்க்கட்சிகளும்தான். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இதற்கு விதிவிலக்கல்ல.


இறையாண்மையுள்ள இலங்கைநாட்டிற்கு பாதகமான எந்தத் தீர்மானத்தையும் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற விடமாட்டோம்
என்றும், ஒரு நட்பு நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடக் கூடாது என்றும்,
தி.மு.க.வோடு ஏற்பட்ட சிக்கலைத் தீர்த்துக்கொள்ள எங்களை அழைக்காதீர்கள்
என்றும் பலவாறு காரணங்கள் கூறி அனைத்துக் கட்சிகளும் தட்டிக் கழித்தன.
நாடாளுமன்ற அவைத்தலைவர் மீராக்குமார் தலைமையில் 20.3.2013 அன்று நடைபெற்ற
அனைத்துக் கட்சிக் கூட்டம் முடிவேதும் எடுக்காமல் இவ்வாறு கலைந்தது.


 ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் 21.3.2013 அன்று அமெரிக்கத் தீர்மானத்தில் திருத்தம் எதையும் இந்திய அரசு
வலியுறுத்தாதையும் இக்கட்சிகள் கண்டுகொள்ளவில்லை.


தமிழினத்திற்கெதிராக வன்மம் பாராட்டுவதில் இந்திய ஆளுங்கட்சியும் அனைத்திந்திய எதிர்க்கட்சிகளும் ஒரே நிலையில்தான்
இருக்கின்றன. எனத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சொல்லி வருவது. உண்மைநிலைதான் என்பது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.


இதே நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஈழத்தமிழர் சிக்கல் தொடர்பாக சில நாட்களுக்கு முன் விவாதம் நடந்த போது
இக்கட்சிகளின் தலைவர்கள் இலங்கைப் படை அப்பாவித் தமிழர்களை பல்லாயிரக்கணக்கில் கொன்று குவித்ததையும், தமிழர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள் என்றும், அங்கு நடந்த போர்க் குற்றங்கள்குறித்து பன்னாட்டு விசாரணை வேண்டுமென்றும், இலங்கையில் நடந்த அட்டூழியங்களுக்கு இந்திய அரசு துணை செய்தது என்றும் பேசியதைதொலைக்காட்சியின் வழியாக மக்கள் பார்த்தார்கள்.


ஆனால் தாங்களும் ஏற்றுக்கொள்ளும் ஒருமனதான தீர்மானம் ஒன்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டிய சூழல் வந்த போது
இக்கட்சிகள் தங்களது உண்மை முகத்தை காட்டிவிட்டன.


காங்கிரசுக் கூட்டணியிலிருந்து தி.மு.க.விலகி, மன்மோகன் சிங் ஆட்சி பெரும்பான்மையை இழந்து ஆட்டம் கண்ட சூழலில் கூட
இந்த ஆட்சிக் கவிழ்ந்து விடாமல் முட்டுக்கொடுத்து நிற்கின்றன.


தமிழர்களின் இனப்பிரச்சினைக் காரணமாக இந்த ஆட்சி கவிழ்ந்துவிடக் கூடாது என்பதில் வடநாட்டுக் கட்சிகள் கண்ணும்
கருத்துமாக இருக்கின்றன.


அனைத்திந்திய கட்சிகளின் தமிழ்நாட்டுத்தலைவர்கள் ஈழத்தமிழர் பிரச்சினையில் ஆதரவான கருத்துக் கொண்டிருந்தாலும் அது
அக்கட்சிகளின் அனைத்திந்திய முடிவாக வராது. என்பது மீண்டும் வெளிப்பட்டுள்ளது. ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாட்டுக் கிளையும், தமிழகத்தைச் சேர்ந்த அனைத்திந்திய தலைவர்களும்
அக்கறைக்காட்டினாலும் அக்கட்சியின் நாடாளுமன்ற மக்களைவைக் குழு தலைவர்,
அக்கட்சியின் அனைத்திந்திய தொழிற்சங்கத் தலைவர் குருதாஸ்தாஸ்குப்தா
இலங்கைக்கு எதிரான தீர்மானம் எதையும் மக்களவையில் அனுமதிக்க முடியாது என்று கூறினார்.


பா.ச.க. தமிழகத் தலைவர் பொன்.இராதாகிருஷ்ணன் நாடாளுமன்றத் தீர்மானத்தை கோரிய போதும் அக்கட்சியின்
நாடாளுமன்றக் குழுத் தலைவர் சுஷ்மா சுவராஜ் அவ்வாறான தீர்மானம் வருவதைக் கடுமையாக எதிர்த்தார்.


இலங்கையில் தமிழின அழிப்பு நடந்ததை அவர்களுக்கு நாம் உரியவாறு எடுத்துக் கூறாததால் ஏற்பட்ட நிலை அல்ல இது.
ஏனெனில் இதே தலைவர்கள் ஒரு வாரத்திற்கு முன்னால் தி.மு.க., அ.தி.மு.க.
உறுப்பினர்களோடு இணைந்து அங்கு நடந்த இனப்படுகொலைகள், போர்க்குற்றங்கள்
பற்றி உரத்துப் பேசியவர்கள்தாம். தமிழ்நாட்டு உறுப்பினர்களோடு சேர்ந்து வெளிநடப்பு செய்தவர்கள்தாம்.


உண்மையில் இச்சிக்கலில் இவர்களுக்கு அக்கறை இருந்திருக்குமானால் மன்மோகன் ஆட்சி பெரும்பான்மை இழந்ததை சாதகமாகப்
பயன்படுத்தி நாடாளுமன்றத்தில் இலங்கைக்கு எதிரான வலுவான தீர்மானத்தை வற்புறுத்தியிருக்க முடியும். ஆனால் நேர் மாறாக நடந்துகொண்டார்கள்.


தமிழர்களுக்கு எதிரான இந்தக் கொள்கை ஒரு கட்சி சார்ந்த அல்லது சோனியா என்ற ஒரு தலைவரின் பழிவாங்கல் உணர்ச்சியை
மட்டுமே சார்ந்த சிக்கலல்ல என்பது மீண்டும் தெளிவாகி விட்டது. இந்தியா என்ற கட்டமைப்பே தமிழினப்பகைக் கட்டமைப்பு என்பதை இது உறுதி செய்துவிட்டது.


கட்சிகளுக்கு அப்பாற்பட்டு ஒட்டுமொத்த இந்திய அரசு தமிழர்களுக்கு எதிரான அரசு என்பதை தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.


ஆரிய இந்தியத்தின் உள்நாட்டுத் தமிழினப்பகைக் கொள்கையின் நீட்சியே. ஈழத்தமிழர்களுக்கெதிரான இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையாகும்.


காவிரி, முல்லைப்பெரியாறு, மூன்றுதமிழர் சாவுத்தண்டனை, போன்ற பல சிக்கல் களிலும் அது வெளிப்பட்டாலும்
மீனவர்சிக்கலில் அது துல்லியமாகத் தெரிகிறது. கேரளத்தைச் சேர்ந்த இரண்டு
மீனவர்கள் கொலை தொடர்பான பிரச்சினையில் இத்தாலியோடு தூதரக உறவைக் கூட
துண்டிக்கத் துணிந்துள்ள இந்திய அரசு, இத்தாலித் தூதரை பிணைக்கைதி போல்
வைத்துள்ள இந்திய அரசு 600 தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கைப்படை கொன்ற
பிறகும் அசையவில்லை. இலங்கை அரசுக்கு எதிராக “கண்டனம்” என்ற சொல்லைக்கூட
உச்சரிக்க முன்வராதவர்தான் இந்தியப் பிரதமர். கேரள மீனவர் சிக்கலில்
இத்தாலிக்கு எதிராகக் கூச்சல் எழுப்பிய வட நாட்டுத் தலைவர்கள் தமிழக
மீனவர்கள் தொடர்பாக இலங்கைக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்பியதே இல்லை.


உள்நாட்டு தமிழர் தொடர்பான பகைப்போக்கே வெளிவுறவிலும், ஈழத்தமிழர் சிக்கலிலும் வெளிப்படுகிறது.


 

எனவே தமிழின உணர்வாளர்கள் தமிழர் சிக்கல்களை ஒரு கட்சி சார்ந்த அல்லது ஒரு கூட்டணி சார்ந்த சிக்கலாகப்
பிறழ்ச்சியாக புரிந்துகொள்ளக்கூடாது. இது ஒட்டுமொத்த இந்தியத்தின்
இனக்கொள்கை என்ற உண்மையை உணரவேண்டும். இந்தியத்தின் இந்த தமிழினப்பகைப் போக்கு கட்சிக் கடந்தது.


தமிழ்நாட்டுத் தமிழர்களின் அடிமை நிலைக்கு எதிரான விடுதலைப் போராட்டமும், ஈழத்தமிழர்கள் விடுதலை போராட்டமும் ஒரு சேர
நடைபெற வேண்டும். என்ற தெளிவு வேண்டும்.


ஐ.நா. விவாதமும், இந்திய நாடாளுமன்றத்தின் நிலைப்பாடும் உணர்த்தும் உண்மை இதுதான்.

 

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=23329:2013-03-22-05-55-51&catid=1:articles&Itemid=264

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.