Jump to content

சிங்கள மயமாவதிலிருந்து பாதுகாக்கப்பட வட, கிழக்கு இணைக்கப்பட வேண்டும் - கிழக்கு முஸ்லிம் சமாதான சபை


Recommended Posts

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் விரைவில் சிங்கள மயமாகுவதிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டுமானால் இலங்கை இந்திய உடன்படிக்கையில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று வாழ்விடம் எனக் கூறப்பட்டிருக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு தனியான ஒரு மாகாண சபை ஏற்படுத்தப்பட வேண்டும்.

 

 

சிறுபான்மை மக்களின் உரிமைகளையும் , பிரச்சினைகளையும் பெரும்பான்மையினர் தொடர்ந்து திட்டமிட்டுப் புறக்கணித்து வருவதே இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் நாட்டுப் பிரிவினைப் போராட்டத்திற்கும் முக்கிய காரணங்களாகும். 


இலங்கையின் இனப் பிரச்சினைக்கும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட  வன்செயல்களுக்கும் தீர்வு காணும் அவசியத்தையும் இலங்கையில் வாழும் சகல இன மக்களின் பாதுகாப்பு , நல்வாழ்வு  ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு 29.07.1987  இல் இலங்கை  இந்திய  உடன்படிக்கை ஏற்பட்டது.

 

இலங்கையின் ஐக்கியம் , இறைமை , பிரதேச ஒருமைப்பாடு என்பனவற்றைப் பாதுகாக்கும்  நோக்கத்தோடு சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர்  ஆகிய பல இன மக்கள் வாழும் பல மொழி  பேசும் ஒரு நாடாக இலங்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு ஒவ்வொரு இன மக்களும்   அக்கறையோடு பேணிப் பாதுகாக்க வேண்டிய தனித்துவமான  கலாசாரத்தையும் , மொழியையும் கொண்டுள்ளவர்கள் என்பதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

 

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று வசிப்பிடம் என்றும் இவர்கள் எக் காலத்திலும் மற்ற இன  மக்களோடு இங்கு சேர்ந்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பதும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

 

ஜனாதிபதியின் பிரகடனத்தைத் தொடர்ந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தற்காலிக இணைப்பு 1988 செப்டெம்பர் 7 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது. செப்டெம்பர் 19 ஆம் திகதி ஒன்றிணைந்த வட கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஒக்டோபர் 10 ஆம் திகதி தேர்தல் ஆணையாளரால் நியமனப் பத்திரங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. தேர்தல் 1988 நவம்பர் 19 ஆம் திகதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.


வட கிழக்கு மாகாண சபை 1988 டிசம்பர் தொடக்கம் 1990 மார்ச்  மாத காலத்தில் அரசியல் யாப்பின் 13 ஆவது திருத்தத்தினால் மாகாண சபைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதில் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்தது. ஒன்றிணைந்த வட கிழக்கு மாகாண சபை அதன் 14 மாத நிர்வாகத்தில் பல தரப்பட்ட பிரச்சினைகளால் ஆட்சி நடத்த முடியாமல் தத்தளித்தது.

 

 

வட கிழக்கு மாகாண சபையின் அன்றைய முதலமைச்சராகவிருந்த வரதராஜப் பெருமாள் 1990 ஆம் ஆண்டு மார்ச் முதலாம் திகதி நடந்த மாகாண சபையின் விசேட கூட்டத்தில் ஜனாதிபதி பிரேமதாசவின் அரசாங்கத்திற்கு உடனடியாக நிறைவேற்றுவதற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட 19 அம்சக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமை காரணமாகத் தன்னிச்சையாக தமிழ் ஈழத் தனி நாட்டினைப் பிரகடனம் செய்தார்.  அதனைத் தொடர்ந்து வட கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டது.


பின்பு 2006 ஒக்டோபர் 16, திங்கட்கிழமை உச்ச நீதிமன்றத்தால் அரசாங்க வர்த்தமானியில் ஜனாதிபதியினால் அவசர கால நிலைமையில் வெளியிடப்பட்ட பிரகடனத்தால் வட மாகாணமும் கிழக்கு மாகாணமும் ஒன்றிணைக்கப்பட்டமை  செல்லுபடியாகாது எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. ஒன்றிணைந்த வட கிழக்கு பிரிக்கப்பட்டதன் பின் கிழக்கு மாகாணத்தை சிங்கள மயமாக்கும் திட்டம் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

இத் திட்டத்தின் குறிக்கோள் அதிவிரைவில் சிங்கள மக்களைக் கிழக்கு மாகாணத்தில் ஆகக் கூடிய இனத்தவராக்குவது தான். இந்த மறைமுகமான திட்டம் திருகோணமலை மாவட்டத்தில் அரச உதவியோடு கூடிய திட்டமிட்ட சிங்களவர் குடியேற்றம் ,உல்லாசப் பிரயாணம் ,ö பளத்த மத மறுமலர்ச்சி ஆகியவற்றினை நோக்கமாகக்  கொண்ட அபிவிருத்தித் திட்டங்கள், அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனைப் பிரதேச சபைப் பிரதேசத்தில் உள்ள ஒலுவில் துறைமுகம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் உட்பட தீகவாபி பிரதேசத்தையும் உள்ளடக்கிய  ஒரு பிரதேச சபையையும் செயலகத்தையும் புதிதாக ஏற்படுத்தி இப் பிரதேசத்தில் சிங்களவரைக் குடியேற்றல், தொப்பிகல (குடும்பிமலை) பிரதேசத்தில் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்தித் திட்டங்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் உடனடியாக ஆரம்பித்து சிங்கள மக்கள் அதிகப் படியாக வரக் கூடிய குடிசன மாற்றத்துக்கான ஏற்பாடுகள் மிக மும்முரமாக நடைபெற்று வருகின்றன.


கிழக்கு மாகாண சிங்கள மயமாக்கல் திட்டப்படி வட கிழக்கு  பிரிக்கப்பட்டதன் பின் கிழக்கு மாகாண நிர்வாகம் இன ரீதியாகப் பெரும் மாற்றமடைந்து வருகிறது. முன்னாள் திருகோணமலை அரசாங்க அதிபர்கள் கிழக்கு மாகாண முதற் செயலாளராகவும், பொது நிர்வாகச் செயலாளராகவும் பதவியேற்றுள்ளனர்.

 

முன்னாள் மாத்தளை அரசாங்க அதிபர் மாகாண பொது நிர்வாக சேவை ஆணைக் குழுவின் செயலாளர், மேலும் கிழக்கு மாகாண ஆளுநர் போன்ற உயர் பதவிகளுக்கு பல முன்னாள் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால் , முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவுள்ள அம்பாறை,  திருகோணமலை  மாவட்டங்களுக்கு இற்றைவரை முஸ்லிம் மாவட்ட செயலாளர் எவரும் நியமிக்கப்படவில்லை. ஊவா மாகாணத்தில் ஒரு பகுதியாகவிருந்த பிந்தனைப்பத்து சிங்களவர் ஒரு இலட்சம் பேர் கிழக்கு மாகாண  அம்பாறை மாவட்டத்துடன் சேர்க்கப்பட்டுள்ளனர்.


மேற்படி நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த  கிழக்கு மாகாண சபையிலுள்ள தமிழ் பேசும் அங்கத்தவர்களாலோ அல்லது கிழக்கு மாகாண  அமைச்சர்களாலோ இயலாமலிருக்கிறது. 
இந்திய அரசாங்கத்தின் உ றுதியான தலையீட்டினால் இலங்கை இந்திய உடன்படிக்கையும் அரசியல் சாசன 13 ஆவது திருத்தச் சட்டமும் ஏற்பட்டன. தமிழர்களின் பிரச்சினைக்கு ஒரு தீர்வாக தற்காலிகமாக ஒன்றிணைக்கப்பட்ட வட கிழக்கு  மாகாண சபை ஏற்படுத்தப்பட்டது. 

 

மேலும்  கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு இல்லாமலே வடக்கும் கிழக்கும் நிரந்தரமாக ஒன்றிணைந்தே இருக்க வேண்டும் என்பதும் அரசியல் சாசனத்தின் 13 ஆவது திருத்தத்தில் குறிப்பிட்டிருக்கும் காணி உரிமையும் பொலிஸ் அதிகாரங்களும் மாகாண சபைகளுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்பதே பெரும்பான்மையான தமிழர்களின்  கோரிக்கையாகும்.

 

இந்த நிலையில் வட கிழக்கு முஸ்லிம்கள் எவ்வாறு நடந்து கொள்வது?  இது தான் முஸ்லிம்கள் இன்று எதிர்நோக்கும் பாரிய பிரச்சினை. இச் சூழலில் இது பற்றிய எமது நிலைப்பாட்டை நாம் இன்றைய அரசியல் அரங்குக்குள் உறுதியாக முன்வைக்க வேண்டியவர்களாகவுள்ளோம்.


1964 இல் திருகோணமலையில் தமிழரசுக் கட்சியின் 9 ஆவது மாநாட்டில் தலைவர் தந்தை செல்வநாயகம் வட கிழக்கு அரசியல்  அதிகாரம் தமிழ், முஸ்லிம்  இனங்களுக்கிடையே பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் எனப் பேசினார். அதிகாரங்களை நியாயமான அடிப்படையில் தமிழர்களும் முஸ்லிம்களும் பகிர்ந்து கொள்வதற்கான நல்லிணக்க ஏற்பாட்டைச் செய்து கொள்வதற்கான முயற்சிகள் எம்மால் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் பயனாக தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் இலங்கை முஸ்லிம் கவுன்சிலுக்கும் 1987 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 16 17 ஆம் திகதிகளில் சென்னையில் நடந்த பேச்சு வார்த்தையில் பெரும்பான்மையான விடயங்களில் இணக்கம் காணப்பட்டன. முஸ்லிம்களின் நலன்குறித்துப் பேச்சு வார்த்தை நடத்த விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு அழைப்பு விடுத்தது. தமிழீழ விடுதலைப் பு லிகளின் தலைவர்களுடன் 1988 ஏப்ரல், 15 ஆம், 16 ஆம், 19 ஆம் திகதிகளில் சென்னையில்  மிக சினேகபூர்வமான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு 1988 ஏப்ரல் 21 ஆம் திகதி ஒரு கூட்டறிக்கையும் வெளியிடப்பட்டது.

 

இதே சந்தர்ப்பத்தில் ஏனைய தமிழ் அமைப்புகளின் தலைவர்களும் எங்களைச் சந்தித்து முஸ்லிம்களுடன் தாங்கள் கொண்டுள்ள நட்புறவையும் இரு இனங்களும் இணக்கமாக நடந்து கொள்ளத் தாங்கள் கொண்டுள்ள விருப்பத்தையும் எங்களிடம் வெளிப்படையாகத் தெரிவித்தனர்.  இந்தப் பேச்சுவார்த்தைகள் யாவும் இலங்கை , இந்திய அரசாங்கங்களின் அனுசரணையுடனேயே நடைபெற்றன. தமிழர் விடுதலைக் கூட்டணியுடனும் தமிழீழ விடுதலைப் புலிகளுடனும் நடத்திய பேச்சுவார்த்தைகளின் பின் வெளியிடப்பட்ட கூட்டறிக்கைகள் தமிழ் , முஸ்லிம் இன ஒற்றுமையினதும் நல்லிணக்கத்தினதும் சாசனங்களாக வரலாற்றில் உள்ளன.


முஸ்லிம்களின் தனித்துவத்தையும் நலன்களையும் பேணிப் பாதுகாப்பதற்கென வடக்கு, கிழக்கு மாகாணங்களில் செயற்படுத்தக்  கூடிய ஏற்பாடுகள் குறித்து முஸ்லிம் அமைப்புகளும் தமிழ் அமைப்புகளும் பின்வரும் விடயங்களில் கருத்தொருமைப்பாடு கண்டுள்ளன.

 

·    முஸ்லிம்களின் தனியானதும் வேறுபட்டதுமான இன, மத,கலாசாரம் பேணிப் பாதுகாக்கப்படுதல்.

 

·    தமிழ் பேசும் மக்களின் வரலாற்று வசிப்பிடமென அங்கீகரிக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு மாநிலத்தில் முஸ்லிம்களது வரலாற்று வசிப்பிடங்கள் முஸ்லிம் இனத்தவரின் சனத்தொகைக்கேற்ப காணி நிலங்கள் , இயற்கை வளங்கள் உள்ளடக்கப்பட்டு தனித்தனியான அரசியல் நிர்வாகப் பிரிவுகளாக அடையாளம் காணப்படுதல்.

 

·     முஸ்லிம் வரலாற்று வாழ்விடங்களில் சட்டம், ஒழுங்கு ஆகியவை சம்பந்தமான  நிறைவேற்று அதிகாரம் முஸ்லிம்கள் கைவசம் இருத்தல்.


·    வேலை வாய்ப்பு ,காணிப் பகிர்வு ,பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள், முதலீடு சம்பந்தமானவற்றில் முஸ்லிம்கள் வரலாற்று வாழ்விடங்களுக்கு நியாயமான பங்கு கொடுத்தல்.

 

·    காணிப்பங்கீட்டில் முஸ்லிம் கிழக்கு மாகாணத்தில் 35 வீதத்திற்கு குறைவில்லாமலும் ,மன்னார் மாவட்டத்தில் 30 வீதத்திற்கும்  எஞ்சிய  வட மாகாணத்தில் 10 வீதத்திற்கும்  உருத்துடையவர்களென அங்கீகரித்தல்.

 

·     ஒன்றிணைந்த வட கிழக்கு மாகாண சபைக்கு 35 வீதத்திற்கு குறைவில்லாத முஸ்லிம் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு அவசியமான திருத்தங்களை அரசியல் சாசனத்தில் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுதல்.


ஒன்றிணைந்த வட கிழக்கு மாகாண சபை ஏற்படுத்துவதற்கான முஸ்லிம்களின் இணக்கப்பாட்டிற்கு தேவையான முக்கிய நடவடிக்கைகள்

 

தமிழ் போராளிகளினால் வடகிழக்கிலிருந்து சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் , அவர்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட காணி, வீடு வாசல்கள், சொத்துடமைகள் ஆகியவற்றின் பூரண விபரம் முஸ்லிம் உரிமைகள் மன்றத்தினால் சேகரிக்கப்பட்டிருக்கிறது.  இப் பிரச்சினைகள் சுமூகமாகத் தீர்க்கப்படுமானால் வட கிழக்கில் வாழும் தமிழருக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் நிலவும் விரோதம் நீங்கி நல்லிணக்கத்திற்கான சாந்தியும் சமாதானமும் ஏற்பட வழி பிறக்கும்.

 

ஏற்கனவே தமிழர்களுக்கும் முஸ்லிம்களுமிடையில் ஏற்பட்ட உடன்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுதல்  வேண்டும்.

 

ஒன்றிணைந்த வட கிழக்கு மாகாண சபைக்கான பிரதிநிதித்துவத்தில் சிறுபான்மையினருக்கு சம பிரதிநிதித்துவம்  தமிழர் 50 வீதம்  37 அங்கத்தவர்கள் , முஸ்லிம்கள் 35 வீதம்  26  அங்கத்தவர்கள் , சிங்களவர் 15 வீதம் 11 அங்கத்தவர்கள் , 5 அங்கத்தவர்களைக் கொண்ட வட கிழக்கு அமைச்சரவையில் தமிழர் 2 அமைச்சர்கள் , முஸ்லிம்கள் 2 அமைச்சர்கள் , சிங்களவர் 1 அமைச்சர் என்ற ரீதியில் ஆட்சி அதிகாரங்கள் பங்கிடப்பட வேண்டும். 

 

இவ்வாறான  அதிகாரப் பகிர்வினைச் சாத்தியப்படுத்துவதற்கு மூன்று முக்கிய அம்சங்கள் பூர்த்தியாக்கப்பட வேண்டும்.


முதலாவது  முஸ்லிம்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு வட கிழக்கு தமிழர்களின் இணக்கம்.

 

இரண்டாவது  தமிழர் கோரும் ஒன்றிணைந்த வட கிழக்கு மாகாண சபை ஏற்படுத்துவதற்கு முஸ்லிம்களின் இணக்கம்.

 

மூன்றாவது  வட கிழக்கில் தமிழருக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் ஏற்படும் இணக்கப்பாட்டினை சட்ட பூர்வமாக்குவதற்கு இலங்கை அரசாங்கத்தின் உ றுதியான நிலைப்பாடு. 

 

முஸ்லிம் இனத்தவரின் உரிமைகளை பாதுகாக்க  நியாயமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் போது அத்தகைய நடவடிக்கைகளினால் தமிழரின் கோரிக்கைப் படி அரசியல் ,  நிர்வாக தேவைகளுக்காக ஒன்றிணைக்கப்படும் வட கிழக்கு மாகாணங்களின் தனித்துவம் குந்தகப்படுத்தப்படவோ அல்லது குலைக்கப்படவோ கூடாது.

 

எம். ஐ.எம். முஹியத்தீன்
பொதுச் செயலாளர்
கிழக்கு முஸ்லிம் சமாதான சபை



http://www.thinakkural.com/index.php?option=com_content&view=article&id=3497:2013-03-17-17-03-05&catid=293:article&Itemid=542

Link to comment
Share on other sites

Too late. 

அமெரிக்காவின் பிரேரணை முஸ்லீம்களை தனியாகத்தான் கையாள விரும்புகிறது.

 

முஸ்லீம்கள் முன்வந்து எதிர்ப்புக்காட்டி அமெரிக்காவின் அந்த நிலைப்பாட்டை மாற்றாவிட்டால் அம்பாறை போன்றன சிங்கள பக்கமும் திருகோணமலை போன்றவை தமிழ் பக்கமும் வரும் சாத்தியம் கூட. முஸ்லீம்களின் தனி அலகு கதை கிழக்கு மாகாணத் தேர்தலில் கக்கிம் நடந்த விதத்தால் சின்னாபின்னப்படும் சாத்தியம் மட்டும்தான் இருக்கிறது. பெரிய தொகை முஸ்லீம்களின் பிரதிநிதிகள் அரசுடன் இணங்கி அங்கு தமது தொகுதிகளை சேர்த்து இலங்கை அரசில் தமது பதவிகளை காப்பாற்றிக்கொள்வார்கள் என்பதுதான் யதார்த்தம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதைத்தான் சுடலை ஞானமெண்டிறது.  அதாவது மண்ணுக்குள்ள போகேய்க்க வாற ஞானம்.  சிங்கள பலசேனா ஹலாலையும் விட்டுக்குடுத்து பள்ளிவாசல்களையும் எரிக்கிறதை நிப்பாட்டினா பழையபடி உதிச்ச ஞானம் மறைஞ்சு போம்.

Link to comment
Share on other sites

மதம் வேறுபட்டாலும் இனத்தால் தமிழர்கள் நாங்கள்

 

599616_426622747430834_640467702_n.jpg

Link to comment
Share on other sites

இதுவும் வண்டி சக்கரம்தான்.

 

செல்வா தனது காலத்தில் பல கிழக்கு மாகாணத்தொகுதிகளை வெல்ல முஸ்லீம் மக்களைத்தான் நம்பினார். அசிரப் பிரிவினைவாதம் கக்கவில்லை.  பதியுதின், கக்கீம் தான் மு.கா.வை இழுத்துகிழித்து  தமிழ் முஸ்லீம்கள் உறவை பதவிக்கா விற்று, ஐ.நா சென்று தமிழரை தாக்கி, காட்டிக்கொடுப்புகளில் இறங்கியவர்கள்.

 

சிலருக்கு  உண்மையான அரசியல் என்றால் SJV காலத்திற்கு போக வேண்டும் என்பது தெரிகிறது. உண்மையான போராட்டம், சுதந்திரம் என்றால் தலைவர் காலத்திற்கு போக வேண்டும் என்பதும் புரிகிறது.

 

இந்த இடைவெளிக்குள் ஏதாவது நடக்காவிட்டால் சில்லு மீண்டும் உருண்டு போகலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதம் வேறுபட்டாலும் இனத்தால் தமிழர்கள் நாங்கள் 

உதை அவையெல்லோ சொல்லவேணும்.

 

 

 

599616_426622747430834_640467702_n.jpg

 

இது தமிழ்நாட்டில் எங்கோ எடுக்கப்பட்ட படம், இலங்கையில் இப்படி நடைபெறுவதில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் உள்ள முஸ்லிம்களின் இளைய சமூகத்தினர் மத்தியில் இவ்வாறான சிந்தனை வெளிப்பாடுகள் அண்மையில் வர ஆரம்பித்து இருப்பதும் சில சில குழுக்களாக அவர்கள் பல விடயங்களை செய்து கொண்டு வருவதும் வரவேற்கத்தக்கது.

 

அத்தாவுள்ளா போன்ற முஸ்லிம் இனவாதத் தலைவர்களின் செல்வாக்கினையும் மீறி இவர்களின் குரல்கள் வெளியே வருவது நம்பிக்கையினை அளிக்கின்றது.

 

வடக்கு கிழக்கின் இணைப்பு தமிழ் முஸ்லிம் மக்களின் ஐக்கியத்தினூடாக மாத்திரமே சாத்தியப்படும்.

 

தமிழ் மிதவாதத் தலைவர்கள் என்று சொல்லப்பட்டவர்கள் தமிழ் இளைய சமூகத்தால் அன்று எவ்வாறு தூக்கியெறிப்பட்டார்களோ அதே போன்று இன்றுள்ள முஸ்லிம் அரசியல் வாதிகளும் முஸ்லிம் இளைய சமூகத்தால் தூக்கி எறியப்படுவர்.

Link to comment
Share on other sites

இது தமிழ்நாட்டில் எங்கோ எடுக்கப்பட்ட படம், இலங்கையில் இப்படி நடைபெறுவதில்லை.

 

 

இது தமிழ் நாட்டுப் படம். இலங்கையில் எங்குமே யாருமே  இப்படி ஒரு பாதுகை பிடிக்க கூடாது. POTA, 6ம் திருத்தம் எல்லாம் ஒரே தடவையில் பாய்ந்துவிடும்.

 

ஆனால் முஸ்லீம் தலைமைகளிடம் மாற்றம் வரவேண்டும் என்ற கோரிக்கை இனி எழத்தான் செய்யும். 

 

அசாத் அலி சில துணிசல்களை வரவளைத்திருக்கிரார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதம் வேறுபட்டாலும் இனத்தால் தமிழர்கள் நாங்கள்

 

599616_426622747430834_640467702_n.jpg

 

கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்!

Link to comment
Share on other sites

ஹைதராபாத் போராட்டத்தில் தோழர் அப்துல் காதர், அவரது 60 வயது அம்மா, மற்றும் மனைவு, குழந்தைகள்

 

 

320106_351118215009642_2112047852_n.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.