Jump to content

வடமாகாண மக்களும் சிங்களம் கற்கவேண்டுமாம் - இந்திய பதில் துணைத்தூதர்

Recommended Posts

இந்திய மக்கள் தொகையில் குறைந்தது 50 சதவீதமானோர் இந்தியாவின் இணைப்பு மொழியான ஹிந்தியை கற்றிருப்பதைப்போல வடமாகாண மக்களும் சிங்களம் கற்கவேண்டும் என்பதே தங்களின் ஆர்வம் என்று இந்திய பதில் துணைத்தூதர் எஸ் டி மூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஹிந்தி மொழி பயன்பாட்டை இந்தியாவில் பரப்பும் நோக்கில் ஆண்டுதோறும் செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதி கடைபிடிக்கப்படும் ஹிந்தி திவாஸ் என்கிற நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இருக்கும் இந்திய துணைத்தூதரக அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய இந்திய பதில் துணைத்தூதர் எஸ் டி மூர்த்தி இந்த கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார் என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. http://www.pathivu.com/news/33868/57//d,article_full.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"பச்சைக் கலரு ஜிங்குசா , மஞ்சள் கலரு ஜிங்குசா.." என்ற வரிகள்தான் ஞாபகத்திற்கு வருகிறது! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மக்கள் தொகையில் குறைந்தது 50 சதவீதமானோர் இந்தியாவின் இணைப்பு மொழியான ஹிந்தியை கற்றிருப்பதைப்போல வடமாகாண மக்களும் சிங்களம் கற்கவேண்டும் என்பதே தங்களின் ஆர்வம் என்று இந்திய பதில் துணைத்தூதர் எஸ் டி மூர்த்தி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் எத்தனை வீதமான ஆட்கள் ஹிந்தி படித்திருக்கிறார்கள்?

இந்திய துணைத் தூதர் மூர்த்திக்கு,  இப்படியான கருத்துக்கள் சொல்ல உரிமையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோடி அரசின் சமஸ்கிருதத் திணிப்பு !

பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பே !

மோடி அரசின் சமஸ்கிருத வாரம் !

இந்துத்துவா திணிப்பே அதன் சாரம்!

‘உலக மொழிக்கெல்லாம்

தாய்மொழி சமஸ்கிருதம்’ என்று

பொய் நெல்லைக் குத்திப்

பொங்குகிறார் மோடி.

மோடி - இந்துத்துவா

மோடி அரசின் சமஸ்கிருதத் திணிப்பு !

பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பே !

மறுகாலனியாக்கக் கொள்கையை

பார்ப்பனப் பாசிச வழியில்

உறுதிப்படுத்தும் பிரதமர் மோடி,

‘கடவுள் மொழி சமஸ்கிருத’த்தின்

ஆர்.எஸ்.எஸ் புத்திரனே

என்று புரிந்து கொள்வோம்!

நூறாண்டு முன்பே

பார்ப்பனப் பொய்களைச் சுட்டெரித்து

சமஸ்கிருதத்திலிருந்து

முற்றாக வேறுபட்ட

தனி மூல மொழி திராவிடத் தமிழ் என்று

முழங்கினார் கால்டுவெல்.

சமஸ்கிருதம் – இந்தி என்று

எங்கு எப்போது திணிக்கப்பட்டாலும்,

அதை எதிர்த்து முறியடிப்போம்!

கல்வியில் தமிழ் பயிற்றுமொழி

அரசு அலுவலகங்களில் தமிழே நிர்வாக மொழி

நீதி மன்றங்களில் தமிழே வழக்காடும் மொழி

என அனைத்து துறைகளிலும்

தமிழை ஆணையில் வைப்போம்.

மோடி அரசின் பார்ப்பனீய பண்பாட்டுத் திணிப்பு, இந்தி – சமஸ்கிருதத் திணிப்பு

இந்து – இந்தி-இந்தியா என்ற இந்து ராட்டிரத் திணிப்பே !

பார்ப்பன இந்துமதவெறிப் பாசிசத்துக்கு எதிரான இன்றைய போரில்

தமிழ் மரபைக் களத்தில் நிறுத்தும் போர்வாளான கால்டுவெல்லை உயர்த்திப் பிடிப்போம்!

பெரியார் பிறந்த மண்ணில் பார்ப்பனீயத்துக்கு எதிராக ஒன்றிணைவோம்!........நன்றி வினவுhttp://www.vinavu.com/2014/09/12/rsyf-conference-on-sanskrit-imposition/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மக்கள் தொகையில் குறைந்தது 50 சதவீதமானோர் இந்தியாவின் இணைப்பு மொழியான ஹிந்தியை கற்றிருப்பதைப்போல ..

மிகத் தவறான தகவலை பதவியிலிருப்போர் பரப்புரை செய்வது கண்டிக்கத் தக்கது. :wub:

இந்தி என்பது பலவேறு வடகத்திய மொழிகளின் கூட்டுக்கலவை மொழியாக அறியப்படுகிறது..அதில் வெஸ்டன் ஹிந்தி, ஈஸ்டன் ஹிந்தி, பீகாரி போன்ற கலவைகளும் அதன் உட்பிரிவுகளும் உள்ளன.

மொத்த ஹிந்தி உட்பிரிவுகளும் சேர்த்து 1991 வருட கணக்குப்படி 39.29 சதவீதமாக இருந்த ஹிந்தி பேசுவோர் எண்ணிக்கை 2001 வருட கணக்குப்படி 41.03 சதவீதமாக மாறி உள்ளனர்.

விக்கிப்பீடியா

Link to comment
Share on other sites

தமிழனை வீரத்தினால் வெல்லமுடியாத ஆரியம் அவனை ஆன்மிகவழியில் இந்துக்களாக மாறவைத்து சுலபமாக அடக்கி அடிமைகொண்டதை வரலாறுகள் தெரிவிக்கின்றன. இந்துமதம் மனித வாழ்வுக்கான சிறந்த வழிமுறைகளைக் கொண்டுள்ளது. ஆனாலும் தமிழரை அடிமையாக வைத்திருப்பதையே அதன் இதிகாசக் கதைகளும், தேவார பக்திப் பாடல்களும் அடிப்படையாகக் கொண்டுள்ளதைக் அவதானிக்கலாம். அது தெரிந்தும் அதன் பிடியிலிருந்தும் வெளிவர முடியாது அவன் ஓர்மம் தடுக்கிறது. அத்துடன் 'தமிழன் பிடி உடும்புப்பிடி'. பிடித்ததை உயிர்போனாலும் விடமாட்டான். அதுவே அவன் அழிவுக்கு காரணமானது யதார்த்தம். தமிழ் மெள்ளச் சாகும் என்கிறார்கள். அது தவறு தமிழ் மெள்ளக் கொல்லப்படுகிறது. ஆனையை வைத்து ஆனையைப் பிடிப்பதுபோல் தமிழனைக்கொண்டே தமிழ் கொல்லப்படுகிறது. :(    
 
Link to comment
Share on other sites

ஒவ்வொருவருக்கும் அவரவர் தாய்மொழி முக்கியமானது. அவரவர் மொழிகளுக்கு அவர்களுக்கே உரிய கெளரவத்தை கொடுத்து அந்த மக்களுக்கான உரிமைகளை அங்கீகரிக்கும் போது இந்த மொழியை படி அந்த மொழியை படி என்று கூற வேண்டிய அவசியமே இல்லை. மக்கள் தாமே விரும்பி தமது சகோதர மொழிகளை படிப்பாரகள். அதையே நாம் ஐரோப்பிய நாடுகளில் பார்க்கிறோம். ஆகவே மொழியை படி என்று அறிவுரை கூற முன்பு அவரவர் தாய்மொழிக்கு கெளரவம் கொடுக்கும் மனித பண்பை இந்திய ஆளும் வர்க்கத்தினர் கற்று கொள்ளட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூர்த்தி தான் கீழிருந்து கையேந்துவது போல் இலங்கைத்தமிழரையும் செய்யச் சொல்லுகிறது. பதவிக்காக என்னும் செய்யும் கூட்டம். நான் பேராதனை பல்கலைக்கழகத்திலிருந்த போதுகூட சிங்களம் கற்கவில்லை. இது என்னுடனிருந்த ஒரு சக தமிழ் மாணவருக்கு சங்கத்தை ஏற்படுத்தியது, ஏனேனில் அவர் practical classஇல் சக சிங்கள group matesஉடன் சிங்களம் கதைக்கத் தயாராக இருந்தார் ஆனால் நான் எல்லோரும் பொதுமொழியில் (English)கதைக்கவேண்டுமென்று வற்புறுத்தினேன். ஒரு சிங்கள மாணவனைத்தவிர மிகுதியானோர் என்னுடன் மிகவும் கோபமாக இருந்தார்கள். இது நடந்தது 1996 -2000 வரை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராசவன்னியன்- நீங்கள் சொன்ன 41% இந்தியை தாய்மொழியாக கொண்டோர் அளவு, ஆனால் மூர்த்தி சொல்லும் 50% இந்தி கற்றிருப்போரின் அளவு. இதில் தாய் மொழியாக கொண்டவர் + தமிழராய், பஞ்சாபியாய் பிறந்து ஹிந்தி பேசுவோரும் அடங்குவர். ஆக மூர்த்தி பிழையான தகவல் ஏதும் தரவில்லை.

நாம் சிங்களம் படிக்கத்தான் வேண்டும். தமிழ் மொழி எமது அடையாளம் அதை கைவிடமுடியாது. ஆனால் இன்னொரு மொழியை படிப்பதில் தப்பேதும் இல்லை.

சிங்களத்தை திணித்தால் எதிர்போம். தனி சிங்கள சட்டம் வந்தால் எதிர்ப்போம் அவை நியாயம். ஆனால் நாமாகவே ஒரு மொழியை ஒதுக்கி வைக்க கூடாது.

ரவிராஜ், மனோ கனேசன் போன்றோர் சிங்கள மக்களுக்கு சிங்களத்தில் எடுத்து சொன்ன எம் பிரச்சினையின் 1% ஐ கூட தனித்தமிழ்ச் சிங்கம் மாவை எடுத்து சொல்லவில்லை.

நாம் எம் உரிமைகளை வெல்ல தேவையான அரிய ஆயுதங்களில் மிக முக்கியமானது சிங்கள மொழி அறிவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூர்த்தியைத் துரத்தவேணும்.  பிச்சை வேணாம் நாயைப் பிடி.  துணைத் தூதரகமே தேவையில்லை.  இது பெரிய ஆபத்தில் கொண்டு போய்ச் சேர்க்கப்போகுது. 

உவர் சொல்லுறபடி செய்தால் இன்னும் பத்து வருசத்தில் தமிழ் தெரிந்தவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.  ஏன் ஆங்கில அறிவும் தமிழர்களிடமிருந்து இல்லாமற் போகும். 

நம்முடைய தமிழ் நாட்டில நாங்க எதுக்கு அண்டை நாட்டு மொழியைப் படிக்க வேணும்? விளங்கவில்லை! 

ஏலுமெண்டால் உவருடையதும் துணைத் தூதரகத்தினதும் பேச்சு செய்ல்களைக் கண்டித்து உடனடியாக உலகளாவிய ரீதியில் கண்டன ஈ மெயில்களை அனுப்ப யாழ் இணையம் நடவடிக்கையெடுக்க வேண்டும்.

அப்பப்பா இவ்வளவு சீரியசா இந்த விடயத்தை எடுத்துவிட்டீர்களா ஹா ஹா ஹா. calm calm. ......................dont be tension.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Why should we study another country's language. 

English is the international language.  Tamils should study English as well as Chinese Mandarin for our future benefits in the long run.  Why other languages? 

I think Mr. Moorthy from Jaffna Indian consulate should keep shut his mouth without uttering nonsense.  He is not here to advise the people.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்பும் இப்பவும் கொழும்பில் குப்பை கொட்டிய எம்வர்கள் சிங்களம் கதைப்பார்கள்.இப்ப தமிழ் கடைகளிலும்(வட பகுதி)சிங்களம் தொிந்தவர்களுக்கு வேலைக்கு முதலிடம்.தானாக செய்வது தவறு இல்லை.வற்ப்புறித்தினால் அது தவறு தான்.இதே மாதிரித்தான் குடியேற்றமும்.

கொழும்பில்  போய்

தமிழன் சிங்களம் கதைப்பதற்கு மாற்றீடு

சிங்களவன் யாழ்ப்பாணத்தில் தமிழில் கதைப்பதாகும்..

மற்றும்படி

தமிழரைப்பொறுத்தமட்டில்

மெல்ல மெல்ல முனுகல் குறைவடைந்து..

இறுதியில்.............?? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில்.. அதிகம் பேசப்படும் மொழிகளில் ஒன்றான தமிழை தான் சிங்களவர்கள் கற்றுக் கொள்ள ஆலோசனை வழங்க வேண்டும். செய்வார்களா "ஹிந்தி"ய வால்பிடிகள்..! :icon_idea::rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.