Jump to content

படித்துச் சிரித்தவை .5


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"என்னம்மா நீ... ஐந்து பவுன் நகையைத் திருட்டு
கொடுத்திட்டு 50 பவுன் நகையைத் திருடு
கொடுத்த மாதிரி எழுதச் சொல்றே?''
-
"அப்பதான் பேப்பர்லே போடுவாங்க. பக்கத்து
வீட்டுக்காரங்க என்னைப் பெருமையாப் பார்ப்பாங்க
இன்ஸ்பெக்டர்''
-
மா.மாரிமுத்து, ஈரோடு.
-

---------------------------------
-
"கம்பெனிக்கு ஆள் எடுக்குறவங்க ஏன் எல்லாரையும்
ஓடச் சொல்லிப் பார்க்கறாங்க?''
-
"அவங்க நடத்துறது ஏலச் சீட்டுக் கம்பெனி ஆச்சே''
-
ஆர்.எம்.வடுகநாதன், அகஸ்தியன்பள்ளி.
-

---------------------------------

(ரவுடியும் மனைவியும்)

""ஏங்க... இரண்டு போலீஸ்காரங்க வந்து கிசுகிசுன்னு
பேசிட்டுப் போறாங்க... என்ன சமாச்சாரம்... உம்?''
-
"ஒண்ணுமில்லடி...விலைவாசி எல்லாம் ஏறிப்போச்சு
கபாலி... பழைய மாமூலையே தர்றே.... போட்டுக்
கொடுன்னு கெஞ்சிட்டுப் போறாங்க''
-
ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்
.
-
---------------------------------

"பார் கவுன்சிலுக்குத் தலைவரைக் கூப்பிட்டது தப்பாப்
போச்சு''
-
"என்னாச்சு?''
-
""குடிக்க ஜில்னு பீர் கிடைக்குமான்னு கேட்டு
மானத்தை வாங்கிட்டாரே''
-

--------------------------------------
-
"மாப்பிள்ளை ஒன்றை இரண்டாக்குகிற வேலையில்
இருக்கிறாரா...புரியலையே''
-
"கல்யாண புரோக்கரா இருக்கார்''
-
எஸ்.சீதாராமன்,,மானூர்.

-
--------------------------
-
"மாடாய் உழைக்கிறேன்னு ஏங்க மேடையில்
பேசினீர்கள்?''
-
"என்னடி ஆச்சு?''
-
"கட்சி ஆபிஸில் இருந்து உங்களுக்கு எடைக்கு எடை
புண்ணாக்குத் தரப் போவதாகத் தகவல் வந்திருக்குங்க''
-
எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.
-

--------------------------------------
நன்றி: தினமணி கதிர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையைச் சொல்லுங்க முதலாவது   நகை   சுவை  உங்க வீட்டிலதானே...!  :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.