Jump to content

கடை... இடியப்பம் பற்றி, ஒரு அதிர்ச்சி தகவல்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

idiyaappam+Shop++Hotel+snacks++%E0%AE%95

கடை இடியப்பம் பற்றி, ஒரு அதிர்ச்சி தகவல்.

இடியப்பம் ஒரு நல்ல உணவு என்பதில் சந்தேகமே இல்லை. அதில் கொழுப்பும் இல்லை, அதிலும் அரிசிமாவு இடியப்பம் சக்கரை வியாதி உள்ளவர்கள் கூட சாப்பிடலாம் என்று கூறுவார்கள்.

ஆனால் இடியப்பத்தை விற்பனை செய்யும் . பெரும்பாலான கடைக்காரர்கள் இடியப்பத்தை எவ்வாறு தயாரிக்கிறார்கள் என்று நீங்கள் கேட்டால், இனிமேல் இடியப்பத்தை சாப்பிடவே மாட்டீர்கள் !

இடியப்ப மாவை குழைக்கும்போது, பிழிவதற்கு இலகுவாக இருக்கட்டும் என்று அதில் அதிகளவு எண்ணெயை கலக்கிறார்கள். அது சரி நல்ல எண்ணெய்தானே அதற்கு என்ன என்று கேட்கிறீர்களா ? அதுதான் இல்லை. சமையல் செய்து, அல்லது பொரித்த பின்னர் மிஞ்சும் எண்ணெயை அல்லவா அந்த இடியப்ப மாவில் கலக்கிறார்கள். இதில் 2 விஷயங்கள் உள்ளது.

ஒன்று லேசாகப் பிழியலாம் மற்றோன்று இடியப்பத்துக்கு ஒரு பிரவுன் நிறக் கலர் வருகிறது.

இவ்வாறு நிறைய எண்ணெயைக் கலந்து செய்யும் இடியப்பம் லேசில் காய்ந்துவிடாது. பாலிஷ் பண்ணியதுபோல காயாமல் கனநேரம் இருக்கும்.

ஆனால் எண்ணெய் ஊற்றிச் செய்வதால், இவ்வகையான இடியப்பத்தில் அதிக கொழுப்பு காணப்படுகிறது.

அதுமட்டுல்லாமல் பொரித்த எண்ணையைப் பயன் படுத்துவதால் அக்கொழுப்பில் கொலஸ்ட்ராலும் அதிகளவு இருக்கும்.

கொலஸ்ட்ரால் உள்ள அந்த எண்ணையை இடியப்ப மாவில் கலந்து அவிப்பதால் அது மீண்டும் சூடாகி அதிகப்படியான கொழுப்பை உருவாக்கும்.

இதனால் உடம்பிற்கு நல்ல உணவு என்று நாம் நம்பி உண்ணும் உணவு நமக்கே தொந்தரவாகி விடுகிறது.

எல்லாக் கடைகளிலும் இவ்வாறு எண்ணையைக் கலந்து இடியப்பம் தயாரிக்கப்படுவது இல்லை என்கிறார்கள்.

ஆனால் பல கடைகளில் இதுதான் நடக்கிறது. அப்படி ரெடி செய்த கடையில்தான் நீங்கள் இடியப்பத்தை வாங்கும் நபராகவும் இருக்கலாம் அல்லவா ? அதனால்தான் எச்சரிக்கை!.

ந‌ன்றி: itamilaa

எழுத்துப் பிழை திருத்தப்பட்டது.

Link to comment
Share on other sites

மற்றோன்று இடியப்பத்துக்கு ஒரு பிரவுன் நிறக் கலர் வருகிறது.

தற்போது விற்கப்படும் அரிசி மா அரிசி மாவுக்கே இல்லாத ஒரு நிறத்தில் வருகிறதாம். கபில நிறம் என கேள்விப்பட்டேன். இந்நிறம் வரவும் கலவை ஒன்று கலக்கப்படுகிறதாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் இடியப்ப மெசினில் பிழிவதால் இறுக்கத்தைத் தளர்த்துவதற்கு எண்ணை சேர்க்கினம் என நினைக்கின்றேன்...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இது இலங்கையில் உண்மை.
 
இங்கே அப்படி செய்வதற்கு சாத்தியம் இல்லை. ஏனெனில் பிழிவது மெசின் அல்லவா..
 
மேலும், அங்கே கிடைக்காத தரமான மா எல்லாம் இங்கே கிடைகிறது. பின்னர் எதுக்கு நிறத்தினைப் பற்றி கவலை?
Link to comment
Share on other sites

இங்கு எண்ணெய் கலப்பதற்கு இன்னொரு காரணம் நீண்ட நேரத்திற்கு வைத்திருக்கலாம்.

இங்க ஒரு கடையில வடை பொரிச்ச எண்ணெய்யை மிஞ்சிய கொத்துரோட்டிக்குள் ஊற்றி வைத்து அடுத்த நாள் எடுத்து திருப்பி சூடாக்கி கொடுக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தவிடயம் உண்மைதான் ஏனெனனில் நாங்கள் வீட்டில் இடியப்பம் அவிக்கும்போது மாவை குழைக்க சிறிதளவு மாஜரின் அல்லது நல்லெண்ணெய் சேர்ப்போம் கடை இடியப்பத்தில் நல்லெண்ணெயையோ, மாஜரினையே எதிர்பார்க்கமுடியாது. அத்தோடு பதப்படுத்தப்பட்டு பொதி செய்யப்படும் அரிசி மாவிலும் நிறக்கலவை சேர்க்கப்படுகிறது. ஆதலால் அரிசிமா தனது இயல்பான நிறத்தை இழந்து போலி நிறத்திற்கு மாறுகிறது. அதே போல இங்கு கடைகளில் விற்கப்படும் மிளகாய்த்தூள்களும் நிறைய கலப்பு கொண்டதாக உள்ளது...

இப்போதெல்லாம் சிவனே என்று மிளகாய்த்தூளை நானே செத்தல் மல்லி மற்றும் சரக்குகளை வாங்கி வறுத்து திரிக்கப்பழகிவிட்டேன் மாவும் எனக்குத் தெரிய பலர் திரித்து எடுக்கிறார்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதைத்தான் இடியப்பச் சிக்கல் என்பார்கள்
தகவலுக்கு நன்றி சிறியர் :D :D :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைச் சாப்பாட்டை நினைக் க    பயமாய் இருக்கே.  ஒவ்வொரு தூளும் ஒவ்வொரு மாதிரி... :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில உண்மைகளை, நாம் கவனத்தில் எடுக்க மறந்து விடுகின்றோம்!

இடியப்பம் மட்டுமல்ல, 'மிளகாய்த்தூள்' வாங்குவதிலும், நாம் கவனமாக இருக்கவேண்டும்...!  நிறத்துக்காகவும், காரத்துக்காகவும் பல விதமான இரசாயனப் பொருட்களும், கழிவுத் திராவகங்களும், கலக்கப்படுகின்றன எனக் கூறுகின்றார்கள்!

நல்ல ஒரு இணைப்பு, தமிழ் சிறி!

பொழுது போகாமல்,

ஆற்றங் கரையிலிருந்து,

சிறு கற்கள் பொறுக்கி,

ஆற்றில் எறிந்து .....,

வீண் பொழுது போக்குகிறாய்?

அரிசியில் கலப்பதற்கு,

என்னிடம் கற்களைத் தா..!

பணம் தருகின்றேன்..! :o

இது தானே, எமது வியாபார இரகசியம்...! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காசுள்ளவர்கள் இவை திரிக்கும் மிசினை வாங்கி வீட்டில் திரித்தாப் போயிற்று.  என்ன ஒண்டு, மிளகாய் திரிக்கும்போது பக்கத்து வீட்டுக்காரங்கள் பொலிசுக்கு அடிக்காமல் வேண்டிக் கொள்ள வேணும்.   இதுகளை வெளியிலை குடுத்தும் திரிச்சுக் கொள்ளலாம்.  அதிலையும் மிசினுகளை வடிவாக் கழுவுவினமோ எண்டும் பாக்க வேணும்.  மிளகாயத்தூள் திரிக்கிற மிசினுக்குள்ளேயே அரிசிகளையும் திரிக்காமல் இருக்க வேணும்.

இப்ப சாப்பிடுற காய்கறிகள், பழங்களுக்குள்ளேயே இராசயனம் இருக்கும்போது, இவை ஒண்டும் பெரிய விசயமில்லை.

Link to comment
Share on other sites

குற்றம் பார்க்கில் (இடி) அப்பம் இல்லை..  :lol:

Link to comment
Share on other sites

இதுக்குத்தான் நாங்கள் ஸ்பகடி, பாஸ்டா, பீசா, மக்ரோனி என்று போய்ட்டம்.... ரமில்ஸ் தான் இன்னமும் இடியப்பம்ஸ் சாப்டினம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குத்தான் நாங்கள் ஸ்பகடி, பாஸ்டா, பீசா, மக்ரோனி என்று போய்ட்டம்.... ரமில்ஸ் தான் இன்னமும் இடியப்பம்ஸ் சாப்டினம்..

எந்தப்பொருளும்  உணவகங்களில் தயாரிக்கப்படும் போது

சிக்கனம்

நீண்ட ஆயுள் (வாடிக்கையாளர்களது அல்ல :( )

நேரமிச்சம்

வித்தியாசமான ருசி(எதைக்கலந்தாவது)

அத்துடன் அதிகம் விற்கப்படவேண்டும் என்றால் அதற்கான கலவையும்

எவ்வளவு தான் எடுத்தாலும் விலை  ஒன்றுதான் என்றால் அதிகம் எடுக்காதபடி கலவையும் உண்டு..

இதில் இடியப்பம் மட்டுமல்ல

நீங்கள் சொல்லும் ஆட்கள்தான் அதிகம் அறிவுயீவிகள் (மக்களைச்சுட :D )

ஹி ஹி...சும்மா தமாசு

உண்மையில் ஸ்பகடிக்கும் நூடுல்ஸ் இற்கும் இடையில் வித்தியாசம் கண்டு பிடிக்க கூட கஷ்டப்படுற ஆள் நான்... 

வாரத்தில் இரண்டு நாட்களாவது இடியப்பம் தான்.   மார்க்கம் பகுதியில் இருக்கும் ஒரு நம்பிக்கையான உணவு விடுதியில் தான் வாங்குவது. மற்றக் கடைகளை விட அங்கு ஒரு டொலர் அதிகமாக வைத்து விற்பார்கள். அசல் அரிசிமா இடியப்பம். 

அதிகமாக இந்த நூடுல்ஸ் சீனாவிலிருந்து வருவதால்

அங்கு அது கைத்தொழிலாக  செய்யப்படுகிறது என்று கேள்விப்பட்டது  முதல்

அது கையில் நழுநழுத்தால்

என் மனம் எதையோ  எல்லாம் நினைக்கும்... :D  :D

Link to comment
Share on other sites

அண்மையில் ஒரு நூடில்ஸ் பொதி வாங்கினேன். வீட்டில் சமைத்தும் ஆகிவிட்டது.. சாப்பிடும்போது என்னடா தடக்குப் படுதே என்று பார்த்தால் அரை இஞ்ச் ஆணி இருந்தது. :o இது சமைக்கும்போது விழுந்திருக்க சந்தர்ப்பமே இல்லை.. ஏனென்றால் அந்த வகை ஆணி என்னிடம் இல்லை.. :huh:

அதே பொதியினுள் ஆணியைப் போட்டு, வாங்கின கடையில் சென்று கொடுத்துவிட்டு வந்தேன். நூடில்ஸ் வயிற்றுக்குள் போய்ட்டுது.. :D

கயானா நாட்டில் இருந்து இறக்குமதியானது என நினைக்கிறேன்.

நீங்கள் சிறிய பைக்கட் நூடில்ஸ் வாங்கினால் அதற்குள் அரை இஞ்ச் ஆணிதான் போட்டுத்தர முடியும். அஞ்சு இஞ்ச் ஆணிபோட்டால் கம்பனிக்கு நட்டம்...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் ஒரு நூடில்ஸ் பொதி வாங்கினேன். வீட்டில் சமைத்தும் ஆகிவிட்டது.. சாப்பிடும்போது என்னடா தடக்குப் படுதே என்று பார்த்தால் அரை இஞ்ச் ஆணி இருந்தது. :o இது சமைக்கும்போது விழுந்திருக்க சந்தர்ப்பமே இல்லை.. ஏனென்றால் அந்த வகை ஆணி என்னிடம் இல்லை.. :huh:

அதே பொதியினுள் ஆணியைப் போட்டு, வாங்கின கடையில் சென்று கொடுத்துவிட்டு வந்தேன். நூடில்ஸ் வயிற்றுக்குள் போய்ட்டுது.. :D

கயானா நாட்டில் இருந்து இறக்குமதியானது என நினைக்கிறேன்.

வடிவாக  உங்களை  செக் பண்ணினீர்களா  ராசா....?? :lol:  :D  :D

(கயானா நாட்டில் இருந்து இறக்குமதியானது  என்பதால் அங்கு 1/2 இஞ்சி  இராது :icon_mrgreen: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெந்தயம் போட்டுக் கறி சமைக்கிற ஆக்களும் கவனம்
100 கிராம் வெந்தயத்துக்குள்ளை குறைஞ்சது 40 கிராம் கல்லுக் கிடக்குது.
வெந்தயத்தைத் தண்ணிக்குள் ஊறவிட்டுப் பார்த்தால் தெரியும் கல்லின் மகிமை :D :D :lol:

Link to comment
Share on other sites

வடிவாக  உங்களை  செக் பண்ணினீர்களா  ராசா....?? :lol:  :D  :D

(கயானா நாட்டில் இருந்து இறக்குமதியானது  என்பதால் அங்கு 1/2 இஞ்சி  இராது :icon_mrgreen: )

அண்மையில் ஒரு நூடில்ஸ் பொதி வாங்கினேன். வீட்டில் சமைத்தும் ஆகிவிட்டது.. சாப்பிடும்போது என்னடா தடக்குப் படுதே என்று பார்த்தால் அரை இஞ்ச் ஆணி இருந்தது. :o இது சமைக்கும்போது விழுந்திருக்க சந்தர்ப்பமே இல்லை.. ஏனென்றால் அந்த வகை ஆணி என்னிடம் இல்லை.. :huh:

அதே பொதியினுள் ஆணியைப் போட்டு, வாங்கின கடையில் சென்று கொடுத்துவிட்டு வந்தேன். நூடில்ஸ் வயிற்றுக்குள் போய்ட்டுது.. :D

கயானா நாட்டில் இருந்து இறக்குமதியானது என நினைக்கிறேன்.

முன்னெச்சரிக்கை முனுசாமி.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னெச்சரிக்கை முனுசாமி.. :D

பாவம்

யாரு  வீட்டில் விவாகரத்தோ..... :lol:  :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கோதாரியெண்டு தெரியேல்லை.........இடியப்பம் எண்டவுடனை எனக்கு கனடா ஞாபகம்தான் வருது mad0228_zps796feb76.gif

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.