Jump to content

புனித வாரம்...


Recommended Posts

புனித வாரம்
 

கிறிஸ்தவ மக்கள் இந்த வாரத்தை புனித வாரமாக கொண்டாடுகின்றனர். அதிலும் சிறப்பாக வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களை சிறப்பான நாட்களாகக் கருதிக் கடைப்பிடிக்கிறார்கள். அவர்கள் ஆண்டவராகவும், அரசராகவும், மீட்பராகவும் போற்றி வணங்கும் இயேசுவின் வாழ்வில் நிகழ்ந்த முப்பெரும் நிகழ்ச்சிகளை இந்த மூன்று நாட்களும் நினைவுக்கூறுகின்றனர்.

இன்றைய நாளை பெரிய வியாழன் என்று அழைக்கின்றனர். இயேசு, தான் வாழ்ந்துக்காட்டவந்த இறையன்பை முழு அளவில் வெளிப்படுத்த மேற்கொள்ளவிருக்கும் சிலுவைச் சாவிற்கு முன்னுரை எழுதிய நாள்தான் இந்த நாள். தான் சிலுவைச் சாவைநோக்கி செல்லும்முன் தாம் அன்புக்கூர்ந்த நண்பர்களை இறுதிவரை அன்புக்கூர்ந்து அவர்களோடு இறுதியாக பந்தி அமர்கிறார். தன் மரணத்திற்குபின் தன்னை மறந்துவிடாதவண்ணம் அந்த விருந்தாடலையே தன் நினைவாக அவர்களுக்கு கொடுத்து அதனை அவர் நினைவாக செய்யும்படி பணிக்கிறார். பசியால்வாடுவோருக்கு இறைவன் தோன்றினால் உணவாகத்தான் தோன்றவேண்டும் என்று மகாத்மா காந்தி சொன்ன வாக்கை மெய்ப்பிப்பதைப்போல் உள்ளது. அதோடு நில்லாமல், ‘நான் உங்களை அன்பு செய்ததுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செய்யுங்கள்,’ என்று ஒரு புதிய கட்டளையாக பிரப்பிக்கிறார். இங்கு தான்னுடைய அன்பையே பிறரன்புக்கு ஒரு இலக்கணமாகத் தருகிறார். அவர் எப்படி அன்பு செய்தார் என்று பார்க்கும்போது, இந்த விருந்தின்போது நடந்த ஒரு நிகழ்வே அதனை தெளிவுப்படுத்துகிறது.

washing the feet அந்த பந்தியிலிருந்து எழுந்து அடிமைகளேச் செய்யத்தகுந்த பாதம் கழுவும் பணியை செய்கிறார். அதற்கு காரணம் அவருடைய நண்பர்கள் தங்களுள் யார் பெரியவர் என்ற தர்க்கத்தில் ஈடுப்பட்டு, அதிகாரப் பகிர்விற்காக போட்டியும் பொறாமையும் கொண்டவர்களாக நடந்துக்கொண்டிருந்தனர். அவர்களுள் ஒருவரும் முன்வந்து பிறருடைய பாதத்தைக் கழுவும் மனநிலையில் இருக்கவில்லை. மொத்தத்தில் அது ஒரு அன்பற்ற சூழலாக இருந்தது எனலாம். அந்த தருணத்தில்தான் இயேசு தாமாக முன்வந்து தன் நண்பர்களுடையப் பாதங்களை கழுவுகிறார். அதில் நல்லவர் கெட்டவர் என்ற எவ்விதப் பாகுபாடுமின்றி எல்லோரையும், தன்னைக் காட்டிக்கொடுக்கவிருந்த யூதாஸின் பாதத்தையும் கழுவி முத்தமிடுகிறார்.

அன்பு என்பது ஆண்டான் அடிமை, உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற உறவில் நிலைக்கொள்ளும் ஒன்றல்ல என்றாலும், போட்டியும் பொறாமையும் அன்பர்கள் மத்தியில் தலைதூக்கும்போது அதற்கு ஒரே அருமருந்து தாழ்ச்சியாகும். ஆசையும் மோகமும் தூண்டும் மனதாராளமும், சகிப்புத்தன்மையும் அறுபது கூட்டல் முப்பது மொத்தம் தொன்னூறு நாட்களோடு மங்கிப்போகிறது என்பது நமக்குத் தெரிந்த ஒரு வாழ்க்கை எதார்த்தமாகும். அத்தகைய வாழ்க்கை எதார்த்தத்தின்போது அன்பை இன்னும் வளரச்செய்வது அன்பர்கள் மத்தியில் முளைத்தெழும் தாழ்ச்சியாகும். ஆசையையும் மோகத்தையும் கடந்து தாழ்ச்சிக்கலந்த, தியாகம் நிறைந்த பிறரைத் தன்னிலும் சிறந்தவராக கருதும் நேரம்தான் உண்மையான அன்பு மலர்கிறது. அன்பு தாழ்ச்சியோடு கைகோர்க்கும்போதுதான் அது நிறைவு தருவதாகவும், பிறரை வாழவைப்பதாகவும் இருக்கமுடியும். என் வசதி, என் நிறைவு, என் மகிழ்ச்சி, என் விருப்பம் என்றுமட்டும் வாழும் வாழ்க்கை வெறும் என்புதோல் போர்த்த உடம்பாகவே இருக்கும். பாதம் கழுவுதல் பிறரை உயர்வாக கருதிப்போற்றும் ஒரு செயலாகும். உயர்வு என்பது நமக்கு கீழ் எத்தனைப்பேர் இருக்கின்றனர் என்பதைக் கொண்டு கணிக்கப்படும் ஒன்றல்ல, என்னால் எத்தனைப்பேர் உயர்த்தப்படுகின்றனர் என்பதைப் பொறுத்துள்ளது. பணிவிடைச் பெறுவதிலன்று பணிவிடைச் செய்வதிலேயே மேன்மை அடங்கியுள்ளதென்று உணர்வோமா?
பெரிய வெள்ளி

இன்று இயேசு சிலுவையில் கொல்லப்பட்ட நாள்! இந்த நாள் புனித வாரத்தின் பெரிய வெள்ளி, நல்ல வெள்ளி, புழழன குசயைனயல என்று அழைக்கப்படுகிறது. சாவு ஒன்று நடந்தேறிய நாள் இது. அதுவும், அநியாயமாய் குற்றம் சாட்டப்பட்டு, அவரது அறச்செயல்கள் அரசியல் ஆக்கப்பட்டு, கலகக்காரனாக ஜோடிக்கப்பட்டு, நீதி துறையை வளையவைத்து, மதத்தலைவர்கள் திட்டமிட்டுச் செய்தக் கொலை. இந்த சாவு நிகழ்ந்த நாளைத்தான் ‘நல்ல வெள்ளி’ என்கின்றனர் கிறிஸ்தவர்கள். அந்த நாளில் அவருக்கு நடந்த ஒவ்வொன்றையும் கருத்தில் கொண்டால் நல்லது என்று எதுவும் இருக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். எனவே, நல்ல வெள்ளி என்று சொல்வது சற்றும் பொருந்தாத ஒன்றாகவே இருக்கும்.

way of crossநமது வாழ்வில் நம்மைக் கேட்டுக்கொள்ளாமல் நமக்கு நடக்கின்றவைகளைக் கொண்டுமட்டுமே நமது நாட்களை நல்லது கெட்டது என்று பிரிப்போமென்றால் நல்லவைமீது நாம் கொண்டிருக்கும் அதிகாரத்தை கேள்வி குறியாக்குவோம். இயேசு கொலை செய்யப்பட்ட நாளை நல்லதாக மாற்றியது என்ன? அல்லது, அவர் தான் கொல்லப்பட்ட நாளை நல்லதாக ஆக்க என்ன செய்தார்?

முதன்முதலில் அவர்மேல் அவிழ்த்துவிடப்பட்ட கொலைவெறித்தாக்குதல் அவர் எதிர்பாராத ஒன்றல்ல. அவர் நீதிக்காகவும், நேர்மைக்காகவும், உண்மைக்காகவும் அன்பிற்காகவும் எடுத்த தீர்க்கமான நிலைப்பாடு அவரை இந்த முடிவுக்கு இட்டுச் செல்லும் என்பதை நன்கு அறிந்து சாவதே என்றாலும் தன் பணியிலிருந்து விலகுவதில்லை என்று நீடித்து நிலைதிருந்தது இந்த வெள்ளியை நல்ல வெள்ளியாக்கிற்று.

வியர்வை இரத்தமாக கொட்டுமளவுக்கு அவர் கலக்கமுற்று இந்த துன்பக் கலம் தன்னைவிட்டு அகலாதா என்று மன்றாடினாலும், அவர் வெறுப்புணர்ச்சியும், கசப்பு உணர்வும் தன்னை மேற்கொள்ள விடவில்லை. அவரது சாவு சம்பவத்தில் உடல் வலி, மன வேதனை இருந்தன, ஆனால் மகிழ்ச்சிக்கே இடமில்லாமல் போகவில்லை. அப்படி என்றால் அவர் சிரித்துக்கொண்டு பாடுகளை அனுபவித்தார் என்று சொல்வதன்று. பல சமயங்களில் சிரிப்பொலிக்குப்பின்னும், கொண்டாட்டகங்களுக்குபின்னும் சொல்லில்வராத சோகங்கள் மறைந்திருப்பதையும் நாம் அறிவோம். வேதனை எப்போதும் சோகத்தின் வெளிப்பாடாக இருக்கவேண்டும் என்பதல்ல. கடின உழைப்பில் அடங்கியிருக்கும் வேதனை வெற்றிப்பெற கொடுக்கும் விலை என்றிருக்கும்போது மகிழ்ச்சித்தான் மிஞ்சும் அன்றோ! இயேசுவைப்பொறுத்தமட்டில் அவர் தனக்கு நேர்ந்த சாவை ஒரு சோக சம்பவமாகக் கொள்ளாமல், இறையாட்சி விழுமியங்கள் வளர்ந்து பலன்தர தன் இன்னுயிர் உரமாகிறது என்ற தெளிந்த உணர்வோடு மேற்கொண்ட அனுபவமாகும். இவ்வாறு இந்த சோகம் நிறைந்த வெள்ளியை அவர் நல்ல வெள்ளியாக மாற்றினார்.

அவருக்கு அன்று இழைக்கப்பட்ட வேதனையும், அவமானமும் அதிகாரவர்க்கத்தினரால் பலநாட்களாக வெகு நுணுக்கமாக திட்டம்தீட்டி, வேண்டுமென்றே தன்மேல் திணிக்கப்பட்டவை என்று அவர் நன்கு அறிந்திருந்தார். இருப்;பினும், அதனை நம்ப விரும்பாமல் அவர் தனது துயரத்தின் உச்சக்கட்டதில், விண்ணிற்கும் மண்ணிற்குமிடையே மூன்று ஆணிகளால் பிணைக்கப்பட்டு சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்தபோது தன்னை வதைத்தவர்களுக்காக, “பிதாவே இவர்களை மன்னியும், இவர்கள் அறியாமல் செய்கிறார்கள்’ என்று மன்றாடி கோபமும் கசப்பும் நிறைந்த அந்த சூழலில் அன்பை பொழிந்து உலக வரலாற்றில் ஒரு அன்பு புரட்ச்சிக்கு வித்திட்டார். இதனால், அந்த அக்கிரமம் நிறைந்த வெள்ளி நல்ல வெள்ளியாயிற்று.

தீதும் நன்றும் பிறர்தர வாரா என்ற சான்றோரின் மொழியின்படி நமது வாழ்வையும் அதில் உள்ளவைகளையும் நிகழ்பவைகளையும் நல்லதாகவோ கெட்டதாகவோ ஆக்குவது நம்மைத் தவிர வேரொன்றுமில்லை என்று கற்றுக் கொள்வோமா?.
பெரிய சனி

கிறிஸ்தவ மக்கள் நேற்றய தினத்தை பெரிய வெள்ளியாக கொண்டடினர். புனித சனி என்ற இன்று அவர்கள் மரித்த இயேசுவின் உயிர்ப்புக்காக காத்திருப்பர்.

இயேசு, தான் வாழ்ந்துக்காட்டவந்த இறையன்பை முழு அளவில் வெளிப்படுத்தவே தன்னுயிர் துறந்து சிலுவையில் மரித்தார். happy easter ஒரு கவிஞன் தன் கற்பணையில் எழுந்த ஒரு காட்சியை இப்படி எழுதுகிறார்: இறைவனிடததில், ‘நீர் என்னை எவ்வளவு அன்பு செய்கிறேன் என்று கேட்டேன். அவர் இரண்டு கைகளையும் அகல விரித்து, ‘இவ்வளவு அன்பு செய்கிறேன் என்று காட்டி சிலுவையில் கைகளை விரித்து மரித்தார்.’ தான் சிலுவைச் சாவைநோக்கி செல்லும்முன்பே தாம் அன்புக்கூர்ந்த நண்பர்களை இறுதிவரை அன்புக்கூர்ந்து அவர்களோடு இறுதியாக பந்தி அமர்ந்து தன் அன்பை வெளிப்படுத்த முற்பட்டார். அந்த விருந்தாடலையே தன் நினைவுச் சின்னமாக அவர்களுக்கு கொடுத்து அதனை அவர் நினைவாக செய்யும்படி பணித்தார். இதனையே இன்றும் கிறிஸ்த்தவர்கள் நற்கருணைப் பலியாக கொண்டாடிவருகின்றனர்.

அதோடு அவர் நில்லாமல், ‘நான் உங்களை அன்பு செய்ததுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செய்யுங்கள்,’ என்று ஒரு புதிய கட்டளையைப் பிரப்பிக்கிறார். இவ்வாறு தன்னுடைய அன்பையே பிறரன்புக்கு ஒரு இலக்கணமாகத் தருகிறார். அவருடைய அன்பு எத்தன்மையினாதாக இருந்தது? அந்த விருந்தின்போது நடந்த ஒரு நிகழ்வே நமக்கு அதனை தெளிவுப்படுத்துகிறது. அந்த பந்தியிலிருந்து அவர் எழுந்து அடிமைகளேச் செய்யத்தகுந்த பாதம் கழுவும் பணியை செய்கிறார். அதற்கு காரணம் அவருடைய நண்பர்கள் தங்களுள் யார் பெரியவர் என்ற தர்க்கத்தில் ஈடுப்பட்டு, அதிகாரப் பகிர்விற்காக போட்டியும் பொறாமையும் கொண்டவர்களாக நடந்துக்கொண்டிருந்தனர்.

அவர்களுள் ஒருவரும் முன்வந்து பிறருடைய பாதத்தைக் கழுவும் மனநிலையில் இருக்கவில்லை. மொத்தத்தில் அது ஒரு அன்பற்ற சூழலாக இருந்தது எனலாம். அந்த தருணத்தில்தான் இயேசு தாமாக முன்வந்து தன் நண்பர்களுடையப் பாதங்களை கழுவுகிறார். அதில் நல்லவர் கெட்டவர் என்ற எவ்விதப் பாகுபாடுமின்றி எல்லோரையும், தன்னைக் காட்டிக்கொடுக்கவிருந்த யூதாஸின் பாதத்தையும் கழுவி முத்தமிடுகிறார்.

அன்பு என்பது ஆண்டான் அடிமை, உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற சூழலில் மலரும்; ஒன்றல்ல என்றாலும், போட்டியும் பொறாமையும் அன்பர்கள் மத்தியில் தலைதூக்கும்போது அதற்கு ஒரே அருமருந்து தாழ்ச்சியாகும். ஆசையும் மோகமும் தூண்டும் மனதாராளமும், சகிப்புத்தன்மையும் அறுபதோ முப்பதோ நாட்களோடு மங்கிப்போவிடுவன என்பது நமக்குத் தெரிந்த ஒரு வாழ்க்கை எதார்த்தமாகும். அத்தகைய வாழ்க்கை எதார்த்தத்தின்போது அன்பை இன்னும் வளரச்செய்வது அன்பர்கள் மத்தியில் முளைத்தெழும் தாழ்ச்சியாகும். ஆசையையும் மோகத்தையும் கடந்து தாழ்ச்சிக்கலந்த, தியாகம் நிறைந்த பிறரைத் தன்னிலும் சிறந்தவராக கருதும் நேரம்தான் உண்மையான அன்பு மலர்கிறது. அன்பு தாழ்ச்சியோடு கைகோர்க்கும்போதுதான் அது நிறைவு தருவதாகவும், பிறரை வாழவைப்பதாகவும் இருக்கமுடியும். என் வசதி, என் நிறைவு, என் மகிழ்ச்சி, என் விருப்பம் என்றுமட்டும் வாழும் வாழ்க்கை வெறும் என்புதோல் போர்த்த உடம்பாகவே இருக்கும். பாதம் கழுவுதல் பிறரை உயர்வாக கருதிப்போற்றும் ஒரு செயலாகும். உயர்வு என்பது நமக்கு கீழ் எத்தனைப்பேர் இருக்கின்றனர் என்பதைக் கொண்டு கணிக்கப்படும் ஒன்றல்ல, என்னால் எத்தனைப்பேர் உயர்த்தப்பட்டுள்ளனர் என்பதைக் கொண்டு கணிக்கப்படவேண்டிய ஒன்று. பணிவிடைப் பெறுவதிலன்று பணிவிடைச் செய்வதிலேயே மேன்மை அடங்கியுள்ளதென்று உணர்வோமா?

 

அருட்திரு தந்தை திவாகர் க.ச.

http://anbinmadal.org/holyweek.html

 

http://www.youtube.com/watch?v=vzSkIOWd_0M

Link to comment
Share on other sites

  • 11 months later...

நாளை பெரிய வியாழன் இறுதி இராப்போசன நாள்

 

உலகெங்கும் வாழும் கத்தோலிக்கர்கள் கிறீஸ்தவர்களினால் நாளை பெரிய வியாழன் எனப்படும் புனித வாரத்தின் யேசுக்கிறிஸ்துவின் இறுதி இராப்போசன நிகழ்வு அனுஸ்டிக்கப்படுகின்றது.
நற்கருணை அன்பின் வெளிப்பாடு; அருள் வாழ்வின் ஒற்றுமையின் சின்னம்; வாழ்வின் மையம், ஆன்மீக உறவு என்றெல்லாம் அழைக்கப்படுகின்றது.
உலகின் மீது அன்பு கொண்ட இறைவன் தன் ஒரே மகனை உலகின் மீட்புக்காக உலகிற்கு அனுப்பினார். அன்பே உருவான இயேசு தம் வாழ்வாலும் வார்த்தையாலும் அன்பை வெளிப்படுத்தினார். இவ்வுலக மனிதர்கள் நாம் செய்யும் பாவங்களுக்காக யேசு இறைவனின் சித்தத்தை ஏற்று தன்னையே பலிக்கடாவாக்கினார்.

இயேசு ஒருவரே சொன்னதை செய்தவரும் செய்ததை சொன்னவராகவும் திகழ்கின்றார்.
உலகம் முடியும் வரை எந்நாளும் உங்களோடு கூட இருப்பேன் என்று சொன்னவர், இறுதியில் அன்பின் சின்னமாக தமது இருப்பின் அடையாளமாக நற்கருணையை ஏற்படுத்தினார். இது பெரிய வியாழன் அன்று நடைபெற்ற புனிதமான நிகழ்ச்சியாகும்.

மனிதம் மலர வேண்டும் மானுடம் வாழ வேண்டும் என்பதே இறை மகன் இயேசுவின் இலட்சியக் கனவு. கூடி வாழவும் பகிர்ந்து கொள்ளவும் பணித்தார். யேசுகிறிஸ்துவின் பிரசன்னமே நற்கருணை பிரசன்னம். உலக இறுதி வரை வாழ்வோம்.அனைவரும் மீட்புபெற நற்கருணையை உண்டாக்கினார். அநீதியும் அடக்குமுறையும் அதிகார அத்துமீறல்களும் ஒடுக்குவதும் ஓதுக்குவதும் அறவே இல்லாத ஒரு புதிய சமுதாயத்தைப் படைக்கவே இயேசு தன்னை அர்ப்பணித்தார்.

இயேசு தன்னுடைய மூன்றாண்டு காலப் பணிவாழ்வில் தன்னோடு இணைத்துக் கொண்ட பன்னிரு நண்பர்களோடு கடைசி இராப்போசனத்தை உட்கொண்டார். வாக்களித்தபடியே தாம் இவ்வுலகினின்று தந்தையிடம் செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது என்று இயேசு அறிந்திருந்தார். இராப்போசனம் நடைபெறலாயிற்று.
இயேசுவைக் காட்டிக் கொடுக்குமாறு சீமோனின் மகனான யூதாஸ் இஸ்காரியோத்தை ஏற்கவே பசாசு தூண்டியிருந்தது.நண்பர் என்ற சொல்லுக்கு அர்த்தங்கள் ஆயிரம். நாம் இயேசுவை மறுதலித்தாலும் அவரை விட்டுப் பிரிந்தாலும் அவர் நம்மை வெறுப்பதில்லை. மாறாக அவர் நம்மை என்றும் தம் குழந்தைகளாகவே வாழ்விக்கின்றார். வழிநடத்துகின்றார். இறைமகனுக்கு ஏற்ற வாழ்வு நம்மிடம் இருக்கிறதா…? நாம் வாழும் சமூகத்தில் மற்றவர்களை நம்மிடம் பழகுபவர்களை எத்தனை இடர்ப்படுத்தியிருக்கின்றோம்..? நிந்தனை செய்திருக்கின்றோம்…….? மறுதலித்திருக்கின்றோம்…..? இவற்றை எல்லாம் நாம் விட்டுவிட வல்ல தேவன் நமக்கு மன்னிப்பு அளித்து நமக்கு புதுவாழ்வு தந்திடுவார்.

இன்றைய இராப்போசன நிகழ்விலே யேசு தம் சீடரின் பாதங்களை கழுவிக் கொள்கின்றார். தன்னையே தாழ்த்தி தன் சீடர்களுக்கு பணிவிடை செய்கின்றார் மனுமகன்.நம்மவர்களில் எத்தனை பேர் இந்தத் தாழ்மையை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனநிலையில் வாழ்கின்றோம். நவநாகரீகமான உலகிலே நம்மை நமது ஆளுமையை பணத்தை செல்வாக்கை காட்டி உலகில் பகட்டு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இவற்றை எல்லாம் நாம் விட்டு விடக்கூடிய மனவலிமையையும் தேவையுள்ளோருக்கு பணி;விடை செய்யக்கூடிய மனத்தாழ்ச்சியையும் இறைமகன் யேசுவிடம் வேண்டி நிற்போம்.
இன்றைய காலகட்டத்தில் குருத்துவத்திற்கான அழைப்பு நிலைகள் அருகி வரும் நிலையையே நாம் காணக்கூடியதாக உள்ளது. லௌகீக வாழ்வை மறுத்து இறைவனுக்கு சேவை செய்யக்கூடிய குருக்கள் கன்னியாஸ்திரிகளுக்கான அழைப்பின் தேவை உலகிலே பெருகி வருகின்ற நிலையில் இந்தத் தேர்வுகளுக்கு ஏற்ற பணியாளர்கள் உலகில் அழைக்கப்பட வேண்டி நிற்போம்.

அத்துடன் இந்த இறைபணியில் இதுவரை சேவையாற்றிக் கொண்டிருக்கும் ஆயர்கள்;, அருட்தந்தையர், அருட்சகோதரிகள் தத்தம் பணியினை செவ்வனே ஈடுபடக்கூடிய உடல் உள வலிமையை அவர்களுக்கு அளித்தருள வேண்டுமென்று வேண்டிக் கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.
இன்றைய பெரியவியாழன் நாளில் இறைமகன் எமக்கு உணர்த்தி கடப்பாடுகளை நாம் செவ்வனே உணர்ந்தவர்களாக நமது கடமைகளை முன்னிறுத்தி நம் முன்னுள்ள தேவைகளுக்காக அவரிடம் இரந்து மன்றாடுவோம்

 

530158_632631530087600_43251194_n.jpg?oh
 

 

Link to comment
Share on other sites

கிறிஸ்துவ பைபிளியல் பேராசிரியரும், தொல்பொருள் அகழ்வாய்வில் போற்றப்படும் ஜேம்ஸ் டாபர் இயேசு மரணம் வியாழன் அன்று தான் என எழுதிய கட்டுரை இணைப்பு
 
Jesus Died on a Thursday not on Friday
Posted on March 29, 2013
 
 
அவர் சுவிசேஷ்க் கதைகளில் உள்ள கிரேக்க குறிப்புகள் மற்றும் யூதர்கள் நாட்களை கணக்கிடும் முறை வைத்து எழுதியுள்ளார்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தேவப்பிரியா! கிறிஸ்தவத்திற்கு மிக முக்கியமான கண்டு பிடிப்பைப் பகிர்ந்து கொண்டமைக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி சகோதரி...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான்... வேறு மதத்தை சார்ந்தவன், என்றாலும்.... கிறிஸ்தவ மதத்தை நேசிப்பவன்.
வருடத்துக்கு, ஒரு சில நாட்களில் அருகில் உள்ள தேவாலயத்துக்கும் சென்று, மெழுகு திரி ஆவது கொழுத்தி விட்டு வருவேன்.
இந்த புனித, வாரத்தில்.... நான்கு நாள், தொடர்ந்து விடுமுறை கிடைப்பது இன்னும்.... மகிழ்ச்சி.
 

Link to comment
Share on other sites

 

கிறிஸ்துவ பைபிளியல் பேராசிரியரும், தொல்பொருள் அகழ்வாய்வில் போற்றப்படும் ஜேம்ஸ் டாபர் இயேசு மரணம் வியாழன் அன்று தான் என எழுதிய கட்டுரை இணைப்பு
 
Jesus Died on a Thursday not on Friday
Posted on March 29, 2013
 
 
அவர் சுவிசேஷ்க் கதைகளில் உள்ள கிரேக்க குறிப்புகள் மற்றும் யூதர்கள் நாட்களை கணக்கிடும் முறை வைத்து எழுதியுள்ளார்.//
 
 

 

சுவிசேஷ்க் கதைகளில் உள்ள கிரேக்க குறிப்புகள்-  இயேசு மரணம் புதன் அன்று தான்

http://ad2004.com/prophecytruths/Articles/Prophecy/3days3nights.html

http://www.jesuschrist.com/jesus-christ-was-crucified-on-wednesday-not-friday/

http://www.wednesdaycrucifixion.com/

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.