Jump to content

இந்திய சமுத்திரத்தில் மிதந்த பொருட்கள் மலேசிய விமானத்தின் பாகங்கள் இல்லை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய சமுத்திரத்தில் மிதந்த பொருட்கள் மலேசிய விமானத்தின் பாகங்கள் இல்லை! 

[sunday, 2014-03-30 11:32:21]
objects-MH370-not-found-200.jpg

மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8-ந்தேதி அதிகாலை நடுவானில் மாயமானது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை. இந்த நிலையில் இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடும் பகுதி மாற்றபட்டு உள்ளது. தற்போது 1100 கீமீட்டர் வடக்கில் தேடும் பணி தொடங்கி உள்ளது இங்கு நம்பகமான புதிய ஆதாரங்கள் கிடைத்து உள்ளது.

  

புதிய தேடும் பகுதி 319000 சதூர கிலோமீட்டர் ஆகும் இது பெர்த்தின் மேற்கே 1850 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. 8 விமானங்கள் 6 கப்பல்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளன.ஆஸ்திரேலிய பிரதம மந்திரி டோனி அபோட் கூறும் போது பெர்த்தில் உள்ள கடற்படை கப்பலில் கறுப்பு பெட்டி மீட்பு கருவிகள் தயார் நிலையில் உள்ளது.தேவை என்றால் அது தேடப்படும் பகுதிக்கு எடுத்து செல்லப்படும்.நாங்கள் இந்த வேலைக்கான கால அளவை நிர்ணயிப்பது மிகவும் கடினம் எனறு கூறினார்.

இதனிடையே, கடலில் நீலம் மற்றும் பழுப்பு நிறம் உள்ளிட்ட பல நிறங்களில் சில பொருட்கள் மிதந்ததாகவும் அது மாயமான மலேசிய விமானத்தின் நிறங்களை போன்ற தோற்றத்தில் உள்ளது. எனவே, அவை மாயமான மலேசிய விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், விமானத்தின் பாகங்கள் மிதந்ததாக என்று கூறப்பட்ட குறிப்பிட்ட கடல் பகுதிக்கு சென்றிருந்த சீன மற்றும் ஆஸ்திரேலியக் கப்பல்கள் முதல் தடவையாக தற்போது பல பொருட்களை நீரில் இருந்து எடுத்துள்ளன.

சீனக் கப்பல்கள் வலையைப் பயன்படுத்தி பொருட்களை தண்ணீரில் இருந்து எடுப்பதை தொலைக்காட்சிப் படங்கள் காட்டியுள்ளன.ஆனால் அவையெல்லாம் விமானத்திலிருந்து வந்திருக்கக்கூடிய பொருட்கள் அல்ல என்று தெளிவாகத் தெரிகிறது. கண்டெடுக்கப்பட்ட பொருளில் எதுவுமே காணாமல்போன MH370 விமானத்துடன் தொடர்புடையது என்று இதுவரை உறுதிசெய்யப்படவில்லை.

http://www.seithy.com/breifNews.php?newsID=106760&category=WorldNews&language=tamil

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.