Jump to content

ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் -நூல் வெளியீடு


Recommended Posts

அர்ஜுன்,

நேரம் இருந்தால் இந்த நிகழ்வுக்கும் வாருங்கள், நாளைய வரலாற்றை எழுத விரும்புவர்களுக்கும் கை கொடுப்போம்.

நன்றி

419162_10151336528460008_856330007_23016920_581481462_n.jpg

Link to comment
Share on other sites

  • Replies 108
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான போராளி எங்கிறவன்,, அவன் முன்னாளோ/ இன்னாளோ......ஒரு பாரிய பின்னடைவின்பின், அடுத்தகட்ட நகர்வு என்ன என்பது பத்தியே சிந்திப்பான்,,

100 வீகித உண்மையான கருத்து இதைவிட்டு கேள்வி கேட்டால் மேட்டு வளையைப்பார்த்து எலி அம்மனமாய் ஓடுது என்ற மாதிரி முதல் இனைத்ததை படித்து பார்க்கவும் ! இனைத்ததை படித்து பார்க்கவும் ! பரீட்ச்சை கேள்வி பேப்பரிலும் இப்படி எழுதினால் ???????????

Link to comment
Share on other sites

முரளி தன்னுடைய முகபுத்தகத்தில் இப்படி எழுதியிருக்கிறார்..

இன்று ஐயரின் “ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்” என்ற நுால் அறிமுக நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். நேசன் என்ற தோழர் மண்டபத்துக்கு வெளியே நிகழ்ந்த உரையாடலில் எனது கருத்துச் சொல்லும் உரிமையை மறுத்து நிகழ்த்திய வன்மத்தை பல நண்பர்கள் சாட்சியமாகக் கண்டார்கள். இவர்களா கருத்துச் சுதந்திரத்துக்காக அன்று போராடியிருப்பார்கள் என்ற ஏமாற்றம் இங்கு எஞ்சி நிற்கின்றது. நான் கூட்டத்தில் குறிப்பிட்ட ஸ்ராலின்-கிட்லர் ஒப்பந்தத்தை இங்கு வெளிக் கொணர வேண்டியது எனது கடமைகளில் ஒன்று எண்ணுகின்றேன்.

Link to comment
Share on other sites

முரளி தன்னுடைய முகபுத்தகத்தில் இப்படி எழுதியிருக்கிறார்..

இன்று ஐயரின் “ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்” என்ற நுால் அறிமுக நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். நேசன் என்ற தோழர் மண்டபத்துக்கு வெளியே நிகழ்ந்த உரையாடலில் எனது கருத்துச் சொல்லும் உரிமையை மறுத்து நிகழ்த்திய வன்மத்தை பல நண்பர்கள் சாட்சியமாகக் கண்டார்கள். இவர்களா கருத்துச் சுதந்திரத்துக்காக அன்று போராடியிருப்பார்கள் என்ற ஏமாற்றம் இங்கு எஞ்சி நிற்கின்றது. நான் கூட்டத்தில் குறிப்பிட்ட ஸ்ராலின்-கிட்லர் ஒப்பந்தத்தை இங்கு வெளிக் கொணர வேண்டியது எனது கடமைகளில் ஒன்று எண்ணுகின்றேன்.

அவருக்கு சொல்லுங்க ... ஹிட்லருக்கு என்று ஒரு தேசம் இருந்தது....

ஸ்டாலினுக்கும் ஒரு சாம்ராச்சியம் இருந்திச்சு..............

வேறுபட்ட கொள்கைகளை /கருத்துக்களை கொண்டு இருந்தாலும்........

தேசம் என்று வருகையில்... முதலில் நான் ஜேர்மானியன் .. சோவியத்காரன்...

அப்பிடின்னு திமிரோட மான ரோசத்தோட அவங்க வாழ்ந்தாங்க!

நாங்க அப்பிடியா? நாடு எக்கேடு கெட்டாலும் பரவாயில்ல,,,

எங்கள யாரும் உயர்வா கருதலைன்னா............ இந்த நாடும் மக்களும் நாசமா போகட்டும் என்னு .... விரல் நுனியில விஷம் தடவிட்டு...

நடு ரோட்டில..........இல்ல...

கீ போர்ட்டில தட்டி கருத்து எடுத்து விடும் ரொம்ப நல்லவங்க!! :)

Link to comment
Share on other sites

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு சுவாரஸ்யமான திரைப்படம் பார்த்தேன். வழக்கமாகவே மனப் பிறழ்வுடன் உலாவும் பாத்திரங்களைக் கொண்ட திரில்லர்களைப் பார்ப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். பாடசாலைக் காலத்திலேயே ஹிட்ச்காக்கின் 'சைக்கோ' மூலம் இந்த விதை மனதில் பதிந்து விட்டது.

நேற்றுப் பார்த்த ஸ்டான்லி குப்ரிக்கின் ' The Shining ' அவருடைய ஆற்றலுக்கான வெற்றிகரமான மற்றுமொரு சான்று.

80 இல் வெளியான ... 'The Shining ' இப்போதும் மிரட்டத் தவறவில்லை.பனி சூழ்ந்த அந்த ஹோட்டலையும், நாயகனின் பிறழ்வு மனம் உருவாக்கிக் கொள்ளும் ஆவி வடிவங்களையும் இப்போது வரை மறக்க முடியவில்லை. நொடிக்கொரு தடவை மாறும் முகபாவனைகள்,உடல்மொழி ஆகியவற்றைக் கொண்ட ஜேக் நிக்கல்ஸனின் அபாரமான நடிப்பு வியக்க வைக்கின்றது. திகிலூட்டும் இசை, சிக்கலான திரைக் கதைக் கட்டமைப்பை அனாயசமாகப் படமாகியிருக்கும் விதம் என்பவற்றால் இந்தப் படம் முக்கியத்துவம் பெறுகின்றது.

ஏற்கனவே குப்ரிக்கின் ' Lolita ', 'A clock work orange ', 'Barry Lyndon ', 'Eyes wide shut ' ஆகிய படங்களைப் பார்த்திருக்கிறேன்.[ Eyes wide shut திரைப் படம் நமது இயக்குனர் சிகரத்தால் 'பார்த்தாலே பரவசம் ' என்ற பெயரில் கடித்துக் குதறப் பட்டிருந்தது]

The Shining மூலம் குப்ரிக்கின் மீதுள்ள மதிப்பும், ஆர்வமும் மேலும் அதிகரித்திருக்கின்றன

இது இன்று நான் உமா வரதராஜனின் முகப்புத்தகத்தில் வாசித்தது .இதற்கு ஒருவர் வந்து "சும்மா இணையத்தில வந்து அவிக்காதையுங்கோ ,விஜயின் குருவியை போல வருமா "என பின்னூட்டம் விட அதுதானே என்று அதற்கு நாலு விஜய் ரசிகர்கள் விசில் அடித்தால் எப்படியிருக்குமோ அப்படித்தான் இருக்கு ,

அறிவிலியின் கேள்விகளும் அதற்கு விழும் பச்சைகளும்.

உங்களுக்கு விளங்கமுடியாத பக்கம் ஒன்று இருக்கு, கடைசி அதை விளங்கமுயற்சிக்கலாம் அதைவிட்டு இப்படியே விஜெய் படத்திற்கு விசில் அடித்துக்கொண்டே இருப்பம் என்றால் எவராலும் ஒன்றும் செய்யமுடியாது.

என்றாவது ஒருநாள் இருந்து சிந்தித்து பார்த்தீர்களா ? எந்த பெரிய ஒரு விடுதலை அமைப்பு ,உலகே கண்டு அதிசயித்த கெரில்லா அமைப்பு கடைசியில் அரசு போட்ட ஒரு சிறு சதுரத்திற்குள் ஒடுங்கி பொசுங்கி போனதை.

புத்தகத்தை வெளியிட்டவர்களின் ஒரு பந்தி "தேடலும் அறிதலும் அற்ற நிலையில் எங்கள் குரல்கள் சற்றேனும் இடைநிறுத்தி ,சிந்தனையை தூண்டவும்,ஆரோக்கியமான விவாதக் களத்தை உருவாக்கவும்,மாற்று அரசியலுக்கான உரையாடல் வெளியை தோற்றுவிக்கவுமே இப்புத்தகத்தை வெளியிடுகின்றோம்.

Link to comment
Share on other sites

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு சுவாரஸ்யமான திரைப்படம் பார்த்தேன். வழக்கமாகவே மனப் பிறழ்வுடன் உலாவும் பாத்திரங்களைக் கொண்ட திரில்லர்களைப் பார்ப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். பாடசாலைக் காலத்திலேயே ஹிட்ச்காக்கின் 'சைக்கோ' மூலம் இந்த விதை மனதில் பதிந்து விட்டது.

நேற்றுப் பார்த்த ஸ்டான்லி குப்ரிக்கின் ' The Shining ' அவருடைய ஆற்றலுக்கான வெற்றிகரமான மற்றுமொரு சான்று.

80 இல் வெளியான ... 'The Shining ' இப்போதும் மிரட்டத் தவறவில்லை.பனி சூழ்ந்த அந்த ஹோட்டலையும், நாயகனின் பிறழ்வு மனம் உருவாக்கிக் கொள்ளும் ஆவி வடிவங்களையும் இப்போது வரை மறக்க முடியவில்லை. நொடிக்கொரு தடவை மாறும் முகபாவனைகள்,உடல்மொழி ஆகியவற்றைக் கொண்ட ஜேக் நிக்கல்ஸனின் அபாரமான நடிப்பு வியக்க வைக்கின்றது. திகிலூட்டும் இசை, சிக்கலான திரைக் கதைக் கட்டமைப்பை அனாயசமாகப் படமாகியிருக்கும் விதம் என்பவற்றால் இந்தப் படம் முக்கியத்துவம் பெறுகின்றது.

ஏற்கனவே குப்ரிக்கின் ' Lolita ', 'A clock work orange ', 'Barry Lyndon ', 'Eyes wide shut ' ஆகிய படங்களைப் பார்த்திருக்கிறேன்.[ Eyes wide shut திரைப் படம் நமது இயக்குனர் சிகரத்தால் 'பார்த்தாலே பரவசம் ' என்ற பெயரில் கடித்துக் குதறப் பட்டிருந்தது]

The Shining மூலம் குப்ரிக்கின் மீதுள்ள மதிப்பும், ஆர்வமும் மேலும் அதிகரித்திருக்கின்றன

அந்த 'சைகோ' படத்தில் கதாநாயகன் ஜாக் நிக்கல்சன் தனிமையில் அந்த பெரிய விடுதியில் தனியாக, உலகத்தை விட்டு இருப்பதனாலும், அவரின் முன்னைய உளவியல் பிரச்சனையும் அவரை கொலைகாரன் ஆக்குகின்றது. ஆனால், அதில் அவரின் மனைவியாக நடிப்பவரின் பாத்திரமே அவதானிக்கப்பட வேண்டியது, தனது மகனை காப்பாற்ற.

இந்த பாத்திரங்கள் எம்மையும் பிரதிபலிக்கின்றன.

Link to comment
Share on other sites

முரளி தன்னுடைய முகபுத்தகத்தில் இப்படி எழுதியிருக்கிறார்..

இன்று ஐயரின் “ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்” என்ற நுால் அறிமுக நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். நேசன் என்ற தோழர் மண்டபத்துக்கு வெளியே நிகழ்ந்த உரையாடலில் எனது கருத்துச் சொல்லும் உரிமையை மறுத்து நிகழ்த்திய வன்மத்தை பல நண்பர்கள் சாட்சியமாகக் கண்டார்கள். இவர்களா கருத்துச் சுதந்திரத்துக்காக அன்று போராடியிருப்பார்கள் என்ற ஏமாற்றம் இங்கு எஞ்சி நிற்கின்றது. நான் கூட்டத்தில் குறிப்பிட்ட ஸ்ராலின்-கிட்லர் ஒப்பந்தத்தை இங்கு வெளிக் கொணர வேண்டியது எனது கடமைகளில் ஒன்று எண்ணுகின்றேன்.

மண்டபதிற்குள்ளேயே முரளி நாசி ஹிட்லரும் பாட்டாளி மக்கள் புரட்சி பற்றி பேசிய ஸ்ராலினும் (ரோக்சியின் உடன்பாட்டுடன் ) தமது நாடுகளின் நலனுக்காக ஒப்பந்தம் செய்தார்கள் என்று குறிப்பிட்டார்.அதை மறுத்து நேசன் ரோக்சிக்கு தெரியாமல் தான் அந்த ஒப்பந்தம் நடந்தது என்றார்.பின் வெளியில் வந்து அதே ஒப்பந்தம் பற்றி கதைத்து சிறு அபிப்பிராய பேதம் வந்துவிட்டது .நேசன் தனது பதிவுகளில் முரளியை பற்றி எழுதியதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

அறிவிலியின் கேள்விகளும் அதற்கு விழும் பச்சைகளும்.

உங்களுக்கு விளங்கமுடியாத பக்கம் ஒன்று இருக்கு, கடைசி அதை விளங்கமுயற்சிக்கலாம் அதைவிட்டு இப்படியே விஜெய் படத்திற்கு விசில் அடித்துக்கொண்டே இருப்பம் என்றால் எவராலும் ஒன்றும் செய்யமுடியாது.

மீண்டும் சிவப்பை குத்தும் நடைமுறையை கொண்டுவந்தால் சரியாகிவிடும் :D

என்றாவது ஒருநாள் இருந்து சிந்தித்து பார்த்தீர்களா ? எந்த பெரிய ஒரு விடுதலை அமைப்பு ,உலகே கண்டு அதிசயித்த கெரில்லா அமைப்பு கடைசியில் அரசு போட்ட ஒரு சிறு சதுரத்திற்குள் ஒடுங்கி பொசுங்கி போனதை.

இவ்வளவு படங்களையும் புத்தகங்களையும் வாசிக்கும் நீங்களே அதற்குபதிலையும் கூறி விடுவது தான் சரி.

புத்தகத்தை வெளியிட்டவர்களின் ஒரு பந்தி "தேடலும் அறிதலும் அற்ற நிலையில் எங்கள் குரல்கள் சற்றேனும் இடைநிறுத்தி ,சிந்தனையை தூண்டவும்,ஆரோக்கியமான விவாதக் களத்தை உருவாக்கவும்,மாற்று அரசியலுக்கான உரையாடல் வெளியை தோற்றுவிக்கவுமே இப்புத்தகத்தை வெளியிடுகின்றோம்.

இப்படியே கொஞ்சநாள் போனால் இன்னும் புத்தகங்கள் எழுதலாம், உதாரணத்திற்கு ' எவ்வாறு தமிழீழத்தில் தமிழினம் அழிந்தது?' ' முள்ளிவாய்க்கால் பின்னர் நாம் என்ன செய்தோம்?'

ஆனால் ஒரு பிரச்சனை வாசிக்க அடுத்த தலைமுறை இருக்காது :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மண்டபதிற்குள்ளேயே முரளி நாசி ஹிட்லரும் பாட்டாளி மக்கள் புரட்சி பற்றி பேசிய ஸ்ராலினும் (ரோக்சியின் உடன்பாட்டுடன் ) தமது நாடுகளின் நலனுக்காக ஒப்பந்தம் செய்தார்கள் என்று குறிப்பிட்டார்.அதை மறுத்து நேசன் ரோக்சிக்கு தெரியாமல் தான் அந்த ஒப்பந்தம் நடந்தது என்றார்.பின் வெளியில் வந்து அதே ஒப்பந்தம் பற்றி கதைத்து சிறு அபிப்பிராய பேதம் வந்துவிட்டது .நேசன் தனது பதிவுகளில் முரளியை பற்றி எழுதியதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

.....மண்டபத்திற்கு வெளியேயும் நடந்ததா? நான் கவனிக்கத் தவறி விட்டேன்.. :(

Link to comment
Share on other sites

நாட்டை விட்டு வெளியேறிய அனேக அறிவு சீவிகள் புலிகள் மீதான தமது கசப்புணர்வினை தொடர்ந்து புலிகளை நிராகரிப்பதன் மூலமாகவே வெளிக்காட்டினர். மேற்கத்திய சட்டகங்களுக்குள் நின்று புலிகளை மதிப்பிடுவதும், அரச தரப்பு, புலிகள் தரப்பு வன்முறைகள் போன்றவற்றை ஒரே சட்டகத்தில் வைத்து மதிப்பிடுவதுமாகவே அவர்களின் செயற்பாடு அமைந்தது, அது போலவே புலிகள் தரப்பினை கடுமையாக விமர்சிக்கின்ற இவர்கள் ஒரு போது புலிகள் தரப்பு நியாயங்களை ஏற்றுக்கொள்ளத் தவறியதுடன், அரச தரப்பு தவறுகளில் சில சமயங்களில் கள்ள மௌனம் சாதித்ததுடன், பல சமயங்களில் அது எல்லாருக்கும் தெரிந்ததுதானே எனவே நாம் அது பற்றிக் கூறவேண்டியதில்லை என்றும் விலகிக் கொண்டனர். புலிகள் மீதான காழ்ப்புணர்வினால் ஒட்டு மொத்த போராட்டத்திற்கான நியாயங்களையும் நிராகரிப்பதும் எதிர்ப்பதும் முறையாகாது.

***********************************************************************************************************************************************************************************************

ஒரு புத்தகம் அது உள்ளடக்கியிருக்கின்ற விடயங்களில் மாத்திரம் அல்லாமல் அது வெளிவரும், எழுதப்படும், வாசிக்கப்படும் காலங்களாலும் முக்கியத்துவம் பெறுகின்றது. அந்த வகையில் ஈழப்போராட்டம் மிகப்பெரியதோர் இனப்படுகொலையுடன் ராணுவ ரீதியாக முடிவுக்கொண்டுவரப்பட்டிருக்கின்ற காலப்பகுதியில் வந்திருக்கின்ற கணேசன் என்கின்ற, ஈழப்போராட்ட வரலாற்றில் ஐயர் என்று அறியப்பட்டவர் எழுதிய “ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்” என்கிற நூலை முக்கியமானதாகவே நான் உணர்கின்றேன். மிகப் பெரியதோர் அழிவிற்குப் பின்னரும் தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான தேவைகள் அப்படியே இருக்கையில், இன ரீதியிலான ஒடுக்கல் இன்னமும் அதிகரித்து வருவதாக அவதானிக்கப்படுகின்ற காலப்பகுதியில், தமிழ்த் தேசிய உணர்வு இன்னமும் கூர்மை அடைந்திருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்ற இந்நாட்காளில் தமிழரின் தேசிய விடுதலைப்போராட்டத்தையும் அது முன்னெடுக்கப்பட்ட விதத்தையும் ராணுவ, அரசியல் ரீதியிலான அணுகுமுறைகளை சுய பரிசோதனை செய்வதற்கும், மீள்பரிசீலனை செய்வதற்குமான தேவையும் அதிகரித்தே இருக்கின்றது. மேற்குறித்த பார்வைகள் மற்றும் கூறுகள் தொடர்பான முழுமையான பிரக்ஞையுடன் ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் என்கிற இந்தப் புத்தகத்தைப் பற்றிய எனது பார்வையை இங்கே பதிவாக்குகின்றேன்.

ganesan_iyer_400.jpg

இனியொரு இணையத்தளத்தில் தொடர்ச்சியாக வெளியாகி பின்னர் இனியொருவின் முதலாவது அச்சு வடிவ வெளியாடாகி இருக்கின்ற இந்நூல் தொடர்பான இந்நிகழ்வினை தேடகம் ஒருங்கமைத்திருக்கின்றது. இனியொருவிற்கும், தேடகத்திற்கும் இந்த முயற்சிக்கு நன்றி சொல்லிக்கொள்ளுகின்ற அதேவேளை அவை இரண்டின் அரசியல் தொடர்பாக இருக்கின்ற விம்பத்தில் இருந்து விடுபட்டு இந்நூலில் சொல்லப்படுகின்ற காலப்பகுதியில் பிறந்தவன் என்கிற முறையில் எனது தலைமுறையின் பார்வையை இயன்றவரை இதில் பதிய முனைகின்றேன்.

இந்நூலில் 1972ல் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தாங்கிய போராட்டங்களைத் தொடங்கிய காலப்பகுதிகளில் இருந்து அதில் ஈடுபட்டு பின்னர் தமிழ்ப் புதிய புலிகள் அமைப்பிலும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலும் ஆரம்பகால மத்திய குழு உறுப்பினர்களுல் ஒருவரான ஐயர் பின்னர் புலிகள் அமைப்பு இரண்டாக உடைந்தமை, பின்னர் புளொட் இயக்கத்தின் தோற்றம் வரையான காலப்பகுதிகளிலான தனது அனுபவங்களை பதிவாக்கியுள்ளார். இதில் முக்கியமாகக் குறிப்பிடவேண்டிய விடயம் என்னவென்றால் இயன்றவரை தான் சார்ந்திருந்த அமைப்பின் தவறுகளைச் சுட்டிக்காட்டுகின்றபோது, அந்தத் தவறுகளில் இருந்து தன்னை விடுவித்து பிறர் மீது பழி சுமத்துவதைத் தவிர்த்து அந்நாட்களில் மேற்குறித்த முடிவுகள் எடுத்தபோது அதிலிருந்த தன்து வகிபாகத்தையும், தனது நிலைப்பாட்டையும் ஒத்துக்கொண்டே ஐயர் எழுதிச்செல்லுகின்றார். அதே நேரம், புலிகள் இயக்கத்தை விட்டு வெளியேறி கிட்டத்தட்ட 25 வருடங்களின் பின்னர் அன்றைய புலிகள் இயக்கத்தின் தவறான நடவடிக்கைகளாக எவை அமைந்திருந்தன, அவற்றை எவ்வெவ்வாறு செய்திருக்கலாம் என்று சொல்லிக்கொள்ளுகின்ற ஐயருக்கின்ற சலுகை புலிகள் இயக்கத்தில் தொடர்ந்து இருந்தவர்களுக்கு அதன் தலைமை உட்பட இருந்திருக்காது என்றே சொல்ல விரும்புகின்றேன். இதனை சிந்தனைக்கும் அதனை நடைமுறையில் பிரயோகிப்பதற்கும் இடையில் இருக்கின்ற நடைமுறைப்பிரச்சனைகள் சார்ந்தே இங்கே குறிப்பிடுகின்றேன் அதுவும் குறிப்பாக தொடர்ச்சியாக ராணுவ நடவடிக்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்குகின்ற ஒரு குழுவினர் எதிர்கொள்ளக் கூடிய புற அழுத்தங்களின் மத்தியில் எதிர்கொள்ளக்கூடிய சிக்கல்களை நாம் கருத்தில்கொள்ளவேண்டும்.

குறிப்பாக இந்த நூலிலும், இன்னும் நிறைய இடங்களிலும் பிரபாகரனின் தூய ராணுவ நோக்கு தொடர்ச்சியாக விமர்சிக்கப்பட்டுகின்றது. அதே நேரத்தில் வரலாற்றில் பிரபாகரனின் பாத்திரத்தை அணுக முற்படும்போது அன்றைய அரசியல் சமூக சூழல், அவர் எதற்காக போராட முன்வருகின்றார், தனது போராட்டத்தை அவர் ஆரம்பிக்கின்ற போது அதற்கான தேவை எப்படி இருந்து, என்ன தேவையாக இருந்தது என்று அவர் கருதினார், அவரைப் பாதித்த தலைமைகள் போன்ற காரணிகளையும் சேர்த்தே ஆராயவேண்டி இருக்கின்றது. அதன் தேவை கருதி தனது ஆரம்ப கால நேர்காணல்களில் பிரபாகரன் தெரிவித்த சில கருத்துக்களை அவதானிப்போம்,

1984 ல் சண்டே (இந்தியா) இதழில் வெளியான அனிதா பிரதாப்பிற்கு வெளியான நேர்காணலில்,

“இலங்கைத் தமிழர்களுக்கு ஆயுதப் போராட்டமே ஒரே வழியென்று நீங்கள் தீர்க்கமான முடிவுக்கு வர நிர்ப்பந்தித்த உங்களின் தனிப்பட்ட அனுபவங்களைச் சற்றுக் கூறுவீர்களா? கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் இலங்கை அரசு காட்டிய பாரபட்சமான கொள்கையால் நீங்களோ உங்கள் குடும்பத்தவரோ அல்லது உங்கள் நண்பர்களோ நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனரா?" என்கிற கேள்விக்கு

“நான் பள்ளிச் சிறுவனாக இருந்த போது 1958 ஆம் ஆண்டின் இனக் கலவரங்களில் நிகழ்ந்த பயங்கரச் சம்பவங்கள் என் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின. சிங்கள இன வெறியர்களால் எம் மக்கள், ஈவிரக்கமில்லாமல் கொடூரமாகக் கொல்லப்பட்ட நெஞ்சை உலுக்கும் சம்பவங்களை நான் கேள்விப்பட்டேன். எங்கள் குடும்பத்துக்குத் தெரிந்த ஒரு விதவைத் தாயை நான் ஒரு முறை சந்தித்த போது அவர் இந்த இன வெறியாட்டத்தால் தனக்கு நேர்ந்த துயரமான அனுபவத்தை என்னிடம் சொன்னார். இனக்கலவரத்தின் போது சிங்களக் காடையர்கள் கொழும்புவில் இருந்த அவர் வீட்டைத் தாக்கினார்கள். அவரது வீட்டிற்குத் தீ வைத்து அவருடைய கணவரையும் கொடூரமாகக் கொன்றார்கள். அவரும் அவரது பிள்ளைகளும் பலத்த எரி காயங்களுடன் தப்பினார்கள். அவரது உடம்பில் காணப்பட்ட எரிகாயத் தழும்புகளைப் பார்த்த போது நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். சிறு குழந்தைகளைக் கொதிக்கும் தாருக்குள் உயிருடன் வீசிக்கொன்ற கோரச் சம்பவங்களை நான் கேள்விப்பட்டேன். அநாதரவான அப்பாவித் தமிழர்கள் எவ்வாறெல்லாம் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகின்றார்கள் என்று கேட்கும்போதெல்லாம் எம்மக்கள் மீது ஆழ்ந்த அனுதாபமும் அன்பும் ஏற்பட்டன. இந்த இனவெறி அமைப்பின் பிடிக்குள் இருந்து எம்மக்களை மீட்கவேண்டும் என்ற பெரும் உந்துதல் என்னிடம் தோன்றியது. நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களுக்கெதிராக ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும் இந்த அமைப்பினை ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ளமுடியும் என்று நான் ஆழமாக உணர்ந்தேன்” (மாவீரர் உரைகள், நேர்காணல்கள் – பக்கம் 254-255)

என்று பதிலளிக்கின்றார் பிரபாகரன். இதை ஒத்த கருத்துக்களையே இதே கருத்தையே பின்னர் 30/12/1985 ஃப்ரொன்ட்லைன் இதழிற்கு வழங்கிய நேர்காணலிலும், பின்னர் 23/மார்ச்/1986 ல் வீக் இதழிற்கு வழங்கிய நேர்காணலிலும் தெரிவித்துள்ளார்.

எனவே தமிழ்மக்கள் மீது இலங்கை அரசின் நேரடியான மற்றும் மறைமுகமான ஆதரவுடன் நிகழ்த்தப்பட்ட ஆயுத மற்றும் அரசியல் ரீதியான வன்முறைகளை எதிர்கொள்வதற்கு தமிழர்களுக்கென ஒரு ராணுவம் தேவை என்பதே பிரபாகரன் உள்ளிட்ட பலரின் கருத்தாக அந்நாட்களில் இருந்தது. இதனையே ஐயரும் குறிப்பிடுகின்றார்,

“பிரபாகரன் உட்பட நாம் அனைவருமே இன அடக்குமுறைக்கு எதிரான எமது கோபத்தை, பெருந்தேசிய வன்முறைக்கு எதிரான எமது உணர்வுகளை, ஆயுதப் போராட்டமாக முன்னெடுக்க, தமிழர் விடுதலைக் கூட்டணி சட்ட வரம்புகளுக்கு உட்பட்ட வகையில் போராட்டத்தை முன்னெடுத்தது என்பதே எமது நம்பிக்கை” (பக்கம் 62) என்றும்

“பிரபாகரனது நோக்கமும் அதன் வழி எமது நோக்கமும் ஒரு பலமான இராணுவக் குழு ஒன்றைக் கட்டியமைத்துக் கொள்வதே. தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியலை நாம் போதுமானதாக எண்ணியிருந்தோம்” (பக்கம் 65) என்றும் குறிப்பிடுகின்றார். தவிர இன்னோரிடத்தில்

“நான் இந்தியாவில் இருந்த வேளையில் எமது மத்திய குழுவும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஒரு எழுதப்படாத ஒப்பந்தத்திற்கு வந்திருந்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணி அரசியல் அமைப்பு என்றும், இளைஞர் பேரவை வெகுஜன அமைப்பு என்றும் புலிகள் இவற்றிற்கான ராணுவ அமைப்பு என்றும் முடிவிற்கு வருகின்றனர்” (பக்கம் 56).

இந்தச் சம்பவம் கிட்டத்தட்ட 77ல் நடக்கின்றது. எனவே புலிகள் ஆரம்பகாலத்தில் இருந்தே தம்மை ஒரு ராணுவக் குழுவினராகவே வளர்ந்து வந்தனர். ஏற்கனவே இருந்த தமிழர் விடுதலை கூட்டணியை தமக்கான அரசியலை முன்னெடுப்பவர்களாகவே அவர்கள் அன்று நம்பி இருந்தனர். அந்த அடிப்படையிலேயே தமிழ்ப் புதிய புலிகளின் முதலாவது அமைப்பு விதிகளும் தூய ராணுவ நோக்கிலேயே அமைந்திருந்தன. தமிழர்களுக்கென வலிமையான ராணுவம் ஒன்றைக் கட்டியெழுப்புவதே முதன்மையான தேவை என்பதில் உறுதியாக இருந்த பிரபாகரன் அவ்வாறு கட்டியெழுப்பப்படும் ராணுவம் ராணுவ ஒழுக்கத்துடனும் கட்டுப்பாடுடனும் இருக்கவேண்டும் என்று கருதினார். 1986ல் நியூஸ் வீக் இதழிற்காக தீபக் மஷூம்தாரிற்கு வழங்கிய நேர்காணலிலும் இந்தக் கருத்தையே பிரதிபலித்துள்ளார் பிரபாகரன். இந்தப் புத்தகத்தில் புலிகள் இயக்கத்திற்குள் பிரபாகரன் செலுத்திய ராணுவப் போக்குப் பற்றிய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றபோதும், அவற்றை மேற்குறித்த நிபந்தனைகளுடன் சேர்த்து ஆராய்வதே பொருத்தமானதாக இருக்கும்.

அது போல அன்றைய சூழலில் ஐயர் உள்ளிட்ட இளைஞர்கள் தமது அரசியல் பாதையைத் தீர்மானிப்பதில் செல்வாக்குச் செலுத்திய காரணிகளையும் பார்ப்போம். 1970ல் லங்கா சம சமசமாஜக் கட்சியும், இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியும் சிறீமாவோ தலைமையிலான சுதந்திரக்கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைந்திருந்த காலப்பகுதியில் இனவாரியான தரப்படுத்தல், பௌத்த மதச்சார்பான அரச கொள்கை, சிங்களம் அரச கரும மொழி ஆக்கப்படல் போன்றவை நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இக்காலப்பகுதி பற்றி ஐயர் சொல்வதைப் பார்ப்போம்,

“இந்த நேரத்தில் நாமெல்லாம் தூய தேசியவாத சிந்தனையுடனேயே செயற்பட ஆரம்பித்தோம். எமக்குத் தெரிய சண்முகதாசனின் மாவோயிசக் கட்சி போன்றன தீவிர இடதுசாரிக் கருத்துகளுடன் வெளிவந்திருந்தாலும், தேசியப் பிரச்சனையில் அவர்கள் அக்கறை காட்டவில்லை. தமிழ் பிரச்சனைகள் பற்றிப் பேசுவதெல்லாம் அண்ணாத்துரை, கருணாநிதி, தமிழரசுக் கட்சி என்பன என்பதே எமக்குத் தெரிந்திருந்தவை” (பக்கம் 8)

இங்கே கருணாநிதி, தமிழரசுக்கட்சிகளை ஐயர் சுட்டிக்காட்டியிருப்பது இன்று நகைப்பிற்கு உரிய ஒன்றாகக் கருதப்படலாம் என்றாலும், அவர்களின் அன்றைய காலப்பகுதியிலான பங்களிப்புகளை அவர்களின் பின்னைய அரசியல்களைக் காரணங்காட்டி மறுத்துவிடமுடியாது. ஈழப்போராட்டத்தின் ஆரம்பகாலப்பகுதியில் அதன் எல்லாப் பலவீனங்களையும் தாண்டி எவ்வாறு தமிழரசுக்கட்சி போன்றவற்றின் செயற்பாடுகள் மிகுந்த ஆதரவாக இருந்தன என்று அண்மையில் “தமிழர்களின் நாடு கடந்த அரசியல்” என்கிற புத்தக வெளியீட்டு விழாவில் செழியனும் குறிப்பிட்டிருந்தார்.

தவிர இக்காலப்பகுதி இலங்கையைப் பொறுத்தவரை அரசாங்கம் தமிழர்கள் மீது இன ரீதியிலான ஒடுக்குதல்களை மீகத் தீவிரப்படுத்தியிருந்த, அதே நேரம் இடது சாரிக்கட்சிகள் இனப் பிரச்சனை பற்றிய கரிசனைகளை தமது நிகழ்சி நிரலில் இருந்து அகற்றியிருந்த காலம். இந்தச் சூழ்நிலையில் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த அன்றைய இளைஞர்களுக்கு ஏற்ற அரசியல் ரீதியான தலைமை அமையவில்லை என்றே கருதவேண்டும். புலிகள் இயக்கத்தைப் பொறுத்தவரை பிரபாகரன் அதன் ஆளுமை செலுத்தியவராக இருந்த போதும் அதன் தலைவர் என்று ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுகின்ற போது அவர் உமா மகேஸ்வரனையே பிரேரிப்பதையும் இங்கே அவதானிக்கவேண்டும். பிரபாகரனைப் போலவே வலிமையான ராணுவம் ஒன்றைக் கட்டமைக்கவேண்டும் என்ற கருத்துடையவராக இருந்தபோதும் ஏற்கனவே இளைஞர் பேரவையின் செயலாளர் என்ற வகையில் அறியப்பட்டவராகவும், தம்மை விட அதிகம் தொடர்புகளைக் கொண்டிருந்தவரும் உமா மகேஸ்வரன் என்றும், ஏற்கனவே அரசியல் போராட்டங்களில் அவர் தொடர்ந்து ஈடுபட்டுவந்தார் என்றும் ஐயர் குறிப்பிடுவதையும் இங்கே சுட்டிக்காட்டுவது முக்கியமானதாகவே தோன்றுகின்றது. ஏனெனில் உமா மகேஸ்வரனுக்குப் புலிகள் இயத்துடன் ஏற்பட்ட பிளவே பிரபாகரனை அதிகம் இறுக்கமானவராக்கியது என்று ஐயரும் (பக்கம் 211) குறிப்பிடுகின்றார்.

அது போல பின்னர் புலிகளில் ஜனநாயகத் தன்மை இல்லை என்பதைக் காரணம் காட்டிப் புலிகளில் இருந்து சுந்தரம் போன்றோர் பிரிந்து செல்கின்ற போது அவ்வாறான குற்றச்சாற்றுகள் இயக்கத்தை இரண்டாக உடைக்கும் நோக்குடையவை என்றே பிரபாகரன் மறுக்கின்றார். அதன் பின்னரும் சுந்தரம் தலைமையில் சிலர் பிரிந்துசெல்கின்ற போதும் உடனடியாகவே உமா மகேஸ்வரனும் சுந்தரம் போன்றோருடன் இணைந்து கொள்வதுடன் அந்நிகழ்வு பற்றி ஐயர் தொடர்ந்து,

“ஊர்மிளா தொடர்பான பிரச்சனையில் உமா மகேஸ்வரனைக் கொல்வதற்காக அனுப்பப்பட்டவர்களில் சுந்தரமும் ஒருவர். அவ்வேளையில் இருந்தே உமா மகேஸ்வரனுடன் சுந்தரத்துக்குத் தொடர்பிருந்திருக்கலாம் என்று எம்மில் பலருக்கிருந்த சந்தேகம் இப்போது உறுதியானது போலிருந்தது.

சுந்தரத்தின் அனுசரனையோடு சுழிபுரம் பகுதியிலேயே உமா மகேஸ்வரன் தங்கியிருந்ததாகவும் அவர்கள் (இங்கே அவர்கள் என்று ஐயர் குறிப்பிடுவது கண்ணன் மற்றும் சுந்தரத்தை – அருண்மொழிவர்மன்) எமக்குத் தெரிவிக்கின்றனர்” (பக்கம் 210).

இதைத் தொடர்ந்து நடைபெற்ற PLOTE மத்திய குழு விவாதங்களில் புலிகள் இயக்கத்தில் இருந்தது போலவே ராணுவத் தாக்குதல்களை முன்னெடுக்கவேண்டும் என்ற கருத்தை உமா மகேஸ்வரன், சந்ததியார், சுந்தரம் போன்றோர் முன்வைப்பதுடன் உமா மகேஸ்வரன், சுந்தரம் போன்றோரால் பணத் தேவைகளை நிவர்த்தி செய்ய கொள்ளைகளில் ஈடுபடவேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகின்றது. தவிர PLOTE இயக்கத்திலும் உமா மகேஸ்வரன், சந்ததியார், சுந்தரம் போன்றோர் அதிகம் செல்வாக்கு செலுத்தியதாகத் தாம் உணைர்ந்ததாகவும் ஐயர் இங்கே பதிவுசெய்கின்றார். அதாவது எந்தக் குற்றச்சாற்றுகளை முன்வைத்து புலிகள் இயக்கத்தை விட்டுப் பிரிந்து புளொட் இயக்கம் உருவாக்கப்படுகின்றதோ அதே செயற்திட்டங்களையும், அரசியலையுமே புளொட் இயக்கத்தினரும் தமது மிகத் தொடக்க கால மத்திய குழு விவாதங்களில் இருந்தே முன்னெடுத்தனர் என்பது தெளிவாகின்றது. தவிர சுந்தரம் முதலானோர் மீதான் தனது சந்தேகம் சரியானதுதான் என்பதில் பிரபாகரன் உறுதியடைந்திருக்கவும் முடியும்.

இவற்றை நான் இங்கே பதிவுசெய்வது புலிகளை முழுக்க பழி நீக்கம் செய்யவேண்டும் என்கிற முனைப்போடு அல்ல. புலிகள் பற்றிய விமர்சனங்களை முன்வைப்பவர்கள் அவர்களுக்காக நியாயங்களைப் பரிசீலனை செய்வதில்லை என்பதே எனது வாதம். இந்தப் புத்தகத்தில் புலிகள் மக்கள் அமைப்புகளை உருவாக்கவில்லை என்பதுவும், அரசியல் ரீதியான போராட்டங்களில் ஈடுபடவில்லை என்பதுவும் இந்தப் புத்தகத்தில் அடிக்கடி சொல்லப்பட்டிருக்கின்றது. அதே நேரம் 83ல் இருந்த அதே புலிகளை அமைப்பாகவே 2008 வரை இருந்த புலிகள் அமைப்பைப் பார்ப்பது ஏற்புடையதல்ல. 90களிற்குப் பின்னர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் நிறைய அமைப்புகள் புலிகளால் உருவாக்கப்பட்டிருந்தன. எத்தனையோ நூலகங்கள், படிப்பகங்கள், மாணவர் அறிவியல் கழகம் போன்ற அமைப்புகள், இது தவிர நிறைய வெளியீடுகள் என்று பல்வேறு தளங்களிலும் அதன் பின்னர் புலிகளின் செயற்பாடுகள் இருந்தன. Building the Tamil Eelam State: Emerging State Institutions and Forms of Governance in LTTE-controlled Areas in Sri Lanka என்கிற Kristian Stokke எழுதிய ஆய்வறிக்கையினை இது பற்றிய முக்கியமான பதிவொன்றென்று குறிப்பிடவிரும்புகின்றேன்.

இங்கே எனது கட்டுரையின் நோக்கம் யாரையும் புண்படுத்துவதோ அல்லது புலிகளைப் பாவ நீக்கம் செய்வதோ அல்லது பழியை பிறர் மீது சுமத்திச் செல்வதோ அல்ல. ஈழத்தில் மிக மோசமாக அடக்கப்பட்டிருக்கின்ற தமிழர்களின் தேசிய உரிமைப் பிரச்சனைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க, எமது கடந்த கால போராட்டங்களை சுய விமர்சனம் செய்யவும், மறு பரிசீலனை செய்யவும் வேண்டி இருக்கின்றது. ஆனால் மறு பரிசீலனை என்பது எல்லாத் தவறுகளையும் ஒரு தரப்பில் சுமத்தி விடுவதல்ல. இன்று பல்வேறு கட்டுரைகளிலும், விவாதங்களிலும் புலிகளை வெறும் பயங்கரவாதிகளாகச் சித்திரிப்பதையும், அடையாள அரசியல் என்ற பெயரால் நிராகரிப்பதையும், பாசிஸ்டுகள் என்று கடந்து போவதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. முதலில் அரச பயங்கரவாதத்தையும் அரசுக்கு எதிராக பயங்கரவாதத்திற்குமான வேறு பாட்டை இவர்கள் உணர்ந்து இது போன்ற வாதங்களை முன்வைக்க வேண்டும். பாசிஸ்டுகள் என்று கூறும்போது எதனால் புலிகள் பாசிஸ்டுகள் என்று சொல்கிறோம் என்பதை முன்வைக்க வேண்டும். பாசிஸ்டுகள் என்ற வார்த்தையை பொதுவாக தம்மை அடையாளபடுத்துவதை விட தமக்கு எதிரானவர்களை களங்கம் கற்பிக்கவே பிரயோகிக்கின்றனர் என்கிற Samanth Power ன் கூற்றையே இங்கே குறிப்பிடவிரும்புகின்றேன். ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பொன்றினை பாசிஸ்டுகள் என்று குறிப்பிடுவதில் இருக்கின்ற அபத்தத்தை இங்கே வலியுறுத்த விரும்புகின்றேன்.

இங்கே என்னுடன் பேச அல்லது கட்டுரை வாசிக்க அழைக்கப்பட்டிருக்கும் மற்றையவர்கள் அனேகம் வெவ்வேறு இயக்கங்களில் பங்கேற்றவர்கள், 90களின் முன்னர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை விட்டு வெளியேறியோர். அவர்களின் பார்வையிலிருந்து, 90 களின் பின்னர் புலிகளின் பூரண கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் பின்னர் சில காரணம் ராணுவ ஆக்கிரமிப்பின் கீழும் வாழ்ந்த எனது பார்வை நிச்சயம் வேறுபட்டே இருக்கின்ற அதே வேளை, இந்தக் காலப்பகுதியில் புலிகளின் நிர்வாகத்தின் கீழ் காவல்துறை, நீதி மன்றம், அரசியல் துறை, வைப்புழி என்று பல்வேறு நிர்வாக அலகுகளுடன் கூடிய நிகர் அரசாங்கமே நிகழ்ந்தது. புத்தகம் உள்ளடக்கும் காலப்பகுதியைத் தாண்டி இவற்றை நான் சுட்டிக் காட்டக் காரணம், புலிகள் போராட்டத்தை மக்கள் மயப்படுத்தவில்லை, அரசியலில் அக்கறை காட்டவில்லை என்று இந்தப் புத்தகத்தில் சுட்டிக் காட்டப்படுகின்ற போதும் அதன் பின்னர் தமது பூரண கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் புலிகள் செய்த திறமையான நிர்வாகம் பற்றி ஏதும் சொல்லப்படவில்லை என்பதே. அதே நேரத்தில் புலிகளில் அரசியல் பிரிவினரைவிட ராணுவப் பிரிவினரே அதிகம் செல்வாக்குச் செலுத்தியவர்களாக இருந்தார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை.

அறிவுஜீவிகளுடன் புலிகள் இணைந்து செயற்பட விரும்பவில்லை, அவர்களின் கருத்துக்களை புலிகள் செவிமடுக்கவில்லை என்பதில் ஓரளவு உண்மை இருப்பினும், நாட்டை விட்டு வெளியேறிய அனேக அறிவு சீவிகள் புலிகள் மீதான தமது கசப்புணர்வினை தொடர்ந்து புலிகளை நிராகரிப்பதன் மூலமாகவே வெளிக்காட்டினர். மேற்கத்திய சட்டகங்களுக்குள் நின்று புலிகளை மதிப்பிடுவதும், அரச தரப்பு, புலிகள் தரப்பு வன்முறைகள் போன்றவற்றை ஒரே சட்டகத்தில் வைத்து மதிப்பிடுவதுமாகவே அவர்களின் செயற்பாடு அமைந்தது, அது போலவே புலிகள் தரப்பினை கடுமையாக விமர்சிக்கின்ற இவர்கள் ஒரு போது புலிகள் தரப்பு நியாயங்களை ஏற்றுக்கொள்ளத் தவறியதுடன், அரச தரப்பு தவறுகளில் சில சமயங்களில் கள்ள மௌனம் சாதித்ததுடன், பல சமயங்களில் அது எல்லாருக்கும் தெரிந்ததுதானே எனவே நாம் அது பற்றிக் கூறவேண்டியதில்லை என்றும் விலகிக் கொண்டனர். புலிகள் மீதான காழ்ப்புணர்வினால் ஒட்டு மொத்த போராட்டத்திற்கான நியாயங்களையும் நிராகரிப்பதும் எதிர்ப்பதும் முறையாகாது.

நான் அறிந்து இதுவரை ஈழப் போராட்டம் பற்றிய பதிவுகளாக புதியதோர் உலகம், முறிந்த பனை, அடேல் பாலசிங்கத்தின் சுதந்திர வேட்கை, புஷ்பராஜாவின் ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம், செழியனின் வானத்தைப் பிளந்த கதை, எல்லாளனின் ஒரு மனிதனின் நாட்குறிப்பு, ஐயரின் ஈழப் போராட்டத்தின் எனது பதிவுகள் புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. இவற்றிற்கிடையே சில முரண்கள் இருந்தாலும் இவை அனைத்துமே ஈழப்போராட்டத்தில் அக்கறை கொண்டோர் வாசிக்கவேண்டிய புத்தகங்கள் என்றே சொல்வேன். இவர்களிலும் இவர்கள் சார்ந்து நின்ற இயக்கங்களிலும் விமர்சனங்கள் இருந்தாலும் தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் இவர்கள் எல்லாருமே களமிறங்கிப் போராடியவர்கள். எனவே இவர்களின் அனுபவங்களும் இவர்கள் கூறும் வரலாறுகளும் முக்கியமானவை.

அதே நேரம், ஐயர் தொடர்ந்து PLOTE மற்றும் NLFT தொடர்பான தனது அனுபவங்களையும் பதிவாக்கவேண்டும் என்பதையும் ஒரு வேண்டுதலாக முன்வைக்கின்றேன். இன்றைய சூழலில் ஈழம் மற்றும் தமிழ்த் தேசியம் தொடர்பான வாசிப்புகளிலும் விவாதங்களிலும் ஈடுபடுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதுகின்றேன்.

உதவிய புத்தகங்கள்:

1. ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்: கணேசன், இனியொரு வெளியீடு

2. மாவீரர் உரைகள், நேர்காணல்கள் – தோழமை பதிப்பகம்

3. Building the Tamil Eelam State: Emerging State Institutions and Forms of Governance in LTTE-controlled Areas in Sri Lanka –

குறிப்பு: ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் புத்தகத்தில் 1970 தேர்தல் பற்றிக் குறிப்பிடும்போது நவ சமாஜக் கட்சி என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் உண்மையில் அன்று கூட்டணி வைத்திருந்தது லங்கா சமசமாஜக் கட்சி.

http://www.keetru.co...cles&Itemid=264

Link to comment
Share on other sites

அர்ஜுன்,

இந்த காலிவூத் திரைப்படம் பார்க்காவிட்டால் நேரம் கிடைக்கும் பொழுது பாருங்கள் : http://www.imdb.com/title/tt0822854/

பெயர் : சூட்டர்

ஏன்இந்தப்படம்? - முள்ளிவாய்க்கால் போன்று ஒரு படுகொலையை பொருளாதார இலாபத்திற்காக ஒரு செனட்டர் செய்கிறார். அதில் சனாதிபதியை கொலை, அநியாய குற்றச்சாட்டுக்கள், பிழையை மறைக்க கொலைகள் என நீண்டு சென்று ....

Link to comment
Share on other sites

ஏற்கனவே குப்ரிக்கின் ' Lolita ', 'A clock work orange ', 'Barry Lyndon ', 'Eyes wide shut ' ஆகிய படங்களைப் பார்த்திருக்கிறேன்.[ Eyes wide shut திரைப் படம் நமது இயக்குனர் சிகரத்தால் 'பார்த்தாலே பரவசம் ' என்ற பெயரில் கடித்துக் குதறப் பட்டிருந்தது]

The Shining மூலம் குப்ரிக்கின் மீதுள்ள மதிப்பும், ஆர்வமும் மேலும் அதிகரித்திருக்கின்றன

இது இன்று நான் உமா வரதராஜனின் முகப்புத்தகத்தில் வாசித்தது .இதற்கு ஒருவர் வந்து "சும்மா இணையத்தில வந்து அவிக்காதையுங்கோ ,விஜயின் குருவியை போல வருமா "என பின்னூட்டம் விட அதுதானே என்று அதற்கு நாலு விஜய் ரசிகர்கள் விசில் அடித்தால் எப்படியிருக்குமோ அப்படித்தான் இருக்கு ,

அறிவிலியின் கேள்விகளும் அதற்கு விழும் பச்சைகளும்.

உங்களுக்கு விளங்கமுடியாத பக்கம் ஒன்று இருக்கு,

ஆமா அர்ஜுன் அண்ணா..ஜவ்னால இருந்தபோதும்,, தியேட்டர் தியேட்டராய் போய் படம்பார்த்தேன் என்னு எழுதுறீங்க........... தமிழ்நாட்டில.. ப்ளொட்ல இருந்தபோதும்,, தியேட்டர் தியேட்டரா போயி படம் பார்த்து நேரம் கொன்றேன்னும் எழுதுறீங்க...

கனடால இருக்கும்போதும்... படம்பார்த்தேன்,, அதில நான் பார்த்த படம் அளவிற்கு ,,

இவங்க போராட்ட சிந்தனை இல்லைன்னு முடிக்குறீங்க!!

ஏன் அர்ஜுன் அண்ணா அன்றுதொடக்கம் இன்றுவரை,,, சினிமா சினிமான்னு திரிஞ்ச நீங்க எப்பிடி சீரியஸான போராட்டதில் ,,, பற்றுவைச்சு இருந்தீங்க?

அப்புறம் என்னாது,, அறிவிலியின் கேள்விகளும் அதற்கு விழும் பச்சைகளும்.

உங்களுக்கு விளங்கமுடியாத பக்கம் ஒன்று இருக்கு,

அர்ஜுன் அண்ணா......... நல்லா சிந்திச்சு பாருங்க அது அறிவிலி கருத்துக்கு விழுந்த பச்சையா? என்னோட கருத்துக்கு யாரும் ஓடிவந்து பச்சை குத்த,, நானு என்ன பெரிய லார்டு லபக்கு தாஸா யாழ்ல? ஆக்குசுவலி அவை அத்தனையும் உங்க கருத்துக்கு வேற வழி இல்லாம தெரிவிக்கபட்டிருக்கிற எதிர்ப்பு!

உலகத்தின் பக்கத்தை விளங்கமுடியாத ,, இந்த...லூசுகூட்டத்தை ..ஒரு புறம் தள்ளிட்டு,,,,,,,, ஐயர் நூல்வெளியீட்டுக்கு போன, உலகம் தெரிஞ்ச மாகானுங்களா...

எதுக்கு அந்த நூல்வெளியீட்டுக்கே சம்பந்தமில்லாம...

ஸ்டாலின் ஹிட்லர் லெவல்ல போனீங்க,, மண்டபத்துக்கு வெளீலயும் கருத்து முரண்பாடு கொண்டீங்க?

படித்த நீங்க இப்டி பண்ணலாமா? வழமையா நீங்க சொல்ற படிக்காத பிரபாகரனுக்கு ,, கொடி புடிக்குற கூட்டம்தானே இதெல்லாம் பண்ணும்? நீங்க ஏன் பண்ணீனீங்க?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கன நாளைக்குபின் இந்த பதிவைப்பார்த்தேன்

எனது முடிவு தெரிந்துவிட்டதாக சசி எழுதியிருந்தார்.

எனது கேள்வியும் பதிலும் இதுதான்.

ஐயர் எதையும் எழுதட்டும்.

ஆனால் சுயமாக தம்பட்டமற்று.

அவரது நூலில் பிரபாகரனுடன் சேர்ந்து புலிகள் அமைப்பை தொடங்கிய காலம் என்று போடுவதே பிரபாகரனின் பெருமையை தனக்கும் தாருங்கள் என்பதாகத்தான்அமைகிறது. ஆனால் பிரபாகரன் தமிழ் மக்களுடன் நின்றபோது அவர்களது பிரச்சிகைளுக்கு முகம்கொடுத்துபோது ஐயர் சுகபோகமாக வாழ்ந்தார்.

அந்த பிரபாகரனுடன் சேர்ந்து புலிகள் அமைப்பை தொடங்கிய காலம் என்ற வசனத்தை எடுத்துவிட்டாலே ஐயர் காணாமல் போய்விடுவார்.

இதைத்தான் நான் எதிர்க்கின்றேன்.

நான் சொன்னேன்தானே இப்படி போனால் இப்படித்தான் ஆகும்? என்று . அதனால் நான் முன்பே விலகி வந்தது புத்திசாலித்தனம் என்பன போன்ற கருத்துக்களை ஏற்போமாயின் அவை அத்தனை மாவீரர்களையும் கேவலப்படுத்துவதாக அமையும். தோல்விக்கான காரணத்தை திசைமாற்றும இதுபோன்ற ஆய்வுகள் தமிழரை வேறு திசைநோக்கி தள்ளி மீளமுடியாத சேற்றுக்குள் அடிமைப்படுத்திவிடும் ஆபத்துள்ளது.

எனக்கு இதில் உடன்பாடில்லாதற்கு காரணம்

தோல்விக்கான காரணம் இவர் சொல்பவையல்ல என்பதில் எனக்கு தெளிவுண்டு.

இவை அனைத்தையும் மீறி பிரபாகரனாலும் புலிகளாலும்; பெரும் படையையும் தேசத்தையும் மக்களையும் வழிநடாத்தி உலகுக்கே காட்டினார்கள் என்று ARJUN ,இங்கு சொல்வதுதான் உண்மை.

இவர் தற்போது வந்து அதை திசை திருப்புகிறார் என்பதே எனது கவலை.

மற்றும்படிபோராளியாகவும் முதன்மைப்புலியாகவும் அவர் செய்தவற்றை நான் என்றும் மதிக்கின்றேன். மதிப்பேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜயரும் எவ்வளவு நாளைக்கு வெறும் பையையே பாத்து கொண்டு இருப்பது அவரது பையிலும் நாலு காசு சேர வேண்டாமோ?

Link to comment
Share on other sites

நான் ஒரு போதும் புத்தகம் எழுத மாட்டேன் அது ஏன் என்று சொல்லாம்லே உங்களுக்கு தெரியும்.

அதே போல எல்லோரும் புத்தகம் எழுத முட்யாது அதுவும் ஏன் என்று தெரியும்.

ஜயர் எழுத தெரியும் எழுதுகிறார் அதே போல எழுத அவரிடம் பழைய நிணைவுகள் இருந்தது அதை எழுதுகிறார்.

எனக்கு வாசிக்க தெரியும் . வாசித்து நல்லது கெட்டது ஓரளவுக்கு புரிந்து கொள்ள தெரியும் .

தமிழ்நெற் இலங்கையில் தடை?

அதே போல் தெனிலங்கை பத்திரிக்கை சிலது யாழ்ப்பனத்திலும் தடையாக இருந்தன.

யாழ்மக்கள் புலிகளின் குரல் கேட்ப்பார்கள்( அப்போதும் பசி அடங்வில்லை)

கொழும்பு வானலியும் கேப்பார்கள் .( போதுமான உணவு கிடைக்காது)

பிபிசி தமிழோசையும் கேப்பார்கள் ( பசியை போக்கி கொண்டார்கள்)

வெரித்தாஸும் கேப்பார்கள்( நித்திரை வரும்)

Link to comment
Share on other sites

கனடாவில் நிகழ்வுற்ற நூல் அறிமுத்தில் உரையாற்றிய ரகுமான் ஜான் ஐயருடைய காலப்பகுதியில் திருகோணமலைப் பகுதியில் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகளோடு தன்னை இணைத்துக்கொண்டவர். ரகுமான் ஜானின் உரையின் முழுமையான பகுதி இங்கே தரப்படுகிறது.

meeting3-300x124.jpgபோராட்டத்தின் வரலாறு பற்றிய விரிவான அறிவு இல்லாதவர்களிடையே புலிகள் கட்டமைத்துள்ள ஒற்றைப்பரிமான கதையாடலை இந்த நூல் மறுப்பது மாத்திரமன்றி, போராட்டம் பற்றிய ஓரளவு விபரம் தெரிந்தவர்களுக்குக் கூட, புலிகள் அமைப்பினுள் நடைபெற்ற உட்கட்சிப் போராட்டங்களை, அதன் ஆரம்பகால வளர்ச்சிநிலையில், எவ்வித பாசாங்குத்தனமும் இன்றி உண்மையாக, நேர்மையாக முன்வைக்கிறது. இந்த வகையில் ஐயர் இந்த வரலாற்றை நேர்மையாக பதிவு செய்வதன் மூலமாக, தன்னளவில் ஒரு முக்கியமான வரலாற்பாத்திரத்தை ஆற்றியுள்ளார். இந்த நூலானது இப்போதும், எதிர்காலத்திலும் எமது போராட்டம் தொடர்பாக உண்மையான அக்கறையுடன் தேடல்களை நிகழ்த்துபவர்களுக்கு ஒரு ஒப்பற்ற ஆதாரமாக அமையும் என்பதில் சந்தேகத்திறகு இடமில்லை.

இந்த நூலானது மேலே கூறியது போன்று முக்கியமான பாத்திரத்தை ஆற்றுகின்ற போதிலுங்கூட, இன்னமும் இதன் முழுமையாக உள்ளாற்றலும் (potential) கைவரப்பெறாத நிலையில், இதிலுள்ள பலவேறு விடயங்களும், வெறும் தகவல்களாக, உணர்வுகளாக முறையாக கோட்பாட்டாக்கம் செய்யப்படாததாகவே இருக்கிறதன. ஆதலால் இந்த படைப்பின் முழுமையான potential ஐ நாம் கைவரப்பெற வேண்டுமாயின், இந்த நூலானது சரியான கோட்பாட்டு சாதனங்களின் உதவியுடன் அனுகப்பட, பரிசீலிக்கப்பட வேண்டிய அவசியத்தில் உள்ளது. அந்த பாத்திரத்தை நான் எனது உரையில் மூலமாக ஆற்ற முனைகிறேன்.

வரலாற்றில் தனிநபரது பாத்திரம் குறித்து…

praba.jpgதலைவர் பிரபாகரன் சூரியதேவன் என்றும் முருகனின் அவதாரம் என்றும், அந்த தனிமனிதனது சாதனைகளே தமிழீழ விடுதலைப்போராட்டம் என்று துதிப்பவர்களது கருத்துக்கள் எவ்வளது அபத்தமானவையோ, அதேயளவு அபத்தமானவை தேசியவிடுதலைப் போராட்டத்தில் நிகழ்ந்த அத்தனை இடர்பாடுகளுக்கும் பிரபாகரன் என்ற தனிமனிதனே என்ற குற்றச்சாட்டுமாகும். அதிலும் முன்னையவர்கள் மிகவும் சாதரமாணவர்கள், விரிவான அரசியல் ஞானமற்றவர்கள். இதனால் இவர்களது தவறுகள், அவை எவ்வளவுதான் பாரதூரமானவையாக இருப்பினுங்கூட மன்னிக்கத்தக்கவை. ஆனால் இரண்டாவது தரப்பினர், தம்மை முற்போக்காளர்களாகவும், அறிவுஜீவிகளாகவும் பிரகடனப்படுத்திக்கொண்டு இதே தவறை செய்யும் போது அது அவர்களது அறியாமையை காட்டவில்லை. மாறாக அவர்களது அயோக்கியத்தனத்தை மாத்திரமே கோடிட்டுக் காட்டுகிறது.

வரலாற்றில் தனிநபர்களது பாத்திரம் குறித்த விடயமானது மிக நீண்டகாலமாக கடுமையான வாதப்பிரதிவாதங்களுக்கு உரிய ஒரு விடயமாகும். வரலாற்றை தீர்மானிப்பதில் சமுதாயத்தின் கட்டுமானங்களாக பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், மற்றும் அந்த சமூக்தின் குறிப்பான வரலாற்று நிலைமைகள் எவ்விதமான பாத்திரம் வகிக்கின்றன என்பதில் பல்வேறு தத்துவஞானிகளும் பலவிதமாக நிலைப்பாடுகளை மேற்கொண்டுள்ளார்கள். அவ்வாறே அந்த வரலாற்று இயக்கங்களில் முதன்மையான பாத்திரம் வகிக்கும் தனிநபர்களது பாத்திரம் பற்றியும் பலவிதமான நிலைப்பாடுகள் இருக்கின்றன. மார்க்சியமானது வரலாற்றில் பொருள்வகை அம்சங்களது பாத்திரத்தை வலியுறுத்துகின்ற போதிலுங்கூட, அது தனிநபர்களது பாத்திரங்களை முற்றாக நிராகரித்துவிடுவதில்லை. இந்த பொருள்வகை காரணிகள் ஏற்படுத்தும் வரையறுத்த எல்லைக்குள் இந்த தனிநபர்களது தனிச்சிறப்பம்சங்களான அவரது வர்க்க-சமூக பின்னணி, அவரது பிரக்ஞை மட்டம், அறிவாற்றல், அவர் தேர்ந்தெடுக்கும் அரசியல் மற்றும் அவரது உளவியல் குணநன்கள் கணிசமான பாத்திரம் ஆற்றவே செய்கிறது. இந்த வகையில் சமூக கட்டமைப்புகளுக்கும், தனிநபர்களது பாத்திரத்திற்கும் இடையிலான இயங்கியல் உறவை சரிவர கருத்திற்கொள்ளாத எந்தவிதமான ஆய்வுகளுமே விஞ்ஞானபூர்வமானாக அமையமாட்டாது.

இந்தவகையில் பார்த்தால் தமிழ் சமுதாயமானது மிகவும் ஒரு பிற்போக்கான சமூகமாகும். யாழ்-சைவ-வேளாள-ஆணாதிக்க சிந்தாந்தத்தின் பிடியில் சிக்கியிருப்பதாகும். இதனைவிட விரிவான ஜனநாயக கருத்துக்களோ, சமூக நடைமுறைகளோ வழக்கில் இல்லாத ஒரு சமூகமாகும். அரசாங்க உத்தியோகம், சிறு அளவிலான விவசாயம், மீன்பிடி மற்றும் உள்ளூர் சில்லறை வர்த்தகம் என்பவற்றிலேயே பெரிதும் தங்கியுள்ள ஒரு பொருளாதார வளர்ச்சியற்ற ஒரு சமுதாயம். எமது சமுதாயத்தில் உயர்கல்வியை நாடுபவர்கள் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிகவும் அதிகமே என்றபோதிலும் அந்த கற்றலானது வெறுமனே நிபுணத்துவம் சார்ந்த கற்றல் என்பதைத் தாண்டி சமூக அக்கறை கொண்டதாக அமையவில்லை என்பது வெளிப்படையானது.

இப்படிப்பட்ட ஒரு சமுதாயத்தில் சாதியரீதியில் உயர்நிலையில் இல்லாத ஒரு சமூகப்பிரிவிலிருந்து, உயர்கல்வியையோ, விரிவான அரசியல் போதமோ ஊட்டப்படா, வெறும் பதினேழு வயதான இளைஞனாக பிரபாகரன் போராட்டத்திற்கு வருகிறார். அவர் இந்த சமூகத்தையும், போராட்டத்தையும் முகம் கொடுத்த விதமே இந்த நூலின் முக்கிய கருப்பொருளாகிறது. அரசிற்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடுவது, இந்த அரசினதும், ஏனைய போராட்டத்திற்று ஊறு விளைவிக்கும் சக்திகளது நடவடிக்கைகளில் இருந்து தப்பிப்பிழைப்பது என்பதே இந்த நூலின் பொருளாகிவிடுகிறது.

alternatives.jpgஇந்த இடத்தில் முக்கியமான இன்னொரு விடயத்தைக் குறிப்பிட வேண்டும். புலிகளது அரசியல் வறுமை பற்றி விமர்சிப்பவர்கள் எவருமே மாற்றாக ஒரு விரிவான திட்டத்தை வகுத்து முன்வைத்து, ஒரு பலமான அமைப்பை ஒழுங்கமைக்க முடியாதவர்களாகவே உள்ளோம் என்பது ஒரு வேதனையான உடன்நிகழ்வாகும். இந்த குறைபாட்டிற்கு வெறுமனே புலிகளது தடை நடவடிக்கைகளை மாத்திரம் காரணமாக கூறி யாரும் தப்பித்துக் கொள்ள முடியாது. புரட்சிகர இயக்கங்கள் எதுவுமே எதிரியினதும், எதிர்ப்புரட்சிகர சக்திகளதும் அனுமதியுடன் போராட்டத்தை திட்டமிடுவதோ, முன்னெடுப்பதோ கிடையாது. எதிர்ப்புரட்சிகர சக்திகள் அரங்கிற்கு வருகையில் அவற்றை எவ்வாறு முகம் கொடுப்பது என்பதும் புரட்சிகர திட்டமிடலில் அமைந்திருக்க வேண்டும். தீப்பொறி, என்எல்எப்ரி போன்ற அமைப்புகளின் சிதைவில், அந்த அமைப்புக்களது அகக் கூறுகளே, உள்முரண்பாடுகளே பிரதான பாத்திரம் வகித்தன என்பது மிகவும் முக்கியமான உண்மையாகும். இந்திய – இலங்கை அரசுகளின் கால்களில் சரணடைந்துவிட்டவர்கள், ஜனநாயகத்தை பற்றிப் பேசுவதற்கு இலாயக்கற்றவர்களாவர். இது இன்றுவரையிலான இவர்களது நடவடிக்கைகள் மூலமாகவே தெளிவாகிறது.

தன்னியல்புவாதம்

புலிகளது ஆரம்பகால சிந்தனைகளை பரிசீலிக்கும் எவருக்கும் சில உண்மைகள் தெளிவாக தெரியும். புலிகளிடம் தெளிவான, திட்டவட்டமான அரசியல் கருத்துக்கள் இருக்கவில்லை. இவர்கள் தம்மை தமிழர் விடுதலை கூட்டணியின் இராணுவ வடிவமாகவே கண்டார்கள். இது தவிகூ உடன் நேரடியான தொடர்புகள் இல்லாத காலத்திலும் சரி, பின்னர் நேரடியான தொடர்புகள் உருவாகிவிட்ட பின்னருங்கூட இப்படிப்பட்டதொரு கருத்தையே கொண்டிருக்கிறார்கள்.

புலிகளைப் பொருத்தவரையில் விடயங்கள் மிகவும் இலகுவானவையாகவும், தெளிவானவையாகவும் இருக்கின்றன. தமிழ் மக்களை சிறிலங்கா அரசு ஒடுக்கிறது. இந்த அரசுக்கு எதிராக போராடுவதற்காக ஒரு படையை அமைப்பது: எதிரியை தாக்குவது: அதற்குத் தேவையான ஆயுதங்களைப் பெற்றுக்கொள்ளவும், போராளிகளை பராமரிப்பதற்கும் பணம் தேவைப்படுகிறது. அதனால் வங்கிகளில் கொள்ளையிடுவது: தம்மைத் தேடிவரும் எதிரிகளையும், எதிரிக்கு துணைபோகும் துரோகிகளையும் வேட்டையாடுவது: இந்த நடவடிக்கைகளினூடாக ஒரு பலமான படையை கட்டியமைத்தால் எமது தாயகத்தை எதிரியிடம் இருந்து விடுவித்துக்கொள்ள முடியும். ஒரு தனியரசை நிறுவுவதன் பின்பு அமைப்பை கலைத்துவிடுவதாக முடிவு செய்கிறார்கள்.

telo.jpgஇங்கே நாம் தன்னியல்புவாதத்தின் அசலான வகைமாதிரியை (classical example) காண்கிறோம். இங்கே சமூகமானது அதன் அத்தனை சிக்கலான பிரச்சனைகளுடனும் கோட்பாட்டு மட்டத்தில் புரிந்து கொள்ளப்படாமல், வெறுமனே அனுபவவாத மட்டத்தில் புரிந்து கொள்ளப்படுகிறது. இதனால் விரிவான கோட்பாட்டு மட்டத்திலான ஆய்வுகள், எதிரிகள் – நண்பர்களை சரிவர வரையறுத்துக் கொள்வது: அரசியல் திட்டம், மூலோபாயம் – தந்திரோபாயம் போன்றவற்றை வரைந்து கொள்வது: அமைப்பு விதிகள்: இராணுவ மூலோபாயம் – தந்திரோபயம் பற்றிய அறிதல் எதுவுமின்றி போராட்டம் தொடங்கிவிடுகிறது. தமது கண்ணுக்கு எதிரே தெரியும், தொட்டுணரத்தக்க இலக்குகளை தேர்ந்தெடுத்து தாக்குதல் நடத்துவதும், அந்த தாக்குதல்களுக்கு வரும் எதிர்தாக்குதல்களைமுகம் கொடுத்து முறியடிப்பதும் என்று போராட்டம் தீவிரமாக முன்னேறுவதான ஒரு தோற்றப்பாட்டை அதில் ஈடுபடுபவர்களுக்கும், மக்களுக்கும் உருவாக்குகிறது. ஆனால் இந்த தேனிலவு நீடிக்கவில்லை. நெருக்கடிகள் அமைப்பினுள், அதுவும் அமைப்புத்துறை மற்றும் போராட்ட வழிமுறை தொடர்பாக உருவாகி, கடைசியில் பிரபாகரன் தனிமனிதனாக விடப்படுகிறார். தன்னை ரெலோ இயக்கத்தில் இணைத்துக் கொள்கிறார்.

தன்னியல்பு அல்லது தன்னெழுச்சி என்பது தானாக, இயல்பாக குறிப்பிட்ட சமூகப்பிரிவினருக்கு கைவரப்பெறும் நடைமுறைகள் என்று அர்த்தம்பெறும். மாணவர்கள் பாடசலையை பகிஸ்கரிப்பதும், தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்வதும், இளைஞர்-யுவதிகள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டங்கள் செய்வதும், இந்த ஆர்ப்பாட்டங்களின்போது பொதுச்சொத்துக்களுக்கு, அவை அரசின் சொத்துக்கள் என்ற எண்ணத்தில் சேதமிழைப்பதும், சில ஆயுத தொடர்புகளைக் கொண்டிருப்பவர்கள் அரசுக்கு ஆதரவானவர்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்துவதும் இந்த சமூகப்பிரிவினருக்கு மிகவும் இயல்பாக ஏற்படும் தன்னியல்பின், தன்னெழுச்சியின் வெளிப்பாடாகும்.

தன்னியல்பு மற்றும் பிரக்ஞை ஆகியவற்றிற்கு இடையிலான உறவென்பது இயங்கியல்ரீதியானது. பிரக்ஞை என்பது தாம் பற்றியும், தமது சூழல் பற்றியும் ஒரு தெளிவான சிந்தனையுடன், திட்டவட்டமான இலக்குகளை வகுத்து, அவற்றை அடைவதற்கான மூலோபாயம் – தந்திரோபயம் அடிப்படையில், சரியான சக்திகளை அணிதிரட்டி அவர்களது போராட்டத்திற்க தலைமை தாங்குவதைக் குறிக்கிறது. இதற்கு மாறாக, தன்னியல்பு என்பது இந்த வகையான ஆளமான பார்வை, திட்டமிடல், மற்றும் தயாரிப்பு போன்றவை இன்றி, தமக்கு கண்முன்னே தெரிகின்ற இலக்குகளுக்கு எதிராக, தொட்டுணரத்தக்க விளைவுகளை நோக்கி, இங்கேயே, இப்போதே, இப்படியே என்றவகையில் செயட்படுகிறது. முறையான தயாரிப்புக்களோ, அல்லது சரியான திட்டமிடலோ இன்மையானல் தன்னியல்பான போராட்டங்கள் அடிக்கடி நெருக்கடிக்குள்ளாகின்றன. போராட்டத்தில் ஏற்படும் தவறுகளை மதிப்பிடுவதற்கும், பரிசீலனை செய்வதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. சுக்கான் இல்லாத, திசையறி கருவியல்லாத படகுபோல எப்போதும் முன்னோக்கிச் செல்வதான ஒரு தோற்றப்பாட்டுடன் இயங்கிக் கொண்டிருக்கும். ஆனால் பல சந்தர்ப்பங்களில் அது தான் சொல்லிக் கொண்ட இலக்கை அடைவது மிகவும் அறிதானது. முப்பது வருட போராட்டத்தில் புலிகளது முடிவு அதனை தெளிவாக காட்டுகிறது.

நாம் முன்னரே பார்த்தவாறு தன்னியல்பிற்கும் பிரக்ஞைக்கும் இடையிலான உறவானது இயங்கியல்ரீதியானது என்றான பின்னர், தன்னில்பையும், பிரக்ஞையையும் ஒன்றிற்கு ஒன்று எதிரானதாக காட்டுவது அபத்தமானது. மக்கள் மிகப்பெரும்பாலன சந்தர்ப்பங்களில் தன்னியல்பாகத்தான் செயற்படுகிறார்கள். சாதாரண மக்களது அன்றாட வாழ்வியல் சுமைகளும், அவர்கள் மீது ஆதிக்க சித்தாந்தங்கள் செலுத்தும் ஆதிக்கமும் இந்த நிலைமையைக் கடந்து முன்னேற பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவர்களை அனுமதிப்பது கிடையாது. ஆனால் தலைமை என்பது வழிகாட்டுதல் என்று அர்த்தப்படும். இது கட்டாயமாக பிரக்ஞைபூர்வமானதாக அமைந்திருப்பது அவசியமானது. தான் எங்கே செல்கிறேன் என்பதை சரிவர தெரிந்தவரினால் எடுத்தவருக்க வழிகாட்டுதல் சாத்தியமாகும்.

இங்கு காணப்படும் ஒரு முக்கியமான முரண்உண்மை (paradox) யாதெனில், தலைமையானது, தனது குறிப்பான வர்க்க நிலைமை மற்றும் புரட்சியின் நெருக்கடியான நிலைமைகள் காரணமாக, தவிர்க்க முடியாதவாறு யதார்த்தத்தில் இருந்து துண்டிக்கப்படும் நிலைமை ஏற்படுகிறது. மாறாக, மக்கள், தமது அன்றாடமான, மிகவும் அற்பமான சாதாரண விடயங்களில் மூழ்கிப் போகும் சமயங்களில் கூட சமுதாயத்தில் வாழ்ந்துகொண்டு, அதனை அதன் அத்தனை அன்றாட சின்னத்தனங்களுடனும் முகம் கொடுத்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். இதனால் மக்கள் தலையைவிட யதார்த்தத்திற்கு மிகவும் நெருக்கமானவர்களாகவும் இருக்கிறார்கள். இதனால் பிரக்ஞைபூர்வமான தலைமையானது சில சமயங்களில் கண்டறியத் தவறும் பல விடயங்கள் இந்த சாமாண்யர்களுக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கிறது. இதன் பிரச்சனைகளுக்கான தீர்வுகளுங்கூட, இந்த மக்களிடம் இருந்து தன்னியல்பாக வெளிப்படுகிறது.

french_revolutionfront-150x112.jpgஉதாரணமாக, பிரெஞ்சுப் புரட்சியின்போது அதன் தலைவர்களது அக்கறையானது ஆரம்பத்தில் ஒரு வரம்பிற்குட்பட்ட முடியாட்சியை அமைப்பது என்பதைத் தாண்டியதாக இருக்கவில்லை. ஆனால் பாரிஸ் மக்களது தன்னியல்பான செயற்பாடுகள் நிலைமையை தலைகீழாக மாற்றிப்போட்டது. உதாரணமாக, பாஸ்டீல் சிறையுடைப்பு, பிரெஞ்சு மன்னன் லூயியை வெர்சேயிலிருந்து பாரிசிற்கு அழைத்து வந்தது, கிராமப்புறங்களில் நடைபெற்ற பிரபுக்களுக்கு எதிரான போராட்டம் என்பன தவிர்க்கமுடியாதவாறு புரட்சியின் தலைவர்களை குடியரசை பிரகடனப்படுத்தும்படி நிர்ப்பந்தித்தது. அவ்வாறே ரஷ்ய புரட்சியிலும் தொழிலார் மற்றும் படைவீரர்களது சோவியத் அமைப்பும் இவ்வாறு தன்னியல்பாக தோன்றியதே. போல்சேவிக் கட்சியானது இந்த தன்னியல்பான எழுச்சியை பற்றிக்கொண்டு அதற்கு வழிகாட்டி தலைமை தாங்கினார்கள். இப்படியாக தன்னியல்பான மக்களது போராட்டங்களில் இருந்து கற்றுக்கொள்வதும், அவற்றில் கலந்து கொள்வதன் மூலமாக படிப்படியாக அவற்றில் ஈடுபடுபவர்களுக்கு போதமூட்டி, வழிகாட்டுவதன் மூலமாக மக்களது பிரக்ஞை மட்டத்தை உயர்த்துவதுமே புரட்சியாளர்களது கடமையாகும். உண்மையில் மக்களது மாபெரும் சக்தியை தட்டியெழுப்பி, அதற்கு தலைமை தாங்குவதன் மூலமாகவே புரட்சியாளர்கள் தம்முன்னுள்ள மாபெரும் வரலாற்றுக் கடமைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.

மாறாக எமது போராட்டத்தில் புலிகள் அமைப்பானது மக்களை அணிதிரட்ட முயலாதது மட்டுமல்ல, மாறாக மக்களது தன்னியல்பான போராட்டங்களை முற்றாக நசுக்கினார்கள். ஒரு கட்டத்தில் மக்களது பேச்சு சுதந்திரத்தை அங்கீகரிப்பது என்பது தற்கொலைக்கு சமமானது என்று அதன் தலைவர்கள் பகிரங்கமாகவே குறிப்பிட்டனர். உண்மையில் அதுவேதான் இறுதியில் நடந்து முடிந்தது. முள்ளிவாய்க்கால் என்பது ஒரு மாபெரும் தற்கொலைதான்.

இலக்கும் வழிமுறையும்

போராட்டம் தொடர்பான ஒரு முழுமையான பார்வையின்றி முன்னெடுக்கப்படும் புலிகளது போராட்டமானது ஒரு கட்ட்தில் தனது இலக்கிற்கும், அதனை அடைவதற்கான வழிமுறைக்கும் இடையில் வேறுபாடுகளை காணத்தவறிவிடுகிறது. தமிழ் மக்கள் தமது தேசிய ஒடுக்குமுறையில் இருந்து விடுவித்துக்கொள்வது என்பதே போராட்ட்தின் இலக்காக அமைகிறது. அந்த இலக்குதான் தமிழீழ அரசை அமைப்பதாக வரையறுக்கப்படுகிறது. இந்த இலக்கை அடைவதற்கான வழிமுறைகளில் ஒன்றே ஆயுத போராட்டமாகும். இந்த போராட்டத்தை முன்னெடுப்பதற்காகவே புலிகள் அமைப்பானது உருவாக்கப்படுகிறது. ஆனால் படிப்படியாக அமைப்பு, அதன் பாதுகாப்பு என்பன முக்கியப்படுத்தப்படத் தொடங்குகிறது. இறுதியில் இது மக்களை பலிகொடுத்தாவது அமைப்பையும், அதன் தலைமையையும் பாதுகாப்பது என்பதாக மாறிவிடுகிறது. இதன் போக்குகள் ஆரம்பத்திலேயே தென்படத் தொடங்குகின்றன. சகபோராளிகளது ஜனநாயக உரிமைகள், கருத்துச் சுதந்திரங்கள் அமைப்பை பாதுகாப்பது என்ற பெயரால் மறுக்கப்படுகின்றன. இந்த போக்கின் மிகவும் வளர்ந்த போக்குத்தான் மக்களை பலிகொடுத்து அமைப்பை பாதுகாக்க முனைந்தததை முள்ளிவாய்காலில் காண்கிறோம்.

உட்கட்சிப் போராட்டமும், அதில் வெளிப்பட்ட போக்குகளும்

இயக்கத்தினுள் தலைமையினது தன்னிச்சையான போக்குகளுக்கு எதிராக தொடங்கிய சாதாரண முனுமுனுப்புகள், பின்னர் மார்க்சியத்தின் அறிமுகத்துடன் எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்ட உட்கட்சிப் போராட்டமாக உருப்பெருகிறது என்பதை ஐயர் சிறப்பாக விளக்கியுள்ளார். அதிலும் குறிப்பாக பெரும்பான்மையானது இயக்கத்தின் போராட்ட வழிமுறைகள் தொடர்பான பிரச்சனைகளில் தீவிரமாக கவனத்தைக் குவிக்கும்போது, சில தனிநபர்கள் அதனை வெறுமனே தலைமை பற்றிய பிரச்சனையாக குறுக்குவதும், இந்த பார்வை உண்மையான போராட்டத்தைப் பலவீனப்படுத்துவதும் மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

PLOTE-135x150.jpgகுறிப்பாக, சுந்தரம், மாறன், மனோ மாஸ்டர் போன்றோர் தத்தமது வீரப் பிரதாபங்களை பிரகடனப்படுத்த முயற்சிப்பது எவ்வாறு ஆரம்ப அணிசேர்க்கைகளை மாற்றியமைக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. அத்துடன் புதியபாதை குழுவினருடன் செயற்பட்ட சுந்தரம், கண்ணன் ஆகியோர் உமா மகேஸ்வரன், சந்ததியார் போன்றோரை உள்வாங்கியதில் காட்டும் அவசரம், தன்னிச்சை போக்கும், பின்னர் கழகத்தின் மத்திய குழுவானது, போராட்டம் தொடர்பாக அரசியலையும், இராணுவ செயற்பாடுகளையும் ஒருங்கே முன்னெடுப்பது என்ற முடிவும், கழகத்தின் மத்திய குழுவிற்கு தெரியாமலேயே இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் காட்டும் தீவிரமும், புதிய அமைப்பினுள் புலிகள் அமைப்பில் நேர்மையாக போராடிய முற்போக்கு சக்திகளது நோக்கங்கள் அடிபட்டுப் போவதைக் காட்டுகிறது. கழகத்தின் பிற்கால வளர்ச்சியானது அதனை அப்படியே வெளிப்படுத்தியது.

உண்மையில் புதியபாதை குழுவினர் தம்முன்னிருந்த கோட்பாட்டு, அரசியல் மற்றும் அமைப்புத்துறை சார்ந்த பிரச்சனைகளுக்கு கோட்பாட்டு மட்டத்தில் இயன்றவரையில் தீர்வுகாண முயன்றிருக்க வேண்டும். இதுவொரு மாபெரும் பணியாகும். இதனை எடுத்த எடுப்பிலேயே முழுமையாகவும், திருப்தியாகவும் தீர்த்திருக்க முடியாது என்பது உண்மையே என்றபோதிலும், இவற்றை தீர்வு காண்பது தொடர்பான அக்கறைகளும், அதற்கு அமைப்பு வழங்கும் முக்கியத்துவமும் சற்று காலம் கடந்தாவது இந்த நோக்த்தை நிறைவு செய்ய உதவியிருக்கும். ஆனால் பாதுகாப்பு பற்றிய பிரச்சனைகள் முதன்மை பெறுவது, மற்றும் சுந்தரம் தன்னிச்சையாக உமா மகேஸ்வரன், சந்ததியார் போன்றோரை உள்வாங்குவதில் காட்டும் அவசரம் போன்றவை இந்த வாய்ப்புகளை ஆரம்பத்திலேயே தடுத்துவிடுகிறது. இதனால் புலிகள் அமைப்பினுள் உட்கட்சிப் போராட்டத்தை உளசுத்தியுடன் முனனெடுபித்தவர்கள் கழகத்தில் இருந்து ஒதுங்கி வெளியேறுகிறார்கள். இவர்களது முடிவு சரியானதே என்பதை பின்னர் வரலாறு நிரூபித்ததை நாம் காண்கிறோம்.

விடுபட்ட சில விடயங்கள்

இந்த நூலில் விடுபட்டுப் போன ஒரு விடயமாக நான் பார்த்த அம்சத்தை இங்கு நான் குறிப்பிட்டாக வேண்டும். சந்ததியாருக்க மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று பிரபாகரன் முன்மொழியும் கட்டத்தை ஐயர் குறிப்பிடும் போது அந்த முன்மொழிவுக்கும், அதுவரையில் சொல்லப்பட்டு santhathiyar-231x300.jpgவந்த கதையோட்டத்திற்கும் இடையில் ஒரு இடைவெளியிருப்பதை வாசிப்பவர்கள் கவனித்திருக்க முடியும். சந்ததியார் வெறுமனே உமா மகேஸ்வரனின் ஆதரவாளர் என்ற காரணத்திற்காக பிரபாகரன் அவருக்க மரண தண்டனை விதிக்க வேண்டும் என முன்மொழிவதான ஒரு தோற்றப்பாடு இங்கு உருவாகிறது. ஆனால் சந்ததியாருக்கும் பிரபாகரனுக்கும் இடையிலான முரண்பாட்டிற்கும் சில காரணங்கள் இருக்கின்றன. ஐயர் இதனை நேரில் பார்க்கவில்லை. ஆனால் அறிந்திருந்தார். ஆனால் எவ்வாறோ அது தவறி விட்டுள்ளது. ஆதலால் அதனை இங்கு குறிப்பிடுவது அவசியமானது என்று நினைக்கிறேன்.

இளைஞர் பேரவை சார்பாக புலிகள் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சந்ததியார் இந்தியாவுக்கு சென்று சிலகாலம் அங்கு புலிகளது வீட்டிலேயே தங்கியிருக்கிறார். அப்போது இந்தியாவில் தங்கியிருந்த புலிகளது அங்கத்தவர்களில் பலர் போதியளவு அரசியல் விழிப்புணர்வு இன்றி இருப்பதைப் பார்த்துவிட்டு, புலிகளது அங்கத்தவர்களுக்கு சந்ததியார் ஒரு கேள்விக் கொத்தை தயாரித்து முன்வைக்கிறார். இதில் இருந்த கேள்விகள் எல்லாம் சாதரணமான அரசியல் விவகாரங்கள் பற்றியவையே. உதாரணமாக நாம் ஏன் போராடுகிறோம்? எமது இலக்குகள் என்ன? அதனை எவ்வாறு அடையப்போகிறோம்? அடையப்போகும் ஈழத்தில் நாம் தமிழர் சமுதாயத்தில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளுக்கும் எவ்வாறு தீர்வு காணப்போகிறோம்? என்பது போன்ற அடிப்படையான கேள்விகளாகவே

இந்த கேள்விகளும் இது தொடர்பான கருத்தாடல்களும் புலிகளது வீட்டில் ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் காரசாரமாக விவாதிக்கப்படுகிறது. பிரபாகரன் இந்திய சென்றபோது இந்த சலசலப்பை பார்த்து, அமைப்பினுள் தேவையில்லாத குழப்பங்களை சந்ததியார் ஏற்படுத்துவதாக கடிந்து கொள்கிறார். இந்த பிரச்சனையுடன் கூடவே உமா மகேஸ்வரனது பிரச்சனையும் சேர்ந்துவிடவே அது அவர் மீதான மரண தண்டனை முன்மொழிவாக மாறுகிறது.

meeting2-300x155.jpgஅடுத்த ஒரு பிரச்சனை புலிகள் அமைப்பினுள் தோன்றிய உட்கட்சிப் போராட்டத்தில் எமது பாத்திரம் குறித்த ஒரு விடயமாகும். 1978 இன் பிற்பகுதியில் திருகோணமலையில் இருந்த பயஸ் மாஸ்டர் என்பவரின் மாணாக்கராக இருந்த இளைஞர்கள் சிலர் ஒரு சிறு குழுவாக செயற்பட்டு வந்தார்கள். பயஸ் மாஸ்டர் மூலமாக இவர்களுக்கு மார்க்சியம் பரிச்சயமானது. அத்தோடு இவர்களது சுயமான தேடல்களுமாக இவர்கள் ஒரு தீவிரமான அரசியல் அக்கறையுள்ள ஒரு குழுவாக உருப்பெற்றார்கள். பிற்காலத்தில் இந்த குழுவானது புலிகள் அமைப்புடன் இணைந்து கொண்டது. ஆரம்பத்தில் புலிகள் அமைப்பிலிருந்து திருகோணமலைக்கான தொடர்பாளராக குமணன் என்பவரே விளங்கினார். இந்த குமணன் திருகோணமலைக்கு வரும் சமயங்களில் எல்லாம் இந்த குழுவினருடன் கலந்துரையாடல்களை நடத்துவார். பிற்காலத்தில் மனோ மாஸ்டர் இந்த பாத்திரத்தை ஆற்றினார். மனோ மாஸ்டருக்கும் இந்த குழுவினருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் உருவாகத் தொடங்குகின்றன. குறிப்பாக மனோ மாஸ்டர் தனக்கான விசுவாசிகளை உருவாக்கும் முயற்சியில் இறங்குவதாக இந்த குழுவினர் கருதியதால் அவருடன் கருத்து மோதல்கள் உருவாகின. பின்னர் இந்த குழுவில் இருந்த பெரும்பான்மையானவர்கள் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறிவிட, சார்ல்ஸ் அன்ரனியும், புலேந்திரனும் மாத்திரமே மனோ மாஸ்டருடன் இணைந்து கொண்டார்கள்.

என்னைப் பொருத்தவரையில் இது என்றே நடந்து முடிந்த ஒரு விடயமாகவே கருதியிருந்தேன். ஆனால் ஐயர் இந்த வரலாற்றை எழுதும்போது புலிகள் அமைப்பினுள் மார்க்சிய நூல்களை வாசிப்பதற்கான ஆர்வம் எவ்வாறு குமணன் ஊடாக வந்தது என்பதை விபரிக்கிறார். இந்த பகுதியை படித்தபோது நான் மிகவும் humbled (இதனை தமிழ் அகராதியானது கர்வநீக்கம் பெருவதாக மொழிபெயர்க்கிறது.) ஆகிப்போனேன். இதனை இப்போது குறிப்பிடுவதுகூட நான் ஏதோ பகட்டாரவாரம் செய்வதற்காக அல்ல. மாறாக, வரலாறு எவ்வாறு எங்களை மதிப்பிடப்போகிறது என்பதை நினைவு படுத்துவதற்காகவேயாகும். நாம் அன்றாடம் செய்யும் காரியங்களின் உண்மையான பெருமதிகளை நாம் அவற்றை செய்யும்போது அறிந்து கொள்வதில்லை. ஒருவேளை அறிந்திருந்தால் அவற்றை நாம் இன்னமும் சிறப்பாகவும், அந்த வரலாற்று பொறுப்புணர்வுடனம் செய்திருக்கலாம் என்று நாம் பிற்காலத்தில் நினைத்துப்பார்க்க நேரும் அல்லவா? அதனால் ஏற்படும் கர்வநீக்கம்தான் இதுவாகும்.

jan.jpgஇத்தோடு இன்னொரு விடயத்தையும் நான் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். ஐயருக்கும எனக்குமான தொடர்பானது சுமார் முப்பத்தைந்து ஆண்டுகள் வாய்ந்ததாகும். இந்த காலகட்டத்தில் நாம் பல்வேறு நிலைமைகளில் ஒருவரையொருவர் எதிர்கொண்டுள்ளோம். நான் புலிகள் அமைப்புடன் இணைந்தபோது அவர் பொரறுப்பில் இருந்தார் நான் சாதாரண அங்கத்தவனாக இணைந்து கொண்டேன். பின்னர் நாம் கழகத்தில் இணைந்தபோது அவர் ஏற்கனவே வெளியேறியிருந்தார். பின்னர் சென்னையில் அவரை சந்தித்தபோது நான் கழகத்தில் முக்கிய பொறுப்புகளில் இருந்தேன். அவர் சாதாரணமாக ஒரு சிவிலியனாக இருந்தார். பின்னர் கழகத்தில் இருந்து வெளியேறியபோது அவர் NLFT யில் இருந்தார். எமக்கு அடைக்கலம் தந்து பாதுகாத்தார். இன்னும் நான்கு வருடத்தின் பின்னர் அவர் எம்மைத் தேடிவந்தபோது நாம் தலைமறைவு அமைப்பாக இருந்தோம். அவர் NLFT யை விட்டு வெளியேறியிருந்தார். எம்மை சந்தித்தபோது எம்மோடு இணைந்துகொண்டார். பின்னர் தீப்பொறி அமைப்பில் சில வருடங்கள் நெருக்கமாக பணியாற்றினோம். இப்போது கடந்த பதினான்கு வருடங்களாக அவருடன் எந்த தொடர்பும் கிடையாது. பரஸ்பரம் செய்திகள் பரிமாறப்படுகின்றன. ஏனோ பேசிக்கொள்ளவில்லை. இப்போது அவரது நூலுக்கு நான் மதிப்பீடு செய்து கொண்டிருக்கிறேன். இதனை இவ்வளவு விபரமாக நான் குறிப்பிடுவதற்கு ஒரு குறிப்பான காரணம் இருக்கிறது. அதாவது எமது தேசம், அதிலும் உள்ள முற்போக்கு வட்டாரம் என்பது மிகவும் சிறியது. நாம் எவ்வளவுதான் தவிர்க்க விரும்பினாலுங்கூட, முற்போக்கு சிந்தனை உடையவர்கள் ஒருவரை ஒருவர் தவிர்க்கமுடியாமல் சந்தித்துத்தான் ஆகவேண்டியிருக்கிறது. ஆகவே அன்று ஒருவர் இருக்கும் பலமான அல்லது பலவீனமான நிலைமைகளை நிலையானதான நினைத்துக்கொண்டு அடுத்தவரை ஏறி உழக்காமல் நிதானமாக நடந்துகொள்வது நல்லது. ஏனென்றால் நாளை யார் யாரை, எப்படிப்பட்ட நிலையில் நாம் முகம்கொடுக்க நேரும் என்பதை யாருமே முன்னனுமானிப்பது என்பது முடியாத காரியமாகும். ஆகவே எப்போதும் செருக்கில்லாமல் இருப்து நல்லது.

உதிரிக்கூறுகளின் பாத்திரம் குறித்து…

இந்த நூலில் அடிக்கடி கள்ளக்கடத்தல் பற்றிய பிரச்சனைகள் வந்து போகின்றன. அதனை ஒருதடவை தொட்டுச் செல்வது அவசியமானது என்று நினைக்கிறேன். இது ஒட்டுமொத்தத்தில் புரட்சியில் உதிரிப்பாட்டாளிகளின் பாத்திரம் குறித்த பிரச்சனையாகவும் பார்க்கப்பட வேண்டிதொன்றாகவே நான் கருதுகிறேன். எமது போரட்டத்தில் உரும்பிராயும், வல்வெட்டித்துறையும் வகித்த பாத்திரம் கவனிக்கத்தக்கது. தேசிய அலையானது இந்த பகுதிகளை எட்டியபோது வன்முறை வடிவத்தை எடுத்தது. சமூகத்தில் விழிம்புநிலைக்கு தள்ளப்பட்ட மக்கள் பிரிவினர், நடப்பில் உள்ள சமூக ஒழுங்கமைவிற்கு வெளியில், அதன் அதிகாரத்தை எதிர்த்து செயற்பட நேர்கிறது. அதிகாரத்திற்கு எதிராக நேரடியான மோதல்களில் ஈடுபடும் இவர்களிடம் உள்ள போர்க்குணாம்சமும், சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் தலைமறைவு வாழ்க்கை போன்றவற்றடனான தொடர்புகளும் போராட்டத்தின் ஆரம்ப கட்டங்களில் மிகவும் அவசியமான அம்சங்களை அதற்கு வழங்குகிறது. ஆனால் எமது சமூகத்தில் உள்ள மத்தியதர வர்க்க மனோபாவம் காரணமாக நாம் இந்த சக்திகள் பற்றி பேசும்போது ஒருவித “சட்டவாதம்” பேசுகிறோம். இந்த விதத்தில் நாம் அதிகாரத்தில் இருப்பவர்களை விட சட்டவாதத்திற்கு மிகவும் விசுவாசமானவர்களாக நடந்துகொள்கிறோம் அல்லவா? “கள்ளக் கடத்தல்” “கசிப்பு காய்ச்சுவது” என்பவை உண்மையில் அரசாங்கத்தின் வரிவிதிக்கும் ஏகபோக உரிமையை மீறுவதுதானே? இதில் இத்தனை தூய்மைவாதம் பேசுவது எமது வர்க்க மிச்ச சொச்சங்களின் அடையாளமாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டியதொன்றாகவே நான் கருதுகிறேன்.

இப்போதுங்கூட சிலர் கேபியை பற்றி குறிப்பிடும்போது அவர் ஆயுதக்கடத்தலில் ஈடுபட்டவர் என்று குற்றஞ்சாட்டும் தொனியில் குறிப்பிடுவதை காண்கையில் சிரிப்புத்தான் ஏற்படுகிறது. இவர்கள் குறிப்பிடும் ‘துப்பாக்கிக் குழலில் இருந்தே அரசியல் அதிகாரம் பிறக்கிறது’ என்பது வாசகம் உண்மையானால், அந்த துப்பாக்கிகளை ஏதாவது ஐநா அமைப்பில் சட்டரீதியாக அல்லது இலவசமாக பெறலாமா என்று சம்பந்தப்பட்டவர்கள் விசாரித்துக் கூறினால் எதிர்காலத்தில் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கலாம் அல்லவா?

கோழைத்தனம் பற்றிய பிரச்சனை குறித்து…

ஐயர் இந்த நூலில் ஒரு இடத்தில் “கருத்துக்களைக் கண்டு பயப்படும் கோழைகளாக இருப்பதாக” பிரபாகரனை விமர்சிக்கின்றார். இது தொடர்பாக பார்வையாளர்கள் எப்படிப்பட்ட கருத்தைக் கொண்டுள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன். சாதாரணமாக புலிகளின் அரசியலுடன் அறவே உடன்பாடு இல்லாதவர்கள் கூட புலிகள் அமைப்பையும் அதன் தலைவர் பிரபாகரனையும் ஒரு வீரனாகமே மதிப்பார்கள். முள்ளிவாய்க்காலில் நடைபெற்றதாக கூறப்படும் சரணடைவு பற்றிய விடயங்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் புலிகள் வன்முறையைக் கண்டு பயந்தது கிடையாது. எவ்வளவு பெரிய சக்தியானாலும் அதனுடன் மோதித்தான் வாழ்ந்தார்களேயொழிய சரணடைந்து பாதம்தாங்கி வாழவில்லை. இதனை வைத்து மாத்திரம் இவர்களை வீரர்கள் என்று கூறிவிட முடியுமா? அப்படியானால் இவர்கள் மாற்றுக் கருத்துடையவர்களை அழித்தது ஏன்? அவர்களது கருத்துக்களைக் கண்டு பயந்ததனால்தானே? என்றும் நாம் வாதிடலாம். பாம்பு கடிப்பது பயத்தினால்தான் என்பது எமது பழமொழி அல்லவா? இங்கே ஐயர் சொல்லும் கோழை என்ற கருத்து சரியாகத்தான் அமைகிறது. மாறாக, கருத்துப் போராட்டங்களைக் கண்டு சிறிதும் பயப்படாத சிலர் யுத்த களதில் முதலாவ வெடி தீர்க்கு முன்னரே பயந்தோடிய கதையும் எமக்குத் தெரியும்தானே?

அப்படியானால் வீரம், கோழை போன்ற பதங்களை நாம் ஒற்றைப் பரிமாணத்தில் பயன்படுத்தலாமா என்ற கேள்வி எழுகிறது அல்லவா?

முடிவாக…

ஐயரது முயற்சி மிகவும் சிரப்பானது. இதனை ஒரு தொடராக அவர் எழுதியபோது தவிர்க்க முடியாதவாறு வரும் கூறியது கூறல்களை, இதனை நூலாக்கம் செய்யும் போது கட்டாயமாக தவிர்த்திருக்க வேண்டும். இது வலிந்து திணிக்கப்பட்டது போல நூலில் துருத்திக் கொண்டு நிற்கிறது. இதனை அடுத்த பதிப்புக்களிலாவது கட்டாயம் கவனிப்பார்கள் என்று நம்புகிறேன். இதனை தொடராக வெளியிட்டதிலும், நூலாக்கம் செய்வதிலும் ‘இனியொரு” வலைத்தளம் வகித்த பாத்திரம் பாராட்டுக்குரியது. அவர்கள் மேலும் இதுபோன்ற முயற்சிகளை தொடர்ந்தும் மேற்கொள்வார்கள் என்று நம்புகிறேன். அத்துடன் இன்னும் பல போராளிகளும் தமது அனுபவங்களை வெளிக்கொணர்வதன் மூலமாக இந்த முயற்சியை தொடர்வது அவசியமானது என்று கேட்டு எனது உரையை முடித்துக்கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

ஏன் அர்ஜுன் அண்ணா ,, பழசோ புதுசோ..,,

பிரபாகரன் கூட்டத்தையே புடிக்காத உங்களுக்கு ,, எப்புடி ரகுமான் ஜான் புடிச்சுது? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அர்ஜுன் அண்ணா ,, பழசோ புதுசோ..,,

பிரபாகரன் கூட்டத்தையே புடிக்காத உங்களுக்கு ,, எப்புடி ரகுமான் ஜான் புடிச்சுது? :)

ரகுமான் ஜான் அரசியல் விளக்கம் கொடுக்கும்போது உணர்ச்சிவசப்படுவதில்லை. பொறுமையாகவும் நிதானமாகவும் பண்பாகவும் பேசுவார். அத்துடன் அவர் புலிகளில் சேர்ந்து, புளட்டில் பெரிய பதவியில் இருந்து, உள்ளிருந்து போராடி பின் உயிரைக் காக்க தலைமறைவாக 2009 வரை இருந்தவர்!

Link to comment
Share on other sites

ஆரம்ப புலி உறுப்பினர்களில் முற்போக்கு அரசியல் பற்றி பேசிய சிலரில் ஜானும் ஒருவர் .மற்றவர்கள் சந்ததியார் ,மனோ மாஸ்டர் ,குமணன் .புலி -புளொட் உடைவில் மனோ மாஸ்டரை விட்டு மற்றயவர்கள் புளோட்டில் தான் வந்தார்கள் .

உமாவிற்கு அடுத்த இடத்திற்கு வந்த ஜான் (உப செயலதிபர்) சில மாதங்களிலேயே ஓடிவிட்டார்.புளொட்டின்

மூளைகளால் முழுக்க ஓடிவிட்டதாக சொல்வார்கள்.(சந்ததியார்,ஜான்,கண்ணாடி சந்திரன் ,கேசவன் இன்னும் சில)

உமாவுடன் நின்றது முழு மொக்குக் கூட்டம்.அதுதான் உமாவிற்கு தான் கட்டி மேய்க்க தேவைபட்டது.ஓடியவர்கள் தீப்பொறி என்ற பெயரில் வெளியில் இருந்து புளொட்டை ஓரளவு உடைத்துவிட்டார்கள்.பின்னர் நாங்கள் முற்றாக உடைத்தது வேறு கதை.

ஜானின் இயக்கப்பெயர் -காந்தன் .இவர் யாழ் இந்து பழையமாணவர் .மருத்துவ பீடத்திற்கு போனவர்.

Link to comment
Share on other sites

ஐயர் இந்த நூலில் ஒரு இடத்தில் “கருத்துக்களைக் கண்டு பயப்படும் கோழைகளாக இருப்பதாக” பிரபாகரனை விமர்சிக்கின்றார். இது தொடர்பாக பார்வையாளர்கள் எப்படிப்பட்ட கருத்தைக் கொண்டுள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன். சாதாரணமாக புலிகளின் அரசியலுடன் அறவே உடன்பாடு இல்லாதவர்கள் கூட புலிகள் அமைப்பையும் அதன் தலைவர் பிரபாகரனையும் ஒரு வீரனாகமே மதிப்பார்கள். முள்ளிவாய்க்காலில் நடைபெற்றதாக கூறப்படும் சரணடைவு பற்றிய விடயங்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் புலிகள் வன்முறையைக் கண்டு பயந்தது கிடையாது. எவ்வளவு பெரிய சக்தியானாலும் அதனுடன் மோதித்தான் வாழ்ந்தார்களேயொழிய சரணடைந்து பாதம்தாங்கி வாழவில்லை. இதனை வைத்து மாத்திரம் இவர்களை வீரர்கள் என்று கூறிவிட முடியுமா? அப்படியானால் இவர்கள் மாற்றுக் கருத்துடையவர்களை அழித்தது ஏன்? அவர்களது கருத்துக்களைக் கண்டு பயந்ததனால்தானே? என்றும் நாம் வாதிடலாம். பாம்பு கடிப்பது பயத்தினால்தான் என்பது எமது பழமொழி அல்லவா? இங்கே ஐயர் சொல்லும் கோழை என்ற கருத்து சரியாகத்தான் அமைகிறது. மாறாக, கருத்துப் போராட்டங்களைக் கண்டு சிறிதும் பயப்படாத சிலர் யுத்த களதில் முதலாவ வெடி தீர்க்கு முன்னரே பயந்தோடிய கதையும் எமக்குத் தெரியும்தானே?

கருத்தை கண்டு பயப்படும் கோழையாக தேசியத் தலைவர் பிரபாகரன் இருந்தார் என்று ஐயர் கூறுவது தவறு. 1983 வரை ஈழத்து அரசியல் சமூகச் சூழலில் கருத்து என்பது யாழ்ப்பாண அதிகார வர்க்கத்தின் தனிச் சொத்துடமையாகவும் கையேந்தி அரசிலுக்கான மூலதமாகவும் இருந்தது.

சைவ வெள்ளாளியம் என்ற அதிகாரவர்க்க சிந்தனையைத் தாண்டி தமிழ் தேசிய சிந்தனை இருக்கமுடியாத என்ற எழுதப்படாத விதியும் அன்றுவரை செயலில் இருந்தது.

சிங்களவன் தமிழனை அடிக்கிறான் என்று சொல்லிக் கொண்டே தமிழன் தமிழனை அடித்தான் சாதியால்....(சங்கானை புத்தூர் கன்பொல்லை சம்பவங்கள்)

சிங்களவன் தமிழனுடைய கல்வியுரிமையை பறிக்கிறான் என்று சொல்லிக் கொண்டே தமிழன் தமிழ் பிள்;ளைகள் படித்த பாடசாலைகளோடு புத்தகங்களையும் எரித்தான் சாதித் திமிரால்....(புத்தூர் புலோலி கன்பொல்லை சாவகச்சேரி மட்டுவில் சம்பவங்கள்)

சிங்களவன் தமிழர்களுடைய நிலங்களை பறிக்கிறான் என்று சொல்லிக் கொண்டே தமிழன் தமிழர்களில் ஒருசாரார் தாங்கள் விரும்பிய இடத்தில் குடியேறுவதையும் காணிவாங்குவதையும் தடுத்தான் சாதியின் பேரால்....

சிங்களவர்கள் தமிழர்களை இரண்டாந்தர பிரசைகளாக நடத்துகிறார்கள் என்று சொல்லிக் கொண்டே தமிழர்கள் தமிழர்களில் ஒரு சாராரை தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கிவைத்த அயோக்கியத்தனம் சாதியைச் சொல்லி நடந்தது.....(மாவட்டபுரம் கந்தசுவாமி கோவில் முதற்கொண்டு யாழ்ப்பாணத்தில் நடந்த அனைத்து மேட்டுக்குடி ஆலங்களினதும் தேனீர்கடைகளிதும் வரலாறு)

சிங்களம் மட்டும் சட்டம் தமிழ் சமூகத்துக்கு எற்படுத்திய பாதிப்பைவிட யாழ்ப்பாணத்தின் சாதியச் சட்டமான தேசவழமைச்சட்டம் மிகப்பெரிய பாதிப்பை உண்டுபண்ணியது என்பதை எத்தனை பேர் ஒத்துக்கொள்வீர்கள்?

(பஞ்சமர் என்று பிறப்பால் முத்திரை குத்தப்பட்ட தமிழர்கள் இன்றுவரை குடாநாட்டில் பெருநகரங்களை தவிர ஏனைய இடங்களில் காணி வாங்க முடியாது அயோக்கியத்தனம் தொடர்வது)

என்னைப் பொறுத்தவரை 1983 வரை கருத்து என்பது பம்மாத்து என்ற சொல்லுக்கான வரைவிலக்கணமாக இருந்து.ஆறுமுகநாவலரில் இருந்து அமிர்தலிங்கம் வரை சொல்லுக்கும் செயலுக்கும் பாரிய இடைவெளியைக் கொண்டவர்களே தமிழர்களின் தலைவர்கள் என்று சொல்லிக்கொண்ட வரலாற்றைத் தானே நாங்கள் பார்த்தோம்.

இடது சாரித்தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டவர்களும் நிலவிலே பேசிய வரலாறும் தத்துவத்துக்கும் நடைமுடைக்கும் நீண்ட இடைவெளியைக் கொண்டிருந்த வரலாற்றையும் தான் நாங்கள் பார்த்தோம்.

துடிப்புள்ள இளைஞனாக ஆயதப்போராட்டத்தில் குதித்த தலைவர் பிரபாகரன் வாய்சொல்வீரம் பற்றி எச்சரிக்கையாக இருந்ததை தவறென்று சொல்லமுடியாது. அவர் பலத்தை பிரயோகிக்காவிட்டிருந்தால் தமிழ் சமூகத்தின் தலைமைத்துவத்தை ஒருபோதும் பெற்றிருக்க முடியாது.அதை ஒரு போதும் குடாநாட்டு அதிகார வர்க்கம் அனுமதித்தும் இருக்காது.

ஓரு ரஜனி திரணகமவினதும் ஒரு செல்வியினதும் கொலையை தூக்கிப் பிடித்துக்கொண்டு சிறீலங்கா அரசு செய்த ஓராயிரம் கிரிசாந்திகளினதும் கோணேஸ்வரிகளினதும் படுகொலைகளையும் மூடிமறைத்து நியாயப்படுத்திய திமிர்தனத்தை அடக்குவதற்கு ஆயுதவன்முறையை பயன்படுத்தியது தவறென்று நான் செல்லமாட்டேன்.

இந்த அதிகார வர்க்க திமிர்பிடித்த கூட்டம் விடுதலைப்புலிகளின் இடத்தில் இருந்திருந்தால் நிச்சயம் தமிழ் சமூகம் 30 அல்லது 40 வருடங்கள் பின் தள்ளிய ஒரு கொடூர நிலப்பிரபுத்துவ சமூகமாக மாற்றப்பட்டிருக்கும்.

அரசில் சித்தாந்தம் தத்துவம் யுத்ததந்திரம் எல்லாவற்றiயும் கரைத்துக்குடித்த அவற்றுக்கான வியாக்கியானங்களை எல்லாம் நூல்களாக எழுதிய லெனின் ஸ்டாலின் மாவோ போன்றவர்களது ஆட்சியில் பல இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதை, பலதலைவர்களுக்கு மரணதண்டனை கொடுக்கப்பட்டதை,பலர் நாட்டைவிட்டு ஓடும்படி செய்யப்பட்டதை தத்துவார்த்த தவறு என்று சாக்குப் போக்கு சொல்லும் குடாநாட்டு மாற்றுக் கருத்து மாமணிகளுக்கு பிரபாகரன் செய்தது மட்டும் மாபெரும் குற்றமாம்.

பிரபாகரன் என்பவர் ஒரு தனிமனிதன் அல்ல. ஏதிரிகளோடு இரகசியக் கூட்டு வைத்துக்கொண்டு பெரும்பான்மையான தமிழ் சமுகத்தை ஏமாற்றி அடக்கி ஓடுக்கி சுரண்டி வந்த ஓரு சிறுபான்மை அதிகார வர்க்கத்துக்கு எதிரான சராசரி ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர்ப்புணர்வின் வெளிப்பாடுதான் அவர்.

தமிழ் சமூகத்தில் புரையோடிப்போயிருந்த அகமுரண்பாடுகளை ஆயுத பலம் கொண்டே அடக்க முடியும் என்று அவர் நம்பியதை அரசியலைக் கண்டு அஞ்சிய கோழைத்தனம் என்று சொல்ல முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தை கண்டு பயப்படும் கோழையாக தேசியத் தலைவர் பிரபாகரன் இருந்தார் என்று ஐயர் கூறுவது தவறு. 1983 வரை ஈழத்து அரசியல் சமூகச் சூழலில் கருத்து என்பது யாழ்ப்பாண அதிகார வர்க்கத்தின் தனிச் சொத்துடமையாகவும் கையேந்தி அரசிலுக்கான மூலதமாகவும் இருந்தது.

சைவ வெள்ளாளியம் என்ற அதிகாரவர்க்க சிந்தனையைத் தாண்டி தமிழ் தேசிய சிந்தனை இருக்கமுடியாத என்ற எழுதப்படாத விதியும் அன்றுவரை செயலில் இருந்தது.

சிங்களவன் தமிழனை அடிக்கிறான் என்று சொல்லிக் கொண்டே தமிழன் தமிழனை அடித்தான் சாதியால்....(சங்கானை புத்தூர் கன்பொல்லை சம்பவங்கள்)

சிங்களவன் தமிழனுடைய கல்வியுரிமையை பறிக்கிறான் என்று சொல்லிக் கொண்டே தமிழன் தமிழ் பிள்;ளைகள் படித்த பாடசாலைகளோடு புத்தகங்களையும் எரித்தான் சாதித் திமிரால்....(புத்தூர் புலோலி கன்பொல்லை சாவகச்சேரி மட்டுவில் சம்பவங்கள்)

சிங்களவன் தமிழர்களுடைய நிலங்களை பறிக்கிறான் என்று சொல்லிக் கொண்டே தமிழன் தமிழர்களில் ஒருசாரார் தாங்கள் விரும்பிய இடத்தில் குடியேறுவதையும் காணிவாங்குவதையும் தடுத்தான் சாதியின் பேரால்....

சிங்களவர்கள் தமிழர்களை இரண்டாந்தர பிரசைகளாக நடத்துகிறார்கள் என்று சொல்லிக் கொண்டே தமிழர்கள் தமிழர்களில் ஒரு சாராரை தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கிவைத்த அயோக்கியத்தனம் சாதியைச் சொல்லி நடந்தது.....(மாவட்டபுரம் கந்தசுவாமி கோவில் முதற்கொண்டு யாழ்ப்பாணத்தில் நடந்த அனைத்து மேட்டுக்குடி ஆலங்களினதும் தேனீர்கடைகளிதும் வரலாறு)

சிங்களம் மட்டும் சட்டம் தமிழ் சமூகத்துக்கு எற்படுத்திய பாதிப்பைவிட யாழ்ப்பாணத்தின் சாதியச் சட்டமான தேசவழமைச்சட்டம் மிகப்பெரிய பாதிப்பை உண்டுபண்ணியது என்பதை எத்தனை பேர் ஒத்துக்கொள்வீர்கள்?

(பஞ்சமர் என்று பிறப்பால் முத்திரை குத்தப்பட்ட தமிழர்கள் இன்றுவரை குடாநாட்டில் பெருநகரங்களை தவிர ஏனைய இடங்களில் காணி வாங்க முடியாது அயோக்கியத்தனம் தொடர்வது)

என்னைப் பொறுத்தவரை 1983 வரை கருத்து என்பது பம்மாத்து என்ற சொல்லுக்கான வரைவிலக்கணமாக இருந்து.ஆறுமுகநாவலரில் இருந்து அமிர்தலிங்கம் வரை சொல்லுக்கும் செயலுக்கும் பாரிய இடைவெளியைக் கொண்டவர்களே தமிழர்களின் தலைவர்கள் என்று சொல்லிக்கொண்ட வரலாற்றைத் தானே நாங்கள் பார்த்தோம்.

இடது சாரித்தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டவர்களும் நிலவிலே பேசிய வரலாறும் தத்துவத்துக்கும் நடைமுடைக்கும் நீண்ட இடைவெளியைக் கொண்டிருந்த வரலாற்றையும் தான் நாங்கள் பார்த்தோம்.

துடிப்புள்ள இளைஞனாக ஆயதப்போராட்டத்தில் குதித்த தலைவர் பிரபாகரன் வாய்சொல்வீரம் பற்றி எச்சரிக்கையாக இருந்ததை தவறென்று சொல்லமுடியாது. அவர் பலத்தை பிரயோகிக்காவிட்டிருந்தால் தமிழ் சமூகத்தின் தலைமைத்துவத்தை ஒருபோதும் பெற்றிருக்க முடியாது.அதை ஒரு போதும் குடாநாட்டு அதிகார வர்க்கம் அனுமதித்தும் இருக்காது.

ஓரு ரஜனி திரணகமவினதும் ஒரு செல்வியினதும் கொலையை தூக்கிப் பிடித்துக்கொண்டு சிறீலங்கா அரசு செய்த ஓராயிரம் கிரிசாந்திகளினதும் கோணேஸ்வரிகளினதும் படுகொலைகளையும் மூடிமறைத்து நியாயப்படுத்திய திமிர்தனத்தை அடக்குவதற்கு ஆயுதவன்முறையை பயன்படுத்தியது தவறென்று நான் செல்லமாட்டேன்.

இந்த அதிகார வர்க்க திமிர்பிடித்த கூட்டம் விடுதலைப்புலிகளின் இடத்தில் இருந்திருந்தால் நிச்சயம் தமிழ் சமூகம் 30 அல்லது 40 வருடங்கள் பின் தள்ளிய ஒரு கொடூர நிலப்பிரபுத்துவ சமூகமாக மாற்றப்பட்டிருக்கும்.

அரசில் சித்தாந்தம் தத்துவம் யுத்ததந்திரம் எல்லாவற்றiயும் கரைத்துக்குடித்த அவற்றுக்கான வியாக்கியானங்களை எல்லாம் நூல்களாக எழுதிய லெனின் ஸ்டாலின் மாவோ போன்றவர்களது ஆட்சியில் பல இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதை, பலதலைவர்களுக்கு மரணதண்டனை கொடுக்கப்பட்டதை,பலர் நாட்டைவிட்டு ஓடும்படி செய்யப்பட்டதை தத்துவார்த்த தவறு என்று சாக்குப் போக்கு சொல்லும் குடாநாட்டு மாற்றுக் கருத்து மாமணிகளுக்கு பிரபாகரன் செய்தது மட்டும் மாபெரும் குற்றமாம்.

பிரபாகரன் என்பவர் ஒரு தனிமனிதன் அல்ல. ஏதிரிகளோடு இரகசியக் கூட்டு வைத்துக்கொண்டு பெரும்பான்மையான தமிழ் சமுகத்தை ஏமாற்றி அடக்கி ஓடுக்கி சுரண்டி வந்த ஓரு சிறுபான்மை அதிகார வர்க்கத்துக்கு எதிரான சராசரி ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர்ப்புணர்வின் வெளிப்பாடுதான் அவர்.

தமிழ் சமூகத்தில் புரையோடிப்போயிருந்த அகமுரண்பாடுகளை ஆயுத பலம் கொண்டே அடக்க முடியும் என்று அவர் நம்பியதை அரசியலைக் கண்டு அஞ்சிய கோழைத்தனம் என்று சொல்ல முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் அகிம்சையால் சாதிக்க முடியாததை ஆயுதத்தால் மட்டுமே சாதிக்க முடியும் என்றே நினைத்தார் [அது தான் உண்மையும் கூட‌ புலிகள் ஆயுதம் ஏந்திப் போராடின படியால் தான் சர்வதேச‌ நாடுகள் இந்தளவிற்காவது இறங்கி வந்திருக்கின்றன.]அதற்கு தடையாக யார் வந்தாலும் அவர்கள் சிறந்த புத்திஜீவிகளாக இருந்தாலும் போட்டுத் தள்ளியது அதற்காகத் தான். இல்லா விட்டால் அவர்கள் மக்கள் மனதை அவர்கள் மாற்றி போராட்டத்தை எப்பவோ முடித்திருப்பார்கள்...சில பேரைப் போட்டுத் தள்ளினது சரி[உ+ம்]லக்ஸ்மண் கதிர்காமர்

என்னைப் பொறுத்த வரை பல பேரைப் போட்டித் தள்ளாமல்,அவர்களை கணக்கெடுக்காமல் விட்டு இருக்க வேண்டும் அப்பத் தான் சிங்களவன் செய்த அட்டூழியங்களைப் பார்த்து புலிகளால் மட்டுமே இதற்கு நல்லதொரு தீர்வு எடுத்துக் கொடுக்க முடியும் என அவர்களை உணர வைத்திருக்க வேண்டும் நான் சொல்வது முக்கியமாக புத்திஜீவிகளை ஆமியோடு சேர்ந்து இருந்து தமிழ் மக்களை அழிப்பவர்களை இல்லை.

தலைவரை சுத்தியிருந்தவர்கள் பிழையான தகவலைக் தலைவருக்கு கொடுத்து இருக்கலாம்...அவர்களை தங்கட‌ பக்க நியாயத்தை சொல்லி மாத்தி எடுப்பதை விட‌ அவர்களைப் போட்டு தள்ளுவது இலகுவாகயிருந்திருக்கும் அதனால் வரும் நீண்ட‌ காலப் பாதிப்புகளை விட அவர்களை போட்டுத் தள்ளுவதன் மூலம் ஏற்படும் குறுகிய கால லாபம் புலிகளுக்கு பெரிதாக தெரிந்திருக்கலாம்...தற்கொலை தாக்குதல் எத்தகைய பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தெரிந்ததால் தான் கடைசி நேர‌த்தில் முள்ளி வாய்க்கால் சண்டையின் போது கூட‌ புலிகள் கொழும்பில் ஒரு தற்கொலை தாக்குதலையும் செய்யவில்லை.

என்னைப் பொறுத்த வரை "புலிகள் கருத்துக்களை கண்டு பயப்படும் கோழைகள்" என்பதை விட‌ கருத்துக்களை விட ஆயுதத்தால் மட்டும் தான் சாதிக்க முடியும் என்பதை வேத வாக்காக எடுத்தார்கள் என்று தான் சொல்ல முடியும்

Link to comment
Share on other sites

என்னைப் பொறுத்த வரை "புலிகள் கருத்துக்களை கண்டு பயப்படும் கோழைகள்" என்பதை விட‌ கருத்துக்களை விட ஆயுதத்தால் மட்டும் தான் சாதிக்க முடியும் என்பதை வேத வாக்காக எடுத்தார்கள் என்று தான் சொல்ல முடியும்

ரொம்ப ஸ்மார்ட்டா பேசறதா நெனைப்பா சகோதரத்துக்கு?

நீளமா எல்லாம் எழுதறது வேஸ்ட் ஆஃப் டைம்...

அதனாலதான் நீலத்துல ஹைலைட் பண்ணிருக்கேன்...

நீங்க சொன்னது இரண்டும் ஒரே அர்த்தமா இல்லியா? :)

Link to comment
Share on other sites

பிரபாகரன் என்பவர் ஒரு தனிமனிதன் அல்ல. ஏதிரிகளோடு இரகசியக் கூட்டு வைத்துக்கொண்டு பெரும்பான்மையான தமிழ் சமுகத்தை ஏமாற்றி அடக்கி ஓடுக்கி சுரண்டி வந்த ஓரு சிறுபான்மை அதிகார வர்க்கத்துக்கு எதிரான சராசரி ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர்ப்புணர்வின் வெளிப்பாடுதான் அவர்.

நவம்.............. இது உங்களுக்கு!

then+I+guess+that+means+WOMEN+WOULD+BE+LIKE+SUPER+_8763057ba013d6cb2f3bf938eadc2ce3.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப ஸ்மார்ட்டா பேசறதா நெனைப்பா சகோதரத்துக்கு?

நீளமா எல்லாம் எழுதறது வேஸ்ட் ஆஃப் டைம்...

அதனாலதான் நீலத்துல ஹைலைட் பண்ணிருக்கேன்...

நீங்க சொன்னது இரண்டும் ஒரே அர்த்தமா இல்லியா? :)

உங்களுக்கு எப்படிப்படுதோ அப்படி எடுத்துக் கொள்ளுங்கோ :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.