Jump to content

மனைவியை அடிப்பது கணவனின் உரிமையா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மரியாதை.. அடி உதை எல்லாம் நடந்து கொள்ளுற மாதிரில தான் இருக்குது.

 

யாரும்.. சும்மா ஆக்களுக்கு அடிக்கமாட்டார்கள். பள்ளியில்.. வீட்டில் யாராவது சும்மா தண்டிக்கனமா..??! இல்லை இல்ல.

 

ஆணோ.. பெண்ணோ.. சரியான நடத்தையை சரியான இடத்தில் காண்பிக்கும் போது.. எதுக்கு கை கால் நீளப் போகுது...??!

 

வீட்டு வன்முறை என்பது வெறுமனவே பெண்கள் மீது என்ற பிலிம் காட்டல் இப்போது அவ்வளவாக எடுபடுவதில்லை. இரு பாலாரும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். கணவர்கள் மீது பல்வேறு வடிவங்களிலும் தாக்கும் மனைவியர் குறித்தும்.. நாம் பேச வேண்டியவர்களாக இருக்கிறோம்..! :icon_idea::)

 

உங்களைக் கொண்டுபோய் எங்கள் ஊர் மார்க்கண்டு வாத்தியிடம் விடவேண்டும் சும்மா அடிப்பது எது என்பதைக் காட்ட. எத்தனை படித்ததாகக் கூறும் நீங்கள் ஆண்களின் சைக்கோத்தனம் பற்றி மட்டும் அறியவில்லை என்பதைப் பார்க்க நீங்கள் இன்னும் நிறையப் படிக்க வேண்டி உள்ளது என்று தெரிகிறது நெடுக்ஸ்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

கடல் அலைக்கு கரை என்று ஆனபின் ..... அடிக்காதே என்றால் எப்படி?
அதற்காக கை  நீட்டி எல்லாம் அடிக்க கூடாது .

 

 

பெண்கள் திருப்பி அடிக்க மாட்டார்கள் என்ற துணிவு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண் கணவனை ஏவுகிறாள் என்றால் அந்தக் கணவன் ஒன்றில் பேயனாக இருப்பான் அல்லது பெண்ணின் சிற்றின்பத்தில் மூழ்கி வெளிவர முடியாதவனாக இருப்பான். அப்படியானவனுக்குத் தண்டனைதான் ஆண்குலங்கள் கூறிக்கொள்வது. ஆண் ஆனாய் இருந்து ஆளுமையுடன் ஆரம்பத்திலிருந்தே செயல்ப்பட்டால் ஏன் இத்தனையும். பெண்ணின் பெற்றோரைக் கூப்பிடும்படி வற்புறுத்தினால் நீ வேலைக்குச் சென்று கூப்பிடு என்று சொல்வதற்கும் செயற்படுத்துவதற்கும் துணிவு இல்லை எனில் அவன் என்ன ஆண் ????ரதி கூறுவது போல தம்மை மனைவிமுன் பெரிய ஆளாகக் காட்ட சில மடையர்கள் கடன் வாங்கி ஆலவட்டம் பிடிப்பார்கள். அவர்களை மீட்ட்கக் கடவுளே வந்தாலும் முடியாது. என்ன தான் சொன்னாலும் கை நீட்டிப் பெண்ணை அடிப்பவன் பேடிதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இல்லை,
 
ஆனால் மனைவியும் கணவனின் மனசிற்கு ஏற்றவாறு அனுசரித்து நடக்கவேண்டும்.   
 
பி;கு: சண்டை போடும் குடும்பங்களுக்குத்தான் குழந்தைகள் அதிகம்.  :D
Link to comment
Share on other sites

ஒரு பெண் கணவனை ஏவுகிறாள் என்றால் அந்தக் கணவன் ஒன்றில் பேயனாக இருப்பான் அல்லது பெண்ணின் சிற்றின்பத்தில் மூழ்கி வெளிவர முடியாதவனாக இருப்பான். அப்படியானவனுக்குத் தண்டனைதான் ஆண்குலங்கள் கூறிக்கொள்வது. ஆண் ஆனாய் இருந்து ஆளுமையுடன் ஆரம்பத்திலிருந்தே செயல்ப்பட்டால் ஏன் இத்தனையும். பெண்ணின் பெற்றோரைக் கூப்பிடும்படி வற்புறுத்தினால் நீ வேலைக்குச் சென்று கூப்பிடு என்று சொல்வதற்கும் செயற்படுத்துவதற்கும் துணிவு இல்லை எனில் அவன் என்ன ஆண் ????ரதி கூறுவது போல தம்மை மனைவிமுன் பெரிய ஆளாகக் காட்ட சில மடையர்கள் கடன் வாங்கி ஆலவட்டம் பிடிப்பார்கள். அவர்களை மீட்ட்கக் கடவுளே வந்தாலும் முடியாது. என்ன தான் சொன்னாலும் கை நீட்டிப் பெண்ணை அடிப்பவன் பேடிதான்.

 

இக்கருத்து ஒருவிதத்தில் ஆணாதிக்கத்தை ஊக்குவிக்கின்றது.

 

ஆண் என்றால் ஒருவித ஆழுமையுடன் கம்பீரத்துடன் பெண்ணை ஆழத்தெரிந்தவனாக இருக்வேணும் என்று இக்கருத்து உள்ளது.

 

மேலும் கருத்தளவில் இவ்வாறு எழுதலாம். ஆனால் நடைமுறையில் குடும்பங்களுக்குள் இது ஒரு உளவியல் போராட்டமாகவே இருக்கின்றது. மனைவி முகதை தூக்கிவைத்திருக்கும் பேதே வீட்டுக்குள் சாதாரண இயல்புநிலை குழம்பிவிடுகின்றது. குழந்தைகள் இயல்பு பாதிக்கப்படுகின்றது.  

 

அதே நேரம் மனைவியன் குடும்பம் வறுமையிலும் துன்பத்திலும் இருக்கும் போது மனைவியாலும் சந்தோசமாக இருக்க முடியாது. மனைவி கவலைப்படும் போது அதை இருவரும் சரிசெய்வதும் இயற்கையானது. இவைகள் அந்தந்த குடும்ங்களின் உள்ளகமான உளவியல் பிரச்சனை. 

 

எமது சமுதாயத்தில் எமக்காக நாம் வாழுதல் என்ற புரிதல் மிக அவசியமாக உள்ளது. குடும்பத்துக்குள் பிறரின் தலையீடுகள் மிக மோசமாக உள்ளது. பிறரின் தலையீடுகளுக்குப் பலியாகுதல் மோசமாக உள்ளது. வழக்கங்கள் பழக்கவழக்கங்கள் கலாச்சாரங்கள் என்ற போர்வையில் பல பிரச்சனைகள் உருவாகின்றது. எனவேதான் இவை ஆண்பெண் என்ற பேதங்களுக்க அப்பால் அணுகப்படவேணும் என்கின்றேன்.

 

Link to comment
Share on other sites

சுகன் நான் ஆண்கள் மட்டும் தான் குற்றவாளிகள்.பெண்கள் எல்லோரும் சுத்த தங்கம் என சொல்ல வரவில்லை. உங்களைப் பொறுத்த பெண்கள் பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்து தாங்களும் அப்படி இருக்க வேண்டும் என்டு ஆசைப்படினம்.மனைவி ஆசைப்பட்டு விட்டார் என்பதற்காக கணவர் இரு வேலைக்கு போகிறார்.அதுவும் உண்மை தான்.அப்படியும் நடக்குது தான். இல்லை என சொல்லவில்லை.ஆனால் என் கேள்வி என்ன என்டால் மனைவி தான் பக்கத்து வீட்டைப் பார்த்து அது,இது என ஆசைப்பட்டால் அந்த கணவருக்கு எங்கே போச்சுது அறிவு?...ஏன் மனைவிக்கு எடுத்து சொல்ல அவரால் முடியவில்லை?...மனைவி சொல்லி விட்டார் என்பதற்காக கணவர் கண்ணை மூடிக் கொண்டு செய்ய வேண்டும் என்று இல்லைத் தானே!

இதற்கெல்லாம் ஆரம்பம் எங்கே தெரியுமா?...ஒரு ஆண் தனது திருமணத்திற்கு முன் தனது தகுதிக்கும் மீறி உழைச்சு,கடன் பட்டு பெற்றோருக்கும்,சகோதரங்களுக்கும் கொடுக்கிறது.பின்னர் தான் திருமணம் செய்யும் போது தன்னுடைய உண்மை நிலையைச் சொல்லி கட்டாமல்,பொய் சொல்லுறது.பின்னர் அதற்காக மாடாய் உழைக்கிறது.அதை விட முதலிலே எல்லோருக்கும் உண்மை நிலையை சொல்லி,அவருடைய தகுதிக்கு இவ்வளவு தான் உழைக்க முடியும் என சொல்லி இருந்தால் இவ்வளவு பிரச்சனை குடும்பத்தில் வராது அல்லவா.ஆண்கள் எப்போதும் தங்களை மற்றவர் புகழ வேண்டும் என ஆசை.இப்படியான ஆண்களுக்கு தாழ்வு மனப்பான்மை என நினைக்கிறேன்.தாங்கள் மற்றவனை காட்டில் அதிகமாக உழைக்க வேண்டும்.இல்ல்லா விட்டால் மதிக்க மாட்டார்கள் என தாயிலிருந்து,மனைவி,மகளுக்கும் பயப்படுவது.அதே நேரத்தில் பெண்களும் ஆண்கள் உழைக்கா விட்டால் மட்டம் தட்டுவதும் நடக்கின்றது. இதே நேரத்தில் ஆண்கள் ஒரே வேலை,வேலை எனத் திரிவதால் தனியே குழந்தைகளை கவனிக்க முடியாமல் பிள்ளைகளைக் கொண்டு விட்டு தாங்களும் தற்கொலை செய்யும் பெண்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.

திருமணம் செய்யேக்குள்ளேய்யே இருவரும் கதைத்துப் உண்மை பேசி,உண்மையாய் குடும்பம் நடத்தினால் ஒரு பிரச்சனையும் இருக்காது

 

நீங்கள் சொல்லும் பிரச்சனையும் மறுப்பதற்கில்லை. பல பிரச்சனைகள் அவ்வாறும் இருக்கின்றது.

 

இரண்டு மூன்று பெண் சகோதரங்களை கொண்ட ஒரு ஆண் அவர்களை கரையேற்றவென சீதணத்துக்காக உழைக்கின்றான் பின்னர் அவனின் உழைப்பு என்னுமொரு ஆணுக்கு சீதனமாகப் போகின்றது. தந்தையின் உழைப்பு என்னுமொரு ஆணுக்கு சீதனமாகப்போகின்றது. இதில் பெரும்பான்மை ஆண் உழைப்பை ஆணே சுரண்டும் நிலைதான். இதை பெண்ணியத்தால் அணுகுவது எவ்வளவு தூரம் தீர்வு என்பது எப்போதும் கேள்விக்குறியே. மேலும் பேரம் பேசும் தரப்பில் ஆணைப்பெற்ற தாயே முன்னணியில் பலவிடங்களில் முன்னணியில் நிற்கின்றார். இவைள் எல்லாம் ஆணாதிக்கம் பெண்ணடிமைத்தனம் என்பதைக் கடந்து அறிவுபூர்வமாக அணுகப்படவேண்டியது.

 

நீங்கள் சொல்லும் பிரச்சனைகள் எதுவும் மறுப்பதற்கில்லை. பெண்களும் பதிக்கப்படுகின்றார்கள். அதே நேரம் ஆண்களும் பாதிக்கப்படுகின்றார்கள். ஆகவே ஆண் பெண் என்ற பேதங்களை கடந்து இவற்றை அணுகும் அறிவுசார் தன்மையே அவசியமாகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண் கணவனை ஏவுகிறாள் என்றால் அந்தக் கணவன் ஒன்றில் பேயனாக இருப்பான் அல்லது பெண்ணின் சிற்றின்பத்தில் மூழ்கி வெளிவர முடியாதவனாக இருப்பான். அப்படியானவனுக்குத் தண்டனைதான் ஆண்குலங்கள் கூறிக்கொள்வது. ஆண் ஆனாய் இருந்து ஆளுமையுடன் ஆரம்பத்திலிருந்தே செயல்ப்பட்டால் ஏன் இத்தனையும். பெண்ணின் பெற்றோரைக் கூப்பிடும்படி வற்புறுத்தினால் நீ வேலைக்குச் சென்று கூப்பிடு என்று சொல்வதற்கும் செயற்படுத்துவதற்கும் துணிவு இல்லை எனில் அவன் என்ன ஆண் ????ரதி கூறுவது போல தம்மை மனைவிமுன் பெரிய ஆளாகக் காட்ட சில மடையர்கள் கடன் வாங்கி ஆலவட்டம் பிடிப்பார்கள். அவர்களை மீட்ட்கக் கடவுளே வந்தாலும் முடியாது. என்ன தான் சொன்னாலும் கை நீட்டிப் பெண்ணை அடிப்பவன் பேடிதான்.

 

அக்கா நீங்களும் ஒரு குடும்பத் தலைவியாக இருந்து கொண்டு இப்படி எழுந்தமான கருத்தை பகிர்வது ஏதோ மாதிரி இருக்கிறது..ஆண்களை பேடி நிலைக்கு கொண்டு வருவது யாரு ஒரு பெண் தானே...

எத்தனையோ  இடங்களில் வீட்டில் உள்ளவர்களின் முகத்தை நாட்கணக்காக காணாமல் வேலை,வேலை என்று ஓடுப் பட்டு திரிபவர்களும் இன்றும் இருக்கிறார்கள்....ஒரு கிழமைக்கு ஒருக்கா வீட்டுக்குப் போனாலும் ஏன் வந்தனீர்.....என்று தொடங்கி திரும்ப வேலைக்கு கலைக்கிற மனைவிமாரும் இருக்கீனம்..காரணம் தங்களின் சுதந்திரம் பறி போய் விடக் கூடாது என்ற சுய நலம்.வீட்டில் இருக்க கிடைக்கும் சொற்ப நேரத்திற்குள்ளும் ஏதாவது ஒன்றை சொல்லி எரிச்சலூட்டி குடும்பத்திற்குள் சண்டையை ஏற்படுத்துபவர்கள் பெண்களாகவே இருக்கிறார்கள்...

எல்லா இடத்திலும் ஆண், பெண்ணில் மோகம் கொண்டு அவர்களை சொல்வதையே கேட்டுட்டு இருக்க மாட்டார்கள்.. ஏன் நீங்களே அறிந்திருப்பீர்கள்.சந்தர்ப்பம் சூழ் நிலை திருமணம் செய்ததும் உடன் வேலைக்கு அனுப்ப முடியாதவர்களாக இருப்பார்கள்,பிள்ளைகள் பிறந்ததும் பராமரிக்க ஆள் இல்லாத போது பிள்ளைகளை பராமிக்கும் பெரும் பங்கு யாரை சார்ந்தது..அது தானே வளரட்டும் என்று விட்டுட்டு பெண்கள் வேலைக்கு போக முடியுமா.....???

இப்படியான சந்தர்பங்களில் தான் இரண்டு,மூன்று வேலை செய்தாவது கஸ்ரமான நிலையில் இருந்து இலகுவான வாழ்க்கைக்கு வர முயற்சிக்கிறார்கள்.இவ்வாறன கல கட்டத்திற்குள் தான் பெண்கள் தங்கள் சுய ரூபத்தை காட்டத் தொடங்குகிறார்கள்...

சாதரணமாக ஏன் இப்படி ஓடித் திரியனும்,உன் அப்பா,அம்மா சகோதரத்திடம் போய் வாங்கிட்டு வாவன் என்று கேட்டு ஆய்க்கினைப்படுத்திற பெண்கள் எத்தினை பேர் இருக்கினம் தெரியுமா.......?இப்படியான நேரங்களில் தான் குடும்பத்திற்குள் பிரச்சனைகள் ஏற்படுகிறது..யார் எப்படிப் போனாலும் பறவா இல்ல தங்கள் சுய தேவைகள்  தீர்ந்தால் சரி  என்ற நினைப்பே சில பெண்கள் மத்தியில் இருக்கிறது.....சில இடங்களில் மனைவி மட்டும் ஆண்களை  ஆய்க்கினைப்  படுத்துவது அல்ல,கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகள் உள்ள குடும்பத்தில் பெண் பிள்ளைகளும் சேர்ந்தே தந்தையை ஆய்க்கினைப்படுத்துபவர்களும் இருக்கிறார்கள்.விதி விலக்காக குழந்தைப் பிள்ளைகள் உள்ள குடும்பம் என்றால் அவர்கள் கதை சொல்லி வேலை இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி கோவிக்கமாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் ஒரு கேள்வி. உங்களின் ஆண் சகோதரங்கள் யாராவது திருமணம் ஆகி இருக்கிறார்களா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி கோவிக்கமாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் ஒரு கேள்வி. உங்களின் ஆண் சகோதரங்கள் யாராவது திருமணம் ஆகி இருக்கிறார்களா

 

ஆம் அனைவருமே திருமணம் செய்து விட்டார்கள்..

Link to comment
Share on other sites

ஆணிலும் பெண்மை உண்டு.  பெண்ணிலும் ஆண்மை உண்டு.   ஆண் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்றும் பெண் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற வரைமுறை இப்போது செல்லாது.  இது மிகவும் அபத்தமான விடயமாகவே நான் பார்க்கிறேன்.  அதேபோல், கையை நீட்டுவது என்பது ஒருவரின் இயலாமைத்தன்மையாகவே நான் பார்க்கிறேன்.  ஒன்றாக வாழ்ந்து கொண்டு சண்டைகளைப் பிடித்து பிள்ளைகளின் உளவியலைப் பாதிக்கச் செய்வதைவிட இவர்கள் பிரிந்து வாழ்வதே சிறந்தது.  இவ்வாறான வன்முறைக் குடும்பத்தில் வளரும் பிள்ளைகளும் எதிர்காலத்தில் வன்முறை செய்பவர்களாகவே உருவெடுக்கிறார்கள். 

 

ஒரு பெண், பொருளாதார ரீதியாக ஆணை நம்பியிருக்கும் குடும்பங்களிலேயே இவ்வாறான பிரச்சனைகள் அதிகம் உருவெடுக்கின்றன.  பெண்களை (மனைவிமாரை) வேலைக்கு அனுப்புவது அவமானம் என நினைத்துப் பல ஆண்கள் பெண்களை வேலைக்கு அனுப்புவதில்லை.  இது பெண்களின் சுதந்திரத்தினைப் பாதிப்பதால் சில வருடங்களில் மனஅழுத்தத்திற்குள்ளாகின்றார்கள்.  அப்போதுதான் இவ்வாறான பிரச்சனைகள் உருவெடுக்கின்றன.    ஆணின் மனஅழுத்தத்தைவிட, வீட்டிற்குள் வாழும் பெண்ணின் மனஅழுத்தம் மிகவும் பாதிப்புகளை உண்டாக்கக்கூடியது. 

 

ஆண், பெண் இருவரும் வேலைக்குச் செல்லும் குடும்பங்களில் இவ்வாறான பிரச்சனைகள் வருவது குறைவு.  பெண்கள் வேலைக்குச் செல்வதால் அதன் அழுத்தம் புரிவதோடு பொருளாதாரம் பற்றிய அறிவும் இருக்கும்.  இருவரும் வேலைக்குப் போகும் குடும்பங்களிலும் புரிந்துணர்வு மற்றும் கல்வியறிவு குறைந்தவர்களின் குடும்பங்களிலேயே இவ்வாறான பிரச்சனைகள் வருவதுண்டு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.