Jump to content

உலகக்கிண்ணத்திற்கான உதைபந்தாட்டப் போட்டி 2014


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலகக்கிண்ணத்திற்கான உதைபந்தாட்டப் போட்டி

 

எதிர்வரும் ஆனி மாதம் 12 ம் திகதி பிரேசில் நாட்டின் சௌ பௌலோ நகரில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்க உள்ளது.

இறுதி ஆட்டம் 13 ம் திகதி ஆடி மாதம் ரியோ டெ ஜெனீரோ நகரில் நடைபெறும். பிரேசில் நாட்டின் 12 நகரங்களில் விளையாட்டுக்கள் நடைபெற உள்ளன.

 

பிரேசில் உதைபந்தாட்டச் சம்மேளனம் தனது நூற்றாண்டு விழாவைக் காணூம் நிலையில் இரண்டாவது முறையாக பிரேசிலில் நடைபெறும் உலகக் கிணத்திற்கான போட்டிகளுக்கு சகல நாடுகளும் தங்கள் ஆதரவைத் தெரிவித்திருந்தன.

தென் அமெரிக்காவில் இது ஐந்தாவது முறையாக நடைபெறுகின்றது.

1978 ஆம் ஆண்டில் ஆர்ஜெண்டீனாவில் நடைபெற்றது.

 

இம்முறை நடைபெறும் போட்டிகளில் ஒரு முக்கியத்துவம் உள்ளது.

நடைபெறும் விளையாட்டுக்கள் அனைத்திலும் கோல் கம்பக் கோடுகளை

அவதானிப்பதற்கான புதிய தொழில் நுட்பத்தை நடைமுறைப் படுத்துகின்றனர்.

இந்தத் தொழில் நுட்பத்தினால் மத்தியஸ்த்தர்களால் களவாடப்படும் கோல்களுக்கு இனி இடம் இருக்காது. கோல்க்கம்பக் கோடுகளை முற்றாகப் பந்து தாண்டிவிட்டால் கோல்க் கம்பத்தில் பொருத்தப்பட்டிருக்கும் ஏழு கமெராக்களும் உடன்செயற்பட்டு ஒரு நிமிடத்தில் மத்தியஸ்த்தர் கைகளில் கட்டியிருக்கும் கருவிக்குத் தகவலை அனுப்பிவிடும்.

 

உலகக்கிண்ணத்திற்காக 32 நாடுகள் முதற்சுற்றில் குழு நிலையில் போட்டியிடுகின்றன.

இரண்டாவது சுற்றில் குழுநிலையில் முதல் இரண்டு இடங்களையும் பெறும்16 நாடுகள் தொடர்ந்து விளையாடும் தகுதியினைப் பெறுகின்றன.

இரண்டாவது சுற்றில் வெற்றிபெறும் 8 அணிகள் காலிறுதியிலும் தொடர்ந்து 4 அணிகள் அரையிறுதி 2 அணிகள் இறுதி ஆட்டம் எனத் தொடர்ந்து முன்னேறலாம்.

 

முதற்சுற்றுக்குத் தெரிவான அணிகள்

 

ஐரோப்பா 13 அணிகள்

பெல்ஜியம் கிரேக்கம் ரஸ்யா,பொஸ்னியாவும் ஹெர்செகோவினா,

இத்தாலி,சுவிஸ்,ஜேர்மனி,குரோசியா,ஸ்பெயின்,இங்கிலாந்து,

ஒல்லாந்து, பிரான்ஸ், போத்துக்கல்

 

தென் அமேரிக்கா 6 அணிகள்

பிரேசில்,ஆர்ஜென்ரீனா,சிலி,எக்குவடோர், கொலம்பியா,உருகுவே

 

ஆபிரிக்கா 5 அணிகள்

அல்ஜீரியா, நைஜீரியா, கானா, கமேரூன், ஐவரி கோஸ்ற்

 

ஆசியா 4 அணிகள்

அவுஸ்திரேலியா ஜப்பான்,ஈரான்,தென் கொரியா

 

வட அமேரிக்கா 4 அணிகள்

 

கோஸ்ரா றிக்கா , ஹொண்டூராஸ், மெக்சிக்கோ,அமேரிக்கா

 

 

குழு நிலை விபரம்

 

குழு ஏ

பிரேசில்,குராசியா,மெக்சிக்கோ,கமேரூன்,

 

குழு பி

 

ஸ்பெயின்,ஒல்லாந்து,சிலி,அவுஸ்திரேலியா

 

குழு சி

கொலம்பியா,கிரேக்கம்,ஐவரி கோஸ்ற் ,ஜப்பான்

 

குழு டி

 

உருகுவே, கோஸ்ரா றிக்கா , இங்கிலாந்து, இத்தாலி

 

குழு ஈ

சுவிஸ், எக்குவாடோர்,பிரான்ஸ்,ஹொண்டூராஸ்

 

குழு எவ்

ஆர்ஜென்ரீனா, பொஸ்னியாவும் ஹீர்செகோவினாவும்,ஈரான், நைஜீரியா

 

குழு ஜி

 

ஜேர்மனி,போத்துக்கல்,கானா,அமேரிக்கா

 

குழு எச்

பெல்ஜியம் ,அல்ஜீரியா, ரஸ்யா,தென் கொரியா

 

 

முதற்சுற்று

 

1)பிரேசில் - குராசியா

2)மெக்சிகோ - கமேரூன்

3)ஸ்பெயின் - ஒல்லாந்து

4)சிலி - அவுஸ்திரேலியா

5)கொலம்பியா - கிரேக்கம்

6)ஐவரி கோஸ்ற் - ஜப்பான்

7)உருகுவே - கோஸ்ரா றிக்கா

8)இங்கிலாந்து - இத்தாலி

9)சுவிஸ் - எக்குவாடோர்

10)பிரான்ஸ் - ஹொண்டூராஸ்

11)ஆர்ஜென்ரீனா - போஸ்னியா ஹெர்செகோவினா

12)ஈரான் - நைஜீரியா

13)ஜேர்மனி - போத்துக்கல்

14)கானா - அமேரிக்கா

15)பெல்ஜியம் - அல்ஜீரியா

16)ரஸ்யா - தென் கொரியா

17)பிரேசில் - மெக்சிக்கோ

18)கமெரூன் - குராசியா

19)ஸ்பெயின் - சிலி

20)அவுஸ்திரேலியா - ஒல்லாந்து

21)கொலம்பியா - ஐவரி கோஸ்ற்

22)ஜப்பான் - கிரேக்கம்

23)உருகுவே - இங்கிலாந்து

24)இத்தாலி - கோஸ்ரா றிக்கா

25)சுவிஸ் - பிரான்ஸ்

26)ஹொண்டூராஸ் - எக்குவாடோர்

27)ஆர்ஜென்ரீனா - ஈரான்

28)நைஜீரியா - பொஸ்னியா ஹெர்செகோவினா

29)ஜேர்மனி - கானா

30)அமேரிக்கா - போத்துக்கல்

31)பெல்ஜியம் - ரஸ்யா

32)தென் கொரியா - அல்ஜீரியா

33)கமெரூன் - பிரேசில்

34)குராசியா - மெக்சிக்கோ

35)அவுஸ்திரேலியா - ஸ்பெயின்

36)ஒல்லாந்து - சிலி

37)ஜப்பான் - கொலம்பியா

38)கிரேக்கம் - ஐவரி கோஸ்ற்

39)இத்தாலி - உருகுவே

40)கோஸ்ரா றிக்கா - இங்கிலாந்து

41)ஹொண்டூராஸ் - சுவிஸ்

42)எக்குவாடோர் - பிரான்ஸ்

43)நைஜீரியா - ஆர்ஜென்ரீனா

44)பொஸ்னியா ஹெர்செகோவினா - ஈரான்

45)அமேரிக்கா - ஜேர்மனி

46)போத்துக்கல் - கானா

47)தென் கொரியா - பெல்ஜியம்

48)அல்ஜீரியா - ரஸ்யா

 

 

 

 

இரண்டாவது சுற்று

 

 

49)வெற்றியாளர் குழு ஏ - இரண்டாமிடம் குழு பி

50)வெற்றியாளர் குழு சி - இரண்டாமிடம் -கு ழு டி

 

53)வெற்றியாளர் குழு ஈ - இரண்டாமிடம் குழு எவ்

54)வெற்றியாளர் குழு ஜி -இரண்டாமிடம் குழு எச்

 

 

 

 

51)வெற்றியாளர் குழு பி -இரண்டாமிடம் குழு ஏ

52)வெற்றியாளர் குழு டி - இரண்டாமிடம் குழு சி

 

55)வெற்றியாளர் குழு எவ் - இரண்டாமிடம் குழு ஈ

56)வெற்றியாளர் குழு எச் - இரண்டாமிடம் குழு ஜி

 

 

 

கால் இறுதி ஆட்டம்

 

57)வெற்றியாளர் 53 - வெற்றியாளர் 54

58)வெற்றியாளர் 49 - வெற்றியாளர் 50

 

 

59)வெற்றியாளர் 55 - வெற்றியாளர் 56

 

60)வெற்றியாளர் 51 - வெற்றியாளர் 52

 

 

அரை இறுதி ஆட்டம்

 

61)வெற்றியாளர் 57 - வெற்றியாளர் 58

62)வெற்றியாளர் 59 - வெற்றியாளர் 60

 

 

 

மூன்றாவது இடத்துக்கான ஆட்டம்

 

63)தோல்வியடைந்தவர் 61 - தோல்வியடைந்தவர் 62

 

 

இறுதி ஆட்டம்

 

64)வெற்றியாளர் 61 - வெற்றியாளர் 62

 

இத்திரியில் உங்கள் கருத்துக்களையும்.....

நான் வேறு திரியில் ஆரம்பிக்க இருக்கும் யாழ் கள உறவுகளுக்கிடையிலான உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி சம்பந்தமான வினா விடை போட்டியில் உங்கள் ஆதரவையும் தாருங்கள்

 

 

 

Link to comment
Share on other sites

  • Replies 561
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டம் ஆரம்பிக்கட்டும்  வாத்தியார்...! :D

Link to comment
Share on other sites

எனது ஆதரவு பொதுவில் பிறசில் அணிக்குத்தான்.. :D எப்பவும் ஜேர்மனி, இத்தாலி அணிகளுக்கு எனது ஆதரவு இருந்ததில்லை.  :huh:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஒரே கொலையும் கொள்ளையுமா இருக்கு போவோமா விடுவோமா என்று யோசிக்கிறேன்.
பல வருடங்கள் முன்பு போவது என்று எண்ணி இருந்தேன் ....... இப்போ அங்கிருந்து வரும் செய்திகள் நல்லவையாக இல்லை.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கு நன்றி சுவி அண்ணா


அர்ஜுன் அண்ணா நுழைவுச் சீட்டும் வாங்கி விட்டார் என் நினைக்கிறேன்.


எனது ஆதரவு பொதுவில் பிறசில் அணிக்குத்தான்.. :D எப்பவும் ஜேர்மனி, இத்தாலி அணிகளுக்கு எனது ஆதரவு இருந்ததில்லை.  :huh:  :D

 

பிரேசில் எப்போதும் சீரான விளையாட்டு நடத்துவதில்லை.
விளையட்டு வீரர்களின் மன நிலையே அவர்களின் விளையாட்டை தீர்மானிக்கின்றது.

 

இந்த முறை அமேரிக்கா ஜேர்மனிய பயிற்சியாளருடன் களமிறங்குகின்றார்கள். அதுவும் ஜேர்மனியக் குழுவிலேயே இருப்பதால் விளையாட்டுக்கள் சுவாரசியமாக இருக்கும். 
 


 

ஒரே கொலையும் கொள்ளையுமா இருக்கு போவோமா விடுவோமா என்று யோசிக்கிறேன்.
பல வருடங்கள் முன்பு போவது என்று எண்ணி இருந்தேன் ....... இப்போ அங்கிருந்து வரும் செய்திகள் நல்லவையாக இல்லை.

 

 

உதைபந்தாட்டம் நடக்கும் பொழுது எல்லோரும் அமைதியாகிவிடுவார்கள் என நினைக்கிறேன். :)
 
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=5_FF9qhvo3g

 

 

இந்தக் காணொளியில் முதலில்  மஞ்சள் நிறத்துடன் விளையாடும் டோற்முண்ட் அணியினர் அடித்த கோலை நடுவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் பின்னர் நேர நீடிப்பின் பின்னர் எதிரணியினர் (முனிச்) 2 . 0 கோல்களால் ஜேர்மன் கிண்ணத்தைக் கைப்பற்றினர்.
கமெராக்களைப் பொருத்திப் புதிய தொழில் நுட்பத்தை ஏற்படுத்தியிருந்தால் இந்த நிலை வந்திருக்காது.

ஒரு மைதானத்திற்கான இந்தப் புதிய தொழில் நுட்பத்திற்கான செலவு  அண்ணளவாக 500.000 யூரோக்கள் ஆகும்.
ஜேர்மனியில் உள்ள 36 விளையாட்டுக்கழகங்களில் அரைவாசிக்கு மேற்பட்ட கழகங்கள் பொருளாதாரப் பிரச்சனையால் இந்தத் தொழில் நுட்பத்தை ஆதரிக்கவில்லை
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2.miroslav klose ஜேர்மனி
22.david  villa ஸ்பெயின்
35. diego  forlan உருகுவே  
35. thierry  henri பிரான்ஸ்

இதுவரை உலகக்  கிண்ணப்போட்டிகளில்  அதிக கோல்களை அடித்தவர்களின் தரவரிசையில் மேலே குறிப்பிட்ட இடங்களில் இருக்கும்  அந்த நாட்டு வீரர்களும் இந்த  முறை விளையாடுகின்றனர்.

 

Link to comment
Share on other sites

இந்தமுறை பிறசில் அணியில் நேமார் தவிர வேறு நட்சத்திர ஆட்டக்காரர்கள் இல்லை.. மற்ற நாடுகள் எல்லாம் வாய் பார்க்க பிறசில் அள்ளிக்கொண்டு போகப்போகுது.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Group A

403482961.jpg

பிரேசிலை தவிர மற்ற ஏனைய மூன்று அணிகளும் திறமையில் சமமான அணிகள். இந்த மூன்று அணிகளும் தங்களுக்குள் அடிபட்டு புள்ளிகளை பெற்றால் தான் உண்டு. பிரேசிலிற்கு குழுவில் முதலாவது இடம் தவிர்க்கமுடியாத இடமாக அமைய வேண்டும் என்பது கட்டாயம். இதுவே அவர்களின் சறுக்கலிற்கும் இடமளிக்கலாம் (அப்படி நடக்க சந்தர்ப்பங்கள் குறைவு). 

குழுநிலை ஆட்டத்திற்கு பின்னர் பிரேசில் மோத வேண்டிய அணிகள் Spain அல்லது Netherland. இங்கேயே ஒரு பெரிய அணி வெளியேறவுள்ளது. இந்த நிலையை தாண்டுகின்ற அணி இறுதியாட்டம் வரை முனறேலாம் என்பது எனது கணிப்பு. 

Group B

2659115522.jpg

பலமான அணிகளை கொண்ட குழுவில் இதுவும் ஒன்று. 2010ஆம் ஆண்டு இறுதியாட்டத்தில் மோதிய அணிகள் மீண்டும் மோதவுள்ளன. Spain மற்றும் Netherland அணிகள புதிய பல வீரர்களுடன் களமிறங்குகின்றார்கள். முதலாவது இடத்திற்கு இந்த அணிகள் இரண்டும் மோதிக்கொள்ளும் என எதிர்பார்க்கலாம். Chile நாடு இரண்டாவது இடத்திற்கு முயன்றுபார்கும். 

Australia இந்த உலகக்கிண்ணத்தில் அனுபவத்தை தவிர வேறெதையும பெறமுடியாது.

 

Group C
3098624675.jpg

1998ஆம் ஆண்டிற்கு பின்னர் Colombia மீண்டும் களமிறங்குகிறது. உலகக்கிண்ணத்திற்கான தெரிவில் இவர்கள் மிகவும் திறமையாக விளையாடினார்கள். எனவே இந்த குழுவில் முதலாவதாக வருவதற்குரிய திறமை இவர்களிடம் எதிர்பார்க்கப்படுகிறது. Japan மற்றும் Ivorcoast அணிகளிடம் திறமையான வீரர்கள் இருந்தாலும் முக்கியமான ஆட்டங்களில் ஏமாற்றத்தையே தந்துள்ளார்கள். இரண்டாமிடத்திற்கு இந்த இரு அணிகளும் மோதலாம். Greece ஏனைய மூன்று அணிகளிடமும் தட்டிப்பறிக்கும் புள்ளிகளை பொறுத்தே இந்த குழுவில் 2-3ஆம் இடங்கள் தீர்மானிக்கப்படலாம். 

 

Group D

785793613.jpg

Group B ற்கு பிறகு கடினமான குழுவாக இதனை சொல்லலாம். 2010ஆம் ஆண்டு அரையிறுதி ஆட்டத்தில் ஆடிய Uruguay அணியில் பல திறமையான வீரர்கள் உள்ளனர். அத்துடன் இது அவர்களின் கண்டத்தில் நடப்பதால் இந்த குழுவில் 1-2 இடங்களிற்கு இவர்களிற்கே சந்தர்ப்பம் அதிகமுள்ளது. இத்தாலி அல்லது இங்கிலந்த குழுநிலையிலயே நின்றுவிடுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். ழூன்று முன்னால் உலகசம்பியன்கள் ஒரு குழுவுக்குள் சந்திப்பதும் இதுவே முதல் முறை. Costa Rica அணிக்கு இது ஒரு விளம்பர பயணமாக அமையலாம். 

 

Group E

1842576466.jpg

சவுத் அமெரிக்காவில் தெரிவான அணிகளில் பலவீனமான அணி Ecuador மற்றும் உலககிண்ணத்தில் இதுவரை ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெறாத அணி Hoduras ஆகியன இந்த குழுவில் உள்ளன. 

 

Switzerland   மற்றும் France  ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு தெரிவாகலாம். இந்த இரண்டு அணிகளும் எப்பொழுது எப்படி விளையாடுவார்கள் என்பதை கணிப்பது கடினம். Zidane காலத்திற்கு பின்னர் France  அணி தனது "வல்லரசு" பட்டத்தை இழந்துவிட்டது. சுவிசின் நிலை இதுவரை பெரிய அணிகளுடன் திறமையாக விளையாடிவிட்டு சிறிய அணிகளுடன் தோல்வியை தழுவியுள்ளனர். 2010 ஆண்டு Spain நாட்டை தோற்கடித ஒரே அணி என்பது குறிப்பிடத்தக்கது.

 

Group F

523961745.jpg

தெரிவான 32 கழகஙகளில் Iran மிகவும் பலவீனமான அணி. Nigeria ஆபிரிக்கா கிண்ணத்தை கைப்பற்றியிருந்தாலும் Argentinienவிடம் முதலாவது இடத்தை இழக்கும் என்று எதிர்பார்க்கலாம்.இந்த இரண்டு கழகங்களையும் சீண்டிபபார்க்க வருவது Bosnia அணி. முதல் முறையாக ஒரு உலகக்கிண்ணத்தில் பங்குபெற்றுகிறார்கள். சற்று முயன்றால் 2 இடத்தை எட்டிப்பிடிககலாம். 

 

Group G

1339751036.jpg

Germany இந்த குழுவில் முதலிடத்தை பெறும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது.  Portugal சென்ற ஆண்டின் சிறந்த உதைபந்தாட்ட வீரருடன் களமிறங்குகின்றது. அதுமட்டுமல்லாமல் அனைவரும் பல முக்கியமான கழகங்களில் விளையாடுகிறவர்கள். Germanyயை பொறுத்தவரை "Tournament luck" என்பது அவர்களிற்கு எப்பொழுதுமே கைகொடுத்துள்ளது. Ghana சிறந்த அணியாக இருந்தாலும் வந்து மாட்டியுள்ள இடம் வெளியேற முடியாதபடி உள்ளது. Boateng சகோதரர்கள் ஒருவர் Germany அணிக்கும் மற்றவர் Ghana  அணிக்கும் விளையாடுவது குறிப்பிடதக்கது. USA விற்கு குழுநிலையுடன் ஆட்டம் முடிந்துவிடும். இதன் பயிற்சியாளர் Germany நாட்டவர். 2006ஆம் ஆண்டு Germany அணிக்கு பயிற்சியாளராக இருந்தவர். பல சுவாரஸ்யமான தகவல்கள் அடங்கிய குழு இது. 

 

Group H

2760887878.jpg

Belgium  உலகக்கிண்ணத்திற்கான தெரிவு போட்டிகளில் மிகவும் திறமையாக விளையாடியது குறிப்பிடத்தக்கது. நீண்ட நாள் பயணததின் பின்னர் மிகவும் திறமையான வீரர்களுடன் கழமிறங்குகின்றார்கள். பல முன்னனி கழங்களில் இவர்களின் வீரர்கள் விளையாடுகின்றார்கள். எனவே குழுநிலையில் அனைத்து போட்டிகளையும் இவர்கள் வெல்வார்கள் என எதிர்பார்க்கலாம். South Korea மற்றும்  Russia  இரண்டாவது இடத்திற்கு மோதிக்கொள்ளும். Algeria வந்தவழியே திரும்ப வேண்டியது தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக கிண்ணத்தின் மறுபக்கம்

 

இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் பிரேசில் மக்களின் அதிகமானோர் இந்த உலககிண்ண போட்டிகளிற்கு எதிராக திரும்பிக்கொண்டிருக்கின்றனர். 
ஒதுக்கப்பட்ட நிதிகளில் மோசடி, ஊழல் என்று இந்தியாவிற்கு நிகரான நடைமுறைகள் காணப்படுகின்றன. 

 

சென்ற ஆண்டு நடாத்தப்பட்ட "சிறிய உலகக்கிண்ணப்போட்டி"யில் (Confederation Cup) இரண்டு லட்சத்திற்கு அதிகமான மக்கள் போராட்டங்களை நடத்தியிருந்தார்கள். இதில் முக்கியமாக இளையர்வகளின் பங்கே அதிகம். பிரேசில் நாட்டவர்களின் உதைபந்தாட்ட மோகம் என்பது எழுதித்தெரியவேண்டியதில்லை. ஆனால் பிரேசில் அரசாங்கமும் FIFAவும் நடந்துகொள்ளும் விதம் இவர்களை போராட்டக்காரர்களாக்கியது. 

 

wm-fussball-ausschreitungen-proteste.jpg

 

2008ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தை நடாத்துவதற்கு பிரேசில் தெரிவாகியபோது அனைத்து மக்களும் மகிழ்ச்சிக்ககடலில் முழ்கினார்கள். உதைபந்தாட்ட ரசிகர்கள் பிரேசில் கிண்ணத்தை கைப்பற்றுவது உறுதி என்று கொண்டாடினார்கள். சாதாரண மக்கள் வரப்போகும் முதலீடுகள் தங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என மகிழ்ந்தார்கள். அப்போழுது பிரதமராக இருந்த Lula da Silva வின் பங்கு மிகவும் முக்கியமானது. பிரேசில் நாட்டை நல்ல வளர்ச்சிப்பாதையில் கொண்டுசென்றவர். ஏழ்மையை ஒளிப்பதற்கு சிறப்பாக பங்காற்றியவர். உலகக்கிண்ணம் பிரேசில் நாட்டிற்கு வழங்கப்பட்டதை அறிந்து இவர் ஆற்றிய உரையில் கண்ணீரும் கலந்தது (இப்பொழுது இவர் ஆட்சியில் இல்லை).

 

ஆனால் இன்றைய நிலமையோ வேறு.

 

மைதானங்கள் கட்டுவதற்காக மக்கள் தங்களின் இருப்பிடங்களைவிட்டு விரட்டியடிக்கப்பட்டார்கள். அப்படியிருந்தும் சில மைதானங்கள் இன்னும் முழுமைபெறவில்லை. இதுவரை நடந்த உலககிண்ணபோட்டிகளில் எந்த ஒரு நாடும் இப்படி பின் தங்கியிருக்கவில்லை. ஒவ்வொரு மைதானத்திற்கும் சிறப்பு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 

போதைபொருள் கும்பல் ஒளிப்பு என்ற பெயரில் பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். ஆரம்பத்தில் வன்முறைகலாச்சாரத்தை ஒளிப்பதற்கு மக்களின் ஆதரவு இருந்தே வந்தது. அப்பாவிகள் கொல்லப்படும் போது எதிர்ப்பு அரசாங்கம் பக்கம் திரும்பியது. முதலில் சுட்டுவிட்டு பின்னர் இறந்தவர் பற்றி ஆராய்வதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதிலும் கறுத்த இளைஞர்கள் பலியாவதே மக்களை இன்னும் ஆத்திரமடைய செய்தது. 

 

பல நகரங்களில் அரச மருத்துவமனைகள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றன. பிசா வெளியிட்ட பட்டியலில் பிரேசில் 58இடத்தில் உள்ளது. மின்வெட்டு இங்கே இன்னொரு பிரச்சனை. மணிக்கணக்காக பேரூந்துகளில் நின்ற வண்ணம் பயணம் செய்து வெலைக்கு செல்லும் இளைஞர்கள். இப்படி பல அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க அரசு முன்வரவில்லை. மாறாக FIFAவை திருப்திப்படுத்துவதிலயே அரசாங்கம் அக்கறை செலுத்துகின்றது. இதனால் எழுந்த அமைதியான போராட்டங்களையும் அரசு வன்முறைகொண்டு நசுக்கமுயன்றது. 

 

Demonstrators-confront-Brazilian-riot-po

 

பிரேசில் மக்களின் போராட்டம் அரசாங்கத்தை மட்டும் எதிர்க்கவில்லை. FIFAவையும் சேர்த்தே எதிர்க்கின்றது. FIFAவின் தன்னிச்சையான போக்கே இதற்கு காரணம். முக்கியமான இடங்களில் FIFAதனது கடைகளை விரிவுபடுத்தி கொள்ளை லாபம் அடிக்கபோகின்றது. உள்நாட்டு மக்களிற்கு இதில் எதுவும் மிஞ்சாது எனலாம். ஒரு வருடத்திற்கு முன் 65வீதம் மக்கள் ஆதரவு தெரிவித்த நிலையில் தற்பொழுதும் வெறும் 48வீதமாக சுருங்கியுள்ளது. பலர் போராட்டக்காரர்களின் பக்கமே திரும்பிவிட்டனர். 

"இதுவரை நடைபெற்ற உலகக்கிண்ணங்களில் இதுவே சிறந்ததாக அமையும்" என்று அரசாங்கம் கொக்கரிக்க மறுமுனையில் "இங்கே உலகக்கிண்ணம் நடைபெறபோவதில்லை" என்று மக்கள் குரல் வலுக்கின்றது. மக்களின் கேள்விகளிற்கு அரசாங்கம் பதிலளிப்பதாக இல்லை. மாறாக உதைபந்தாட்ட ரசிகர்களால் வரப்போகும் வளர்ச்சி மற்றும் முதலீடுகளை உதாரணம் காட்டி தப்பிக்க முயல்கின்றது. 

இந்த ரசிகர்களின் வரவை எதிர்பார்த்து விலைவாசி பல மடங்கு உயர்ந்துவிட்டது. இதனால் அதிகம் பாதிக்கப்பபட்டது நடுத்தர மக்களே. 

 

இன்னொரு வேடிக்கை என்னவென்றால் FIFA 8 மைதானங்கள் மட்டுமே போதும் என்றது. ஆனால் அரசாங்கமோ 12 மைதானங்கள் கட்டிக்கொண்டிருக்கின்றது. மைதானம் கட்டும் பணிகளில் இதுவரை 8 ஊழியர்கள் உயிரழந்துள்ளனர். இந்த போட்டிகள் முடிந்தவுடன் இதில் பல மைதானங்கள் பாவனையற்றே போகும் வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன. Manaus, Cuiabá மற்றும் Brasília போன்ற இடங்களில் இரண்டாவது லீக் அணிகள் கூட இல்லாத நிலையில் இந்த மைதானங்களை யார் பாவிக்கப்போகின்றார்கள் என்ற கேள்வி பதிலில்லாமல் உள்ளது. இதற்கு சிறந்த உதாரணம் தென்ஆபிரக்கா. பல மைதானங்களின் தற்போதைய பராமரிப்புச்செலவு முயல் வேகத்தில் செல்ல வருமானமோ ஆமை வேகத்தில் வந்துகொண்டுள்ளது. 

இதற்கு முதல் இருந்த அரசாங்கம் இந்த மைதானத்திற்கான செலவை தனியார் நிறுவனங்களிடமிருந்து பெறப்போவதாக அறிவித்தது. ஆனால் தற்பொழுது இதற்கான செலவு மக்களின் வரிப்பணத்திலே தங்கியுள்ளது. இந்த உலகக்கிண்ண போட்டிக்கான செலவு எவ்வளவு என்பதையும் அரசாங்கம் வெளிப்படையாக அறியதரவில்லை. 

 

ஒன்று மட்டும் தெளிவாக விளங்கிக்கொள்ள முடிகின்றது. FIFA கொள்ளை லாபம் பார்த்துவிட்டு இடத்தை காலிசெய்யப்போகின்றது. பின்விளைவுகளை பற்றி அது கவலைப்படபோவதில்லை. 

தனிப்பட்ட முறையில் இந்த உலகக்கிண்ண்போட்டியை நான் புறக்கணிக்கின்றேன். நேரில் சென்று பார்ப்பதாக ஒரு காலத்தில் திட்டமிட்டிருந்தேன். அதனை கைவிட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அங்கு போராடும் மக்களிற்கான ஆதரவாகவும் எனது மனதிருப்திக்காகவும் இந்த முடிவு. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தமுறை பிறசில் அணியில் நேமார் தவிர வேறு நட்சத்திர ஆட்டக்காரர்கள் இல்லை.. மற்ற நாடுகள் எல்லாம் வாய் பார்க்க பிறசில் அள்ளிக்கொண்டு போகப்போகுது.. :lol:

 

இந்தமுறையும் கிண்ணம் ஐரோப்பாவில் தான் இருக்கும்

இருக்கின்ற பிரச்சனைக்குள் பிரேசில் இரண்டாவது சுற்றுத் தாண்டுமோ தெரியாது. :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக இணைப்பிற்கும் விபரங்களுக்கும்  நன்றி ஊர்க்காவலன்
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரேசிலைப் பொறுத்தமட்டில்  காதலியா கால்பந்தாட்டமா என்றால் யோசிக்காமல் கால்பந்தாட்டத்தின் பக்கம் போய் விடுவார்கள் !

 

பிரான்ஸ் காதலியின் கரத்தைப் பற்றிக் கொண்டே  கால் பந்தாட்டத்தையும் ஒரு கை பார்ப்பார்கள். இம்முறை  வெற்றிக்கிண்ணம் பிரான்சுக்கே ! அந்தக் கிண்ணத்தில் சம்பெயின் நிரப்பி அத்தனைபேரும் ஆடுவதைப் பொறுத்திருந்து பாருங்கள் மக்களே...! :D

Link to comment
Share on other sites

நான் பிரேசிலுக்கு போகவில்லை வாத்தியார் .இரு மருமக்கள் போகின்றார்கள் .போன தடவை தென்னாபிரிக்காவிற்கும் போனார்கள் .

எங்களால் எதையும் செய்ய முடியாதற்கு  எங்களில் என்ன பிழை என்று இன்னமும் புரியவில்லை .  :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

g_01_01,property=original.jpg

 

ஜேர்மன் அணி வெற்றிவாகை சூட என் வாழ்த்துக்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரேசில் 2014

உலக கோப்பை பைனலுக்கு அதிக முறை முன்னேறிய அணிகள் வரிசையில் பிரேசில் மற்றும் ஜெர்மனி அணிகள் முதலிடம் பிடித்தன. இவ்விரு அணிகள் தலா 7 முறை பைனலுக்கு முன்னேறின.

உலக கோப்பை கால்பந்து தொடரில் ஸ்காட்லாந்து அணி, எட்டு முறை (1954, 1958, 1974 முதல் 1990, 1998) பங்கேற்றது. இந்த அனைத்திலும் முதல் சுற்றுடன் திரும்பியது. இப்படி, 8 முறை முதல் சுற்றுடன் கிளம்பிய ஒரே அணி ஸ்காட்லாந்து மட்டுமே.

உலக கோப்பை தொடரில் அதிகமான கோல் அடித்து வெற்றி பெற்ற அணி என்ற சாதனை ஹங்கேரிக்கு உண்டு. 1982ல் எல் சால்வடார் அணியை, ஹங்கேரி 10–1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது.

இதுவரை நடந்த 19 உலக கோப்பை தொடர்களில், ஜெர்மனி அணி 1930, 1950 தவிர, 17ல் பங்கேற்றது. இதில் 11 முறை, அரையிறுதிக்கு முன்னேறியது. உலக கோப்பை கால்பந்து தொடரில், அதிகமுறை அரையிறுதிக்கு முன்னேறிய அணி ஜெர்மனி தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1998 இல் உலகக்கிண்ணத்தை வென்ற பிரான்ஸ் 2002 இல் ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் குழு நிலையில் வெளியேறினார்கள் :D

2006 இல் உலகக்கிண்ணத்தை வென்ற இத்தாலி 2010 இல்  குழு நிலை விளையாட்டுக்களில் எதையும் வெல்ல முடியாமல் முதற் சுற்றுடன் வெளியேறினார்கள் :)





 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1988 இல் உலகக்கிண்ணத்தை வென்ற பிரான்ஸ் 2002 இல் ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் குழு நிலையில் வெளியேறினார்கள் :D

2006 இல் உலகக்கிண்ணத்தை வென்ற இத்தாலி 2010 இல்  குழு நிலை விளையாட்டுக்களில் எதையும் வெல்ல முடியாமல் முதற் சுற்றுடன் வெளியேறினார்கள் :)

 

 

1998 ஆம் ஆண்டு வாத்தியார். . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2006 இல் ஜேர்மனியில் நடந்த உலகக்கிண்ணப் போட்டியில்

நடைபெற்ற 64 விளையாட்டுக்களில் 27 சிவப்பு மட்டைகள் காட்டப்பட்டது.

இதுவும் ஒரு சாதனையே

 

1998 இல் பிரான்சில் அதிகளவான 345 மஞ்சள் அட்டைகள் வழங்கப்பட்டன.
2010 இல் 11 சிவப்பு அட்டைகளும் 104 மஞ்சள் அட்டைகளும் வழங்கப்பட்டன.
நன்றி ஊர்க்காவலன்
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2006 இல் ஜேர்மனியில் நடந்த உலகக்கிண்ணப் போட்டியில்

நடைபெற்ற 64 விளையாட்டுக்களில் 27 சிவப்பு மட்டைகள் காட்டப்பட்டது.

இதுவும் ஒரு சாதனையே

 

1998 இல் பிரான்சில் அதிகளவான 345 மஞ்சள் அட்டைகள் வழங்கப்பட்டன.

2010 இல் 11 சிவப்பு அட்டைகளும் 104 மஞ்சள் அட்டைகளும் வழங்கப்பட்டன.

நன்றி ஊர்க்காவலன்

 

 

இனி வாத்தியாரோடை எட்டத்தை நிண்டுதான் கதைக்கோணும்... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகக்  கிண்ணப்  போட்டிக்கு 20 நாட்கள் இருக்கும் நிலையில் தனது பரீட்சார்த்த விளையாட்டில் ஸ்லோவாக்கியாவை 1 .0 எனும் நிலையில் ரஸ்ய அணி வெற்றிபெற்றுள்ளது.

ரஸ்ய அணிக்கு fabio capello  பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகக் கிண்ணத்திற்கான உதைபந்தாட்டப் போட்டிகள் ஆரம்பிக்க இன்னும் 15 நாட்கள் உள்ள நிலையில் பிரான்ஸ் அணி தனது பாரீட்சார்த்தப் போட்டிகளில் ஒன்றான நோர்வே அணிக்கு எதிரான விளையாட்டில் 4:0 வெற்றிபெற்றுத் தனது அணி நிலையை உறுதி செய்துள்ளது. பிரான்ஸ் அணி இந்தமுறை பிரேசிலில் ஒரு பலமான அணியாகத் திகழ வாய்ப்புக்கள் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
மே மாதம் நடைபெற்ற போட்டிகள்
 
GER.png          -       POL.png         0:0
Germany               Poland
 
 
NED.png         -       ECU.png           1:1
Netherlands         Ecuador
 
 
IRN.png         -       BLR.png           0:0
Iran                     Belarus
 
RUS.png         -       SVK.png           1:0
Russia                Slovakia
 
 
MKD.png          -      CMR.png           0:2
Macedonia       Cameroon
 
 
AUS.png          -      RSA.png            1:1
Australia         South Africa
 
 
BEL.png          -     LUX.png               5:1
Belgium          Luxembourg
 
 
USA.png          -      AZE.png              2:0
USA                   Azerbaijan
 
 
JPN.png          -       CYP.png             1:0
Japan                    Cyprus
 
 
FRA.png           -       NOR.png             4:0
France                  Norway
 
 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்லது  உற‌வே அப்படிபட்ட  நீங்கள் தமிழ்நாட்டில்  சீமான் தனது மகனுக்கு ஆங்கில மோகத்தால் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பதை எதிர்க்கவில்லையே. 😭  இலங்கையில்  தமிழர்களும் சிங்கலவர்களும் தங்கள் மொழிகளில் கல்வி கற்பது போன்று மற்றய நாட்டு மக்களும் தங்கள் மொழியில் கல்வி கற்பது போன்று சீமான் தனது மகனுக்கு தமிழ் வழி கல்வி கற்பித்திருந்தால் அது ஒன்றும் சாதனையில்லை  அது ஒரு அடிப்படை விடயம்.அதுவும் தமிழ் தமிழ் என்று சொல்லி அரசியல் செய்யும் சீமான் முதல் செய்ய வேண்டியது.    
    • யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு! யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த எரியூட்டி கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. முன்பதாக வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1375554
    • எந்தக் காலத்திலும் அதிகாரவெறி கொண்டவர்களாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும்தான் இந்த உலகம் அமைதியை இழந்து கொண்டிருக்கின்றது.........!   தொடருங்கள் ஜஸ்டின் .......!   👍
    • வ‌ங்க‌ளாதேஸ் எப்ப‌டி த‌னி நாடான‌து...............இத‌ற்க்கு ப‌தில் சொல்லுங்கோ மீண்டும் விவாதிப்போம் பெரிய‌வ‌ரே..........................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.