Jump to content

புலத்துக்கு வந்த மாப்பிள்ளையள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என்று தணியும் இந்த......................???

Link to comment
Share on other sites

  • Replies 143
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அதே தான் அண்ணா சம உரிமை கொடுக்க பழகணும் பெண் ஆதிக்கத்த விடனும் மாமனார் மாமியார பொண்டாட்டிய வாரவங்க மகள் மாதிரி பாத்துக்கணும் அத விட்டுட்டு அவைய நர்சிங் ஹோம் அனுப்புற பொண்டாட்டியா தான் பாதி பொண்ணுங்க இருக்காங்க

இதெண்டால் உண்மை தான்.

பெண்கள் தங்க தாய் தகப்பனை கணவனைக் கொண்டு காசு அனுப்பி பார்க்க பராமரிக்க விளைகின்ற அதேவேளை கணவனின் தாய் தந்தையரை வெறும் விசிட்டோட கைவிடுற நிலையை பல இடங்களிலும் காண முடிகிறது. இது முழுச் சுயநலத்தின் வெளிப்பாடும் ஆகும்.

புதிய தலைமுறை அதையும் தாண்டி.. பெற்றோரை பற்றிய கணக்கெடுப்பின்றியே வாழத் தலைப்படுவதையும் பார்க்கிறோம். இவை இரண்டுமே சமூக வாழ்வியலில் தவறான போக்குகள் ஆகும்..!

மனித சமூக வாழ்வியலில்.. புரிந்துணர்வும்.. அன்பும் ஆதரவும் அரவணைப்பும் இன்றி வாழுதலே பல மன மற்றும் குடும்பப் பிறழ்வுகளுக்கு முக்கிய காரணம். வயதானவங்கள் வயோதிப இல்லங்களை தஞ்சமைடையக் காரணமும் கூட..!

இன்றைய தலைமுறையினர்.. தங்கள் நிலையில் இருந்து கீழறிங்கி சிந்திக்கவோ.. மேலுயர்ந்து சிந்திக்கவோ தயங்குகின்றனர். அது தம்மை தாழ்மைப்படுத்துவதாக எண்ணுகின்றனர். இதனை தலைமுறை இடைவெளி என்று ஒரு வெற்றுக் கோசத்தால் நிரப்ப முற்படுகின்றனர்.

தலைமுறை இடைவெளி என்ற ஒன்றே உண்மையில் கிடையாது. நாம் குழந்தைகளோடு குழந்தைகள் நிலைக்கும் பெரியவர்களோடு அவர்களின் நிலைக்கும் இளையவர்களோடு அவர்களின் நிலைக்கும் எம்மை மாற்றிக் கொண்டு வாழக் கற்றுக் கொள்ளாமையை மறைக்க பாவிக்கும் பதமே தலைமுறையிடைவெளி என்பது. உயிரினங்கள் எவற்றிலும் இல்லாத இந்த தலைமுறை இடைவெளி மனிதனில் மட்டும் எப்படி முளைத்தது..???!

ஒரு ஆசிரியர் 50 வருடமாக பல தலைமுறைக்கு கல்வி கற்ப்பிக்க முடிகிறப்போ.. ஏன் அவரை மாணவர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை. காரணம்.. மாணவர்கள் மனதளவில் சிந்தனை அளவில் அந்த ஆசிரியரின் நிலைக்கு வர முயற்சிக்காமையே..! இது சிந்தனைத் திறனாற்றலில் உள்ள தவறே அன்றி இதனை தலைமுறை இடைவெளி என்பது மிகவும் தவறு.

நாம் குழந்தைகளோடு குழந்தைகளாக.. பெரியவர்களோடு பெரியவர்களாக ஆகவும் பழகவும் தொடர்பாடவும்.. கற்றுக்கொள்ளும் பக்குவத்தை அடைகின்ற போது.. குடும்பத்திலும் கணவனை மனைவியை புரிந்து கொள்ளும் பக்குவத்தையும் விரைவில் அடைந்து கொள்வோம்..! இதனை செய்ய முடியாதவர்கள் நிச்சயமாக.. பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்தே இந்த மனித சமூகத்தில் வாழ வேண்டி வரும்..!

அந்த வகையில் இன்றைய பல பெண்களின் ஆதிக்கப் போக்கு.. மிகத்தவறான குடும்ப அணுகுமுறைக்கு நல்ல உதாரணமாகும்..! இதில் இருந்தும் அவர்கள் மாறுபட்டு.. ஆணின் நிலைக்கு இறங்கி.. ஏறி வந்து அவனை புரிந்து கொண்டு.. அவனும் அவளைப் புரிந்துகொள்ள சந்தர்ப்பம் அளித்து வாழும் நிலைக்கு தம்மை பக்குவப்படுத்திக் கொள்வதே இன்றைய தேவை. இந்த 21ம் நூற்றாண்டில் மகிழ்ச்சிகரமான வாழ்வியலுக்கு இதுவே அவசியம்..!

அதுமட்டுமன்றி... சிறியவர்களை.. பெரியவர்களை அவர்களின் மனநிலையில் வைத்து உணரும் பக்குவம் இளையவர்களுக்கு வர வேண்டும்..! இது இன்றைய இளைய தலைமுறையிடம் அருகி வருவது கவலைக்கிடமானது. பள்ளிகளில் சமூகக்கல்விக்கு ஈடாக சமூக சேவைகளில் மாணவர்களை ஈடுபடுத்தல் என்பது இந்த நிலையை குறைக்க வழி செய்யும். பள்ளி மாணவர்கள் முதியோரோடும் குழந்தைகளோடும் அடிக்கடி தொடர்பாடலை செய்யவும் அவர்களின் தேவைகளை அறிந்து உதவவும் கற்றுக் கொடுக்கச் செய்ய வேண்டும். சமூகத்தின் தேவைகளை அவர்கள் உணர வகை செய்ய வேண்டும்.

ஊரில்.. சாரணர் இயக்கம்.. லியோ.. லயன்ஸ்.. இன்ரரெக்ட்.. சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் என்று சமூகத்தோடு நாம் இணைந்து வாழப் பழகியமை எம்மை மற்றவர்களோடு இலகுவில் இணைக்க உதவுகிறது. ஊரில் இவ்வாறான சமூக இயக்கங்களில் இருந்தவர்கள் கூடிய அளவு தலைமுறை இடைவெளி குறைத்து மற்றவர்களோடு பழகுவதை காண முடிகிறது. இந்த இயக்கங்களை சாராதவர்கள் பல குடும்பக் கொடுமைகளை செய்யத் துணிவதையும் காண்கிறோம்.

மேற்கு நாடுகளில்.. பிரித்தானியாவின்.. பள்ளிகளில் சாரணர் இயக்கமே இல்லை. அதுவும் காசு கொடுத்து தனியாரிடம் வாங்க வேண்டிய நிலை. இப்படியான சூழலில்.. எப்படி.. வளரும் பிள்ளைகளிடம் சமூக ஒருங்கிணைவும்.. தொடர்பாடலும்.. புரிந்துணர்வும்..???! பெற்றோரை மதிக்காத.. பெரியோரை கணம் பண்ணத் தெரியாத.. குழந்தைகளை மதிக்காத.. இளைய தலைமுறையே புலம்பெயர் மண்ணில் அதிகம்..! :):icon_idea:

Link to comment
Share on other sites

இறுதியானதும் உறுதியானதும் அறுதியானதும் இது தான் பொண்ணுங்க பெண் ஆதிக்கம் பிடிச்சு ரொம்பவே ஆடிட்டு இருக்காங்க

ஆண்களா சமைக்க சொல்லுறது

துணி துவைக்க சொல்லுறது

குழந்தைங்களா பாத்துக்க சொல்லுறது

இப்பிடி வீட்லயும் வெளிலையும் வேலை செய்து நொந்து noodles ஆகி வெந்து வெண்டிக்காயயாகி கடசில வென்காயமாகி நிக்கிறாங்க

கெடுகுடி சொல்கேளாது எண்டிறது இதைத்தான் தம்பி . ஆண்பாதி பெண்பாதி எண்டிறதுதான் குடும்பம் . இந்த வளர்ந்த உலகத்திலையும் ஒரு பொம்பிளையால நிமிந்து நிக்கேலாமல் கிடக்கு . பிறக்கேக்கையே கள்ளிப்பாலை ஊத்தியும் , நெல்லை மூக்கில போட்டும் கொல்லுது இந்தகேடுகெட்ட ஆண்சாதி . கலியாணம் கட்டியும் எத்தினை பொம்பிளையள் உயிரோடை எரியுதுகள் . நீங்கள் குடுக்கிற விந்தை ஒன்பது அரை மாதம் சுமக்கிறாள் . உங்கடை பேரை சொல்ல ஒரு ஆளைத்தரேக்கை மறுபிறப்பு எடுக்கிறாள் . நீங்கள் கையைபிசைஞ்சு கொண்டு நிப்பியள் . அதாவது இளனி குடிக்கிறது ஆரோ கோம்பை சூப்பிறது ஆரோ . அதே நேரம் ஆம்பிளையள் பாதிக்கப்படுகினம் புலத்தில , காசுக்கும் வெளிநாட்டு சீவியத்துக்கும் ஆசைப்பட்டு இங்கத்தையான் பெட்டையளை கட்டிப்போட்டு மூக்கை சிந்தீனம் இதைத்தான் கூடாது எண்டிறன் .

Link to comment
Share on other sites

மற்றது புலத்தில இப்ப பொண்ணுங்க வெள்ளையளோட லைப் ஸ்டைல் ah எங்கட லைப் ஸ்டைல் ஓட compare பன்னி இல்லை சேர்த்து இல்லை அதே மாதிரி வாழ ஆசைப்படினம் அது ஒரு பாரிய பிரச்னை ......

மற்றது ஒரு ஆண் நாயடி பேயடி அடிச்சு வேலை செய்து வீடு வாங்கி சொத்துகள வாங்கி எல்லாம் முடிஞ்சு கல்யாணம் கட்டுவம்னு கல்யாணத்த கட்டினா வெளி நாடுகள்ள இருக்குற சட்டங்களையும் வசதிகளையும் பயன்படுத்தி ஆண்கள மிரட்டுறது தாங்க விவாகரத்து எடுக்க போரம் எண்டு அப்பிடி எடுக்குறதால ஒரு ஆண் தன்னுடைய பெரும் பான்மை காலங்களில் சேகரித்த வசதிகளை எல்லாம் கல்யணம் ஆகி 2 ௨வருஷத்தில கொண்டு போறாங்க..... சில பொண்ணுங்க சொத்துகாகவே கல்யாணம் முடிச்சு எல்லாத்தையும் அள்ளிட்டு போறாங்க உங்களுக்கே தெரியும் வெளிநாட்டு சட்டப்படி அவர்களுக்கு தான் சாதகமா தீர்ப்பு சொல்லுவாங்க

இதனால எத்தினையோ ஆண்கள் வீதிக்கு வந்திட்டாங்க

Link to comment
Share on other sites

மற்றது பெண் குழந்தை பிறந்தால் சாகடிக்கிறது இலங்கைய பொறுத்த வரை அந்த கீழ்த்தரமான வேலைய யாரும் செய்ததில்ல அப்பிடியும் குழந்தைங்கள கொண்டு இருக்குறாங்க அப்பிடின்னா இந்த பொண்ணுங்க வைச்சிருந்த கள்ள தொடர்பால பிறந்த பிள்ளைங்கள தான் கொண்டு இருக்காங்க and இந்தியால கள்ளி பால் கொடுக்குறதும் பொண்ணுங்க தான் சோ பொண்ணுங்களே பொண்ணுங்களா கொல்லுறாங்க simple

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதெண்டால் உண்மை தான்.

புதிய தலைமுறை அதையும் தாண்டி.. பெற்றோரை பற்றிய கணக்கெடுப்பின்றியே வாழத் தலைப்படுவதையும் பார்க்கிறோம். இவை இரண்டுமே சமூக வாழ்வியலில் தவறான போக்குகள் ஆகும்..!

மேற்கு நாடுகளில்.. பிரித்தானியாவின்.. பள்ளிகளில் சாரணர் இயக்கமே இல்லை. அதுவும் காசு கொடுத்து தனியாரிடம் வாங்க வேண்டிய நிலை. இப்படியான சூழலில்.. எப்படி.. வளரும் பிள்ளைகளிடம் சமூக ஒருங்கிணைவும்.. தொடர்பாடலும்.. புரிந்துணர்வும்..???! பெற்றோரை மதிக்காத.. பெரியோரை கணம் பண்ணத் தெரியாத.. குழந்தைகளை மதிக்காத.. இளைய தலைமுறையே புலம்பெயர் மண்ணில் அதிகம்..! :):icon_idea:

இதைத்தான் ராசா நாங்களும் சொல்கின்றோம்.

எனது பிள்ளைகளுக்கு சீதனம் ஆளுக்கொரு பெல்ற் தான்.

ஒழுங்காக வாழ்வர். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா போங்கப்பா இன்னும் 4 மாசத்தில உலகமே அம்போ :rolleyes: அதுக்குள்ள அடி பட்டுக்கொன்டு இருக்காமல் ஆக வேன்டிய முக்கிய அலுவல் இருந்தால் அதைப்போய் பாருங்கோ :D :D .

Link to comment
Share on other sites

சுண்டுவிண்ட கதையளப் பாத்தால் சிட்னி டமில் கேள்ஸ் ரொம்ப டேஞ்சர் பார்டீஸ் போல :rolleyes:

Link to comment
Share on other sites

அதுகளுக்கு தமிழே பேச தெரியாது தும்ஸ் அதுகள என் தமிழ் பொண்ணுங்கன்னு சொல்லுரிங்க :D

Link to comment
Share on other sites

அதுகளுக்கு தமிழே பேச தெரியாது தும்ஸ் அதுகள என் தமிழ் பொண்ணுங்கன்னு சொல்லுரிங்க :D

சுண்டு இப்புடியே பாத்துக்கொண்டு இருந்தா தாடிய வளத்துக்கொண்டு தன் கையே தனக்குதவி எண்டு இருக்க வேண்டியது தான் sport-smiley-004.gif

Link to comment
Share on other sites

உள்ளூர் ஆம்புளைங்க ஃபாறின் பொண்ணுங்கள மேரேஜ் செஞ்சிக்கிறது தப்புங்க :) . எங்க ஆம்புளைங்க ஒரு காப்பிக்கே பொண்டாட்டி போடணும்னு எதிர்பாக்கிற ரைப்புங்க :lol::D . ஃபாறின்ல போயி ஒழுங்கா குடும்பம் நடத்துவாங்களா :lol::icon_idea: ?? ஆவுற பேச்சை பேசுவோங்க :) .

Link to comment
Share on other sites

சுண்டு இப்புடியே பாத்துக்கொண்டு இருந்தா தாடிய வளத்துக்கொண்டு தன் கையே தனக்குதவி எண்டு இருக்க வேண்டியது தான் sport-smiley-004.gif

:D

அப்பிடி எல்லாம் இந்த சுண்டல சீப்பா எடை போட கூட

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டு இப்புடியே பாத்துக்கொண்டு இருந்தா தாடிய வளத்துக்கொண்டு தன் கையே தனக்குதவி எண்டு இருக்க வேண்டியது தான் sport-smiley-004.gif

என்னது???எங்கடை சுண்டல் தாடியோடை!!!!!!!என்ரைசிவனே....... :o:rolleyes:

Link to comment
Share on other sites

என்னது???எங்கடை சுண்டல் தாடியோடை!!!!!!!என்ரைசிவனே....... :o:rolleyes:

என்ரை அவட்டார் படம் மாதிரி இருக்குமோ :lol: :lol: :D :D :icon_idea: ?

Link to comment
Share on other sites

என்னது???எங்கடை சுண்டல் தாடியோடை!!!!!!!என்ரைசிவனே....... :o:rolleyes:

கு சா அண்ணையின் சிற்றுவேசன் சோங் அந்த மாதிரி ரைமிங் action-smiley-033.gif

என்ரை அவட்டார் படம் மாதிரி இருக்குமோ :lol: :lol: :D :D :icon_idea: ?

அண்ணோய், இன்னும் வள்ளுவர் லெவலுக்கு வரேல்லையாம் எண்டு சிட்னி முருகன் கோயிலில சுண்டலைக் கண்ட புலனாய் மெசேஜ் அனுப்பியிருக்குது medium-smiley-032.gif

Link to comment
Share on other sites

முருகன் கோயில்க்கு வெள்ளிகிழமை போனா தான் கலர் கலரா பாக்கலாம்

பட் கோயில்க்கு பஞ்சாபி போட்டுட்டு வார அதே பொண்ணுங்களா uni பார்ட்டில பாத்திங்கன்ன பீர் போத்திலோட நிப்பாங்க :D

Link to comment
Share on other sites

முருகன் கோயில்க்கு வெள்ளிகிழமை போனா தான் கலர் கலரா பாக்கலாம்

பட் கோயில்க்கு பஞ்சாபி போட்டுட்டு வார அதே பொண்ணுங்களா uni பார்ட்டில பாத்திங்கன்ன பீர் போத்திலோட நிப்பாங்க :D

so true சுண்டல் but அதில தப்பு இல்லைத் தானே? food-smiley-004.gif

Link to comment
Share on other sites

ச்சே தப்பே இல்லை பட் சிகரெட்டும் சேர்த்து அடிச்சா தப்பு தானே வாய் மணக்கதாதா? எப்பிடி ஒரு முத்தம் கொடுக்க முடியும்? எல்லாவற்றுக்கும் மேல இவையல கட்டி குடும்பம் நடத்த முடியுமா? வீனா போனதுகள்

பீர் கானதின்னு வொட்கா வேற மேலதிகமா உள்ள தள்ளுரான்கள்ள...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.