Jump to content

யாழ்க்களத்தில் தமிழரின் பாரம்பரிய விளையாட்டு


Recommended Posts

  • Replies 103
  • Created
  • Last Reply

bull.jpg

யாழ்க்களத்தில் தமிழரின் பாரம்பரிய விளையாட்டு

தமிழர் திருநாளை முன்னிட்டு

"காளை அடக்குதல்" எனும் வீர விளையாட்டுக்கான பயிற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

பயிற்சியாளர்களும், பயிலுனர்களும் மிகமிகத் தீவிரமாக பொங்கல் விழாவில் தங்கள் வீரதீர பிரதாபங்களை வெளிக்கொணரும் உற்சாகத்துடன் உலா வருகிறார்கள்.

காளை அடக்கத் துணிந்த யாழ்க்களத்தினர் பற்றி அறிய அடிக்கடி இங்கு வருகை தாருங்கள்.

அப்பப்போ ஆதியின் தகவல்களால் சிலசமயம் கலங்கலாம், கலக்கலாம்.

இது பிறக்க இருக்கும் தமிழ்ப் புத்தாண்டின் சிறப்புக்களம்.

Link to comment
Share on other sites

ஏலோாய் ஆதி காளையை அவிட்டு விடுலே ஒரு கை பாப்பமில்லை கந்்தரோடை பினாக்கைக குளத்துக்கை அந்த நேரம் பத்து காளையை ஒத்தை கையாலை அடக்கினவவன் இந்த சாத்திரி அவிட்டு விடுலே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புரிகிறது சார்.

வலது கைவிரலை உயர்த்தும்போது அது இடது பக்க உறுப்புக்களை மேலும் கீழும் இழுக்கின்றது என்பது மட்டும் புரிகின்றது.

அதுசரி, யார் இந்தப் பெரியவர்? அப்பாவா? அம்மாவா? அல்லது............?

Link to comment
Share on other sites

ஏலோாய் ஆதி காளையை அவிட்டு விடுலே ஒரு கை பாப்பமில்லை கந்்தரோடை பினாக்கைக குளத்துக்கை அந்த நேரம் பத்து காளையை ஒத்தை கையாலை அடக்கினவவன் இந்த சாத்திரி அவிட்டு விடுலே

என்ன சாத்திரி புது வருச மப்பே, இது களை இல்லையப்பு காளை. கவனமோய் உம்மட வேட்டி. :lol::lol::lol:

Link to comment
Share on other sites

ஒய் பீருந்தா என்ன ஆதியொடை சேந்து நக்கலா நான் சாரத்தை மடிச்சு சண்டி கட்டு கட்டினன் எண்டா ஒரு களை மாடு பக்கத்திலை வராது தெரியுமாா??? அவ்வளவு பயம் ;) ;)

Link to comment
Share on other sites

ஒய் பீருந்தா என்ன ஆதியொடை சேந்து நக்கலா நான் சாரத்தை மடிச்சு சண்டி கட்டு கட்டினன் எண்டா ஒரு களை மாடு பக்கத்திலை வராது தெரியுமாா??? அவ்வளவு பயம் ;) ;)

பிருந்தன் ஆருக்கு பயமென்று தெரியுதா? நம்ம சாத்திரிக்குதான் . நம்மவர் நிண்டால்தானே மாடு கிட்டபோறதுக்கு.

ஓட்டத்திலை சாத்திரி எடுத்த மெடலுகளை பார்த்தால்தான் தெரியும் :lol::lol::lol::D

Link to comment
Share on other sites

கவுத்திட்்டியேஆதி நான் வேறை உடம்பெல்லாம் எண்ணெய்பூசி மசாச் பண்ணி காத்தாலை இருந்து ்உடற் பயிற்சி செய்து கானையை பிடிக்க பெரிய ஏற்பாடெல்லாம் செய்து கொண்டிருந்தன்இதக்கை மனிசி வேறை 3 தரம் முட்டை கோப்பி அடி ச்சு தந்தது சே எல்லாம் வீணா போச்சு :angry:

Link to comment
Share on other sites

ஹா ஹா சாத்திரி உங்களுக்கு ஒரு களையையே பிடிக்க பயம் இதுக்கை ஏன் இந்த ஓவர் பில்டப் பண்ணி றோயல் பமிலி மானத்தை வேண்டுறியள் :angry: :angry:

Link to comment
Share on other sites

வணக்கம்!

வீர விளையாட்டின் புதிய சேதிகளுடன் ஆதி வந்திருக்கிறன்.

ஒரு சாய்மனை தாங்கப்பா.....

சாத்து!.... இங்கு நீங்க சவடால் அடியுங்க....

அங்கு..... முனியம்மா சவால் விட்டிருக்கா....

திரெளபதி மாதிரி கூந்தலை அவிழ்த்துச் சபதம் எடுத்திருக்கா!

துரியோதனனின் இரத்தத்தைத் தடவி அந்தப் பாஞ்சாலி கார்குழல் முடிந்தமாதிரி சாத்து அடக்கிற யாழ்க்களக் காளையின் உதிரத்தை ஜெல்மாதிரித் தடவி தலைமுடி வாருவேன் என்று காளைகள் அடக்கும் பயிற்சிப் பட்டறையில் சூளுரைத்தா!..........முட்டைக்கோப்பியும், எண்ணெய் மசாஜும் சும்மா இல்லை நேர்த்திக்குத் தயாராக்கத்தானாக்கும். கதையோட கதையாக உங்க கதையே இப்பிடியெண்டால் சின்னப்பு, முகத்தார் கதை சொல்லி வேலையில்லை..... அதைப் பற்றின விபரங்கள் பிறகு வரும்.

இந்த காளையை அடக்குவன் என்று நாரதர் வேறு அங்கு வந்து அடம்பிடிச்சு பயிற்சி எடுக்கிறதைப் பாத்து நெடுக்கால ஒருத்தர் வர...... குறுக்கால போனவருக்குக் கோபம் வந்து தானும் கோதாவில் இறங்குவன் என்று பட்டறையில் கலக்க,........ பொறுங்கோ வாறன் இன்னும் கனக்கக் கதையிருக்கு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் களம் இறங்கம் போது நாம மட்டும் ஏன் சும்மா இருப்பான். அது சரி தூரத்தில் நின்று காளை அடக்குற மாதிரி ஏதும் பிளான் இருக்குதோ :icon_idea:

Link to comment
Share on other sites

காளை அடக்கிறதில றோயல்பமிலிக்கு இணை என்றுமே றோயல் பமிலிதான் !!! சவாலா!!!!! ஓய் சாத்து. கு .சா கந்தர் டங் எங்கையப்பா போய்டீங்கள்

;)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒய் பீருந்தா என்ன ஆதியொடை சேந்து நக்கலா நான் சாரத்தை மடிச்சு சண்டி கட்டு கட்டினன் எண்டா ஒரு களை மாடு பக்கத்திலை வராது தெரியுமாா??? அவ்வளவு பயம் ;) ;)

மாட்டுக்கு உங்கள கண்டா பயமாக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின்ரை பாரம்பரிய விளையாட்டு எண்டவுடனை நான் நினைச்சன் மாங்கொட்டை கிந்தல்,கொக்கான்,கிளித்தட்டு :unsure: ஆக்குமெண்டு.இஞ்சை பாத்தால் நாம்பனை அடக்கிற போட்டியாம்? :D நான் ஏற்கனவே பசுவை அடக்கிப்போட்டு படுகிற பாடு சொல்லி வேலையில்லை :angry: .அது சரி மந்திரகோல்(ரிமோட்கொன்றோல்)வை

Link to comment
Share on other sites

காளை அடக்கிறதில றோயல்பமிலிக்கு இணை என்றுமே றோயல் பமிலிதான் !!! சவாலா!!!!! ஓய் சாத்து. கு .சா கந்தர் டங் எங்கையப்பா போய்டீங்கள்

;)

றோயல் குடும்பத்துக்கு, காளை என்ன எந்த மிருகம் வந்தாலும் அடக்குவது இலகு. ஆனால் மனைவி மாரைத்தான் எப்படி அடக்குவது என்று தெரியாமல் கிடக்கிறது. யாராவது தெரிஞ்சாச் சொல்லுங்கோவேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காளை அடக்கிறதில றோயல்பமிலிக்கு இணை என்றுமே றோயல் பமிலிதான் !!! சவாலா!!!!! ஓய் சாத்து. கு .சா கந்தர் டங் எங்கையப்பா போய்டீங்கள்

;)

கு.சா என்றால் என்ன? குட்டித் சாத்தானா? றோயல்பமிலிக்குள் யார் அப்படி??? :D:icon_idea:

Link to comment
Share on other sites

கு.சா என்றால் என்ன? குட்டித் சாத்தானா? றோயல்பமிலிக்குள் யார் அப்படி??? :D:icon_idea:

ஓய்ய்ய் :angry: ம...பா நம்மட குமாரசாமியாரப்பா

:angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓய்ய்ய் :angry: ம...பா நம்மட குமாரசாமியாரப்பா

:angry:

நம்மளைத் தான் அப்படி ஏதும் திட்டினீரோ என்று சின்ன டவுட்டு. அவ்வளவு தான். :D:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதென்ன புதுக்கதை, காளை அடக்கிறதே எங்கட பாரம்பரிய விளையாட்டு?

முதுகில் குத்துதல்,

காலை பிடித்து இழுத்து விழுத்துதல்,

நம்பவைத்து கழுத்தறுத்தல்

இப்படி எத்தனியோ பாரம்பரிய தமிழர் விளையாட்டுகளை நாங்கள் காலம் காலம விளையாடிட்க்கொண்டு வாரம்....... இவர் என்னடாண்டா மாடு பிடிக்க போறாராம் :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன புதுக்கதை, காளை அடக்கிறதே எங்கட பாரம்பரிய விளையாட்டு?

முதுகில் குத்துதல்,

காலை பிடித்து இழுத்து விழுத்துதல்,

நம்பவைத்து கழுத்தறுத்தல் இப்படி எத்தனியோ பாரம்பரிய தமிழர் விளையாட்டுகளை நாங்கள் காலம் காலம விளையாடிட்க்கொண்டு வாரம்....... இவர் என்னடாண்டா மாடு பிடிக்க போறாராம் :P

உந்த விளையாட்டுகளுக்கு எங்கட தமிழ்ச்சனம் உரிமை கொண்டாடேலாதப்பா.ஏனெண்டால் உது சர்வதேசம் முழுக்க விளையாடுற விளையாட்டுக்களப்பா!

Link to comment
Share on other sites

ஆதி பாடு எவ்வளவு இக்கட்டானது. இந்த மல்லர்களின் கண்களுக்குள் அகப்படாமல் ஒளிச்சிருந்து பாத்து வர்றதென்றால் லேசான காரியமே?....சரிசரி எங்க கதையை விட்டனான்? ஆ.... அந்த வழியால வந்தவர் அதாம்பா காடுகளுக்குள் குளம் குட்டையெல்லாம் நீச்சலடிச்சுப் பேர் பெற்ற குளக்காட்டான், கொம்படி வெளியில் காட்டெருமைக் கன்றை ஒற்றையில கண்டு ஓட்டமெடுத்த டண், காளை என்ற பேரைக் கேட்ட உடனயே காலை இறக்கையா மாத்தின கிருபன்ஸ், தமிழர் விளையாட்டு என்ற உடனே தாளம்,தப்பட்டையுடன் சகிதம் சபேசனும், சிலப்பதிகாரத்தை நோண்டியபடி இளங்கோவும், காளையை அடக்க எத்தகைய நுட்பத்தைப் பாவிக்கலாம் என்று ஆயிரம் கேள்விகளோடு அந்நியனும், பயிற்சிப்பட்டறைக்குள் குழும யாழ்க்கள நிர்வாகி மோகன் மைதானத்தின் விசாலம் பத்தாமல் தலையைப் பிய்த்துக்கொண்டு விழி பிதுங்க............ இந்தக் கதை ஒரு பக்கம் இப்படி நகர...... இன்னும் நிறைய விடயம் இருக்கு...

அதற்கிடையில் யாழ்க்களப் பெண்கள் அணி ஆதிக்குத் தனிமடலில் தேவாரம் பாடியிருக்கிறார்கள்! மஞ்சு விரட்டுவதில் ஆண்கள் மட்டுந்தான் பங்கு பற்ற முடியுமா? ஏன் பெண்களுக்கு என்ன குறை? எங்களுக்கும் வீரம் உண்டு. எங்களுக்கான போட்டி நிகழ்வை எப்போது அறிவிக்கப்போகிறீர்கள்? நீங்கள் தவறும் பட்சத்தில் உங்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று எச்சரிக்கைக் கடிதம் அனுப்பியுள்ளார்கள். அம்மா தாய்க்குலமே! இங்கு காளை அடக்கும் போட்டியை நான் நடாத்தமுடியுமா? யாரோ நடாத்துகிறார்கள். ஆதி மரக்கிளையில் இருந்து அவதானித்து வந்து எழுதுகிறேன் அவ்வளவுதான். நடத்துனர் யாரென்று சாத்துவின் முனியம்மாவிடம் கேளுங்கள்...... சொல்லுவா.

முனியம்மாவின் புண்ணியத்தில் இன்று சின்னாச்சி புதிய சபதம் எடுத்திருக்கிறா..... அதாவது காளை அடக்கும் களத்திற்கு ம...பில் சென்ற சின்னா தன்நிலை தெளிந்து காளையை அடக்கி வாகை சூடிக்கொண்டு வந்தால் மாத்திரமே வீட்டுக்குள் அனுமதிக்கப்படுவாரென்றும் அந்நிலை தவறின் இப்போது காதில் சின்னா குத்தியிருக்கும் தொங்கட்டானைக் கழற்றி மூக்கில் துளையிட்டு சின்னாவிற்குத் தான் கட்ட இருக்கும் மூக்கணாங் கயிற்றில் தொங்க விடப்போவதாக சின்னாச்சி சொல்லியிருக்கிறா.... இவ்விடயம் அறியாமல் சின்னாப்ஸ் இங்கு அட்டகாசம் செய்து கொண்டிருக்கிறார். கள உறவுகளே சின்னாசிற்கு உண்மை நிலையைப் புரிய வைத்து காளை அடக்கும் விசப்பரீட்சையில் குதிக்குமுன் சின்னாச்சியின் காலில் விழுதல் நலம் என்று கூறி அனுப்புங்கள். சின்னாவிற்கு மூக்கணாங்கயிறு? :o கற்பனை பண்ணிப் பார்க்கவே......

கதை சொல்லவே களைப்பா இருக்கென்றால் நேரில அவதானிக்க எவ்வளவு கஸ்ரப்படவேணும்? யாராவது தண்ணீர் தாங்கப்பா..... நா வரண்டுபோச்சு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.