Jump to content

சர்ச்சை: ஆபாசமா?? இலக்கியமா???


Recommended Posts

ஆபாசமாக எழுதுகிறார் என்று கவிஞர் குட்டி ரேவதி மீது விமர்சனம் வைக்கப்படுவது புதிதல்ல. ஆனால் சமீபத்தில் நீட்சி இதழில் வெளியான இவரது “மாமத யோனி” என்ற கவிதை (!) மிக அதிக அளவில் எதிர்ப்புகளை எதிர்கொண்டிருக்கிறது.

kutti-revati-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF.jpg

மாமத யோனி….

தன்னையே காவு கொள்ளும் மாமத யானையென

உடல் வெறித்திருக்கும் யோனி எனது

திசையெங்கும் எழுச்சியுற்று

காமம் கிளர்ந்திருக்கும் பேருயுயிரும் அது

தன் மதச்சாறு பொழிந்த காட்டை

சேற்று நிலத்தை துவம்சம் செய்து திரிகிறது

ஒரு காமக்கிழத்தியைப் போல

சேரிப்பரத்தையர் போல…..

விடலைகளின் புல்வெளிகளை அறுத்துச் சுவைக்கிறது

இந்த ஒற்றை யானையின் மதம் போதும்…

என் மாமத யோனியினுள்ளே

ஒரு யானையைக் கொண்டிருக்கிறேன்

தறிகெட்டோடும் அதன் இச்சைக்கு

இந்த இரவுகள் போதாது… “

-இப்படிப் போகிறது அந்தக் கவிதை.

இது போன்ற தனது கவிதை மீதான விமர்சனங்களுக்கு, “என் உடல், என் கவிதை, என் விருப்பம்” என்கிற ரீதியில் பதில் சொல்வார் குட்டி ரேவதி. அதே நேரத்தில் “அமைப்பு” ரீதியான சிலரிடம் இந்தக் கவிதை குறித்து கருத்து கேட்டு, விவகாரம் ஆக்க நாம் விரும்பவில்லை. சக பெண் கவிஞர்களில் ஒருவரான தமிழரசியிடம், “பெண் கவிஞர்கள் சிலர் மீது ஆபாசமாக எழுதுவதாக விமர்சனம் வைக்கப்படுகிறதே” என்று கேட்டோம்.

அவர், “ ஆண் கவிஞர்கள் எழுதுவதை யாரும் கண்டிப்பதில்லை. இதை கவிஞர்கள் என்பதை நீக்கிவிட்டும் சொல்லலாம். ஆண் என்பவன் முதன்மையானவன் என்ற கூற்றையும் முரடன் என்ற எண்ணமும் முதலில் வளர்வது வீட்டுக்குள் இருந்து தான். மணமானதும் பெண் “அவர் திட்டுவார், அவரை கேட்கனும்” என்பதில் தொடங்கி அவள் தாயான பின் “அப்பா திட்டுவார், அப்பாகிட்ட சொல்லாதம்மா,” இப்படி ஆரம்பிக்கிறது ஆணுக்கான முக்கியத்துவம் இதுவே சமூகத்துக்கும் பரவி ஆண் எதை செய்தாலும் சரியாக இருக்கும் ஆண் கோவிப்பான், திட்டுவான், அடிப்பான், மிரட்டுவான் என்ற எண்ணங்களின் தொடர்ச்சி தான்.

%E0%AE%95%E0%AE%B5_%E0%AE%9E%E0%AE%B0_-%E0%AE%A4%E0%AE%AE_%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%9A_.jpg

இதற்கு முழுக்க காரணம் ஆண் அல்ல.தொன்மையான முறைகளும் அதன் தொடர்ச்சியும் தான்.பதவி வகையில் பேசப்படும் போது கலெக்டர், ஆசிரியர், ஓட்டுனர், முதல்வர் என்ற வார்த்தைகள் பொதுவாய் பதவியை குறிக்கும் ஆனால் இதை ஒரு ஆண் தான் வகிக்கும் என்பது மனதின் நிர்ணயம். அல்லாது போனால் பெண் கலெக்டர், பெண் ஆசிரியர் இப்படி பதவிக்கு முன் இனம் குறிப்பிட்டு பெண்ணை தனித்துவப்படுத்தியும் வருவதாலும் ஆண் எதை செய்தாலும் அனுமதிக்கபடுகிறான்.

அவனுக்கு எல்லாம் தெரியும், அவனால் மட்டும் எல்லாம் முடியும் என்ற கருத்தில் ஆழ்ந்து போய் விட்டதாலோ என்னமோ இங்கு கேட்கப்பட்ட கேள்விக்கு இணங்க ஆண் கவிஞர்கள் எழுதுவதை யாரும் கண்டிப்பதில்லை. கண்டிக்கலாம் இதை ஆண்கள் எதிர்க்க போவதில்லை., நாம் முன்வருவதில்லை. குறிப்பாக பெண் கவிஞர்கள் சிலர் உடல் சார்ந்து எழுதுவதையும், ஆண் பெண் உறவுகள் குறித்து எழுதுவதையும் கடுமையாக கண்டிக்கிறார்கள் பலர்.

பெண்களை ஒரு கட்டுக்குள் வைத்து வரையறுத்த நம் சமுதாய கட்டமைப்புக்குள் இருந்து இன்னும் பெரும்பாலான ஆண்கள் தங்களை வெளிக்கொணர தயாராக இல்லை .இது ஒரு பரம்பரை குணாதிசயம் போலவே ஆகிவிட்டது. எல்லா ஆண்களும் இந்த வரிசையில் இல்லை.எழுத்துக்களிலும் பாலினத்தை நுகரும் தன்மை இன்றைய காலகட்டதிலும் என்பது வியப்பாய் இருக்கிறது.

Modern-Art-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.jpg

ஆணாகிய நீங்கள் சொல்லும் போது விரசமாய் இல்லாத ஒன்று பெண் ஒருவர் எழுதும் போது அது ஏன் விமர்சனத்துக்கும் கண்டிப்புக்கு உட்படுகிறது?பெண் என்பவள் இப்படி தான் இருக்கவேண்டும் இந்த விதங்களில் செயல் பட்டால் மட்டுமே நீ அழகானவள், இலக்கணமானவள் என்ற எண்ணமும் அவளுக்கு என்று மனதளவில் ஒரு எல்லை வகுத்ததன் விளைவே இது.

இதையெல்லாம் எதிர்த்து துணிந்து பெண் என்பவள் எழுதினால் இந்த குறிப்பிட்ட ஆண்வர்க்கம் உடனே அந்த பெண்ணின் குணம், நடத்தை, என அவளை கீழ்தரமாய் விமர்ச்சிக்கவும் தொடங்கிவிடுகிறது, இங்கு எழுத்துக்கு தேவை என்ன? வாசிப்பவர்களுக்கு பயன்பாடு பொழுது போக்கு, க்ருத்துக்களை அளித்தல், இதில் தேவைக்கு ஏற்ப காதலையும் காமத்தையும் இணைப்பதில் தவறில்லை. உள்ளங்கை நெல்லிக்கனியாய் அல்லாது இலைமறைவு காய் மறைவாய் தருவதும் பெருவதும் தான் யாவர்க்கும் நலம்.

இன்றைய நாகரீக உலகிலும் ஆண் பெண் என்ற பிரிவினை பேத களத்தில் இருப்பது வருந்ததக்கதே.எல்லாவற்றையும் கடந்து விந்தையாய் வியப்பாய் இருப்பது ஆண் பெண் உறவு உடல் சார்ந்த தகவல்கள் எழுதி தான் அறியவேண்டும் என்ற காலகட்டத்தை நாம் என்றோ கடந்துவிட்டோம்.

இதை கண்டிப்பதாயின் முடிவே இருக்காது. அவரவர் உணரவேண்டும் தன் எல்லையை ஒருவர் செய்கிறார் என்று நாம் செய்வதில் இருக்கும் சமூக அக்கறை என்ன? இது ஏதும் அற்ற நிலையில் எல்லாம் அவசியமில்லாததே. ஆண் ஒருவர் எழுதுவாராயின் அது பத்தோடு பதினொன்றாகவும் பெண் எழுதினால் கடும் கண்டனம் விமர்ச்சனம் போராட்டம் ஏன்? அதில் நன்மை என்ன? இதில் தீமை என்ன? பெண்ணாய் அவரவர் தம் இயல்புக்கும் தேவைக்கும் கற்பனை செய்து கொண்டு இப்படி தான் இவ்வளவு தான் என்று எல்லையை வரையறுக்க எவருக்கும் உரிமையில்லை,

துணிந்து எழுதும் பெண் எழுத்தாளர்கள் அதற்குண்டான பாதிப்பை கடந்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருப்பது மறுப்பதற்கில்லை. ஒருவேளை இந்த குறிப்பிட்ட ஆண் வர்க்கம் எப்படி பெண்ணுக்கு ஒரு வரைமுறை வகுத்து அதற்கு மேல் எழுதினால் கண்டிப்பதும் குரல் எழுப்புவதுமாய் இருக்கிறதோ அப்படியே அத்தகைய எழுத்துக்களை ஆண் ஒருவர் எழுதும் போது நாமும் எதிர்த்தே ஆகவேண்டும்.

ஆண் அவன் என்னவேண்டுமானாலும் செய்வான், அவன் ஆம்பிளை நீ பொண்ணு தனியா வரும் போது ஒன்னு கெடக்க ஒன்னு ஆச்சின்னான்னு இப்படி பெண்ணுக்கு பெண்ணே கூட ஒடுக்கும் நடைமுறை இன்னும் இருக்கிறது.நாம் (ஆண் பெண்)எழுதி தான் பட்டவர்த்தனம் செய்து தான் ஆரோக்கியமற்ற ஒரு நிகழ்வு அறியபடும் என்பதில்லை.ஆண், பெண் என்ற பிரிவினை ஒதுக்கி இருபாலரும் நலிந்து வரும் வாழ்வியலின் அழகை ஆரோக்கியமாக்கலாமே..

இன்று நானும் பலராலும் அறியப்பட்டிருக்கிறேன் என்றால் என் நண்பர்களே காரணம். என்னை பெண் என்று அவர்களோ அவர்களை ஆண் என்று நானோ இனம் பிரிக்கவில்லை. நட்பால் இணைந்தோம், திருத்தம், வடிவமைப்பு, கற்பித்தல் என பல சொல்லி என்னை மேம்படுத்தியதும் அவர்களே..அன்பால் இணைவோம், தேவையிருப்பின் அறிவுறுத்துவோம், இருக்கும் இரு இனத்திற்கு பேதமைகள் தேவையற்றது” என்றார் கவிஞர் தமிழரசி.

வாசகர்களே… உங்கள் கருத்து என்ன.. எழுதுங்களேன்.

- தஞ்சை சுந்தரர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஒரு அருமையான கவிதை, உணர்ச்சிகளை கொட்டி எழுதியுள்ளார், நன்றி மகாராஜா பகிர்வுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரேவதியின் கவிதை நன்றாக இருக்கிறது!

ஆனால், அதற்கும் காட்டையழிக்கும் மதம் கொண்ட ஆண்யானையே உவமையாகின்றது!

பெண் யான,மதம் கொள்வதில்லையா?

அந்த யோனி, ஆக்கத்திற்குப் பயன்படுமாயின், அது கவிதைக்கு வெற்றியே!

இணைப்புக்கு நன்றிகள்,மகாராஜா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயிரியல் எல்லாம் இப்படியான கவிஞர்களின் புகழீட்டலுக்காக ஆபாசமாகக் காட்டப்படும் விபரீதத்தைத் தவிர.. வேறெந்த ஆபாசமும் இதில் இல்லை..! :):icon_idea:

Link to comment
Share on other sites

ஒரு பெண்ணின் உணர்சிகளை இயல்பாக வடித்திருக்கும் ஒரு அழகான கவிதை.

ஆபாசம் என்பது பார்பவர்களின் மனசை பொறுத்தது.

சத்திர சிகிச்சையில் ஒரு பெண்ணின் நிர்வாண உடம்பை பார்த்து ஒரு நல்ல வைத்தியன் ஆபாசம் கொள்வதில்லை.

Link to comment
Share on other sites

ஒரு பெண்ணின் உணர்சிகளை இயல்பாக வடித்திருக்கும் ஒரு அழகான கவிதை.

ஆபாசம் என்பது பார்பவர்களின் மனசை பொறுத்தது.

சத்திர சிகிச்சையில் ஒரு பெண்ணின் நிர்வாண உடம்பை பார்த்து ஒரு நல்ல வைத்தியன் ஆபாசம் கொள்வதில்லை.

[size=5]இதை எழுதியது ஒரு பெண் என்பதைத்தான் ஜீரணிக்கக் கஸ்டப் படுகின்றார்கள் என்று நினைக்கின்றேன்...[/size]. [size=5]ஆணாதிக்கவாதிகள்[/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.