Jump to content

இந்திய தேயிலைகளில் அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துகள்: எச்சரிக்கும் கிரீன்பீஸ் இந்தியா!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புதுடெல்லி: இந்தியாவின் முன்னணி பிராண்ட் தேயிலைகளில் அதிகமான பூச்சிக்கொல்லி மருந்து நச்சுகள் இருப்பதாக சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக இயங்கும் அரசு சாரா நிறுவனமான  'கிரீன்பீஸ் இந்தியா' எச்சரித்துள்ள நிலையில், இந்திய தேயிலை வாரியம் இது தொடர்பான ஆய்வறிக்கையை ஏற்க மறுத்துள்ளது.

இது தொடர்பாக கிரீன்பீஸ் இந்தியா ( Greenpeace India ) அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், உலக சுகாதார நிறுவனம் (  World Health Organization - WHO)  அனுமதித்துள்ள அளவைக் காட்டிலும் அபாயகரமான அளவில், இந்தியாவில் விற்கப்படும் முன்னணி பிராண்ட் தேயிலைகளில் பூச்சிக்கொல்லி மருந்து உள்ளதாக கூறியுள்ளது. மேலும் தேயிலை செடிகளில் அடிக்க அனுமதிக்கப்படாத பூச்சிக்கொல்லி மருந்துகளும் இதில் காணப்படுவதாகவும் அது தெரிவித்துள்ளது.

கடந்த 2013 ஜுன் மாதம் முதல் 2014 மே மாதம் வரை இந்திய சந்தையில் அதிகமான விற்கப்படும் 49 பிராண்டுகளின் தேயிலை மாதிரிகளும், பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் இந்தியாவின் 11 முன்னணி நிறுவனங்களின் ( இந்த நிறுவனங்கள் ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு எமிரேடு மற்றும் ஈரான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் தங்கள் தயாரிப்பு தேயிலைகளை ஏற்றுமதி செய்கின்றன) தேயிலை மாதிரிகளும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட Hindustan Unilever, Tata Global Beverages, Wagh Bakri, Goodricke Tea, Twinings, Golden Tips, Kho-Cha and Girnar  உள்ளிட்ட பல்வேறு பிரபலமான நிறுவனங்களின் தேயிலை மாதிரிகளில் மிக அதிக அபாயகரமான மற்றும் மிதமான அளவுகளில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் நச்சு காணப்பட்டது.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட தேயிலை மாதிரிகளில் ஒருகுறிப்பிட்ட பூச்சிக்கொல்லி மருந்தின் நச்சு மட்டும் அல்லாது பலதரப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்தின் நச்சுகள் காணப்பட்டுள்ளன. மேலும் கடந்த 1989 ஆம் ஆண்டிலேயே இந்தியாவில் பயிர்களுக்கு அடிக்க தடை செய்யப்பட்ட  DDT  என்ற பூச்சிக்கொல்லி மருந்து, ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மாதிரிகளில் 67 சதவீத மாதிரிகளில் இடம்பெற்றுள்ளது தெரியவந்துள்ளது என கிரீன்பீஸ் இந்தியா தெரிவித்துள்ளது.

இது தவிர மனிதர்கள் மற்றும் பறவைகளுக்கு தீங்கு விளைவிப்பதாக அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட 'Monocrotophos' என்ற பூச்சிக்கொல்லி மருந்துகளும் இத்தேயிலை மாதிரிகளில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

tea%20plant.jpg

பீகாரில் கடந்த ஆண்டு, பள்ளியில் மதிய உணவு உட்கொண்ட 23 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தை அந்த அறிக்கையில் நினைவூட்டியுள்ள கிரீன்பீஸ் இந்தியா, அந்த குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட உணவில் மேற்கூறிய 'Monocrotophos' பூச்சிமருந்து கலந்ததாலேயே அவர்கள் உயிரிழந்ததாகவும், இதனைத் தொடர்ந்து வளரும் நாடுகள் இந்த 'Monocrotophos'  பூச்சிமருந்தை பயன்படுத்துவதை கைவிட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு ( Food and Agriculture Organization of the United Nations) வேண்டுகோள் விடுத்திருந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில் தேயிலை உற்பத்தி துறை பூச்சிக்கொல்லி மருந்து பொறியில் சிக்கிக்கொண்டுள்ளதாகவும், அதிலிருந்து விடுபட்டு இயற்கை மற்றும் சுற்றுச் சூழலுக்கு தீங்கு ஏற்படாத வகையிலான விவசாய முறையை கடைபிடிக்க வேண்டும் என்றும், தேயிலை நிறுவனங்கள் இந்த மாற்றத்தை ஆதரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ள கிரீன்பீஸ், ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ள முன்னணி தேயிலை நிறுவனங்களுடன் தங்களது அறிக்கையின் நகலை பகிர்ந்ந்துகொண்டதாகவும், இது தொடர்பாக அவர்களுடன் பேசி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

 

'இந்திய தேயிலை வாரியம்'  மறுப்பு

இதனிடையே கிரீன்பீஸ் இந்தியாவின் இந்த ஆய்வறிக்கையை ஏற்க,  மத்திய வர்த்தக துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் 'இந்திய தேயிலை வாரியம்' மறுத்துள்ளது.

கிரீன்பீஸ் இந்தியா அமைப்பு மேற்கொண்ட தேயிலை மாதிரி சோதனைகள்,  நுகர்வோர்களை பாதுகாக்க உருவாக்கப்பட்ட இந்திய சட்ட மற்றும் ஒழுங்குமுறை விதிகளின் அடிப்படையில் செய்யப்பட்டவை என்றும், இந்திய தேயிலைகள் கடுமையான தரங்களுக்கு உட்படுத்தப்பட்டவை என்றும், முற்றிலும் பாதுகாப்பானது என்றும், உலகம் முழுவதும் இந்திய தேயிலை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்றும், எனவே இந்திய தேயிலைகள் குறித்து தவறான புரிதல் கூடாது என்றும் அது கூறியுள்ளது.

http://news.vikatan.com/article.php?module=news&aid=31263

Link to comment
Share on other sites

131007112414_mukherjee_tea_promo_304b.jp

தேயிலைச் செடிகளுக்கு பூச்சி கொல்லி உரம் போடப்படுவதாக புகார்கள்

இந்தியாவில் உற்பத்தியாகும் பெரும்பாலான தேயிலை தூளில் உயிரைக் கொல்லும் பூச்சிக் கொல்லி மருந்துகள் கலந்திருப்பதாக ‘க்ரீன் பீஸ்’ என்ற சுற்றுச்சூழல் தன்னார்வ நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகில் மிகப் பெரிய தேயிலை உற்பத்தியாளர்களில் ஒன்றான இந்தியாவின் தேயிலை உற்பத்தி முறை குறித்து சுமத்தப்பட்டுள்ள இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நச்சுப் பொருட்கள்

140628122329_tea_304x171_bbc_nocredit.jp‘கிரீன் பீஸ்’ நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில் பரிசோதிக்கப்பட்ட தேயிலை மாதிரிகளில் கிட்டத்தட்ட 94% தேயிலை தூள்களில் குறைந்தது ஒரு பூச்சிக்கொல்லியின் எச்சங்களாவது கண்டறியப்பட்டுள்ளதாக அந்த தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆரோக்கியம் குறித்த கவலைகள்

முன்னணி தேயிலை உற்பத்தி நிறுவனங்களின் கிட்ட தட்ட 49 மாதிரிகளில் ஆராய்ச்சி நடத்தப்பட்டதாகவும் அதில் 46 மாதிரிகளில் பூச்சிக்கொல்லியின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டெடுக்கப்பட்ட மொத்தம் 34 வகை பூச்சிகொல்லிகளில், 68 சதவிகிதமானவை இந்திய தேயிலை சாகுபடிக்கு பயன்படுத்தக் கூடியதாக பதிவு செய்யப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெறாத பூச்சிக் கொல்லிகள் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்படாத நச்சு பூச்சிக்கொல்லியான டிரையாசோபாஸ், சுவாச உறுத்தலை ஏற்படுத்தும் பூச்சிக்கொல்லியான சைபர்மெத்ரின் மற்றும் விலங்குகளின் இனப்பெருக்கத்திலும் வளர்ச்சியிலும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய பூச்சிக்கொல்லியான இமிடாக்லோப்ரிட் உள்ளிட்டவை அந்த தேயிலை தூள்களில் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேயிலை வாரியம் மறுப்பு
140115085352_green_tea_304x171_getty_noc

நச்சுப் பொருட்கள் ஏதும் இல்லை என்று மறுப்பு

இந்த சர்ச்சை தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய தேயிலை வாரியம், கிரீன் பீஸ் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. பரிசோதிக்கப்பட்ட அனைத்து தேயிலை தூள் மாதிரிகளும், இந்திய சட்ட விதிகளை பின்பற்றியே உற்பத்தி செய்யப்பட்டதாகவும் நுகர்வோரை பாதுகாக்கும் வகையில் தான் அவை இருப்பதாகவும் இந்திய தேயிலை வாரியத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்திய தேயிலை சாகுபடியை நீடித்து நிலைத்து இருக்கும் வகையில் செயல்படுத்துவதற்கும் , செயற்கை தாவர பாதுகாப்பு பொருட்கள் மீது சார்ந்திருக்கும் நிலையை குறைக்கவும் தகுந்த நடவடிக்கைகள் தொடர்ந்தும் எடுத்துவரப்படுவதாகவும் இந்திய தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.

கிரீன் பீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பிலான உண்மை தகவல்களும் பதில்களும் தேயிலை வாரியத்தின் இணையதளத்தில் விரைவில் பிரசுரிக்கப்படும் எனவும் தேயிலை வாரியம் அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

http://www.bbc.co.uk/tamil/india/2014/08/140812_tea_pesticides.shtml

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.